பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 15, 2009

எக்கனாமிக் கிளாஸ் - அதிர்ச்சியில் (காங்கிரஸ்)மக்கள்

நேற்று ஒரு பெரிய அதிசயம் நடந்துவிட்டது. சோனியா காந்தி மும்பைக்கு "எக்கனாமிக் கிளாஸ்"ல் பயணம் செய்துவிட்டார் என்பதை முக்கிய செய்தியாக எல்லோரும் போட்டுவிட்டார்கள். அதே விமானத்தில் பிசினஸ் வகுப்பில் புக் செய்திருந்த காங்கிரஸ் எம்.பி சுரேஷ் டவாரே சாதாரண வகுப்புக்கு இருக்கையை மாற்றிக் கொண்டார். செலவை கட்டுப்படுத்த என்று நினைக்காதீர்கள். சோனியா காந்தி எக்கனாமிக் கிளாஸில் இருக்கும் போது இவர் பிஸினஸ் கிளாஸ் என்றால் இவர் பிஸினஸ் என்னவாது ?

விமானத்திலிருந்து இறங்கியவர் "சோனியாவைப் பின்பற்றி இனிமேல் தாம் சாதாரண வகுப்பிலேயே பயணம் செய்வேன்". ஆஹா!

இந்த மர மண்டைகளுக்கு செலவை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று இதற்கு முன் தெரியாதா ? சோனியா காந்தி அதே விமானத்தில் பயணம் செய்யவில்லை என்றால் இவர் அடுத்த தெருவிற்கு போக வேண்டும் என்றாலும் எக்கனாமிக் கிளாஸில் போயிருக்க மாட்டார்.

இந்த 'எக்கனாமிக் கிளாஸ்' வழிகாட்டி நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி. சில நாட்கள் முன்பு விமானத்தில் எக்கனாமிக் கிளாஸ் பயணம் செய்து முன் உதாரணத்தை ஏற்படுத்தி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

சோனியா காந்தி வழக்கமாக ராணுவத்துக்கு சொந்தமான தனி விமானத்தில் பயணிப்பார். பட்ஜெட்டில் ராணுவ செலவு எவ்வளவு என்று அடுத்த முறை பாருங்கள். ஆனால் நேற்று சிக்கன நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டாக இந்த "எக்கனாமிக் கிளாஸ்"பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணம் நாட்டுக்கு அவசியமா என்று பார்க்க வேண்டும். அது அடுத்த ஸ்டெப்.

கடைசியாக கிடைத்த செய்தி - ராகுல் காந்தி, தன் தாயை விட ஒரு படி மேலே போய், நேற்று விமானப் பயணத்தை தவிர்த்து ரெயிலில் பயணம் மேற்கொண்டார்.


ஒரு ஆலோசனை: நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும் ஒரே ஒரு முறை விமானத்தில் ஏற்றி "எக்கனாமிக் கிளாஸ்" எடுக்க ஆசிரியர் சோனியா காந்திக்கு சிபாரிசு செய்கிறேன். அந்த காட்சியை ஆயுசுக்கும் விமானத்தை கீழே இருந்து மேலே பார்க்கும் மக்கள் பார்த்து பரவசப்படுவார்கள். அடுத்த நாள் இட்லிவடையில் செய்தியாக வரும்.

( படம்: டைம்ஸ் ஆப் இந்தியா, IE )

33 Comments:

ஸ்ரீராம். said...

தனி விமானங்கள் போகும் கதியைப் பார்த்து பயணிகள் விமானமே மேல் அல்லது விமான ஹெலிகாப்டர்களே வேண்டாம், ரயிலே போதும் என்று முடிவெடுத்து விட்டார்கள் போலும்! சிக்கன அரசியல்.

ஸ்ரீராம். said...

முதலில் அமைச்சரவையில் உள்ள கூட்டத்தைக் குறைக்கட்டும். இப்போதெல்லாம் 5 Star ஓட்டலில் சாப்பிடுவதில்லை, சிக்கன நடவடிக்கையாக 3 Star ஓட்டலில்தான் சாப்பிடுகிறோம் என்று கூட சொல்வார்கள் போலிருக்கிறது. வெறும் இட்லி வடை சாப்பிட்டால் போதாது?!

Anonymous said...

யோவ்...காந்தி பேரப் போட்டு ஏமாத்தற காக்கா கூட்டத்த எங்கே போனாலும் பாதயாத்திரை போகச் சொல்லுமையா!!

அப்டி "ஏதாவது" "நடந்தா" "அதப்" பத்தி நியூஸ் போடு. அது வரைக்கும் இந்த மாதிரி ஊர ஏமாத்தற அரசியல்வாதி நியூஸ் போட்டு இட்லிவடை வாசகர்களை ஏமாத்தறதை நீர் நிறுத்தும்.

ஈ ரா said...

அரசாங்க கார் வழங்கப்பட்டும் பேருந்தில் ஏறி வீட்டிற்குச் சென்ற கக்கனை பற்றி காங்கிரசாருக்கு யாராவது எப்போதாவது சொல்லியிருந்தால் சொநியாஜிக்கு இஇவ்வளவு சிரமம் (?) இருந்திருக்காது....

Anonymous said...

Still millions of people travel in unreserved and in toilets in trains and on roof tops in buses. Who cares?

IdlyVadai said...

//அப்டி "ஏதாவது" "நடந்தா" "அதப்" பத்தி நியூஸ் போடு.//

நடக்காததை பற்றி எமக்கு என்ன பேச்சு :-)

இரும்புக்குதிரை said...

இந்த பயணம் நாட்டுக்கு அவசியமா என்று பார்க்க வேண்டும்.
-- கரெகிட்டா சொன்னிக இட்லிவடை

Anonymous said...

சோனியா 3ஏ இருக்கையிலும் அண்டனி 3 எஃப் இருக்கையிலும் இருக்க, இடையில் உள்ள இருக்கைகள் காலியாக விடப்பட்டன. என்னே சிக்கனம் ;)

கௌதமன் said...

ஐயா - நான் கூட இனிமே - முந்திரி பக்கோடா மற்றும் பாதாம் அல்வாவிற்கு பதில் - வெறும் வெங்காய பக்கோடா மற்றும் கோதுமை அல்வா சாப்பிடுவது என்று முடிவெடுத்துவிட்டேன்!

கௌதமன் said...

வித்தவுட்டல - ரயில் சீட்டுக்குக் கீழ பயணிப்பவர்கள் - இனிமே வித்தவுட்டல - டாய்லட்டுல பயணித்தால் - அது எகானமி கிளாஸ் என்று கருதலாமோ?

IdlyVadai said...

//ஐயா - நான் கூட இனிமே - முந்திரி பக்கோடா மற்றும் பாதாம் அல்வாவிற்கு பதில் - வெறும் வெங்காய பக்கோடா மற்றும் கோதுமை அல்வா சாப்பிடுவது என்று முடிவெடுத்துவிட்டேன்!//

ரசித்தேன் :-)

கௌதமன் said...

ஜவகர்லால் நேரு - அவருடைய வார்த்தைகளிலேயே - (Nehru in his own words?) என்ற ஆங்கிலப் புத்தகத்தில் - காந்தியின் எளிமை பற்றிக் கேட்கப் பட்ட கேள்விக்கு - நேரு சொன்னது "அவரை எளிமையாக வைத்திருப்பதற்கு - எங்களுக்கு நிறைய செலவாகிறது! " காந்திக்கு கொடுக்கப்படவேண்டிய ஆட்டுப் பாலுக்காக - அந்த குறிப்பிட்ட ஆடு கூட - அவருடனேயே பயணிக்குமாம்!

SUBBU said...

//இட்லி வடை சாப்பிட்டால் போதாது?!//

தினமும் அதுகூட கிடைக்காதவர்கள் இருக்கிறார்கள்.. சரியான யோசனை !!!

யதிராஜ சம்பத் குமார் said...

ராஜமாதாவின் எகானமி க்ளாஸ் பயணத்தையொட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த "This reminds me of the old days when i was ITALIAN" என்ற வாசகத்துடன் வெளியிட்டிருந்த கார்ட்டூன் ரசிக்கும்படி இருந்தது. இவ்வாறு எகானமி க்ளாஸில் சென்று இந்தியர்களின் வரிப்பணத்தை மிச்சப்படுத்த முயற்சிக்கும் காங்கிரஸார் அவ்வாறே குவாத்ரோக்கி கொள்ளையடித்துச் சென்ற கோடிகளை மீட்கும் வழிகளையும் யோசிக்கலாம். செய்வாரா ராஜமாதா??

வரதராஜலு .பூ said...

//இந்த மர மண்டைகளுக்கு செலவை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று இதற்கு முன் தெரியாதா ? //

இல்லிங்க, நம்பள மரமண்டைன்னு நினைச்சிக்கினு இருக்கானுங்க. இத ஒரு செய்தி ஃப்ளாஷ் நியூஸ், பிரேக்கிங் நியூஸ்-னு போடற மீடியாக்காரனுங்க என்ன செய்யறது. ஜால்ரா அடிக்கறதுக்கும் ஒரு அளவு இல்ல.செருப்ப கழட்டி அடிக்கனும். கம்மனாட்டி நாய்ங்க.

விலைவாசி வெறுப்பேத்தறது போதாதுன்னு இவனுங்களும் சேர்ந்து வெறுப்ப கௌப்பறானுங்க.

IdlyVadai said...

//"This reminds me of the old days when i was ITALIAN" என்ற வாசகத்துடன் வெளியிட்டிருந்த கார்ட்டூன் ரசிக்கும்படி இருந்தது.//

அந்த கார்டூன் கிடைக்குமா ?

வரதராஜலு .பூ said...

மிஸ்டர் இட்லி வடை,

உங்கள் பதிவை (மட்டும்) ரீடரில் படிக்கமுடியவல்லை. க்ளிக் செய்தால் 10 வரிகள்தான் வருகிறது. ஏதேனும் restriction இருக்கிறதா?

இலவசக்கொத்தனார் said...

இகானமி கிளாஸ் எனச் சொல்ல வேண்டியதை எக்கனாமிக் கிளாஸ் எனச் சொல்வதின் தாத்பர்யம் என்னவோ?

யதிராஜ சம்பத் குமார் said...

Will email u in a jiffy.

IdlyVadai said...

//இகானமி கிளாஸ் எனச் சொல்ல வேண்டியதை எக்கனாமிக் கிளாஸ் எனச் சொல்வதின் தாத்பர்யம் என்னவோ?//

கடைசி பஞ்சுக்கு நல்ல இருந்தால் அப்படியே உபயோகித்தேன் :-) தினத்தந்தி கூட எக்கனாமிக் கிளாஸ் என்று தான் போட்டிருக்கிறார்கள் :-))

IdlyVadai said...

//Will email u in a jiffy.//

நன்றி. அப்டேட் செய்துவிட்டேன்.

IdlyVadai said...

//மிஸ்டர் இட்லி வடை,

உங்கள் பதிவை (மட்டும்) ரீடரில் படிக்கமுடியவல்லை. க்ளிக் செய்தால் 10 வரிகள்தான் வருகிறது. ஏதேனும் restriction இருக்கிறதா?//

ஆமாம், முழுவதும் காண்பித்தால் சிலர் எனக்கு ரீடரில் தெரிவதில்லை என்று சொல்லி மெயில் போட்டார்கள். அதனால் இந்த மாற்றம். திரும்பவும் முழுவதும் தெரிவது மாதிரி மாற்றியுள்ளேன். யாருக்காவது பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள்.

Raja said...

I think cost cutting is really good for any government and we should encourage this, not make fun of this..

I hope this government will continue this effort

Sometimes i don't understand these critics they have no logic behind their comments very immature

IBN-CNN said...

How much money is Sonia Gandhi actually saving by travelling economy?

SONIA AND SAVINGS

Money Spent Travelling Business Class

*If Sonia Gandhi flies Business Class, the seat next to her is kept empty for security reasons

*Her security officers book two rows in economy class, which is six seats

*That is approximately Rs 20,000 for a business class seat and Rs 3,700 for one economy seat

*The total amounts to Rs 63,000

Money Spent Travelling Economy

*If Sonia Gandhi flies Economy Class, the first five rows reserved for her and her entourage, that is 15 seats

*Total: Rs 55,500 (if one ticket costs Rs 3,700)

In all, the Congress leader saves a mere Rs 10,000.


In addition to her economy class traveling, Three SUVs were transported from Delhi to Bombay

Each SUV transportation charge Rs. 1 lakhs so total 3 lakhs

Unknown said...

IV,

what made Sonia to travel in Economy class and what was the urgency.. who knows it may be advantage Sonia without knowing the purpose I saw a comment about cost cutting and all enna solrathu kalakk kodumai

Kamesh

PS: Please let me know how to type in tamil I have formatted my machine and lost the google link to type..

R.Gopi said...

வந்தது அனைவருக்கும் உணவு கட்டுப்பாடு...

இனிமேல் அமைச்சரவையில் உள்ள கூட்டம் அனைவருக்கும் காலையில் வெறும் இட்லிவடை மட்டுமே டிஃபன்...

யதிராஜ சம்பத் குமார் said...

Kamesh...here it is..


http://www.google.com/transliterate/indic/Tamil


else try this...


http://thamizha.com/ekalappai-anjal

யதிராஜ சம்பத் குமார் said...

\\\I think cost cutting is really good for any government and we should encourage this, not make fun of this..///


அதெல்லாம் சரி! ஆனா ஏன் இந்த திடீர் ஞானோதயம்னுதான் தெரியல. நடுவுல ரெண்டு சீட்ட காலியா விட்டு எகானமி க்ளாஸ்ல போறதுக்கு பிஸினஸ் க்ளாஸ்ல போறது எவ்வளவோ மேல். அப்படி உண்மையிலேயே நம்ம வரிப்பணத்த மிச்சப்படுத்தணும்னு நினைச்சா ரயில்ல போகலாமே?? அரசியல்வாதிகள் எல்லாம் நேரத்த மிச்சம் புடிச்சு என்னத்த சாதிக்கப் போறாங்க??

Vilvarani said...

vilvarani said

என்ன ஒரு பெரிய மனசு. அந்த மனசு விலை வாசி குறைப்பதில் இருந்தால் மக்களுக்கு அல்லவா பணம் மிச்சம்

Erode Nagaraj... said...

மானஸ்,
இன்னா சம்பந்தம் இது... நந்ததுன்ற...நடக்குதுன்ற...
உன்னிய சொம்மா சொல்லக்கூடாதுயா... பேஜாரான ஆளு...

Erode Nagaraj... said...

சரி... சோனியா தன கட்சி நிதியை சிக்கனமாகச் செலவு செய்கிறார்.. இத்தாலி தினங்கள் நினைவுக்கு வந்திருக்காது... ஒரு வேளை இரயிலில் சென்றிருந்தால் வந்திருக்கும்... ஹோட்டல்களில் சாப்பிடும்போது கூட வேறு ஏதாவது நினைவுக்கு வரலாம்... அம்மா நான் பாஸாயிட்டேன் என்று துவங்கும் தமிழ்ப் படம் பார்த்தால் கூட பல ஞாபகங்கள் வரலாம்...

Anonymous said...

Raja,

I completely agree with you.

we have started criticizing every action of politicians.

If they start to show some good example, by travelling in the economy class, we criticize saying that there is not much to save.

According to me, it is not the amount you save but the example you set for others to emulate. If people like Sonia and Pranab travels by economy class, it is to be appreciated. We could only hope that many others follow this. Little drops makes the mighty ocean. Little amounts saved by many becomes a huge amount.

வரதராஜலு .பூ said...

////மிஸ்டர் இட்லி வடை,

உங்கள் பதிவை (மட்டும்) ரீடரில் படிக்கமுடியவல்லை. க்ளிக் செய்தால் 10 வரிகள்தான் வருகிறது. ஏதேனும் restriction இருக்கிறதா?//

ஆமாம், முழுவதும் காண்பித்தால் சிலர் எனக்கு ரீடரில் தெரிவதில்லை என்று சொல்லி மெயில் போட்டார்கள். அதனால் இந்த மாற்றம். திரும்பவும் முழுவதும் தெரிவது மாதிரி மாற்றியுள்ளேன். யாருக்காவது பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள்.//

ஆம். இப்பொழுது முழுவதும் தெரிகிறது. ஒன்றும் பிரச்சனை இல்லை.

மிக்க நன்றி

//Anonymous Anonymous said...

Raja,

I completely agree with you.

we have started criticizing every action of politicians.//

பின்ன என்ன செய்ய சொல்றிங்க. இவர்கள் செய்வதெல்லாம் ரொம்ப டூ மச்.

மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்ற திமிர், யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் இவர்களுக்கு இருப்பது நன்றாக தெரிகிறது.

இப்போழுது நம்மால் இவர்கள் போடும் ஆட்டங்களையும், வேஷங்களையும் வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும்.