தமிழகம் பல தொன்மையான கோவில்களுக்கும் அவற்றின் சிற்பக் கலைக்கும் பெயர் போனது. குறிப்பாக அக்காலத்திய சோழநாடு, இக்காலத்திய தஞ்சை மற்றும் கும்பகோணம் அவற்றைச் சுற்றியுள்ள கோவில்கள் அக்கால சோழமன்னர்களால் மிகுந்த கலைநேர்த்தியுடனும், சிறப்பம்சங்களுடனும் கட்டப்பட்டுள்ளன. தஞ்சை ப்ரகதீஸ்வரர் ஆலயம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு, அதன் கோபுர நிழல் தரையில் வீழாத வண்ணம் அமைக்கப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றே. [ இது தவறான தகவல், நிழல் கீழே விழும் ] ஆனால் இதே போன்றதொரு கோவில் தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் சுவாமிமலைக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. அது தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலாகும்.
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனின் புதல்வரான ராஜேந்திர சோழனால், தஞ்சை பெரிய கோவிலை முன்மாதிரியாகக் கொண்டு, ஆனால் அதைவிட நுணுக்கமான கலை வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஐராவதீஸ்வரர் கோவில். மூலவர் ஐராவதீஸ்வரர், அம்பாள் பெரிய நாயகியுடன் காட்சியளிக்கிறார். சுமார் 85 அடி உயரமுள்ள விமானத்தைக் கொண்டுள்ள இக்கோவிலின் முன்பக்கமுள்ள மண்டபம் ஒரு ரதத்தின் வடிவில் அமைக்கப்பட்டு அதனை இரு குதிரைகள் பக்கத்திற்கு ஒன்றாக இழுத்துச் செல்வது போல் வடிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டபத்தின் பக்கவாட்டில் அமைந்துள்ள படிக்கட்டுகளில் பரதநாட்டிய முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளன. மண்டபத்தூண்களில் போர்க்களக் காட்சிகளும், திருமணக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் கோவிலின் மேற்கூறையில் புனையப்பட்டுள்ள பல்வேறு விதமான சிற்ப வேலைப்பாடுகள் சோழர்களின் சிற்பக்கலைக்கு கட்டியம் கூறும் விதத்தில் அமைந்துள்ளன.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அமைந்துள்ள இன்னொரு விஷயம் மிகவும் ஆச்சரியம் வாய்ந்த ஒன்று. அதுதான் "ஸப்தஸ்வர"ப் படிக்கட்டுகள். கோவிலின் நுழைவு வாயிலில் இரும்பு வேலிக்குள் யாரும் புகாவண்ணம் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய மண்டப அமைப்பிலானவற்றின் ஏழுபடிக்கட்டுளைத் கற்களால் தட்டியோ அல்லது வேறு எவ்விதமாகவும் ஓசை எழுப்பினால் "ஸ, ரி, க, ம, ப, த, நி, ஸ" என்ற சப்தஸ்வரங்களும் துல்லியமாக கேட்கின்றன ( ஒவ்வொரு படிக்கட்டிற்கும் ஒவ்வொரு ஸ்வரம் ). அங்குள்ள சிறுவர்கள் அதைக் கேட்கும் பொருட்டு அதில் கற்களை வீசுவதால் அதனை பாதுகாப்பாக யாரும் புகா வண்ணம் வேலிக்குள் அமைத்துள்ளனர்.
இக்கோவிலின் குளம் "யமதீர்த்தம்" என்றழைக்கப்படுகிறது. அதாவது ரிஷியின் சாபம் பெற்று உடலெங்கும் தீக்காயங்கள் பெற்ற யமன் மரணத்திற்கு போராடுகையில் இக்கோவிலுக்கு வந்து இங்குள்ள ஸ்வாமியை தரிசித்து விமோசனம் பெற்றதாக ஐதீகம். ஆகையால் இக்குளம் இப்பெயர் பெற்றது. மேலும் இந்திரனுடைய யானையான "ஐராவதம்" இங்குள்ள சிவனைப் பூஜித்ததால், இக்கோவிலில் உள்ள ஸ்வாமி "ஐராவதீஸ்வரர்" எனப் பெயர் பெற்றதாக வழங்குகிறது.
மிகவும் தொன்மையான இக்கோவிலை "யுனெஸ்கோ" வின் தொல்பொருள்துறை மிகவும் புராதனச்சின்னமாக அறிவித்து அதனைப் பராமரித்து வருகிறது என்பது உபரித் தகவல்.
கோவிலைச் சுற்றிலும் புல்வெளிகளை அமைத்து மிகவும் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலின் சிற்ப வேலைப்பாடுகள் மனிதனால் உருவாக்கப்பட்டவையா அல்லது இறைவனுடைய சிருஷ்டியா என்ற மலைப்பையும் ப்ரமிப்பையும் தோற்றுவிக்கிறது என்றால் அது மிகையில்லை. தமிழகவாழ் இட்லிவடை வாசகர்கள் முடிந்தால் இக்கோவிலுக்கு ஒருமுறை விஜயம் செய்யவும். (நாஸ்திகர்களாக இருப்பின் கலைப்பொருட்களை காணுவதற்கு சென்றதாக சொல்லிக் கொள்ளலாம், தவறில்லை). மொத்தத்தில் காணவேண்டிய ஒரு கலைப்பொக்கிஷம்.
தஞ்சையிலிருந்து கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில், கும்பகோணத்திற்கு சிறிது முன்பாகவே அமைந்துள்ளது. தஞ்சையிலிருந்து பேருந்தில் சுமார் 90 நிமிடப் பயணம். காரில் சென்றால் 50 நிமிடங்களில் சென்று விடலாம்.
படங்கள்:
படங்கள், கட்டுரை - --யதிராஜ சம்பத் குமார்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, September 12, 2009
கோவில்களைத் தெரிந்து கொள்ளுங்கள் - தாராசுரம்
Posted by IdlyVadai at 9/12/2009 07:33:00 AM
Labels: யதிராஜ சம்பத் குமார், விருந்தினர்
Subscribe to:
Post Comments (Atom)
42 Comments:
மிகுந்த நன்றி . திராவிட கட்சிகளின் அட்சியால் கண்ட பலன் நமது பாரம்பரிய பெருமைகளை மறந்தது தான். தமிழனுக்கு மானாட மயிலாட பார்கவே நேரம் சரியாக உள்ளது . இதில் எங்கே ஆலய தரிசனம்.
நல்ல பதிவு. பல கோயில்களை அறிந்து கொள்ளும் ஆவலில் உள்ளேன்.தொடரட்டும் உங்கள் ஆன்மிகப் பணி.
ராஜ சுப்ரமணியன்
எங்க கங்கைகொண்ட சோழபுரம் அதைவிட சிறப்பு கொண்டது, அதை பற்றியும் போடலாமே !!
தாராசுரம் - சங்கமம் படத்திலும் வந்ததோ? பழைய சங்கமம் (ஜெமினி கணேசன்) அல்ல; தில்லானா மோகனாம்பாள் + கரகாட்டக் காரன் சங்கமம் !
நல்ல பதிவு. கோவிலை பார்க்க ஆசையாக இருக்கிறது. இறையருள் கிடைக்க வேண்டிகொள்கிறேன்.
Nice article. Continue your good devotional work.
நான் தாராசுரம் சென்ற போது எடுத்த சில படங்கள் இங்கே.
உபரி தகவல்: நான் அங்கு சென்ற போது பக்தர்கள் எண்ணிக்கை ஏனைய பல கோயில்களை விட குறைவாகவே இருந்தது. இது பற்றி அங்கிருந்த ஒரு பெரியவரிடம் வினவியபோது, அந்த ஆலயத்திற்கு சமய ரீதியாக பெரிய வரலாறு இல்லை என்று கூறினார், உண்மை தெரியவில்லை. (He mentioned these temples doesn't carry any fascinating religious miracles, thus we don't get much devotees. Most visitors are tourists and cultural enthusiast.)
//நாஸ்திகர்களாக இருப்பின் கலைப்பொருட்களை காணுவதற்கு சென்றதாக சொல்லிக் கொள்ளலாம், தவறில்லை.//
நான் ஒரு இந்து அல்ல... ஆக கலையை ரசிக்க மதம் ஒரு தடை அல்ல, நாஸ்த்திகரோ ஆத்திகரோ.
தாராசுரம் ஒரு அருமையான பிக்னிக் இடமாகும். சிறந்த சிவா ஸ்தலமும் ஆகும். அந்த கோவிலின் சிற்பங்கள் அனைத்தும் பார்க்க பார்க்க ரசனையை தூண்டும்.
பதிவுக்கு நன்றி
தாராசுரம் ஒரு அருமையான பிக்னிக் இடமாகும். சிறந்த சிவ ஸ்தலமும் ஆகும். அந்த கோவிலின் சிற்பங்கள் அனைத்தும் பார்க்க பார்க்க ரசனையை தூண்டும்.
பதிவுக்கு நன்றி
தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுர நிழல் தரையில் விழாது என்பதெல்லாம் கதை
நிழல் விழும்
இனிமேல் இந்த தமிழ் நாட்டுக்கோவில்களை எல்லாம் யுனச்கோவிடமே ஒப்படைத்தால்தான் உருப்படும் .
உபரி தகவல்: நான் அங்கு சென்ற போது பக்தர்கள் எண்ணிக்கை ஏனைய பல கோயில்களை விட குறைவாகவே இருந்தது. இது பற்றி அங்கிருந்த ஒரு பெரியவரிடம் வினவியபோது, அந்த ஆலயத்திற்கு சமய ரீதியாக பெரிய வரலாறு இல்லை என்று கூறினார்.
அப்படியானால் வேலூர் நாராயணிக்கும், பங்காரு பார்ட்டிக்கும் வரலாறு இருக்கிறதா?
//தஞ்சை ப்ரகதீஸ்வரர் ஆலயம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு, அதன் கோபுர நிழல் தரையில் வீழாத வண்ணம் அமைக்கப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றே.//
கோபுர நிழல் மேட்டர் தவறானது. அப்படியே பொய்யாகப் பரப்பப்பட்டு இப்படி இன்றும் இட்லிவடை மூலம் உலகெங்கும் செல்கிறது.
நிழல் கீழே விழுவதை நானே நேராகப் பார்த்துள்ளேன். இன்றுகூட நீங்கள் அங்கு சென்று இதனைப் பார்க்கலாம்.
//கோபுர நிழல் மேட்டர் தவறானது. அப்படியே பொய்யாகப் பரப்பப்பட்டு இப்படி இன்றும் இட்லிவடை மூலம் உலகெங்கும் செல்கிறது.//
பத்ரி நீங்கள் சொல்லுவது சரி. யதிராஜர் சொன்ன தகவலை எடிட் செய்ய வேண்டாம் என்று அப்படியே போட்டுவிட்டேன். தவறான தகவல் என்பதால் அதை எடிட் செய்துள்ளேன். நன்றி.
தவறான தகவலுக்கு வருந்துகிறேன். திருத்திய அன்பர்களுக்கும், இட்லிவடைக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.
Idlyvadai said....
///பத்ரி நீங்கள் சொல்லுவது சரி. யதிராஜர் சொன்ன தகவலை எடிட் செய்ய வேண்டாம் என்று அப்படியே போட்டுவிட்டேன். தவறான தகவல் என்பதால் அதை எடிட் செய்துள்ளேன்.////
திரு இட்லி வடை. உங்கள் பதிலில் தவறு உள்ளது. சரியான பதில் இதோ.
யுதிராஜர் சொன்ன தகவலைச் "சரியாகப் படிக்காமல்" அப்படியே போட்டு விட்டேன். சிலர் தவறான தகவல் என்று குட்டியதால் "இப்போது"அதை எடிட் செய்துள்ளேன்.
/// Badri said...
நிழல் கீழே விழுவதை நானே நேராகப் பார்த்துள்ளேன். இன்றுகூட நீங்கள் அங்கு சென்று இதனைப் பார்க்கலாம்.///
எதை? நிழல் விழுவதையா? நீங்கள் பார்த்ததையா?
கோபுர நிழல் - நானும் பார்த்துள்ளேன் - தஞ்சையில் - பெரிய கோவிலில் -- ஒருவேளை - இந்த வதந்தி பரப்பப்பட்டதற்கு முக்கிய காரணமே - மக்கள் ஆர்வத்தால் - அங்கு சென்று பார்த்து, ஆன்மீகப் பக்கம் அதிகமாக ஈர்க்கப்படவேண்டும் - என்ற நல்ல எண்ணம்தானோ என்னவோ?
அதிக ஹிட்ஸ் பெறவேண்டும் என்று இட்லிவடைக்கு ஆசை இருக்கும் பொழுது, அதிக விசிட் பெறவேண்டும் என்று அருள்மிகு ப்ரகதீஸ்வரருக்கு ஆசை இருக்கக் கூடாதா என்ன?
கோபுர நிழல் தொடர்பில்:
இது ஒரு திரிபடைந்த கூற்று. ஆனாலும் இந்த கோபுர அமைப்பில் நிழல் தொடர்பில் ஒரு சற்று வித்தியாசமான ஒரு கூற்றை வேறு புத்தகம் ஒன்றில் வாசித்த ஞாபகம். தேடிக் கிடைத்தால் மீண்டும் பதிலிடுகிறேன்.
நிமல் கொடுத்திருந்த லிங்க் வழியாகச் சென்று பார்த்தேன் - ஆஹா அற்புதம் - பேஷ் பேஷ் - படங்கள் நன்றாக உள்ளன - நன்றி நிமல்.
Hi,
Nice pics nimal thanks for the link... When I went to Kumbakonam for friends marriage I made it a point that the program pronlongs for a few days and made it a point to visit the small and large temple in and around kumbakonam (this in and around includes thanjavur and surrounding places too) but when I went there many places were not maintained properly and things were not in order but for Suryanarayanar temple, Uppliliappan temple, Thirubuvanam, Thiruvidaimaruthur, Nageswaran temple (this is in kumbakonam) what is that the people are doing at Aranilayatthurai God only knows..
Gangaikonda chozhapuram was in ruins without proper maintainance I remember reading it in Vengaiyin Mainthan (akilan book) and the place now ... oooooooh good god to save..
Kamesh
கோபுரத்தின் முதல் அறுபது அடிப்பகுதியின் நிழல் மட்டுமே தரையில் விழும் என நினைக்கிறேன். உச்சிப்பகுதி நிழல் கோபுரத்தின் மேலேயே விழும் என நினைக்கிறேன்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் சனி,ஞாயிறு தவிர அங்கே சென்றதுண்டு, அன்றைக்கு கோவிலுக்கு சென்ற நோக்கம் பக்தியும் அல்ல கலை /வரலாற்று ஆர்வமும் அல்ல. இனி செல்லும்போது சரியாக கவனிக்கிறேன்.
//இக்கோவிலுக்கு ஒருமுறை விஜயம் செய்யவும். (நாஸ்திகர்களாக இருப்பின் கலைப்பொருட்களை காணுவதற்கு சென்றதாக சொல்லிக் கொள்ளலாம், தவறில்லை). மொத்தத்தில் காணவேண்டிய ஒரு கலைப்பொக்கிஷம்.//
இல்லைனா மனைவியின் விருப்பம், அது அவளின் தனிமனித சுதந்திரம், அல்லது மனைவியின் விருப்பம் என்றுகூட காரணம் கூறலாம். பல பகுத்தறிவுகள் இப்படிதான் விளக்கம் சொல்லும். அதும் பத்தலைனா மஞ்சத்துண்டுக்கு சொன்ன மாதிரி ஆயிரம் விளக்கம் சொல்லாம்.
எப்பொழுதோ விகடனில் படித்த ஜோக் : தஞ்சாவூர் ஆலய கோபுர நிழல் - கீழே விழுவதில்லை - ஏன் தெரியுமா?
பதில்: அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தால் அடி பட்டு விடுமே - அதனால்தான்!
vilvarani said
நானும் சுவாமி மலை, தஞ்சை பெரியகோவில் சென்று இருக்கிறேன். அருகில் இருக்கும் தராசுரம் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை என வருந்துகிறேன். மிகவும் வருத்தத்துடன்
Good post!!!!
Temples are not built only for god! It is proof of the culture, art etc....
/***உபரி தகவல்: நான் அங்கு சென்ற போது பக்தர்கள் எண்ணிக்கை ஏனைய பல கோயில்களை விட குறைவாகவே இருந்தது. இது பற்றி அங்கிருந்த ஒரு பெரியவரிடம் வினவியபோது, அந்த ஆலயத்திற்கு சமய ரீதியாக பெரிய வரலாறு இல்லை என்று கூறினார்.**/
மிகவும் நல்ல ஆறுதல் தரும் செய்தி, வேண்டுதல் பலிக்கிறது என்று ஒருவர் ஆரம்பித்தால் கோவிலின் நிலைமை ரொம்ப மோசமாகிவிடும், கண்டிப்பாக அரசு பராமரிக்காது பிறகு கோவில் சீரழிந்து விடும், அதற்கு இப்படி இருப்பதே சால சிறந்தது!!!!!
/*** நிமல்-NiMaL said...
நான் தாராசுரம் சென்ற போது எடுத்த சில படங்கள் இங்கே.***/
நன்றி!!!அனைத்து படங்களையும் தரவிரக்கம் செய்துவிட்டேன் ஒரு சிலவற்றைத்தவிர...
/***//நாஸ்திகர்களாக இருப்பின் கலைப்பொருட்களை காணுவதற்கு சென்றதாக சொல்லிக் கொள்ளலாம், தவறில்லை.//
நான் ஒரு இந்து அல்ல... ஆக கலையை ரசிக்க மதம் ஒரு தடை அல்ல, நாஸ்த்திகரோ ஆத்திகரோ.***/
ஏசுவும் அல்லாவும் இந்தியாவில் கால் எடுத்து வைப்பதற்கு முன் என்ற தசாவதாரம் பட வாக்கியங்கள் தான் ஏனோ ஞாபகம் வருகிறது!!!
நிமல்
படங்கள் மிகவும் அருமை.
Shri Badri said //கோபுர நிழல் மேட்டர் தவறானது. அப்படியே பொய்யாகப் பரப்பப்பட்டு இப்படி இன்றும் இட்லிவடை மூலம் உலகெங்கும் செல்கிறது.
நிழல் கீழே விழுவதை நானே நேராகப் பார்த்துள்ளேன். இன்றுகூட நீங்கள் அங்கு சென்று இதனைப் பார்க்கலாம்.//
September 12, 2009 7:40 PM
May be, the shadow of the Metal portion (Kumbham or Khalasam as it is called) may not fall on earth.(but I am not sure; nor I am in a position to verify this aspect. May I request that IV followers at Thanjavur may kindly verify the aspect and may post the truth.
கோபுரத்தில் உள்ள கலசத்தின் நிழல் தரையில் விழாது.
/*** வயதான வாலிபன் said...
கோபுரத்தில் உள்ள கலசத்தின் நிழல் தரையில் விழாது.***/
தயவுசெய்து கிண்டல் செய்யும் நோக்கத்தோடு பின்னூட்டம் மருந்துக்குக் கூட வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உன்னதமான கலைகளை கொண்ட தலைசிறந்த மாபெரும் உன்னதமான படைப்பு அது!!
My darasuram photos are posted here http://www.subramaniansuresh.com
Sample Image:
http://www.subramaniansuresh.com/index.php?showimage=17
"Blogger வயதான வாலிபன் said...
கோபுரத்தில் உள்ள கலசத்தின் நிழல் தரையில் விழாது.
September 14, 2009 3:38 PM "
I also heard the same. The main gopuram(sanctum-sanctoram) has a broad base and(referred as the cross section area), this cross section area becomes smaller as we go up. This makes the shadow of "Kalasam(certainly not the gopural)" falls on the gopuram itself, thus it doesn't fall on the ground(floor). Please ref http://templezone.blogspot.com/2009/08/tanjore-big-pragatheswarwa-temple.html.
Thanks
7 padikattukal arputham tharasuraththil yanga mama irukkanga but yennal angu poga mudiyama irunthalumyeppadiyavathu anga poganum yendru antha iravatheishvararai vendi kolgiren
7 padikattukal arputham tharasuraththil yanga mama irukkanga but yennal angu poga mudiyama irunthalumyeppadiyavathu anga poganum yendru antha iravatheishvararai vendi kolgiren
உமா அவர்களே,
செப்டம்பர் 2010 பதிவுகளில், செப்டம்பர் 2011 ல் பின்னூட்டமிடுவீர்களா?
aalayam yentraale miguntha arputham athilum sivan aalayam yendral sollave vendaam avarudaya namaththai ninaithale namakku mukthi kidaikkume
intha thaarasuram iravatheeshvarar aalayathai, aalayatharisanam nigalchiyil yellorum parkka vendum yenpathu yen aasai ithu niraiveravendum yendru naan vendi kolgiren
too good temple
too good comments
too good article toogood temple
Post a Comment