முதலில் ஸ்ருதி கமலஹாசனுக்கு ஒரு சபாஷ். எல்லாப் பாடல்களிலும் தமிழ் வார்த்தை துல்லியமாக நமக்குக் கேட்கிறது. தற்போது உள்ள பல இசையமைப்பாளர்கள் இதைக் கேட்க நான் சிபாரிசு செய்வேன். ஸ்ருதிக்கு இது முதல் படம்; தன் தந்தையின் படம். போகப் போகத் தெரியும். இதே போல மற்ற படங்களுக்கும் இவர் தொடர்ந்து இசை அமைத்தால் இவர் வெகு தூரம் செல்வார் என்பதில் ஐயம் இல்லை. எல்லாப் பாடல்களும் கேட்கும்படியாக இருப்பது பெரிய ஆறுதல்.
1. 'அல்லா ஜானே' இது எங்கே எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால் கடைசியில் நான்கு அல்லது ஐந்து இஸ்லாமியத் தீவிரவாதிகளைப் போட்டுத் தள்ளுவதற்குள் இந்தப் பாடல் வரும் என்று நினைக்கிறேன்; அல்லாமல் வேறு எங்கு வரும் என்று செக்கியூலரிஸ்ட் கமலுக்கே வெளிச்சம். ஐந்து பாடல்களில் இதுதான் முதல் இடத்தைப் பிடிக்கும். பல்லவியில் ஒரு மாதிரியும், (குறிப்பாக இரண்டாம்) சரணத்தில் ஃபீலீங் கொடுத்துப் பாடியுள்ளது கொஞ்சம் செயற்கைத் தனமாக இருந்தாலும் பாடல் நன்றாக இருக்கிறது. பாடலாசிரியர் மனுஷ்ய புத்திரன், நல்வரவு!. முதன்முறை கேட்கும் போது சுபபந்துவராளியில், 'பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்..' என்று ஜேசுதாஸ் பாடிய ஐயப்ப பாடல் எனக்கு நினைவுக்கு வந்தது. உங்களுக்கு வருகிறதா என்று கேட்டுவிட்டுச் சொல்லவும். ஸ்ருதி கமல்ஹாசன் இசை ஆரம்பம் முதல் கடைசிவரை (நடுவில் எல்லாம் கூட) அருமையாக இருக்கிறது.
2. "என்ன சிடில நாலே பாட்டு தானா?" என்று கேட்கக் கூடதே என்பதற்காக எக்ஸ்ட்ராவாக, 'அல்லா ஜானே-2' ஸ்ருதி பாடியுள்ளார். தசாவதாரத்தில் ஹிமேஷ் 'ஒ ஒ சனம் ஒ ஒ' ரகம். 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் மீண்டும் உலக சாதனை நிகழ்த்திய போது ஸ்ருதி இதற்கு இசை அமைத்தாரா என்று தெரியவில்லை; அப்படி ஒரு வேகம் இந்தப் பாட்டில். பாடலுக்கு நடுவில் வரும் ஆலாபனை போல் ஒரு பிட்டை டிஜிட்டலால் கொஞ்சம் மாடுலேட் செய்த இடம் தமிழ் இசைக்குப் புதுசு.
3. 'நிலை வருமா'-- கமல், பாம்பே ஜெயஸ்ரீ பாடியுள்ளார்கள். ( கமல் ரசிகை ஜெயஸ்ரீ இல்லை இது வேற ஜெயஸ்ரீ ). இந்தப் பாடல் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும். கொஞ்சம் நாள் கழித்து இது முதல் இடத்துக்கு வரும். அருமையான பாடல். அனைவரையும் வசீகரிக்கும் குரலில் பாம்பே ஜெயஸ்ரீ பாட ஆரம்பித்து, பின் கமல், பாம்பே ஜெயஸ்ரீ பாடும் வரிகளை திரும்பப் பாடும் இடங்கள்-- ஹேராம் படத்தில் வரும், 'நீ பார்த்த பார்வை' நினைவுக்கு வருகிறது, அதே போல் இந்தப் பாடல் காக்க காக்க படத்தில் வரும் 'ஒன்றா ரெண்டா ஆசைகள்' என்ற பாடலை உங்களுக்கு நினைவுப் படுத்தலாம். கடைசியில் கமல் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, 'நிலை வருமா?" என்று கேள்வி கேட்பார்; பாடலுக்கு திருஷ்டிப் பொட்டு!.
4. தற்போது தமிழ் சினிமாவில் திடீர் என்று இருவர் தொள தொள (மாரியாத்தா மஞ்சள், எலக்டிக் க்ரீன் என்று ராமராஜன் கலர்களில்) டிரஸ், செயின், கண்ணாடி போட்டுக்கொண்டு, ஆள் காட்டி விரலை கீழ் நோக்கி அசைத்து, பெரிய வாய் அசைப்புடன் ராப் பாடுவது மரபு. இந்தப் படத்திலும் இது உண்டு போல் இருக்கிறது. இந்தப் பாடலில் ஸ்ருதி பாடியும் ஆடியும் இருக்கிறார். ராப்-- தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் கூட கேட்டுவிட்டதால் பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் இந்தப் பாடலில் என்னைக் கவர்ந்தது ஸ்ருதியின் குரல் மற்றும் 'வானம் எல்லை' என்று கர்நாடகமாகப் பாடி அதை நன்றாக மிக்ஸ் செய்துள்ளார். நல்ல ஃப்யூஷன். இது மூன்றாம் இடம்.
பாடலை இங்கே பார்க்கலாம்
5. 'உன்னைப் போல் ஒருவன்' என்று துடங்கும் பாடல், "பரித்ராணாய சாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம் தர்ம ஸந்ஸ்த்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே" என்ற கீதையின் வரிகளைக் கொண்டு வருகிறது. ஏ.ஆர்.ரஹமான் மாதிரி கொஞ்சம் வித்தியாசமாக இசை அமைத்திருக்கிறார். 'ஐ ஆம் தி நியூ ஃபேஸ் ஆஃப் டெரர்' என்று நிறைய பேர் கடைசியில் சொல்லுகிறார்கள், இதில் விதவிதமான ஆசாமிகள் வருவார்கள் என்று நினைக்கிறேன்.
இந்த பாடல் கடைசியில் நாங்க கூட தீவிரவாதிகள் தான் என்று பலர் சொல்லுவதும், 'நிலை வருமா' என்ற பாடலில் 'நின்றே கொல்லும் தெய்வங்களும், இன்றே கொல்லும் மத பூசல்களும்' என்ற வரிகளும் எனக்கு பயத்தை உண்டு பண்ணியுள்ளது.
ஹிந்தி படத்தை கமல் சொதப்பாமல் இருந்தால்தான் ஆச்சரியப் பட வேண்டும். சொதப்பாமல் இருக்க தசாவதாரம் படத்தில் வந்த ரங்கநாதனை அட்வான்ஸாக வேண்டிக்கொள்கிறேன்.
நிறைய புது ஸ்டைல், வார்த்தை புரிகிற மாதிரி பாடல்கள் என்ற காரணங்களுக்காக இந்த சிடியை காசுகொடுத்து வாங்க, சிபாரிசு செய்கிறேன்.
டிரைலர் பார்க்க இங்கே
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, September 09, 2009
உன்னை போல் ஒருவன் பாடல்கள்
Posted by IdlyVadai at 9/09/2009 11:33:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
23 Comments:
நன்றி இட்லிவடை...
Trailer Super!!!!மற்றபடி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
/**எல்லாப் பாடல்களும் கேட்கும்படியாக இருப்பது பெரிய ஆறுதல்.**/
மெய்யாலுமா???
vilvarani said
தந்தை பதினாறு அடி பாய்ந்தால் மகள் முப்பதிரெண்டு அடி பாய்வதில் என்ன ஆச்சர்யம்
You could have posted atleast Sruthi's photo in the article along with Kamal:-)
Intha albathuku intha review konjam over a than irruku.
Paatellame romba sumar ragam than.
kamal padathil padalakalin tharam vavara kurainthu monde varukirathu.....itharku avar paadalkale illamal padam edukkalaam...
/***முதன்முறை கேட்கும் போது சுபபந்துவராளியில், 'பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்..' என்று ஜேசுதாஸ் பாடிய ஐயப்ப பாடல் எனக்கு நினைவுக்கு வந்தது. உங்களுக்கு வருகிறதா என்று கேட்டுவிட்டுச் சொல்லவும். **/
Idlyvadai are you a peter in music???
Ragam perellam solkireer!!!Can you tell me the swaras of the raga subabanduvaraali???
//Idlyvadai are you a peter in music???
Ragam perellam solkireer!!!Can you tell me the swaras of the raga subabanduvaraali???//
No I am not a Peter or Thomas in Music, if I would have been, then I would not have any blogs or reply to comments :-)
/*** IdlyVadai said...
//Idlyvadai are you a peter in music???
Ragam perellam solkireer!!!Can you tell me the swaras of the raga subabanduvaraali???//
No I am not a Peter or Thomas in Music, if I would have been, then I would not have any blogs or reply to comments :-)***/
கண்டுபிடிக்க சற்று கடினமாக விளங்கும் ராகத்தின் பெயரை தாங்கள் போட்டதால் தான் நான் கேட்டேன், சுபபந்துவராளி ச,ரி1,க1,ம2,ப,த1,நி2,ச (ஆரோகணம்) ச,நி2,த1,ப,ம2,க1,ரி1,ச (அவரோகணம்). தயவுசெய்து கோபித்து கொள்ளாதீர்கள்!! நீங்கள் சொன்ன பாடல் இந்த கட்டுக்குள் அடங்காதது என்று நினைக்கிறேன், வேறு சில ஸ்வரங்களும் வருவது போல தெரிகிறது வக்கிர ராக வகையை சேர்ந்ததாக இருக்கலாம், தெரிந்தவர் சொல்லலாம் (நாகராஜ் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்!!)
நீங்க link கொடுத்திருந்த galata.com ல இருக்கின்ற song promo clipping - எல்லா படங்களிலேயும் வருகின்ற - வெட்டி வெட்டி இழுக்கும் தலைவலி ரக music தான்.
//கண்டுபிடிக்க சற்று கடினமாக விளங்கும் ராகத்தின் பெயரை தாங்கள் போட்டதால் தான் நான் கேட்டேன், சுபபந்துவராளி ச,ரி1,க1,ம2,ப,த1,நி2,ச (ஆரோகணம்) ச,நி2,த1,ப,ம2,க1,ரி1,ச (அவரோகணம்). தயவுசெய்து கோபித்து கொள்ளாதீர்கள்!! நீங்கள் சொன்ன பாடல் இந்த கட்டுக்குள் அடங்காதது என்று நினைக்கிறேன், வேறு சில ஸ்வரங்களும் வருவது போல தெரிகிறது வக்கிர ராக வகையை சேர்ந்ததாக இருக்கலாம், தெரிந்தவர் சொல்லலாம் (நாகராஜ் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்!!)//
கோபம் எல்லாம் இல்லை ( கடைசியில் ':-)' இருந்ததே பார்க்கலையா ? நீங்கள் சொல்லுவது சரி, சில இடங்களில் அந்த ராகத்தின் சாயல் வரும். ஆனா நான் சொன்னது "முதன்முறை கேட்கும் போது சுபபந்துவராளியில், 'பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்..' என்று ஜேசுதாஸ் பாடிய ஐயப்ப பாடல் எனக்கு நினைவுக்கு வந்தது." என்றேன்.
ராகம் தெரிந்த பெரியவர்கள் விளக்குவார்கள். நான் எஸ்கேப் :-)
//நீங்க link கொடுத்திருந்த galata.com ல இருக்கின்ற song promo clipping - எல்லா படங்களிலேயும் வருகின்ற - வெட்டி வெட்டி இழுக்கும் தலைவலி ரக music தான்//
சினிமா பாடல் கேட்கும் முறை தெரியாதா ? முதலில் ஒரு முறை கேட்கவேண்டும், பிறகு அதை பல முறை கேட்க வேண்டும் அப்பறம் உங்களுக்கே பிடித்துவிடும்.
( திருமணம் செய்துக்கொண்டவர்களுக்கு புரியும் நான் சொல்லுவது. எதற்கும் :-) போட்டு வைக்கிறேன். )
Iv,
En intha prachanai...Arohanam / Avarohanam and all ...innum konjam nadraga kelungal engeyavathu sutta padalaga than irukkum.. Padame Sutta padam thaan ithula pattu mattum enna
Kamesh
/**சினிமா பாடல் கேட்கும் முறை தெரியாதா ? முதலில் ஒரு முறை கேட்கவேண்டும், பிறகு அதை பல முறை கேட்க வேண்டும் அப்பறம் உங்களுக்கே பிடித்துவிடும். **/
சினிமா பாடல்கள் மட்டும்தானா?? இப்பொழுது வரும் சினிமாக்களை என்ன சொல்வது? பார்க்க பார்க்கத் தான் பிடிக்கும் தனுஸ் போல என்று சொல்வீங்களா?
/**( திருமணம் செய்துக்கொண்டவர்களுக்கு புரியும் நான் சொல்லுவது. எதற்கும் :-) போட்டு வைக்கிறேன். )**/
ஆக நீங்கள் திருமணம் ஆனவர் என நினைக்கிறேன்.
இ வ !
மஞ்சள் கமெண்ட் ஆச்சு, பச்சை யாக கமெண்ட் இப்போ இங்கே பாத்தாச்சு; நீலம் எப்போ?
/***kggouthaman said...
இ வ !
மஞ்சள் கமெண்ட் ஆச்சு, பச்சை யாக கமெண்ட் இப்போ இங்கே பாத்தாச்சு; நீலம் எப்போ?***/
நீலத்தில் பதிவே போட்டாகி விட்டது (மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 07-09-2009), அதற்கு பல வண்ணங்களில் பின்னூட்டங்களும் போடப்பட்டுவிட்டது....இப்போ போய் நீல கமெண்ட் எப்போது என்று கேட்கிறீங்களே சார், என்ன நியாயம் இது???
Am i right Idlyvadai?, what are you saying?
ராகுல் (விஜய் சந்திச்சது உங்களை இல்லையே?) நிற்க. நான் சொன்னது இ வ கமெண்ட் மட்டும் தான். போஸ்ட் - இல்லை; அதையும் தவிர இ வ ஆரம்ப நாட்களிலிருந்தே - 'பச்சை' இலையும் - பொன்னிற (மஞ்சள்) வடையும் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார் - சமீப காலங்களில் நீல வண்ண 'விஷ' மேட்டர் வேறு ....!
இந்த மஞ்சள் கமெண்ட்டுக்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன் !!!!!!!!
//இந்த பாடல் கடைசியில் நாங்க கூட தீவிரவாதிகள் தான் என்று பலர் சொல்லுவதும், 'நிலை வருமா' என்ற பாடலில் 'நின்றே கொல்லும் தெய்வங்களும், இன்றே கொல்லும் மத பூசல்களும்' என்ற வரிகளும் எனக்கு பயத்தை உண்டு பண்ணியுள்ளது.
ஹிந்தி படத்தை கமல் சொதப்பாமல் இருந்தால்தான் ஆச்சரியப் பட வேண்டும். //
ஹிந்திப் படத்தை பாக்கலையா? மதப்பூசல்களைப் பத்தின படம்தானே அய்யா... அப்புறம் எதுக்கு உமக்கு பயம், கமல் சொதப்புவார்னு?
தமிழ் வெர்ஷன்ல எல்லா மதத் தீவிரவாதிகளும் வருவாங்க. ஸோ... அவர் ஸெக்யூலரிஸ்ட்ங்கிறதை தப்பாம நிரூபிச்சிடுவார். நீங்க பொழுது போகாம மஞ்சா, பச்சா பேனாவோட ரெடியா இருங்க விமர்சனம எழுத...
/***ராகுல் (விஜய் சந்திச்சது உங்களை இல்லையே?) நிற்க. **/
என்னை இவ்வளவு அசிங்கமா இதுவரை யாரும் கேட்டது இல்லை சார். என் வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய அவமானம் இது. கடவுளே என்னை இப்படி கேட்க வைத்து விட்டாயே!!ஏன் சார் என்னை பார்த்து இந்த கேள்வியை கேட்டீங்க?? நான் அப்படி என்ன தப்பு பண்ணினேன்? அப்படி ஏதேனும் செய்து இருந்தால் அடியேனை தயவுசெய்து மன்னித்து விடவும்!
kurudhippunal parkkavillaiya.pinne eppadi sodhappuvar.
ராகுல் - கொஞ்சம் விட்டாக்க - கரகாட்டக்காரன் படத்தில் - கவுண்டமணி - செந்திலைப் போட்டு - "அந்தக் கேள்வியை என்னைப் பார்த்து ஏண்டா - கேட்டே"ன்னு - கேட்டு கேட்டு அடிப்பதைப் போல அடிச்சுடுவீங்களோன்னு - பயமா இருக்கு!
/***ராகுல் - கொஞ்சம் விட்டாக்க - கரகாட்டக்காரன் படத்தில் - கவுண்டமணி - செந்திலைப் போட்டு - "அந்தக் கேள்வியை என்னைப் பார்த்து ஏண்டா - கேட்டே"ன்னு - கேட்டு கேட்டு அடிப்பதைப் போல அடிச்சுடுவீங்களோன்னு - பயமா இருக்கு!**/
ஐயோ சார் நீங்க தயவுசெய்து அப்படி நினைக்க வேண்டாம்... என்னை விஜயோடு வைத்து பேசியதால் ஏற்பட்ட குமுரல் அவ்வளவுதான்!! மன்னிக்கவும்.
Post a Comment