ஸ்ரீஜா இந்த மாதிரி கமெண்ட் போட்டிருந்தார்.
எனக்கொரு சந்தேகம், 5-9-2009 இரவு மானாட மயிலாட நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. ஒவ்வொரு ஆட்ட இறுதியிலும் நடுவர்கள் விமர்சனம் - அதில் கலா மாஸ்ட்டர் குறிப்பிடுகையில் - "சான்ஸே இல்ல சான்ஸே இல்ல" அப்படி கூறுகிறார்களே அப்படி என்றால் என்ன ?
எனக்கு டக்குனு தோணிய 'சான்ஸே இல்ல...'
1. காமராஜர் ஆட்சி
2. ரஜினி அரசியல் பிரவேசம்
3. முழு டிரஸ் போட்ட ஸ்ரேயா
4. டெல்லியிடம் கேட்காமல் சுயமாக சிந்திக்கும் தமிழக காங்கிரஸ்
5. ஜின்னா பற்றி பேசாமல் இருக்கும் பா.ஜ.க தலைவர்கள்
6. சுவிஸ் வங்கி கருப்பு பணம் இந்தியாவுக்கு வரும் என்ற நினைப்பு
7. "மைனாரிட்டி ஆட்சி" என்று அழைக்காத ஜெ.
8. மீட்டர் மேல் காசு வாங்காத சென்னை ஆட்டோ டிரைவர்
9. மிஸ்ட் கால் கொடுக்காமல் கால் செய்யும் காதலி
10. தான் (தாங்கள்) யார் என்று வெளிக் காட்டிக்கொண்டு எழுதும் இட்லிவடை.
அடித்துக் கொள்ளாத வலைபதிவர்கள்.
இவை எல்லாம் உங்களுக்குத் தெரியாம இருக்க சான்ஸே இல்ல என்பது எனக்கு தெரியும் :-)
17 Comments:
சான்ஸே இல்ல.
// அடித்துக் கொள்ளாத வலைபதிவர்கள்.//
உங்களுக்கு, "எங்களைப்" பற்றிச் சொல்லிக்கொள்கிறோம் - நாங்கள் அடித்துக் கொள்வதே இல்லை.
(இதுவரை)
http://engalblog.blogspot.com
/யதிராஜ சம்பத் குமார் said...
சான்ஸே இல்ல./
ஆமாம்! இவ திருந்தும்ன்றதுல எனக்கும் அப்படித்தான் தோணுது!
11. Vulgarity இல்லாத இட்லிவடை
12. மு.க இல்லாத மானஸ்தன் பின்னூட்டம்
13. மேக் அப் இல்லாத விஜய் படம்
14. விக் இல்லாத ரஜினி படம்
என list நீளும்... தெரிந்தவர்கள் இன்னும் கொஞ்சம் போடுங்களேன்
இதுவரை அடித்துக் கொண்டதே இல்லை என்று பெருமைப்பட்டுக் கொண்ட கௌதமன் சார்,
அப்புறம் உங்களது இன்னொரு வலைப்பதிவில், "எஜமானியம்மா காசு ஷோபனா அங்கே இருந்து துரத்தும் வரை இங்கே வருவதாக இல்லை" என்று எதற்காகச் சொன்னீர்கள்:-))
அடிச்சுக்கறதும் அப்புறம் சேன்துக்கறதும் அரசியலில் மட்டும் தான் இருக்க வேண்டுமா? பதிவர்களுக்கிடையில் இருக்காது என்கிறீர்களா?
சான்ஸே இல்ல!
என் பின்னூட்டத்தையும் பொருட்படுத்தி அதை ஒரு பதிவாக வெளியிட்ட இவ-க்கு நன்றி.
நல்லா விளங்கிச்சு !!!!
கிருஷ்ணமூர்த்தி சார் - இதுவரை மேடம் என்னைத் துரத்தவில்லை - எனவே நாங்கள் அடித்துக் கொள்வதே இல்லை - (இதுவரை) என்று நான் போட்டது சரிதான். (மேடம் வேற எங்கியோ பிசி - அதனால நாங்க பொழச்சிக் கெடக்கோம். ) நீங்க அல்லது சில நாட்கள் சாட் செய்த மதிப்பிற்குரிய - மா ...... யாரும் பற்ற வைக்காதீர்கள்!
ஸ்ரீஜா நல்லா விளங்கிச்சுன்னு சொன்னதுல இருந்து விளங்கினது:
இட்லிவடைக்கு சரக்கு மாஸ்டர்கள் தேவை! உடனே தேவை!!
அரசு ஊடகங்களில் வந்த பழைய விளம்பரம்: "என்னப்பா.. ஏகாம்பரம்... மூணாவதா பொறந்ததும் பொண்ணா போயிடுச்சாமே... ஐயோ பாவம்..."
"என்னம்மா ஐயோ பாவம்..." இப்படிப்போகும். பாவம் ஏகாம்பரம் சான்சேயில்லை... (சாண் - சேயில்லை = சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை என்ற பழமொழியின்படி பார்த்தால்).
/*** Erode Nagaraj... said...
அரசு ஊடகங்களில் வந்த பழைய விளம்பரம்: "என்னப்பா.. ஏகாம்பரம்... மூணாவதா பொறந்ததும் பொண்ணா போயிடுச்சாமே... ஐயோ பாவம்..."
"என்னம்மா ஐயோ பாவம்..." இப்படிப்போகும். பாவம் ஏகாம்பரம் சான்சேயில்லை... (சாண் - சேயில்லை = சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை என்ற பழமொழியின்படி பார்த்தால்).**/
இந்த மொக்கை சான்ஸே இல்லை
//
4. டெல்லியிடம் கேட்காமல் சுயமாக சிந்திக்கும் தமிழக காங்கிரஸ் //
தமிழக காங்கிரஸ் மட்டுமா என்ன. வேறு எந்த மாநில காங்கிரஸ் சுயமாக சிந்திக்கும் வல்லமை பெற்றிருக்கிறது?
டெல்லியிடம் கேட்காமல் சுயமாக சிந்திக்கும் தமிழக காங்கிரஸ்///
இது முற்றிலும் புதிய தகவலாக இருக்கிறது. தமிழக காங்கிரஸ் எப்பொழுது தனது முடிவுகளை தில்லியைக் கேட்டுக் கொண்டு எடுத்தது?? அனைத்து முடிவுகளும் அறிவாலயத்தில் அல்லவோ முடிவு செய்யப்படுகிறது என்று இதுகாறும் நினைத்துக் கொண்டிருந்தேன்??
அனைவருக்கும் எனது வணக்கங்கள் உரித்தாகட்டும்.
வலைப்பதிவுகளில் நானும் பதிவு இட வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை. அதற்காகவே வலைப்பதிவில் கணக்கினை ஆரம்பித்து சில வருடங்கள் உருண்டோடிவிட்டன....... இப்போது தான் அதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது........
அத்துடன் தமிழில் தட்டச்சு செய்வது இதுவே முதல் தடவை. எனவே ஏதாவது பிழைகள் காணப்பட்டால் பின்னுட்டல் பெருமக்கள் பொறுத்து அருள வேண்டும்.
மற்றும் உங்கள் வழிகாட்டல்களும் வரவேற்கப்படுகின்றன......
www.daarbaar.blogspot.com
8. மீட்டர் மேல் காசு வாங்காத சென்னை ஆட்டோ டிரைவர்
Is this applicable to TamilNadu Auto drivers.
First of all they dont have Meter in auto.
சான்ஸே இல்ல
//8. மீட்டர் மேல் காசு வாங்காத சென்னை ஆட்டோ டிரைவர்//
திருத்தம்..."மீட்டர் போடும் ஆட்டோ டிரைவர்".
Post a Comment