ஆந்திர முதல்வர் Y.S.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சி மற்றும் சோகத்தினைத் தோற்றுவித்திருக்கும் இவ்வேளையில் அடுத்ததாக ஒரு சோகம் அவரை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே ஆரம்பித்து விட்டது. அது அடுத்த முதல்வர் யாரென்ற கேள்விதான். ராஜசேகர ரெட்டி இறந்தவுடன் ஆந்திர நிதியமைச்சரும் ஆந்திர மூத்த காங்கிரஸ் தலைவருமான திரு.ரோஸையா தற்காலிக முதல்வராக நியமனம் செய்யப்பட்டார். மேற்கொண்டு நடவடிக்கைகள் ஒருவார துக்ககாலத்திற்கு பிறகு மேற்கொள்ளப்படுமென காங்கிரஸ் காரிய கமிட்டியில் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இவை ஒருபுறமிருக்க, நேற்று மதியமே அதாவது ஆந்திர முதல்வர் அடக்கம் செய்யப்படுவதற்கு சில மணிகளுக்கு முன்பாகவே சுமார் 120 ஆந்திர சட்டசபை உறுப்பினர்கள் ( YSR ஆதரவாளர்கள்) அடுத்த முதல்வராக மறைந்த ஆந்திர முதல்வரின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியே நியமிக்கப்பட வேண்டும் என கோஷங்கள் எழுப்பத் துவங்கி விட்டனர். அதுமட்டுமில்லாது மொத்த காங்கிரஸ் உறுப்பினர்களான 154 பேரில், 120 பேர்களின் ஆதரவு ஜெகன் மோகன ரெட்டிக்கே இருக்கிறது என்று ஒரு அடையாள அணிவகுப்பையும் நடத்தி விட்டனர். இதற்கிடையே அடுத்த முதல்வர் பதவிக்கு சில சீனியர் காங்கிரஸார் மத்தியில் போட்டியிருப்பதாக ஹேஷ்யங்கள் நிலவுகின்றன. ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவரான திரு.ஸ்ரீனிவாஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான ஜெய்பால் ரெட்டி மற்றும் சிலர் இப்போட்டியில் இருப்பதாகத் தெரிகிறது. மேலும் ஜெகன் மோகன ரெட்டியை முதல்வராக ஏற்பதில் இவர்களுக்கு கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இச்சமயத்தில் அதனை வெளிப்படுத்துவது விவேகமாக இராது என்ற காரணத்தால் அவர்கள் அமைதி காப்பதாக பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கூட்டம் சேர்த்துக் கொண்டு கோஷ்டி கானம் இசைப்பது என்பது காங்கிரஸாரின் மரபு போலும். இது எம்மாநிலத்திற்கும் விதிவிலக்கில்லை என்றாகிவிட்டது. இவர்கள் அடையாள அணிவகுப்பு நடத்தியதோடு மட்டுமல்லாமல், இந்திராவிற்குப் பிறகு ராஜீவ் பிரதமராகப் பொறுப்பேற்றார் ஆதலால் ராஜசேகர ரெட்டிக்குப் பிறகு அவரது வாரிசான ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக்கப்படுவதில் தவறில்லை எனவும், ஓமர் அப்துல்லா மற்றும் ஏ.கே.அந்தோணி போன்றோர் அவர்களது இளவயதிலேயே முதல்வராக்கப்பட்டுவிட்டனர் எனவும் தங்களது கோஷ்டி கானத்திற்கு ஸ்ருதி கூட்டுகின்றனர். இவர்களின் இக்கூற்று மத்திய காங்கிரஸாரிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இந்த துக்ககரமான வேளையில் இது போன்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் ஒரு வார காலத்திற்குப் பிறகு மேலிட காங்கிரஸ் காரிய கமிட்டியில் இதுகுறித்து இறுதி முடிவெடுக்கப்படுமென வீரப்ப மொய்லி அறிவித்திருக்கிறார். வாரிசு அரசியல் என்பது இந்திய அரசியலில் தவிர்க்கமுடியாத ஒன்று என்றாகிவிட்ட நிலையில், இவர்களின் கோரிக்கையும் தவிர்க்க இயலாததே. ஆயினும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மண்ணின் ஈரம் கூட இன்னும் உலராத நிலையில் இவர்களின் கோஷ்டி கானத்திற்கு ஜெகன் மோகன ரெட்டி கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கையை உயரே உயர்த்தி அரசியல் வாதிகளின் ட்ரேட் மார்க வணக்கத்துடன் டெலிவிஷன் சானல்களில் காட்சியளிக்கிறார். இந்நிலை அவரின் தந்தை இறந்த சோகத்தை விட மேலானது.
அண்ணன் எப்பொழுது கிளம்புவான், திண்ணை எப்பொழுது காலியாகும் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது இந்த அவலங்களைப் பார்க்கும் போது.
- யதிராஜ சம்பத் குமார்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, September 06, 2009
பதவி படுத்தும் பாடு..!!
Posted by IdlyVadai at 9/06/2009 06:33:00 AM
Labels: அரசியல், செய்திவிமர்சனம், யதிராஜ சம்பத் குமார்
Subscribe to:
Post Comments (Atom)
22 Comments:
Article from Yesterday's Indian Express
http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Don’t+let+this+son+rise&artid=eboC6hzS8I8=&SectionID=d16Fdk4iJhE=&MainSectionID=HuSUEmcGnyc=&SectionName=aVlZZy44Xq0bJKAA84nwcg==&SEO=
jagan only will be the next cm.otherwise, all the swinding on public funds in mytas can not be only with ysr family. while it may not be the best time , it is to be highlighted ysr and family are not the thyagis and corruption free.
ஆ மு உடல் அடக்கம் செய்யப் பட்டதை தொலைக் காட்சியில் பார்த்தவர்கள் - அந்தப் பெட்டியையும், அதன் மீது காணப்பட்ட சின்னத்தையும் மறந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன். அது என்ன என்று பார்ப்பதற்குள் அதன் மீது மலர் தூவி மறைக்கப்பட்டது. அடுத்து வருபவரும், அந்த சின்னத்துடன் நெருங்கிய தொடர்பு இருப்பவராக இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம்.
கிறித்தவ பதிரியார்கள் முன்னிலையில் YSR உடல் அடக்கம் செய்யப்பட்டது என்று செய்தியில் கேள்விப்பட்டேன், அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் அல்லவா??? யாராவது உண்மை அறிந்தவர் சொல்லுங்களேன், தயவு செய்து கற்பனை புனைவுகள் வேண்டாம்!!!
why is KGGouthaman talking cryptically? what is that symbol?
- செருப்பே ஆண்ட நாடு .(ராமாயணத்தில்)
- கோயிலுக்குள்ளே செருப்போடு போனவனை பிரதமர் ஆக்கிய நாடு
- செருப்பு எறி வாங்கியவனை மந்திரியாக்கிய நாடு நம்மநாடு !
இந்த அவமானங்களுக்கு இடையில்...ரெட்டி என்ன ரெட்டி மகன் என்ன.. நடத்துங்கள்..
I heared that YSR is a converted christian, is it true????
Idlyvadai while clicking the cartoons of அட்டைப்பட ஆறுமுகம் & காட்டூன் கந்தசாமி, the clarity is not good, i could not able to read the wors, so please take any necessary steps to overcome this....
Thanks In Advance!!!
அண்ணன் எப்பொழுது கிளம்புவான், திண்ணை எப்பொழுது காலியாகும் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது இந்த அவலங்களைப் பார்க்கும் போது.
Dear Goudaman,
What is there to hide ?
YSR was a CSI Christian and he was instrumental for the mass conversions in Andra.
His son in law is an Evanjalist priest.
Athiravi
கைகளை மேலே உயர்த்தி வணக்கம் தெரிவித்தது, துக்கத்திற்கு திரண்டு வந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் இருக்கலாம் இல்லையா? ஒருவேளை அப்படிதான் இருந்திருக்கும் என்றால் தந்தை இறந்த சோகத்திற்கு துக்கம் கேட்க வந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் மகனின் செயலை இவ்வாறாக விமர்சனம் செய்வது கொச்சையான மனப்பான்மை.
It is always better to have optimistic view on unconfirmed things.
Dear IV,
Why don't you write about the illegal occupation of land by veruma(thiruma)
for his party office in Ashok Nagar.This was vacated by him on High Court orders recently.Why is that no news paper has reported this.
I was a witness to the eviction of his office by cops on High Court Orders on that day while going to Guindy.The ruckus created by his partymen was unbearable for the passersby.It is high time we stop giving importance to this ......
//ஆ மு உடல் அடக்கம் செய்யப் பட்டதை தொலைக் காட்சியில் பார்த்தவர்கள் - அந்தப் பெட்டியையும், அதன் மீது காணப்பட்ட சின்னத்தையும் மறந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன். அது என்ன என்று பார்ப்பதற்குள் அதன் மீது மலர் தூவி மறைக்கப்பட்டது. அடுத்து வருபவரும், அந்த சின்னத்துடன் நெருங்கிய தொடர்பு இருப்பவராக இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம்.//
ஏன் இவ்வளவு சுற்றி வளைக்க வேண்டும்?
அது ஒரு சிலுவை சின்னம் என்று நேரடியாக சொல்லிவிட வேண்டியதுதானே?
See this video,
http://www.dinamalar.com/new/video_rajasekarareddy.asp
YSR is a converted chiristian - 100% true.
அனுபவமில்லா மகள்/மகன்/மனைவி பதவிக்கு வருவது இந்தியப் பண்பாடு! அதுவும் காங்கிரஸின் சட்டதிட்டங்களின் முக்கியமான அம்சம். இதில் செய்தி என்ன இருக்கிறது?
ரோஸைய்யா நிலைதான் பாவம். கைக்கு எட்டியது பைக்கு எட்டவில்லை...
ராஜ சேகர் நிழல் மறையும் முன் நிஜம் ஆஜர் அகி விட்டது .//சித்ரம்
//கிறித்தவ பதிரியார்கள் முன்னிலையில் YSR உடல் அடக்கம் செய்யப்பட்டது என்று செய்தியில் கேள்விப்பட்டேன், அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் அல்லவா??? யாராவது உண்மை அறிந்தவர் சொல்லுங்களேன், தயவு செய்து கற்பனை புனைவுகள் வேண்டாம்!!//
http://www.tamilhindu.com/2009/09/ysr-reddy-tribute/
இந்த இனைப்பைப் படியுங்கள் புரியும்.. புனைவின்றி, உள்ளது உள்ளபடி எழுதப்பட்ட கட்டுரை..இன்றைய தேதியில் தமிழ் இந்து தளத்தில் மட்டுமே இப்படிப்பட்ட கட்டுரைகள் கானக்கிடைக்கிறது.. மற்றவர்களெல்லாம் உண்மையைச் சொல்லாமல் போலிமதச்சார்பின்மை பேணப்போய்விட்டார்கள் என நினைக்கிறேன்....
It's indeed a great loss to Vatican.
The Vatican agent in India and the head of the Christian Congress party will get papal commands for the succession plan for their Project of xianising the whole AP in another decade or so.
http://www.tamilhindu.com/2009/09/ysr-reddy-tribute/
வெவ்வேறு வட்டாரங்கள் அவ்வாறு தான் தெரிவிக்கின்றன...
http://www.mnnonline.org/article/13192.
looks like their target is clear!!!
/***இந்த இனைப்பைப் படியுங்கள் புரியும்.. புனைவின்றி, உள்ளது உள்ளபடி எழுதப்பட்ட கட்டுரை..இன்றைய தேதியில் தமிழ் இந்து தளத்தில் மட்டுமே இப்படிப்பட்ட கட்டுரைகள் கானக்கிடைக்கிறது.. மற்றவர்களெல்லாம் உண்மையைச் சொல்லாமல் போலிமதச்சார்பின்மை பேணப்போய்விட்டார்கள் என நினைக்கிறேன்....***/
நன்றி!!!!
/***http://www.tamilhindu.com/2009/09/ysr-reddy-tribute/ ***/
பசுத்தோல் போர்த்திய புலியாக வலம் வந்திருக்கிறார் திரு YSR...
கடவுள் அவரை தண்டித்து விட்டதாகவே தோன்றுகிறது, அப்படி உண்மையில் தண்டித்து இருந்தால் நம்மூரு ஆட்களை எப்போ எப்படி தண்டிப்பார் கடவுள்?????
Post a Comment