பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 02, 2009

டாப் டென் கோப பதிவு

இது நேற்று வந்த முக்கியமான செய்தி....

"ஸ்ரேயா, மிக அருமையான நடிகை. எப்போதும் உற்சாகமாக இருப்பார். அவருக்கு கோபம் வந்தால் பாடுவார். ரொம்ப கோபம் வந்தால், சத்தமாக பாட்டு பாடுவார்" - நடிகர் விக்ரம்

இதை தொடந்து..

1. பி.ஜே.பி - கட்டுப்பாடு உள்ள மிக அருமையான கட்சி(சில வருடங்களுக்கு முன்புவரை). தேர்தல் போது உற்சாகம் இல்லாமலும், தேர்தல் முடிவு வந்த பிறகு உற்சாகமாகவும் இருப்பார்கள், முக்கியத் தலைவர்களுக்கு கோபம் வந்தால் டிவியில் பேட்டி கொடுப்பார்கள், ரொம்ப கோபம் வந்தால் ஜின்னாவை புகழ்வார்கள்.

2. அதிமுக - அருமையான கட்சி என்று சொல்லக்கூட அம்மா பர்மிஷன் வேண்டும். அம்மா உற்சாகமாக இருந்தால் பால்கனியில் வருவார்கள். கோபம் வந்தால் சட்டசபைக்கு போவார்கள், ரொம்ப கோபம் வந்தால் கொட நாட்டுக்கு போய் மாவட்ட செயலர்களை கெடா வெட்டுவார்கள்.

3. திமுக - திமுக கட்சி ஓர் அருமையான பல்கழைக்கழகம். நல்லதோர் குடும்பம் பல்கழைக்கழகம் என்று எப்போது உற்சாகமாக பாடிக்கொண்டு இருப்பார்கள். கோபம் வந்தால் "நீயும் நானும் தீக்குளிக்கலாம், வர்றியா?" என்பார்கள். ரொம்ப கோபம் வந்தால் சீசீ நான் அதை சொல்ல மாட்டேன்.

4. பா.ம.க - தேர்தல் தோல்விக்கு "ஜாதிக்காய்" நிவாரணம் பெற்று 2011ல் ஆட்சிக்கு வர முயற்சிக்கும் அருமையான கட்சி. கோபம் வந்தால் "தமிழின துரோகி" என்பார்கள். ரொம்ப கோபம் வந்தால் 'அன்பு தங்கை' என்று பாசம் பொழிவார்கள்.

5. தேமுதிக - அதிமுக ஆதரவில் இரண்டாம் இடத்துக்கு வந்த அருமையான கட்சி. கோபம் வந்தால் காசு வாங்கு என்று உற்சாகமாக தொண்டர்களுக்கு டியூஷன் எடுக்கும் தலைவர். அவருக்கு கோபம் வந்தால் கட்சி தொண்டர்களை அனுப்பி வடிவேலுவுடன் சண்டை போடுவார். ரொம்ப கோபம் வந்தால் கடவுளையும் மக்களையும் கூட்டணிக்கு அழைப்பார்.

6. மதிமுக - உற்சாகத்திற்குக் கொஞ்சமும் குறைவில்லாத அருமையான கட்சி. பாதையாத்திரை போவதால் எப்போதுமே உற்சாகமாக இருக்கும் தலைவர். பாதை மாறி மற்ற கட்சிகளுக்கு போவதால் உற்சாகமாக இருக்கும் கட்சி தலைவர்கள். கோபம் வந்தால் குலுங்கிக் குலுங்கி அழுவார். ரொம்பக் கோபம் வந்தால், ஏதாவது ஏடாகூடமா பேசிட்டு, உள்ள போயி கஞ்சி குடிச்சுண்டு ஒபாமாவுக்கு லெட்டர் எழுதுவார்.

7. ரஜினி - மிக அருமையாக ஸ்டைல் செய்யும் "மாடல்" (முன் "மாதிரி" நடிகர் என்று சொல்வார்கள்).. எப்போது உற்சாகமாக இருப்பார். அவருக்கு கோபம் வந்தால் மைக் முன் பேசுவார், ரொம்ப கோபம் வந்தால் ( நமக்கு) இட்லிவடை போல் மன்னிப்பு கேட்பார் அல்லது இமய மலைக்கு பஸ் பிடிப்பார்.

8. கமல் - பல மேக்கப் போட்டு பல தயாரிப்பாளர்களை "பேக்கப்" செய்யும் அருமையாக நடிகர். முத்தம் கொடுக்கும் போது உற்சாகமாக இருப்பார். கோபம் வந்தால் சுத்த தமிழில் ஆஸ்கர் பற்றி பேசுவார். ரொம்ப கோபம் வந்தால் நாத்திகம் பேசி தசாவதாரம் எடுப்பார்.

9. விஜயகாந்த் - பல தீவிரவாதிகளை இடது காலால் அடித்து சட்டசபை நேரத்தில் 'மரியாதையா' நடித்துக்கொண்டு இருக்கும் நடிகர். கோபம் வந்தால் குமுதத்தில் பேட்டி கொடுப்பார். ரொம்ப கோபம் வந்தால் "அவர்தான் ஊத்திக் கொடுத்தார்" என்பார்!

10. இட்லிவடை - முன்பு அருமையாக இருந்த பிளாக், அரசியல் செய்திகளால் சாக்கடை ஆனது. கேட்கக் கூடாத கேள்விகள்" கூட "காற்று வேகத்தில்" 'இன்ப'மாக எழுதியவர். தற்போது இன்பாவை நம்பி கடை நடத்துகிறார். கோபம் வந்தால் பதிவு எழுதுவார். ரொம்ப கோபம் வந்தால் ( அம்மணிகளுக்கு ) பதிவை எடுப்பார்.

மற்ற வலைப்பதிவு (புதிய, பழைய) பிரபலங்கள் பற்றி பின்னூட்டத்தில் எழுதலாம்..

18 Comments:

IdlyVadai said...

மானஸ்தன் - ரொம்ப அருமையான இட்லி ரசிகர். கோபம் வந்தால் முதல் ஆளா கமெண்ட் பண்ணுவார். ரொம்ப கோபம் வந்தால் கமெண்ட் பண்ற மத்தவங்களுக்குள்ள கொளுத்தி போடுவார்.

( முதல் பின்னூட்டம் மான்ஸ்தன் பற்றி போடுவது தான் முறை )

Rahul said...

சத்தியமா நீங்க திருந்தவே மாட்டீங்க இட்லிவடை!!!!
ரொம்ப நல்ல பிள்ளை போல போன பதிவில் காட்டிக்கொண்டீர்கள், அடுத்த பதிவிலேயே பழைய குருடி கதவை திறடி என ஆரம்பித்து விட்டீர்கள்.

யதிராஜ சம்பத் குமார் said...

தமிழகத்தில் காங்கிரஸ் என்று ஒன்று இருக்கிறது என்பதை மத்திய காங்கிரஸ்தான் மறந்துவிட்டது என்றால் இட்லிவடை கூட மறந்து விட்டார்.


காங்கிரஸ் எப்பேற்பட்ட கட்சி என்று சொல்ல முடியாத ஒரு கட்சி. இக்கட்சியினரின் ஏதாவது ஒரு கோஷ்டியினருக்கு கோபம் வந்தால் உடனே ஆட்சியில் பங்கு பற்றி பேசிவிட்டு காமராஜர் ஆட்சியே தங்களுடைய நோக்கம் என்று கூறுவர். இதை முதலில் கூறும் வாய்ப்பு போய்விட்டதே என்ற கோபத்தில் வேறு ஒரு கோஷ்டியினருக்கு முதல் கோஷ்டியுடன் பூசல் ஏற்பட்டு, மூன்றாவது கோஷ்டி ஒன்று உருவாகும்.


இதனால் மத்திய காங்கிரஸ் கோபமடைந்து, தில்லியில் வேலையற்று இருக்கும் யாராவது ஒருவரை பிரச்சனையைத் தீர்க்கும் பொருட்டு "பார்வையாளராக" அனுப்புவர். பார்வையாளர் இங்கு வந்து இவர்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்து மிகுந்த கோபமடைந்து வேறு ஒரு கோஷ்டியை உருவாக்கிவிட்டு தில்லிக்கு போய்விடுவார். அங்கு போய் எல்லாம் சுமூகமாக முடிந்தது என்று அறிக்கை தாக்கல் செய்வார்.

Rahul said...

/***யதிராஜ சம்பத் குமார் said...
தமிழகத்தில் காங்கிரஸ் என்று ஒன்று இருக்கிறது என்பதை மத்திய காங்கிரஸ்தான் மறந்துவிட்டது என்றால் இட்லிவடை கூட மறந்து விட்டார். ***/

Good Catch!!! Just now i am typing the same content, i really surprised after seeing your comment, when i refresh the page.

கௌதமன் said...

செப்டம்பர் ஐந்து ஆசிரியர் தினம் - என்னுடைய எட்டாம் வகுப்பு ஆசிரியர் - எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பார். கோபம் வந்தா "என்னடா மொ .... க ...... மூ ........ (all unparliamentary) வார்த்தைகளால் அர்ச்சிப்பார். அதிக கோபம் வந்தால் பிரம்பால் உடம்பெங்கும் சிவப்புச் சித்திரங்கள் தீட்டிவிடுவார்!

யதிராஜ சம்பத் குமார் said...

எழுத மறந்த பின்குறிப்பு::


பொதுவாக தமிழக காங்கிரஸாருக்கு அவ்வளவு சீக்கிரம் கோபம் வருவதில்லை. வந்தாலும் பேசிவிடுவதில்லை. காமராஜர் ஆட்சி பற்றி பேசினால் எங்கு வகிக்கின்ற ஒன்றிரண்டு வாரியத் தலைவர் பதவிகளும் போய்விடுமோ என்ற அச்சம் அவர்களுக்குள் நிலவுகிறது. நியாயம்தானே??

கௌதமன் said...

எனக்குத் தெரிந்த ஒரு முன்னோடி டைரக்டர் - எப்பொழுதுமே கோபமாக இருப்பார். கோபம் வந்தால் - நடிகர்களைத் திட்டுவார் & அடிப்பார் என்று கேள்வி. அதிக கோபம் வந்தால் பத்திரிகை ஆசிரியர்கள் மேல் கேஸ் போடுவார் என்று(ம்) கேள்வி.

SUBBU said...

10 :))))))))))))))

கௌதமன் said...

// தமிழகத்தில் காங்கிரஸ் என்று 'ஒன்று' இருக்கிறது ...//
ஒன்றா? எங்கியோ இடிக்குதே!

ஹரன்பிரசன்னா said...

//தேர்தல் போது உற்சாகம் இல்லாமலும், தேர்தல் முடிவு வந்த பிறகு உற்சாகமாகவும் இருப்பார்கள், //

:))))

R.Gopi said...

//IdlyVadai said...
மானஸ்தன் - ரொம்ப அருமையான இட்லி ரசிகர். கோபம் வந்தால் முதல் ஆளா கமெண்ட் பண்ணுவார். ரொம்ப கோபம் வந்தால் கமெண்ட் பண்ற மத்தவங்களுக்குள்ள கொளுத்தி போடுவார்.

( முதல் பின்னூட்டம் மான்ஸ்தன் பற்றி போடுவது தான் முறை )//

இட்லிவ‌டையின் ப‌ர‌ம‌ ர‌சிக‌ன்... நிறைய‌ பின்னூட்ட‌ம் போட்டுள்ளேன்... கோப‌ம் வந்தால், என் வ‌லையில் ப‌திவு போடுவேன்... இல்லையென்றால், அடுத்த‌வ‌ர் வ‌லையில் போய் பின்னூட்ட‌ம் போடுவேன்...

முத‌ல்முறையாக‌ இட்லிவ‌டைக்கு கோப‌ம் வந்து, ப‌த்து பேரை வ‌றுத்தெடுத்து, எங்கே "மான‌ஸ்த‌ன்" வந்து இன்னும் வ‌றுத்து எடுத்து விடுவாரோ என்று அவ‌ருக்காக‌ ஒரு பின்னூட்ட‌மும் போட்டு.... ய‌ப்பா.... இது த‌மிழ‌க‌ அர‌சிய‌லை விட‌ த‌லை சுற்றும் விஷ‌ய‌மா இருக்கே....

கிருஷ்ண மூர்த்தி S said...

ஆஹா! டாப் டென்ல தன் பேர முதல்ல போட்டுக்காம, கடைசியில போடற இவ க்கு இதுக்காகவே ஒரு தனி ஆசனம் போடலாம்னு கோபம் கோபமா வருதே!

மானஸ்தன் முந்திக்காம இருக்கணும்:-))

Unknown said...

//மானஸ்தன் - ரொம்ப அருமையான இட்லி ரசிகர். கோபம் வந்தால் முதல் ஆளா கமெண்ட் பண்ணுவார். ரொம்ப கோபம் வந்தால் கமெண்ட் பண்ற மத்தவங்களுக்குள்ள கொளுத்தி போடுவார்.
//
இட்லிவடை மானஸ்தனை சீண்டிப்பார்க்கிறது. அண்ணன் மானஸ்தன் எங்க

Mahadev said...

கோபம் வந்தால் இட்லி வடை படிப்பேன்.. ரொம்ப கோபம் வந்தால் , இட்லி வடையில் கமெண்ட் போடுவேன்

IdlyVadai said...

retired "hurt"! (304).

( மானஸ்தன் அனுப்பிய மெயில் )

IdlyVadai said...

அருமையான (டெம்பிலேட்) எழுத்தாளர். கோபம் வந்தால் கொக்கி கேள்விக்கு பதில் எழுதுவார். ரொம்ப கோபம் வந்தால் சினிமாவுக்கு வசனம் எழுதுவார்.

Vikram said...

Indian Government-
american president,secretary of state,office gummasta varaangana urchagamma irrukkum.
acts of terror nadandhuchunna kova padum.
kovam vandha warning kudukkum;romba koavam vandha ministera maathum....

Erode Nagaraj... said...

வேணாம்... எனக்கு கோவம் வந்துதுன்னா, கண்ண மூடிப்பேன்... ரொம்ப கோவம் வந்துதுன்னா, தூங்கீடுவேன்..