ஒருநாள் பாரதியின் கனவில் பராசக்தி தோன்றுகிறாள். 'என்ன வரம் வேண்டும் கேள்' என்கிறாள். கோடி,கோடியாய் செல்வங்களுக்கு பதில் அவன் கேட்டது ஒரு வாழ்க்கைமுறை. கவிதை போன்ற வாழ்வை கவிதையாய் கேட்கிறான்.
"காணி நிலம் வேண்டும் - பராசக்தி,காணி நிலம் வேண்டும் " என்றவன் கூடவே நன்மாடங்களுடன் அங்கு ஒரு மாளிகை, கேணி, பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள், நிலாவொளி,கத்துங் குயிலோசை, இளம் தென்றல் இவையெல்லாம் வரமாய் கேட்டான்.
ஒரே மாதரியான வாழ்க்கை, வாகன புகை, கட்டிடங்கள், மேலதிகாரிகளின் அதிகாரம்
எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் இன்றைக்கு வேலையில் இருப்போமா,இல்லையா என்று தெரியாமல் எப்போதும் நமக்குள் இருக்கும் பதற்றம்... இந்த சூழ்நிலையில் பாரதி கேட்ட வாழ்க்கை நம்மை போன்றவர்களுக்கு வெறும் கனவு அல்லது கவிதைதானா? அப்படி ஒரு வாழ்க்கைமுறை நமக்கு எப்போது, எப்படி கிடைக்கும்?
எந்திரமயமான வாழ்க்கை, வேலையில்லா திண்டாட்டம் - இந்த இரண்டுக்கும் ஒரே தீர்வு கிடைக்குமா? விவசாய நாடான இந்தியாவில், 'உழவுத்தொழில்' இதற்க்கு ஏன் ஒரு நல்ல, நிரந்தரதீர்வாக இருக்கமுடியாது? 'முடியும்' என்று அழுத்திசொல்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். அவர் கூறும் இயற்கை வேளாண்மை என்பது , மண்ணை நாசமாக்கும் செயற்கை உரங்கள் எதையும் பயன்படுத்தாமல் எரு, மண்புழு போன்ற இயற்கை வசதிகளை பயன்படுத்துவது ஆகும்
"பிறரிடம் வேலைக்காக கையேந்தி நிற்பவர்களாகத்தான் நம் இளைஞர்களைக் கல்வி நிறுவனங்கள் ஆக்கியுள்ளன என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்து விட்டது. எந்த ஒரு நாட்டிலும் அடிப்படைத் தொழில் உழவாகத்தான் இருக்க முடியும். அதை மறந்து உழவுத் தொழிலை, பிற தொழில்களுக்கு சேவை செய்யும் ஒன்றாக மாற்றியதற்கு நாம் கொடுத்த விலை மிக மிக அதிகம். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை ஒண்ணே முக்கால் லட்சத்தைத் தாண்டும். நமக்கு ஏற்பட்ட இழப்பு புரிகிறதா? "
"நவீன வேளாண்மையில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது என்றால், இயற்கை வேளாண்மையில் மண்ணின் நீர்ப்பிடிப்புத்தன்மை நிலைநிறுத்தப்படுகிறது. விளைநிலங்களில் பலவகை மரங்களை இணைத்தும், கால்நடைகளை வளர்த்தும் பயிர்த்தொழிலை கைக்கொள்வதுதான் இயற்கை வேளாண்மை.. இவற்றால் பூமியின் வெப்பம் தணியும். காற்றில் கரியமில வாயு குறையும். உலக வெப்ப மயமாதலுக்கு எதிரான சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் உள்ளூர் இயற்கை விவசாயியும் கை கோர்ப்பவன் ஆகிறான் " என்று கூறும் அவர் இயற்கை வேளாண்மையில் கிடைக்கும் விளைபொருட்களின் மதிப்பை உணர்ந்துதான் வெளி நாடுகள் பன்மடங்கு விலை கொடுத்து அவற்றை இறக்குமதி செய்கின்றன. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கூட உழவர் சந்தைகள் முளைக்கின்றன என்கிறார் நம்மாழ்வார். .
இதைபோலவே, விவசாயத்திற்க்கான இன்னொரு திட்டம்.... நடைமுறையில் வெற்றிகரமாக, சத்தமில்லாமல் சாதித்துகொண்டிருக்கும் ஒரு திட்டம் பற்றி பார்ப்போம்.
பசுமைபுரட்சியின் தந்தை என்று பாரதரத்னா விருது பெற்ற மறைந்த டாக்டர் c. சுப்ரமணியன் அவர்கள் " விவசாய நிலங்களுக்கு தனித்தனி குணங்கள் உண்டு. ஒட்டு மொத்தமாக ஒரே மாதிரியான விதைகளையும் உரங்களையும் நிலத்தில் பயன்படுத்தாமல் அந்தந்த நிலங்களின் தன்மைக் கேற்றவாறு பயன்படுத்த வேண்டும்..அதற்குத் தேவையான நீர்நிலை மேலாண்மையும் அறுவடைக்கு முன்னால் தேவைப் படும் தொழில் நுட்பமும் விவசாயிகளுக்கு அளிக்கப் பட வேண்டும்..வெறும் விவசாய உற்பத்தி மட்டுமல்லாமல் உணவுப் பொருளை பதப்படுத்துதல், செறிவுபடுத்துதல் உணவுப் பண்டமாக மாற்றுதல், மற்றும் மார்க்கெட்டிங் பற்றியும் விவசாயி அறிந்து கொள்ள வேண்டும்..இதையெல்லாம் விட முக்கியமான ஒன்று நவீன விவசாய டெக்னிக்குகள் சுற்றுச்சூழலை கெடுக்காமலும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காமலும் இருக்க வேண்டும்." என்று கூறி, இதற்க்கு செயல் வடிவம் தருவதற்க்காக அவர் தொடங்கிய அமைப்புதான் NAF எனப்படும் National Agro Foundation. இதை அவர் தொடங்கும்போது அவர் வயது 90.
என்ன செய்கிறார்கள் என்றால், நவின இயந்திரங்கள், புதிய பரிசோதனை முறைகள் சுருங்க சொன்னால் "ஹைடெக் விவசாயம்" அல்லது "விஞ்ஞான வேளாண்மை" எனலாம். நடைமுறையில் செலவு எப்படி என்றால், சாதரணமாக ஒரு விவசாயி மண் பரிசோதனை செய்ய ரூ. 800 ஆகிறது, ஆனால் இந்த NAF அமைப்பிடம் வெறும் ரூ.50 மட்டுமே ஆகிறது.
நதிநீர்பிரசினை, பொய்க்கும் வானம் இவற்றையெல்லாம் தாண்டி, NAF உதவியோடு சத்தம்போடாமல் சாதித்து காட்டிஇருக்கிறார்கள் நம் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள்.
இந்த மாவட்டத்தில் 40 கிராமங்களில் சுமார் 1200 ஏக்கர் விவசாய நிலங்களில் டெக்னாலஜியுடன் கூடிய பல்முக முன்னேற்றத்தைக் கொண்டு வந்து காட்டியிருக்கிறது NAF அமைப்பு. அரிசி, கரும்பு, ரோஜா, காய்கறிகள், வேர்கடலை, சோளம் போன்ற பயிர்வகை களில் 40 முதல் 150 சதவீதம் வரை லாபத்தை ஈட்டியிருக்கிறார்கள்
"விஞ்ஞான முறைகள் குறித்து, விவசாயிகளிடம் விளக்குவதுதான் ஆரம்பத்தில் சிரமம்" என்கிறார் இந்த அமைப்பை தற்போது நடத்திவரும் சி.எஸ் அவர்களின் மகன் ராஜசேகர். From Lab to Land என்பதே இவர்களது கான்செப்ட்.
காஞ்சிபுரம் மாவட்ட மாற்றங்களை நேரடியாகபோய் பார்த்துவிட்டு, "இளைஞர்களே வாருங்கள் விவசாயத்திற்கு" என்று அழைப்பு விடுத்திருக்கிறார் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள்."காஞ்சிபுரம் மாவட்ட விவசாய நிலங்களில் நான் கண்ட காட்சிகள் மிகவும் அற்புதமானவை. நவீன இயந்திரங்கள் வயல்வெளிகளில் இயங்கிக் கொண்டிருந்தன. விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண்ணை ஆராய்ச்சிக் கூடங்களில் கொடுத்து அதன் தன்மையைக் கேட்டறிந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் நிலத்தின் தன்மைக் கேற்றவாறு எத்தகைய உரங்களை, உழும் முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆராய்ச்சிக் கூடத்தில் அதுவரை சுமார் 7000 மண்வகைகளை டெஸ்ட் செய்திருப்பதாகச் சொன்னார் ஒரு நிபுணர். "முன்பைவிட இப்போது நான் மும்மடங்கு அதிகம் சம்பாதிக்கிறேன்'' என்று ஒரு விவசாயி மகிழ்ச்சியுடன் சொன்னாரே, அதன் ரகசியங்கள் இவைதான். 'நிலமென்னும் நல்லாள் அங்கே பரிபூரண திருப்தியுடன் சிரித்துக் கொண்டிருக்கிறாள' " என்று எழுதுகிறார் கலாம் அவர்கள்.
"காஞ்சிபுரம் மாவட்டத்தில் கண்டது போல் செல்வம் தரும் தொழி லாக விவசாயம் மாறி விட்டால் இளைஞர்கள் ஆர்வமாக அதில் ஈடுபட நிச்சயம் வருவார்கள்" என்று உறுதியோடு, அவருக்கே உரிய நம்பிக்கை கனவோடு கூறுகிறார் டாக்டர் கலாம் அவர்கள்.
படிப்படியாக இந்த திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்த இருக்கிறார்கள் NAF அமைப்பினர். அப்படி செய்யும் பட்சத்தில் இந்தியாவில் இன்னொரு பசுமை புரட்சி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தோன்றுகிறது. இனி, நம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சாய்ஸ் 'விவசாயம்' ஆகும் என நம்பிக்கையோடு நாம் காத்திருப்போம்.
இன்று பராசக்தியிடம் நாம் வேண்டும் வரம், நமது கூட்டுபிராத்தனைக்கான வேண்டுகோள் இப்படி இருக்கட்டும். .
"பசுமை புரட்சி வேண்டும், பராசக்தி,பசுமை புரட்சி வேண்டும்"
(நன்றி : நக்கிரன், nationalagro.org மற்றும் ஆலோசனை தந்த என் நண்பன் ஸ்ரீனிவாசன்)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, September 01, 2009
பசுமை புரட்சி வேண்டும், பராசக்தி - இன்பா
Posted by IdlyVadai at 9/01/2009 01:10:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
23 Comments:
எழுதறத்துக்கு மேட்டர் இல்லாததுனால இட்லிவடை இன்பாவை காசு குடுத்து வேலைக்கு வெச்சிருக்கு...சரக்கு தீர்ந்துடுத்தா ஒய்?
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வாழ்க வளமுடன்
//எந்த ஒரு நாட்டிலும் அடிப்படைத் தொழில் உழவாகத்தான் இருக்க முடியும்//
நிச்சயமாக :((((((((((
(நாந்தான் chating-ல் வந்தது)
excellent post and highly valuable article
excellent post and highly valuable article
"பசுமை புரட்சி வேண்டும், பராசக்தி,பசுமை புரட்சி வேண்டும்" :))))))))))))
//எழுதறத்துக்கு மேட்டர் இல்லாததுனால ....
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
உழவரின் மகன் என்றும்,
உழவர் பரம்பரையில் வந்தவன் என்றும் கூறிக்கொள்ள பெருமைப்படும், தகவல் தொழில் நுட்பத்துறையில் உள்ளவனின் தவகல்.
உணவே மருந்து என்பது பழமொழி.
இப்போது மருந்தே(pesticides and fertilizers) உணவாக மாறி, நீங்கள் உண்ணும் உணவு எவ்வளவு நச்சுத்தன்மை உள்ளது என்று உங்களக்கு தெரியுமா ?
@@@@@@@@
இப்போது உள்ள மண்ணில் உரமின்றி எதுவும் பயிரிட முடியாத நிலை.
பூச்சிக் கொல்லி பயன்படுத்தாமல் பயிர்களை வளர்க்க முடியாத நிலை.
@@@@@@@@
பூச்சிக் கொல்லியும் உரமும் நாம் உண்ணும் உணவில் எவ்வளவு கலந்துள்ளது தெரியுமா ?
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் தொண்ணூறு சதவிதத்திற்கும் மேலே, பூச்சிக் கொல்லியும் உரமும் பயன்படுத்தி விளைவித்த உணவே !!!
இப்படிப்பட்ட சுழ்நிலையில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறும் இயற்கை வேளாண்மையில் (உரங்கள் எதையும் பயன்படுத்தாமல்) விளைவித்த உணவை உண்ண
....
நீங்களும்
நானும்
வருங்கால சந்ததியும்
நம்மாழ்வார் அவர்களுக்கு கடமை பட்டுள்ளது.
ஏன் பல நோய்கள் வருகின்றது தெரியுமா ?
The food which is grown with the help of pesticides and fertilizers is more dangerous for health.
Already we have polluted AIR, WATER and FOOD.
There are few people like Nammalvar who dedicated their life for saving US(HUMAN).
http://www.thehindu.com/seta/2008/04/24/stories/2008042450131600.htm
http://www.ashanet.org/projects/project-view.php?p=957
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களும் அவர்களது அன்பு குடும்பமும் வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி, வெற்றி பெற்று மேன்மேலும் சிறப்பாய் வாழ என் மனமுவர்ந்த வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
இன்பாவும் இட்லி வடையும் வேறு வேறு ஆட்கள் என்று எப்படித் தெரிந்துகொண்டீர்கள் ஐயா?
விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்த இட்லி வடையே முதலில் lable-ல் உள்ள spelling mistake-ஐ(விவசயம்) மாற்றுங்கள்.
நல்ல போஸ்ட் இன்பா/இட்லி!!! பாராட்டுகள். :-)
////ஐஸ் புரூட் அய்யர் said...
எழுதறத்துக்கு மேட்டர் இல்லாததுனால இட்லிவடை இன்பாவை காசு குடுத்து வேலைக்கு வெச்சிருக்கு...சரக்கு தீர்ந்துடுத்தா ஒய்?////
என்னங்காணும், மஞ்ச ஜட்டி!!! ஈரோடு நாகராஜ் கேட்ட கேள்விக்கு பதில் தெரியுமா?
யார் எழுதினா என்ன ஓய்? நல்ல விஷயம் "அரசியல்" இல்லாம யாரவது சொன்ன அத வரவேற்கணும். ஆராயப் புடாது. புரிஞ்சுதா?
இருந்தாலும் நீர் கேட்டதுல அர்த்தம் இருக்கு ஓய்! இந்த மாதிரி பசுமைப் புரட்சி போஸ்ட் போட்டு, அரிசி உளுந்து எல்லாம் நல்ல விளைந்தாத்தான் "இட்லிவடை" கடைல வியாபாரம் பண்ண முடியும்.
//இன்பாவும் இட்லி வடையும் வேறு வேறு ஆட்கள் என்று எப்படித் தெரிந்துகொண்டீர்கள் ஐயா?
//
இட்லிவடை தட்டுல இருக்கும். இன்பா அத சாப்புடுவாங்க
//நக்கீரன் :-) said...
விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்த இட்லி வடையே முதலில் lable-ல் உள்ள spelling mistake-ஐ(விவசயம்) மாற்றுங்கள்//
உம்மா பேரு சரியாத்தான்யா இருக்கு!!! :-D
**** jaisankar jaganathan said...
//இன்பாவும் இட்லி வடையும் வேறு வேறு ஆட்கள் என்று எப்படித் தெரிந்துகொண்டீர்கள் ஐயா?
//
இட்லிவடை தட்டுல இருக்கும். இன்பா அத சாப்புடுவாங்க****
"இட்லிவடை" தட்டுல இருந்தா? இல்லை "இட்லி வடைய" தட்டுல இருந்தா?
Manasthan: //"இட்லிவடை" தட்டுல இருந்தா? இல்லை "இட்லி வடைய" தட்டுல இருந்தா?//
டியர் மானஸ்,
இட்லி-வடை ரெண்டுக்குமே தட்டு கிடையாது. Avail-able in plenty. :)
நல்ல பதிவு..வேளாண்மை செய்யும் விவசாயிகளை கைவிட்ட பாவத்தை நமது நாடு அனுபவிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
அப்போது நிலமிருக்கும், விவசாயி விவசாயம் செய்யமாட்டான். வெளிநாட்டுக்காரன் விற்கப்போகும் பாக்கெட் உணவுகளை வாங்கி உண்னும் கீழ் நிலைக்கு வரப்போகிறோம். மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வளம் இருந்ததோ, பிழைத்தார்களோ.. அதோடு மக்கள் தொகையும் விரல்விட்டு என்னக்கூடிய அளவில் இருந்ததால் சமாளித்தார்கள். இந்தியாவில் உணவு இல்லாத ஒரு நாளை நினைத்துப்பார்க்க முடியுமா?? எல்லா உணவுப்பண்டங்களும் இறக்குமதி செய்தால்தான் கிடைக்கும் என்ற நிலைவந்தால் இந்தியாவின் நிலை என்ன??
இதையெல்லாம் கணக்கில்கொண்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் திட்டங்கள் தீட்டாமலும் உரத்திலும், மருந்துகளிலும் கலப்படம் செய்பவனை கண்டுகொள்லாமலும் இருக்கும் அரசு நமக்கு சவக்குழி வெட்டுகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இப்போதே அன்னை சோனியாவை திருப்தி செய்ய ஜார்கண்டில் கிறிஸ்தவ மிஷநரிகள் கையில் பொதுவிநியோக முறையை ஒப்படைத்திருக்கிறான் ஒரு அயோக்கியன்.. (TP Sinha )முழு செய்தியும் இங்கே கிடைக்கும். http://www.dailypioneer.com/199556/RSS-BJP-gravel-over-Church's-role-in-distribution-of-PDS-foodgrains.html
உணவைப் பெறவேண்டியவர்களை மிரட்டி மதமாற்றம் செய்துகொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. இனி முழு உணவும் கிறிஸ்தவ நாடுகளில் இருந்து மட்டுமே கிடைக்கும் நிலைவரும்போது என்ன நடக்கும் என்பதை நினைத்துப்பார்க்கக் கூட முடியவில்லை.
///Manasthan: //"இட்லிவடை" தட்டுல இருந்தா? இல்லை "இட்லி வடைய" தட்டுல இருந்தா?//
டியர் மானஸ்,
இட்லி-வடை ரெண்டுக்குமே தட்டு கிடையாது. Avail-able in plenty. :)///
என்னண்ணா சொல்றீங்க!??
இட்லி-"தட்டுலதான்" பண்ணனும்.
வடையயும் "தட்டணும்"
"தட்டு" இல்லை என்றால் எப்படி நம்புவது?
அப்டியே நீங்க சொல்றது மாதிரி "தட்டு" கிடையாது, என்றாலும், Avail-able in "plenty" என்பது தவறு.
NOT-available "இங்கே".
நல்ல பதிவு. இதை, இந்த வலையில் வந்து படித்துப் பயன் பெறுவோர் இருப்பார்களா - என்ற சந்தேகமும் உடன் எழுகிறது. இருப்பினும் - ருசிகர்கள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதுதான்.
Nammalavar is for organic farming and is against chemicals, fertilizers and pesticides.
NAF is promoting them in a different way. So both are not
compatible with each other.
Dear Manas,
ஒருத்தர் எழுதினா OK... இட்லி வடை, இன்பா, நீர், நான் இன்னும் பலரும் எழுதுவதால் plenty தான்.
நாட்டை பாடினாலும் நாட்டைப் போட்டாலும் அவிழ்ப்பது என் கடன், இருப்பினும் நாட்டைக் காட்டிக் கொடுக்கமாட்டேன், நன்றாகத்தெரிந்தாலும்.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
-மகாகவி பாரதியார்
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
-திருவள்ளுவர்
Inba / Idlyvadai - appreciate you in posting this article. Whether these articles are going to make any difference or not..? its definitely better than spreading the negativity related with politics.. ( Evlo naal than Naka Mukave thitrathu - Bore adikatha :) )
Same kind of post in today Dinamalar.
So Inba is working Dinamalar also ??
http://www.dinamalar.com/new/fpnnewsdetail.asp?News_id=4819
//உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வாழ்க வளமுடன்//
வாழ்க வளமுடன்
Post a Comment