இன்று காலை ஜெயா செய்திகளில் ஒரு நெகிழ்ச்சியுற வைத்த செய்தித் தொகுப்பு.
சேலத்தில் ஐயனார் என்ற ஒரு முதிய முடிதிருத்தும் தொழிலாளி. இவர் மாதம் ஒருமுறை சேலத்திலுள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்கிருப்பவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தும் மற்றும் ஷவரம் செய்யும் சேவையை செய்து வருகிறார். மேலும் அவரிடம் முடிதிருத்த வரும் ஏழை மக்களிடமும் பணம் வாங்குவதில்லையாம். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது., "எனக்கு பார்வை நல்லா தெரியற வரைக்கும் இதை தொடர்ந்து செஞ்சுகிட்டு வருவேன் சார். எனக்கு ஏழைகளுக்கு உதவணுங்கற எண்ணம் உண்டு ஆனா எனக்கு வசதி இல்ல அதனால என் தொழில் மூலமா மாசம் ஒரு முறை இத பண்ணிகிட்டு வரேன். எனக்கு கண்பார்வை நல்லா இருக்கற வரை இத செய்வேன்" என்று மிகவும் அடக்கமாகக் கூறினார்.
கொடைப்பணக்காரர்கள் அடுத்தவர்களுக்கு ஐந்து பைசா ஈவதற்கு மனமில்லாமல் இருக்கையில், இவர் மனதளவில் அனைவரையும் விட பணக்காரராக இருக்கிறார். இறைவன் இவருக்கு மேலும் பல்லாண்டு காலம் மங்காத பார்வையை அளித்து இவரது சேவையைத் தொடரச் செய்வாராக!!
- எதிராஜன்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, September 01, 2009
சேலத்தில் இப்படி ஒர் ஐயனார்
Posted by IdlyVadai at 9/01/2009 08:40:00 AM
Labels: சமுதாயம், விருந்தினர்
Subscribe to:
Post Comments (Atom)
16 Comments:
vilvarani said....
Nanum ethupol ennal mudinthathai muthiyavarku cheiyya vendum endru nenaikiran. Anntha Iyanarukku ennudaiya Nandri. Enakkum Asiramam enguerukkirathu endu tharinthal nanum ennudaiya sevaiyai thodaralam enru nenaikiran.
இட்லிவடை இன்பா. நீங்க ஏதாவது பண்ணீயிருக்கீங்களா இது மாதிரி
Solla vaarthaigal illai, vanagukiren.
பணம் இருப்பவரிடத்தில் மனம் இல்லை, மனம் இருப்பவரிடத்தில் பணம் இல்லை
என்ற பழமொழி நூற்றுக்கு நூறு உண்மை.
எங்க ஊரு அரசியல்வாதி ஒருத்தரு சொல்றாரு ..."ஹூம் - நானுந்தான் எல்லாரையும் மொட்டை அடிக்கிறேன் - ஒரு பயலாவது என்னைப் பத்தி எழுதறானா?"
// kggouthaman said...
எங்க ஊரு அரசியல்வாதி ஒருத்தரு சொல்றாரு ..."ஹூம் - நானுந்தான் எல்லாரையும் மொட்டை அடிக்கிறேன் - ஒரு பயலாவது என்னைப் பத்தி எழுதறானா?"//
சரியான டைமிங்!
Who said money alone is important in life and who said people who dont have money is not rich ??? This old man is rich by his attitude and good deeds...
Whatever rains we are getting these days are all due to such noble souls like Mr. Iyanaar only. May their tribe increase. May god give him peace of mind and good health.
I feel, if we want to thank him, the best way is to practice such noble acts in our own small way.
பதிவுக்கு நன்றி.
திரு ஐயனாரைப் பற்றி சொல்லிய ஜெயா தொலைக் காட்சிக்கும் நன்றி.
உங்கள் பதிவு கண்ட நபர்களில் பத்தில் ஒருவரும், தொலைக் காட்சி கண்ட ஆயிரம் பேரில் ஒருவரும் தானும் இது போல் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து பணி ஆற்றினால் போதும். நாடு முன்னேறும். நம் வாழ் நாளிலேயே மாற்றங்கள் வரும்
ஐயனாரும் அவர்களது அன்பு குடும்பமும் வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி, வெற்றி பெற்று மேன்மேலும்
சிறப்பாய் வாழ என் மனமுவர்ந்த வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
1.There are two ways of being Rich.
One is to have all you want...
The other one is to be satisfied with what you have..!
2.Your respect is not in words spoken to you in your presence...
But words spoken for you in your absence.
3.A clay pot having milk is ranked higher than a Golden pot having poison...
Not our outer glamor, but our inner virtues make us valuable.
4.The real measure of your wealth is how much you would be worth if you lost all the money..!
ஐயனார் suits for the above 4.
நன்று.
Thank you for the Good Post.World is belongs to good people like salem Iyyanar.Long live Iyyanar.
//
nerkuppai thumbi said...
உங்கள் பதிவு கண்ட நபர்களில் பத்தில் ஒருவரும், தொலைக் காட்சி கண்ட ஆயிரம் பேரில் ஒருவரும் தானும் இது போல் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து பணி ஆற்றினால் போதும். //
இதில் நீங்களும் ஒருவராக ஏன் ஆககூடாது ??????
அய்யனார் சிறப்பாய் வாழ என் மனமுவர்ந்த வாழ்த்துக்கள் !!
உதவ பணம் தேவை இல்லை. மனம் தான் முக்கியம்.
இதை அருமையாக தனது வாழ்வில் செய்து காட்டிய திரு. அய்யனார் ஒரு அருமையான முன்மாதிரி.
// இதில் நீங்களும் ஒருவராக ஏன் ஆககூடாது ??????//
ஒய்வு பெற இரண்டு ஆண்டுகளே உள்ளன; அதற்குப் பின் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன். ஆகவே ஒரு வழியிலே அய்யனார் என் வழிகாட்டி. . மடிப்பாக்கத்தில் ஏழை மாணவர்களுக்கு இலவச டியூஷன் தவிர வேறு என்ன செய்யலாம் என ஆலோசனை. ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன
Post a Comment