பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 28, 2009

இட்லிவடை பதில்கள் - 28-09-09

விடுமுறை தினத்தை முன்னிட்டு சில கேள்விகளுக்கு பதில்கள்....

01)வெளிநாட்டுக்குப் போய் வேலை செய்வதில் முன்னனியில் இருப்பது யார்??
முன்னனியில் இருப்பவர்கள் தான் வெளிநாட்டுக்கு போகிறார்கள். மானஸ்தனாக இருப்பவர்கள் இந்தியாவில் குப்பை கொட்டுகிறார்கள்.

02) இந்தியாவின் இன்றையதேதியில் கடன் தொகை எவ்வளவு??
The Little Book On External Debt என்ற புத்தகத்தில் இருக்கிறது இதற்கான தகவல். எனக்கு 762 ரூபாய் கடன் கொடுத்தால் அந்த புத்தகம் வாங்கி படித்துவிட்டு உங்களுக்கு சொல்றேன்.

03) மாநிலங்கள் உலக வங்கியிடமோ அல்லது வேறு எந்த நாட்டிடமோ கடன் வாங்கி கட்ட முடியாமல் போனால் என்ன நடக்கும்??
ரொம்ப சிம்பிள். மேலும் கடன் கொடுத்து அந்த கடனை அடைக்க செய்வார்கள். அமெரிக்கா தன் கடனை அடைக்க முடியும் என்று நினைக்கிறீர்களா ? முடியாது.

04) ஃபிக்சட் டெபாசிட்டுக்கு அதிகபட்ச வட்டி வழங்கும் வங்கி எது? எவ்வளவு??
போன் வருஷம் இதே நேரம் கரூர் வைசியா வங்கி 9.50% கொடுத்தர்கள். சீனியர் பார்ட்டிகளுக்கு 10.5%. கிறுஸ்துமஸ்துக்கு பிறகு குறைத்துவிட்டார்கள். இன்னும் சில மாதங்களில் திரும்பவும் வட்டியை ஏற்றுவார்கள் என்று சொல்லுகிறார்கள். பார்க்கலாம்.

05) வீடுகட்ட லோன் வாங்குவதில் கழுத்தில் துண்டு போஒட்டு வசூலிக்காத வங்கிகள் எவை?? குறைந்த வட்டிக்கு கடன் தருபவை எந்தெந்த வங்கிகள்??

தற்போது SBI தான் நல்ல சாய்ஸ்.

06) அழகிரி அமைச்சர் போஸ்ட்டில் என்ன செய்திருக்கிறார் இதுவரை??
அழகிரி என்ன செய்கிறார் என்று எல்ல்லோருக்கும் இப்ப தெரிந்துவிட்டது. கலைஞர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டதில் 'ஹிந்தி ஒழிக' என்று சொல்லவில்லை, 'கட்டாய ஹிந்தி ஒழிக' என்று தான் சொன்னேன் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். அழகிரியினால் ஆங்கிலம், ஹிந்தி தேவை என்று நாட்டு மக்களுக்கு தெரிந்திருக்கிறது. அமைச்சர் பதவியில் அழகிரி செய்த சாதனை இது என்பேன்.

07) மதுரையில் சைக்கிளோ அல்லது ஸ்கூட்டரோ பஞ்சர் ஒட்டியிருக்கிறீர்களா??
அஞ்சா நெஞ்சனை எதிர்த்தவர்களை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி.

08) தமிழ்ஹிந்து வலைத்தளம் கலக்குகிறதே எப்படி???
இந்த மாதிரி கேள்விகளால்

09) விஜயகாந்த் காங்கிரசுடன் கூட்டணி வைப்பாரா மாட்டாரா?
மக்களுடன் கூட்டணி வியாபாரத்தை பொறுத்தது அது முடிவு செய்யப்படும்.

10) உண்மையில் போக்ரான் அணு குண்டு சோதனை வெற்றியா இல்லை தோல்வியா?
ஏற்கனவே சந்திராயனை பற்றி கேள்வி கேட்டு அதற்கு நீங்க காட்டிய தண்ணி போறாதா ? இப்ப இந்த கேள்வி வேற ஆளைவிடுங்க பாஸ்!

27 Comments:

மானஸ்தன் said...

01)வெளிநாட்டுக்குப் போய் வேலை செய்வதில் முன்னனியில் இருப்பது யார்??
முன்னனியில் இருப்பவர்கள் தான் வெளிநாட்டுக்கு போகிறார்கள். மானஸ்தனாக இருப்பவர்கள் இந்தியாவில் குப்பை கொட்டுகிறார்கள்.


வெளிநாடு போறவன் எல்லாம் மானஸ்தன் இல்லை என்று சொல்கிறீரா திரு இட்லி?

(-!-) said...
This comment has been removed by the author.
மானஸ்தன் said...

பல தனியார் நிதி நிறுவனங்கள் வரிசையாக மக்களின் தலையில் துண்டு போடும் நேரத்தில், வங்கிகளுக்காக பிரச்சாரம் பண்ணும் இட்லிவடைக்கு எவ்வளவு கமிஷன்?

மானஸ்தன் said...

10) உண்மையில் போக்ரான் அணு குண்டு சோதனை வெற்றியா இல்லை தோல்வியா?
ஏற்கனவே சந்திராயனை பற்றி கேள்வி கேட்டு அதற்கு நீங்க காட்டிய தண்ணி போறாதா ? இப்ப இந்த கேள்வி வேற ஆளைவிடுங்க பாஸ்!

யாருங்க காட்டினது? அதுவும் சந்திராயன் பார்ட் தான்!

Anonymous said...

Manasthan post um pottu ...comment um pottutu irukkar...please vera yaaravathu vanthu comments podunga..

Unknown said...

மான்ஸ்தன் கேட்ட கேள்விகளூக்கு பதில் என்னா தல

Anonymous said...

////முன்னனியில் இருப்பவர்கள் தான் வெளிநாட்டுக்கு போகிறார்கள். மானஸ்தனாக இருப்பவர்கள் இந்தியாவில் குப்பை கொட்டுகிறார்கள்.///

ஏனையா உங்களுக்கு இந்த பொறாமை? வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் மானஸ்தர்கள் இல்லையா?

கௌதமன் said...

// முன்னனியில் இருப்பவர்கள் தான் வெளிநாட்டுக்கு போகிறார்கள். மானஸ்தனாக இருப்பவர்கள் இந்தியாவில் குப்பை கொட்டுகிறார்கள்.
//
எது, எதுவாக இருக்கிறதோ - அது, அதுவாக காட்டிக் கொள்வதில்லை - ஆனால் - அது, அதனுடைய தவறு இல்லை!

கௌதமன் said...

// இந்தியாவின் இன்றையதேதியில் கடன் தொகை எவ்வளவு?//
சுவிஸ் வங்கி இருப்பை விட குறைவாகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்!

கௌதமன் said...

// கடன் வாங்கி கட்ட முடியாமல் போனால் என்ன நடக்கும்?//
கடன் கொடுத்தவர்களிடம் 'வாங்கிக் கட்டி'க்க வேண்டியதுதான்!

கௌதமன் said...

வங்கிகளை நீக்கி விட்டுப் பார்த்தால் - டாடா போன்ற நம்பகமான கம்பெனி டிபாசிட் - வட்டி விகிதங்கள் சிறப்பாக உள்ளன. ஆனால் என்ன - பதினொன்றரை சதவிகிதம் என்றெல்லாம் விளம்பரப்படுத்திவிட்டு - வரி, வட்டி, கிஸ்தி - என்று கழித்தல் கணக்குகளுக்குப் பிறகு - ஒவ்வொரு மாதமும் அவர்கள் கொடுக்கும் தொகை பத்து புள்ளி மூன்று சதவிகிதம் என்று வருகிறது. வங்கிகளை விட இது அதிகம்தானே!

R.Gopi said...

"மானஸ்தர்" இப்போ அங்க இல்லியா???

ஆஹா...வட போச்சே...

Anonymous said...

ஞாயிறன்று இரவு கலைஞர் டிவியில் கமலின் கலையுலகம் என ஒரு நிகழ்ச்சி. உன்னைப் போல் ஒருவன் பின்னணியில் படமாக, ப்ரியதர்ஷினி கலந்துரையாடல் - கமல், மிஷ்கின், சேரன், அமீர் என.

இந்த கலந்துரையாடலிலும் கமல் தன்னையே பெரிதும் முன்னிறுத்திக் கொண்டார். வசனத்திற்கான பாராட்டுக்கள் பற்றிய பேச்சை ப்ரியதர்ஷினி எடுத்தபோது இரா.முருகன் பெயரைக் கூட கமல் சொல்லவில்லை. ஒரு சின்ன பிரேக்குக்குப் பிறகு வேறு ஒரு கட்டத்தில் இரா.முருகனை மிகவும் அடிமை போல பேசினார். கிண்டலான தொனியும் இருந்தது. என்னமோ இவர் முருகனின் பல வசனங்களை கட் செய்ததைப் பார்த்து முருகன் அழுதுவிடுவார் போல இருந்தது எனவும் - கமல் முருகனைப் பார்த்து முறைத்தாராம். ஒரே தற்பெருமை. இவரிடம் போய் முருகன் சேர்ந்தது முருகனின் எழுத்துகளுக்கு கிடைத்த நட்டம். இந்தக் கலந்துரையாடலை முருகன் பார்த்திருந்தால் பாவம் முருகன் அழுதிருப்பார்.

யு டியூப் விடியோ கிடைத்தால் போடவும்.

Anonymous said...

கமல் ரஜினி இருவருக்கும் சிறந்த நடிப்புக்கான விருதாமே ? கலைஞருக்கு சிறந்த வசனகர்த்தா விருதாமே ? (உளியின் ஓசை)

http://thatstamil.oneindia.in/movies/awards/2009/09/29-tn-govts-film-awards-to-karunanidhi-rajini.html

Anonymous said...

உண்மைத் தமிழன் பத்திரிக்கைகளில் உன்னைப்போல் ஒருவன் விமர்சனங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். எல்லோரும் கமலைப் போலவே (மிகவும் வரவேற்பு பெற்றுள்ள) வசனத்தை எழுதிய இரா.முருகனை இருட்டடிப்பு செய்துள்ளனரே ? முருகன் சொன்னது போல் இது ஜெலூசில் பிரச்னையா ? இல்லை அதையும் தாண்டி வரவேற்பு பெறும் ஒரு எழுத்தாளரைப் பாராட்டக்கூடாது என்னும் தமிழனின் நண்டு பிரச்னையா ?

இன்னமும் முருகன் ஏன் கமலுக்கு ஜால்ரா தட்டிக்கொண்டிருக்கிறார் ? கமலே இப்படியென்றால், மற்ற இயக்குனர்களிடம் முருகன் பணியாற்ற நேர்ந்தால் - சுத்தமாக அவரது எழுத்தை உருக்குலைத்துவிடுவார்களே ? என்ன செய்யப் போகிறார் இரா.மு ?

Rahul said...

இந்தியாவிலேயே இருந்து கொண்டு பண்ணாட்டு கம்பெனிகள் போடும் எழும்புத் துண்டை பொருக்குக்கிறவர்கள் எல்லாம் மானஸ்தன் என்று சொல்கிறீர்களா??? அதெல்லாம் சரி, where are you now IV??

Venkatramanan said...

//05) வீடுகட்ட லோன் வாங்குவதில் கழுத்தில் துண்டு போஒட்டு வசூலிக்காத வங்கிகள் எவை?? குறைந்த வட்டிக்கு கடன் தருபவை எந்தெந்த வங்கிகள்??
தற்போது SBI தான் நல்ல சாய்ஸ்.//

தற்போது கனரா வங்கி - முதல் வருடம் - 8%, அடுத்த நான்கு வருடங்கள் - 9%

அன்புடன்
வெங்கட்ரமணன்

மானஸ்தன் said...

Rahul said...
//அதெல்லாம் சரி, where are you "now" IV??//


நீங்க கேட்டதெல்லாம் சரி. Do you know where Mr. IV was "before"???

I don't know whether you know or not, but I know "now" where Mr.IV was "before" and also "now", you know!!!!

Rahul said...

/***மானஸ்தன் said...
Rahul said...
//அதெல்லாம் சரி, where are you "now" IV??//


நீங்க கேட்டதெல்லாம் சரி. Do you know where Mr. IV was "before"???

I don't know whether you know or not, but I know "now" where Mr.IV was "before" and also "now", you know!!!!****/

Hello Manasthan,
If you visit to நொந்தசாமி வெண்பாம், and you can see the below lines "மேற்கொண்ட விமர்சனம் எழுதியவர் சமீபத்தில் என்னை சந்தித்த பினாத்தல் சுரேஷ் !."

Go to the comments of that post, there you can see the suresh's comment as "நீங்கதான் என்னை சந்திச்சீங்க.. நான் எங்கே உங்களை சந்திச்சேன்?"

Then go to பினாத்தல் சுரேஷ்'s blog and look at his profile,
you can see this "
About Me
கனரக இயந்திரங்களின் தொழில்நுட்பம் விளக்கும் ஆசிரியன், பகுதிநேரப் பினாத்தலார்..ஷார்ஜாவில் வசிக்கிறேன்"

So IV is in the middle east. I hope my guess is correct.
"

மானஸ்தன் said...

@rahul
திரு இட்லி வடையும், திரு பினாத்தலாரும் விழுந்து விழுந்து சிரிப்பது என் காதில் விழுகிறது, கண்ணில் தெரிகிறது.

நான் வேற என்னத்த சொல்ல!

Rahul said...

/****மானஸ்தன் said...
@rahul
திரு இட்லி வடையும், திரு பினாத்தலாரும் விழுந்து விழுந்து சிரிப்பது என் காதில் விழுகிறது, கண்ணில் தெரிகிறது.

நான் வேற என்னத்த சொல்ல!***/


சரி விடுங்க Maanas, இன்னொருமுறை இது மாதிரி இவ ஏதாவது சொல்லலாமலா இருப்பார்?? அப்ப ஒரே அமுக்கு அமுக்கி விடலாம்!!!

யோசிப்பவர் said...

ராகுல்,
உங்க லாஜிக்கெல்லாம் சரிதான். ஆனால் அந்த கமெண்ட் விழுந்தது பொழுது பெனாத்தலார் இந்தியா வந்திருந்தார். அப்பொழுது பெனாத்தலார், இவவையோ / இவ பெனாத்தலாரையோ / Multiple Personality Disorderல் ஒரு பெர்ஸனாலிடி இன்னொன்றையோ சந்தித்திருக்கிறார்கள்!

இதுக்கென்ன சொல்றீங்க?!

Anonymous said...

கமல்ஹாசன் பேசுகையில்,


எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நாத்திகன் என்று கூறுகிறார்கள். அந்த வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை. பகுத்தறிவாளன் என்று கூற வேண்டும். என் மகள் எனக்காக தினமும் கடவுளிடம் வேண்டுகிறார். ஆனால் அவரின் அன்பை நேசிக்கிறேன் என்றார்.


Vijay tv vizha

www.thatstamil.com

seethag said...

இட்லிவடை, உங்கள் முந்தய
'உன்னை போல்........"பட விமர்சனத்தில், உண்மைதமிழன் பற்றிய லின்க் இருந்தது. இப்போ இல்லை.அவருடய பதிவிலும் போலீஸ் பற்றி அவர் எழுதியது காணவில்லை.ஆட்டோ எதாவது வந்ததா?

Erode Nagaraj... said...

kamal will be happy if you call him naughty-gun...

IdlyVadai said...

//இட்லிவடை, உங்கள் முந்தய
'உன்னை போல்........"பட விமர்சனத்தில், உண்மைதமிழன் பற்றிய லின்க் இருந்தது. இப்போ இல்லை.அவருடய பதிவிலும் போலீஸ் பற்றி அவர் எழுதியது காணவில்லை.ஆட்டோ எதாவது வந்ததா?//

இன்னும் எனக்கு வரலை, உண்மை தமிழன் பற்றி தெரியாது. நீங்க சொன்ன மேட்டர் இதுவா னு பாருங்க - http://idlyvadai.blogspot.com/2009/09/21-09-2009.html

Rahul said...

/***யோசிப்பவர் said...
ராகுல்,
உங்க லாஜிக்கெல்லாம் சரிதான். ஆனால் அந்த கமெண்ட் விழுந்தது பொழுது பெனாத்தலார் இந்தியா வந்திருந்தார். அப்பொழுது பெனாத்தலார், இவவையோ / இவ பெனாத்தலாரையோ / Multiple Personality Disorderல் ஒரு பெர்ஸனாலிடி இன்னொன்றையோ சந்தித்திருக்கிறார்கள்!

இதுக்கென்ன சொல்றீங்க?!***/உங்க லாஜிக்கும் சரிதான்!!!அப்படினா கூடவே மானஸ்தனையும் சந்தித்து இருக்கலாம்.


ஆனால் நீங்கள் இதை கவனித்தீர்களா என்று எனக்கு தெரியாது, இட்லி பல பதிவுகளை காலை 4 அல்லது 5 மணி (I assume time zone he uses is GMT +5:30) அளவில் post செய்கிறார் example (சண்டேனா இரண்டு (20-09-09) செய்திவிமர்சனம், இன்பா). அப்படினா அந்த அளவுக்கு இட்லி கடைமையில் கண்ணாக இருக்கிறாரா அல்லது விருப்ப ஓய்வில் வீட்டில் இருக்கிறாரா??? எனக்கென்னவோ இரண்டு கேள்விக்கும் இல்லை என்ற பதில் தான் தோன்றுகிறது. அதனால் தான் சொல்கிறேன் அவர் இங்கு இல்லை என்று.