பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, September 27, 2009

சண்டேனா இரண்டு (27-09-09) செய்திவிமர்சனம், இன்பா

இந்த வார இரண்டு செய்திகள்

செய்தி # 1

நடிகர்கள் விஜய் மற்றும் ரஜினிகாந்த் விருப்பமிருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு வரலாம். அவர்களை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லையென்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

ராகுல்காந்தி சென்னை வந்தபோது நடிகர் ரஜினி, விஜய்க்கு காங்கிரசில் சேர அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த அழைப்பை இருவரும் ஏற்கவில்லை. காங்கிரசில் சேரும் எண்ணம் இல்லை என்று சொல்லி ரஜினி நழுவினார். விஜய் காங்கிரசில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. விஜய்யும் ராகுலும் டெல்லியில் சந்தித்து பேசினர். இதன் மூலம் விஜய்க்கு இளைஞர் காங்கிரசில் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் காங்கிரசில் அவர் இணைவார் என்றும் பேசப்பட்டது.

ஆனால் விஜய் காங்கிரசில் சேரும் திட்டம் இல்லை என்று தெளிவுப்படுத்தி விட்டார். ராகுலை மரியாதை நிமித்தம் சந்தித்ததாகவும் இப்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் கூறி விட்டார். எதிர் காலத்தில் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் திட்டம் உள்ளது என்றும் தெளிவுப்படுத்தினார்.

இதுபற்றி முன்னாள் மத்திய மந்திரி இளங்கோவன் கூறியதாவது:-

ராகுல்காந்தி தமிழகம் வந்தபோது பெரும் கூட்டம் கூடியது. தமிழக இளைஞர்கள் யார் பக்கம் என்பதை இந்த சுற்றுப்பயணம் உணர்த்தி விட்டது. பிற அரசியல் கட்சியினர் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.

நடிகர் விஜய்யை ராகுல் காந்தி சந்தித்து பேசியதாக செய்திகள் வந்துள்ளன. விஜய்யை ராகுல் சந்திக்க வில்லை. தன்னை சந்திக்கும் படி விஜய் கேட்டார். அதற்கு ராகுல் நேரம் ஒதுக்கி கொடுத்தார். அந்த சந்திப்பை தமிழக காங்கிரஸ்காரர்கள் கொண்டாடவும் இல்லை. ஒதுக்கித்தள்ளவும் இல்லை.

ரஜினியானாலும் விஜய்யானாலும் இவர்கள் முதலில் இந்திய குடிமக்கள். அதன் பிறகு தான் நடிகர்கள். எந்த நடிகரையும் நம்பி காங்கிரஸ் இல்லை. விருப்புமுள்ள யார் வேண்டுமானாலும் காங்கிரசில் சேரலாம்.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

செய்தி # 2

தமிழில் எந்த ஒரு நல்ல படம் வெளிவந்தாலும், அதை பாராட்டி ஒலிக்கும் முதல் குரல் ரஜினி அவர்களுடையது.

'வெண்ணிலா கபடி குழு' படம் வெளியானவுடன், யாருக்கும் அறிமுகம் இல்லாத, புதிய முகங்களை கொண்ட அந்த குழுவினை பாராட்டினர் ரஜினி. 'நான் கடவுள்' வந்தபோது, அதில் நடித்த பூஜாவை பாராட்டி, ஸ்ரீ ராகவேந்திரர் படம் பரிசளித்தார். இதைபோல ஒரு பெரிய பட்டியலே போடலாம் சூப்பர் ஸ்டாரின் இந்த ஸ்பெஷல் குணாதிசயத்தை பற்றி.

அவர் சமிபத்தில் பாராட்டியிருக்கும் படம், வேற என்ன 'உன்னை போல் ஒருவன்' தான்.

கமல் நடித்து வெளியாகியுள்ள உன்னைப் போல் ஒருவன் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி பார்த்து ரசித்தார். ஏவிஎம் வளாகத்தில் உள்ள ஏசி திரையரங்கில் ரஜினிக்கான பிரத்தியேக காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் கமல்ஹாஸன்.

ஒரிஜினல் படத்துக்கு மரியாதை செய்யும் விதத்தில் கமல் இந்தப் படத்தை எடுத்திருப்பதாக இடைவேளையின்போது கருத்துப் பகிர்ந்து கொண்டார் ரஜினி.

ரஜினி படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வந்துவிட்ட கமல்ஹாஸன் வெளியில் காத்திருந்தார். படம் முடிந்து வெளியில் வந்தவர், கமலை நோக்கி வேகமாகப் போய் கட்டிப் பிடித்துக் கொண்டார். "ஃபெண்டாஸ்டிக் கமல்... அருமையா வந்திருக்கு படம். என்னுடைய வாழ்த்துக்கள்!" என ஆத்மார்த்தமாக வாழ்த்த, கமல் முகத்தில் பரவசம்.

படத்தின் இன்னொரு நாயகன் மோகன்லாலுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார் ரஜினி.

தொழில் ரீதியான போட்டிகளால் தனிப்பட்ட முறையிலும் பகமை பாராட்டும் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கும், ரஜினி vs கமல் என இட்லிவடையில் முட்டி மோதிக்கொள்ளும் வாசகர்களுக்கும் ரஜினி - கமல் நட்பு கவனத்திற்குரியது.

இந்த வார உலக செய்தி :

உலகிலுள்ள ஏழை மக்களின் பட்டினியைப் போக்க ஐ.நா.சபையின் உலக உணவுத் திட்டம் உதவி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்துக்கு நடப்பாண்டு 33 ஆயிரத்து 500 கோடி ரூபா நிதிக்கு 'பட்ஜெட்' போடப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபா மட்டுமே கிடைத்துள்ளது. பொருளாதார பின்னடைவு காரணமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி உதவி கிடைக்கவில்லை.

இதனால் இந்த ஆண்டு 100 கோடி பேர் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.சபை கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா.உலக உணவு திட்ட அலுவலகம் கூறுகையில்,

"மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். பொருளாதார பின்னடைவு காரணமாக நிலைமை மோசமாகி உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பது மக்களை மேலும் அதிகளவில் பாதித்துள்ளது.

இதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் கூட விதிவிலக்கல்ல. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களின் தொகை அதிகமாகவுள்ள நாடுகளில் இந்தியா 25 ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் இந்த பட்டியிலில் 11ஆவது இடத்தில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

-இன்பா

17 Comments:

Unknown said...

பாக்கிஸ்தான் நம்பளை விட மோசமா இருக்குது. சூப்பர் தல. கேக்கவே சந்தோஷமா இருக்குது

அமைதி அப்பா said...

ஐயா, விஜய் பற்றிய செய்தியை எழுதிவிட்டு விமர்சனம் எழுதாமல் இருந்தால் எப்படி? என்னுடைய விமர்சனம் இதோ...!
மறைந்த ஆந்திர முதல்வர் நமக்கு பல பாடங்களை விட்டுச் சென்றிருக்கிறார், அவர் உண்மையில் மருத்துவப் பட்டம் பெற்ற டாக்டர் என்பது அவர் மறைந்த பின்னரே எனக்கு தெரியும். அவர் இந்த அளவுக்கு புகழ்ப் பெற்றவர் என்பதும் அவர் மறைந்த பின்னரே உணர்ந்தேன்.
நாம் இன்னமும் சினிமா நடிகர்கள் மட்டுமே கவர்ச்சியானவர்கள் என்று நம்புவதால் தான் விஜய், விஜயகாந்த், சரத்குமார் போன்றோர்களை நம்பி நாமும் நம் தமிழ்நாடும் செல்வதாக ஊடகங்கள் கதை கட்டிக்கொண்டுள்ளது. கவர்ச்சி என்பது சினிமாவில் மட்டும் தான் என்றால் டாக்டர் YSR மறைந்த போது துக்கம் தாளாமல் உயிரை மாய்த்துக் கொண்டார்களே, அங்கே எங்கிருந்து வந்தது கவர்ச்சி (கவர்ச்சி என்றால் மனதை ஆக்கிரமிப்பது என்று பொருள் கொள்வோம்) இதன் மூலம் நாம் அறிவது, மக்களுக்கு தொண்டாற்ற அழகிய முகம் தேவையில்லை ,
சரி இனி என்ன செய்ய வேண்டும் நாம் என்ற கேள்வி எழலாம்...! நாம் கட்சி ஆரம்பிக்க முடியாது, நம்மிடம் பணமில்லை எனவே இளைஞர்கள், படித்தவர்கள், நல்லவர்கள் ஏதாவது ஒரு காட்சியில் நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும். அங்குள்ள தாதாக்கள், வாரிசுகள் இவர்களை மீறி நாம் என்ன செய்துவிட முடியும் என்று தயங்கக் கூடாது. நாம் ஒருவர் உள்ளேச் சென்று அங்குள்ள இருவரை நல்லவர்களாக மாற்றினால் நமது இலட்சியம் வெற்றி பெரும்.
நண்பர் சரத் பாபு மிக அதிகம் படித்தவர், எம்பி தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போனார், ஆனால் அவர் இனி செய்ய வேண்டியது அவரும் அவர் நண்பர்களும் தன்னை ஓர் அரசியல் காட்சியில் இணைத்துக்கொண்டு அந்த கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். நல்லது செய்வதற்கு சுழ்சியைப் பயன்படுத்தலாம். நல்லவர்கள் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம்.
நல்ல படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர நாம் அவர்களை ஊக்கிவிக்கவேண்டும்,

யதிராஜ சம்பத் குமார் said...

விஜய் ராகுல் சந்திப்பைப் பற்றி பல ஹேஷ்யங்கள் மற்றும் முரண்பட்ட தகவல்கள் வந்து கொண்டுள்ளன. முதலில் ராகுல் சந்திக்க விரும்புகிறார் என்று ஒருவர் தம்மை படப்பிடிப்பின் போது அணுகியதாக விஜய் தெரிவித்தார். இப்பொழுது இளங்கோவன் விஜய் நேரம் கேட்டார் என்கிறார். இதில் யார் சொல்வது நிஜம் என்று புரியவில்லை. மேலும், அவ்வாறே விஜய் நேரம் கேட்டிருந்தாலும், மரியாதை நிமித்தமாகக் கூட ராகுலைச் சந்திக்கும் முகாந்திரம் விஜய்க்குக் கிடையாது. அப்படியிருக்க காங்கிரஸில் சேரும் எண்ணம் எதுவும் இல்லை என்று பல திடுக்கிடும் திருப்பங்களுக்குப் பிறகு விஜய் பல்டி அடித்துள்ளார். இதற்கெல்லாம் பின்னணி என்னவென்பது சிறு குழந்தைக்குக் கூடத் தெரியும்.


சந்திரசேகர் ஒரு கழகக் கண்மணி. விஜய் காங்கிரஸில் சேரப்போவதாக வதந்திகள் வந்தபோதே விஜய்க்குச் சொந்தமான கல்யாண மண்டப வாசலில் இதுநாள் வரை அரசாங்கத்தின் கவனத்திற்கு வராத ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஆக விஜய்யின் அரசியல் ப்ரவேசம் தமிழக மக்களின் நல்ல காலத்தால் தடைபட்டது.


ரஜினியையும், விஜய்யையும் நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை என்று இளங்கோவன் கூறியுள்ளது மிகச்சரி. அது யாரை நம்பியிருக்கிறது என்று காங்கிரஸார் உட்பட யாருக்குமே தெரியாது. இப்படியெல்லாம் வாய்ச்சவடால் விட்டுவிட்டு பின்பு கோபாலபுரத்தில் சென்று மன்னிப்பு கேட்பதற்கு பதில், தமிழக காங்கிரஸைக் கலைத்து கழகத்தில் இணைப்பது எவ்வளவோ மேல்.

கௌதமன் said...

EVKSE சொன்னது:
// எந்த நடிகரையும் நம்பி காங்கிரஸ் இல்லை. விருப்புமுள்ள யார் வேண்டுமானாலும் காங்கிரசில் சேரலாம்.//
சொல்லாமல் விட்டது:
ஆனால் அப்படி சேருபவர்கள் - அவர்கள் எந்த கோஷ்டி ஆதரவாளர்கள் என்பதை உறுதியாகச் சொல்லிவிடவேண்டும். அப்பொழுதுதான் எங்களில் யார் அவர்களை நம்பி இருக்கிறோம் என்பதை வெளியிடுவோம்!

R.Gopi said...

இந்த உலகம் இன்னுமா காங்கிரஸையும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனையும் நம்பிட்டு இருக்கு... அய்யோ..அய்யோ...

நண்பர் இட்லிவடையின் கோரிக்கையை ஏற்று, இனியும் ரஜினி/கமல் ரசிகர்கள் மோதிக்கொள்ள வேண்டாம் என்று இன்பா, மானஸ்தன் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்...

//நடிகர் விஜய்யை ராகுல் காந்தி சந்தித்து பேசியதாக செய்திகள் வந்துள்ளன. விஜய்யை ராகுல் சந்திக்க வில்லை. தன்னை சந்திக்கும் படி விஜய் கேட்டார். அதற்கு ராகுல் நேரம் ஒதுக்கி கொடுத்தார்.//

இந்த செய்தியை மீண்டும் ஒரு முறை அனைவரும் படித்து தெளிவு பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

கௌதமன் said...

பிழைக்கத் தெரிந்த நடிகர்கள் யார்? - கட்சி ஆரம்பிப்பவர்களா? அல்லது கட்சியில் சேருபவர்களா? - அல்லது கட்சிகளுக்கு நிதி கொடுத்துத் தப்பித்துக் கொள்பவர்களா? என்று ஏதேனும் ஒரு தொலைக்காட்சியில் விடுமுறை தினச் சிறப்புப் பட்டி மன்றம் நிகழ்ச்சி நடத்தலாம்.

கௌதமன் said...

// தொழில் ரீதியான போட்டிகளால் தனிப்பட்ட முறையிலும் பகமை பாராட்டும் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கும், ரஜினி vs கமல் என இட்லிவடையில் முட்டி மோதிக்கொள்ளும் வாசகர்களுக்கும் ரஜினி - கமல் நட்பு கவனத்திற்குரியது.//
Well said IV.

கௌதமன் said...

// திட்டத்துக்கு நடப்பாண்டு 33 ஆயிரத்து 500 கோடி ரூபா நிதிக்கு 'பட்ஜெட்' போடப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபா மட்டுமே கிடைத்துள்ளது. பொருளாதார பின்னடைவு காரணமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி உதவி கிடைக்கவில்லை.//
33500 - 13000 = 20500 கோடி ரூபாய்.
இருபதாயிரத்து ஐந்நூறு கோடி என்பது சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்திய ரூபாய் அளவில் - வெறும் ஆயிரத்தில் இரண்டே முக்கால் பங்கு - அதாவது ஸ்விஸ் வங்கியில் ஆயிரம் ரூபாய் வைத்திருப்பவர் அதில் இரண்டே முக்கால் ரூபாய் கொடுத்தால் போதும் - இந்த வருடம் நூறு கோடிப் பேர் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படாமல் தடுக்கலாம்.
செய்வார்களா?

seethag said...

ஸ்விஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணத்தை எடுத்தாலே இந்தியாவில் வறுமையைப் போக்கலாம்.............

ஸ்ரீராம். said...

பொருளாதார பின்னடைவு காரணமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி உதவி கிடைக்கவில்லை./

அந்த நாளிலேயே பெரியவர் பிடி அரிசி திட்டம் என்ற ஒன்றை சொல்லி நடத்தி வந்தார். Same principle may be applied here

Krish said...

1. கலர் டிவிக்கு செய்யப்பட 500 கோடியை வைத்து தமிழ்நாட்டின் பசியை போக்கியிருக்கலாம்.

2. சிலை வைக்கப்பட்ட பணத்தில் உ.பி இல உள்ள ஏழைகளின் பசியைப் போக்கியிருக்கலாம்.

3. தேவை இல்லாமல் நடக்கும் தேர்தல் செலவுகளை குறைக்கலாம். எம்பி யாக இருந்துகொண்டு சட்ட சபைக்கு போட்டியிடுவது, எம் எல் எ வகை இருந்துக் கொண்டு எம்பி தேர்தலில் போட்டியிடுவது, கட்சி மாறுவதினால் வரும் இடைத் தேர்தலை நிறுத்த வேண்டும்.

Anonymous said...

//1. கலர் டிவிக்கு செய்யப்பட 500 கோடியை வைத்து தமிழ்நாட்டின் பசியை போக்கியிருக்கலாம்.

2. சிலை வைக்கப்பட்ட பணத்தில் உ.பி இல உள்ள ஏழைகளின் பசியைப் போக்கியிருக்கலாம்.//

ம்ம்ம் அப்புறம்??

உருப்படி ஏதாச்சும் சொல்லுங்கையா

பசிய போக்கிட்டா அப்புறம் பிரியாணிய போட்டு ஓட்டு வாங்க முடியுமா?

நல்லூரான் said...

விகடனில் வந்த கிசுகிசு என்ன தெரியுமா? எஸ்.ஏ.சந்திர சேகருக்கு ஆளுநர் பதவிக்கு டிமாண்ட் செய்யப் பட்டதாம். அதனாலேயே விஜயின் வயதைக் காரணம் காட்டி கழன்று கொண்டனராம் காங்கிராசர்...

Anonymous said...

There was one time when - Dr.Udhayamurthy stood as CANDIDATE for Assembly Elections (I think Madurai)...

He was not elected. And not even gained deposit i think. Election is run only on popularity. There is no common platform.

Those who have TV channels do the advt very easily. Next comes magazines. These are not supporting (any opposition - does not support) good people like Udayamurthy.

How TN expects something good happen to them?

Rahul said...

/***33500 - 13000 = 20500 கோடி ரூபாய்.
இருபதாயிரத்து ஐந்நூறு கோடி என்பது சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்திய ரூபாய் அளவில் - வெறும் ஆயிரத்தில் இரண்டே முக்கால் பங்கு - அதாவது ஸ்விஸ் வங்கியில் ஆயிரம் ரூபாய் வைத்திருப்பவர் அதில் இரண்டே முக்கால் ரூபாய் கொடுத்தால் போதும் - இந்த வருடம் நூறு கோடிப் பேர் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படாமல் தடுக்கலாம்.
செய்வார்களா?***/


உங்க கணக்கு எல்லாம் சரி, யாரு குடுப்பாங்க ஸார்???

Rahul said...

/***நண்பர் சரத் பாபு மிக அதிகம் படித்தவர், எம்பி தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போனார், ஆனால் அவர் இனி செய்ய வேண்டியது அவரும் அவர் நண்பர்களும் தன்னை ஓர் அரசியல் காட்சியில் இணைத்துக்கொண்டு அந்த கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். நல்லது செய்வதற்கு சுழ்சியைப் பயன்படுத்தலாம்**/

Idiotic expectation!!
மிக படித்தவர்கள் மற்றும் கஸ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள், சுய தொழில் செய்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று சொல்லி விட முடியாது, Raju Formar CEO of Satyam, மிக படித்தவர், நல்ல திறமைசாலி என்ன செய்தார்??? நான் சரத் பாபுவை குறை சொல்லவில்லை, மாறாக நீங்கள் சொல்லும் காரணிகள் மட்டும் நல்லவர் என்று தீர்மானிக்க முடியாது என்பது என் கருத்து.

Rahul said...

/***ரஜினி vs கமல் என இட்லிவடையில் முட்டி மோதிக்கொள்ளும் வாசகர்களுக்கும் ரஜினி - கமல் நட்பு கவனத்திற்குரியது***/

கமலை பற்றிய ஒரு பதிவு வந்தால் ஒரு சிலர் ஏதாவது ஆரம்பித்து விடுகிறார்கள்!! எப்பொழுதான் புரிந்து கொள்வார்களோ???