பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, September 26, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 26-09-2009

முனிக்கு எழுதும் கடிதம்...

ஹலோ முனி,

சிக்கன நடவடிக்கை ஜுரம் இப்ப அதிகமாகிவிட்டது, தினமும் சிக்கன நடவடிக்கை பற்றி ஏதாவது செய்தி பேப்பரில் வருகிறது. தினமும் இந்த சிக்கன செய்தியால் எவ்வளவு மரம் வேஸ்டாகிறது ? சிக்கன நடவடிக்கை பற்றி இனிமேல் மீடியாகாரர்கள் எழுதாமல் இருந்தாலே பெரிய சிக்கனம். நான் சொல்லுவது சரிதானே ? லேட்டஸ்ட் சிக்கன நடவடிக்கை பிரதமருடன் அமெரிக்கா செல்லும் குழுவினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. பிரதமருக்கு உண்மையிலேயே சிக்கன நடவடிக்கை மீது நம்பிக்கை இருந்தால் மும்பை தாக்குதல் பற்றி எவ்வளவு 'புதிய' ஆவணத்தை இந்தியா பாகிஸ்தானிடம் கொடுத்திருக்கும். ஆனால் அவர்கள் அளிப்பது ஒரே பதில் 'வேற ஏதாவது இருக்கா ?'

நிச்சயம் பிரதமர் ஒன்றும் செய்ய முடியாது, ஒபாமாவுடன் போனில் பேசுவார் அவ்வளவு தான். நான் 'உன்னை போல் ஒருவன்' மாதிரி படம் எடுத்து கைத்தட்ட வேண்டியது தான். சரி பிரதமருக்கு இது ரொம்ப கஷ்டமான வேலை என்றால் நம் அடுத்த சிக்கன நடவடிக்கையாக எதற்கு 75+ மந்திரிகள் நம் நாட்டுக்கு தேவை ? இதில் பாதி பேருக்கு வேலையே கிடையாது. தன்னுடைய மந்திரிசபையை பாதியாக குறைத்தாலே பெரிய சிக்கன நடவடிக்கை. இதையாவது செய்வாரா பிரதமர் ?

ஆனால் இந்த சிக்கன நடவடிக்கை எல்லாம் எந்திரனுக்கு கிடையாது என்று நினைக்கிறேன். முக்கால் வாசி படம் கிராபிக்ஸ் என்று சொல்லுகிறார்கள். செலவு ? நமக்கு என்ன

எந்திரன் கிராபிக்ஸ் அமர்க்களம் என்று இந்த வார குங்குமம் பத்திரிக்கையில் ஏதாவது விஷயம் இருக்குமா என்றால் ஒன்றும் இல்லை. ஆனால் இலசமாக ஜெமினி ரிபைண்டு சன் பிளவர் ஆயில் 1 பாக்கெட் கொடுத்ததால் குங்குமத்தை மன்னித்துவிட்டேன். இன்னொரு இலவசம் 58 ஆம் பக்கம் இருக்கிறது - இலவசக்கொத்தனார் எழுதிய சிறுகதை 'உலை' . இது எல்லாம் நான் உனக்கு சொல்ல தேவையில்லை. இருந்தாலும் சொல்றேன். படித்துவிட்டு 'நல்லா இருக்கு வாழ்த்துக்கள்' என்று ஒரு கமெண்ட் போட்டுவிடு. மறந்துவிடாதே!.

நமக்கெல்லாம் இன்று வரை சொல்லப்பட்டு வந்த விஷயம் வட இந்தியர்கள் ஆரியர்கள் அவர்கள் ஐரோப்பாவில் இருந்து வந்தனர். தென் இந்தியர்கள் திராவிடர்கள் என்பது.

ஆனால் Centre for Cellular and Molecular Biology (CCMB) என்ற இந்திய மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கை மேற்கூறிய விஷயம் தவறு என்றும், இன்றைய இந்த சமூகம் பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்பே "வட இந்திய மூதாதையர்கள்","தென் இந்திய மூதாதையர்கள்" என்று இரு பிரிவால் உருவானது என்றும் கூறுகிறது. மேலும் "தென் இந்திய மூதாதையர்கள்" சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன் அந்தமான் மற்றும் தென் இந்தியாவில் இருந்தவர்கள் என்றும், "வட இந்திய மூதாதையர்கள்" 40000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வந்தனர் என்றும், பின்னர் வட மற்றும் தென் இந்திய மூதாதையர்கள் கலந்து இப்போது உள்ள கலப்பு மக்கள் வந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. .

இப்போது உள்ள இந்திய மக்களில் 40 முதல் 70 சதவீதம் வரை வட இந்திய மூதாதையர்கள் வழிவந்தவர்களும், மீதம் உள்ளவர்கள் தென் இந்திய மூதாதையர்கள் வழி வந்தவர்கள் என்றும் சொல்கிறார்கள். முக்கியமாக, தென் இந்திய மூதாதையர்கள் வழிவகை உலகத்தில் வேற எந்தப் பகுதியிலும் இருப்பதாக அறியப்படவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள்.மேலும் இந்தியர்களின் வழி-வழிப் பழக்கமான தங்கள் ஜாதி, மதத்திலேயே கல்யாணம் செய்வதாலேயே (high endogamy) ஒரு சில வியாதிகள் சில தட்டு மக்களிடம் அதிகமாகக் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்று வட இந்தியர்களை சோதித்தால் அவர்களிடம் இட்லிவடையும், தெற்கு மக்களிடம் சோதித்தால் பாணிபூரியும் இருக்கும். எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் - எப்படி வட மாநில டிவி சீரியல்களில் எல்ல்லோரும் வெள்ளையாக இருக்கிறார்கள் ? சொட்டு நீலம் போட்டு குளிப்பார்களா ?

டிவி என்று சொன்னவுடன் தான் ஞாபகம் வருது தமிழக அரசின் இலவச கலர் டிவிகள் வழங்கும் விழாவில் இலவச கலர் டிவிகளை வழங்கிவிட்டு அமைச்சர் துரைமுருகன் இப்படி பேசியிருக்கார் "திமுகவினர் மரியாதை தெரிந்தவர்கள். அதனால்தான் அதிகாரிகளை வைத்து டிவி வழங்குவதை விட நானே நேரில் வந்து வழங்குகிறேன். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நம்பி நீங்கள் வாக்களித்தீர்கள். அதை நிறைவேற்றிட மக்களிடம் நாங்களே நேரில் வந்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம். டிவி தருவதை பெருமையாக கருதவில்லை. அதை கடமையாக கருதுகிறோம்.." இது தான் அண்ணா சொன்ன 'கடமை' இன்னும் கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் இருக்கு அதற்கு எல்லாம் இன்னும் ஒரு வருடம் இருக்கு. தமிழக மக்கள் கவலை பட தேவையில்லை.

குண்டாக இருப்பவர்கள் கவலை பட தேவையில்லை. அவர்கள் ஒல்லியாக சுலபமாக ஒரு வழி இருக்கு. கண்ட கண்ட மாத்திரை எல்லாம் சாப்பிட வேண்டாம். அடுத்த முறை உணவு உண்ணும் போது குண்டாக இருப்பவர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டால் போதும். குண்டான நண்பருடன் சேர்ந்து சாப்பிடும் போது அவர் அதிகளவு சாப்பிட்டால், நாம் குறைந்த அளவே சாப்பிடுவோம். ஏனெனில் உடல் பருமனானவர், அவர் உடல்வாகுக்கு ஏற்றவாறு சாப்பிடுகிறார், நம் உடல்வாகுக்கு ஏற்றவாறு நாம் குறைவாக சாப்பிட்டால் போதும் என்ற எண்ணம் வரும். இதையே மெலிந்த உடல்வாகு கொண்ட நண்பருடன் சாப்பிடும்போது அவர் நிறைய சாப்பிட்டால் நாமும் நிறைய சாப்பிடுவோம். ஏனெனில் மெலிந்த உடல்வாகு கொண்ட அவரே அதிகமாக உண்ணும் போது நாம் ஏன் உண்ணக்கூடாது என்று எண்ணி, அதிகமாகச் சாப்பிடத் தோன்றும். அதனால் உடல் பருமனாகக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆகவே மக்களே நீங்க உடல் இளைக்க வேண்டும் என்றால் நீங்கள் அடுத்த முறை நமிதாவுடன் போய் உணவு சாப்பிடுங்க.

இந்த மாதிரி அடுத்த டெக்னிக் கிரிக்கெட்டில் நன்றாக விளையாட வேண்டுமா ? விளையாட்டுக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று பயிற்சியாளர் கிர்ஸ்டன் அறிவுரை கூறியுள்ளார். Leg Before Wicket கேள்விப்பட்டிருக்கிறோம், Sex Before Wicket என்று இப்ப தான் கேள்விப்படுகிறோம்( இதற்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லை ). அடுத்த முறை யாராவது செஞ்சுரி அடித்தால் அவரிடம் பத்திரிக்கையாளர்கள் 'அந்த கேள்வியை' கேட்காமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். வேறு ஒரு கமெண்ட் இருக்கு ஆனால் இட்லிவடை வாசகர்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்பதால் அதை தவிர்க்கிறேன். முன்னாள் பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி போட்டிக்கு 6 வாரங்கள் முன்பு வரை செக்ஸ் உறவை வைத்துக்கொள்ள மாட்டார் தெரியுமா ? இந்த தகவல் எதற்கு என்று யோசிக்கிறீர்களா ? முகமது அலியின் சிக்கன நடவடிக்கை பற்றி நீங்க எப்ப தெரிந்துகொள்வீர்கள் ?

தீபாவளி விளம்பரம் எல்லா டிவியிலும் வர ஆரம்பித்துவிட்டது. அதுக்கு முன்னாடி விஜய் நியூஸ் - திருவண்ணாமலை அருகே வேட்டைக்காரர்களிடம் இருந்து அரிய வகை குருவிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதில எங்கே விஜய் வந்தார் என்று கேட்பது தெரிகிறது. குருவி, வேட்டைக்காரன் என்று வருகிறதே ! வேட்டைக்காரன் ரிலீஸ் ஒரு 15 நாள் தள்ளி போகும் என்று பேசிக்கிறாங்க.கலைஞர் டிவி, சன் டிவி டீல் என்று பேச்சு. எல்லாம் பணம் பண்ணும் வேலை.

டிவிட்டருக்கு 100 மில்லியன் டாலர் ஃபண்டிங் கிடைத்திருக்கிறதாம். இதை பற்றி வெண்பாம் எழுதி டிவிட்டரை பாராட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.
இந்த செய்தியை சொன்னவுடன் பா.ராகவன் அவசரமாக வந்து எழுதிய வெண்பாம்
நேற்றுத்தான் பிறந்து நெஞ்சமெலாம் கவர்ந்து
நூற்று நாற்பது சவால்விடுத்து - ஏற்றமுற
செல்லுமிடமெல்லாம் சிறப்புறவே ஒருநூறு
மில்லியன் பெறுகிறது ட்விட்டர்.

உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு இசையமைத்திருக்கும் கமல் மகள் ஸ்ருதியை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாராட்டியுள்ளார். அது போல!.

அடுத்த மாதம் 6ஆம் தேதி ஜெயலலிதா சூறாவளி பயணம் மேற்கொள்ள போகிறார் தெரியுமா ? ஆமாம் அவர் 6ஆம் தேதி சென்னைக்கு திரும்புகிறார்!. தமிழ்நாட்டு மக்களுக்கு இனி விடிவு காலம் தான். பருப்பு விலை குறைந்துவிடும். கவலைப்படாதீர்கள்.

9வது உலகத் தமிழ் மாநாடு – என் கோரிக்கைகள் என்று சில கோரிக்கைகள் வைத்துள்ளார். நேசமுடன் வெங்கடேஷ், இவை எல்லாம் நடக்குமா என்பது சந்தேகமே. மாநாடே ஆரம்பிக்கவில்லை அதற்குள் 'கருணாநிதியால் மாநாடு நடத்தப்படுமானால், அது 9வது உலகத்தமிழ் மாநாடு என்ற தகுதியைப் பெற முடியாது' என்று ஜெயலலிதா அறிக்கை விட ஆரம்பித்துவிட்டார்.

சில நாட்களுக்கு முன் "அங்கங்கே சில இடங்களில் ஜெலூசில் வியாபாரம் திடீரென்று அதிகமானதாகத் தெரிகிறது. அந்த மருந்துக் கடைகளுக்கும் வருமானம் வரட்டும்" என்றார் ஒரு எழுத்தாளர். அது மாதிரி இந்த மாநாடு நடத்துபவர்கள், விமர்சிப்பவர்களுக்கு அக்மார்க் தமிழ் மருந்தான "சுக்கு கஷாயம்னு" கொடுக்க வேண்டியது தான். என்ன தான் தமிழ் தமிழ் என்று அறிக்கையும், மாநாடும் நடத்தினாலும் தமிழ் வளரப்போவதில்லை, இந்த மாதிரி முனிக்கு கடிதம் எழுதினால் தான் டமில் வளரும்.


அட மறந்தே போச்சு இதோ இந்த வார தத்துவம் -


"போன் அலறினா எடுத்துப் பேசணும்.
பொண்டாட்டி அலறினா எதிர்த்துப் பேசக்கூடாது"


பை,
இட்லிவடை


23 Comments:

SUBBU said...

மதி கார்ட்டூன் பட்டாசு :)))))))

SUBBU said...

//நம் அடுத்த சிக்கன நடவடிக்கையாக எதற்கு 75+ மந்திரிகள் நம் நாட்டுக்கு தேவை ?//

தேவையே இல்ல!!

SUBBU said...

//வட இந்தியர்களை சோதித்தால் அவர்களிடம் இட்லிவடையும், தெற்கு மக்களிடம் சோதித்தால் பாணிபூரியும் இருக்கும்//

நிஜமாவா??????

SUBBU said...

//இந்த மாதிரி முனிக்கு கடிதம் எழுதினால் தான் டமில் வளரும்.
//
:)))))))))))

maanasthan said...

இலவசத்துகே இலவச விளம்பரமா?

சோத்து சிக்கன மேட்டர் நம்ம அன்பர் திரு KGG ரொம்ப முன்னாடியே சொல்லிட்டார்.

எங்க இருந்துய்யா இந்த கிரிக்கெட் பாப்பா போட்டோ பிடிச்சா? நீயே நேருல போடு இந்த போஸ்டுக்காகவே பிடிச்ச மாதிரி இருக்கு!!!

ட்விட்டர் வாழ்க. நெறைய விஷயம் வெளிச்சத்துக்கு வருது.

அந்த அஞ்சு ரூவா அண்ணா காயின்ல என்ன உள்குத்து இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆவல்.

கடைசியா, "இட்லிவடை" உஷார் பேர்வழி என்பதற்கு உதாரணம்.
"போசக் கூடாது" என்று இருந்ததை "பேசக் கூடாது" என்று யாரும் சொல்லாமலேயே மாற்றியது.

மானஸ்தன் said...

மன்னிக்கவும். அய்யன் காசை அண்ணா காசு என்று தவறாக சொன்னதற்காக.

கௌதமன் said...

அய்ய! நா சிக்கன கமென்ட்(!) போடறேன் - கடிதம் நல்லா இருக்

Anonymous said...

From your the map provided by you, it is clear that they have left out groups from Tamilnadu.

R.Gopi said...

இ.வ.

முனி லெட்ட ஓகே... (எல்லாம் சிக்க‌ன‌ ந‌ட‌வ‌டிக்கை...)

Rajasekaran said...

//நான்காம் வகுப்பு ஸ்கூல் பாட புத்தகத்தில் பார்த்த நிலவின் மேடுகளும், குழிகளை தவிர சந்திராயன் நமக்கு அனுப்பிய தகவல் என்ன என்று யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.//

Expecting a comment!!

Unknown said...

"நமக்கெல்லாம் இன்று வரை சொல்லப்பட்டு வந்த விஷயம் வட இந்தியர்கள் ஆரியர்கள் அவர்கள் ஐரோப்பாவில் இருந்து வந்தனர். தென் இந்தியர்கள் திராவிடர்கள் என்பது."

இதில் தவறு ஒன்றும் இல்லை.

இந்தியாவின் பூர்வீக குடிகள் தென்னிந்தியர்களே. தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். அதன் பின்னரே வட இந்தியாவில் மக்கள் குடியேறத் தொடங்கினர் என்று புதிய மரபியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்திய மூதாதையர்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள மூ்லக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும், அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்ட் பொது சுகாதார கல்லூரி, ஹார்வர்ட் பிராட் கழகம், மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (எம்.ஐ.டி) ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன.

இந்த ஆய்வு குறித்த மிகப் புதிய, அதேசமயம், பல வித்தியாசமான தகவல்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஹைதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியருமான லால்ஜி சிங் மற்றும் ஹைதராபாத் மையத்தின் மூத்த விஞ்ஞானியான குமாரசாமி தங்கராஜனும் கூறுகையில், இது வரலாற்றை திருத்தி எழுத உதவும் ஆய்வாகும்.

13 மாநிலங்களைச் சேர்ந்த 25 வித்தியாசமான இனக் குழுக்களைச் சேர்ந்த 132 பேரின் ஜீனோம்களிலிருந்து 5 லட்சம் மரபனு குறியீடுகளை ஆய்வு செய்தோம். அனைவருமே இந்தியாவின் பிரதான ஆறு மொழிகளைப் பேசும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

பழங்குடியினர், மேல் ஜாதி, கீழ் ஜாதி என அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான 2 பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

இந்த தொன்மையான பிரிவினரை, தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென்இந்திய மூதாதையர் என்றும் கூறலாம். தற்போது இந்தியாவில் உள்ள 4,635 மக்கள் இனங்கள் அனைத்தும் இந்த 2 தொன்மையான மூதாதையர்களிடம் இருந்து தனித்தனியாகவோ அல்லது இரண்டும் கலப்புற்றோ தோன்றி இருக்கலாம்.

வட இந்தியர்கள் ஐரோப்பியர்களுடன் ஒத்துப் போகிறார்கள்...

இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40 முதல் 80 சதவீதம் வரை ஒத்து இருக்கிறார்கள்.

ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இதனால் அறியப்படுவது யாதெனில் :
"தென்னிந்தியர்கள் இங்கேயே இருந்தவர்கள்.
வட இந்தியர்கள் மேற்கு ஆசியா அல்லது ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள் தான்."
அவர்கள் சரியாக தான் சொல்லியிருக்கிறார்கள். தயவு செய்து நீங்கள் எதையாவது சொல்லி மழுப்ப வேண்டாம்.

Unknown said...

IV,

Good letter to muni... with less info when compare to other letters
and again what is that with enthiran budget... ?

Kamesh

Unknown said...

IV

Oru Rajini padam Budget paakkama Eduthaa athula vara labathula 10 Vijay Padam 6 Kamal Padam eduthu athu vetriyadailanalum .... ivangalukku oru chance kudutthennu santhosha pattukkallam ithan thaan
Nijam uthararam : Vijay Vettaikkaran

Kamesh

Anonymous said...

அந்த அஞ்சு ரூவா அண்ணா காயின்ல என்ன உள்குத்து இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆவல்.

Have a look at this page ...
http://img.dinamalar.com/data/images_spl/fpnmix_67145937682.jpg

Vasuprada said...

Thanks Manorama_B for explaining the nature article about Indian Ancestry in simple tamil.

நந்தவனத்தான் said...

//இன்று வரை சொல்லப்பட்டு வந்த விஷயம் வட இந்தியர்கள் ஆரியர்கள் அவர்கள் ஐரோப்பாவில் இருந்து வந்தனர். தென் இந்தியர்கள் திராவிடர்கள் என்பது.

ஆனால் Centre for Cellular and Molecular Biology (CCMB) என்ற இந்திய மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கை மேற்கூறிய விஷயம் தவறு என்றும், இன்றைய இந்த சமூகம் பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்பே "வட இந்திய மூதாதையர்கள்","தென் இந்திய மூதாதையர்கள்" என்று இரு பிரிவால் உருவானது என்றும் கூறுகிறது. மேலும் "தென் இந்திய மூதாதையர்கள்" சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன் அந்தமான் மற்றும் தென் இந்தியாவில் இருந்தவர்கள் என்றும், "வட இந்திய மூதாதையர்கள்" 40000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வந்தனர் என்றும், பின்னர் வட மற்றும் தென் இந்திய மூதாதையர்கள் கலந்து இப்போது உள்ள கலப்பு மக்கள் வந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.//

நானும் இரண்டு நாளாய் பார்க்கிறேன்... ஆளுக்கு ஆள் அவர்களுக்குப் பிடித்த மாதிரி இந்த விடயம் பற்றி எழுதுகிறார்கள்.


67,000 வருடங்களுக்கு முன்னால் வந்தவர் ஆஸ்ரோ- ஆசிய குடியினர்.5000 வருடங்களுக்கு முன்னால் வந்தவர் திராவிடர்.3500 வருடங்களுக்கு முன்னால் வந்தவர் இந்தோ-ஐரோப்பா குடியினர் (ஆரியர்).

இவர்களிடமிருந்து வந்த வட இந்திய மூதாதையர்களும் தென் இந்திய மூதாதையர்களும் 750-2500 ஆண்டுக்கு முற்பட்டவர் மட்டுமே.

//இப்போது உள்ள இந்திய மக்களில் 40 முதல் 70 சதவீதம் வரை வட இந்திய மூதாதையர்கள் வழிவந்தவர்களும், மீதம் உள்ளவர்கள் தென் இந்திய மூதாதையர்கள் வழி வந்தவர்கள் என்றும் சொல்கிறார்கள்.//


மறுபடியும் தவறு!

வட இந்திய மூதாதையர்களும் தென் இந்திய மூதாதையர்களும் கலந்து உருவான இனங்களில் கலப்பு 39% -71% என வேறுபட்டு உள்ளதாம்.

(Indian populations they sampled are mixtures of two groups that they term ANI (Ancestral North Indians) and ASI (Ancestral South Indians).The degree of ANI:ASI mixture varies between 39% and 71% across India, and is evident in all caste and even tribal groups, and in both extant Indo-European and Dravidian speakers - Nature).

//முக்கியமாக, தென் இந்திய மூதாதையர்கள் வழிவகை உலகத்தில் வேற எந்தப் பகுதியிலும் இருப்பதாக அறியப்படவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள்.மேலும் இந்தியர்களின் வழி-வழிப் பழக்கமான தங்கள் ஜாதி, மதத்திலேயே கல்யாணம் செய்வதாலேயே (high endogamy) ஒரு சில வியாதிகள் சில தட்டு மக்களிடம் அதிகமாகக் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது//

இவை மட்டும் சரி!

நந்தவனத்தான் said...

//தென்னிந்தியர்கள் இங்கேயே இருந்தவர்கள்.
வட இந்தியர்கள் மேற்கு ஆசியா அல்லது ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள் தான்//

மனித இனம் தோன்றியது ஆப்பிரிக்காவில்....அப்புறமென்ன பூர்வ குடி... எல்லா இனமும் ஓடுகாலிதான்.

ஆரியர் வந்து திராவிடரை விரட்டியது உண்மை. ஆனால் கிபி 3000-ல் திராவிடர் வந்து வந்து 65,000 வருடத்திற்கு முன் வந்த ஆஸி- ஆசிய குடியை விரட்டியதும் உண்மை!

Anonymous said...

இந்தியாவின் பூர்வீக குடிகள் தென்னிந்தியர்களே. தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். அதன் பின்னரே வட இந்தியாவில் மக்கள் குடியேறத் தொடங்கினர் என்று புதிய மரபியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


மனித இனம் உருவானது ஆப்பரிக்காவில்...சும்மா அடிச்சு விடக்கூடாது.

ஸ்ரீராம். said...

Sex before wicket...... இனி ரசிக மகா ஜனங்கள் "Sixer....Sixer..." என்று கத்தினால் ஆட்டக்காரர்கள் காதில் எப்படி விழுமோ...

ஸ்ரீராம். said...

சிக்கன நடவடிக்கையாக பார்லிமென்ட் கூட்டத்தை மரத்தடியில் நடத்தலாம்...பஞ்சாயத்து நாட்டாமை போல...சுற்றிலும் நெருக்கமாக கருப்பு கமாண்டோக்களுடன்...மீரா குமார் அருகில் சொம்புடன் வெற்றிலை சாறு மெல்லுவார்

Unknown said...

யாதும் ஊரே யாவரும் கேளிர். ஆனா பிராமின் மட்டும் வேற

Rahul said...

/***மனித இனம் உருவானது ஆப்பரிக்காவில்...சும்மா அடிச்சு விடக்கூடாது.**/

Graet Invention!!!

வெள்ளைக்காரன் சொன்னா போதும் அதுதான் உண்மை என்று இருப்பவர்களை என்ன சொல்ல??

Rahul said...

/****IV said
Centre for Cellular and Molecular Biology (CCMB) என்ற இந்திய மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கை மேற்கூறிய விஷயம் தவறு என்றும், இன்றைய இந்த சமூகம் பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்பே "வட இந்திய மூதாதையர்கள்","தென் இந்திய மூதாதையர்கள்" என்று இரு பிரிவால் உருவானது என்றும் கூறுகிறது. **/

எல்லாம் சரி,One small request!! எதற்கும் குருமா சாரி திருமாவிடம் ஒருமுறை பேசி விடுங்கள் இல்லையெனில் ஒரு பொது குழு கூட்டி ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி விடுவார், ஆதி தமிழர் யார் என்று???