முனிக்கு இந்த வாரம் இட்லிவடை எழுதும் சுமார் கடிதம்.
அன்புள்ள முனி,
சௌக்கியமா ? அன்னிக்கு ஏன் ’உன்னை போல் ஒருவன்’ படம் பார்க்க வரலை ? சரி, படம் பார்த்தாச்சா ? நல்ல படம்.
இன்னொரு முறை பார்க்கணும். பருப்பு விலை போல டிக்கெட் விலை இறங்கிய பின் படம் பார்க்கலாம் என்று இருக்கேன். டிக்கெட் விலை எல்லாம் கன்னா பின்னா என்று இருக்கு. ’உண்மை தமிழன்’ தமிழனே இல்லை. படம் பார்க்க போய்விட்டு பிளாகில் டிக்கெட் வாங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். தமிழன் என்றால் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று ‘இந்தியன்’ மாதிரி படம் எடுக்கணும். ஆனால் பிளாக்கில் டிக்கெட் வாங்கிப்பார்க்கணும். என்ன இருந்தாலும் உண்மை தமிழனுக்கு தைரியம் ஜாஸ்தி. சும்மா பிளாக்கில மட்டும் பினாத்தாம, செயலில் காண்பித்துள்ளார். பினாத்தல் சுரேஷ் சொல்லுவது போல “திருட்டு விசிடிக்கும் தியேட்டர் காத்து ஓட்டறதுக்கும் வேற யாரும் காரணம் இல்லை” இந்த மாதிரி அதிக விலைக்கு டிக்கெட் விற்பதும் ஒரு காரணம் என்கிறார். உண்மை தான்.
படத்தில் டைட்டிலில் ’ஸ்ருதி ஹாசன்’ பெயர் வரும் போது நல்ல கைத்தட்டல். ‘வசனம் இரா.முருகன்’ வரும் போது கைத்தட்டலாம் என்று காத்துக்கொண்டிருந்த போது, அவர் பெயர் வரவில்லை. இரண்டாவது தடவை படம் பார்க்கும் போதாவது அவர் பெயர் இருக்குமா என்று பார்க்க வேண்டும். கடைசியில், படத்துக்கு காப்பி சப்ளையர், ஆட்டோ டிரைவர் போன்றவர்களின் பெயர்களுக்கு முன்னாடி ‘வசனம் இரா.முருகன்’ என்று ஓடுகிறது. ( பின்னனியில் “பரித்ராணாய சாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம் தர்ம ஸந்ஸ்த்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே" ).
கமல் ரசிகர்கள் மாமியாக இருந்தாலும், மாமாவாக இருந்தாலும் இதை கண்டிக்க வேண்டும். நமக்கு தெரிந்த ஒரு எழுத்தாளருக்கு தரும் மரியாதை இவ்வளவு தான்.
அப்பறம் சொல்ல மறந்துவிட்டேன். கமல்-50 விஜய் டிவியில் கோபிநாத் எல்லோரையும் அழைத்து பேசிக்கொண்டிருந்தார். அப்ப மனுஷ்ய புத்திரன் சொன்னது “கமலுக்கு இலக்கியத்தின் மீது ரொம்ப ஆர்வம், அவர் இலக்கியவாதியை தேடிச் செல்வார்....” நல்ல தமாஷ்.
தமாஷ் என்று சொன்னவுடன் சாரு பதில்கள் விகடனில் இந்த வாரம் நினைவுக்கு வருது. சில பதில்கள் மட்டும் இங்கே:ஏர் ஹோஸ்டஸாக ஏன் பெண்களை மட்டுமே நியமிக்கிறாங்க ?
“ஆண்கள் குனிந்தால் அழகாக இருக்காது.... “
சூப்பர் மேன் ஏன் பேண்டுக்கு மேல ஜட்டி போட்டுக்குறார் ?
செத்த கிளிக்கு கூண்டு எதுக்குன்னு நினைச்சிருக்கலாம்
பிராந்திக்கும் விஸ்கிக்கும் என்ன வித்தியாசம்
வித்தியாசம் தெரியாது, ஆனால் எனக்கு பிடித்தது பிராந்திதான் காரணம் முதல் ரெண்டு எழுத்து.
இது இந்த வார விகடனில் 100 பக்கம் ஸ்பெஷல். அதே விகடன் 72 ஆம் பக்கம் இந்த துணுக்கு செய்தி: “17.2.35 விகடன் இதழில் தாத்தா தாதா என்னும் தலைப்பில் டாக்டர் உ.வே.சாமி நாதய்யர் அவர்களின் 80வது பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி ஒரு நீண்ட கட்டுரை வெளியாகியுள்ளது. இதில்தான் ஔவையாருக்கு எப்படி ‘தமிழ்ப்பாட்டி’ என்ற பட்டம் பொருந்துமோ, அதுபோல தமிழுக்கு தாங்கள் செய்திருக்கும் தொண்டினால் ‘தமிழ்த் தாத்தா’ என்னும் பட்டம் தங்களுக்கு பொருந்தும்’ என்று உ.வே.சா அவர்களுக்கு பட்டம் கொடுத்து கௌரவித்திருக்கிறான் விகடன்”. சின்ன விகடனில் வந்த பெரிய செய்தி, பெரிய விகடன் வந்த சின்ன செய்தி. அடுத்த ஸ்பெஷல் நியூஸ் கேட்டாயா ? மு.க.அழகிரி மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய விரும்புவதாக சொல்றாங்க. அங்கே டில்லியில் இவர் ஏதாவது திட்டினாலும், மற்றவர்களுக்கு புரிவதில்லை. மற்றவர்களுக்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தி மட்டும் தான் தெரிகிறது. அதனால் தமிழ்நாட்டு அரசியலுக்கு திரும்புவதுடன், திருச்செந்தூர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடவும் அவர் விரும்புவதாக தெரிகிறது. ஆனால் கலைஞர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று சொல்லுகிறார்கள்.
டில்லிக்கு போனால் சாயம் வெளுத்துவிட்டது. சரி உங்க சாயம் என்ன என்று நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். உங்க பெயரை கொடுத்தால் உங்க கலர் என்ன என்று தெரியும். இங்கே
கமல் ரசிகர்களுக்கு ( உனக்கும் தான்) Match the following கேள்வி
மகாநதி - ஞானக்கூத்தன்
ஹேராம் - மா.வே.சிவகுமார்
தேவர்மகன் - கிரேஸி மோகன்
தசாவதாரம் - ராகி.ரங்கராஜன்
மேலே உள்ள கேள்விக்கு சிந்திக்க முடியாதவர்கள். கீழே உள்ள கேள்வியை சிந்திக்கலாம்.
“நமிதா உங்கள் மீது மோதினால் நீங்க தேங்க்ஸ் சொல்லுவீங்களா ? அல்லது சாரி சொல்லுவீங்களா ?”
இப்படிக்கு,
இட்லிவடை
பிகு: பதிவை படிக்க முடியாதவர்களுக்கு இட்லிவடை தரும் ஆடியோ பதிவு இங்கே
( ஒரு முறை இங்கே போய் பாருங்க பாஸ் http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/ )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, September 21, 2009
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 21-09-2009
Posted by IdlyVadai at 9/21/2009 03:42:00 PM
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Subscribe to:
Post Comments (Atom)
41 Comments:
கொஞ்சம் சுமாராகப் பேசினாலும், the passion with which shri Era Murukan spoke about உலகநாயகன் in கமலும் தமிழும் நிகழ்ச்சி was an evidence that he spoke from heart and also showed the respect he had for the professionalism of உலகநாயகன்.
உலக நாயகன் அந்த நிகழ்ச்சிக்கு பதிலுரையாக பேசியபோது சொன்ன "என் வசனகர்த்தாவை" பார்த்து பிரமித்தேன் என்பது உதட்டளவோடு என்பது இந்த டைட்டில் விஷயத்தில் நிரூபணம் ஆனது. ஸ்ருதி ஹாசன் பேரை முதலில் போட்ட உலகநாயகனுக்கு எழுத்தாளர் பெயரை போட ஏன் தோன்றவில்லை/மனம் வரவில்லை?
அனைத்து பத்திரிகைகளும் வசனகர்தாவைப் பாராட்டும் போது, இந்த remake படத்தில் முக்கிய இடம் வகிக்கும் வசனகர்த்தா கிட்டத்தட்ட இருட்டடிப்பு செய்யப் பட்டது கண்டிக்கத்தக்கது.
இதை படம் பார்த்து விமர்சனம் செய்த ஒரு வலை பதிவரும் எழுதாதது வருந்தத்தக்கது.
படத்தில் அழகிரி கலைஞரைக் கும்பிடுவது போலும், கலைஞர் அழகிரியை ஆசீர்வதிப்பது போலும் உள்ளதே?? மனிதனை மனிதன் வணங்குவது சுயமரியாதைக்கு இழுக்கு என்று பெரியார் கூறியுள்ளார்....அதேபோல் ஆசீர்வாதம் செய்வதில் பகுத்தறிவாளர்களுக்கு நம்பிக்கை உள்ளதா??
அழகிரி மாநில அரசியலுக்குத் திரும்பினால், கழகத்தில் நிச்சயம் ஒரு கலகம் விளையும். பொருத்திருந்து பார்க்கலாம்.
தசாவதாரம் படம் பார்த்த அனைவருக்கும் அதன் வசனகர்த்தா கிரேஸி மோகன் அவர்கள் என்பது தெரியும். ஆனால் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் என்று கமல் பெயரைத்தான் போட்டார்கள். (இது ஒரு உதாரணம்)
“நமிதா உங்கள் மீது மோதினால் நீங்க தேங்க்ஸ் சொல்லுவீங்களா ? அல்லது சாரி சொல்லுவீங்களா ?” என்னய்யா அநியாயமா இருக்கு? என் மேல நமீதா மோதினா நான் எதுக்குய்யா `ஸாரி` சொல்லணும்? அவங்க தானேயா மோதினாங்க? அவுங்க தானே ஸாரி சொல்லணும்?
இதனால் எல்லாம் முருகன் புகழ் மங்கி விடாது. அடுத்த படத்திற்கு வெயிட்டான பார்ட்டி அழைத்திருப்பதாகத் தகவல். குன்றத்திலே முருகனுக்குக் கொண்டாட்டம்.
அன்புடன்
குமரன்
IV, If ira.murukan is happy with Kamal and working with him so be it. Dont try to create a divide between murukan and kamal.
ஐயோ, ராமசந்திரா! கமல் ஏன் இரா. முருகனை சேர்த்துண்டார் தெரியுமா?
ஜூ வியிலும், ‘இலக்கிய’ பத்திரிகையிலேயும் கமலைப் போல உண்டா என்று புகழ் பாடுவதற்குதான்!--
அடுத்த படத்திற்கு வேறு ஒரு P.R. cum எழுத்தாளரை பிடித்துப் போட்டுக்கொள்வார்!
//IV, If ira.murukan is happy with Kamal and working with him so be it. Dont try to create a divide between murukan and kamal.//
Why should I ? I just pointed - as an artist Kamal should respect others work.
I can feel the pain Era.Mu would have felt when he did not see his name in the title.
I would not have brought up this issue if Sruthi Hasan name was also not shown in the title card.
I would endorse your comment Mr Idlyvadai. Well said.
If Mr Bigil Manickam's statement is true, then it is a shame on Dr பத்மஸ்ரீ உலகநாயகன் கமல்ஹாசன்.
//இதனால் எல்லாம் முருகன் புகழ் மங்கி விடாது. //
புகழ் வேறு அங்கிகாரம் வேறு. இரா.முருகனை கமலுக்கு (யாரோ) அறிமுகம் செய்த கூட்டத்தில் கமல் என்ன பேசினார் தெரியுமா ? “எழுத்தாளர்களை தமிழ் சமுதாயம் அங்கிகரிக்க வில்லை இவர்கள் அமெரிக்காவில் இருந்தால் இவர்கள் புகழ் வேறு எங்கோ போயிருக்கும்..” என்று youtubeல் அந்த பேச்சை கொஞ்ச நாள் முன் கேட்டேன். நீங்களும் கேட்கலாம்.
அன்பே சிவம் வசனம் - மதன் ஏன் அவர் பெயரை கடைசியில் போடாமல் முதலில் போட்டார் ?
இரா.முருகனை கமலுக்கு அறிமுகம் செய்தது யார்? LA திரு ராம் தான்தான் என்று கொஞ்ச நாள் முன்பு இங்கு பதிவிட்டு கொஞ்சம் விளக்கங்களும் அளித்து இருந்தார். ஆனால், உலக நாயகன் விஜய் டிவி ப்ரோக்ரம்மில் மறைந்த திரு சுஜாதாதான் அறிமுகப் படுத்தியதாக சொன்னாரே!!!
இட்லிவடை, நீங்களோ, அல்லது இட்லிவடை வாசகர்களோ தெரிந்தால் சொல்லுங்களேன!
IV,
Whatis this q idli mathan is kamal's ching chank murugu will be a ching chank in near future after getting intro to kamal itself his katturai was as if kamal was the only artise with technical and illakkya qualities (your old post) namba nattula orutharukku angeegaram kedaikkalana udane kalla vizharthu oru pazhakkam murugu will do that..
what is the big deal... Kamal ignoring technicians this is not the first time...
Muruguku ellatha kavalai namakku ethukku...
Enna oru kashtam intha padam nalla odina ithavechu u.nayagan pandra pantha thangamudiyathu..
Kamesh
Mahanadhi - Ra Ki Rengarajan
Devar Mahan - Ma Ve Sivakumar
He Raam - Gnanak Koothan
Dasavathaaram - Crazy Mohan
உங்கல் பதிவை பெண்களும் படிப்படத்தால் அதற்க்கு தகுந்தமதிரி ஜோக்ஸ் எழுதுவீர்களா?i mean sexual jokes about men?
உன்னைப்போல் ஒருவன் - பாட்டு இல்லாத, தனி காமெடி இல்லாம, ஹீரோயிசம் & மொக்கையான பஞ்ச் இல்லாம, லூசு மாதிரி வரும் ஹீரோயின் இல்லாம, காதல் இல்லாம, இரண்டு மானி நேரத்தில் ஒரு நல்ல படம்.
இது மாதிரி இன்னும் நிறைய படங்கள் வந்தால் நன்றாக இருக்கும்.
கமல் ஒரு கை தேர்ந்த வியாபாரி.அவரிடம் நேர்மையை எதிர் பார்க்க முடியாது.ஆரம்ப காலத்தில்,
சுஜாதாவையும் இப்படித்தான் exploit செய்தார் என்று சொல்ல கேள்வி!
//IV, If ira.murukan is happy with Kamal and working with him so be it. Dont try to create a divide between murukan and kamal.//
Even if both are happy,IV and we are not happy about this and so sharing our views.This film has more dependence on dialogues than on music and so due recognition should have been given accordingly in the credits.
சாரி சொல்லுவேன் :))
ஒரு டீமின் கேப்டனே எல்லா பந்துகளையும் ஆட வேண்டும் என்பதல்ல... எல்லாரையும் ஆட விட வேண்டும். மேன் ஆப் தி மாட்ச் யாருக்கும் கிடைக்கலாம். ஆனால் பெருமை கேப்டனுக்கு. அப்படித்தான் இந்தப் படத்திலும். மோகன்லால்தான் மேன் ஆப் தி மேட்ச். ஆனால் அந்தப் பெருமையில் கேப்டன் கமலுக்கே கணிசமான பங்கு போய் சேருகிறது
http://thatstamil.oneindia.in/movies/review/2009/09/19-unnaipol-oruvan-review.html
இந்த கமல் எப்போது திருந்தப் போகிறாரோ தெரியவில்லை. இரா. முருகன் பெயரை முதலிலேயே போட்டிருக்கவேண்டும்.
/***ஹரன்பிரசன்னா said...
இந்த கமல் எப்போது திருந்தப் போகிறாரோ தெரியவில்லை. இரா. முருகன் பெயரை முதலிலேயே போட்டிருக்கவேண்டும்.***/
இதெல்லாம் ஒரு குற்றமா????
சந்தான பாரதி பெயர் முதலில் போட்டிருக்க வேண்டும் என்று ஒருவர் சொல்லுவார்!!
இட்லி வடை,
இது தற்செயலாக நிகழ்ந்த ஒரு நிகழ்வாகவே தோன்றுகிறது.இதைப் பெரிசுபடுத்த வேண்டாமே? கமல் இதைத் திட்டமிட்டு செய்ததாகத் தோன்றவில்லை.மேலும், உன்னைப்போல் ஒருவன் பட அறிவிப்பு வந்ததிலிருந்து முருகன் தான் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார் என எல்லாருக்கும் தெரியும்.
உங்களுக்கு நிஜமாகவே இலக்கியவாதிகளுக்கு அங்கீகாரம் இல்லை என்ற கோபமா அல்லது இதைக் கமல் செய்ததால் கோபமா?
நல்ல இலக்கியவாதிகளுக்கு சினிமாக்காரர்களிடம் ஏன் அங்கீகாரம் எதிர்பார்க்கிறீர்கள்?
For someone who has sold his soul (read his Kamal thuthi in recent times!), this is a small slight.
உண்மைத்தமிழன்:
அடப் போங்கப்பா.. ஒரே அக்கிரமமா இருக்கு..!!!
விஜய்:
ண்ணா... விடுங்கண்ணா... நாம வேட்டைக்காரன் பார்க்கலாம். நான் உங்களுக்கு 100 ருபாய் தர்றேன். தியேட்டேர்-லயும் யாரும் இருக்க மாட்டாங்க. pls வாங்கண்ணா
எவ்வளவோ பண்றோம் இதை பண்ண மாட்ட்டோமா?
உண்மைத்தமிழன்: அடப்பாவி... என்னைய காப்பாத்துங்க. 500 தர்றேன். பிளாக்ல டிக்கெட் கொடுங்க சாமி....
கமல் படம் வந்தாலே எங்கே ஓட்டை என்று கண்டுபிடிக்க மட்டுமே ஒரு கூட்டம் அலைகிறது. கடந்த கால் நூற்றாண்டாகவே எங்கே எப்படி ஓட்டை கண்டுபிடிப்பது என்று கமல் படம் பார்த்துதான் இவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.
இட்லிவடை ஓவர் உணர்ச்சிவசப்பட்டு அலசி ஆராய்ந்து இந்த தப்பை கண்டுபிடித்தார் ஆனால் ஒரு இடத்தில் கோட்டை விட்டார். மூன்றுக்கு ஒன்று இந்து தீவிரவாதி என்று வைத்து தன்னை செக்க்யூலர் என்று கமல் காட்டிக்கொண்டார் என்று இந்த புண்ணாக்குமூட்டை எழுதியிருந்தது ஆனா ஒரிஜினலிலும் கூட அச்சுஅசலாக இப்படித்தான் இருக்கும். அங்கும் ஒரு லாலா உண்டு!!
இது போல குற்றம் கண்டுபிடிக்கும் நக்கீரர்களுக்கு இந்த லிங்க் சமர்ப்பணம்!!!
http://10hot.wordpress.com/2009/09/21/unnai-pol-oruvans-lurking-messages-what-are-the-hidden-themes-from-kamal/
idlyvadai too shud be added in this
IV SAID:இரா.முருகனை கமலுக்கு (யாரோ) அறிமுகம் செய்த கூட்டத்தில் கமல் என்ன பேசினார் தெரியுமா ? “எழுத்தாளர்களை தமிழ் சமுதாயம் அங்கிகரிக்க வில்லை இவர்கள் அமெரிக்காவில் இருந்தால் இவர்கள் புகழ் வேறு எங்கோ போயிருக்கும்..” என்று youtubeல் அந்த பேச்சை கொஞ்ச நாள் முன் கேட்டேன். நீங்களும் கேட்கலாம்.
அதே கூட்டத்தை பற்றி LA RAM எழுதியது:சற்றும் எதிர்பாராமல் இணைய நண்பர்கள் இரா. முருகன், ஜெர்மனி கண்ணன் போன்றோரைச் சந்தித்தேன். அதுவும் மத்தளராயருக்கு அடுத்த சீட்டிலேயே நான் அமர்ந்திருந்தும் அவரால் என்னை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்பது வேடிக்கையாக இருந்தது. கிரேஸி மோகன், "என்னங்க, நம்ம எல்லே ராமைத் தெரியலியா?" என்று மீண்டும் மீண்டும் கேட்க, இராமுரு பேய் முழி முழித்துப் பின் ஆனந்தக் கூத்தாடாத குறையாக என் கையைப் பிடித்தபடியே இருந்தார். "ஒழுங்காக ஈமெயில் படித்திருந்தால் நான் வருவது தெரிந்திருக்குமல்லவா?" என்று நான் அவரை ரேக்கிக் கொண்டிருந்தேன்.
---
LA Ram யெ இராமுக்கு அடையாளம் தெரியலெ. அப்புறம் இவர் வந்து கமலுக்கு அறிமுகம் செய்தாராம்.
என்னமோ இரா.முருகன் சிலப்பதிகாரம் படைத்தது போல பம்மறீங்களே! இந்த படத்தின் வசனங்கள் 90% ஹிந்தி படத்தின் தமிழாக்கம். முருகனுக்கோ ஹிந்தி (சரி வர) தெரியாது. கமலுக்கு தான் சொல்லி வசனம் எழுத ஒரு ஸ்டெனோக்ராஃபர் தேவைப்பட்டது. முருகனை யூஸ் பண்ணிகிட்டார். அவர் செஞ்ச வேலைக்கு இந்த அளவு டைட்டில் போட்டதே அதிகம்.
வேற ஏதாவது புதிய பட்த்தில் இரா.முருகன் ஒரிஜினலாக வசனம் எழுதட்டும். பிறகு பார்ப்போம்.
முருகன் ரொம்ப ஓவரா கமல் துதி பாடி ‘ க்ளைமாக்ஸிலே வசனம் பேசி திடீல்னு ஒரு action பண்ணாரு பாருங்க! அதுதான் defining Moment of the film' அப்படின்னு எழுதினாரேன்னு போய் பார்த்தால் ஒரு மண்ணும் இல்லை. கமல் ஏதோ நெட்டி முறிக்கறாரே அதுதான் defining Momentஆ! முருகப்பெருமானே! உங்க ஜிங் சக்குக்கு ஒரு எல்லையே இல்லையா. ஆனா ஒண்ணு! நிச்சயம் சினிமாவில பொழச்சுப்பீங்க!
...LA Ram யெ இராமுக்கு அடையாளம் தெரியலெ. அப்புறம் இவர் வந்து கமலுக்கு அறிமுகம் செய்தாராம்.....
உதார் விட்டவர் எழுதியதை தேங்காய் மாதிரி போட்டு உடைத்து அவரின் சாயத்தை வெளுக்கச் செய்த மாலி நடராஜன், நீர் பெரிய ஆள்தான் ஐயா!
/***கமல் படம் வந்தாலே எங்கே ஓட்டை என்று கண்டுபிடிக்க மட்டுமே ஒரு கூட்டம் அலைகிறது. கடந்த கால் நூற்றாண்டாகவே எங்கே எப்படி ஓட்டை கண்டுபிடிப்பது என்று கமல் படம் பார்த்துதான் இவர்கள் அறிந்துகொள்கிறார்கள். ***/
இதையெல்லாம் கூட மன்னித்துவிடலாம், படங்களில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடிக்கிறார்களே என்று!!! படமே ஓட்டையாக இருப்பதை தலையில் வைத்து ஆடுவார்கள்!! அதை என்னவென்று சொல்ல?? உதாரணம் நான் சொல்ல வேண்டுமா என்ன?? அனைவருக்கும் நன்றாக தெரியும்.
/***Anonymous said...
...LA Ram யெ இராமுக்கு அடையாளம் தெரியலெ. அப்புறம் இவர் வந்து கமலுக்கு அறிமுகம் செய்தாராம்.....
உதார் விட்டவர் எழுதியதை தேங்காய் மாதிரி போட்டு உடைத்து அவரின் சாயத்தை வெளுக்கச் செய்த மாலி நடராஜன், நீர் பெரிய ஆள்தான் ஐயா!
****/
எனக்கு யார் உண்மை பேசறாங்க யார் பொய் பேசறாங்கனே தெரியல கடவுளே (இருந்தா!!) என்னை காப்பாற்று! என்ன ஆனால் என்ன கடையில் இட்லி நன்றாக வேகிறது.
/***டகிள் பாட்சா said...
என்னமோ இரா.முருகன் சிலப்பதிகாரம் படைத்தது போல பம்மறீங்களே! இந்த படத்தின் வசனங்கள் 90% ஹிந்தி படத்தின் தமிழாக்கம். ***/
நீங்க யாருக்கே துதி பாட முயற்சி செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். விடுங்கள் முருகன் கமல் துதி பாடிவிட்டு போகட்டும்.
http://losangelesram.blogspot.com/2008/03/2.html
திரு மாலி நடராஜன் கமெண்ட் பார்த்து அமெரிக்கா சென்று இந்தப் பதிவைப் பார்த்தேன், சற்றுமுன். திரு ராம் அவர்கள் உண்மைதான் சொல்லி இருக்கார் இதிலே. :-D
@டகிள் பாட்சா
திரு rahul சொன்னது போல், நீங்கள் திரு முருகனை தொடர்ந்து கீழ்த்தரமாக விமர்சிப்பது யாரை சந்தோஷப்படுத்த? நீங்களும் ஒரு எழுத்தாளர்தானே? முன்னாள்/இந்நாள் பத்திரிகையாளர்தானே?
பிறகு ஏன் இந்த வேலை?
/***டகிள் பாட்சா said...
என்னமோ இரா.முருகன் சிலப்பதிகாரம் படைத்தது போல பம்மறீங்களே! இந்த படத்தின் வசனங்கள் 90% ஹிந்தி படத்தின் தமிழாக்கம். ***/
மறந்துவிட்டேன்!!!
இரா.முருகன் படைத்தது சிலப்பதிகாரம் அல்ல கம்பராமாயணம் போன்ற மொழி பெயர்ப்பு. கம்பர் கூட 100% தமிழாக்கம் தான் செய்தார்.
ஐயன்மீர்
எனது நோக்கம் சத்தியமாக இர.முருகனை தாழ்த்தி பேச வேண்டுமென்பதல்ல. I think many of you have misunderstood. எல்லோரும் சேர்ந்து அவருக்கு கொம்பு சீவி அவர் சினிமா careerஐ கெடுக்கிறார்களே என்ற ஆதங்கம்.
நான் மாணவப் பருவ ரிப்போர்டராக இருந்தபோது எழுத்தாளர் பாலகுமாரின் தீவிர ரசிகன். அவரிடம் ஒருமுறை “ சிந்து பைரவி கதையும் வசன்மும் உங்களதுதானே. ராவும் பகலும் நீங்கள் சிரமப்பட்டு எழுதினீர்களே! கடைசியில் உஙளை இருட்டடிப்பு செய்து விட்டு பாலச்சந்தர் எல்லா creditஐயும் எடுத்துக்கொண்டுவிட்டாரே” என்று ஆத்ங்கத்துடன் கேட்டேன்.அதற்க்கு அவர் சிரித்த படி “நீங்க ரொம்ப சின்னப் பையன். எழுத்துலகம் வேறு! சினிமாவுலகம் வேறு! பத்திரிக்கையில் நான் எழுதும்போது எல்லா பெயரும் புகழும் எனக்கே கிடைக்கும். சினிமா என்பது கூட்டு முயற்சி. நான் வசன்ம் எழுதினாலும் அதில் பல பேரின் reviewவும், ஆட்சேபங்களும், correctionம், inputம் இருக்கும். நான் எழுதியவை எல்லாமே மாறுதலின்றி அப்படியே படமெடுக்கப்படுவதில்லை. இது எனக்கு மட்டுமல்ல. எல்லா எழுத்தாளர்களுக்கும் இங்கு நிகழ்வது. ‘மீண்டும் கோகிலா’ படத்தில் கதை இலாகாவில் நானும் ஒருவன். அதில் சில சீன்களை எழுதியிருக்கிறேன். உதாரணமாக குழந்தை ஊஞ்சலை ஆட்டி ஸ்ரீதேவி தலையில் இடிக்க அவர் கணவன் மேலுள்ள கோபத்தை குழந்தையிடம் வெளிப்படுத்தும் சீன். அதற்க்கு எல்லோரிடமும் வரவேற்பு. அதற்க்காக என்னை வசனகர்த்தா என்று போட முடியுமா. சிந்து பைரவி நான் எழுதியதுதான். ஒரு உதாரணம் சொல்றேன். நீங்க ஒரு கம்பெனியில் ஜூனியர் சேல்ஸ் எஞ்சினீயர். பல லட்சம் பெருமான ஆர்டர் பெற்றதில் உங்களுக்கு பெரும் பங்கு என்றாலும் major credit உங்கள் sales Manager க்குதானே போய் சேருகிறது! உங்களுக்கு மேனஜரிடம் பாராட்டும் incrementம் கிடைக்கிற வரையில் சந்தோஷம்தானே! அதைவிட்டு மேனஜர் உங்கள் creditஐ திருடிவிட்டார் என்று பேச ஆரம்பித்தீர்களானால் உஙக career க்ளோஸ்! சினிமாவும் அது போலத்தான். எழுத்துலகில் பெரும் பெயரும் புகழும் பெற்று வந்தாலும் சினிமாவுலகில் நான் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வவோ இருக்கிறது. நானே கவலைப்படாத போது நீஙள் ஏன்? இதை இத்தோட விட்டுடுங்க! பப்ளிஷ் செஞ்சு என் career ஐ கெடுத்துடாதிங்க” என்ற் மனப்பக்குவத்துடன் அவர் சொன்ன அதில் என்னை ஆச்சரியப்பட வைத்தது. இவர் ஒரு ஏமாளி என்று அப்போது எனக்கு தோன்றியது.
அவர் அன்று அப்படி practical ஆக நினைக்கவில்லை என்றால் இன்னமும் ராயப்பேட்டையில் ஒண்டுக்குடித்தனத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்திருக்க வேண்டியதுதான். இன்று சொந்த வீடு, கார், புகழ் என்று சகல வசதிகளோடு அவர் இருப்பதற்க்கு காரணம் he knew the reality.
இந்த நிலை கோமல் ஸ்வாமினாதன், விசு, க்ரேசி மோகன் .. ஏன் சுஜாதாவிற்கு கூட ஏற்பட்டிருக்கிறது. இரா.முருகன் ரொம்ப lucky என்று சொல்லுவேன். TV coveragem, ஊடகண்க்களில் publicityயும் கமல் தயவால் அவருக்கு கிடைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை. இதை மூலதனமாக வைத்து அவர் பல புதிய படங்களுக்கு கதை வசனமெழுத வாய்ப்புகள் நிச்சயம் தேடி வரும்.
அதனால்தான் சொல்கிறேன் இரா.முருகனுக்கு அல்வா கொடுக்காதீர்கள் என்று. பாவம் அவர் பிழைத்துவிட்டு போகட்டும்!
ராகுல்
அடேங்கப்ப்ப்ப்ப்பா! முருகன் கமலுக்கு தட்டுய ஜால்ராவ விட நீங்க முருகனுக்கு தட்டற ஜால்ரா ரொம்ப பெருசுதாங்கோய்! முருகனை கம்பரோடு ஒப்பிடும் நீர்
1. சும்மா வலைத்தளங்களில் வந்து மற்றவர்களை வெறுப்பேற்றி மகிழ்பவராக இருக்க வேண்டும் அல்லது
2. ராகுல் என்ற புனைபெயரில் எழுதும் இரா.முருகனோ?
/****டகிள் பாட்சா said...
ராகுல்
அடேங்கப்ப்ப்ப்ப்பா! முருகன் கமலுக்கு தட்டுய ஜால்ராவ விட நீங்க முருகனுக்கு தட்டற ஜால்ரா ரொம்ப பெருசுதாங்கோய்! முருகனை கம்பரோடு ஒப்பிடும் நீர்
1. சும்மா வலைத்தளங்களில் வந்து மற்றவர்களை வெறுப்பேற்றி மகிழ்பவராக இருக்க வேண்டும் அல்லது
2. ராகுல் என்ற புனைபெயரில் எழுதும் இரா.முருகனோ?***/
முருகனை பார்ததது கூட கிடையாது சார், என்ன தான் அவர் ரீமேக் படத்திற்கு வசனம் எழுதியிருந்தாலும் அவரை நீங்கள் இந்த அளவுக்கு கீழ்தரமாக விமர்ஸிக்க கூடாது, அவர் நண்பனுக்கு துரோகம் செய்தால் அது வேறு திறமை வேறு, தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். உண்மையில் யாரையும் யாருடனும் ஒப்பிட முடியாது, கம்பரை ஏன் கூறினேன் என்றால் கம்பரையும் அவருடைய சம காலத்தில் இப்படி ஏதாவது விமர்சித்திருக்கலாம் என்ற சிந்தனையில் எழுதினேன் (உண்மையும் கூட!!). ஒரு படைப்பாளியின் படைப்புக்காக நான் வாதித்தேன் அவருடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அல்ல!!!
என்னதான் மொழிபெயர்ப்பு செய்திருந்தாலும் வசனங்கள் என்னை கவர்ந்த காரணத்தாலே இந்த பின்னூட்டங்கள்!!! அவருடைய வசனங்கள் பிடித்ததால் கண்ணை மூடிக் கொண்டு ரொம்ப நல்லவர் என்று நான் சொல்ல மாட்டேன் ஏனென்றால் எனக்கு அவரைப்பற்றி தெரியாது!! தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.
/***1. சும்மா வலைத்தளங்களில் வந்து மற்றவர்களை வெறுப்பேற்றி மகிழ்பவராக இருக்க வேண்டும் அல்லது***/
மன்னிக்கவும், இது உங்கள் வேலை... சாட்சி உங்களுடைய பின்னூட்டங்கள்,
அடுத்தவருடைய மனதை எந்த அளவு வெறுப்பெற்ற முடியும் என்பதற்கு தக்க உதாரணம் உங்கள் பின்னூட்டங்கள்.
http://losangelesram.blogspot.com/2009/08/blog-post_12.html
/***2. ராகுல் என்ற புனைபெயரில் எழுதும் இரா.முருகனோ?***/
எனக்கு உங்களை போல போலி அல்லது டம்மி பெயரில் வந்து பேச தெரியாது!!!
ஓய், டிவிட்டை சுட்டுப்போட்டா க்ரெடிட்டு டெபிட்டு எல்லாம் குடுக்கமாட்டீரா? ஸ்மைலி ஸ்மைலி ஸ்மைலி ஸ்மைலி
ராகுல்
என் வாதமெல்லாம்
1. வசனங்கள் கமலாலோ வேறு யாரோலோ wednesday ஹிந்தி படத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டவை. இதற்க்கு இந்த அளவு credit போதாதா?
2. ஹிந்தி தெரியாத இரா.முருகன் மொழிபெயர்ப்பில் என்ன contribute செய்திருக்க முடியும்? அவர் செய்த டைப்பிஸ்ட் வேலைக்கு இந்த credit ஏ அதிகம். கூட free publicity வேறு.
கமலை அருகில் இருந்து கவனித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அவரே வசனம், திரைக்கதை, டைரக்ஷன் போன்றவற்றில் பெருமளவு contribute செய்திருந்தாலும் மற்றவருக்கு credit தருபவர். பல எழுத்தாளர்களை சினிமாவுக்கு கொண்டு வந்து அவர்கள் வேலை கற்கவும் நன்கு சம்பாதிக்கவும் காரணமாயிருந்தவர். மற்ற பட கம்பெனிகளிலோ, டைரக்டரிடமோ இதை எதிர்பார்க்க முடியாது.
பாலகுமாரன் சொன்ன விஷயத்தை எழுதியிருந்தேன். அதை படிக்காமல் விட்டுவிட்டீர்களோ! படித்திருந்தால் என் நியாயம் புரியும்
டகிள் : நீர் வாய்ச்சவடால் எல்லேராமுக்கே சொம்பு தூக்கும் போது அதே வேலையை நிசமாகவே ஸ்டஃப் உள்ள இரா முருகனுக்கு நாங்கள் செய்யக் கூடாதா?
/**டகிள் : நீர் வாய்ச்சவடால் எல்லேராமுக்கே சொம்பு தூக்கும் போது **/
100% correct.
Post a Comment