பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 02, 2009

நச் பூமராங் 2-9-2009

பத்து நச்(?) பூமராங்...

1. புதுச்சேரி கவர்னருக்கு சப்பாத்தியுடன் வழங்கப்பட்ட பருப்பில், குக்கரில் பயன்படுத்தப்படும், வெய்ட் கிடந்துள்ளது. அதைப் பார்த்து கவர்னர் அதிர்ச்சி அடைந்தார். - செய்தி

கவர்னர் டயட்டில் இருக்கும் போது வெயிட் போடலாமா ?

2. ஓணம் பண்டிகைக்கு தமிழகத்தில் விடுமுறை ஏன்? கலைஞர் விளக்கம் - செய்தி

விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் அப்படியே ஒரு விளக்கம் சொல்லுங்க பார்க்கலாம்!

3. கந்தசாமி பார்க்க வரும் குழந்தைகளுக்கு கோழி மாஸ்க்! - செய்தி

அப்படியே பெரியவங்களுக்கு கண்ணை கட்டிக்கொள்ளும் மாஸ்க் கொடுத்திருக்கலாம்.

4. பிங்க் கலர் பிடிக்கும் பெண்கள் ஹான்ஸ்டாக இருப்பார்கள் - ஆய்வு

ஹான்ஸ்ட் ஆண்களுக்கு எந்த 'கலர்' பிடிக்கும் என்று பச்சையா கேட்கணும்.

5. ராகுலுடன், நடிகர் விஜய் சந்தித்து பேசினார்

அப்ப உண்மையான வேட்டைக்காரன் ராகுல் காந்தி தான்.

6. டில்லியில் அடுத்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடப்பதால், பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக தலைநகரை மாற்ற டில்லி மாநில அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. - செய்தி

இந்தியாவின் கடனை நினைத்தால் எல்லோரும் பிச்சைக்காரர்கள் தான் என்கிறார் பொதுஜனம்.

7. முதல்வர் மாமல்லபுரத்தில் ஓய்வு - செய்தி

பொன்னர் சங்கர் கதை வசனம் எழுத என்று வெளிப்படையா சொன்னால் நாங்க கோவிச்சிக்க போறோமா ?

8. வசூலில் சிவாஜியை மிஞ்சியது கந்தசாமி - செய்தி

சிவாஜி (தயாரிப்பாளர்) வாயில் ஜிலேபி, கந்தசாமி (தயாரிப்பாளர்) வாயில் பஞ்சாமிருத அல்வா

9. ஆண்களில் யாரும் எனக்கு அண்ணன் இல்லை. எல்லோரும் மச்சான்தான். - நமிதா

நீங்களும் எங்களுக்கு மச்சினிச்சி தான்

10. விரிவான தொழில்நுட்ப நிபுணர்களுடன் மீண்டும் தேர்தல் கமிஷனை அணுகி, மின்னணு ஓட்டு இயந்திரத் தில் தவறு செய்ய முடியும் என்பதை நிரூபிப்போம் - ராமதாஸ்

ஐயா நீங்க இன்னும் தமிழ் நாட்டில் தான் இருக்கிறீர்களா ?

14 Comments:

Anonymous said...

மெய்யாலுமே "நச்"தான்!!!!!
இட்லிவடை அடங்க மாட்டாரு, அது "நிச்"சயம்!!

******************************
jaisankar jaganathan said...
//மானஸ்தன் - ரொம்ப அருமையான இட்லி ரசிகர். கோபம் வந்தால் முதல் ஆளா கமெண்ட் பண்ணுவார். ரொம்ப கோபம் வந்தால் கமெண்ட் பண்ற மத்தவங்களுக்குள்ள கொளுத்தி போடுவார்.
//
இட்லிவடை மானஸ்தனை சீண்டிப்பார்க்கிறது. அண்ணன் மானஸ்தன் எங்க
*****************************
வந்தாச்சு வந்தாச்சு....:-D

September 02, 2009

IdlyVadai said...

//வந்தாச்சு வந்தாச்சு....:-D - மான்ஸ்தன்//

ரிட்டையர் ஹர்ட் ஆனவருக்கு இது எஸ்டரா காஜி

கிருஷ்ண மூர்த்தி S said...

அப்ப மெய்யாலுமே மாநஸ்தநை சீண்டி, ரிடயர்ட்=ஹர்ட் ஆகுற வரைக்கும் உடப்போறதில்லையா, இவ?

இது என்ன, புது வெளையாட்டு?

கௌதமன் said...

இ . வ - சூபர்ப் ஷாட்ஸ் - சுந்தர் ஷாட்ஸ்!
பஹுத் அச்சாஹை! (கபில் அய்யா சொன்னதால இந்தி)
பத்து பந்துகளில் - அறுபது ஓட்டங்கள் - அளித்துவிட்டோம்!
மேலும் தொடரட்டும் - நல்லாட்டம்!

Vikram said...

//ரிட்டையர் ஹர்ட் ஆனவருக்கு இது எஸ்டரா காஜி//

IV,
chinna karuthhu pilai - "out" aanavangallukku thaan "extra gaaji"

"retired hurt" aanavanga - udambum ullamum nalla irrundha - eppo vena aatathulla sendhukalam

manasthan - "nee kallakku chittaaapu" ;-)

Unknown said...

Arumai Arumai..

Kamesh

Anonymous said...

தனபாலு த ப ச்சை இட்லி வடை, இதென்னப்பா விளையட்டு?

கிரி said...

:-))))))

Anonymous said...

///கிருஷ்ணமூர்த்தி said...
அப்ப மெய்யாலுமே மாநஸ்தநை சீண்டி, ரிடயர்ட்=ஹர்ட் ஆகுற வரைக்கும் உடப்போறதில்லையா, இவ?

இது என்ன, புது வெளையாட்டு?///

கிருஷ்ணமுர்த்தி அண்ணா! ஒங்களுக்கு இன்னும் வசயு ஆகல, இதெல்லாம் புரிய!!! இப்போதான் நீங்க 55. அதுனால "வெயிட் அண்ட் வாட்ச்"!!! :-D

Mathew Hayden peak-ல இருந்த போது அவர அவரோட ஊருலேந்து பிரிச்சு சென்னை சூபர் கிங்க்ஸ்ல பிடிச்சுப் போடலியா????!!!!

:-D :-P :-)

Erode Nagaraj... said...

//ஹான்ஸ்ட் ஆண்களுக்கு எந்த 'கலர்' பிடிக்கும் என்று பச்சையா கேட்கணும். //
இட்லிவடை.. ஹானஸ்ட் ஆணா (அ) hornyest ஆணா?

Erode Nagaraj... said...

மானஸ்-ஆவது ரிடயர்ட் ஹர்ட் ஆகுறதாவது... ஓட மாட்டார்.. நின்னு வெளையாடுவார்..

SUBBU said...

அந்த 9 மட்டுந்தான் நச் :))))))))))

Swami said...

YSR is dead though now.. May his soul rest in peace.. Madhavrao Sindhia, Sachi Pilot and now YSR - sure loss for congress party. BJP would have certainly be different if Pramod Mahajan was alive. You can saw the same about YSR atleast in the context of AP i guess

சீனு said...

Idly vadai Chutney (touch)...