இந்த வார இரண்டு செய்திகள்...
செய்தி # 1வள்ளுவர்சிலை போலவே முதல்வர் கருணாநிதி செய்த ஒரு நல்ல காரியம்
ஆண்,பெண் அடுத்ததாக திருநங்கை என்று ஒரு பாலினத்தை உருவாக்கியதோடு,
அவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் இடஒதுக்கிடு தரவேண்டும் என்று அறிவித்துஇருந்தார். மேலும், திருநங்கைகளுக்கு தனியாக நலவாரியம் அமைத்துதருவதாக உறுதி அளித்திருக்கிறார்.
மகாபாரதத்தில் யாராலும் வெல்ல முடியாத பீஷ்மரை வீழ்த்திய சிகண்டி ஒரு திருநங்கை,டெல்லி முதல் கன்னியாகுமரி வரை வெற்றிஉலா வந்த ஒவுரங்கசீப்பின் படைத்தளபதி மாலிக்காபூர் ஒரு திருநங்கை, மகாபாரதத்தில் ஒரு கட்டத்தில் அர்ஜுனன் 'பிருகன்னளை' என்று வாழ்வதாக படித்திருக்கிறேன். (இந்த இடம் குறித்து பின்னூட்டத்தில் விளக்குமாறு திரு.ஈரோடு நாகராஜ் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்)
விழுப்புரம் அருகே கூவாகம், கடலூர் அருகே கொத்தட்டை மற்றும் திருச்சி - சென்னை சாலையில் உள்ள எலவனாசூர்கோட்டை ஆகிய இடங்களில் பழமையான 'அரவான்' கோவில்கள் உள்ளன.
இப்படி பண்டைய காலங்களில் திருநங்கைகளுக்கு கிடைத்த மரியாதையும், கவுரவமும் இன்று நாகரிகம்,கல்வி அதிகரித்துவிட்ட இந்த காலத்தில் கிடைத்திருக்கிறதா? நாம் அவர்களை எப்படி நடத்துகிறோம்?
எந்நேரமும் கெட்டவார்த்தைகளை பேசிக்கொண்டு, வாயில் பான்பராக்கோடு, மது
வாடையோடு பாலியல் தொழிலில் உழலும் அவர்களின் பரிதாப நிலைக்கும் காரணம்
நம் சமுகத்தின் அணுகுமுறையும், பார்வையும்தான்.
"தெருபசங்க சும்மா விட மாட்றாங்கபா" என்று போதையில் அழுத திருநங்கையை ஒரு தியேட்டரில் பார்த்துஇருக்கிறேன்.
இவர்கள் ஒரு வருடத்தில் சந்தோஷமாக இருப்பது ஒரு நாள் மட்டுமே. அது கூவாகத்தில் வருடந்தோறும் நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழாதான்.
இத்தைகைய அவலமான வாழ்க்கைமுறையில் இருந்து விலகி, கைதட்டி பிசைஎடுப்பவர்களுக்கு முன்னுதாரனமாய்,தன்னம்பிக்கையோடு சுய தொழில் தொடங்கி இருக்கிறார்கள் சில திருநங்கைகள்.
சேலம் சோனா கல்லூரி அருகே "மென்மை பல்சுவை இட்லி சென்டர்" என்ற இட்லிக் கடையை திருநங்கைகள் தொடங்கி இருக்கிறார்கள்
இங்கு இட்லிக்கு 4 வகையான சட்னி, சாம்பார் வழங்கப்படுகிறது. 4 இட்லி 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கையுறை அணிந்து சுகாதாரமாக திருநங்கைகள் உணவு பரிமாறுவதால், இந்த புதிய கடைக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்தனர்.
இது குறித்து, தாய் விழுதுகள் அறக்கட்டளை சேலம் மாவட்ட தலைவர் கோபிகா கூறியது:
"இட்லிக் கடைக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட மக்கள் அதிக ஆதரவு அளித்துள்ளனர். காலை 6 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணியில் இருந்து இரவு 10.30 மணி வரையும் கடை செயல்படும்.
மாலையில், மஸ்ரூம் இட்லி, பன்னீர் இட்லி, கீரை இட்லி, கேரட் இட்லி, வெஜிடபிள் இட்லி என பலவிதமான புதிய இட்லி ரகங்களை அறிமுகம் செய்ய உள்ளோம்.
சமூகத்தில் மற்றவர்கள் ஏற்கும்படியான வாழ்க்கை நடத்த திருநங்கைகள் விரும்புகின்றனர். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்" என்று கோபிகா கூறினார்.
யார் நேர்மையாக உழைத்து சுயமாக சம்பாதிக்க வேண்டும் என முடிவு செய்தாலும்
நாம் பாராட்ட வேண்டும். சமுகத்தால்/சமுகத்தில் ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட திருநங்கைகள் அப்படிப்பட்ட நல்முயற்சியை தொடங்கி இருப்பதை நாம் வாழ்த்து கூறி வரவேற்ப்போம்.
பொதுஇடங்களில் ஊனமுற்றவர்களுக்கு கிடைக்கும் பரிதாபபார்வை கூட கிடைக்க பெறாமல், அருவருத்து ஒதுக்கப்படும் அவர்களும் நம்மை போல உணர்வு கொண்ட மனிதர்கள்தான் என்று உணர்ந்து கொள்வோம்.
திருநங்கைகளை மனிதர்களாய் மதிப்போம்;மனிதர்களாய் இருப்போம்.
செய்தி # 2ஒரு சென்சிடிவான விஷயத்தை பத்தி எழுத போகிறேன். சென்சிடிவ் என்றவுடன் நானும் பிராமணர்களை கிண்டல் செய்யப்போகிறேன் என்று நினைக்க வேண்டாம். அதைபோன்ற, கருணாநிதி மற்றும் இட்லிவடை வகையறாக்களிடம் உள்ள 'முற்போக்கு' சிந்தனைகள்(?) என்னிடம் அறவே இல்லை.ஒருவேளை, இந்து மதத்துடன் பிற மதங்களையும் 'காம(ம்)டி' செய்யும் தைரியம் எனக்கு வரும்போது நானும் அப்படி எதாவது 'முற்போக்காக' எழுதுவேன்.
நான் சொல்லப்போவது செக்ஸ் பற்றிய ஒரு கருத்துக்கணிப்பு மற்றும் அதுகுறித்தான என் கருத்துக்கள்.
ஆங்கில தொலைக்காட்சி ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பில் வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை என்று 63 சதவீத இளைஞர்கள் கூறியுள்ளனர். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் “கற்பு” பிரதான ஒன்றாக கருதப்படுகிறது. ஆணுக்கோ, பெண்ணுக்கோ, கற்பு முக்கியமானது என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இப்போதெல்லாம் கற்பா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு நகரங்களில் நிலைமை மோசமாகி வருகிறது. இந்த நிலையில் கற்பு தொடர்பாக ஆங்கில சானல் ஒன்று இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தி உள்ளது.
அதில் இளைஞர்களிடம் உங்கள் வருங்கால மனைவி கற்புடையவராக இருந்திருக்க வேண்டுமா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்தவர்களில் 63 சதவீதம் பேர் வருங்கால மனைவி கற்போடு இருந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்றனர். 37 சதவீதம் பேர் மட்டும் கற்புடைய பெண்ணே மனைவியாக வரவேண்டும் என்றனர்.
ஆணோ, பெண்ணோ திருமணத்துக்கு முன்பே உறவு வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று 37 சதவீதம் பேர் கூறினார்கள்.
லக்னோவை சேர்ந்த நேகர்பர்த் (வயது 28) என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் கூறும் போது “ஒரு பெண்ணுக்கு நல்ல குணம் முக்கியமானது. ஆனால் நல்ல குணத்துக்கும் கற்புக்கும் சம்பந்தம் கிடையாது” நமக்கு யார் பொருத்தமானவள் என்று தான் பார்க்க வேண்டுமே தவிர அவள் கற்போடு இருக்கிறாளா? என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
அங்கீதாசர்மா (24) என்ற இளம் பெண் கூறும் போது, “திருமணம் செய்ய உள்ள மாப்பிள்ளையை அவர் கற்போடு இருக்கிறாரா? என்று சோதனை நடத்த முடியாது. எனது கற்பு பற்றி கேள்வி எழுப்புபவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்றார்.
லக்னோவை சேர்ந்த மகப்பேறு மருத்துவ நிபுணர் ரேணு மாக்கர் கூறும் போது “என்னிடம் பரிசோதனைக்கு வரும் திருமணமாகாத பெண்களில் 80 சதவீதம் பேர் ஏற்கனவே “செக்ஸ்” உறவு வைத்துள்ளனர்” என்றார்.
பாலகுமாரன் எழுதிய முதல் நாவலான "மெர்க்குரி பூக்கள்" படித்து இருகிர்களா? அதில் ஹைலைட்டான பகுதி சங்கரன்-ஷியாமளா காதல். இன்னொருவரின் மனைவியான ஷியாமளா மீது காதல் கொள்ளும் சங்கரன் தனது குற்றஉணர்ச்சியை வெளிப்படுத்தும் இடத்தில இதைபோல எழுதிஇருப்பார் பாலகுமாரன். "பத்திரிக்கைகளும், சினிமாவும் இளமையை குத்தி கிழிக்கும்போது பிறன் மனை நோக்கா பேராண்மைக்கு எங்கே போவது". தி.ஜானகிராமன் கூட தனது "அம்மா வந்தாள்" நாவலில் இது போன்ற ஒரு விவகாரத்தை மிக நுணுக்கமாக கையாண்டு இருப்ப்பார்.
கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மீடியாக்களும், சினிமாக்களும், பத்திரிக்கைகளும் மற்றும் பன்னாட்டு கலாச்சாரங்களின் தாக்குதல்களுமே இந்த கருத்துகணிப்பு முடிவுகளின் காரணங்கள்.
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை('மூணு'தான்). இந்த கருத்துகணிப்பில் என்னுடைய கருத்து என்னவென்றால், இந்த நிமிடம்வரை நான் ரொம்ப நல்லவன். காரணம், எனக்கு சமூகம் தவறு என்று குறிப்பிடும் விவகாரங்களை செய்யும் வாய்ப்பு வரவில்லை அல்லது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும், வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளும் துணிச்சல் வரவில்லை. Thats all.
திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாலும் பரவாயில்லை. திருமணம் நடந்த பின்பு ஒழுங்காக இருந்தால் போதும் என்ற எண்ணமே இன்றைக்கு இளையதலைமுறை மத்தியில்,இரு தரப்பிலும் உள்ளதாக நான் நினைக்கிறேன்
கற்பு நிலையென்று சொல்ல வந்தோம் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்
- பாரதியார்
(பி.கு: இந்த கமல்-குஷ்பூ படத்துக்கும், பதிவுக்கும் என்ன சம்பந்தம்? ஹி..ஹி..உண்டு. if time permits நீங்களே கண்டுபிடிச்சி சொல்லுங்கள்.....நன்றி,, மீண்டும் அடுத்தவாரம் பார்க்கலாம்)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, September 13, 2009
சண்டேனா இரண்டு (13-09-09) செய்திவிமர்சனம்
Posted by IdlyVadai at 9/13/2009 07:52:00 AM
Labels: இன்பா, செய்திவிமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
26 Comments:
சூதாட்டத்தில் தோல்வியுற்ற தர்மராஜன் மற்றும் அவர் சகோதரர்களை உள்ளடக்கிய பஞ்ச பாண்டவர்களை 12 ஆண்டுகள் வனவாசமும், ஒரு ஆண்டு அஞ்ஞாத வாசமும் ( யார் கண்ணிலும் படாமல் மறைந்திருப்பது )என்று துரியோதனாதிகளால் நியமிக்கப்பட்டது. வனவாசத்தின் போது அர்ஜூனனின் காண்டீப வித்தையில் மோகித்து இந்திரனின் மனைவி அர்ஜூனனை அடைய விரும்பினாள். ஆனால் அர்ஜூனன் அவளிடம் நீங்கள் எனது தாயார் ஸ்தானம், உங்களின் விருப்பத்தை என்னால் பூர்த்தி செய்ய இயலாது என்று பதிலுறுக்கிறான். இதனால் கோபமுற்ற இந்திரனின் மனைவி அர்ஜூனனை ஆணுமல்லாத பெண்ணுமல்லாத "ப்ருஹன்னளை" எனும் அலியாகப் போகும்படி சபிக்கிறாள். இதனை அர்ஜூனன் கண்ணனிடம் முறையிடுங்கால், கண்ணன், இதுவும் நன்மைக்குத்தான். ஒருவருட அஞ்ஞாத வாசத்தில் இச்சாபம் உனக்கு உதவியாயிருக்கும் எனக் கூறுகிறான்.
பிறகு அர்ஜூனன் ப்ருஹன்னளை உருவத்தில் உத்ரராஜனின் தேசத்தில், உத்ரகுமாரனுக்கு தேரோட்டியாக பணியமர்கிறான். அதே அரண்மனையில் பாண்டவர்கள் மற்றும் த்ரெளபதி போன்றோரும் வேறு வேறு வேடங்களில் மறைந்திருந்தனர்.
எந்த ஆங்கிலச் சேனல் இதுபோன்ற கருத்து கணிப்பை நடத்தியதோ தெரியவில்லை. ஆனால் இதே பாணியில் ஆனால் இதைவிட அப்பட்டமான கருத்து கணிப்பை சில ஆண்டுகளுக்கு முன்பு "இந்தியா டுடே" நடத்தியது. அதன் பேரில் கருத்து கூறிய குஷ்பூ மாட்டிக் கொண்டார்.....நமது இனமானக் காவலர்கள் குஷ்பூவிற்கு எதிராக கிளம்பிவிட்டனர். யாரையோ விட்டானாம் எதையோ பிடித்து அடித்தானாம் என்பார்கள் அதுபோல.
எனக்குத் தோன்றியவரை மஞ்சள் கமெண்டிற்கு காரணம் இதுவாக இருக்கலாம்....
கமல், குஷ்பூ இருவருமே பொதுவிடங்களில் இதுபோன்ற சமாசாரங்களைத் தயக்கமின்றி பேசுவர்....சரியா??
Malikkafur worked under Alaudin and not under Mogals, pls correct
யதிராஜ சம்பத் குமார் கஷ்டப்பட்டு, மூளையைக் கசக்கி கண்டுபிடிச்சதுக்கு பதில்:
மஞ்சள் கமென்ட் போட்டவர் உட்பட, கமல் கஷ்பூ, மூவருமே விவஸ்தை கெட்டவர்கள்!
எந்த ஒரு விஷயத்தையுமே சொல்கிற விதம், நேரம் இருக்கிறது!
யதிராஜ சம்பத்குமார் சொல்ல விட்ட ஒன்று.
அந்த சாபத்தை விட்டவள் ஊர்வசி, இந்த்ராணி அல்ல.
ஊர்வசி சாபம் விட்டாலும், அர்ஜுனனின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த சாபம் ஒரு வருடம் மட்டுமே செல்லும் என்றும், அந்த ஒரு வருடம் அர்ஜுனனின் விருப்பத்துக்கு ஏற்ப இருக்கும் என்றும் ஊர்வசி ஆசிர்வதிக்கிறாள். இந்த சாபத்தை வரமாக்குகிறான் மாயக் கண்ணன். அஞ்ஞாத வாசத்தின் போது ப்ரஹனலை என்ற பெயருடன், அலியாக உலா வருகிறான் அர்ஜுனன்.
Hi,
When Arjuna helps Indra in the war against Rakshasas Indra invities him to his capital at that time Oorvasi who loves arjuna proposes to him and arjuna refuse her becos she is the one who is liked by Indra and Indra is like father to him.. With this she gets raged and curses him that he will bcome a Bruhannala and Indra converts this curse and says that he can have it for one year and this will be useful for him in the future.
You can watch the film "Nartana Sala" in Telugu which is based on this incident and Pandava's agyathavasam.
Kamesh
Hi,
When Arjuna helps Indra in the war against Rakshasas Indra invities him to his capital at that time Oorvasi who loves arjuna proposes to him and arjuna refuse her becos she is the one who is liked by Indra and Indra is like father to him.. With this she gets raged and curses him that he will bcome a Bruhannala and Indra converts this curse and says that he can have it for one year and this will be useful for him in the future.
You can watch the film "Nartana Sala" in Telugu which is based on this incident and Pandava's agyathavasam.
Kamesh
kamal and kushboo both are
poota casunga
///கிருஷ்ணமூர்த்தி said...
யதிராஜ சம்பத் குமார் கஷ்டப்பட்டு, மூளையைக் கசக்கி கண்டுபிடிச்சதுக்கு பதில்:
மஞ்சள் கமென்ட் போட்டவர் உட்பட, கமல் கஷ்பூ, மூவருமே விவஸ்தை கெட்டவர்கள்!
எந்த ஒரு விஷயத்தையுமே சொல்கிற விதம், நேரம் இருக்கிறது.///
கிருஷ்ணமூர்த்தி அண்ணா! ரொம்ப சரியாச் சொன்னேள்.
பத்தும் தெரிந்த-"பகுத்தறிவுச்செம்மல்"-பதினாறு லோக(த்துக்கும்) நாயகன் கமல் பத்தின விஷயம் பேசினா உன்னைப் போல் ஒருவன் படத்தை அவர் "மகாளயஅமாவாசை" அன்னிக்கு சரியாய் பார்த்து ரிலீஸ் பண்ற மாதிரி, நாமளும் நாள், நட்சத்திரம், நேரம் பாத்துதான் பேசணும்.
இன்பா அவர்களுக்கு,
பாரதி எழுதியது இது தான்:
"கற்பு நிலை என்று சொல்ல வந்தார் - இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்.
நீங்கள் எழுதியதில் சின்ன தவறு உள்ளது.
--டில்லி பல்லி
அரவாணிகளை சமூகம் பந்தாடிய காரணத்தால்தான் அவர்கள் எல்லை இல்லாத தொல்லைகளை அனுபவிக்கின்றனர். இந்த இட்லிக் கடை செய்தியை செய்தித் தாளில் படித்த போது உண்மையிலேயே சந்தோஷமாக இருந்தது. இந்த மாதிரி முயற்சிகள் அவர்களை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வரட்டும்.
தன் எதிர்கால மனைவி கற்புடந்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் முக்கால் வாசிப் பேருக்குத் திருமணமே ஆகாது என்று அந்த பெண் மருத்துவரின் கருத்துரையைப் பார்த்தால் தெரிகிறது. தன்னிடம் இல்லாத கற்பு எதிர்பாலாரிடமும் எதிர்பார்க்க முடியாது என்று புரிந்து கொண்டு விட்டார்களோ என்னமோ...எந்த சானல் எந்த நேரத்தில் சொன்னால் என்ன...நடப்பதைத்தானே சொல்கிறார்கள்..
இட்லிவடை அவ்வப்போது இதுபோன்ற நல்ல தகவல்களையும் அளிக்கிறது. சண்டேனா ரெண்டு இந்த வாரம் நன்று
குஷ்பு : திருமணத்திற்கு முன்பு கற்போடு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பேசி சர்ச்சையில் மாட்டிகொண்டவர்.
கமல் : திருமணம் : தமிழில் எனக்கு பிடிக்காத ஒரு வார்த்தை ரேஞ்சுக்கு இருப்பவர்.
திருமணத்துக்கு முன்பே 2 குழந்தைகள் பெற்றவர்.
கமல் - முதல் எழுத்து க
குஷ்பு - முதல் எழுத்து க் + க - கு. ரெண்டுமே "க" வரிசை.
சரியா ?
இந்திய இலசுகள் உஷாராக (2nd/3rd..nth hand) கிடைத்ததை அனுபவிப்போம் என்ற எதார்த்த நிலை எடுத்து உள்ளார்கள், வாழ்த்துக்கள். அதே உஷார் STD சமாசாரத்தை பரிசோதனைகள் செய்துகொண்டு மனம் முடித்தால் மிக நல்லது. சரக்கு சந்தையில் எவ்வளவு தரமாக இருந்தால் விற்கமுடியுமோ அந்த தரத்திற்கு தான் தயார் ஆகும், பாவம் அந்த 30% மக்கள் ரொம்ப சிரம பட போகிறார்கள்.
// எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை('மூணு'தான்). இந்த கருத்துகணிப்பில் என்னுடைய கருத்து என்னவென்றால், இந்த நிமிடம்வரை நான் ரொம்ப நல்லவன். காரணம், எனக்கு சமூகம் தவறு என்று குறிப்பிடும் விவகாரங்களை செய்யும் வாய்ப்பு வரவில்லை அல்லது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும், வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளும் துணிச்சல் வரவில்லை. Thats all. //
இதுதான் தான் ஒரு பத்தனன் (பத்தினிக்கு எதிர்பதம்) என கூறும் பல இளைநர்களின் உண்மை. நிஜத்தை ஒப்புக்கொள்ளவும் ஒரு துனிச்சல் வேண்டும் அது உம்மிடம் இருக்கிறது.
குஷ்புவைபடுத்தின அந்த போரட்டங்கலுக்கு anniversary இப்பொதான்
கற்பு என்பது ஒரு பொய்....
கண்ணகி கூட கற்புள்ளவள் தான் வாய்ப்பு கிடைக்காதவரை என்று ஒரு சிலர் கூறுவதுண்டு.
வெறும் மெய்புணர்வு மட்டுமே கற்பு என்ற ஒன்றை வரையறை செய்கிறது என்பது அபத்தம்!!
/**இப்படி பண்டைய காலங்களில் திருநங்கைகளுக்கு கிடைத்த மரியாதையும், கவுரவமும் இன்று நாகரிகம்,கல்வி அதிகரித்துவிட்ட இந்த காலத்தில் கிடைத்திருக்கிறதா? நாம் அவர்களை எப்படி நடத்துகிறோம்?***/
பண்டைய காலத்தில் அனைத்தும் நன்றாகவே தான் நடந்தன, தயவுசெய்து இப்போது இருக்கும் குப்பைகளை (டெக்னாலஜியைத் தவிர..) வைத்து ஒப்பிட வேண்டாம், அன்று அரசன் மக்கள் நலம் பேணும் அரசனாக வாழ்ந்தான் ஆனால் இன்று???????
சில வருடங்களுக்கு முன் ஒரு வெளிநாட்டு பத்திரிக்கை உலகில் இந்திய பெண்கள்தான் அதிக அளவில் ஒரே ஒருவருடன் உறவில் உள்ளனர் என்ற கணக்கெடுப்பையும் வெளியிட்டது. கற்பு எனப்து அவரவர் பார்வையில் உள்ளவை. 100 பேரிடம் கேட்கப்படும் கருத்து கணிப்புகள், 100 கோடி மக்களின் மனநிலைய பிரதிபலிக்காது. நமக்கு தேவை ஹிட்ஸ் அது பத்திரிக்கையாக இருந்தால் என்ன, தொலைக்காட்சியாக இருந்தால் என்ன, பிளாக்காக இருந்தால் என்ன ஹிட்ஸ் வருகிறது எனில் மாட்டு சாணத்தை கூட அள்ளி தின்பார்கள்.
Rahul said...
கற்பு என்பது ஒரு பொய்....
its true
உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்
உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்
gentleman,
malik kapoor was not thalapathy of aurangazeep.he was thalapathy of ala-ud-deen-gilji.....also malik kapoor was the first muslim compaigner who entered south india upto madurai.in madurai he helped sundara pandian to come back to power(madurai meetta sundara pandian....remember MGR cinema...
Shree Maanasthan said,
"
பதினாறு லோகத்துக்கும்"
Eerezhu pathinaalu logum thaan.
16 logum alla.
//பதினாறு லோகத்துக்கும்"
Eerezhu pathinaalu logum thaan.
16 logum alla.//
அது "typo". ஏதோ ஒரு flow-ல அப்டி எழுதிட்டேன். சு(கு)ட்டிக் காட்டியதற்கு நன்றி திரு சோ.விசிறி.
Post a Comment