பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 11, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 11-09-2009

இட்லிவடை,

உன்னை நலமெல்லாம் கேட்கற மூட்ல நான் இல்லை. போன முனி கடிதத்துல உன்னால என் பேரும் சேர்ந்து கெட்டுப் போச்சு. உன் கூட்டாளியைச் சொல்லு, உன்னப் பத்தி சொல்றேன்னு சரியாத்தான் சொன்னாங்க. இட்லியும் வடையும் சீப்பா கிடைக்கலாம். ஆனா இட்லிவடை சீப்பா பிஹேவ் பண்ணலாமா?

எட்டு இட்லி, இரண்டு வடை, ஒரு தோசை என்ன விலை இருக்கும்? விடை நான்கு ரூபாய். மயக்கமா இருந்தால் ஒரு சோடா குடிச்சுட்டு படி. தூத்துக்குடிலேருந்து ராமேஸ்வரம் போற சாலைல இருக்கு சூரங்குடி. அங்கதான் இந்த அதிசயக் கடையை நடத்திகிட்டிருக்கார் முகம்மதுங்கறவர். இவர்தான் கடை முதலாளி, தொழிலாளி. 20 பைசா இருந்த இட்லி இப்ப 25 பைசா ஆகிடுச்சுன்னு வருத்தப்படுறார். இப்ப 25 பைசா வெச்சு வித்தாலும் தனக்கு லாபம் வருதுன்னு சொல்றார். எதுக்கு ஏமாத்தி சம்பாதிக்கணும்னு கேக்கறார். இவரைப் பற்றி சரவணபவன் அண்ணாச்சி படிக்கணும்.

திருப்பதில ராஜசேகர ரெட்டிக்கு 1 கோடி செலவுல சர்ச், சாரி, கோயில் அமைக்கத் திட்டமிட்டிருக்காங்க. எப்படியும் திருப்பதிக்கு நல்ல கூட்டம் வருது. வரகூட்டம் இதுக்கும் எட்டிப் பாக்காமலா போகும்? அது சரி, பன்றிக் காய்ச்சல் என்ன ஆச்சு ? இப்ப எல்லாம் யாருக்கும் வரதில்லையா? மக்கள் ஜின்னாவுக்கும், ராஜசேகர ரெட்டிக்கும்தான் அதுக்கு நன்றி சொல்லணும். ஏன்னு கேட்டா அவங்க நியூஸாலதான் இப்ப பன்றி காய்ச்சல் பத்தி மீடியா பேசறதில்லை. தமிழக அரசு பன்றி காய்ச்சல் பத்தி அமைத்துள்ள வலைத்தளம் - http://www.swineflutninfo.in/ நல்லா இருக்கு. ஆனால் ஏன் தமிழ் யூனிகோடுல இல்லை? அந்த சைட்டுக்கு நீயாவது உன் வாசகர்களாவது ஒரு TAMILFLU மாத்திரை, சாரி TAMILFONT பார்செல் செய்யுங்க.

ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்னு தயாரிச்சு வெளியிட்டிருக்கற எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான விளம்பரப் படத்துல ஹிட்லர் மற்றும் ஸ்டாலினோட உருவத்தை ஒத்தவங்களைக் காண்பிக்கறது இப்ப சர்ச்சையைக் கிளப்பியிருக்கு. (அவர்கள் சொல்ல வரும் விஷயம் இது தான்-- "Aids is a mass murderer" ) அதேபோல போஸ்டர் விளம்பரத்துல சதாம் உசேன், ஜோசப் ஸ்டாலின் ஆகியோரது படங்களைப் பயன்படுத்தியிருக்காங்க. அவங்களோட எங்க நோயை ஒப்புநோக்கலாமான்னு எய்ட்ஸ் நோயாளிகள் எதிர்ப்பு.

துக்க வீடுகள்ல ஒப்பாரி எதுக்கு தெரியுமா? பெண்கள் இயல்பா பேச ஆரம்பிச்சாலே கடைசில அது கும்மாளமாகிடும். அதனால ஒப்பாரிங்கற கூட்டழுகைல கலந்துவிடச் செய்றாங்க. கல்யாண வீடுகள்ல எதுக்கு கெட்டிமேளம் தெரியுமா? பெண்கள் காஞ்சிபுரம் பட்டும் கழுத்துநிறைய நகைகளுமா சுமுகமா பேசிகிட்டிருக்காங்களேன்னு பார்த்துகிட்டிருக்கும்போதே வாய்த்துடுக்குல கலகமாகி அழ ஆரம்பிச்சுடுவாங்க. அது மணமக்களைத் தாக்காம இருக்கத்தான். ஆக திருமண வீட்டுல கெட்டிமேளம், எழவு வீட்டுல ஒப்பாரி.

"அண்ணா, தேசிய விருது என இரண்டு விருதுகளை காஞ்சிபுரம் கொடுத்துள்ளது"-- இது கலைஞர் பிரகாஷ் ராஜ் அவரை சந்திச்சபோது சொன்னது. தேசிய விருது வாங்கினவர் சந்திச்சார். ஆனா ஒரு தேசிய தலைவர் அவரைச் சந்திக்கலை. யார் தெரியுமா? நம்ம ராகுல் காந்தி தான். ஏன் கலைஞரை சந்திக்கலைனு அவர்கிட்ட கேட்டதுக்கு அவர் சொன்ன பதில், "கருணாநிதியை சந்திக்காததற்கு தனிப்பட்ட காரணம் ஏதும் இல்லை. முதல்வர் கருணாநிதி நான் மதிக்கும் தலைவர்களுள் ஒருவர். அவர் ஒரு மூத்த அரசியல் தலைவர்". அரசியல்வாதியோட பதில். விஜய்யை காங்கிரஸில் சேர முடியாம செய்தார் அதனாலதான்னு பின்ன சொல்ல முடியுமா என்ன?

மதுரை வந்த ராகுல் ருசித்து சாப்பிட்டது என்ன தெரியுமா? மீன் குழம்பும், மல்லிகைப்பூ இட்லியும்!. இட்லி சாப்பிட்ட மகிமை என்று நினைக்கிறேன், பேசுவதில் குசும்பு வந்துவிட்டது.

குற்றமற்றவர்கள் கங்கிரஸில் சேரலாமாம். ராகுல் காந்தி திருவாய் மலர்ந்திருக்கிறார். "ரஜினிகாந்த் ஒரு குற்றவாளி அல்ல. அவரைச் சேர்வதை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்போம்.". பத்திரிக்கையாளர்கள், மற்ற நடிகர்கள், நடிகைகளின் பெயர்களையும் கேட்டு ராகுலிடம் சர்டிஃபிகேட் வாங்கியிருக்கலாம். நல்ல சான்ஸை மிஸ் செய்துட்டாங்க. எனக்கு ஒரு டவுட். நேத்து, "தேசிய நதிகளை இணைப்பது சுற்றுச் சூழலுக்கு ஆபத்தாகி விடும்" அப்படீங்கறார் ராகுல். ஆனா ரஜினி தேசிய நதிகளை இணைக்க 1 கோடி ரூபாய் தருவதா முன்பே சொன்னர். ராகுல்ஜி சொன்ன விளக்கம், "இயற்கை மிகவும் பலம் வாய்ந்தது. அதற்கு முரணான பெரிய காரியங்களை செயல்படுத்துவது நல்லதல்ல" எனக்கு என்னவோ இவர் சொல்லுவதில் விஷயம் இருக்குன்னு தோணுது.

ராகுல் காந்தி நதி நீர் பத்தி சொன்ன கருத்துக்கு "ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரவில்லை என்றுதான் ராகுல்காந்தியை சொல்ல வேண்டும்" அப்படீன்னு தா.பாண்டியன் கருத்து சொல்லியிருக்கார். எஸ்.வி.சேகர் நாடகத்துல ஒரு வசனம் வரும்...

"அறிவே இல்லாம எவ்வளவு நாள் ஒருவர் உயிர் வாழலாம்?"

"எனக்குத் தெரியாது, அப்பா உங்களுக்கு என்ன வயசு?" அது மாதிரி இருக்கு இவர் பேச்சு.

நம்ம சொக்கனுக்கு இதைவிட பெரிய டவுட் வந்திருக்கு. விக்ரம் படத்தில் "வனிதாமணி வனமோகினி, வந்தாடு’ ன்னு ஒரு பாட்டு வருமே, நினைவு இருக்கா ? அதில ’எனக்குள்ளே குளித்தவன்’னு ஒரு வரி, என்ன அர்த்தம்னு எல்லார்கிட்டயும் கேட்டுகிட்டு வரார். யாராவது விளக்குமாறு (விளக்கிச் சொல்லுமாறு) கேட்டுக்கறேன்.

நேத்தி ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சில விக்ரம், ஷ்ரேயாவை விட DD ரொம்ப குயூட்னு சொன்னார். விக்ரமுக்கு உடனடி தேவை கந்தசாமி மாஸ்க் பவர் கண்ணாடி எக்ஸ்டரா அட்டாச்மெண்ட்.

கொடுமையா நடத்தப்படற zee-தமிழ் saregamapa challenge. போட்டியில் முதலில் எம்.எஸ்.வி அவர்களை நடுவராக வைத்து கொஞ்சம் காமெடி செய்தாங்க. போன வாரம் ஒரு போட்டியாளர் நிக்கப்பட்ட போது என்னவோ அந்தப் போட்டி வளர்ந்து முன்னணியில் இருக்கும் அந்தப் பாடகருக்கே ஏற்பட்ட (அளிக்கப்பட்ட) தோல்வி போல பாவித்து அந்தப் பாடகரைப் பற்றி வாய் ஓயாமல் பேசி, கொஞ்சம் நெறயவே பொலிடிக்ஸ் செய்தாங்க. இந்த வாரம் வேறு ஒரு போட்டியாளரை "ஏக வசனத்தில் ஏறுவதைக் காட்டி" TRP rating-ஐ ஏற்றப் பாடுபட்டாங்க. இன்னும் என்ன எல்லாம் நடக்கும்னு ஆவலோட மக்கள் எதிர்பார்க்கிறாங்க. டிவிக்காரங்களுக்கு தேவையும் அதுதானே.

தமிழ்நாட்டின் தேவை அறிஞ்ச இன்னொருவர் ஷக்தி சிதம்பரம் இவரோட படங்கள்ல எல்லாம் பிலிம் இருக்குமோ இல்லையோ, நமீதா இருப்பார் நிச்சயமா. ஒவ்வொரு படத்திலும் தனக்குப் பெரிய முக்கியத்துவமே கொடுக்கிறார் அப்படீங்கறதால தன்னைக் கேக்காமலே இன்விடேஷன்ல பேரை போட்டுவிடுகிற அளவுக்கு நமீதாவும் அனுமதித்தார். இடைல (இடைலன்னா இடைப்பட்ட காலத்துலன்னு அர்த்தம்யா) என்ன பிரச்சனையோ, ரெண்டுபேரும் அவங்க டிரஸ் மாதிரி வெட்டிகிட்டாங்க. இனிமே ஷக்தி சிதம்பரம் படத்துல நான் நடிக்க மாட்டேன்னு நமீதா சொல்லிவிட்டார். விநியோகஸ்தர்கள் வரைக்கும் விஷயம் போக, நமீதா இல்லாம எப்படி உங்க படத்தை வாங்கறதுன்னு கேக்கறாங்களாம். அவ்வளவுதான். அவருக்குப் போட்டியா இன்னொருவரை உருவாக்கறேன்னு சபதமே போட்டிருக்கார். இந்திர விழா படத்தில் இன்னொரு நாயகியா நடிச்ச ஹேமமாலினிதான் இவரோட அடுத்த நமீதா. குரு சிஷ்யன் படத்துல இவரை நமீதா ரேஞ்சுக்கு உரிச்சிருக்காராம். ஒரு காட்சிலயாவது எனக்கு தாவணி கொடுக்கக் கூடாதான்னு கேட்ட ஹேமமாலினிக்கு ஷக்தி சொன்ன பதில் அல்லது எதிர்க்கேள்வி-- "நமீதா இடத்தைப் பிடிக்கணும்னு ஆசை இல்லையா உங்களுக்கு?" நல்ல லட்சியம்.

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள்ல இன்னிக்கி பரபரப்பா இருக்கற பாடலாசிரியர் விவேகா. இந்த இளம் பாடலாசிரியரோட லட்சியம், நூலகம் அமைப்பது தானாம். அதுக்காக பல புத்தகங்களை சேமிக்கற இவர், சீக்கிரமே மாபெரும் நூலகத்தை அமைக்கப்போறார். இவர் எழுதின சில பாடல்கள்

சிக்கு புக்கு பூம் பூம் (மாசிலாமணி)
டாடி மம்மி (வில்லு)
எம்பேரு மீனா குமாரி (கந்தசாமி)
மியாவ் மியாவ் பூனைக்குட்டி (கந்தசாமி)

எல்லாமே பாப்பா பாட்டாம்.

குழந்தைகளுக்கு பாக்கெட் மணின்னு பெற்றோர் பழக்கப்படுத்தறது கெட்ட பழக்கம். பாக்கெட் மணிக்கு தமிழ் வார்த்தை கைக்காசு. இப்படி கைக்காசைக் கொடுத்து பழக்கம் செஞ்சதால மத்திய அமைச்சர்கள் எஸ்.எம்.கிருஷ்ணாவும், சசி தரூரும் நட்சத்திர ஹோட்டல்ல தங்கி கைகாசை செலவு செய்திருக்காங்க. இப்படி பல எம்.பிக்களோட கடந்த மூணு மாச ஹோட்டல் பில் ரூ. 3.7 கோடி!. எல்லாம் 'கை'காசு. கேள்விகேட்ட ஆளில்ல. இந்த கைகாசுக்கு என்ன அர்த்தம் தெரியுமா ? நம்ம கையில் இருந்த காசு இவர்கள் கைக்கு போனதால் இது இவர்களின் கைகாசாகியது.

பார்லிமெண்டுல அழகிரி கேள்வி கேட்கறவங்களைப் பார்த்து பயந்து ஓடிடறார்னு குற்றசாட்டு வர ஆரம்பிச்சிருக்கு. பதில் சொல்ல பயந்துக்கொண்டு இல்லை. ஆங்கிலம் அல்லது ஹிந்திலதான் பதில் சொல்லணும்னு விதி இருக்கறதால. அண்ணனுக்கு இரண்டும் வராது. தாய்மொழிலதான் பேசுவேன், மொழிபெயர்ப்பாளர் அமர்த்திக்கலாங்கற அவரோட வாதம் எடுபடலை. இது நடைமுறைக்கு ஒத்துவராது, உறுப்பினர்களுக்குதான் அந்தச் சலுகை, மந்திரிகளுக்கு இல்லைனு சட்டம் சொல்லுதாம். ஹிந்தி திணிப்புக்கு தார் அடிச்சது எவ்வளவு தப்புன்னு இப்போ இவங்க உணர்ந்திருப்பாங்க. ஊருக்காக வெளில தார் அடிச்சுட்டு உள்ளாற கமுக்கமா படிச்சிருக்க வேணாமா, மத்த அரசியல் தலைவர்கள் வாரிசுகள், பிள்ளைகள் மாதிரி? அஞ்சா நெஞ்சன் என்ன செய்யப் போறாரோ?

மொழிபெயர்ப்பு பார்லிமெண்ட்ல அப்படி பிரச்சனையா இருந்தாலும் பத்ரி அலுவலகத்துல சக்கைபோடு போடுதாம்.
மொழிபெயர்ப்பு 1
மொழிபெயர்ப்பு 2
சில கேள்விகள் தமிழில்.
பத்ரி ஏதாவது நடனம் கற்றுக்கொள்கிறாரா? ( அட்லீஸ்ட் கேமராவை ஒரு ஸ்டூலில் வைக்க வையுங்க, அல்லது இருக்கவே இருக்கு மாயவலை நாலு புத்தகத்தை அடிக்கினால் போதும். குதலை இதை செயல்ப்படுத்தினால் நிச்சயம் அடுத்த மணிரத்தினம் படத்தில் அவர் கேமராமேனாக ஆகும் வாய்ப்பு இருக்கிறது.)

அது சரி, YouTubeல பா.ராகவன் பேட்டி பாத்தேன், பேட்டி எடுக்றவர் நிச்சயம் ஆண்டாள் பத்தி ஏதாவது கேள்வி கேப்பார்னு நினைச்சிருந்தேன். ஏமாத்திட்டாரே. பேட்டில 'ஓம் முருகா'வையாவது எழுதுங்கன்னு பாரா வாய்தவறி சொல்லிட்டார்னு நினைக்கறேன். அது 'ஒசாமா'ன்னு இருக்கணும்.

நாம இப்படி ஜோக் அடிச்சுகிட்டு இருக்கோம்; அந்தப்பக்கம் சீரியஸா, 'பாகிஸ்தானோட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஒசாமா பின் லேடனை இதுவரை ஐந்து முறைக்கு மேல் சந்தித்துள்ளார்' அப்படீன்னு முன்னாள் ஐஎஸ்ஐ அதிகாரி கூறியிருக்கார். ஆனா ஒசாமா பின்லேடன் உயிரோடவே இல்லைன்னு போன மாசம்தான் திவசம் செஞ்ச மாதிரி சர்தாரி அடிச்சுச் சொல்றார். செப் 11, வந்துட்டதால இவங்களுக்கு ஓசாமா ஞாபகம் வந்துவிட்டது போல. இன்னும் கொஞ்ச நாளில் அவர் குத்தமில்லாதவர் அப்படீன்னு கூட பேட்டி கொடுப்பாங்க. செப்டம்பர் 11, பாரதியர் நினைவு தினம்னு ரொம்பப் பேருக்குத் தெரியாது. ஆனா இந்த முறை நிறைய பேர் அதை நினைவு வைத்துக்கொண்டார்கள். இந்த நாள்லதான் உதயமானது தினமணி நாளிதழ் - தினமணிக்கு பவழவிழா வாழ்த்துகள்!.

படத்துல இருக்கற குழந்தை பிறந்தது 9-9-9 ஒன்பது மணி ஒன்பது நிமிடத்தில் பிறந்தது.! ( Once in a lifetime chance — Hetal and Pinky Dave’s baby was born on the 9th day of the 9th month of 2009 at 9:09 minutes in Ahmedabad on Wednesday )

சல்மான் கான் ஷூட்டிங்ல இருந்த போது அவரோட பெண் ரசிகைகள் அவரைச் சூழ்ந்துகொண்டு கட்டிபிடி வைத்தியம் செய்தாதான் நாங்க போவோம்னு அடம்பிடிக்க அவரும் எதுக்கு வம்புனு கட்டிப்பிடி வைத்தியம் செஞ்சு அனுப்பியிருக்கார். (சுத்தி இருந்த) ஆண்களின் பாடு திண்டாட்டமா போச்சு. ஜோக் இல்லை நிஜம்!

0
இப்ப சில ஜோக்ஸ்

சில நாட்கள் முன் படித்த அருமையான ஜோக் - "காங்கிரஸ் உட்பட நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பிளவுகளைச் சந்தித்துள்ளன. ஆனால் பிளவை சந்திக்காத ஒரே கட்சி பா.ஜ.க.தான்" அப்படீங்கறார் அதன் தலைவர் ராஜ்நாத்சிங்.
ரொம்ப யோசிக்காத. உமா பாரதி, வசுந்தரா ராஜே, ஜஸ்வந்த் சிங் இவர்கள் எல்லாம் பிளவு இல்லை விரிசல்.

ஸ்வர்ணமால்யா கர்நாடகா சங்கீதம் பயில்கிறார் - வாரம் இரு முறை (கும்பகோணம் ஆசிரியரிடம்). நடனம் ஆடிக்கொண்டிருந்தவர் ஏன் இப்ப சங்கிதம் கற்றுக்கொள்கிறார் ? டிசம்பர் சீசன் களை கட்டுமா ?

ஆற்காடு வீராசாமி கூடைப்பந்து கழகத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா. அட அவர் அதற்கு தலைவரா என்று கேட்காதீர்கள். இந்த விஷயம் ஆற்காடு வீராசாமிக்கே ராஜினாமா செய்யும் போது தான் தெரிந்ததாம். அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் கழட்டி "ஷாக்" குடுக்க மேலிடம் தீவிரம் என்று செய்தி. பொறுத்து இருந்து பார்ப்போம்.

0

சமீபத்தில் படிச்ச பழனி பாரதி எழுதிய நான்கு வரி கவிதை

பாபர் மசூதிச் சுவரில்
ஓடிப்பிடித்து
விளையாடுகின்றன
ராமர் அணில்கள்!

இப்படிக்கும் உன் மீது வருத்தங்களுடன்,
முனி

இந்த வாரத்தின் பெரிய ஜோக் - சென்னை கூவம் ஆற்றில் கொசு ஒழிக்கும் பணி!

26 Comments:

SUBBU said...

இட்லியும் வடையும் சீப்பா கிடைக்கலாம். ஆனா இட்லிவடை சீப்பா பிஹேவ் பண்ணலாமா?
:-)

SUBBU said...

//ஆனால் ஏன் தமிழ் யூனிகோடுல இல்லை? //

தமிழ் Font அங்கயே இருக்கு!!

Anonymous said...

முனி ரொம்பத்தான் வருத்தத்துல இருக்கு போல. இருந்தாலும் சும்மாக் குமுறிட்டுப் போயிருக்கு, நெறைய செய்திகளை!!!!

SUBBU said...

தினமணிக்கு பவழவிழா வாழ்த்துகள்!.

Rahul said...

/***எனக்கு ஒரு டவுட். நேத்து, "தேசிய நதிகளை இணைப்பது சுற்றுச் சூழலுக்கு ஆபத்தாகி விடும்" அப்படீங்கறார் ராகுல். ஆனா ரஜினி தேசிய நதிகளை இணைக்க 1 கோடி ரூபாய் தருவதா முன்பே சொன்னர். ராகுல்ஜி சொன்ன விளக்கம், "இயற்கை மிகவும் பலம் வாய்ந்தது. அதற்கு முரணான பெரிய காரியங்களை செயல்படுத்துவது நல்லதல்ல" எனக்கு என்னவோ இவர் சொல்லுவதில் விஷயம் இருக்குன்னு தோணுது.**/



கல்லனை இயற்கையாக அமைந்தததா? சுற்றுசூழல் என்ன ஆனது? இயற்கையாக அமையாத ஏரிகள் எத்தனை குளங்கள் எத்தனை எத்தனை? மலைகளை பெயர்த்து மலை போன்ற மாபெரும் கோவிலை கட்டி ஆயிரம் வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. இயற்கை சுற்றுசூழல் என்ன ஆனது? காவிரிக்கு குறுக்கே கர்நாடகாவில் மூன்று பெரிய டேம்கள் உள்ளன, அவைகள் இயற்கைக்கு எதிராணவை அல்லவா? அதனால் அதை எடுக்க சொல்லுங்கள் நதிநீர் இணைப்பு என்ற பிரச்சிணையே வராது!!

வாய் கிழிய பேசிய ராகுல் காந்தியிடம் ஒரு கேள்வி:

ராமர் பாலம் என்று சொல்லப்படுவதை நீக்கினால் பவளப்பாரைகள் அழிக்கப்பட்டு சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்று பல வல்லுநர்கள் சொன்ன போது வாயில் விரல் வைத்து சூப்பி கொண்டிருந்தாரா ??

காவிரிப்பிரச்சினையை தீர்க்க வக்கில்லை அவ்வளவுதான்!!!!

இதுதான் உண்மை..விஜய் போன்றவர்களுடன் ஒட்டு பிட்சை எடுக்க நினைப்பவர்களை எல்லாம் மதித்து நாட்டை கொடுத்தால் இப்படித்தான் ஏதாவது உளறுவார்கள்...


அதற்காக ரஜினியை மாபெரும் சிந்தனையாளர் என்ற பட்டியலில் சேர்த்தாதாக கொள்ள வேண்டாம்... அவர் ஏதோ நதிநீர் இணைப்பு என்று ஏதோ ஒரு நாள் சொல்லிவிட்டார் அவ்வளவுதான்!

SUBBU said...

//இப்படிக்கும் உன் மீது வருத்தங்களுடன்,
முனி//

இன்னைக்கி எல்லாமே நள்ளாதான இருக்கு இருக்கு அப்பறம் எதுக்கு வருத்தம் :((

Rahul said...

/***நேத்தி ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சில விக்ரம், ஷ்ரேயாவை விட DD ரொம்ப குயூட்னு சொன்னார். விக்ரமுக்கு உடனடி தேவை கந்தசாமி மாஸ்க் பவர் கண்ணாடி எக்ஸ்டரா அட்டாச்மெண்ட்.**/




பாடுவதற்கும் விகரமுக்கும் என்ன சம்பந்தம்??




/***திருப்பதில ராஜசேகர ரெட்டிக்கு 1 கோடி செலவுல சர்ச், சாரி, கோயில் அமைக்கத் திட்டமிட்டிருக்காங்க. எப்படியும் திருப்பதிக்கு நல்ல கூட்டம் வருது. வரகூட்டம் இதுக்கும் எட்டிப் பாக்காமலா போகும்?***/




மக்களுக்கு மூளை கொஞ்சம் மழுங்கி வருவதால் நீங்கள் சொல்வதற்கு வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

Anonymous said...

முனி இஸ் பெட்டர்-யா. இட்லிவடைக்கு ஆர்வக் கோளாறு அதிகமாகி உளறும்போதெல்லாம் முனிதான் இப்படி லெட்டர் எழுதி ரட்சிக்கனும்.

Anonymous said...

//// Rahul said...
/***திருப்பதில ராஜசேகர ரெட்டிக்கு 1 கோடி செலவுல சர்ச், சாரி, கோயில் அமைக்கத் திட்டமிட்டிருக்காங்க. எப்படியும் திருப்பதிக்கு நல்ல கூட்டம் வருது. வரகூட்டம் இதுக்கும் எட்டிப் பாக்காமலா போகும்?***/

மக்களுக்கு மூளை கொஞ்சம் மழுங்கி வருவதால் நீங்கள் சொல்வதற்கு வாய்ப்புகள் நிறையவே உள்ளன./////

நம்மள மாதிரி நெறைய ஆளுங்க தினமும் இட்லிவடைக்கே வராங்க. என்னமோ புதுசாச் சொல்ல வந்துடீங்க.

Anonymous said...

///படத்துல இருக்கற குழந்தை பிறந்தது 9-9-9 ஒன்பது மணி ஒன்பது நிமிடத்தில் பிறந்தது.! ( Once in a lifetime chance — Hetal and Pinky Dave’s baby was born on the 9th day of the 9th month of 2009 at 9:09 minutes in Ahmedabad on Wednesday )///

அது என்னண்ணே "Once in a lifetime chance"?? நான் இப்போ வரைக்கும் எல்லாருக்கும் பொறப்பு ஒருதரம்தான் வாழ்க்கையில் என்று நினைத்துக் கொண்டு இருக்கேன்.

இன்னும் ஒரு சந்தேகம். ஏன் விநாடிகளைப் பற்றி அவர்கள் போடவில்லை? விஜாரிச்சு சொல்லுங்க.

Anonymous said...

பத்ரி ஏன் "மொபைல் கேமரா" என்று போட்டு உள்ளார்? எல்லாக் காமராவுமே மொபைல் தானே!

கடைகளில் கேமரா மொபைல் என்று சொல்கிறார்களே. அதுதானா இது? புரியும் படி கிழக்குப் பக்கம் இருந்து யாராவது சொன்னால் மக்கள் பயனடைவார்கள்.

:-D

Anonymous said...

//செப்டம்பர் 11, பாரதியர் நினைவு தினம்னு ரொம்பப் பேருக்குத் தெரியாது///

பாரதி"யார்" என்று தினம் பலர் கேட்பதால் அவர் தினத்தில் அவர் பெயரை இப்படிச் செய்து விட்டீரே ஐயா! நியாயமா?

Anonymous said...

///நம்ம சொக்கனுக்கு இதைவிட பெரிய டவுட் வந்திருக்கு. விக்ரம் படத்தில் "வனிதாமணி வனமோகினி, வந்தாடு’ ன்னு ஒரு பாட்டு வருமே, நினைவு இருக்கா ? அதில ’எனக்குள்ளே குளித்தவன்’னு ஒரு வரி, என்ன அர்த்தம்னு எல்லார்கிட்டயும் கேட்டுகிட்டு வரார். யாராவது விளக்குமாறு (விளக்கிச் சொல்லுமாறு) கேட்டுக்கறேன்.///

எங்கே போட்டியாம்? நான் அங்கேயே சொல்லி பரிசை வாங்கிக் கொள்கிறேன். திரு சொக்கனிடம் கேட்டுச் சொல்லவும்.

blogpaandi said...

//நம்ம கையில் இருந்த காசு இவர்கள் கைக்கு போனதால் இது இவர்களின் கைகாசாகியது.

எம் பணம் பணம், எம் பணம் பணம்,
எம் பணம் ஒம் பணம்
ஒம் பணம் பணம், ஒம் பணம் பணம்,
ஒம் பணம் எம் பணம்
- நவீன நாலடியார்

யதிராஜ சம்பத் குமார் said...

ராகுல் கலைஞரை சந்திக்கவில்லையா?? அடேடே!!!


பெரியார் திராவிடர் கழகத்தினருக்கு போஸ்டர் அடிக்கும் தர்மசங்கடத்திலிருந்து விடுதலை!!

Boston Bala said...

//முனி இஸ் பெட்டர்-யா.//

வழிமொழிகிறேன் :)

மணிகண்டன் said...

முனி கடிதம் சூப்பர்.

ரெண்டு கடிதமா இதையே ஸ்ப்ளிட் பண்ணலாம். ரொம்ப பெருசா இருக்கு. அதே மாதிரி அடிக்கடி நீங்க பதிவு எழுதின மாதிரியும் இருக்கும் :)-

Unknown said...

IV

Muni back to form that's good. "Unnala enakkum ketta peru" - konjam over

Informative, muni letter

Keep it up

Kamesh

Swami said...

I'm also sad along with muni. will not be forgiven for the letter to Muni...

Varatharajan said...

The Highlight sentence "Koovathil Kosu olziphu" is like clearing the clouds from sky...Anyway let govt...tries :-)

Kaliangaruiku nalla bulbaa Rahul koduthutar....., but kalingara poruthavarikum poster selavu micham....

Nadigar (sorry ...thappa solliten)Vijay ennapa anaur?...avara patti newsay illa...aduthu "vettaikaranla" busya irupar pola...

After seeiong the Vijay flims Villu, Kuruvi...etc(comedy(Serious))movies rahul rejected vijay for the goodness of his party members

கௌதமன் said...

போஸ்ட் & காமெண்ட்ஸ் - இரண்டிலுமே நிறைய உள்குத்துகள் இருப்பது போல தெரிகிறது. எனவே நான் வுடு ஜூட்.

Rajaraman said...

மொட்டை அடித்துக்கொண்டு ஆண்டி போண்டியாக விருப்பம் உள்ளவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு. அருமையாக மொட்டை அடித்து விடப்படும். Straight ஆ நடுத்தெரு நிச்சயம். (தகுதி: எஸ்.தாணு போன்ற பெரும் பணக்காரர்கள் மட்டுமே).

அணுகவும்:

ஆழ்வார்பேட்டை ஆண்டவன்
எல்டாம்ஸ் ரோடு
சென்னை.

Rajaraman said...

மொட்டை அடித்துக்கொண்டு ஆண்டி போண்டியாக விருப்பம் உள்ளவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு. அருமையாக மொட்டை அடித்து விடப்படும். Straight ஆ நடுத்தெரு நிச்சயம். (தகுதி: எஸ்.தாணு போன்ற பெரும் பணக்காரர்கள் மட்டுமே).

அணுகவும்:

ஆழ்வார்பேட்டை ஆண்டவன்
எல்டாம்ஸ் ரோடு
சென்னை.

அமுதப்ரியன் said...

இராகுலை இராகுலேத் திட்டலாமா...

அருள் said...

//பதில் சொல்ல பயந்துக்கொண்டு இல்லை. ஆங்கிலம் அல்லது ஹிந்திலதான் பதில் சொல்லணும்னு விதி இருக்கறதால. அண்ணனுக்கு இரண்டும் வராது. //


அப்ப j.k. ரித்திஸ் என்ன பண்ண காத்திருக்காரோ,பாவம்.

அருள் said...

//அழகிரி கேள்வி கேட்கறவங்களைப் பார்த்து பயந்து ஓடிடறார்னு குற்றசாட்டு வர ஆரம்பிச்சிருக்கு. பதில் சொல்ல பயந்துக்கொண்டு இல்லை. ஆங்கிலம் அல்லது ஹிந்திலதான் பதில் சொல்லணும்னு விதி இருக்கறதால. அண்ணனுக்கு இரண்டும் வராது.//

அப்ப j.k. ரித்திஸ் என்ன பண்ண காத்திருக்காரோ,பாவம்.