பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 07, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 07-09-2009


ஆண்டாள் காம(ம்)டி பற்றி இவ முனிக்கு எழுதும் அவசரக் கடிதம்.

மைடியர் முனி,

எப்படி இருக்க? போன வாரம் உன்னை ஆழ்வார் பேட்டைல பார்த்ததா சொன்னாளே, உண்மையா? நான் அந்த சமயம் டி.டி.கே சாலை சங்கரா ஹால் பக்கம் இருந்தேன். சும்மா ஏதாவது டி.வி.டி கிடைக்குமான்னு லுக்கு விட்டுகிட்டு இருந்தேன். எவ்வளவு நாள்தான் முப்பது ரூபாய் டிவிடி பார்க்கறது, கொஞ்சம் ஒரிஜினலும் வாங்கிப் பார்க்கலாமேன்னு 'மோசர் பேர்' டிவிடி கொஞ்சம் அள்ளிகிட்டு வந்தென்.

பிரஹலாத சரித்திரம் டிவிடி புதுசா வந்திருக்கு. அம்மணி விசாகா ஹரி கதை சொல்லியிருக்காங்க.விலை 99/=. அது பக்கத்திலேயே 'என் அத்தை' [ ஆங்கிலத்தில் My Aunty ( தமிழ்) ], காதல் ரோஜாக்கள்-ன்னு வித விதமான மலையாள படங்கள் எல்லாம் 'சீப்பா' அடுக்கிவெச்சிருக்கா. ஆன்மீகம் பக்கம் இந்த மாதிரிப் படங்களான்னு எனக்கு ஒரே அதிர்ச்சியாயிடுத்து. மூடவுட் ஆகி (அந்த படங்களை வாங்க முடியலையோன்னோ, அதனால) வீட்டுக்கு வந்து பதிவுலகைப் பார்த்தா இங்கயும் அதே கதை. ஒரு மாறுதலுக்கு ஆண்டாளை இந்த முறை வம்புக்கு இழுத்திருக்கா. இவா இப்படி எழுதிண்டே போனா நான் கொஞ்ச நாள்ல பதிவை மூடிட்டுப் போய்ட வேண்டிதுதான். இவா காமெடிக்கு ஒரு அளவே இல்லாம போயிண்டிருக்கு.

சும்மா இந்து மதம்னு ஜல்லி அடிக்கறவாளுக்கு இந்து மதம் பத்தியும் தெரியாது, காமமும் தெரியாது. அதான் பிரச்சனை. ஆண்டாளை எப்படி சொல்லப்போச்சுன்னு ஒரே சண்டை. அவா பாட்டுக்கு பெரியாரை எதிர்த்து கட்டுரை போடறதோட நிறுத்திக்கப்டாதோ? சரி, அவா [edited]. அவாளை விட்டுடலாம்.

நாச்சியார் திருமொழில ஆண்டாள் காமதேவனை திருவேங்கடத்தான்கிட்ட தன்னை சேர்ப்பிக்கும்படி வேண்டிக்கறாதான். இதுல வயசுக்கு வந்த பொண்ணோட காமம் இருக்கறதும் உண்மை. அட ராகவா, அதைச் சொல்ல இவ்ளோ தயங்கவேண்டிய அவசியம் என்னவந்தது? சும்மா சதுர்தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லிடவேண்டியதுதானே. நாம எடுத்துச் சொன்னாதானே, அட பக்திக்காக வேணாம்யா, அட இலக்கியத்துக்காகக்கூட வேணாம்யா, ஒரு பாலியல் பலான பலான மேட்டர்னாவது நம்ப திராவிடக் குஞ்சுக அதைப் புரட்டிப் பாக்குங்க. இதைத்தானே அவரும் செஞ்சிருக்கார். இந்த அவரோட நல்ல நோக்கம் தெரியாம நூல் போட்டது போடாதது எல்லாம் ஆளாளுக்கு ...

ஒரு பாடல்ல (507) "இளம் பருவம் தொடங்கி விரும்பிக் கிளர்ந்த என் பருத்த முலைகள், துவாரகைத் தலைவனை நுகரத் தக்கவை" ன்னு சொல்றா. அடுத்த பாடல்ல,

"தேவர்களுக்கு கொடுக்கும் புனித வேள்வியின் பொருளைக் காட்டிலே திரிகின்ற நரி புகுந்து அதனை முகர்வதும் சுவைப்பதும் போல ... என் கிளர்ந்த என் பருத்த முலைகள் பெருமாளுக்கே அவை மனிதனுக்கு இல்லை"(508),

"மூன்று உலகங்களையும் திருவடிகளால் அளந்து கொண்ட திரிவிக்ரமன் தன் திருக்கைகளாலே என்னை தீண்டுமாறு செய்ய வேண்டும் ஒளியுடைய வயிறும், மென்மை பருமை பொருந்திய முலைகளும் அவனால் நுகரும்படி செய்து..." (510)

வேறு ஒரு பாட்டுல, "காமத் தீ என் உள் புகுந்து கவ்வ, அதனால் துன்புற நான் துன்பப் படுகிறேன்". "உன்னுடைய உமிழ் நீர் எப்படி இருக்கும், நான் சுவைத்துப் பார்க்க வேண்டும்"...

இப்படி அடுக்கிக்கிண்டே போகலாம்.

ஒரு பெண் தன் அந்தரங்க உறுப்புகள் எல்லாம் தன் ஆம்படையானுக்கு மட்டும்தான் சொந்தம்னு வாழறவ. அதே போல ஆண்டாள் அவை எல்லாம் பெருமாளுக்கே சொந்தம்னு வாழ்ந்தவ. காமம்னு பார்த்தா இது காதல், ஆன்மீகம்னு பார்த்தா இது பக்தி. ரெண்டும் ஒன்னுதான்.

நாச்சியார் திருமொழில உள்ள மொத்த பாடல்கள் எவ்ளோ தெரியுமோ?
143 - I(1) Love(4) You(3).


அவசரமாக விடை பெறும்,
இவ

44 Comments:

Prakash G.R. said...

பதிவ விட மஞ்ச கமெண்ட்க்கு தான் நான் விசிறி :-)

BTW, I don't know whether its intentional or not. I can't read your entire blog entry in RSS reader. Only few lines are displayed there and then I've to come back to your site to read the whole thing. Probably a trick to increase the visits?

Rahul said...

ஏம்பா.. எல்லோரும் வள்ளுவர் என்ற ஒருத்தரை மறந்துவிட்டீர்கள்!!!

Idlyvadai you too!!!!

Rahul said...

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.


மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.


இதையும் யாராவது எதாவது சொல்லுங்களேன்....

போன வாரம் தான் ஒரு பதிவு இட்லிவடை கடிதங்கள் னு ஒருத்தர் போட்டார், (இந்தியன் பட கவுண்டமணி சந்துருனு ஒரு மானஸ்தன் காமெடியை ஞாபகபடுத்திக்கொள்ளவும்) இங்கே இட்லிவடை, இட்லிவடை னு ஒரு மானஸ்தன் இருந்தாரு இப்ப அவர கானாமெனு தேடுகிறேன் யாராவது கண்டுபிடிச்சா தயவுசெய்து சொல்லுங்க!!!!

Baski said...

வாழ்க உங்கள் க(கொ)லைச் சேவை!!!!

அப்பப்ப திரு பா.ரா அவர்களுக்கு ஏதாவது கோளாறு ஏற்பட்டுவிடுகிறது, தான் வித்யாசமானவன் என்ற கி(று)க்கு ஏறி விடுகிறது என்ன செய்ய? இன்னும் கொஞ்சம் விட்டால் பாவம் ஆண்டாள், விரக தாபத்தில் ஏதோ பாடி விட்டார் என்று ஏதாவது கட்டுரை எழுதும் முன் அவரை கடவுளே காப்பாற்று!!

Srinivas said...

Hi Idly vadai.

The prema bakthi which Aandal has with Krsna, it not something like we human or animal has love with other sex.

Even when Jayadevar written Gita Govind, he explained very nice way about the love between Radha and Krsna. ( Krsna licks Radha toe ). If you don’t reach the state of bhakthi, everything will be lust oriented and always comparing with so called our modern love. But it is not at all lust, when your love is overwhemling, and you are helpless, you are trying to show your love in someway, these words should come...

There are lot of stages in love, among them when you are becoming wife of the person, the wife should be tasted by husband. This is called purusa bhakthi. Here Andal treats Krsna who is actual pursa of all the Jeevathama. That is the reason we call Krsna as purusothama. I am sure you may not aware any of the Prema bhakthi. Because writing show you need to know lot.

When you take the part of the line in any of the context, you will defiantly misunderstood. The same has happened here also.

Even i suggest you please read Na. Kannan Blog. He does lot of research on Prabhandam. He will give nice example.

If you need a matter for your post, you can browse and gather lot. Or if you have time, you can really get plenty of topic.

But as a good reader of IV. Please don’t post anything without reading or knowing properly other ask people to contribute as now a days doing.

There were very matured writing in this blog. But this one post spoiled all the old posts.

Srinivas

Swami said...

Having a feeling that IV is going to remove this post .. May be waiting for Mamis ( not swami ) :).. Anyhow i read it .. and wouldnt have regretted for missing if it was already removed

Anonymous said...

இந்த போஸ்ட் இட்லி வடைக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.
அவ்வளவுதான் சொல்லுவேன்.
இ வ அனுதாபி.

Anonymous said...

Looks like shitting in public.

Jayashree Govindarajan said...

impotent என்பதும் மற்ற குறைப்பார்வை, காதுகேளாமை மாதிரி ஒரு உடல்சார்ந்த குறைபாடு மட்டுமே. ஏளனத்திற்கு பயன்படுத்தத் தேவை இல்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.

தமிழ்ஹிந்துவை அப்படிச் சொல்வதற்குமுன் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை உங்கள் கூட்டத்தில் ஒருவர்கூடவா அறிந்திருக்கவில்லை.

Shocking!

IdlyVadai said...

//impotent என்பதும் மற்ற குறைப்பார்வை, காதுகேளாமை மாதிரி ஒரு உடல்சார்ந்த குறைபாடு மட்டுமே. ஏளனத்திற்கு பயன்படுத்தத் தேவை இல்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.

தமிழ்ஹிந்துவை அப்படிச் சொல்வதற்குமுன் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை உங்கள் கூட்டத்தில் ஒருவர்கூடவா அறிந்திருக்கவில்லை.

Shocking!//

மாமியோ சாமியோ இந்த முறை பதிவுக்கு எந்த பாதிப்பும் வராது என்பதை தெவிவித்துக்கொள்கிறேன்.
இவ.

SUBBU said...

என்னய்யா இட்லிவடை நடக்குது இங்க!!!!!

வர வர ‘இவ’ அன்புடன் அந்தரங்கமாகிடும் போல தெரியிது :((((

Anonymous said...

/***IdlyVadai said...
மாமியோ சாமியோ இந்த முறை பதிவுக்கு எந்த பாதிப்பும் வராது என்பதை தெவிவித்துக்கொள்கிறேன்.
இவ.**/


தல என்ன சொல்ல வர்ரீங்க???வர வர ஆடியன்ஸ்க்கு புரியாத மாதிரியே பேசுறீங்க?? என்ன ஆச்சு உங்களுக்கு??

யதிராஜ சம்பத் குமார் said...

ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கு என்று உன்னித்தெழுந்த என் தடமுலைகள் மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே.....

Anonymous said...

dont write any post for
your cheap publiciy

Anonymous said...

மேட்டர் என்னன்னு புரியல. ‘பருத்த முலை’ன்னு பாத்தவுடன xxx மேட்டர்னு நினச்சி போஸ்ட் போட்டிங்கப் போல. உங்களுக்கும் கிக்கான சீன் (மட்டும்) இருக்குமான்னு தியேட்டர் தியேட்டரா தேடிப் பாக்குற ரசிகனுக்கு வித்தியாசம் எதுவும் தெரியல. நீங்க ஃபிலிம் ஃபெஸ்டிவெல்ல ஆர்ட் ஃபிலிம்ல மேட்டர் சீன் தேடற வறட்டுக் கேஸ் போல. இன்னும் நெறய்ய்ய தூரம் நீ வளரனும்பா. இதுல impotent ன்னு வேற நக்கல். அதுல என்ன காமெடியோ.

சுந்தரவரதசீனிவாசகோபாலநரசிம்மன் said...

இதெல்லாம் ஒரு பொழப்பு... பா.ரா. தான் திராவிடக்குஞ்சுகளின் பட்டியலில் சேர மனுப்போட்டுக்கொண்டிருக்கிறார் என்றால் அதை நியாயமாக எதிர்கொண்டிருக்கிற தமிழ் இந்துவை கிண்டல் செய்வதுதான் இட்லிவடைக்கு அழகா???

அப்ப ஹிட்டுக்காக என்னமும் செய்வீங்கன்னு சொல்லுங்க..

இட்லிவடைக்கு வந்த கதியப்பாரேன்....இதெல்லாம் ஒரு பொழப்பு...

கானகம் said...

// மாமியோ சாமியோ இந்த முறை பதிவுக்கு எந்த பாதிப்பும் வராது என்பதை தெவிவித்துக்கொள்கிறேன்.
இவ.//

அதாவது என்ன வேனுமானாலும் சொல்லுவோம் .. நல்லது சொன்னால்கூட கேட்கமாட்டோம் என்பதன் சுறுக்கமோ இது இட்லிவடை???

இட்லிவடையின் தரம் தாழ இதுபோன்ற கட்டுரைகள் ஓரிரண்டு போதும்..

//சரி, அவா impotent. அவாளை விட்டுடலாம்.//

தமிழ்ஹிந்து எழுதிய எதிர்வினையில் என்ன Impotent கண்டுவிட்டீர்கள்???

வருத்தங்களுடன்,

ஜெயக்குமார்

Anonymous said...

IV,

Are you applying for Murasoli by any chance?
Sure you would get plumb post.

Before reading/understanding any text/event/incident, one should try to understand the context in which the text was written, the context in which an incident/event occurred.

With all due respect to all the Doctors in the world, I say the foll.

By the same token, one can say that all doctors who examine a female patient's body, do so with different intention. Because they do that everyday. Do you wanna mean that they try to rape the female patients everyday.

Here the the purpose is what differentiates from Doctors and people like IV.

Idlyvadai follower said...

It is very bad to write like this... Brahman language is always used to tease Brahmans as well as others too.. By making mimic of Brahman language what do you want to communicate??

Idlyvadai's standard revealed by this post.. Very sad..

I don't know to whom you have outsourced this job.. He spoiled your name, if any.

திருச்சிக்காரன் said...

இட்லிவடைக்கு வாழ்த்துக்கள்.. பார்ப்பணீய வலைப்பதிவு என்ற இமேஜிலிருந்து வெளிவர முயல்வதுபோல தெரிகிறது.. ஆனால் அதற்கு எதற்கு பிராமணர்களை கிண்டல் செய்ய வேண்டும்?

அந்த ஆண்டாள் உங்களுக்கு நல்ல புத்தியை அருளட்டும்

Anonymous said...

// பாலியல் பலான பலான மேட்டர்னாவது நம்ப திராவிடக் குஞ்சுக அதைப் புரட்டிப் பாக்குங்க. இதைத்தானே அவரும் செஞ்சிருக்கார். இந்த அவரோட நல்ல நோக்கம் தெரியாம நூல் போட்டது போடாதது//

ஐய்யோ தாங்க முடியலயே!

Anonymous said...

ஒரு பெண் தன் அந்தரங்க உறுப்புகள் //எல்லாம் தன் ஆம்படையானுக்கு மட்டும்தான் சொந்தம்னு வாழறவ. அதே போல ஆண்டாள் அவை எல்லாம் பெருமாளுக்கே சொந்தம்னு வாழ்ந்தவ.//

யோவ் இவ, அவை இரண்டும் அந்தக்காலத்தில் அந்தரங்க உறுப்புகளே இல்லைய்யா. அப்ப எல்லோரும் டப்லெஸ்ஸாத்தான் அலைஞ்சாங்க!

Rahul said...

எனக்கு ஒன்றும் தப்பாக படவே இல்லை, எதற்கு இப்படி எல்லோரும் பொங்கி எழுகிறீர்கள்? திட்டி எழுதுகிறவர்களே உண்மை காதல்னா என்னனு சொல்றீங்களா? எல்லாமே காம உணர்வு தான். சும்மா காதல், ஆன்மீகம் என்று பீலா விடாதீர்கள், உயிரினும் மேல் காதல் என்று சொல்பவன் அறிவிலி இதில் தெய்வீகமும் உள்ளடக்கம்.....காதல் தான் என்றால் "துவாரகைத் தலைவனை நுகரத் தக்கவை", "காமத் தீ என் உள் புகுந்து கவ்வ, அதனால் துன்புற நான் துன்பப் படுகிறேன்". "உன்னுடைய உமிழ் நீர் எப்படி இருக்கும், நான் சுவைத்துப் பார்க்க வேண்டும்" என்று ஏன் சொல்ல வேண்டும், வேறு யாராவது சொன்னால் காமம் நாச்சியார் சொன்னால் காதல் அடேங்கப்பா!! அடுக்குமா இது.

உங்களுக்கு யாரையாவது திட்டி பதிவுபோட வேண்டும், உடனே Good idlyvadai!! மஞ்சள் கமெண்ட் சூப்பர் என்று சொல்வீர்கள்! அது தானே வேண்டும் உங்களுக்கு?

Erode Nagaraj... said...

ஆ(1)... தாங்கல(4), இட்லி(3) என்பது கூட 143 தான்...

Erode Nagaraj... said...

டியர் இட்லி,

காமம் மூலாதாரத்தோடு தொடர்புடையது. யோகமோ மந்திர ஜபமோ அல்லது அவன் நினைவாகவே ஆன்மீகத்தில் திளைத்தலோ, மூலாதாரத்தைத் தூண்டவே செய்யும். அப்போது காமமும் கிளர்ந்தெழவே செய்யும். (கிளர்ந்து-'எழவே' செய்யும் என்று படிக்க வேண்டாம்).

எங்கிருக்கிறோம் என்ற பிரக்ஞையற்ற நிலை நல்ல கூடலில் ஏற்படும். அது, இருவர் என்ற எண்ணத்தையும் மறைக்கும். இது தான் தானற்றுப் போதலில் உச்சபட்ச மனித அனுபவம். எது பெரியதாய் அறியப்பட்டிருக்கிறதோ அதைச் சொல்லி, அதைப் போல பல்லாயிரம் மடங்கு இருக்கும் இறையோடு கலக்கும் அந்தப் பேரின்பம் என்பதைச் சொல்வது தான் நோக்கம்.

ஆண்டாள் சிறுமியாகவோ வளர்ந்ததொரு பெண்ணாகவோ இருக்கலாம். இந்த காதலும் கூடலும் தைல தாரை போல் இடையறாது இனிக்குமாயின், அது பரம்பொருளிடம் உண்டாகட்டும் என்று பாடியிருக்கலாம். சஞ்சரிப்பது உன்னுடைய இயல்பு, அதை மாற்றமுடியாதெனில், அவ்வாறே ஆகட்டும் மனமே... பிரம்ம வஸ்துவிடத்தில் சஞ்சரிப்பாய் என்று சதாசிவ பிரம்மேந்திரர் "மானச சஞ்சரரே - ப்ரஹ்மணி மானச சஞ்சரரே"வில் பாடுவதைப் போல.

அன்புடன்,

ஈரோடு நாகராஜன்.

Loganathan - Web developer said...

தயவுசெய்து ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நிகழ்வுகளை கிண்டல் செய்யாதிர்கள்...

Ravi said...

//Rahul said...
உங்களுக்கு யாரையாவது திட்டி பதிவுபோட வேண்டும், உடனே Good idlyvadai!! மஞ்சள் கமெண்ட் சூப்பர் என்று சொல்வீர்கள்! அது தானே வேண்டும் உங்களுக்கு?
//
சமிபகாலமாக
அரசியலை தவிர்த்து
திரு.இன்பா எழுதிவரும் பதிவுகள்
இட்லிவடையில்
நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளன.

அறிவுஜீவித்தனம் என்று நினத்துக்கொண்டு
இதைபோல
சாக்கடை பதிவு போட்டால் இப்படித்தான் ஆகும்

வீரராகவன் said...

காமம் என்பதற்கு நிறைவு குறைதல் என்பதே பொருள்.
ஆதாரங்கள் - `கமம் நிறைந்தியலும்` - தொல்காப்பியம்.
# முனைவர் மொ.அ.துரை அரங்கசாமி எழுதிய `காமத்துப் பாலா, இன்பத்து பாலா` என்ற ஆராய்ச்சி நூல்.
காமம் என்ற தமிழ் சொல் இழிவான சொல் அல்ல.
இலக்கியங்களின் உண்மைப் பொருளை உணராது நுனிப்புல் மேய வேண்டாம்.

Anonymous said...

This is a new low for idlyvadai

Anonymous said...

// நான் அந்த சமயம் டி.டி.கே சாலை சங்கரா ஹால் பக்கம் இருந்தேன். --- பக்கத்திலேயே 'என் அத்தை' [ ஆங்கிலத்தில் My Aunty ( தமிழ்) ], காதல் ரோஜாக்கள்-ன்னு வித விதமான மலையாள படங்கள் எல்லாம் 'சீப்பா' அடுக்கிவெச்சிருக்கா. //


-- வாலிப அன்பர்கள் கவனிக்க..- மலையாள பட சீடிகள்..விற்பனைக்கு..


யோவ் இட்லி...(உரிமையுடன் ரெகுலர் வாசகன்..) எவ்ளோ காசு வாங்கினீர்.. விளம்பரம் போட ??


மானஸ்தன் அண்ணே.. இதெல்லாம் கேட்குறது இல்ல ?

Unknown said...

இ,வ,

தங்களுக்கு என்ன தான் ஆனது, ஏன் இப்படி, தாங்கள் முரசொலியில் வேலைக்கு வின்னபிதுல்லிர்களா என்ற கேள்வி கேட்கும்டி ஒரு , பதிவு தேவையா திராவிட குஞ்சுகள்பத கேட்பது வேறு, நீங்கள் இந்த பதிவில் கேட்பது வேறு, ஆண்டாள் கண்ணனிடத்தில் கொண்டுள்ள பக்தியை (இந்த வரிகளை தனி தனியாக பிரித்து படித்து கண்டுபிடிக்கும் அர்த்தம் வேறு அதுவே தெய்வத்திடம் பக்தன் (அ) bakthai கொண்டுள்ள ஈடுபாடு வேறு) கேளவிக்க்குரியக்குவத்தில் தங்களுக்கு அப்படி என்ன ஒரு திருப்தி இதில் அந்த இடத்தில் மலையாளப்படம் இருந்தது குறித்து ஒரு ஆதங்கம், தங்கள் எழுதி இருப்பதும் கிட்ட தட்ட ஒரு மலையாளபடத்தில் வரும் நேர்முக வர்ணனை போன்று தான் உள்ளது. இதில் மாமி வந்து சொன்னாலும் சாமி வந்து சொன்னாலும் எதுவும் நிகழாது என்று வீம்பு வேறா ..

அவனவன் பேசும் வார்த்தையே போதும் இதில் இந்த பதிவு அதுவும் இட்லிவடையில் தேவையா...

காமேஷ்
போட்ஸ்வான

Anonymous said...

IV,
Ithukku munnadi itha paathirukeengala nu theriyathu...any how have fun....this is a song from tamil movie..Name of the movie is yarukku yaro..

http://www.youtube.com/watch?v=HwjszYVHVUA&feature=related

Sethu Raman said...

Para started writing about Prabhakaran - and within a short while bothPrabhakaran and Para's articles disappeared!! It was a good blog this long, but I doubt whether it will be any more !! and let it not happen to I.V.

பித்தனின் வாக்கு said...

என்ன பதிவோ எழவோ, உங்க எல்லாரையும் படா ல உள்ள தள்ளனும். படா அப்பிடினா பதிவர் தடை சட்டம்.

R.Gopi said...

அம்பி இட்லிவடை...

ஒமக்கு இந்த பதிவு தேவையா? இதுல சாமி, மாமி தொந்தரவு இருக்காது...அதனால எடுக்க மாட்டேன்னு ஒரு ஜம்பம் வேற...

என்னமோ போங்கோ.... கலி கத்தரிக்காய விட ஜாஸ்தியா முத்திடுத்து....

இது போன்ற ஒரு நிகழ்வு எங்கு நடந்தாலும், முதல் ஆளாய் நான் வருவேன் அப்படின்னு சொல்லிட்டு போன "மானஸ்தன்"ற ஒருத்தரையும் ரொம்ப நாளா காணும்...

நாகு அண்ணா?? எனி நியூஸ்??

cho visiri said...

Naayakan Nayyika prabhaavam (paavam,i.v.... ungallukku idhu pattriellam therindirukkadu) Azhvaarkall matrum Naayanmargal ilakkiyangalai padiththavargallukku puriyum.

Aandaal Stree yaga iruppathanaal ungal iththagaya vakkrama postai ittulleergal pollum?!?

Nannbar oruvar sonnathu pola, nunipul meyvathai niruththikkollavum.

Anonymous said...

Romba kevalamana post... what did you achieve by writing this ?

You have lost your standards !!!

Anonymous said...

If a community is ignoring all bad remarks and keeping quite dosent mean its impotent, this is not a right word to be used.

Idly vadai sir - If someone ignores what you say... thats the best insult that you can ever get Remember IGNORING IS THE BEST INSULT.

Erode Nagaraj... said...

டியர் கோபி,

இட்லி சில சமயம் இப்படித்தான் கல்லாக இருக்கும்.. என் பதிலைப் படித்தீர்களா?

Anonymous said...

Idlyvadi, always gets agitated whenever Tamilhindu is referred. Many times in the past IV spitted venom on Tamilhindu - stooping to the lowest level that TH is not referred by anyone, they add Mumtaj stories so on and so forth. This time also it gets one nasty urge to comment something about tamil hindu. Idlyvadi -Romba oosi pona vadai.

Swami said...

IV .. this post was not expected from you.. I thought you will correct by removing it :(

Anonymous said...

It is true that there was a perverted mention about the comments made by the author. But after all he is still under (Maya – illusion about I and mine) and from an aspiring devotee point of view, I am forced to look at something good from the article.

First of all he has provided the picture of an ardent devotee of the Lord Sri Krishna, and tried to reserve all comments under the aegis of mention of God’s name. And, I humbly believe to consider all the Alwars as the plenary expansions of Lord Sri Krishna similar to Prabhu Nityananda, Sri Advaita Gadadhara, Srivasa along with Sri Krishna Chaitanya as another plenary expansion of God.

For IV it is fortunate that he is attracted by one of the opulence of Sri Krishna who is the most opulent of all the opulence. In other terms, he is attracted by the Madhurya ras of Lord Sri Krishna. Any way, he has been attracted and the very thought of God in any way will get him corrected and surrender unto him finally.

I start marveling that under the name of God, we are not able to see anything Good or Bad. Its just about the presence of God’s thought, name in any form which adds divinity to anything.

As, Srila Prabhupada was quoting Shrimad Bhagavatam, in one of the pastimes, about the story of a thief who was attracted by the wealth of Lord Sri Krishna.

He heard about the child Sri Krishna in Vrindavan and was very much attracted about the jewelry of the Lord and planned to steal some posing as a normal cowherd. But on seeing Lord Krishna, though his desire for jewelry still present he is not able to take away anything from child Sri Krishna. The lord makes him Surrender, for, after all he has come to Krishna for what he wanted as how a child goes to the rightful father.

So, anyway, IV has mentioned something about God, and by the merciful blessings of the God and the mercy of countless devotees of Lord Sri Krishna, let him realize what true love for God is about.

Hare Krishna.

- An aspirant for surrendering at the lotus feet of the Lord.

Unknown said...

Iv,

Maanasthan enga sir poneenga, en eppadi...

( I hope there is no typographical error anywhere)

Kamesh

ஸ்ரீனி said...

இட்லிவடை, இந்த முறை நீங்களே குப்பைத்தொட்டியாக எல்லாரும் காறித்துப்பும்படியாக உட்கார்ந்து விட்டீர்கள்.