வழக்கம் போல்இந்த வார இரண்டு செய்திகள் ...
செய்தி # 1
சமிபத்தில் ஒரு உறவினர் வீட்டுக்கு நான் சென்றிருந்தபோது அவர் மனைவி தன் 'மகள் நல்லா பாடுவா..கேக்கறிங்களா' என்றார். சரி என்று நான் சந்தோஷமாக சொல்ல, அந்த மூன்று வயது பெண்குழந்தை பாடிய பாடல், 'அம்மி..அம்மி..அம்மி மிதித்து.......' (சன் டிவியில் மெட்டிஒலி மறுஒளிபரப்பு).
சாப்பாடு, தூக்கம் போல டிவி பார்ப்பது நம் மக்களுக்கு அன்றாட வாழ்வில் தவிர்க்கமுடியாத அம்சம் ஆகிவிட்டது. தாத்தா முதல் பேத்தி வரை நேரடியாக 'ரீச்' ஆகும் டிவிக்கு சென்சார் மற்றும் கட்டுபாடுகள் எந்த அளவுக்கு அவசியம் என்பதை என்றைக்காவது நாம் யோசித்தோமா?
டிவிக்களில் வன்முறை காட்சிகளும், வரம்புமீறிய ஆபாச காதல் காட்சிகளும் பெருகிவிட்டது. இது போன்ற நிகழ்ச்சிகளை தடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த வக்கீல் அலெக்ஸ் பென்ஷிகர், பாதிரியார் பான்கிராஸ், ஆரோக்கிய தாஸ் மற்றும் லினாடு வசந்த் ஆகியோர் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது...
மக்களின் முக்கிய பொழுதுபோக்கு சாதனம் டிவி தான். ஆனால், இவை எந்த தணிக்கையும், சுய கட்டுப்பாடும் இல்லாமல் செயற்கைகோள் இணைப்பு மூலம் ஒளிபரப்பாகி வருகின்றன. தற்போது இதில் ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகள் அதிகரித்து வருகின்றன. குற்றவாளிகளுக்கு பரிதாபம் காட்டுவது, ஒழுக்கம் தவறி நடப்பது போன்ற காட்சிகள் நிறைய வருகின்றன.
முறையற்ற நடனங்கள், பெண்களை சித்ரவதை செய்வது , கொலை, மது, புகைப்பிடிக்கும் காட்சிகள், வரம்பு மீறிய காதல் காட்சிகள் போன்றவையும் அடிக்கடி ஒளிபரப்பப்படுகின்றன.
இது போன்ற காட்சிகள் கதைக்கு தேவையில்லாத சமயத்திலும் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் இவர்கள் மீது கேபிள் டிவி ஒளிபரப்பு சட்டத்தின்கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுபோன்ற காட்சிகளினால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதுடன், குடும்ப உறவு, மாமியார், மருமகள் உறவு போன்றவை சீர்குலையும். எனவே சமுதாய நலன்கருதி இதுபோன்ற காட்சிகளை தடை செய்யவேண்டும் என்று சம்பந்தப்பட்ட டிவிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினோம்.
திருமண வாழ்க்கை முடிவுகள் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டிவியில் வரும் தேவையில்லாத காட்சிகளை பார்ப்பது மூலம் பலர் விவாகரத்து செய்யும் அளவிற்கு மனநிலை பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளின் மனநிலையையும் பாதிக்கிறது.
எங்களது நோட்டீஸ்க்கு இரண்டு டிவிக்கள் மட்டும் பதில் அளித்தன. ஆனால் அவர்கள் பதிலும் திருப்தியாக இல்லை. எனவே தேவையில்லாத, விரும்பத்தகாத காட்சிகளை ஒளிபரப்ப தடை செய்யவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எச்எல் கோகலே, நீதிபதி டி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மத்திய அரசு, மத்திய சினிமா தணிக்கைத்துறை, பிரச்சார் பாரதி ஆகியவை நான்கு வாரத்தில் பதில் தரும்படி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
ஊழல் செய்யாத அரசியல்வாதிகளை எப்படி பார்க்க முடியாதோ..அதை போலவே கள்ள உறவுகளை பேசாத டிவி சீரியல்களை பார்க்க முடிவதுஇல்லை . கலைஞர் டிவியில் 'காலம் கடந்துபோன(!)' குஷ்பூவே அரைகுறை ஆடையில் வரும் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியை நம்பர் ஒன் என்கிறார்கள். இதைபார்த்துவிட்டு எல்லா தொலைக்காட்சிகளும் டான்ஸ் என்ற பெயரில் 'காற்றோட்டமாக' ஆடவிடுகிறார்கள். (பாமகவின் ஒரே சாதனையான மக்கள் தொலைக்காட்சி ஒரே ஒரு விதிவிலக்கு).
ஆபாசத்திலும், வன்முறை காட்சிகளிலும் சினிமாவை மிஞ்சிவிட்ட, எதிர்கால தலைமுறையையே மூளைமழுங்க செய்துவிடக்கூடிய டிவி சேனல்களுக்கு சென்சார் வேண்டும் என்பதை உணர்ந்து, வரவேற்போம்.
செய்தி # 2"ஆசையே துன்பங்களுக்கெல்லாம் காரணம்" என்றார் புத்தர். நிரந்தரமின்மையே நிரந்தரம் என்று அறிவு உணர்ந்தாலும், மனம் உணருவதுஇல்லை. பணம், புகழ் எவ்வளவுதான் கிடைத்தாலும் நாம் திருப்தி அடைவதுஇல்லை.
பிரச்சினைகளுக்கு பயந்து தற்கொலை செய்துகொள்ளும் கோழைகளை விட்டுத்தள்ளுவோம். இங்கே ஒருவர் 'போதும்..இதுவரை நாம் திருப்தியாக வாழ்ந்துவிட்டோம்' என முடிவு செய்துஇருக்கிறார்.
அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். ஒரு சிறந்த கண் மருத்துவராக பணியாற்றியவர். காந்தி பிறந்த மண்ணை சேர்ந்த 94 வயது டாக்டர் துவாரகாதாஸ் ஜோஷிதான் அவர். மேலே படியுங்கள்..
மகாத்மா காந்தி, வினோபாபவே ஆகியோரின் சீடரான 94 வயது சுதந்திரப் போராட்ட தியாகி டாக்டர் துவாரகாதாஸ் ஜோஷி, தனது வாழ்க்கையை உண்ணாவிரதம் இருந்து முடித்துக் கொள்ள விரும்பி சாகும் வரை உண்ணவிரதம் இருந்து வருகிறார்.
சுதந்திரப் போராட்ட வீரரான டாக்டர் ஜோஷி, சிறந்த கண் மருத்துவரும் ஆவார். மகாத்மா காந்தி, வினோபாபவே ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இவர் தனக்கு அப்போது கிடைத்த மிகப் பெரிய மருத்துவமனை வேலையை விட்டு விட்டு ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் சேவையைத் தொடங்கினார்.
சுதந்திரப் போராட்டத்தில் தீவீரமாக பங்கேற்றார். தற்போது 94 வயதாகும் ஜோஷி, தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள தீர்மானித்தார். இதற்காக, 1982ம் ஆண்டு தனது குருவான வினோபாபவே உண்ணாவிரதம் இருந்து மரணத்தைத் தழுவிய முறையை தானும் கடைப்பிடிக்க தீர்மானித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
கடந்த 2 வாரங்களாக ஜோஷி சாப்பாடு எதையும் உட் கொள்ளவில்லை. வெறும் தண்ணீர் மட்டும் அருந்தி வருகிறார்.
குஜராத்தின் விஸ்நகரில் உள்ள ஜோஷியின் வீட்டில் அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரது உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வந்து ஜோஷியைப் பார்த்து வணங்கி வருகின்றனர்.
ஜோஷியின் முடிவு குறித்து அவரது மகன் டாக்டர் மிஹிர் ஜோஷி கூறுகையில், சமீபத்தில் அவர் சமையலறையில் வழுக்கி விழுந்து விட்டார். இதில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து இதுவரை வாழ்ந்தது போதும் என்று நினைக்கிறேன். மரணத்தைத் தழுவ விரும்புகிறேன் என்றார்.இதையடுத்து உடனடியாக சாப்பிடுவதை நிறுத்தி விட்டார். வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து வருகிறார். வேறு எதுவும் சாப்பிடுவதில்லை. வினோபாபவே வழியில் தானும் மரணத்தைத் தழுவ தீர்மானித்திருப்பதாக அவர் கூறுகிறார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஜோஷி, கிட்டத்தட்ட 4 லட்சம் பேருக்கு இலவசமாக கண் அறுவைச் சிகிச்சையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'சுடுகாட்டுக்கு நடந்துபோக தெம்பிருக்கும் போதே செத்துப்போ' என்று ஒரு கவிதை
படித்துஇருக்கிறேன். இந்த வயதில் தானும் கஷ்டப்பட்டு, மற்றவரையும் கஷ்டப்படுத்த வேண்டம் என நினைக்கிறார் ஜோஷி. இது தற்கொலை முயற்சி என தடுத்து நிறுத்துமாறு குஜராத்தில் ஒரு கோரிக்கை எழுந்துஉள்ளது.
சுதந்திரப் போராட்டம் என்பது நாம் வரலாற்று புத்தகங்களில் படித்த ஒரு சிலரால் நடத்தபட்டது இல்லை. நம் 'கண்ணுக்கு' மறைவாக அல்லது மறைக்கப்பட்ட காந்திகளும், நேதாஜிகளும் ஆயிரம் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் தியாகி ஜோஷியை போல.பாரதமாதாவுக்கு வந்தனங்கள்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, September 06, 2009
சண்டேனா இரண்டு (06-09-09)- செய்தி விமர்சனம் - இன்பா
Posted by IdlyVadai at 9/06/2009 06:54:00 PM
Labels: இன்பா, செய்திவிமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
26 Comments:
நல்ல செய்திகள்... சண்டேனா இரண்டு.. இதென்ன தலைப்போ?? ஆனால் நன்றாக இருக்கிறது.
ஜெயகுமார் - 'சண்டேனா ரெண்டு' என்பது தினமலரின் விளம்பர வாசகம். நிற்க.
முதல் செய்தி - தொலைக் காட்சி தணிக்கை - வேண்டியதுதான், நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அல்ல - விளம்பரங்களுக்கும் கூட. இரண்டாவது செய்தி - நல்ல மனிதர், நல்ல இலட்சியம் - ஒரே ஒரு சந்தேகம் - ஐம்பது ஆண்டுகளில் நான்கு இலட்சம் கண் அறுவை சிகிட்சை - என்றால் - விடுமுறையே இல்லாமல் - ஆப்பரேசன் செய்திருந்தால் கூட - ஒரு நாளைக்கு இருபத்திரண்டு ஆப்பரேசன் என்று வருகிறது. ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேர வேலை என்று வைத்துக் கொண்டால் கிட்டத் தட்ட அரை மணி நேரத்தில் ஒரு ஆப்பரேசன் என்று வருகிறது. இது - வேறு எந்த வேலையும் இல்லாமல் - வருடத்தின் எல்லா நாட்களிலும் சிகிட்சை செய்திருந்தால் --- எனவே, கணக்கு எங்கேயோ சரியில்லை என்று தோன்றுகிறது.
jayakumar,
சண்டேனா = சண்டே என்றால்....
தொலைக்காட்சிகள் 'தோலைக் காட்சியாக்கும்' நிகழ்ச்சிகள் வளர்வதற்குக் காரணம் மூளையில்லாமல் அதைப் பார்க்கும் வயதானவர்களும் பெற்றோர்களும் தான்.
குடும்பத்தோடு பார்க்க வேண்டிய நிகழ்ச்சி அல்லது படம் (கண்டிப்பாக வேறொருவர் குடும்பத்தோடு) என்று அடியில் எழுதிப் போட்டால் தீர்ந்து போச்சு..
dhwarakadoss:
உடல் உபாதையால், உடன்படவியலா பாதையைத் தேர்ந்தெடுப்பது ஒரு விதத்தில் தனி மனித சுதந்திரம் என்றாலும், மறைந்து போவது உடல் மட்டுமல்ல,பல்லாண்டு கால முதிர்ந்த எண்ணங்களின் தொகுப்பான அனுபவங்கள் செறிந்த ஒரு மனம் என்பதை அவர்கள் உணரவேண்டும்.
Dwarakadas Joshi is no more...It requires lot of mental courage to fast like this
http://deshgujarat.com/2009/09/04/gandhian-dwarkaprasad-joshi94-dies-observing-fast-unto-death/
சண்டேன்னா ரெண்டு .... ரெண்டு செய்திகளும் சூப்பர்... முதல் செய்தி, மனதுக்கு வருத்தமூட்டுவதாக இருக்கிறது... அதற்கு கண்டிப்பாக சென்சார் தேவை...
இரண்டாவது செய்தியில், கௌதமன் சார் சொன்ன மாதிரி என்னவோ, எங்கயோ இடிக்குது...
பாமகவின் ஒரே சாதனையான மக்கள் தொலைக்காட்சி ஒரே ஒரு விதிவிலக்கு).
வாழ்க மருத்துவர் அய்யா அவர்கள்!
//Erode Nagaraj... said...
தொலைக்காட்சிகள் 'தோலைக் காட்சியாக்கும்' நிகழ்ச்சிகள் வளர்வதற்குக் காரணம் மூளையில்லாமல் அதைப் பார்க்கும் வயதானவர்களும் பெற்றோர்களும் தான்.//
நன்றாக சொன்னீர்கள் ஈரோட் நாகராஜ் சார்...
(சௌக்யமா சார்... ? ரொம்ப நாள் ஆச்சு இங்க பாத்து.....)
/***முதல் செய்தி - தொலைக் காட்சி தணிக்கை - வேண்டியதுதான், **/
/**கண்டிப்பாக சென்சார் தேவை..**/
பாலசந்தர் படத்தில் வரும் கேரக்டர்களின் உறவுகளை எல்லாம் இப்போது வரும் ஸீரியல்கள் தூக்கி சாப்பிட்டு விட்டன, விவேக் ஒரு படத்தில் இதை வைத்து ஒரு காமெடி செய்து இருப்பார் அது போல தான் ஸீரியல்களில் இன்று உண்மையில் நடந்து வருகிறது, தணிக்கை இதற்கு ஒரு தீர்வாக அமையாது, நியூ என்று ஒரு குப்பையை சாரி படத்தை தணிக்கை குழு அதிகாரிகள் பார்த்த போது போது சில காட்சிகளை நீக்க சொன்னார்களாம், அதற்கு முடியாது என்று சொல்லி ஒருவர் தனது மொபைலால் ஐ.ஏ.ஸ் அதிகாரியை தாக்கினார், பிறகு பெயருக்கு கைது செய்யப்பட்டு, விடுதலையாணார், பிறகு மும்பை தணிக்கை குழுவால் படத்தில் எந்த காட்சிகளையும் நீக்காமல் திரையிட அனுமதிக்கப்பட்டது, அந்த ஐ.ஏ.ஸ் அதிகாரியின் குமுரல் ஆனாத விகடனில் வெளியானது, படித்த போது ரொம்ப வருத்தமாக இருந்தது.. .. இதற்கு தணிக்கை தீர்வாக அமையாது....
எனக்கொரு சந்தேகம், 5-9-2009 இரவு மானாட மயிலாட நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. ஒவ்வொரு ஆட்ட இறுதியிலும் நடுவர்கள் விமர்சனம் - அதில் கலா மாஸ்ட்டர் குறிப்பிடுகையில் - "சான்ஸே இல்ல சான்ஸே இல்ல" அப்படி கூறுகிறார்களே அப்படி என்றால் என்ன ?
இது பற்றியெல்லாம் பாமக சொன்னபொழுது எல்லாரும் கிண்டலும் கேலியும் செய்தார்கள்... சட்டமன்றத்திலேயே இது பற்றிக்கூட பேசினார்கள்... என்னத்த சொல்ல... உண்மையில் தேவை "தொலைக் காட்சி தணிக்கை" ...
கதைக்கு காலுண்டா, உங்கப்பனுக்கு வாலுண்டா?? என ஒரு பழமொழி உண்டு. அதுபோல இன்றைய தொலைக்காட்சித் தொடர்கள் அனைத்தும் "லாஜிக்" எதுவுமில்லாது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கின்றன. கட்டுரையாளர் குறிப்பிட்டது போன்று மாமியார் மருமகள் சண்டை, ஆபாசம், காவல்துறையினரை மிகவும் கேவலமாகச் சித்தரிப்பது போன்றவற்றை சமூகத்தில் நம்மைச் சுற்றி நடப்பது என்ற முத்திரையுடன் வழங்குகிறார்கள். அதிலும் கோலங்கள் தொடர் ஒன்று போதும், எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுமளவிற்கு அனைத்து அக்கிரமங்களையும் ஒருங்கே கொண்ட அம்சமாய் திகழ்கிறது.
முன்பு தூர்தர்ஷனில் தேவனுடைய படைப்புகளான ஸ்ரீமான் சுதர்ஸனம், துப்பறியும் சாம்பு போன்ற உயர்தர ஹாஸ்ய நாடகங்கள் ஒளிபரப்பப்படும். இன்று அவற்றையும், இன்றைய நாடகங்களையும் ஒப்பிட்டால் நமது நேயர்களின் ரசனை எவ்வளவு தூரம் மாறிவிட்டது என்பது தெரியவரும். இதற்கு டிவி சானல்களை மட்டுமே குறைகூறிப் பயனில்லை. நேயர்களின் வரவேற்பு இல்லையென்றால் தானாக நிறுத்திவிடுவர். ஆனால் நம்மவர்கள் கோலங்களையும், அரசியையும் பார்த்தால்தான் தங்களது ஜென்மமே சாபல்யமடையும் என்ற நோக்கிலிருக்கும்போது யாரை நொந்து கொள்வது??
சட்டசபையில் "மானாட மயிலாட" குறித்து பாமக வினர் கேள்வியெழுப்பிய போது, ஆற்காடு வீராசாமி அவர்கள் எழுந்து, அந்நிகழ்ச்சி கலையை வளர்க்கும் உத்தேசத்துடனேயே நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
கிராமியக் கலைகளை வளர்க்கும் பொருட்டு, கிராமிய நடனங்களான கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் இன்னும் பல நசிந்து வரும் கலைகளை/கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கலைஞர் தொலைக்காட்சியில் அவர்களுக்கும் வாய்ப்பளித்து கெளரவிக்கலாமே?? அதுதான் உண்மையிலேயே கலைவளர்க்கும் செயலாக இருக்கும். அதை விடுத்து அரைகுறை ஆடைகளுடன் நமீதாவையும், விதவிதமான அலங்காரங்களோடு குஷ்பூவையும் நடுவர்களாக அழைப்பது எவ்விதத்தில் கலையை வளர்க்கும் என புரியவில்லை.
just trying to relate the fasting of this great man and our great old man Mr. MK.
It would have been good if you have posted the pic of Mr. MK's fasting along with this pic.
/***ந.லோகநாதன் said...
இது பற்றியெல்லாம் பாமக சொன்னபொழுது எல்லாரும் கிண்டலும் கேலியும் செய்தார்கள்... சட்டமன்றத்திலேயே இது பற்றிக்கூட பேசினார்கள்... ***/
பா ம க வைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும், மு. க ஒரு இரண்டு அமைச்சர் பதவி கொடுத்திருந்தால் அதைப் பற்றி வாயே எடுத்திருக்க மாட்டார்கள், விளம்பரம் மட்டும் தான் குருமா என்கிற திருமா மற்றும் போலி டாக்டர் அய்யா அவர்களின் குறிக்கோள்கள்.....
/**என்னத்த சொல்ல... உண்மையில் தேவை "தொலைக் காட்சி தணிக்கை"...**/
அனைவரும் வேண்டும் தொலைக் காட்சி தணிக்கை!! என்று கோசம் போடுவது தேவை அற்றது, தற்பொழுது உள்ள திரைப்பட தணிக்கை குழு என்ன செய்து கொண்டிருக்கிறது?? ஆபாசக் காட்சிகள் , திருநங்கைகள் அசிங்கப்படுத்தப்படுவது, பெண்மையை இழிவுபடுத்துதல், வன்மம் என சகலமும் நின்றா விட்டது??, எப்படி தொலைக் காட்சி தணிக்கை வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறீர்கள்? நீங்கள் காண்பது வெறும் பகல் கனவு!
both are good and useful news
posts other than dirty politics are always required for us
Latest Vijay Joke:
விஜய் காங்கிரஸில் இணையப்போவதை உறுதி செய்தது மேலிடம், இதுதான் YSR ன் பாதுகாப்பு அதிகாரி பாட்டியாவின் மொபைல்போனுக்கு சென்ற கடைசி SMS, கேள்விப்பட்ட YSR ஹெலிகாப்டர் ஐ பழுதடைய வைத்து தற்கொலை செய்து கொண்டார்....
/***முன்பு தூர்தர்ஷனில் தேவனுடைய படைப்புகளான ஸ்ரீமான் சுதர்ஸனம், துப்பறியும் சாம்பு போன்ற உயர்தர ஹாஸ்ய நாடகங்கள் ஒளிபரப்பப்படும். இன்று அவற்றையும், இன்றைய நாடகங்களையும் ஒப்பிட்டால் நமது நேயர்களின் ரசனை எவ்வளவு தூரம் மாறிவிட்டது என்பது தெரியவரும். இதற்கு டிவி சானல்களை மட்டுமே குறைகூறிப் பயனில்லை. நேயர்களின் வரவேற்பு இல்லையென்றால் தானாக நிறுத்திவிடுவர். ஆனால் நம்மவர்கள் கோலங்களையும், அரசியையும் பார்த்தால்தான் தங்களது ஜென்மமே சாபல்யமடையும் என்ற நோக்கிலிருக்கும்போது யாரை நொந்து கொள்வது??***/
Super!!! Excellent comment....
நேயர்களின் வரவேற்பு இல்லையென்றால் தானாக நிறுத்திவிடுவர் - இது தான் சிறந்த தீர்வாக இருக்க முடியும், மற்றதெல்லாம் ஒப்புக்கு அல்லது உதவாக்கறை!!
Dr Joshi and his team have performed nearly 4 lakh eye surgeries in the past five decades. His decision to end a long and fruitful life has left many in this part of Gujarat, where he is so respected, filled with sorrow.
அவரும் , அவரோட குழுவும் சேர்ந்து நான்கு லட்சம் அறுவை சிகிட்சை செய்து உள்ளனர்.
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
//பாமகவின் ஒரே சாதனையான மக்கள் தொலைக்காட்சி ஒரே ஒரு விதிவிலக்கு//
100% correct
இந்த பதிவுகளை படிப்பவர்களில் எத்துனை நபர்கள் மக்கள் டிவி பார்கிறார்கள் ? பா மா கா ஒரு ஜாதி கட்சியாக இருக்கலாம், ஆனால், பா மா கா-வின் எல்லா நல் முயற்சிகளிலும் குறை காணும் படித்த இந்த மக்களை எங்கே சேர்ப்பது?
/***இந்த பதிவுகளை படிப்பவர்களில் எத்துனை நபர்கள் மக்கள் டிவி பார்கிறார்கள் ? பா மா கா ஒரு ஜாதி கட்சியாக இருக்கலாம், ஆனால், பா மா கா-வின் எல்லா நல் முயற்சிகளிலும் குறை காணும் படித்த இந்த மக்களை எங்கே சேர்ப்பது?**/
ஓரிரண்டு நல்ல நிகழ்ச்சிகள் மட்டுமே உண்டு மற்றபடி அனைத்து குப்பைகளும் அங்கும் உண்டு, "மண் பயனுற வேண்டும்" என்ற caption ஐ பார்த்து ஏமாந்தவறாக நீங்கள் இருப்பீர் என நினைக்கிறேன், செங்கல்பட்டுக்கு அருகில் அனைத்து வசதிகளுடன் கூடிய நல்ல வீடு மனைகள் விற்பனைக்கு, Tele marketing Adds, மற்ற சேனல்களில் உள்ளது போல் தொலைபேசியில் வெட்டி அரட்டை, புரட்சி கருத்துகள் என்ற பெயரில் கொஞ்சம் கூட ஒவ்வாத கருத்துகள் என நிறைய உள்ளன ஆனால் நல்ல நிகழ்ச்சிகள் சுத்தமாக இல்லை என்பதை சத்தியமாக நான் மறுக்க மாட்டேன், ஒரு சில நல்ல நிகழ்ச்சிகள் உண்டு ஆனால் நீங்கள் சொல்லும் அளவுக்கு இல்லை மன்னிக்கவும்.
இரண்டு செய்திகளும் அருமை
ஜோஷி அவர்கள் இறந்துவிட்டார்
என்று அறிந்ததும்
பெரிதும் மனவேதனை அடைந்தேன்
மக்கள் தொலைக் காட்சியில் - செய்தி வாசிப்பவர் - செயற்கையாக - கிராம விவசாயி வேடம் போட்டுக் கொண்டு வந்து செய்திகள் படிப்பதைப் பார்க்கும் பொழுது - மாறு வேடப் போட்டி பார்ப்பதுபோல் உள்ளது.
Post a Comment