பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 30, 2009

நோ கமெண்ட்ஸ்



செய்தி: முதல்வர் கருணாநிதி இன்று திருவாரூர் திட்ட இல்லத்தில், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தொடக்க விழாவிற்கு வருகை தந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபலை வரவேற்றார்.

கலைஞர்: என்னை தானே பார்க்க வந்தீங்க அப்பறம் எப்படி பச்சை துண்டை எடுத்துக்கிட்டு வந்தீங்க ?
கபில்சிபில்: போன முறை சென்னைக்கு பேக் செய்த பெட்டி என்ன செய்ய...


Read More...

செல் உபயோகிப்பாளர்களே!! உஷார்!!



அங்கீகரிக்கப்பட்ட IMEI (International Mobile Equipment Identity) எண்கள் இல்லாத செல்பேசிகளின் நெட்வொர்க் சிக்னல்கள் வரும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் தடை செய்யப்பட போகிறதாம். இவ்வாறு தெரிவித்துள்ளவர், "MOBILE STANDARD ALLIANCE INDIA" வின் இயக்குனரான திருமதி. அஸ்வினி புதிராஜா அவர்கள். பொதுவாக, இப்போது சந்தையில் சீன மற்றும் கொரிய தயாரிப்பு செல்பேசிகள் மிகக் குறைந்த விலையில் பல்வேறு வசதிகளுடன் கிடைக்கின்றன. ஆனால் இவற்றின் தரம் இன்னதென்று நிர்ணயிக்கப்படவில்லை. தவிர, இவையனைத்தும் போலியான IMEI எண்களோடு வருகின்றன. ஆக இவ்வகையான செல்பேசிகளை சமூக விரோத செயல்களுக்கு உபயோகிக்கும் போது, செல்பேசி எண் மற்றும் சம்பாஷணைகளை "Trace" செய்வது கடினம். மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் தீவிரவாதிகள் இவ்வகையான செல்பேசிகளையே உபயோகித்ததாகக் கூறப்படுவதால் இதன் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படப் போவதாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. ஜூன் மாதம் 30 ஆம் தேதி முதலிலிருந்தே அமலுக்கு வருவதாக இருந்த இத்தடை இப்பொழுது நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


உங்களுடைய செல்பேசியின் IMEI எண், உங்களுடைய செல்பேசியின் "Battery Compartment"- இல் குறிக்கப்பட்டிருக்கும் (படம்). அவ்வாறு இல்லையெனில், உங்கள் செல்பேசியில் *#06# என்று டயல் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும், உங்கள் செல்பேசியின் இக்குறியீட்டு எண் அங்கீகரிக்கப்பட்டதுதானா என்பதை அறிந்து கொள்ள உங்களுடைய 15 இலக்க IMEI எண்ணை, 53232 என்ற எண்ணுக்கு SMS செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் அங்கீகரிக்கப்படாத குறியீட்டு எண் கொண்ட உபயோகிப்பாளர்கள், ரூபாய் 199 செலுத்துவதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட எண் பெறலாம். இவ்வாறு வேண்டுவோர், அவரவர்களுடைய நெட்வொர்க் ஸர்வீஸ் ப்ரொவைடர்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமென அஸ்வினி புதிராஜா தெரிவித்துள்ளார்.

Source : Indian Express, dated 30th Sep, Page 4.


கமல் என்று ஒரு வார்த்தை கூட இல்லாத பதிவு!. Issued in public interest, by யதிராஜ சம்பத் குமார்.

Read More...

தமிழா தமிலா - மாமிகள் விளக்கவும்

விஜய் டிவியில் வந்த கமல் நிகழ்ச்சியின் ஒரு பகுதி மற்றும் விகடன் விமர்சனத்தின் ஒரு பகுதி இங்கே ஒரு பதிவாக.


( விஜய் டிவி நிகழ்ச்சி )

.....ஆனால் படமே கொஞ்சம் டெக்னிக்கல் அறிவைத் தாண்டி நிற்கும்போது, காட்சிக்குக் காட்சி இங்கிலீஷில் இப்படி சொடுக்கியிருக்க வேண்டுமா? "ரீமேக் படத்தை இன்னொரு வாட்டி தமிழ்ல டப்பிங் பண்ணுங்கப்பா" என்கிற கமெண்ட்டுகள் காதில் விழுகின்றன. ( விகடன் விமர்சனம் )

மஞ்சள் கமெண்ட் இடம் காலியாக உள்ளது....


Read More...

மு.க.முருகன்

பலர் இந்த படத்தை தேடுவதாக தெரிகிறது அவர்களுக்காக


Read More...

உன்னை போல் ஒருவன் கார்ட்டூன்

ஹிந்தி படத்தை தமிழில் ரிமேக் செய்வது போல. நேற்று வந்த ஆங்கில கார்ட்டூனை இன்றைய நிகழ்வுகளுக்கு தமிழில் ரிமேக் செய்தால் எப்படி இருக்கும் ? சாம்பிள் கீழே...

இது பழசு


இது புதுசு



நீங்களும் முயற்சி செய்யலாம் :-)

Read More...

Tuesday, September 29, 2009

நோ கமெண்ட்ஸ்


[ செய்தி: தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று அவரது இல்லத்தில் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.]

நிஜமா சார், எனக்கும் தமிழக அரசு விருதுக்கும் சம்பந்தம் இல்லை. உங்களுக்கு வேணுமுனா அப்பாவை பார்த்து பேசுங்க.

Read More...

உன்னை போல் ஒருவன் உலகில் இல்லை - கலைஞர் டிவி வீடியோ

கலைஞர் டிவியில் கமலுடன் கலந்துரையாடல் - வாசகர்களின் டிமாண்டை முன்னிட்டு இங்கே... விடியோ

பகுதி - 1


பகுதி - 2


பகுதி - 3


பகுதி - 4


பகுதி - 5


Read More...

தொடரும் நிதி நிறுவன மோசடிகள்

அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பது முதல், முதலீடுகள் செய்வது வரை கவர்ச்சித் திட்டங்களையும், விளம்பரங்களையும் நம்பி மோசம் போவது என்பது தமிழக மக்களுக்குப் புதிதல்ல. கடந்த ஒருவார காலமாக, நிதி நிறுவன மோசடிகள் மீடியாக்களில் தலைப்புச் செய்திகளாக வந்த வண்ணம் இருக்கின்றன. ஏற்கனவே, பல ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு பல நிதி நிறுவனங்கள் பல கவர்ச்சிகர அறிவிப்புகளுடன் போட்டி போட்டுக் கொண்டு புற்றீசல் போல் கிளம்பின. தனியார் தொலைக்காட்சிகளில் விதம் விதமான அறிவிப்புகள், விளம்பரங்கள்!! 35% வட்டி மற்றும் 10% ஊக்கத் தொகை, இரு ஆண்டுகளில் முதலீடு இரட்டிப்பு மற்றும் ஐந்து ஆண்டுகளில் பல ஏக்கர் தேக்குமரத் தோட்டங்கள் என்று இவ்வாறான கவர்ச்சி அறிவிப்புகளின் பட்டியல் மிக நீளம். கவர்ச்சி விளம்பரங்களையே நம்பி ஏமாறும் நமது மக்கள் புற்றீசல் போலப் புறப்பட்ட இந்நிறுவனங்களில், விட்டில் பூச்சிகள் போல், முன் யோசனைகள் ஏதுமின்றி சம்பாதித்த பணத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்தனர். ஆனால் கண்ட பலன் பூஜ்யம். காவல்துறையினரிடம் முதலிழந்ததை புகார்களாக அளிக்க நாயாக அலைந்ததுதான் கண்ட பலன். அவர்கள் இழந்த பணத்திற்கு என்ன கதி என்பது இன்று வரை மர்மம்தான்.



இவ்வாறான மோசடிகள் சமீபகாலமாகக் குறைந்திருந்த நிலையில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் மூன்று மிகப்பெரிய மோசடிகள் நிகழ்ந்தேறியுள்ளன. இதில் முதன்மையானது, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள "சிட்டி க்ரூப்" நிறுவனம் தொடர்பானது. பல ஆண்டுகளாக, மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாகக் கூறப்படும் இந்நிறுவனம்தான் இப்பொழுது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சுமார் பத்தாயிரம் முதலீட்டாளர்களிடம், பல நூறு கோடி ரூபாய்கள் மோசடி செய்துள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக இந்நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பிலுள்ள அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் வேடிக்கை என்னவெனில், இந்நிறுவனம் ஒரு "ISO 9001" தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனம். தவிர, இந்நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு ஆந்திர அரசின் முத்திரையிடப்பட்ட பத்திரங்களை முதலீட்டிற்கான அத்தாட்சியாக வழங்கியுள்ளது. அதை நம்பித்தான் முதலீடு செய்ததாக முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக, பணத்தை இழந்த முதலீட்டாளர்கள் அனைவரும் ஒரு சங்கம் அமைத்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். தவிர, வெளி மாநிலத்திலிருந்தும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் சென்னையில், காவல் துறையினர் "சிறப்பு கெளன்டர்கள்" அமைத்து புகார்களை வாங்குகின்றனர்.

அடுத்த இரு மோசடிகள் மிகவும் வேதனையான அதே சமயத்தில் வேடிக்கையானவை. திருப்பூர் மற்றும் திருச்சியைச் சேர்ந்த இருவேறு நிதி நிறுவனங்கள் ஒரே மாதிரியான மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், இரண்டே மாதத்தில் நான்கு லட்சமாகத் திருப்பித் தருவதாக வாக்குறுதியளித்துள்ளனர். அதாவது, முதல் ஆறு வாரத்திற்கு ஒவ்வொரு வாரமும், ஐம்பதாயிரம் வீதமும், இரண்டாவது மாத முடிவில் முதலீடு செய்த ஒரு லட்சத்தைத் திருப்பித் தருவதாகவும் விளம்பரம் செய்துள்ளனர். ஓரிருவருக்கு வாக்குறுதிப்படி பணமும் கொடுத்துள்ளனர். இதனை நம்பிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். ஏனையோருக்கு பின் தேதியிட்ட காசோலைகளாகக் கொடுத்துள்ளனர். இவ்வாறான காசோலைகள் வங்கிகளால் நிராகரிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டதால் சந்தேகமடைந்த முதலீட்டாளர்கள், நிதி நிறுவனத்தை அணுகியபோது, நிறுவனம் இருந்ததற்கான அடையாளமே இல்லை. ஏமாந்த முதலீட்டாளர்கள் இப்பொழுது காவல் நிலையத்திற்கு படையெடுத்துள்ளனர். ஒரு லட்சத்தை எவ்வாறு இரண்டே மாதத்தில் நான்கு மடங்காகத் திருப்பித் தருவார்கள்?? அதற்காக அவர்கள் செய்யும் முதலீடுகள் என்ன? அவற்றிற்கான சாத்தியக் கூறுகள் என்ன என்பது பற்றி மக்கள் ஏனோ சிந்திக்கவில்லை. இது மாதிரியான மக்களின் மனப்போக்குதான் இவ்வாறான மோசடி நிறுவனங்களின் முதலீடே!!

ஆசையே அழிவிற்குக் காரணம் என்பது புத்த பெருமானின் வாக்கு; பேராசை பெரு நட்டம் என்பது நமது சொல் வழக்கு. நமது அரசாங்கத்தால் நடத்தப்படும் பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தெருவிற்குத் தெரு இருப்பினும், முன்பின் தெரியாத, திடீரென்று முளைத்த நிதி நிறுவனங்களிடம், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலை இழப்பது நம்மவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. அரசாங்க வங்கிகளில் வட்டி விகிதம் குறைவாக இருப்பினும், கேட்ட மாத்திரத்தில் பணம் திரும்பக் கிடைக்கும். தவிர, முதலுக்கும் பாதுகாப்பு. இவ்வளவு மோசடி அனுபவங்களுக்குப் பிறகும் மக்கள் ஏன் இன்னும் இதனை உணரவில்லை என்பது புதிராகத்தான் இருக்கிறது. ஏமாந்த முதலீட்டாளர்களை தொலைக்காட்சியில் காணும் பொழுது மெத்தப் படித்தவர்களாகத்தான் தெரிகிறது. இவர்கள் ஏன் சிந்திக்கத் தவறுகின்றனர்?? கிராமப் புறங்களில் வாழும் படிப்பறிவில்லாத பாமரர்கள் கூட தபால் அலுவலகங்களையே தமது சேமிப்பிற்கு நாடுகின்றனர். இவ்வாறான கவர்ச்சி வலையில் பெரும்பாலும் அவர்கள் அகப்பட்டுக் கொள்வதில்லை.


ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு போன்றவை நிதி நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் கெடுபிடிகள் விதித்திருந்தும் இது போன்ற மோசடி நிறுவனங்கள் எவ்வாறு நினைத்த மாத்திரத்தில் கிளம்புகின்றன என்று விந்தையாகத்தான் இருக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, " எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா; ரொம்ப நல்லவன் போலருக்கு!" என்று நிதி நிறுவனங்கள் மக்களைப் பார்த்து நினைப்பதாகவே தோன்றுகிறது. இனியாவது மக்கள் பாடம் கற்பார்களா??

படம்: லாபத் தொகை நிறுத்தப்பட்டதால் முதலீட்டாளர்கள், சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள "சிட்டிலிமோஸின்ஸ்'' நிறுவனத்தை முற்றுகையிட்டனர். சமாதானப்படுத்தி பார்த்தது காவல் துறை ஆனால் கூட்டத்தினர் கலைந்து போகவில்லை. இதனால் லேசான தடி-அடி நடத்தி கூட்டத்தினரை போலீசார் கலைத்தார்கள்.

Read More...

Monday, September 28, 2009

இட்லிவடை பதில்கள் - 28-09-09

விடுமுறை தினத்தை முன்னிட்டு சில கேள்விகளுக்கு பதில்கள்....

01)வெளிநாட்டுக்குப் போய் வேலை செய்வதில் முன்னனியில் இருப்பது யார்??
முன்னனியில் இருப்பவர்கள் தான் வெளிநாட்டுக்கு போகிறார்கள். மானஸ்தனாக இருப்பவர்கள் இந்தியாவில் குப்பை கொட்டுகிறார்கள்.

02) இந்தியாவின் இன்றையதேதியில் கடன் தொகை எவ்வளவு??
The Little Book On External Debt என்ற புத்தகத்தில் இருக்கிறது இதற்கான தகவல். எனக்கு 762 ரூபாய் கடன் கொடுத்தால் அந்த புத்தகம் வாங்கி படித்துவிட்டு உங்களுக்கு சொல்றேன்.

03) மாநிலங்கள் உலக வங்கியிடமோ அல்லது வேறு எந்த நாட்டிடமோ கடன் வாங்கி கட்ட முடியாமல் போனால் என்ன நடக்கும்??
ரொம்ப சிம்பிள். மேலும் கடன் கொடுத்து அந்த கடனை அடைக்க செய்வார்கள். அமெரிக்கா தன் கடனை அடைக்க முடியும் என்று நினைக்கிறீர்களா ? முடியாது.

04) ஃபிக்சட் டெபாசிட்டுக்கு அதிகபட்ச வட்டி வழங்கும் வங்கி எது? எவ்வளவு??
போன் வருஷம் இதே நேரம் கரூர் வைசியா வங்கி 9.50% கொடுத்தர்கள். சீனியர் பார்ட்டிகளுக்கு 10.5%. கிறுஸ்துமஸ்துக்கு பிறகு குறைத்துவிட்டார்கள். இன்னும் சில மாதங்களில் திரும்பவும் வட்டியை ஏற்றுவார்கள் என்று சொல்லுகிறார்கள். பார்க்கலாம்.

05) வீடுகட்ட லோன் வாங்குவதில் கழுத்தில் துண்டு போஒட்டு வசூலிக்காத வங்கிகள் எவை?? குறைந்த வட்டிக்கு கடன் தருபவை எந்தெந்த வங்கிகள்??

தற்போது SBI தான் நல்ல சாய்ஸ்.

06) அழகிரி அமைச்சர் போஸ்ட்டில் என்ன செய்திருக்கிறார் இதுவரை??
அழகிரி என்ன செய்கிறார் என்று எல்ல்லோருக்கும் இப்ப தெரிந்துவிட்டது. கலைஞர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டதில் 'ஹிந்தி ஒழிக' என்று சொல்லவில்லை, 'கட்டாய ஹிந்தி ஒழிக' என்று தான் சொன்னேன் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். அழகிரியினால் ஆங்கிலம், ஹிந்தி தேவை என்று நாட்டு மக்களுக்கு தெரிந்திருக்கிறது. அமைச்சர் பதவியில் அழகிரி செய்த சாதனை இது என்பேன்.

07) மதுரையில் சைக்கிளோ அல்லது ஸ்கூட்டரோ பஞ்சர் ஒட்டியிருக்கிறீர்களா??
அஞ்சா நெஞ்சனை எதிர்த்தவர்களை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி.

08) தமிழ்ஹிந்து வலைத்தளம் கலக்குகிறதே எப்படி???
இந்த மாதிரி கேள்விகளால்

09) விஜயகாந்த் காங்கிரசுடன் கூட்டணி வைப்பாரா மாட்டாரா?
மக்களுடன் கூட்டணி வியாபாரத்தை பொறுத்தது அது முடிவு செய்யப்படும்.

10) உண்மையில் போக்ரான் அணு குண்டு சோதனை வெற்றியா இல்லை தோல்வியா?
ஏற்கனவே சந்திராயனை பற்றி கேள்வி கேட்டு அதற்கு நீங்க காட்டிய தண்ணி போறாதா ? இப்ப இந்த கேள்வி வேற ஆளைவிடுங்க பாஸ்!

Read More...

சில கேள்விகள், பதில் நீங்க சொல்லணும்

1. கொசுவிற்கு எத்தனை பற்கள் ?

2. ஜானகி எம்.ஜி.ஆர் எத்தனை நாள் முதல்வராக இருந்தார் ?

3. முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் எது ?

4. மூன்று லட்சம் துணை நடிகர்கள் நடித்த ஒரே படம் எது ?

5. 24 மணி நேரர்த்தில் நாம் சுவாசிக்கும் காற்றின் அளவு எவ்வளவு ?

பதில்கள் பின்னூட்டதில் சொல்லலாம். நன்றி

Read More...

Sunday, September 27, 2009

சண்டேனா இரண்டு (27-09-09) செய்திவிமர்சனம், இன்பா

இந்த வார இரண்டு செய்திகள்

செய்தி # 1

நடிகர்கள் விஜய் மற்றும் ரஜினிகாந்த் விருப்பமிருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு வரலாம். அவர்களை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லையென்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

ராகுல்காந்தி சென்னை வந்தபோது நடிகர் ரஜினி, விஜய்க்கு காங்கிரசில் சேர அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த அழைப்பை இருவரும் ஏற்கவில்லை. காங்கிரசில் சேரும் எண்ணம் இல்லை என்று சொல்லி ரஜினி நழுவினார். விஜய் காங்கிரசில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. விஜய்யும் ராகுலும் டெல்லியில் சந்தித்து பேசினர். இதன் மூலம் விஜய்க்கு இளைஞர் காங்கிரசில் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் காங்கிரசில் அவர் இணைவார் என்றும் பேசப்பட்டது.

ஆனால் விஜய் காங்கிரசில் சேரும் திட்டம் இல்லை என்று தெளிவுப்படுத்தி விட்டார். ராகுலை மரியாதை நிமித்தம் சந்தித்ததாகவும் இப்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் கூறி விட்டார். எதிர் காலத்தில் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் திட்டம் உள்ளது என்றும் தெளிவுப்படுத்தினார்.

இதுபற்றி முன்னாள் மத்திய மந்திரி இளங்கோவன் கூறியதாவது:-

ராகுல்காந்தி தமிழகம் வந்தபோது பெரும் கூட்டம் கூடியது. தமிழக இளைஞர்கள் யார் பக்கம் என்பதை இந்த சுற்றுப்பயணம் உணர்த்தி விட்டது. பிற அரசியல் கட்சியினர் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.

நடிகர் விஜய்யை ராகுல் காந்தி சந்தித்து பேசியதாக செய்திகள் வந்துள்ளன. விஜய்யை ராகுல் சந்திக்க வில்லை. தன்னை சந்திக்கும் படி விஜய் கேட்டார். அதற்கு ராகுல் நேரம் ஒதுக்கி கொடுத்தார். அந்த சந்திப்பை தமிழக காங்கிரஸ்காரர்கள் கொண்டாடவும் இல்லை. ஒதுக்கித்தள்ளவும் இல்லை.

ரஜினியானாலும் விஜய்யானாலும் இவர்கள் முதலில் இந்திய குடிமக்கள். அதன் பிறகு தான் நடிகர்கள். எந்த நடிகரையும் நம்பி காங்கிரஸ் இல்லை. விருப்புமுள்ள யார் வேண்டுமானாலும் காங்கிரசில் சேரலாம்.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

செய்தி # 2

தமிழில் எந்த ஒரு நல்ல படம் வெளிவந்தாலும், அதை பாராட்டி ஒலிக்கும் முதல் குரல் ரஜினி அவர்களுடையது.

'வெண்ணிலா கபடி குழு' படம் வெளியானவுடன், யாருக்கும் அறிமுகம் இல்லாத, புதிய முகங்களை கொண்ட அந்த குழுவினை பாராட்டினர் ரஜினி. 'நான் கடவுள்' வந்தபோது, அதில் நடித்த பூஜாவை பாராட்டி, ஸ்ரீ ராகவேந்திரர் படம் பரிசளித்தார். இதைபோல ஒரு பெரிய பட்டியலே போடலாம் சூப்பர் ஸ்டாரின் இந்த ஸ்பெஷல் குணாதிசயத்தை பற்றி.

அவர் சமிபத்தில் பாராட்டியிருக்கும் படம், வேற என்ன 'உன்னை போல் ஒருவன்' தான்.

கமல் நடித்து வெளியாகியுள்ள உன்னைப் போல் ஒருவன் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி பார்த்து ரசித்தார். ஏவிஎம் வளாகத்தில் உள்ள ஏசி திரையரங்கில் ரஜினிக்கான பிரத்தியேக காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் கமல்ஹாஸன்.

ஒரிஜினல் படத்துக்கு மரியாதை செய்யும் விதத்தில் கமல் இந்தப் படத்தை எடுத்திருப்பதாக இடைவேளையின்போது கருத்துப் பகிர்ந்து கொண்டார் ரஜினி.

ரஜினி படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வந்துவிட்ட கமல்ஹாஸன் வெளியில் காத்திருந்தார். படம் முடிந்து வெளியில் வந்தவர், கமலை நோக்கி வேகமாகப் போய் கட்டிப் பிடித்துக் கொண்டார். "ஃபெண்டாஸ்டிக் கமல்... அருமையா வந்திருக்கு படம். என்னுடைய வாழ்த்துக்கள்!" என ஆத்மார்த்தமாக வாழ்த்த, கமல் முகத்தில் பரவசம்.

படத்தின் இன்னொரு நாயகன் மோகன்லாலுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார் ரஜினி.

தொழில் ரீதியான போட்டிகளால் தனிப்பட்ட முறையிலும் பகமை பாராட்டும் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கும், ரஜினி vs கமல் என இட்லிவடையில் முட்டி மோதிக்கொள்ளும் வாசகர்களுக்கும் ரஜினி - கமல் நட்பு கவனத்திற்குரியது.

இந்த வார உலக செய்தி :

உலகிலுள்ள ஏழை மக்களின் பட்டினியைப் போக்க ஐ.நா.சபையின் உலக உணவுத் திட்டம் உதவி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்துக்கு நடப்பாண்டு 33 ஆயிரத்து 500 கோடி ரூபா நிதிக்கு 'பட்ஜெட்' போடப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபா மட்டுமே கிடைத்துள்ளது. பொருளாதார பின்னடைவு காரணமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி உதவி கிடைக்கவில்லை.

இதனால் இந்த ஆண்டு 100 கோடி பேர் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.சபை கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா.உலக உணவு திட்ட அலுவலகம் கூறுகையில்,

"மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். பொருளாதார பின்னடைவு காரணமாக நிலைமை மோசமாகி உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பது மக்களை மேலும் அதிகளவில் பாதித்துள்ளது.

இதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் கூட விதிவிலக்கல்ல. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களின் தொகை அதிகமாகவுள்ள நாடுகளில் இந்தியா 25 ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் இந்த பட்டியிலில் 11ஆவது இடத்தில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

-இன்பா

Read More...

Saturday, September 26, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 26-09-2009

முனிக்கு எழுதும் கடிதம்...

ஹலோ முனி,

சிக்கன நடவடிக்கை ஜுரம் இப்ப அதிகமாகிவிட்டது, தினமும் சிக்கன நடவடிக்கை பற்றி ஏதாவது செய்தி பேப்பரில் வருகிறது. தினமும் இந்த சிக்கன செய்தியால் எவ்வளவு மரம் வேஸ்டாகிறது ? சிக்கன நடவடிக்கை பற்றி இனிமேல் மீடியாகாரர்கள் எழுதாமல் இருந்தாலே பெரிய சிக்கனம். நான் சொல்லுவது சரிதானே ? லேட்டஸ்ட் சிக்கன நடவடிக்கை பிரதமருடன் அமெரிக்கா செல்லும் குழுவினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. பிரதமருக்கு உண்மையிலேயே சிக்கன நடவடிக்கை மீது நம்பிக்கை இருந்தால் மும்பை தாக்குதல் பற்றி எவ்வளவு 'புதிய' ஆவணத்தை இந்தியா பாகிஸ்தானிடம் கொடுத்திருக்கும். ஆனால் அவர்கள் அளிப்பது ஒரே பதில் 'வேற ஏதாவது இருக்கா ?'

நிச்சயம் பிரதமர் ஒன்றும் செய்ய முடியாது, ஒபாமாவுடன் போனில் பேசுவார் அவ்வளவு தான். நான் 'உன்னை போல் ஒருவன்' மாதிரி படம் எடுத்து கைத்தட்ட வேண்டியது தான். சரி பிரதமருக்கு இது ரொம்ப கஷ்டமான வேலை என்றால் நம் அடுத்த சிக்கன நடவடிக்கையாக எதற்கு 75+ மந்திரிகள் நம் நாட்டுக்கு தேவை ? இதில் பாதி பேருக்கு வேலையே கிடையாது. தன்னுடைய மந்திரிசபையை பாதியாக குறைத்தாலே பெரிய சிக்கன நடவடிக்கை. இதையாவது செய்வாரா பிரதமர் ?

ஆனால் இந்த சிக்கன நடவடிக்கை எல்லாம் எந்திரனுக்கு கிடையாது என்று நினைக்கிறேன். முக்கால் வாசி படம் கிராபிக்ஸ் என்று சொல்லுகிறார்கள். செலவு ? நமக்கு என்ன

எந்திரன் கிராபிக்ஸ் அமர்க்களம் என்று இந்த வார குங்குமம் பத்திரிக்கையில் ஏதாவது விஷயம் இருக்குமா என்றால் ஒன்றும் இல்லை. ஆனால் இலசமாக ஜெமினி ரிபைண்டு சன் பிளவர் ஆயில் 1 பாக்கெட் கொடுத்ததால் குங்குமத்தை மன்னித்துவிட்டேன். இன்னொரு இலவசம் 58 ஆம் பக்கம் இருக்கிறது - இலவசக்கொத்தனார் எழுதிய சிறுகதை 'உலை' . இது எல்லாம் நான் உனக்கு சொல்ல தேவையில்லை. இருந்தாலும் சொல்றேன். படித்துவிட்டு 'நல்லா இருக்கு வாழ்த்துக்கள்' என்று ஒரு கமெண்ட் போட்டுவிடு. மறந்துவிடாதே!.

நமக்கெல்லாம் இன்று வரை சொல்லப்பட்டு வந்த விஷயம் வட இந்தியர்கள் ஆரியர்கள் அவர்கள் ஐரோப்பாவில் இருந்து வந்தனர். தென் இந்தியர்கள் திராவிடர்கள் என்பது.

ஆனால் Centre for Cellular and Molecular Biology (CCMB) என்ற இந்திய மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கை மேற்கூறிய விஷயம் தவறு என்றும், இன்றைய இந்த சமூகம் பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்பே "வட இந்திய மூதாதையர்கள்","தென் இந்திய மூதாதையர்கள்" என்று இரு பிரிவால் உருவானது என்றும் கூறுகிறது. மேலும் "தென் இந்திய மூதாதையர்கள்" சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன் அந்தமான் மற்றும் தென் இந்தியாவில் இருந்தவர்கள் என்றும், "வட இந்திய மூதாதையர்கள்" 40000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வந்தனர் என்றும், பின்னர் வட மற்றும் தென் இந்திய மூதாதையர்கள் கலந்து இப்போது உள்ள கலப்பு மக்கள் வந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. .

இப்போது உள்ள இந்திய மக்களில் 40 முதல் 70 சதவீதம் வரை வட இந்திய மூதாதையர்கள் வழிவந்தவர்களும், மீதம் உள்ளவர்கள் தென் இந்திய மூதாதையர்கள் வழி வந்தவர்கள் என்றும் சொல்கிறார்கள். முக்கியமாக, தென் இந்திய மூதாதையர்கள் வழிவகை உலகத்தில் வேற எந்தப் பகுதியிலும் இருப்பதாக அறியப்படவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள்.மேலும் இந்தியர்களின் வழி-வழிப் பழக்கமான தங்கள் ஜாதி, மதத்திலேயே கல்யாணம் செய்வதாலேயே (high endogamy) ஒரு சில வியாதிகள் சில தட்டு மக்களிடம் அதிகமாகக் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்று வட இந்தியர்களை சோதித்தால் அவர்களிடம் இட்லிவடையும், தெற்கு மக்களிடம் சோதித்தால் பாணிபூரியும் இருக்கும். எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் - எப்படி வட மாநில டிவி சீரியல்களில் எல்ல்லோரும் வெள்ளையாக இருக்கிறார்கள் ? சொட்டு நீலம் போட்டு குளிப்பார்களா ?

டிவி என்று சொன்னவுடன் தான் ஞாபகம் வருது தமிழக அரசின் இலவச கலர் டிவிகள் வழங்கும் விழாவில் இலவச கலர் டிவிகளை வழங்கிவிட்டு அமைச்சர் துரைமுருகன் இப்படி பேசியிருக்கார் "திமுகவினர் மரியாதை தெரிந்தவர்கள். அதனால்தான் அதிகாரிகளை வைத்து டிவி வழங்குவதை விட நானே நேரில் வந்து வழங்குகிறேன். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நம்பி நீங்கள் வாக்களித்தீர்கள். அதை நிறைவேற்றிட மக்களிடம் நாங்களே நேரில் வந்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம். டிவி தருவதை பெருமையாக கருதவில்லை. அதை கடமையாக கருதுகிறோம்.." இது தான் அண்ணா சொன்ன 'கடமை' இன்னும் கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் இருக்கு அதற்கு எல்லாம் இன்னும் ஒரு வருடம் இருக்கு. தமிழக மக்கள் கவலை பட தேவையில்லை.

குண்டாக இருப்பவர்கள் கவலை பட தேவையில்லை. அவர்கள் ஒல்லியாக சுலபமாக ஒரு வழி இருக்கு. கண்ட கண்ட மாத்திரை எல்லாம் சாப்பிட வேண்டாம். அடுத்த முறை உணவு உண்ணும் போது குண்டாக இருப்பவர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டால் போதும். குண்டான நண்பருடன் சேர்ந்து சாப்பிடும் போது அவர் அதிகளவு சாப்பிட்டால், நாம் குறைந்த அளவே சாப்பிடுவோம். ஏனெனில் உடல் பருமனானவர், அவர் உடல்வாகுக்கு ஏற்றவாறு சாப்பிடுகிறார், நம் உடல்வாகுக்கு ஏற்றவாறு நாம் குறைவாக சாப்பிட்டால் போதும் என்ற எண்ணம் வரும். இதையே மெலிந்த உடல்வாகு கொண்ட நண்பருடன் சாப்பிடும்போது அவர் நிறைய சாப்பிட்டால் நாமும் நிறைய சாப்பிடுவோம். ஏனெனில் மெலிந்த உடல்வாகு கொண்ட அவரே அதிகமாக உண்ணும் போது நாம் ஏன் உண்ணக்கூடாது என்று எண்ணி, அதிகமாகச் சாப்பிடத் தோன்றும். அதனால் உடல் பருமனாகக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆகவே மக்களே நீங்க உடல் இளைக்க வேண்டும் என்றால் நீங்கள் அடுத்த முறை நமிதாவுடன் போய் உணவு சாப்பிடுங்க.

இந்த மாதிரி அடுத்த டெக்னிக் கிரிக்கெட்டில் நன்றாக விளையாட வேண்டுமா ? விளையாட்டுக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று பயிற்சியாளர் கிர்ஸ்டன் அறிவுரை கூறியுள்ளார். Leg Before Wicket கேள்விப்பட்டிருக்கிறோம், Sex Before Wicket என்று இப்ப தான் கேள்விப்படுகிறோம்( இதற்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லை ). அடுத்த முறை யாராவது செஞ்சுரி அடித்தால் அவரிடம் பத்திரிக்கையாளர்கள் 'அந்த கேள்வியை' கேட்காமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். வேறு ஒரு கமெண்ட் இருக்கு ஆனால் இட்லிவடை வாசகர்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்பதால் அதை தவிர்க்கிறேன். முன்னாள் பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி போட்டிக்கு 6 வாரங்கள் முன்பு வரை செக்ஸ் உறவை வைத்துக்கொள்ள மாட்டார் தெரியுமா ? இந்த தகவல் எதற்கு என்று யோசிக்கிறீர்களா ? முகமது அலியின் சிக்கன நடவடிக்கை பற்றி நீங்க எப்ப தெரிந்துகொள்வீர்கள் ?

தீபாவளி விளம்பரம் எல்லா டிவியிலும் வர ஆரம்பித்துவிட்டது. அதுக்கு முன்னாடி விஜய் நியூஸ் - திருவண்ணாமலை அருகே வேட்டைக்காரர்களிடம் இருந்து அரிய வகை குருவிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதில எங்கே விஜய் வந்தார் என்று கேட்பது தெரிகிறது. குருவி, வேட்டைக்காரன் என்று வருகிறதே ! வேட்டைக்காரன் ரிலீஸ் ஒரு 15 நாள் தள்ளி போகும் என்று பேசிக்கிறாங்க.கலைஞர் டிவி, சன் டிவி டீல் என்று பேச்சு. எல்லாம் பணம் பண்ணும் வேலை.

டிவிட்டருக்கு 100 மில்லியன் டாலர் ஃபண்டிங் கிடைத்திருக்கிறதாம். இதை பற்றி வெண்பாம் எழுதி டிவிட்டரை பாராட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.
இந்த செய்தியை சொன்னவுடன் பா.ராகவன் அவசரமாக வந்து எழுதிய வெண்பாம்
நேற்றுத்தான் பிறந்து நெஞ்சமெலாம் கவர்ந்து
நூற்று நாற்பது சவால்விடுத்து - ஏற்றமுற
செல்லுமிடமெல்லாம் சிறப்புறவே ஒருநூறு
மில்லியன் பெறுகிறது ட்விட்டர்.

உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு இசையமைத்திருக்கும் கமல் மகள் ஸ்ருதியை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாராட்டியுள்ளார். அது போல!.

அடுத்த மாதம் 6ஆம் தேதி ஜெயலலிதா சூறாவளி பயணம் மேற்கொள்ள போகிறார் தெரியுமா ? ஆமாம் அவர் 6ஆம் தேதி சென்னைக்கு திரும்புகிறார்!. தமிழ்நாட்டு மக்களுக்கு இனி விடிவு காலம் தான். பருப்பு விலை குறைந்துவிடும். கவலைப்படாதீர்கள்.

9வது உலகத் தமிழ் மாநாடு – என் கோரிக்கைகள் என்று சில கோரிக்கைகள் வைத்துள்ளார். நேசமுடன் வெங்கடேஷ், இவை எல்லாம் நடக்குமா என்பது சந்தேகமே. மாநாடே ஆரம்பிக்கவில்லை அதற்குள் 'கருணாநிதியால் மாநாடு நடத்தப்படுமானால், அது 9வது உலகத்தமிழ் மாநாடு என்ற தகுதியைப் பெற முடியாது' என்று ஜெயலலிதா அறிக்கை விட ஆரம்பித்துவிட்டார்.

சில நாட்களுக்கு முன் "அங்கங்கே சில இடங்களில் ஜெலூசில் வியாபாரம் திடீரென்று அதிகமானதாகத் தெரிகிறது. அந்த மருந்துக் கடைகளுக்கும் வருமானம் வரட்டும்" என்றார் ஒரு எழுத்தாளர். அது மாதிரி இந்த மாநாடு நடத்துபவர்கள், விமர்சிப்பவர்களுக்கு அக்மார்க் தமிழ் மருந்தான "சுக்கு கஷாயம்னு" கொடுக்க வேண்டியது தான். என்ன தான் தமிழ் தமிழ் என்று அறிக்கையும், மாநாடும் நடத்தினாலும் தமிழ் வளரப்போவதில்லை, இந்த மாதிரி முனிக்கு கடிதம் எழுதினால் தான் டமில் வளரும்.


அட மறந்தே போச்சு இதோ இந்த வார தத்துவம் -


"போன் அலறினா எடுத்துப் பேசணும்.
பொண்டாட்டி அலறினா எதிர்த்துப் பேசக்கூடாது"


பை,
இட்லிவடை


Read More...

Friday, September 25, 2009

மாணிக்க வீணை ஏந்தும்...

'மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்' - அருமையான வீணை இசைப்பாடல்! கலைமாமணி K.சோமு எழுதி, இசையமைத்து, பி. சுசீலா அவர்களின் தேன்குரலில் மோகன ராகத்தில் உருவான பாடல். 'கலைவாணி நின் கருணை தேன் மழையே' - இதுவும் பி. சுசீலா பாடிய இன்னொரு இசைப்பாடல். சரஸ்வதி பூஜையின் விடியற்காலை பொழுதை இத்தைகைய செந்தமிழ் பக்திஇசை பாடல்களோடு துவக்குவோம்.


படிக்கும் புத்தகங்களை அடுக்கிவைத்து, குழந்தைகளுக்கு கல்வியின் பெருமைகளை
விளக்கும் உயரிய பண்பாடும், முதல் முதலாய் பள்ளி செல்லும்போது, ஆசிரியரின்
பாதங்களை தொட்டு வணங்கும் குரு பக்தியும் வேறு எங்காவது இருக்கிறதா?

சரஸ்வதி விளக்கம் :
சரஸ் என்றால் நீரோடை என்று பொருள். அடியவரின் மனம் என்ற தெளிந்த நீரோடையில் வசிப்பவள் என்ற பொருளில் சரஸ்வதி என்றனர். இதற்கு முந்தைய நாமம் சர்வமோகினி என்று போற்றுகிறது. அனைவரையும் மயக்குபவள் என்பது அதன் பொருள்.
அந்த மோகினியின் பிடியிலிருந்து விடுபட்டு, எப்படி அம்பிகையை அறிவது? அவளே அறிவுத் தெளிவை அளிக்கும் சரஸ்வதியாக விளங்குகிறாள்.

கலைமகள், கலைவாணி, நாமகள், சொற்கிழத்தி, பாரதி போன்ற பல பெயர்களாலும் சரஸ்வதியை அழைக்கின்றனர். சரஸ்வதி கல்விக்கு அதிதேவதையாக விளங்குகிறாள். தூய்மையை விரும்பும் சரஸ்வதி படிக நிறத்துடன் வெள்ளைக் கலையுடுத்து, வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளைத் தாமரையில் அமர்ந்திருக்கிறாள். அன்னப் பறவை சரஸ்வதியின் ஊர்தியாக விளங்குகிறது.

சிலர், தங்கள் பெயருக்கு முன்னால், ‘வித்துவான்’ முனைவர் (டாக்டர்) போன்ற, படித்துப் பெற்ற பட்டங்களைச் சேர்த்துக் கொள்கின்றனர். அவ்வாறே, பாரதி சுவாமிகள் என்றும், சரஸ்வதி சுவாமிகள் என்றும் சரஸ்வதியின் பெயரை பீடாதிபதிகள் இணைத்துக் கொள்கின்றனர்.

சரஸ்வதியின் ஜென்ம நட்சத்திரம் மூலம் என கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் பெண்களை பொறுத்தவரை மோசமானது என்ற கருத்து இருக்கிறது. ஆனால், ஒதுக்கப் பட்ட அந்த நட்சத்திரத்தை தனக்குரியதாக சரஸ்வதி ஏற்றுக் கொண்டதன் மூலம், மூட நம்பிக்கையை ஒழித்து அறிவுத்திறனை வளர்க்க வேண்டும் என்ற கருத்தை உறுதிப் படுத்துகிறது. நவமி திதியையும் சுபநிகழ்ச்சிகள் நடத்த ஆகாத திதி என்பர். அந்த திதியிலேயே சரஸ்வதி பிறந்தாள். இதன் மூலம் எந்த நட்சத்திரமும், திதியும் ஒதுக்கப்படக் கூடியதல்ல என்று நமக்கு எடுத்துச் சொல்கிறாள்.

சரஸ்வதி என்ற நதியின் வடிவத்திலும் விளங்குகிறாள். மிகத் தொன்மையான சரஸ்வதி நதியைக் குறித்த ஆராய்ச்சி, தொடர்ந்து நடைபெறுகிறது. சரஸ்வதியின் தனிக்கோவில் பூந்தோட்டத்தை அடுத்த கூத்தனூரில் உள்ளது.

கலைவாணி திருக்கோவில், கூத்தனூர் திருவாரூர்-மயிலாடுதுறை மார்க்கத்தில் பூந்தோட்டம் என்னும் இடத்திலிருந்து 1/2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது ஹரிநாகேஸ்வரம். இவ்வூர் சிவாலயத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு ஸ்ரீஹரிநாகேஸ்வரர் என்பது திருநாமம். இதுபற்றியே இவ்வூரும் ஹரிநாகேஸ்வரம் என்றழைக்கப்பட்டது.

அமைதி தவழும் சூழல்தான் தவமேற்கொள்ளத் தகுந்த இடம். அத்தகைய அமைதி நிறைந்தது இவ்வூர். எனவேதான் கலைமகளும் தான் தவம் மேற்கொள்ள இவ்வூரைத் தேர்ந்தெடுத்தாள். அவ்வாறு கலைமகள் நித்ய வாசம் செய்யத் தேர்ந்தெடுத்த காரணத்தால் இது அம்பாள்புரி என்றும் அதுவும் மருவி அம்பாபுரி என்றும் வழங்கப்படலாயிற்று.
பின்னொரு காலத்தில் தஞ்சையை ஆண்ட சோழமன்னன் இரண்டாம் இராச இராசன் தன் அரசவைப் புலவரான ஒட்டக்கூத்தரைப் பாராட்டி அம்பாபுரியைப் அவருக்குப் பரிசிலாகக் கொடுத்தான். அன்று முதல் இவ்வூர் கூத்தனின் ஊராகி 'கூத்தனூர்' என்றழைக்கப் படலாயிற்று.

கலைமகளுக்கென்று அமைந்த ஒரே ஒரு கோயில் தமிழகத்திலுள்ள இந்த கூத்தனூர்க் கோயில் ஒன்றே. தனியாக இராஜ கோபுரம் என்று ஒன்று கிடையாது. பெரிய மதில்களுடன் ஒரே பிரகாரத்துடன் அமைந்துள்ளது இக்கோயில். பலிபீடத்தின் முன்னே சரஸ்வதியை நோக்கி அன்னம் உள்ளது.

கூத்தனூர் சரஸ்வதி அம்மன் படம் - பதிவுடன்.

சரஸ்வதி பூஜை - உங்கள் சிந்தனைக்கு

கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சரஸ்வதி பூஜையை வருடந்தோறும் கொண்டாடுகிறோம். ஆனால், பஸ்சிலும், ஆட்டோக்களிலும் பொதிமூட்டை சுமந்தபடி பள்ளி செல்லும் குழந்தைகள், ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையோடு ஒப்பிட்டு, பிஞ்சு மனங்களை நசுக்கும் பெற்றோர், மதிப்பெண்களை வைத்து மாணவர்களை எடை போடும் கல்வி முறை.. இவை எதுவும் மாறுவதாய் தெரியவில்லை.

தனியார் பள்ளிக்களில் பணத்தை கொட்டி படிப்பதுதான் நல்லகல்வி என்னும் மடத்தனம் அதிகரித்துவருகிறது. அரசுபள்ளியில், தமிழ்வழி கல்வி முடித்து சாதித்தவர்கள் ஐ.டி. உட்பட எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள். எங்கு படிக்கிறோம் என்பதைவிட, எப்படி படிக்கிறோம் என்பதே முக்கியம் என்பதை மக்கள் என்றைக்கு உணரப்போகிறார்கள்??
கல்வி நிலையங்கள் இன்று பணம் கொழிக்கும் வியாபார நிலையங்கள். ரவுடிகள், குண்டர்கள் எல்லாம் இன்றைய தேதியில் கல்வி தந்தைகள். தன்னிடம் டியூஷன் வராத ஏழை மாணவனை பெயில் ஆக்கிய ஆசிரியர்களை நான் பார்த்துஇருக்கிறேன். மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களை பற்றிய செய்திகள் நாள்தோறும் வருகின்றன. இதையெல்லம் பார்க்கும்போது எங்கோ படித்த ஒரு கவிதை என்
நினைவுக்கு வருகிறது. "சரஸ்வதியின் கையில் உள்ள வீணையை பிடுங்கி, அதற்குபதில் அவள் கையில் கொள்ளிகட்டையை கொடுத்துவிட்டோம்".

சரஸ்வதி பூஜைக்கு செய்தி சொல்ல மகாகவி பாரதியை அழைக்கிறேன்.

இன்னரும்கனிச்சோலைகள்செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்னசத்திரம்ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதினாயிரம்நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும்புண்ணியம்கோடி
ஆங்கோர்ஏழைக்குஎழுத்துஅறிவித்தல்

-இன்பா

ஓவியர் ரவிவர்மாவின் சரஸ்வதி ரொம்ப பிரபலம் அந்த படம் இங்கே


வாசக நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நலவாழ்த்துக்கள்.


Read More...

Wednesday, September 23, 2009

கமல் கலைஞர் சந்திப்பு


தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நடிகர் கமல் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். என்ன பேசியிருப்பார்கள் ?

கலைஞர்: என்ன ஆச்சு தாடிக்கு ?
கமல்: ஐயா நீங்க தசாவதாரம் படம் பார்த்துவிட்டு முத்தம் தந்தீர்கள். நினைவிருக்கிறதா ? அது போல இப்ப தந்தால் உங்களுக்கு உறுத்தும் என்று தாடியை எடுத்துவிட்டேன்.
கலைஞர்: உன்னை போல் ஒருவனை பார்த்ததே இல்லை!

கமெண்ட் பெட்டியில் உங்க கைவரிசையை காண்பிக்கலாம். சிறந்த கமெண்டுக்கு பரிசு உண்டு !



Read More...

Tuesday, September 22, 2009

படித்துறை - இளையராஜா இசையில் இலக்கியவாதிகள்

இளையராஜா இசையில் இலக்கியவாதிகள்.

சுகா வேணுவனம் என்னும் பெயரில் வலைப்பதிவுகள் எழுதி வருபவர். ஜெயமோகன் இவரைப் பற்றி சில பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். வார்த்தை இதழிலும், சொல்வனம் மின்னிதழிலும் இவர் எழுதிவருகிறார். எளிமையான நகைச்சுவையும், வட்டார மொழியும் இவரது பலம் என்று சொல்லலாம். இவரது தந்தை நெல்லை கண்ணன். நெல்லையைச் சேர்ந்த சுகா, படித்துறை என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்துக்கு இசை இளையராஜா. இப்படத்தில் பெரும்பாலும் புதுமுகங்களே நடிக்கிறார்கள். முக்கியமான விஷயம், இலக்கியவாதிகளான நாஞ்சில் நாடனும், எஸ்.ராமகிருஷ்ணனும் இப்படத்தில், இளையராஜாவின் இசையில் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள் என்பது முக்கியமானது.

சன் நியூஸில் வெளியான வண்ணத்திரை நிகழ்ச்சியில் இப்படத்தைப் பற்றி ஒளிபரப்பினார்கள். சுகாவும் பேசினார்.




பழைய மதன் ஜோக் ஒன்று நினைவுக்கு வருது - அரசியல்வாதி : மாணவர்களே நாங்கள் என்றாவது படிப்பில் ஈடுப்பட்டிருக்கிறோமா ? அதே போல் நீங்கள் அரசியலில் ஈடுபடாதீர்கள்.

Read More...

விருச்சிக இராசி பலன்கள்


விருச்சிகம் இராசிக்குள்ள சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்

உங்களைப் பற்றி:

எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உள்ள விருச்சிகம் இராசி வாசகர்களே, நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்.துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி:

இது வரை பத்தாம்ஸ்தானத்தில் இருந்த சனீஸ்வரன் இனி லாபச்சனியாக வரும் 21/2 ஆண்டுகளுக்கு என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை பத்தாம் ஸ்தானத்தில் இருந்த சனி உங்கள் தொழிலில் சுணக்கம் ஏற்படுத்தியிருக்கலாம். இனி அவையெல்லாமே மெள்ள மெள்ள விலகும். தந்தையாரிடம் இருந்த எதிர்ப்போக்கு விலகும். நல்ல இணக்கம் ஏற்படும். தொழிலில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய வகையில் தொழில் அமைக்க கடன் வசதி கிடைக்கும். தூங்கப்போகும் போது நிறைய யோசித்தீர்களே,அந்த யோசனைகளை உபயோகப்படுத்துங்கள். தடைபட்ட பயணங்கள் இனிதே நிறைவேறும். சுகங்களை அனுபவிக்க முடியாமல் போன காலங்களை நினைக்காமல் இந்த நல்ல காலத்தை நினைத்து புதிய சுகங்களை அனுபவியுங்கள். பிள்ளைகளை கூர்ந்து கவனியுங்கள். சிலரது பிள்ளைகள் வழிமாறி போகவும் வாய்ப்பு இருக்கிறது, எனவே எச்சரிக்கை தேவை. தாயார் மற்றும் தாய் வழி உறவினர்களிடம் இருந்த கசப்புணர்ச்சி நீங்கும். புதிய வீடு, வாகனம், மனை வாங்கும் நேரமிது, பயன்படுத்திக் கொள்ளுங்கள். கர்ப்பினிப் பெண்கள் உடல்நிலையில் கவனம் எடுத்துக் கொள்ளவும். சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் அதனை விடுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனத்துடன் செல்லவும். அடிக்கடி எரிச்சல் வரும் சூழ்நிலைகள் வரலாம், பொறுமையைக் கையாளுங்கள். வாழ்க்கைத்துணையுடன் ஒத்துப் போங்கள். சொன்ன வாக்கை காப்பாற்றுங்கள். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனனகளில் பெரியவர்களின் பேச்சைக் கேளுங்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாறுதல், எதிர்பார்த்த பணிஉயர்வு கிடைக்கும். வேலையிழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தந்தை வழி உறவினர்களி்ன் ஆதரவு கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் நீங்கும் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். ஆன்மீகம் நாட்டம் அதிகரித்து பெரிய மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். மங்கள் நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும், சில நிகழ்ச்சிகளுக்கு நீங்களே தலைமை வகிக்க வேண்டிய நிலை. உறவினர்களிடத்திலும், நண்பர்களிடத்திலும், சமுதாயத்திலும் உங்கள் மரியாதை கூடும். சிலருக்கு வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும். தொலைதூர பிரயாணங்கள், ஆன்மீக யாத்திரைகள் கிடைக்கும். உடல் பருமன் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வறுத்த, பொரித்த உணவு வகைகளை அறவே தவிருங்கள். கலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாட்டம் பிறக்கும்.அரசிடமிருந்து பாராட்டு புகழ்ச்சி கிடைக்கும். சமூக சேவையில் ஆர்வம் பிறக்கும். உத்தியோகத்தில் இருந்த சச்சரவுகள் நீங்கும். லாபம் பிறக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். லீசில் இருந்த சொத்து திரும்பும். மேலதிகாரிடம் இருந்த சுணக்கம் நீங்கும். பேச்சில் இருந்த திருமணம் உங்கள் விருப்பபடி இனிதே நடைபெறும். மாணவ மாணவிகள் படிப்பில் கொஞ்சம் முயற்சி செய்தால் சாதனைகள் புரியலாம். முன்னோர்கள் ஆசி இனிதே கிடைக்கும். பட்டப்படிப்பில் இருந்த தடைகள் நீங்கி பட்டத்தை வாங்குவீர்கள். மொத்தத்தில் அரைகுறையுடன் இருந்த வாழ்க்கையை செல்வம், செல்வாக்குடன் முழுமையாக்கி விடும் இந்த சனிப்பெயர்ச்சி.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

விசாகம் 4ம் பாதம்: தொழிலில் அதீத முன்னேற்றம் ஏற்படும். போட்டிகள் பொறாமைகள் விலகும். சந்தையில் உங்கள் வியாபாரம் பெருகும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். வாராக்கடன்கள் வந்து சேரும். சகோதர சகோதரி்களிடம் அன்பு கூடும். ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை வணங்கினால் எல்லாம் தடையின்றி நடக்கும்.

அனுஷம்: சில காலங்களாக இருந்த சோதனைகள் விலகி சாதனைகள் வரும். தொழிலில் அபிவிருத்தி, லாபம் கிடைக்கும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். அன்னியோன்னியம் ஏற்படும். சுபகாரியங்கள் இனிதே நடக்கும். ஹனுமனை வணங்கி எதையும் ஆரம்பித்தால் வெற்றிதான்.

கேட்டை : தன லாபம், தன சேர்க்கை உங்களைத் தேடி வரும். தைரியமும் தன்னம்பிக்கை சுடர்விடும். சோம்பலை விடுங்கள். பிரிந்த சொந்தங்கள் தேடிவரும். ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் கிடைக்கும். எதிர்பாராத பயணத்தில் அனுகூலம் உண்டாகும். ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்லுங்கள், நனமைகள் தேடிவரும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ நவக்ரஹ வழிபாடு நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம்இராசிபலன்கள்பரிகாரம்
மேஷம்விருச்சிகம்70/100கந்த ஷஷ்டி கவசம் படிப்பது
ரிஷபம்விருச்சிகம்65/100ஸ்ரீஸூக்தம் சொல்வது
மிதுனம்விருச்சிகம்60/100விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம்விருச்சிகம்65/100ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமம் சொல்வது
ஸிம்ஹம்விருச்சிகம்60/100ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, நவக்ரஹ காயத்ரி சொல்வது
கன்னிவிருச்சிகம்60/100விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முருகனை வழிபடுவது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம்விருச்சிகம்55/100கணபதி காயத்ரி, நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம்விருச்சிகம்75/100கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
தனுர்விருச்சிகம்70/100அபிராமி அந்தாதி சொல்லுங்கள்
மகரம்விருச்சிகம்65/100குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம்விருச்சிகம்65/100லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது.
மீனம்விருச்சிகம்60/100தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி காயத்ரி சொல்வது
லக்னமே தெரியாதுவிருச்சிகம்75/100கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் விருச்சிகம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் விருச்சிகம் இராசியில் பிறந்து கும்பம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 65% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது, தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் விருச்சிகம் இராசி என்பவர்கள் கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

*நக்ஷத்திரங்கள்
பலன்கள்விசாகம் - 4 ம் பாதம்அனுஷம்கேட்டை
இராசிவிருச்சிகம்விருச்சிகம்விருச்சிகம்
இராசியாதிபதிசெவ்வாய்செவ்வாய்செவ்வாய்
நக்ஷத்திர அதிபதிவியாழன்சனி புதன்
அதிதேவதைகள்இந்திரன், அக்னிமித்திரன்இந்திரன்
கணம்இராக்ஷஸ் கணம்தேவகணம்இராக்ஷஸ் கணம்
நாடிபார்ஸுவ - இடதுமத்யபார்ஸுவ - வலது
மிருகம்பெண் புலிபெண் மான்ஆண் மான்
பக்ஷிசெவ்வாக்சாதகம்சக்கிரவா
விருக்ஷம்விளாமகிழ்பிராய்
இரஜ்ஜுவயிறுதொடைபாதம்
வேதை நக்ஷத்ரம்கார்த்திகைபரணிஅசுவதி
அதிர்ஷ்டம் தரும் எண்கள்1, 3, 4, 6, 7, 91, 2, 3, 6, 7, 91, 3, 5, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள்கிழக்கு, வடக்குகிழக்கு, தெற்குகிழக்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

இன்றைய ஜோதிடக் குறிப்பு:

இன்று நாம் பார்க்கப் போகும் தலைப்பு:

திருமணப் பொருத்தம் எப்படி பார்ப்பது?

[ குறிப்பு: திருமணமானவர்கள் இதை பிரயோகப்படுத்தி பார்க்க கூடாது, மிக முக்கியமாக திருமணம் முடிவானவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பிரயோகப்படுத்தி பார்க்காதீர்கள்]

இதில் பல ஜோதிடர்கள் பல விதமான முறைகளில் பார்க்கிறார்கள். ஆனால் எங்கள் பரம்பரையில் சில முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றது. அந்த சூக்ஷுமத்தை நமது இட்லிவடை வாசகர்கள் தெரிந்து கொள்ள தருகிறேன்.

முதலில் ஒரு விஷயம் சொல்கிறென், அதை புரிந்து கொள்ளுங்கள். பொருத்தம் பார்க்க வேண்டிய ஆண் ஜாதகம் - அதை இனி வரன் ஜாதகம் என்று நினைவில் கொள்ளுங்கள். பொருத்தம் பார்க்க வேண்டிய பெண் ஜாதகம் - அதை இனி வதூ ஜாதகம் என்று நினைவில் கொள்ளுங்கள்.

எத்தனை ஸ்டெப்ஸ் உள்ளன?

[1] நக்ஷத்ர விஷயாதி - தசவிதப் பொருத்தம்

[2] திசா விஷயாதி - இருவருக்கும் உள்ள திசையை வைத்து பார்ப்பது.

[3] பாப ஸாம்மிய விஷயாதி.

[4] செவ்வாய் தோஷ விஷயாதி.

[5] தோஷ நிவர்த்தி விஷயாதி.

என 5 விதமான ஸ்டெப்ஸ் உள்ளன.

நக்ஷத்ர விஷயாதி:

இந்த விஷயத்தில் நாம் வதூ, வரன் ஆகியோரின் ஜாதகத்திலுள்ள நக்ஷத்ரத்தை வைத்து பார்ப்பது.

நக்ஷத்ரம்இராசி
அசுபதி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்மேஷம்
கார்த்திகை 2,3,4ம் பாதங்கள், உரோஹினி, மிருகசீர்ஷம் 1,2 ம் பாதங்கள்ரிஷபம்
மிருகசீர்ஷம் 3,4 ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்மிதுனம்
புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்கடகம்
மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்ஸிம்ஹம்
உத்திரம் 2,3,4ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2ம் பாதங்கள்கன்னி
சித்திரை 3,4ம் பாதங்கள், ஸ்வாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்துலாம்
விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டைவிருச்சிகம்
மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்தனுசு
உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதங்கள்மகரம்
அவிட்டம் 3,4ம் பாதங்கள், ஸதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதங்கள்கும்பம்
பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதிமீனம்

[1] தினம் - Dhina Porutham - வதூ நக்ஷத்ரதிலிருந்து வரன் நக்ஷத்ரத்தை CLOCKWISE ஆக எண்ணுங்கள். எண்ணும் போது வதூ நக்ஷத்ரம் ஒன்றாகக் கொண்டு எண்ணவும்.

உதாரணம் 01:

வதூ நக்ஷத்ரம்: உத்திரம் இராசி: ஸிம்ஹம்;

வரன் நக்ஷத்ரம்: ரேவதி, இராசி. மீனம்

CLOCKWISE ஆக எண்ணுங்கள் 16 விடையாக வரும் வருகிறதா?

உதாரணம் 02:

வதூ நக்ஷத்ரம்: ரேவதி, இராசி. மீனம்;

வரன் நக்ஷத்ரம்: பூசம், இராசி. கடகம்

CLOCKWISE ஆக எண்ணுங்கள் 9 விடையாக வரும் வருகிறதா?

அப்படி வருகிற விடையை 9ஆல் வகுக்கவும்(Divide by 9) உங்களுக்கு என்ன மீதி வருகிறதோ அதுதான் நமக்கு தேவை. உங்களுக்கு வரும் விடை 0, 1, 2, 4, 6, 8 வந்தால் பொருத்தம் இருக்கிறது என்று பொருள். உதாரணமாக நமது உதாரணம் 01ல் நமக்கு வரும் விடை 16. இந்த 16ஐ 9ல் வகுங்கள். வகுத்தால் வரும். எனவே தினப்பொருத்தம் இல்லை.


[2] கணம் - Ganaporutham - ஒவ்வொரு நக்ஷத்ரத்திற்கும(As per the table:
நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்) ஒவ்வொரு கணம் இருக்கும். ஆண் பெண் ஒரே கணமானால் உத்தமம். ஆண் தேவகணமாகவும் பெண் மனுஷயகணமாகவும் ஆனால் அது மத்யமம். ஆண் தேவகணமாகவும் பெண் இராக்ஷஸகணமாகவும் ஆனால் அது அதமம். ஆண் மனுஷயகணமாகவும் பெண் இராக்ஷஸகணமாகவும் ஆனால் அது அதமாதமம்.

[குறிப்பு: உத்தமம் - நன்று; மத்யமம்: பரவாயில்லை; அதமம், அதமாதமம்: கூடவே கூடாது]


[3] மாஹேந்திரம் - Mahendram - வதூ நக்ஷத்ரதிலிருந்து வரன் நக்ஷத்ரத்தை CLOCKWISE ஆக எண்ணுங்கள். எண்ணும் போது வதூ நக்ஷத்ரம் ஒன்றாகக் கொண்டு எண்ணவும். உங்களுக்கு வரும் விடை 4, 7, 10, 13, 16, 19, 22, 25 வந்தால் பொருத்தம் இருக்கிறது என்று பொருள்.

[4] ஸ்திரீ தீர்க்கம் - Sthree Theergam - வதூ நக்ஷத்ரதிலிருந்து வரன் நக்ஷத்ரத்தை CLOCKWISE ஆக எண்ணுங்கள். எண்ணும் போது வதூ நக்ஷத்ரம் ஒன்றாகக் கொண்டு எண்ணவும். உங்களுக்கு வரும் விடை 13க்கு மேலாவது, 7க்கு மேலாவது வந்தால் பொருத்தம் இருக்கிறது என்று பொருள்.


[5] பிராணி - Prani Porutham - ஒவ்வொரு நக்ஷத்ரத்திற்கும(As per the table:
நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்) ஒவ்வொரு பிராணி இருக்கும்.

உதாரணமாக

வதூ நக்ஷத்ரம் கார்த்திகையின் பிராணி: ஆடு.

வரன் நக்ஷத்ரம் விசாகத்தின் பிராணி: புலி.

இந்த இரண்டு பிராணிகளுக்கும் பொருந்தாது. எனவே பிராணி பொருத்தம் இல்லை.


[6] இராசி - Rasi - வதூ இராசியிலிருந்து வரன் இராசியை CLOCKWISE ஆக எண்ணுங்கள். எண்ணும் போது வதூ இராசியை ஒன்றாகக் கொண்டு எண்ணவும். உங்களுக்கு வரும் விடை 6க்கு மேல் வந்தால் பொருத்தம் இருக்கிறது என்று பொருள்.


[7] இராசியாதிபதி - Rasiyathipathi -

இராசிஅதிபதிமித்ரர்கள்(நட்பு)
மேஷம், விருச்சிகம்செவ்வாய்புதன், சுக்ரன்
ரிஷபம், துலாம்சுக்ரன்சூரியன், சந்திரனைத் தவிர மற்றவர்கள்
மிதுனம், கன்னிபுதன்சூரியனைத் தவிர மற்றவர்கள்
கடகம்சந்திரன்வியாழன், புதன்
ஸிம்ஹம்சூரியன்வியாழன்
தனுசு, மீனம்வியாழன்செவ்வாயைத் தவிர மற்ற்வர்கள்
மகரம், கும்பம்சனிபுதன், வியாழன், சுக்ரன்

உதாரணம்:

வதூ இராசி: மேஷம்; வரன் இராசி: துலாம் - பொருத்தம் இருக்கிறதா?

வதூ அதிபதி: செவ்வாய்; வரன் அதிபதி - சுக்ரன் - செவ்வாய்க்கு சுக்ரன் மித்ரன், எனவே பொருத்தம் உள்ளது.


[8] வசியம் - Vasiyam

வதூ இராசிவரன் இராசி
மேஷம்ஸிம்ஹம், விருச்சிகம்
ரிஷபம்கடகம், துலாம்
மிதுனம்கன்னி
கடகம்விருச்சிகம், தனுசு
ஸிம்ஹம்துலாம்
கன்னிமேஷம், மிதுனம், மீனம்
துலாம்மகரம்
விருச்சிகம்கடகம், தனுசு
தனுசுமேஷம்
மகரம்மேஷம், மீனம்
கும்பம்மகரம்
மீனம்மேஷம்


உதாரணம்:

வதூ இராசி: மேஷம்; வரன் இராசி: ஸிம்ஹம் - பொருத்தம் இருக்கிறதா?

மேலே உள்ள டேபிளில் பார்க்கவும், மேஷத்திற்கு ஸிம்ஹம் வசியம் என்று போட்டிருக்கிறது. எனவே பொருத்தம் உள்ளது.

[9] இரஜ்ஜு(சரட்டு பொருத்தம்) - Rajju - ஒவ்வொரு நக்ஷத்ரத்திற்கும்(As per the table: நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்) ஒவ்வொரு இரஜ்ஜு இருக்கும். ஆண் பெண் இருவருக்கும் ஒரே இரஜ்ஜு இருந்தால் பொருத்தம் இல்லை. வேறு வேறு இரஜ்ஜுவாக இருந்தால் பொருந்தும்.
உதாரணம்:

வதூ நக்ஷத்ரம்: மிருகசீர்ஷம் - சிரோரஜ்ஜு

வரன் நக்ஷத்ரம்: பூராடம் - தொடை ரஜ்ஜு

இருவரும் வேறு வேறு ரஜ்ஜு. எனவே பொருத்தம் உள்ளது.

[10] வேதை - Vethai - ஒவ்வொரு நக்ஷத்ரத்திற்கும்(As per the table: நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்) ஒவ்வொரு நக்ஷத்ரம் வேதையாக இருக்கும். எனவே அப்படியிருக்கும் நக்ஷத்ரம் பொருந்தாது.

உதாரணம் 01:

வதூ நக்ஷத்ரம்: அசுபதி

வரன் நக்ஷத்ரம்: கேட்டை

இரு நக்ஷத்ரமும் வேதை, எனவே பொருந்தாது.


[11] நாடி - Nadi - ஒவ்வொரு நக்ஷத்ரத்திற்கும்(As per the table:
நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்) ஒவ்வொரு நாடி இருக்கும். ஆண் பெண் இருவருக்கும் ஒரே நாடி இருந்தால் பொருத்தம் இல்லை. வேறு வேறு நாடியாக இருந்தால் பொருந்தும்.

உதாரணம் :

வரன் நக்ஷத்ரம் - அசுபதி - இடப்பார்சுவ நாடி

வதூ நக்ஷத்ரம் - அவிட்டம் - மத்ய நாடி

இருவரும் வேறு வேறு நாடி, எனவே பொருத்தம் உள்ளது.

இந்த 11 பொருத்தங்களில் atleast 6 பொருத்தமாவது இருத்தல் வேண்டும்.

சரி ஐயா, எந்தெந்த 6 இருக்க வேண்டும்? மிக முக்கியமாக தினம், கணம், பிராணி, இரஜ்ஜு, வேதை, நாடி ஆகிய பொருத்தங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். சில பேர் தினப் பொருத்தத்தை விட்டு மற்ற பொருத்தத்தைப் பார்க்கிறார்கள். அது சரியல்ல. அதுதான் மிக முக்கியமானது. நான் நக்ஷத்ர ரீதியாக சில குறிப்புகள் கொடுத்து வருகிறேன் அல்லவா, அவை இது போன்ற பொருத்தம் பார்க்க உதவுவதற்குதான்.

அடுத்த ஸ்டெப்ஸ்களை அடுத்தடுத்த பதிவுகளில் தருகிறேன்.

[குறிப்பு: நமது இட்லிவடை வாசகர்களுக்காக ஸ்பெஷல் பொருத்தம் சாப்ட்வேர் தயாரித்து வருகிறேன். அதை எனது இணையதளத்திலும் இணைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மிக விரைவில் அதற்கான பணிகள் நடந்து முடிந்தவுடன் சொல்கிறேன். நமது வாசகர்கள் அதில் சென்று இலவசமாக பொருத்தம் பார்த்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம். எனக்கு(ஜோதிடர்) தரவேண்டிய காணிக்கையை பக்கத்திலிருக்கும் கோவிலில் சேருங்கள். ஏனைய மதத்தினர் என்றால் அவரவர் ஆலயத்தில் சேர்க்கவும். ]

இனி தனுசு இராசிக்குண்டான பலன்களில் சந்திபோம். நன்றி


Read More...