இந்த வார இரண்டு செய்திகளை அலசுகிறார் இன்பா!
இந்த வார செய்திகள் இரண்டு..
செய்தி # 1இந்த முறை எந்த பெண்மணி(!?) என்ன சொன்னாரோ தெரியவில்லை...இடைதேர்தல் முடிவுகள் குறித்து அண்ணன் இட்லிவடை பதிவு எதுவும் போடவில்லை. நானும் அதை பற்றி இங்கே எதுவும் எழுத போவதுஇல்லை.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் அவர்களின் ஒரு அறிக்கை குறித்துதான் பேசபோகிறோம்.
நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஹிந்தி கற்பிக்கப்பட வேண்டுமென்று அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். தேசிய மொழியை அனைவரும் அறிந்திருக்கும் போது நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எளிதில் ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தில்லியில் நடைபெற்ற உயர்கல்வி வாரியக் குழு கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியது:
அனைத்து மாநிலங்களிலும் பிராந்திய மொழியுடன் தேசிய மொழியான ஹிந்தியும் கற்பிக்கப்பட வேண்டும். பல மாணவர்கள் தங்கள் தாய் மொழியில் புலமை வாய்ந்தவர்களாக உள்ளார்கள். ஆனால் பிற மாநில மொழிகளையும் கற்றுக் கொள்வதன் மூலம்தான் அவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று வெற்றிகரமாகப் பணியாற்ற முடியும். முக்கியமாக தேசிய மொழியான ஹிந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சிந்திக்கும் திறனை வளர்க்கும் வகையில் நமது கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். தற்போது நாம் அறிவைத் தேடிப் பெறுபவர்களாக இருக்கிறோம். எதிர்காலத்தில் அறிவின் உற்பத்தித் தளமாக இந்தியா மாற வேண்டும். நம்மிடம் இருந்து வெளிநாட்டவர் கற்றுக் கொள்ளும் நிலை வர வேண்டும்.
வட மாநிலங்களுக்கு வரும் பிற மாநில மாணவர்களால் சரளமாக ஹிந்தி பேச முடிவதில்லை. ஆனால் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார்கள். எனவே நமது நாட்டுக்குள் முக்கியத் தொடர்பு மொழியாக இருக்கும் ஹிந்தியை அனைத்து மாணவர்களும் அறிந்திருப்பது அவசியம். ஹிந்தியை அனைவருக்கும் கற்பிக்க நடவடிக்கை எடுக்க இதுதான் சரியான தருணம் என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இதை படித்துவிட்டு உடனே பஸ்ஸை உடைக்காமல், நம் அரசியல்தலைவர்கள்/தமிழ் இன உணர்வாளர்கள் வழக்கம்போல எதையாவது உணர்ச்சிகரமாக பேசி, அப்பாவி தொண்டர்களை தீக்குளிக்க வைக்காமல்... சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும்.
வடமாநிலம் ஒன்றில் ஒரு கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்ற நான், ஹிந்தி தெரியாத காரணத்தால் எந்த அளவுக்கு மண்டை காய்ந்தேன் என்று எனக்குதான் தெரியும்.
இந்தியா போன்ற மிக பெரிய நாட்டில், ஆங்கிலம் தவிர, பொதுவான ஒரு மொழி அவசியம் என்று கருதுகிறேன். அதே சமயம், கட்டாயத்தால், பிற மொழிதிணிப்பாக இல்லாமல் விருப்பத்தின் பெயரில், ஹிந்தியை எல்லா பள்ளிகளிலும் கற்பிக்கலாம்.
அனைத்து பள்ளிகளிலும், தமிழ் கட்டாயபாடமாகவும், ஹிந்தி போன்ற பிற மொழிகள் விருப்பபாடமாகவும் இருத்தல் நல்லது. 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடுவதற்கு மாற்று மொழிகள் தெரிந்துஇருக்க வேண்டும்தானே?
'உலக தமிழர்களின் தலைவரே', தனது பேரனை ஹிந்தி படிக்கவைதுதானே மத்திய அமைச்சர் ஆக்கிஇருக்கிறார்.
தமிழ் நமது உயிராக இருக்கட்டும். ஹிந்தி போன்ற மொழிகள் அவ்வப்போது
நாம் அணியும் ஆடைகளாக இருக்கட்டும்
செய்தி # 2தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்துக்கணக்கை காட்டவேண்டும் என்ற சட்டத்தின்படி எதோ கணக்கு காட்டுகிறார்கள். ஆனால், இந்த சட்டம் ஏன், எதற்கு என்று எனக்கு தெரியவில்லை. அந்த விவரங்களை வைத்து என்ன செய்வது? ஒரு குறிப்பட்ட தொகைக்குமேலே சொத்து இருந்தால் 'மக்கள் சேவை செய்ய லாயக்கு இல்லை' என்று எதாவது சட்டம் வந்தால் நல்லது.
அரசியல்வாதிகளையும், சினிமாகாரர்களையும் பற்றி பதிவுகள் போட்டு எனக்கே 'போர்' அடித்த நிலையில், சிப்பிக்குள் முத்தாக அவர் தெரிந்தார். 'தமிழன்' என்று சொல்லி தலை நிமிர வைத்திருக்கும் அவர் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் நீதிபதி கே.கண்ணன்.
அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடும் போது, தங்களின் சொத்து விவரங்களை வெளியிடுகின்றனர். அதேபோல், நீதிபதிகளும் தங்களின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை சமீபகாலமாக வலுத்து வருகிறது.பிரபல சட்ட நிபுணரான பிரசாந்தி பூஷன், பல்வேறு மாநில ஐகோர்ட்டுகளில் பணியாற்றும் 600க்கும் மேற்பட்ட நீதிபதிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், "நீதிபதிகள் அனைவரும் தானாக முன்வந்து சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.சமீபத்தில், பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதிய கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சைலேந்திர குமார், "ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவி வகிப்போர் தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்க தயாராக இல்லை. அதேபோல், நீதிபதிகளின் சார்பாக பேச தலைமை நீதிபதிக்கு எந்த அதிகாரமும் இல்லை' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரசாந்தி பூஷனின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் நீதிபதி கே.கண்ணன், தன் சொத்து விவரங்களை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.தன் பெயரில் வங்கியில் 1.03 லட்சம் ரூபாய் டிபாசிட், 3.87 லட்சம் ரூபாய்க்கு முதலீட்டுப் பத்திரங்கள், மனைவி பெயரில் 10.59 லட்சம் ரூபாய் டிபாசிட் உள்ளது என கூறியுள்ளார்.
சொத்து விவரங்களை இணையதளம் மூலமாக வெளியிட்ட அவர் கூறியுள்ளதாவது: நீதித்துறையில் ஊழலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள செயல்பாட்டு முறை சரியில்லை எனில், புதிய அமைப்பு முறை ஒன்றை உருவாக்க வேண்டும். நீதிபதிகள் தேர்வு மற்றும் நீக்கம் தொடர்பாகவும் விதிமுறைகளை இயற்ற வேண்டும்."நீதிபதிகள் தங்களின் சொத்து விவரங்களை தானாக முன்வந்து வெளியிட வேண்டும்' என்ற, நிர்பந்தம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதனால், "சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்' என்பது போல, நீதிபதிகளும் தங்களின் சொத்து விவரங்களை வெளியிட்டு நேர்மையை வெளிப்படுத்த வேண்டும்.பொதுவாக தகவல் உரிமைச் சட்டப்படி விவரம் கேட்கலாம் என்றாலும், அதை தேசியப்பிரச்னைகள் மற்றும் நிர்வாகம் சம்பந்தமானவற்றிற்கு பயன்படுத்தலாம். இந்த விஷயத்தையும் சேர்த்து அதிக சுமையாக்க வேண்டாம்.நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைக்கு, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதிகள் இருவர் உட்பட பல முன்னாள் நீதிபதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தலைமை நீதிபதி தகவல்: இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியதாவது:நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்பதை நான் எதிர்க்கவில்லை. அதை அவர்கள் தானாக முன்வந்து செய்ய வேண்டும். "அனைத்து நீதிபதிகளின் சார்பாக பேச எனக்கு உரிமையில்லை' என, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சைலேந்திர குமார் கூறியுள்ளார். அது சரியல்ல. அனைத்து நீதிபதிகள் சார்பாக பேச எனக்கு உரிமையுண்டு. பல நாடுகளின் நீதித்துறையில் இந்த நடைமுறை உள்ளது.நீதித்துறையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு. அதனால், நீதிபதிகள் சொத்து விவரங்கள் வெளியிடுவது தொடர்பாக நான் ஏற்கனவே தெரிவித்த கருத்துக்களில் உறுதியாக இருக்கிறேன். நீதிபதிகள் தானாக முன்வந்து சொத்து விவரங்களை அறிவித்தால், அதை யாரும் தடுக்க முடியாது. நானும் தடுக்க முடியாது.அதே நேரத்தில் சட்டம் ஒன்று இயற்றப்பட்டால், அனைவரும் சொத்து விவரங்களை வெளியிடுவர். சட்டம் இல்லாததால், இந்த விவகாரத்தில் நீதிபதிகள் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. ஒருமித்தக் கருத்தை உருவாக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அண்டை நாடான இலங்கையில் நிறைவேற்றப்பட்ட, "சொத்துக்கள் மற்றும் கடன் விவரங்களை அறிவித்தல் சட்டம் 1975'ன்படி, நீதிபதிகள் தங்களின் நியமனத்தின்போது சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும். நீதித்துறையில் ஊழல் நிலவுவதாக தொடர்ச்சியாக வந்த புகாரை அடுத்து, ஆப்ரிக்க நாடுகள் பலவற்றிலும், நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிடுவதை கட்டாயமாக்கும் சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.இவ்வாறு நீதிபதி கண்ணன் கூறியுள்ளார்.
பாரதியின் பாணியில் சொல்வதானால், கண்ணன் ஒரு முன்னுதாரணம்.
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Sunday, August 30, 2009
சண்டேனா இரண்டு (30-08-09)- செய்தி விமர்சனம் - இன்பா
Posted by IdlyVadai at 8/30/2009 11:30:00 AM 30 comments
Labels: இன்பா, செய்திவிமர்சனம்
சந்திராயன் என்ன அனுப்பியது ?
இந்தியாவின் முதல் ஆளில்லாத நிலவு விண்கலமான சந்திராயன்-1, அக்டோபர் 22ம் தேதி ஏவப்பட்டதை பலர் டிவியில் பார்த்து பெருமை கொண்டோம். இதற்கு ஆன செலவு ரூ.400 கோடி.
இன்று வந்த செய்தி சந்திராயனுக்கும், இஸ்ரோவுக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது என்பது தான். அதாவது இரண்டு வருடம் சுற்றி நமக்கு தகவல் அனுப்ப வேண்டிய சந்திராயன் ஒரு வருடம் ஆவதற்கு முன்பே அதன் கதை முடிந்துவிட்டது.
எதற்கு 400 கோடி வீண் செலவு என்று இப்பவே பலர் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இலவச டிவிக்கு ஆகும் செலவை பற்றி யாரும் கணக்கு போட்டு பார்ப்பதில்லை. நிற்க.
கடந்த 9 மாதங்களில் 3 ஆயிரம் முறை நிலவை சுற்றி சுமார் 70 ஆயிரம் புகைப்படங்களை இந்த விண்களம் அனுப்பியிருந்தது. ஆனால் சந்திராயன் மேலே சென்றதிலிருந்து ஏதாவது பிரச்சனை வந்துக்கொண்டே தான் இருந்தது.
17 ஆம் நாள் சந்திராயன் வழிகாட்டும் வசதியில் கடும் இயந்திர கோளாறு ஏற்பட்டது என்று இஸ்ரோ கூறியது. அதற்கு பிறகு சந்திரனுக்கு சுமார் 200 கிலோமீட்டர் அப்பாலுள்ள சுற்றுவட்டப் பாதையில் பறக்கின்றது என்று தெரிவித்தது. ( 100 கிலோமீட்டர் பாதையில் தான் அது பயணிக்க வேண்டும் ). அதற்கு படங்கள் எடுக்க இது ஏதுவாக இருக்கும் என்று காரணம் சொன்னார்கள்.
அப்பறம் 'Raw' தகவல் வந்துக்கொண்டு இருக்கிறது அதை நாங்கள் ஆய்வு செய்கிறோம் என்றார்கள்.
ஜூலை மாதம் ந்திராயனின் இருந்து 2 ஸ்டார் சென்சார்கள் பழுதானது, விண்வெளி கதிர் வீச்சுகளை தாங்க முடியாமல் போனதே பழுதுக்கு காரணம் என்று சொன்னார்கள்.
இன்று தகவல் துண்டிப்பு என்று சொல்லிவிட்டார்கள்.
நான்காம் வகுப்பு ஸ்கூல் பாட புத்தகத்தில் பார்த்த நிலவின் மேடுகளும், குழிகளை தவிர சந்திராயன் நமக்கு அனுப்பிய தகவல் என்ன என்று யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.
Posted by IdlyVadai at 8/30/2009 02:29:00 AM 40 comments
Labels: செய்திவிமர்சனம்
Thursday, August 27, 2009
இட்லிவடை பதில்கள் - 27-08-09
வந்த கேள்விகளில் 10 கேள்விகளுக்கு பதில் ( சிலர் மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்கள் ). மீதி கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரிந்தவுடன் போடுகிறேன் :-)
1. இடைதேர்தல் ஓட்டுப் பதிவு அன்று மு.க. உடல்நலம் குறித்த வதந்தி பரப்பியது யாராக இருக்கும்?
டோக்கன் பெறமுடியாத கடுப்பில் வெறுங்கையோடு போனவர்களின் வேலையாக இருக்கலாம்.
2. தி.மு.க வின் பலம் / பலவீனம் ?
அதிமுகவின் பலம் - திமுகவின் குடும்பம்
திமுகவின் பலம் - அதிமுவின்(மன்னார்குடி) குடும்பம்3. உங்களுக்கு எந்த கட்சி பிடிக்கும் ? உண்மையாக பதில் சொல்லவும் ?
என்ன கேள்வி இது ? V உள்ள கட்சி தான் எனக்கு பிடிக்கும்.
வேகத்துக்கு ஜெ
'வி'வேகத்துக்கு கலைஞர்
தைரியத்துக்கு 'வி'ஜயகாந்த்
அசட்டு தைரியத்துக்கு 'வி'ஜய்
பிகு: கண்களில் கோளாறு உள்ளவர்களுகு இரண்டு விரல்களுக்கு நடுவில் 'V' தெரியும் !4. கலர் டி.வி. வழக்குல இன்னிக்கு வந்த தீர்ப்பு பற்றி உங்க கருத்து என்ன? வழக்க சரியாய் நடத்தலையா? இல்லை உள்குத்துல விட்டுட்டாங்களா? இல்லை, மெய்யாலுமே ஒண்ணுமே இல்லையா?
திமுக - கொள்ளை அடிக்க திட்டம் போடுவார்கள்.
அதிமுக - போட்ட திட்டதில் கொள்ளை அடிப்பார்கள்.
5. கேள்வி கேட்டா அந்தக் கேள்வி எனக்கு சொந்தமா, உங்களுக்கு சொந்தமா?
பதில் சொன்ன பிறகு கேள்வி பதில் சொன்னவருக்கு சொந்தம். பதில் கேள்வி கேட்டவருக்கு சொந்தம். இந்த பதில் யாருக்கு சொந்தம் ?
6. ஏழைகளுக்கு இலவசமாக டி.வி. தரும் அரசு, உயர் நீதிமன்றம் ஆணை இட்ட பின்பும் இலவசமாக "முகமூடி" வழங்காதது ஏன்?
27-10-2007 அன்று முதல் இன்று வரை முகமூடியுடன் வலம் வரும் இட்லிவடையிடம் தமிழக அரசு எதாவது consult செய்தார்களா?
சில வாரம் முன் என்னிடம் வந்தார்கள், 30 பேர் இறந்து போனதற்கு இலவச முகமூடி கொடுக்கிறீர்கள், அதற்கு பதில் எட்ஸுக்கு நிறைய பேர் இறந்து போகிறார்கள், அவர்களுக்கு இலவச காண்டோம் கொடுங்கள் என்று சொன்னேன்.
7. இட்லிவடை ப்லொக் idlyvadai.blogspot.com க்கு என்ன spelling
அதற்கு சரியான ஸ்பெலிங் cookies.blogspot.com என்று சிலர் சொல்லுகிறார்கள். இந்த மாதிரி கேள்வி கேட்டு என்னை இம்சை செய்யாதீர்கள்.8.எந்திரன், ரஜினியின் ஜோக் படமா, ஷங்கரின் பிரமாண்ட படமா, சன் டிவியின் டப்பா படமா?
ஜோக் படமா என்று தெரியாது ஆனால் சினிமா வரலாற்றில் ஜோக்கர்கள் பார்க்க போகும் பிரமாண்ட சினிமாவாக இருக்கும். ( ஜோக்கர்கள் புத்திசாலிகள். உதாரணம் அபூர்வ சகோதரர்களில் வரும் ஜோக்கர் கமல் )
9. அம்மா பகவான், ஜக்கி வாசுதேவ், நித்யானந்தர் போன்ற சாமியார்கள் ஏன் மக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கோர்ஸ் கொடுக்கிறார்கள்? ஏழைகளுக்கு ஏன் காசில்லாமல் உதவுவதில்லை?
அவர்கள் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறார்கள். அதாவது நம்மை ஏழையாக்கி அந்த சிரிப்பில்!
10. நல்ல இட்லிவடை கிடைக்குமா?
நானும் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். கிடைத்தால் சொல்லுங்க.
கேள்வி கேட்டவர்களுக்கு நன்றி. தொடர்ந்து கேள்விகள் கேட்கலாம்...
Posted by IdlyVadai at 8/27/2009 05:30:00 PM 24 comments
Labels: இட்லிவடை-பதில்கள்
Wednesday, August 26, 2009
நோ கமெண்ட்ஸ்
"நீண்ட நாட்களாகவே விஜய்யும் ராகுலும் இ-மெயிலில் தொடர்பில் உள்ளனர். இருவரும் தொலைபேசியில் பேசிக் கொள்வதும் வழக்கம். விஜய்யும், ராகுல்காந்தியும் நேற்று முன்தினம் டெல்லியில் சந்தித்து பேசினார்கள். இருவரும் நீண்ட நேரம் பேச்சு நடத்தினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை இப்போது வெளிப்படுத்த முடியாது." - விஜய்யின் தந்தை சந்திரசேகர்
வருங்கால தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் வாழ்க! ( இப்பவே கர்சீப் போட்டு வைக்கிறேன் )
Posted by IdlyVadai at 8/26/2009 02:48:00 PM 74 comments
Labels: அரசியல்
Tuesday, August 25, 2009
காக்கையார் சொன்ன ஃப்ளாஷ் கிசுகிசு!
"விய்ங்...." என்று பறந்துவந்து அமர்ந்தார் காக்கையார். நாம் வள்ளலார் நினைவில் நெகிழ்ந்து இருந்ததால் கவனிக்கவில்லை. தானே அழைப்புமணியை அழுத்தி வடை, சுடச் சூட டீக்கு ஆர்டர் செய்துகொண்ட அடாவடியில் சிந்தனை கலைந்தோம்.
"என்ன காக்கையாரே, சுடச் சுட செய்தி உண்டா? உட்காருகிற தோரணையே கொஞ்சம் ஓவரா இருக்கே!"
"இல்லையா பின்னே, மேட்டர் அப்படியாக்கும்!"
"ரொம்ப பில்டப் கொடுக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுங்கள்."
"விஷயம் தெரியுமா, அந்த ஆனந்தமான வாரப் பத்திரிகை போட்ட குட்டிகளில்..."
"என்ன சொல்ல வருகிறீர்? பத்திரிகையில் குட்டிகள் படம்தானே போடுவார்கள்"
வடையையில் இருந்த பச்சை மிளகாயைக் கடித்ததுபோல் ரியாக்ஷன் காண்பித்தார் காக்கையார்.
"ஐயோ நான் சொல்லவருவது வேறு. அந்தப் பத்திரிகை அடுத்தடுத்து போட்டு பத்திரிகைக் குட்டிகளில்....."
"ஓ, சரி. சரி. குட்டி என்ற வார்த்தையைக் கேட்டதும் சிந்தனையும் குட்டிக்கரணம் அடித்துவிடுகிறது. ஓகே விஷயத்துக்கு வாரும்."
"அந்தப் பத்திரிகை போட்ட குட்டிகளில் மூத்த குட்டியின் முதன்மை ஆசிரியர் நேற்று அதிரடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிராராம்."
"அதிர்ச்சியாக இருக்கிறதே."
"அதிர்ச்சி உமக்கு மட்டும் இல்லை. ஆனந்த முதலாளிக்கும் அதிர்ச்சியாம். காரணம், முதன்மை ஆசிரியர், பலகோடி சொத்துகளுக்கு இப்போது அதிபதி என்பது தெரியவந்துள்ளதாம்"
"அப்படியா? எப்படி? பத்திரிகை ஆபிசில் என்னத்தை சம்பாதித்துக் கிழித்துவிட முடியும்?"
"அதுதான் தெரியவில்லை. முதன்மை ஆசிரியர், பல அரசியல்வாதிகளின் ஊழல்களையெல்லாம் எழுதி எழுதி போரடித்துவிட்டதால் தானும் செயலில் இறங்கிவிட்டாரோ என்னவோ? அதான் சீட்டைக் கிழித்துவிட்டார்கள்"
"ஹா ஹா இதுக்கு அடுத்த வாரம் ஒரு திகில் இலவச இணைப்பு தரலாம் போல, பேஷ் பேஷ்"
நாம் சொன்ன வழவழ ஜோக்கை காதில் வாங்காமல் டீயையையும் சூட்டோடு சூடாகக் உறுஞ்சி... வாய் பொரிந்தார்.
"சுடப் போகிறது, பார்த்து..."
"அண்ணாசாலை, பெட்ரோல் பங்க்கே பற்றி எரிகிற மாதிரி சூடாக அல்லவா இருக்கிறது, அதற்கு இது ஒன்றுமில்லை" கிளாஸை டொக்கென்று வைத்துவிட்டுப் பறந்தார் காக்கையார்.
Posted by IdlyVadai at 8/25/2009 04:14:00 PM 28 comments
விபுதி மணம்
"கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி" என்ற விநாயகர் துதிப்பாடலை கேட்டாலோ இல்லை எங்காவது படித்தாலோ கிருபானந்த வாரியாரின் தமிழும், குரலும் நம் நினைவுக்கு வந்துவிடுகிறது. 'திருமுக' என்ற அடைமொழிக்கு ஏற்ற ஒரு முகம் அவர் முகம். அதில் எப்போதும் புன்சிரிப்புமாய், நம் நினைவுகளில் கமழ்கிறது. ...அவர் நெற்றியில் பூசிஇருக்கும்... விபுதி மணம்.
இன்று சுவாமிகள்(அல்லது) குரு என்று தன்னையே அழைத்துகொள்ளும் யாரையும் நீங்கள் காசு கொடுக்காமல் பார்க்கஇயலாது. சிலவருடங்களுக்கு முன்னால் நான் புனேவில் இருந்த ஒரு ஆஸ்ரமதிற்கு போனபோது, அங்கு உள்ள சுவாமிகள் இறைவனை அடையும் வழி (!) குறித்து பயிற்சிமுகாம் நடத்துவதாகவும், அதில் கலந்துகொள்ள 5000 கொடுங்கள் என்றார்கள்.
வேலூர் பொற்கோவிலை கட்டியதாக(?) கூறப்படும் சக்தி அம்மாவை 'தரிசிக்க' 1000 கட்டணம். ஸ்ரீ அம்மா மற்றும் கல்கி பகவானின் ஆஸ்ரம்கள் சார்லஸ் அரண்மனையின் 'மினியேச்சர்' வடிவங்கள்.
ஆனால், கிருபானந்த வாரியார் எளிமையின் வடிவமாக வாழ்ந்தவர். கூலி தொழிலாளிக்கும், கோடிஸ்வரனுக்கும் சரிசமமாக 'ஆன்மிகத்தை' கொண்டுசென்றவர்.
1906 ஆம் வருடம் வேலூர் அருகே உள்ள காங்கேயநல்லூரில் பிறந்த வாரியார் பள்ளியே சென்றதில்லை. இவருக்கு இசை, தமிழ் இலக்கண, இலக்கியங்களை,அற நூல்களை கற்பித்து, குருவாகவும் விளங்கினர் இவரது தந்தை மல்லையதாசர். நல்ல இல்லறத்தில் சிறந்துவிளங்குவதே துறவரதிர்க்கான முதல்படி என்னும் இந்துமத நெறிப்படி இளம்வயதில் திருமணம் செய்துகொண்டவர்.
(இன்று உள்ள 'சாமியார்கள்' முறைப்படி 'ஒன்று'கூட இல்லாமல், முறையே இல்லாமல் 'ஊருக்கு ஒன்றாய்' வைத்துகொள்கிறார்கள்).
1936 இல் முருகவழிபாட்டை ஆரம்பித்தவர், திருப்புகழமிர்தம் என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்து, திருப்புகழ், கந்தர்அலங்காரம் போன்றவற்றுக்கான உரைகளும்,
சமய கட்டுரைகளையும் எழுதினார். 1956 இல் திருப்புகழ் திருச்சபை என்ற அமைப்பை நிறுவி கோவில்களுக்கான திருப்பணிகள் மற்றும் ஏழைமக்களுக்கான கல்வி,மருத்துவ சேவைகளையும் செய்தார். 57 ஆண்டுகள் அவர் ஒருநாளும் முருகவழிபாட்டை நிறுத்தியதுஇல்லை, 1993 இல் அவர் இறைவனடிசேரும் வரை.
தன் சமய,தமிழ் பணிகளுக்காக அண்ணாமலை மற்றும் தஞ்சை பல்கலைகழகங்களால் முனைவர் பட்டம் பெற்றவர் வாரியார். சிதம்பரத்தில் ஒரு சொற்பொழிவின்போது நான் கேட்ட "என்அப்பன் முருகன்" என்னும் குரல் இன்னும் நினைவில் இருக்கிறது. மக்களை தன் தமிழாலும், நகைச்சுவை உணர்வாலும் கட்டிபோட்டவர் அவர்.
ஒருமுறை கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவனை பார்த்து முருகபெருமானின் தந்தை பெயரை கேட்க, சினிமா பார்த்த ஞாபகத்தில் அந்த சிறுவனும் உடனே "சிவாஜி" எனப் பதிலுரைத்தான். சுற்றியிருந்த மற்றவர்கள் அச்சிறுவனை கடிந்தனர். உடனே வாரியார், "அவன் சரியாகத்தானே கூறியுள்ளான், அவனை ஏன் கடிந்து கொள்கிறீர்கள்? பெரியவர்களை மரியாதையாக விளிக்கும் போது ஹிந்தியில் ஜீ என்று இறுதியில் சேர்த்து சொல்வது வழக்கம். அவ்வாறே இவனும் முருகனின் அப்பனை மரியாதையுடன் விளித்துள்ளான். அவன் சொன்னது சரியே" என்று சிவாஜிக்கு புது அர்த்தம் சொன்னவர் வாரியார்.
இன்று உள்ள ஆன்மிகவாதிகளுக்கு போஸ்டர்கள், பேனர்கள், டிவி/பத்திரிகை விளம்பரம் தொடங்கி சொந்தமாக டிவி சேனல்வரை தேவைப்படுகிறது. இது எதுவும் இல்லாமலே கிராமம் தொடங்கி உலகம்வரை புகழும், பெயரும் அவருக்கு தேடிவந்தது. எளிமையின் இலக்கணமாக வாழ்ந்த வாரியார் ஒரு நிஜமான ஆன்மிகவாதி.
அவரது சமாதியும் அவர் பிறந்த காங்கேயநல்லூரில் உள்ளது. அவர் விட்டு சென்ற பணிகளை கிருபானந்த வாரியார் அறக்கட்டளை செய்துவருகிறது.
ஆகஸ்ட் 25 , திருமுக வாரியார் சுவாமிகள் அவர்களின் பிறந்த நாள். அவரின் சில பொன்மொழிகளோடு, அவரின் இறைபணிகளை நாம் நினைவில் கொள்வோம்.
"பிறர் குற்றங்களை மன்னிப்பதுதான் பெருமையும் பொறுமையுமாகும்".
"நேற்று" என்பது உடைந்த மண் பானை; "நாளை" என்பது மதில் மேல் பூனை; "இன்று" என்பது அழகிய ஒர் வீணை"
"ஆசையின்றிப் பயன் கருதாமல் மக்களுக்குச் சேவை செய்தால் புகழ் தானே வந்து சேரும். புகழுக்கு ஆசைப்படக் கூடாது, மலரை நாடி வண்டுகள் வருவதுபோல பற்றற்ற சேவையால் புகழ் தானே வரும்"
- வேலும்,மயிலும் துணை -
-இன்பா
Posted by IdlyVadai at 8/25/2009 05:00:00 AM 57 comments
Sunday, August 23, 2009
சண்டேனா இரண்டு (23-08-09)- செய்தி விமர்சனம் - இன்பா
இந்த வார இரண்டு செய்திகள்..
செய்தி # 1
"எந்திரன்" படத்தை ஆரம்பத்தில் லண்டனை சேர்ந்த ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருந்ததும், பின்னர் சன் பிக்சர்ஸ் வாங்கியதும் தெரிந்ததே. இலங்கை தமிழர்களான கருணாகரன் மற்றும் நடிகர் அருண்பாண்டியன்(இவரும் இலங்கைதான்) ஆகியோர் பொறுப்பில் இயங்கிவருகிறது இந்த ஐங்கரன் இன்டர்நேஷனல்.
இலங்கையின் இயற்கைப் பேரிடர் துறை அமைச்சர் அப்துல் ரிஷாத் பதியுதீன் அளித்த ஒரு பேட்டியில், "ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு லண்டனைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் மூலம் புலிகள் நிதியுதவி செய்தனர். அந்த லண்டன் தமிழர் தமிழ் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவர் புலிகள் கொடுக்கும் பணத்தை வைத்துத்தான் படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார்" என்று கூறிஇருக்கிறார்.
ஆனால் இதை திரையுலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பதியுதீனின் பேச்சை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ரஜினி படத்தை தயாரிக்க விடுதலைப் புலிகள் பணத்தைப் பெற வேண்டிய அவசியம் இங்கு யாருக்கும் இல்லை. இப்படிப்பட்ட வழியில் படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டிய நிலையில் ரஜினியும் இல்லை. அவரை வைத்துப் படம் எடுக்க எத்தனையோ தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ரஜினி விடுதலைப் புலிகளின் பணத்தைப் பெற்றார் என்று கூறுவது அபத்தமானது, மலிவான விளம்பரமே தவிர வேறு ஒன்றும் இல்லை" என்றார்.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள லண்டன் தமிழ் பட நிறுவனம் ஐங்கரன் இன்டர்நேஷனல் என ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து
"விடுதலைப் புலிகளுக்கும் ஐங்கரன் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னொன்று எந்திரன் படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்கவில்லை. தயாரிக்காத ஒரு படம் குறித்தும், கொடுக்கப்படாத தொகை குறித்தும் எங்கள் நிறுவனத்தை வம்புக்கிழுத்திருப்பது தேவையற்றது, கண்டிக்கத்தக்கது..." என்றார் ஐங்கரன் நிறுவனம் சார்பில் அதன் பிஆர்ஓ டயமண்ட் பாபு .
இலங்கை அமைச்சரின் பேச்சுக்கு பதிலோ, விளக்கமோ அளிப்பதில்லை என்று ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ளார். இதை அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது.
ரஜினி தலை அசைத்தால்போதும். அவரை நம்பி கோடிகளை கொட்டுவதற்கு இந்தியா முழுவதும் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
சில மாதங்களுக்கு முன்பு, நம் தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் 'கோமாளிகள்' என்று ஒரு இலங்கை அமைச்சர் விமர்சித்தார்(அது உண்மையா,பொய்யா என்பது வேறு விஷயம்!) . இது போன்ற தேவை இல்லாமல் , வெறும சர்ச்சைக்கு பேசுவது இலங்கை அமைச்சர்களுக்கு சாதாரண விஷயம் ஆகிவிட்டது
இப்படி அடிப்படை ஆதாரஙகள் எதுவும் இல்லாமல், அடிக்கடி உளறிவரும் இலங்கை அமைச்சர்களுக்கு யார், எப்படி வாய்ப்பூட்டு போடுவது??
செய்தி # 2பாலிவுட் படங்களுக்கு பணத்தை வாரியிறைத்து வந்த இந்திய முன்னணி தொழில் நிறுவனங்கள் கவனம் இப்போது ஹாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. ஹாலிவுட் படங்களுக்காக 4,000 கோடி ரூபாய் ஒப்பந்தம் போட்டுள்ளார் அனில் அம்பானி. ஹாலிவுட் பிரபல இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் இதற்காக ஒப்பந்தம் போட்டு, புதிய திரைப்பட கம்பெனியை அமைத்துள்ளார் அனில் அம்பானி.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பிக் என்டர்டெய்ன்மென்ட், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஸ்டாசி ஸ்னைடர் ஆகியோரின் டீரீம்ஸ் வொர்க்ஸ் ஸ்டுடியோவின் "மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனமும் சேர்ந்து இந்த புதிய நிறுவனத்தை அமைக்கின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த கூட்டு சினிமா கம்பெனி இயங்கும். 4,125 கோடி ரூபாய் மதிப்பில், ஆண்டுக்கு ஆறு படங்களை இந்த கூட்டு நிறுவனம் வெளியிட இருக்கிறது. ஒப்பந்தப்படி, ரிலையன்ஸ் அம்பானி நிறுவனம் சார்பாக, 1,625 கோடியை மூதலீடு செய்துள்ளது . ஜேபி மோர்கன் செக்யூரிட்டீஸ் உட்பட பல வங்கிகள் கடன் தரவும் முன்வந்துள்ளன. இப்படங்களை உலகம் முழுவதும் வினியோகம் செய்யும் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவும் 875 கோடியை கடனாக தருகிறது. இந்த நிறுவனம் முதல் படத்தை அடுத்தாண்டு வெளியிட உள்ளது.
உலக சினிமாக்களுக்கே மூதலீடு செய்ய தொடங்கிவிட்டார்கள் இந்திய தயாரிப்பாளர்கள்.
-இன்பா
Posted by IdlyVadai at 8/23/2009 05:13:00 PM 33 comments
Labels: இன்பா, சினிமா, செய்திவிமர்சனம்
Friday, August 21, 2009
இட்லிவடை பதில்கள்
ஏன் இட்லிவடை பதில்கள் இப்போது வருவதில்லை என்று சிலர் கேட்கிறார்கள். காரணம் கேள்விகள் வருவதில்லை.
ஆரம்பிக்க நானே இரண்டு கேள்விகளை கேட்டு நானே பதில் சொல்லிவைக்கிறேன்..
1. இந்த ஞாயிறு விடுமுறை தினமா ?
ஏன் இந்த சந்தேகம். எல்லா ஞாயிறும் விடுமுறை தினம் தான். கடவுள் ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார் அதனால் நாமும் ஓய்வு எடுக்க விடுமுறை என்கிறார்கள். ஆனால் இந்த ஞாயிறு சிறப்பு விடுமுறை! விடை தெரிந்துக்கொள்ள கலைஞர் டிவி பார்க்கவும்.
2. அடுத்த ஞாயிறும் சிறப்பு விடுமுறை உண்டா ?
தெரியாது. 100 தோப்புக்கரணம் வேணுமுனாலும் போடுகிறேன். இந்த மாதிரி கஷ்டமான கேள்விகள் வேண்டாம்.
மற்ற கேள்விகள் நீங்கள் பின்னூட்டதில் கேட்கலாம் :-)
Posted by IdlyVadai at 8/21/2009 08:20:00 PM 63 comments
Labels: நகைச்சுவை
டிவிங்கிள் டிவிங்கிள் பெரிய ஸ்டார்
பெரியவங்க பாடும் டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் பாட்டு :-)
நீங்க இதை ஏற்கனவே பார்த்திருந்தாலும் பரவாயில்லை திரும்ப பார்க்கலாம்!
மினி...
மெகா...
மற்ற பாடல்களை உங்கள் பக்கத்தில் யாரும் இல்லாத போது பாடி பார்க்கலாம்.
Posted by IdlyVadai at 8/21/2009 03:30:00 PM 11 comments
ஜின்னா - ஜஸ்வந்த், பிரிவினையும், சுதந்திரமும்
ஜின்னா பற்றி அத்வானி, ஜஸ்வந்த் சிங்...
எங்களது கடைசி சந்திப்பின் போது, நாங்கள் கராச்சியில் இருந்த காலத்தைப் பற்றியும், பிரிவினையினால் ஏற்பட்டத் துயரத்தின் பாதிப்புகளையும், முகமது அலி ஜின்னாவின் பங்கு பற்றியும், பேசிக் கொண்டிருந்தோம். சுவாமிஜி அப்போது, 1947 ஆகஸ்டு 11ம் தேதி, பாகிஸ்தானின் அரசியலமைப்பு சபையில் ஜின்னா நிகாத்திய வரலாற்று சிறப்பு மிக்க சொற்பொழிவை பாராட்டினார், ''மதச் சார்பின்மைக்கு உண்மையான பொருள் வெளிப்பட்டதை அதில் காண முடியும்'' என்றார் சுவாமிஜி. சுவாமியுடனான கடைசி சந்திப்பில், கங்களுக்கிடையே நிகழந்த உரையாடல், எனது உள் உணர்வில் இருந்தது. 2005 மே, ஜூனில் நான் பாகிஸ்தான் போன போது ஜின்னா பற்றிய ஸ்வாமியின் கருத்துக்கள் என் கருத்துக்களாக வெளிப்பட்டன.
சிந்துவிலிருந்து விடை பெற்றேன்
தனது மத நம்பிக்கையிலும், அதைப் பின்பற்றுவதிலும் ஜின்னா எவ்வளவு நல்ல முஸ்லிமாக இருந்தார் என்று எனக்குத் தெரியாது. பிரிட்டிஷாருக்கு அடுத்தபடி, இந்தியாவை மதரீதியாக பிரிப்பதில், முக்கிய நபராகத் திகழ்ந்தார் என்பதற்கு வரலாறே சாட்சியாக இருக்கிறது. 'ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறு தேசங்களைச் சேர்ந்தவர்கள். நாங்கள் ஒரு நாளும் கூடி வாழ முடியாது' என்று அவர் 1940ல் அறிவித்தார். அதே சமயம், பாகிஸ்தான் உருவாக்கப்பட்டபின் அவரால் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானே, அவரது முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. விரிவாக ஆராய்ந்து தகவல்களை சேகரித்து, ஜின்னாவைப் பற்றி எழுதிய டாக்டர் அஜித் ஜாவேத்வின் கூற்றின்படி, ''அவர் வருத்தமும் நோயும் தாக்கப்பட்ட மனிதராக இருந்தார். அவர், பாகிஸ்தானை உருவாக்கியதன் மூலம், நான் மிகப்பெரிய தவறு இழைத்துவிட்டேன். நான் டெல்லிக்கு போய், நேருவை சந்தித்து 'கடந்த கால முட்டாள் தனத்தையெல்லாம் மறந்துவிட்டு, மீண்டும் நண்பர்களாகிவிடலாம்' எனறு சொல்ல விரும்புகிறேன்'' என்று வேதனையால் அழுதார். 1937ல், இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்ப, தன்னை வற்புறுத்தி சம்மதிக்க வைத்து - முஸ்லிம் லீக்கின் தலைமையை ஏற்க வைத்த லியாகத் அலியை அவர் வெறுக்கவும் ஆரம்பித்தார் என்கிறார் அஜீத் ஜாவேத்.
பிரிவினையின் போது கராச்சியின் 'டெய்லி கெஸட் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எம். எஸ். எம் சர்மா, ஜின்னாவிற்கு நெருக்கமாக இருந்தவர். பாகிஸ்தானில் ஜின்னாவின் இறுதி ஆண்டு பற்றி, பல உண்மை நிகழ்வுகளை, சர்மா பதிவு செய்திருக்கிறார். நோய்வாய்ப்பட்ட உடல்நிலையைத் தவிர, மனப்போராட்டத்தின் துன்பத்தில் தவித்த மனிதராக, ஜின்னாவை சித்தரிக்கிறார், ''ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையின் தூதுவர் என்ற முந்தைய தனது பழைய நிலைக்கு திரும்பிவிட அவர் மிகவும் விரும்பினார். இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக போராடுகிறவராய்ப் பல ஆண்டுகள் இருந்தது போலப் பாகிஸ்தானில், சிறுபான்மையினரின் நன்மைக்காகப் போராடுபவராகத் தொடர விரும்பினார்'' என்கிறார் சர்மா. ஜின்னா, சர்மாவிடம் ''நண்பரே, பாகிஸ்தானின் ஹிந்து சிறுபான்மையினரின் புரடெக்டர் ஜெனரலாக, நான் என்னை நியமித்துக் கொள்ளப் போகிறேன்'' என்று கூறி இருக்கிறார். கராச்சியில், ஹிந்து அகதிகள் முகாம் ஒன்றை பார்வையிட்ட போது, அவரது கண்களில் கண்ணீர் வழிந்திருக்கிறது.
எனது தேசம் எனது வாழ்க்கை, பக்கம் 56, 57
Excerpts from - Jinnah: India-Partition-Independence, Jaswant Singh
“If I were not drawn to the personality I wouldn’t have written the book. It’s an intricate, complex personality, of great character, determination”
“It was historically not tenable to see Mr Jinnah as the villain of 1947, It is not borne out of the facts… we need to correct it… Muslims saw that unless they had a voice in their own economic, political and social destiny they will be obliterated.”
“Jinnah’s Muslim League wins all the Muslim seats and yet they don’t have sufficient numbers to be in office because the Congress Party has, without even a single Muslim, enough to form a government and they are outside of the government. So it was realised that simply contesting elections was not enough… All of this was a search for some kind of autonomy of decision making in their own social and economy destiny”.
“Mr Jinnah was a great man because he created something out of nothing”
“He single-handedly stood against the might of the Congress Party and against the British who didn’t really like him … Gandhi himself called Jinnah a great Indian. Why don’t we recognise that? Why don’t we see (and try to understand) why he called him that?”
“He fought the British for an independent India but also fought resolutely and relentlessly for the interest of the Muslims of India … the acme of his nationalistic achievement was the 1916 Lucknow Pact of Hindu-Muslim unity”.
“He was a self-made man. Mahatma Gandhi was the son of a Diwan. All these (people) — Nehru and others — were born to wealth and position. Jinnah created for himself a position. He carved in Bombay, a metropolitan city, a position for himself. ‘He was so poor he had to walk to work … he told one of his biographers there was always room at the top but there’s no lift. And he never sought a lift.”
( Excerpts from - Jinnah: India-Partition-Independence, Jaswant Singh )
இந்த வார
ஜோக்: முகமது அலி ஜின்னா குறித்து பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்துக்கு குஜராத் அரசு தடை.
சொன்ன காரணம் 1? சர்தார் வல்லபாய் பட்டேல் குஜராத்தை சேர்ந்தவர். அவரைப் பற்றி குறை கூறி இருப்பது மக்கள் அவர் மீது வைத்துள்ள பற்றை சீர்குலைக்கும்.
சொல்லாத காரணம் 2 ? ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தடை செய்ததோடு, அந்த அமைப்பின் தொண்டர்களை சிறையில் அடைத்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல். ஆனால், முஸ்லிம் லீக் அமைப்பை அவர் தடை செய்யவில்லை.
பிகு:
Book Name: Jinnah: India-Partition-Independence
Publishers: Rupa
Price: Rs 695
Pages: 650
PR Agency: BJP
Special PR: Modi
Distributors: Congress, Media
Posted by IdlyVadai at 8/21/2009 01:03:00 PM 23 comments
நொந்தசாமி வெண்பாம்
அடாசு ஆதி ஏகன் திருப்பாச்சி சிவகாசி ஆழ்வார் திருமலை திருப்பதி குசேலன் பாபா பரமசிவன் அழகிய தமிழ்மகன் மதுர பந்தயம் திருவண்ணாமலை எங்கள் ஆசான் பேரரசு நாயகன் தர்மபுரி பீமா..மா..மா
இதெல்லாம் டாப்பு!
கந்தசாமி ?
ப்ளாப்பு!
மேற்கொண்ட விமர்சனம் எழுதியவர் சமீபத்தில் என்னை சந்தித்த பினாத்தல் சுரேஷ் !.
அதை தொடர்ந்து வந்த வெண்பாம் ட்டுவிட்ஸ்!
இந்தநாள் வருமென்று இத்தனைநாள் காத்திருந்து
நொந்தநாளாச்சேன்னு வருந்தாதே - கந்தசாமி
கந்தலென்றாலும் கலெக்ஷன் தேறிவிடும்
அந்தவழி அவரறிவார் பார்.
( பா.ராகவன் )
காசைக் கரியாக்க பெனாத்தல்போல் பலரிருக்க
ஆசையைக் கிளப்பிவிட்டு அடிப்பாரே - மீசை
மழித்ததால் மண்ணும் ஒட்டவில்லை மீண்டும்
பழித்திடவே படம்பார்ப்பார் பார்
( இலவசம் )
கலெக்ஷன் வந்தாலும் காண்டாகும் பொதுமக்கள்-
செலெக்ஷன் செய்தொழிப்பார் அடுத்தமுறை - குலைக்கும்
நாய்களை குணங்கண்டு நாடி -விடாமல்
பாயைப் பிராண்டவைப்பர் நாளை
( பினாத்தல் சுரேஷ் )
பாயைப் பிரண்டணுமாம் பார்த்தவரு சொல்லுறாரு
நாயை அடிப்பானேன் சுமப்பானேனதன் பீயை
ஆசையாய் குடும்பத்தோடு அளாவளாவி அடங்காமல்
காசைக் கரியாக்கினாயே நீ
( இலவசம் )
ஆசை காட்டினாங்க அதிசயமா நல்லபடத்தாலே,
மோசம் பண்ணுறாங்க மிச்சநேரம் - காசை
விட்டாலும் பரவாயில்லை வீணாச்சு கவலையில்ல
ட்விட்டுக்கு கிடச்சுது மேட்டர்
( பினாத்தல் சுரேஷ் )
Posted by IdlyVadai at 8/21/2009 11:07:00 AM 47 comments
Thursday, August 20, 2009
திருமதி - புத்தம் புதிய பழைய காப்பி
உங்களுக்கும் கருணாநிதிக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு பெண்மணி கேட்டதால் இந்த பதிவு நீக்கப்படுகிறது.
- இவ
Posted by IdlyVadai at 8/20/2009 02:37:00 PM 61 comments
செய்திகள் வாசிப்பது இன்பா
இந்த வாரம் இரண்டு சுவாரசியமான செய்திகள் படித்தேன். அவை உங்கள் பார்வைக்கு...
செய்தி எண் # 1
உலகத்தில் வேறு எங்கும் நடக்காத ஒரு 'ஜனநாயக புரட்சி' இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் நடந்துவிட்டது (அ) வருகிறது (அ) நடக்க தொடங்கிவிட்டது. அது, பணம் வாங்கிகொண்டு ஒட்டு போடுவது அல்லது பணம் கொடுத்து ஒட்டு வாங்குவது.
ஒரு வாக்காளனுக்கு எந்த வேட்பாளர் அதிக பணம் கொடுக்கிறாரோ அவரே வெற்றிபெறுவார் என்பது புரட்சிகரமான விஷயம்தானே. விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் இனி பணத்தோடு, ஒரு வாரம் (அ) மாதத்திற்க்கான மளிகைசாமான்கள், காய்கறிகள் வாங்கிதர வாய்ப்புகள் தெரிகின்றன.
வேட்பாளருக்கு 'ஆராத்தி' எடுத்துவிட்டு, தட்டில் 'எதாவது' விழுமா என எங்கும் மக்களை திருத்துவதற்கு விழுப்புரத்தை சேர்ந்த சத்யாகிரக இயக்கத்தினர் நூதன பிரசாரம் செய்யதொடங்கி, உள்ளனர்.
என்ன செய்கிறார்கள் என்றால்,ஒட்டு போட பணம் வாங்கும் வாக்காளர்கள் காலில் விழுந்து, பணம் வாங்காதீர்கள் என்று பிரசாரம் செய்கிறார்கள்.
முதல் கட்டமாக இடைத்தேர்தல் நடைபெறும் பர்கூர் தொகுதியில், ‘பணம் வாங்காமல் ஓட்டு போடுங்கள்’ என்று வாக்காளர்களிடம் பிரசாரம் செய்து இருக்கிறார்கள்.
சத்யாகிரக இயக்கத் தலைவர் ராமகிருஷ்ண சாஸ்திரி தலைமையில் குரானா ராம மூர்த்தி, சந்திரசேகர், சுபாஷ், பிரபு, சண்முகம், பெரியசாமி ஆகியோர் இந்த பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
ராமகிருஷ்ண சாஸ்திரி கூறுகையில், ‘வன்முறை, லஞ்சம், சாதி போன்றவற்றை ஒழித்திட கடந்த 5 ஆண்டுகளாக பல பகுதிகளில் மக்கள் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்து வருகிறோம். தேர்தலில் வாக்காளர்கள் பணம் வாங்காமல் ஓட்டளிக்க கோரி, வாக்காளர்களின் காலில் விழுந்து வேண்டுகோள் விடுக்கிறோம்’ என்றார்.
பணம் கொடுத்து, காலில் விழுந்து ஒட்டு கேட்கும் அரசியல்வாதிகள், பணம் கொடுத்தவுடன் உணர்ச்சிவசப்பட்டு 'அண்ணன்' காலில் விழும் மக்கள், இந்த இரண்டு தரப்புக்கு நடுவே இவர்கள் பிரசாரம் எந்த அளவுக்கு எடுபடும்?
செய்தி எண் # 2கிராமங்களில் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு வேலையின்மை என்ற நிலை வரக் கூடாது என்பதற்காக ஆண்டுக்கு 100 நாள் வேலை அளிப்பது, அதே சமயம், கிராமங்களில் சாலை, கழிப்பறை, குடிநீர் தொட்டி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது என்று தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த திட்டத்தால், கிராமங்கள் செழிப்படையும், மக்களும் பொருளாதார ரீதியில் மேன்மை அடைவர் என்பதால், பல மாநிலங்களிலும் இந்த திட்டத்துக்கு அதிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.தனியார் தன்னார்வத் தொண்டு அமைப்புகள், சாப்ட்வேர் உட்பட தனியார் நிறுவனங்களும் அக்கறை எடுத்து ஒத்துழைக்கின்றன
தாங்கள் பிறந்த ஊராட்சிக்கு பெருமை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக, சிம்லாவில் இருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ள சோலன் பகுதியில் உள்ள கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத் தின் கீழ் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர் 20 பட்டதாரி இளைஞர்கள் . இவர்கள் எல்லாரும் சோலன் ஊராட்சியை சேர்ந்தவர்கள்; படிப்புக்காக சிம்லாவில் உள்ளனர். ஒய்.எஸ்.பார்மர் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., பட்டம் பெற்ற அன்கிட், இதில் பங்கேற்றார்; அவர் கூறுகையில், "செய்யும் தொழிலே தெய்வம் என்பர்; அதேபோல் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத் தின் நிதி எங்கள் கிராமத்துக்கு பெரிதும் உதவுகிறது' என்கிறார்.
குடிநீர் தொட்டி அமைப்பது, கழிப்பறை கட்டுவதற்கு இந்த பட்டதாரிகள் மண் சுமந்து, கற்களை அடுக்க உதவி செய்தனர். தேசிய ஊரக வேலை உறுதி திட்டக்கூலியையும் பெற்று, அதை கிராம நலனுக்கு செலவிட முடிவு செய்துள்ளனர்.
இதை படித்தாவது, ரசிகர் மன்றங்கள் வைத்து நடிகன் 'கட் அவுட்டுக்கு' பால்அபிஷேகம் செய்யும், அரசியல்வாதிகள் நடத்தும் பொதுக்கூட்டம்/மாநாடு போன்றவற்றுக்கு 'வாழ்க' கோஷம் போடும், டாஸ்மாக கடையில் விழுந்துகிடக்கும் நம் தமிழக இளைஞர்கள், தனது படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை என புலம்பும் பட்டதாரிகள் திருந்துவார்களா?
வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் - கவிஞர் தாராபாரதி.
-இன்பா
Posted by IdlyVadai at 8/20/2009 10:28:00 AM 12 comments
Labels: இன்பா, செய்திவிமர்சனம்
Wednesday, August 19, 2009
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 19-8-2009
இந்த வாரம் இவ முனிக்கு எழுதும் கடிதம்...
ஹலோ முனி,சௌக்கியமா ? போன வாரம் மனசே சரியில்லை இந்தியர்களுக்கு அமெரிக் விமான நிலையத்தில் ஏற்படும் நிலமையை பார்த்தால் பயமா இருக்கு. நேவார்க் விமான நிலையத்தில் ஷாருக்கானிடம் அதிகாரிகள் விசாரணைக்கு 2 மணி நேரம் காத்திருக்க வைத்தனர் என்று மீடியாவில் செய்தி பார்த்ததிலிருந்து கையும் ஓடலை காலும் ஓடலை. அமைச்சர் அம்பிகா சோனியைப் பாராட்ட வேண்டும். அமெரிக்கர்களை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று சபதமே போட்டிருக்கிறார். நல்ல வேளை அமெரிக்காவை போல் நாம் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அவர் சபதம் போடலை. காங்கிரஸ் கொள்கையை காப்பாற்றி விட்டார். சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா சென்ற மலையாள நடிகர் மம்மூட்டியின் பாஸ்போர்ட்டில் "முகமது குட்டி" என்ற அவரது சொந்த பெயர் இருப்பதை காரணம் காட்டி அவரிடமும் அமெரிக்க அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது மீடியா அவரை இவ்வளவு பிரபல படுத்தவில்லை. ஏன் என்றால் மம்முட்டி அவர்கள் ஷாருக்கான் அளவு கிளோபல் ஃபிகர் கிடையாது. அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா தான் World. நம்மாளுகளுக்கு பாலிவுட்தான் சினிமா. ஏன் என்றால் அது தான் Under World!
சஞ்சய் தத் என்று ஒரு நடிகர் இருக்கிறார். அவர் அடிக்கடி "ஷூட்டிங்குக்கு" போய்விட்டு வரேன் என்று சொல்லிவிட்டு போவார், பிறகு தான் தெரிந்தது அவர் ஏ.கே.56 துப்பாக்கி வைத்திருக்கிறார் என்று. கோர்ட்டில் எதற்கு இந்த துப்பாக்கி என்றால் 'தற்காப்புக்காக' என்கிறார். தற்காப்புக்காக போலீஸ் கமிஷ்னர் கூட ரிவால்வர் தான் வைத்திருக்கிறார். சரி ஏ.கே.56 துப்பாக்கி வைத்திருக்கிறார். அது அவர் இஷ்டம். ஆனால் அதற்கு லைசென்ஸ் கிடையாது. ஏன் என்றால் அவர் அப்பா ஒரு அரசியல்வாதி. அந்த லைசன்ஸே போறும் என்று நினைத்திருப்பார் போலும்.
அதைவிடு. காட்டுப்பகுதியில் மான் வேட்டையாடியதாக நடிகர் சல்மான்கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் அபராதமும் விதித்தது கோர்ட். இப்ப என்னடான்னா அவர் ஜாலியா நடித்துக்கொண்டும், காரை ஏற்றி பிளாட்பாரத்தில் இருந்தவர்களை பரலோகம் அனுப்பிக்கொண்டும் இருக்கிறார். எதுக்குச் சொல்ல வரேன் என்றால் இது போன்ற "நல்ல" நடிகர்கள் மதிப்பு எல்லாம் இந்திய விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு மட்டும்தான் தெரியும். அமெரிக்கால இருக்கற ஏர்போர்ட் செக்யூரிடிக்கு எப்படி தெரியும் ?
என் பெயரில் 'கான்' என்று இருப்பதால் என்னை விசாரணை செய்தார்கள் என்கிறார். "மை நேம் ஈஸ் கான்” என்ற திரைப்படம், 100 கோடி ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளதாக தகவல். எல்லாவற்றிருக்கும் ஒரு விலை இருக்கு. அமெரிக்காவில் IPL போன்று ஒன்று ஆரம்பித்து அதில் ஒரு அணியை ஷாருக்கான் நடத்தினால் அடுத்த முறை கான் அமெரிக்கா போகும் போது ஓபாமாவுடன் பீர் பார்ட்டி கொடுப்பார். சரியா நான் சொல்லுவது ?"விசாரணை நடத்த ஒரு பத்து நிமிடத்தையோ அல்லது இருபது நிமிடத்தையோ எடுத்துக்கொண்டால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அதை விட்டு விட்டு இரண்டு மணி நேரம் விசாரித்தோம் என்றால் அதை என்னவென்று எடுத்துக்கொள்வது" என்று ப.சிதம்பரம் தன் பங்கிற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். உள்துறை மந்திரியில்லயா ? அடுத்த முறை அமெரிக்கா இரண்டு மணி நேரம் விசாரணை செய்ய வேண்டும் என்றால் கால்ஷீட் வாங்கிக்கொண்டு தான் செய்ய வேண்டும் என்று உளராமல் போனாரே.
ஷாருக்கானுக்கு தன் நடிப்பை போலவே நகைச்சுவை உணர்வு கொஞ்சம் ஜாஸ்தி. "அமெரிக்கர்கள் இந்தியா வந்தால் என்ன செய்வீர்கள்?" என்று மீடியா ஏதோ கேட்டு வைக்க "ஏஞ்செலீனா ஜூலி" இந்தியா வந்தால் நான் 'frisk' ( தமிழ் வார்த்தை துழாவல்?) செய்யத் தயார் என்கிறார். ஆசை தோசை அப்பள வடை!இந்தியா சுதந்திரம் அடைத்து 62 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தியாவின் தேசிய கீதம், சின்னம், விலங்கு, பறவை, பூ, விளையாட்டு (?) எல்லாம் இருக்கிறது ஆனால் தேசிய உணவு என்று ஒன்று இல்லை. இந்தியர்கள் உணவு பிரியர்கள். ஆனால் அவர்களுக்கு தேசிய உணவு என்று ஒன்று இல்லாதது பெரிய வருத்தம் தரும் செய்தி. தமிழனின் தேசிய உணவு இட்லி-வடை. ஆனால் இந்தியர்களின் தேசிய உணவு ? அவுட்லுக் இந்தியாவின் தேசிய உணவு என்று இந்த படத்தை போட்டிருக்கிறார்கள். நடுவில் இருப்பது இட்லி!
போன வாரம் பார்த்தால் திடீர் என்று இட்லி மாதிரி இந்திய கிரிக்கெட் டீம் நடுவில் டிராவிட் இருக்குறார். எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். டிராவிட்டே ரொம்ப ஆச்சரியப்பட்டாராம். ஸ்ரீகாந்தை கேட்டால் இது தான் பெஸ்ட் இந்தியன் டீம் என்று மைக் முன்னாடி கண்ணாட்சி போட்டுக்கொண்டு பேசுகிறார். எனக்கு என்னவோ டிராவிட் இந்த ஒரு நாள் போட்டிக்கு பிறகு நான் ஒரு நாள் கிரிகெட் போட்டியிலிருந்து ரிடையர் ஆக போகிறேன் என்று சொல்ல போகிறார் என்றே தோணுகிறது. டிராவிட் தான் இந்திய கிரிக்கெட் டீமின் 'வால்' என்பார்கள். இருந்தாலும் எதற்கு கிழவர்களை எல்லாம் எதற்கு ஒரு நாள் கிரிகெட் போட்டியில் சேர்க்க வேண்டும்? இவரைக் கிழவர் என்று சொன்னால் எனக்கு வால் முளைத்திருக்கு என்பார்கள். எனக்கு ஏன் வீண் வம்பு.
சில நாட்கள் முன் பத்திரிகையாளர்களை சந்தித்த கருணாநிதி "திருமதி ஜெயலலிதா'' என்று சொல்லியுள்ளார். வம்பு பிடித்த பத்திரிக்கயாளர் ஒருவர் "ஏன் 'திருமதி ஜெயலலிதா' என்று சொல்கிறீர்கள்?'' என்று கேட்டதற்கு "மைனாரிட்டி அரசு" என்று அவர் சொல்கின்ற வரை இப்படித்தான் சொல்வேன்'' என்று பதில் சொல்லியுள்ளார் அந்த 86 வயது அரசியல் சாணக்கியர். இந்த மாதிரி தாய்குலத்தைப் பற்றிப் பேசினால் உடனே தாய்குலம் என்ன செய்யும் ? "மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா'', "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்று தேய்ந்து போன ரிக்கார்டு போல கொடிபிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதையே தான் கொடா நாடு பங்களாவிலிருந்து அம்மா செய்துள்ளார். அதாவது அம்மா அங்கிருந்து அறிக்கைவிட இங்கே மகளிர் அமைப்பு ஆர்பாட்டம் அது இது என்று கலக்க ஆரம்பித்துள்ளார்கள். ஏதோ நடக்கட்டும். கொஞ்ச வருஷம் முன்னாடி நம்ம சுப்ரமணியசாமிக்கு நடந்தது போல நடக்காம இருந்தா சரிதான். எனக்கு ஒரு சந்தேகம் தேசிய விநாயகம் பிள்ளை, பாரதியார், பாரதிதாசனுக்கு அப்பறம் இது போல வீர வசனம் பேசியவர்கள் யாரும் கிடையாதா ?
நேற்று தூக்கம் வராம கலைஞர் ஏன் அப்படி பேசினார் என்று யோசித்து பார்த்தேன். அம்மா 'மைனாரிட்டி அரசு' என்று சொன்னது கலைஞர் காதில் 'மைனர் அரசு' என்று விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன். மேஜரான ஒருவரை மைனர் என்றால் யாருக்கு தான் கோபம் வராது ? அதனால் தான் அவர் 'திருமதி' என்று சொல்லியுள்ளார். நல்ல வேளை இனிமே கலைஞரை Mr.Mr.Mr M.Karunanidhi என்று அழைக்க வேண்டும் என்று அம்மா அறிக்கைவிடாமல் இருந்தாரே. யார் சொன்னது தமிழ்நாட்டில் விலைவாசி ஏறிவிட்டது என்று ? தமிழ்நாட்டில் எல்லாம் சீப்பாக போய்விட்டது பார்த்தையா ?விஜயகாந்த் நீங்க தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்க கலைஞர் நான் இது செய்திருக்கிறேன் அது செய்திருக்கிறேன் என்று 121 சாதனை பட்டியல் கொடுத்திருக்கிறார். போன வாரம் எங்க தெரிவில் ஒரு தெருவிளக்கு மாற்றினார்கள் அதையும் சேர்த்தால் 122. "உங்க இஷ்டம் எப்படி வேண்டும் அப்படி போகலாம்" என்ற இந்த சிக்னலையும் சேர்ந்தால் 123. மற்ற சாதனைகள் கூகிளில் தேடினால் கிடைக்கலாம்.
கூகிளுக்கு போட்டியாக பிங்(Bing) வந்திருக்கிறது. மைக்ரோசாப்ட் மூளை என்று சொல்லுகிறார்கள். தற்போது சுமாராக இருக்கிறது. எதுவுமே போக போக தான் தெரியும். எனக்கு பிடித்தது http://www.wolframalpha.com/ இதில் புதுமையான சில விஷயங்கள் இருக்கு. டைம் கிடைக்கும் போது போய் பாரு. அதில Google என்று தேடி பாரு விஷயம் புரியும்.
போகப் போகத் தெரியும் என்ற கட்டுரை தொடர் ஒன்று தமிழ் இந்துவில் உருப்படியாக வருகிறது. புத்தகமாக வர போகிறதாம். இந்த புத்தகத்துக்கு தமிழக அரசு நூலக ஆர்டர் நிறைய வரும் என்று நினைக்கிறேன். ஹிந்து சைட் இப்ப தங்களுடைய வடிவமைப்பை மாற்றியுள்ளார்கள். இப்ப நல்லாவே இருக்கு. நான் சொன்னது ஆங்கில ஹிந்து சைட் பற்றி. தமிழ் ஹிந்துவும் தங்கள் பங்கிற்கு வடிவமைப்பை மாற்றியுள்ளார்கள். தி.நகர் போதீஸ் கடை பண்டிகைக்குப் பண்டிகை தங்கள் முகப்பு வாயிலை மாற்றுவர்கள். கேள்விப்பட்டதில்லை ?
முன்பு கிருஷ்ணர், விவேகானந்தர் படங்களை போட்டு ஏதோ எழுதி பார்த்தார்கள். ஆள் வரவில்லை ஆள் பிடிக்க என்ன செய்ய் என்று யோசித்தவர்கள். 'கட்டிப்பிடி கட்டிப்பிடிடா கண்ணாளா!' பாடல் நினைவுக்கு வந்து மும்தாஜ் படத்தை போட்டு ஆள் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரியாரையும், மற்ற மதங்களை பற்றி தெரிந்த அளவுக்கு மதம் பற்றித் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. அப்ப ஹிந்துயிஸம் ? சிந்துபைரவியில் சிவக்குமாரைப் பார்த்து உங்கள் மனைவிக்கு சங்கீதம் தெரியுமா என்று கேட்கும் போது, சுலக்ஷ்ணா "கத்திரிக்காய் கிலோ என்ன விலை?" என கேட்பார். நினைவிருக்கிறதா முனி ?40 மில்லியன் ரீடர்ஷிப் உள்ள உலகின் மிகப் பிரபலமான பத்திரிகைகளுள் ஒன்றான ரீடர்ஸ் டைஜஸ்டே திவால் நோட்டீஸ் தரப்போவதாக அறிவித்துள்ளது தெரியுமா ? 2005க்கு பிறகு இந்தப் பத்திரிகையின் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள். ரீடர்ஸ் டைஜஸ்ட் உருவான கதை பதிப்பித்தவர்கள் ரீடர்ஸ் டைஜஸ்ட் முடிந்து போன கதையையும் பிரசுரிப்பார்கள் என்று நம்புவோம். தற்போதைய பொருளாதார வீழ்ச்சியில் திவால் நோட்டீஸ் கொடுத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை 13 லட்சம். இதை படித்தாலே பலருக்கு தூக்கம் போய்விடும்.
தற்போது பெரும்பாலோர் தூக்கம் இல்லாமல் இருக்கிறார்கள் தெரியுமா ? காரணம் ஜஸ்வர்யா ராய்க்குக் காய்ச்சலாம். மாமனார் அமிதாப் தன் வலைப்பதிவில் எழுதியிருக்கார். ஐஸ் சீக்கிரம் நல்ல நிலைக்கு வந்து பலர் தூக்கத்தை கெடுக்க வேண்டாமா ? மனிதனுக்கு தூக்கம் மிக அவசியம் என்று போன வாரம் ஒரு கட்டுரை படித்தேன். ஆடு, மாடு எல்லாம் டையத்துக்கு தூங்கிவிடுகிறதாம். மனிதன் மட்டும்தான் இயற்கையிலிருந்து மாறுபட்டு தனது தேவைக்கேற்ப தூங்கும் நேரத்தை மாற்றிக் கொண்டு Gtalk, பிளாக் என்று டையத்தை வீண் அடிக்கிறான், பின்னாளில் நோயுற்று அவதிப்படுகிறான் என்று அந்த கட்டுரை சொல்லுகிறது.
நமது அரசியல்வாதிகள் பலர் சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் எப்போதும் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். சட்டசபை நிகழ்ச்சியின் தொகுப்பு அல்லது பாராளுமன்ற நிகழ்ச்சிகள் காண்பிக்கும் போது பார்த்தால் அதில் யாராவது நிமிஷத்துக்கு ஒருமுறை கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார்கள், படத்தில் உள்ளவரைப்போல. ஹிட்லர் போர்க்காலத்தில் தூங்காமல் இருக்க கண்களில் ஒரு வகை மருந்தை ஊற்றி தூக்கத்தைத் தடுத்தார் என்று கேள்வி. அது போல சபாநாயகர் எல்லா அரசியல்வாதிகளுக்கும் சபைக்குள்ளே வரும் போது இரண்டு சொட்டு மருந்தை ஊற்றினால் எப்படி இருக்கும்? சொட்டு மருந்து என்றால் ஜெயா டிவி வரிந்து கட்டும் என்பதால் சபாநாயகருக்கு பயமோ என்னமோ.
இன்று வெட்டி ஆபிஸர் ஒருவர் எனக்கு அனுப்பிய மெயில் கடைசியில் இப்படி எழுதியிருந்தது.
MOTHER-IN-LAW
When you rearrange the letters:
WOMAN HITLER
நிச்சயம் இது (வேலையே இல்லாத) ஒரு மருமகளின் வேலையாக தான் இது இருக்க வேண்டும்
ஆக மொத்தத்தில் மாமனார்கள் மருமகளை பற்றி பிளாக் எழுதுகிறார்கள், (வருங்கால) மாமியார்கள் இந்த மாதிரி மெயிலை அனுப்புகிறார்கள்.கடைசி செய்தி தெரியுமா ? பாரதிய 'ஜின்னா' கட்சியிலிருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்ட்டார். மாமியார்(ஜஸ்வந்த் சிங்) உடைத்தால் மண்குடம்; மருமகள்(அத்வானி) உடைத்தால் பொன்குடமா? நல்ல கூத்து! இனி பிஜேபி மெல்ல அழியும்.
DAUGHTER-IN-LAW என்ற வாத்தையை rearrange செய்தால் என்ன கிடைக்கும் ?
பதிலை எதிர்பார்க்கும்,
இட்லிவடை
Posted by IdlyVadai at 8/19/2009 07:18:00 PM 42 comments
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Tuesday, August 18, 2009
Quick Gun Murugan
ரைஸ் ப்ளேட் ரெட்டி
மேங்கோ டோலி
Mission: Vegetarian Cow Boy who is a Saver of Cows and Ladies in particular!.
Inspiration: 50% clint eastwood, 50% Rajini Kanth!
மேலும் தெரிந்துக்கொள்ள...
QUICK GUN MURUGAN - என்ற ஒரு திரைப்படம் இம்மாதம் 28ஆம் தேதி வெளிவர இருக்கிறது. என்னடா தமிழ் படத்துக்கு ஆங்கில தலைப்பா என்று நீங்கள் நினைத்தால் தவறு. முழுக்க, முழுக்க இது ஒரு இந்தி திரைப்படம். தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் 'டப்பு' செய்யவிருக்கிறார்கள்.
கதை விவாதத்தில் உட்காரும்போதே தமிழ் மற்றும் தெலுங்கு ஹீரோக்களை முடிந்தவரை 'நக்கல்' செய்யவேண்டும் என்ற முடிவோடு இருந்திருகிறார்கள் போல. ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தில் சில காட்சிகளில் வரும் நக்கல் இதில் படம் முழுவதும்
படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தின் பெயர் முருகன்(சட்சாத் தமிழன்தான்). வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் Rice Plate ரெட்டி. நம்ம ஹீரோக்களை மட்டுமல்லாது, உணவு பதார்த்தங்களையும் ஒரு 'கை' பார்த்துஇருக்கிறார்கள். படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பது..நம்ம 'தோசை' தான் (' இட்லிவடை' கால்ஷீட் கிடைக்கலையாம்..ஹி ஹி).
படத்தின் கதை 18-ஆம் நூற்றாண்டில்(?) தொடங்குகிறது. சைவ சாப்பாடு சாப்பிடும் ஒரு தென்னிந்திய பகுதிககுள்(!), Rice Plate ரெட்டி தலைமையில் அசைவம் சாப்பிடும் ரவடிகள் கூட்டம் நுழைந்துவிட, அதை எதிர்த்துபோராடும் நம்ம ஹீரோ முருகன் கொல்லப்பட, பின்பு ரெட்டியும் இறந்துவிடுகிறார். இருவரும் மீண்டும் 21 ஆம் நூற்றாண்டில் மும்பையில் சந்திக்கிறார்கள்( மறுஜென்மம்). வழக்கம்போல ரைஸ் ப்ளேட் ரெட்டி விலங்குகளை கடத்தி 'Mcdosa' என்னும் பெயரில் அசைவ பதார்த்தம் தயாரிக்க, அதை முருகன் முறியடிப்பதாக கதை போகிறது.
ஹீரோ முருகனாக நடிப்பவர் பெயர் ராஜேந்திர பிரசாத். மேங்கோ டோலி நம்ம ரம்பா, நாசர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஹீரோ முருகன் வண்ண, வண்ண உடைகள் அணிந்துஇருக்கிறார். சிறிய மீசை, தலையில் தொப்பி, கையில் துப்பாக்கி சகிதம் அக்மார்க் தென்னிந்திய ஹீரோவின் 'கோமாளி' தோற்றம் போல இருக்கிறார். முக்கியமாக 'பஞ்ச் டயலாக்' மழையே பொழிகிறார். ரஜினி, விஜய் என்று யாரையும் விட்டு வைக்கவில்லை.
இதைபோல, யார் ஹீரோ, யார் ஹிரோயின் என தெரியாமல் இருக்கும் வடஇந்திய நாயகர்களை பற்றி நம்ம இயக்குனர் யாராவது படம் எடுத்தால் நன்றாக இருக்கும்.
எந்திரனுக்கு பிறகு மிகுந்த எதிப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் இது என்று சொல்லலாம். இட்லிவடை ரசிகர்களுக்கு அறிமுக காட்சிகள் சில கீழே.
அதை விடுங்கள். எத்தனை முறை 'அடி' வாங்கினாலும் நமது ஹீரோக்கள் திருந்துவதாக இல்லை தமிழ்நாடே தன் விரல் அசைப்பில் இருப்பதாக நினத்துக்கொண்டு, பஞ்ச் டயலாக் பேசுவதையும், பறந்து பறந்து அடிப்பதையும் விடுவதாக இல்லை.
வேட்டைக்காரன் படத்தில் விஜய் தோன்றும் காட்சி என்று எனக்கு ஒரு 'கிளிபிங்க்ஸ்' கிடைத்தது. அதில் விஜய் ஒரு போலீஸ ஸ்டேஷன் போய் இன்ஸ்பெக்டரை அடித்து துவைத்துவிட்டு "இந்த இடம் தமிழ் மக்கள் எனக்கு தந்தது" என்று பஞ்ச் வசனத்தோடு, ஸ்க்ரீனில் நம்மை பார்த்து கண்ணசைக்கிறார்(??).
- இன்பா
பல இடங்களில் இட்லிவடை எடிட்டிங்குடன் :-)
குவிக் கன் முருகன் பட காட்சிக்கும், வேட்டைக்காரன் விஜய் பட காட்சிக்கும் ஒற்றுமை இருந்தல் அதற்கு இட்லிவடை பொறுப்பல்ல
Posted by IdlyVadai at 8/18/2009 12:26:00 PM 72 comments
Monday, August 17, 2009
வெங்கடேஷ்
Innumerable ailments plague him but M.B. Venkatesan, better known as ‘Crazy’ Venkatesh, transcends them all with a mindset that’s invincible. His never-say-die approach to life should take him places.( The Hindu, Dec 2007 )
The aftermath of the kidney transplant four years ago has made him almost immobile, (the lower part of his legs don’t function), his eyesight needs constant attention and aural capabilities are failing. But none has curbed his zest or future plans. The range of services this erstwhile actor offers stumps you....
க்ரேஸி குழுவின் முக்கிய நடிகராக இருந்த வெங்கடேஷ் நேற்று காலமானார். தி.நகர் நானா தெருவில் அவர் வீட்டுக்குக் காலையில் போனபோது க்ரேஸி, பாலாஜி, அப்பா ரமேஷ் இன்னும் நிறைய நண்பர்கள். மௌலியோடு அவசர அறிமுகம் செய்து கொண்டபடி வீட்டுக்குள் நுழைந்தேன் மோகனோடு.
வெங்கட் ஆறு அடி உயர நெடியமால். அவரை இனி எப்போதும் எழுந்திருக்க முடியாத படுத்த கோலத்தில் பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது. க்ரேஸி குழுவினர் எல்லோரிடமும் அலாதியான டைமிங் சென்ஸ் உண்டு. வெங்கட்டிடம் இது கொஞ்சம் அதிகம். வங்கியில் விருப்ப ஓய்வு வாங்கி ஒரு ரவுண்ட் சினிமாவில் கலக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தவரோடு விதி விளையாடிய பலன் - இரண்டு ஆண்டாகப் படுத்த படுக்கை. மைக்கேல் மதன காமராஜனைத் தொடர்ந்து அவரைத் தொடர்ந்திருக்க வேண்டிய வெற்றி ஏனோ விலகிப் போய்விட்டது.
கமல் சார் காலையில் தொலைபேசியபோது வெங்கட் பற்றிச் சொன்னேன். அவர் நேற்றைக்கு சேதி தெரிந்ததுமே போய் வந்ததாகச் சொன்னார். சக கலைஞரை மதிப்பதில் அவருக்கு இருக்கும் அக்கறை தனியானது.
( நன்றி: Eramurukan.in )
Posted by IdlyVadai at 8/17/2009 05:19:00 PM 19 comments
Labels: அஞ்சலி
என்று தணியும் இந்த மணற்கொள்ளை??
மணற்கொள்ளை!! இன்று பரவலாக எதிர்க்கட்சி மீடியாக்களில் அடிபடும் வார்த்தை. ஆனால் எதிர்க்கட்சி ஆளுங்கட்சியானால் தாங்கள் முன்பு விமர்சித்தவற்றை மறந்துவிட்டு முன்னவர்கள் என்ன செய்தார்களோ அதையே தொடர்ந்து செய்கிறார்கள், செய்வார்கள்.
மற்ற ஊர் ஆறுகளில் இக்கொள்ளை எந்த அளவிற்கு நடைபெறுகிறது என்று தெரியவில்லை. ஆனால் எனது சொந்த மாவட்டமாகிய திருச்சிராப்பள்ளியில் , காவிரியிலும், கொள்ளிடத்திலும் நீர் ஓடுகிறதோ இல்லையோ, மணற்கொள்ளை கரைபுரண்டு ஓடுகிறது. இப்பொழுது தங்கத்தையும் பிளாட்டினத்தையும் விட அதிக மதிப்பு மிகுந்த மந்திரச் சொல் இந்த மணல். காவிரியிலும், கொள்ளிடத்திலும் இப்பொழுது ஓடும் நீர் என் பார்வைக்கு நீராகத் தெரியவில்லை, தன்னிடமிருக்கின்ற செல்வம் அள்ளப்படுவதால் காவிரித்தாய் வடிக்கும் கண்ணீராகவே தெரிகிறது. அந்த அளவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் அனுமதித்த கொள்ளளவை விட அதிகமான மணல் உள்ளூர்களிலும், வெளியூர்களுக்கும் தொடர்ந்து சப்ளை ஆகிறது. அதுவும் காவிரியில் நீர்வரத்து அதிகமாகிவிட்டால் சொல்லவே வேண்டாம். மணல் அள்ளுவது குறைந்து, மணலின் விலை மலையை முட்டுமளவிற்கு அதிகரித்துவிடும். அதனால்தானோ என்னவோ காவிரிக்கு நீர் வேண்டும் என அரசுகள் கர்நாடகாவை அதிகம் வற்புறுத்துவதில்லை போலும்?? ஒரு இடத்தில் மணலை 10 முதல் 20 அடிகள் வரை தோண்டி பொக்லைன் மூலம் லாரிகளில் லோட் செய்வதற்கு வசதியாக வேறு இடத்தில் குமிப்பதால் ஒரு இடத்தில் பள்ளமாகி அது நீர் வரும் காலங்களில் மிகவும் ஆபத்து மிகுந்த பகுதியாகி பல உயிர்களைப் பறிக்குமளவிற்கு ஆபத்தில் முடிகிறது.
திருச்சிராப்பள்ளியிலிருந்து முசிறி செல்லும் 40 மைல் தொலைவிலான சேலம் நெடுஞ்சாலையில் ஐந்திற்கும் மேற்பட்ட ஊர்களில் காவிரியிலிருந்து மணல் அள்ளப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவது, நீர்பாசன வசதி குன்றி தென்னை போன்ற மரங்கள் பட்டுப் போவது மட்டுமின்றி இந்த மணல் லாரிகளால் ஏற்படும் விபத்துக்கள் சொல்லி மாளாது. காலை எட்டு மணி துவங்கி மாலை ஆறு மணி வரையில் ஏக காலத்தில் இரு வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய சாலையின் ஒரு மருங்கு முழுவதையும் மணல் லாரிகளே ஆக்ரமித்துள்ளன. இதையெல்லாம் காரணம் காட்டி எங்களது ஊரில் ஒரு சாரார் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு வலுக்கவும், குவாரி காரர்கள் ஊரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொல்லி தற்காலிகமாக மக்களின் வாயை அடைத்துள்ளனர். பணத்தைக் கண்டால் வாயைப் பிளக்கும் இந்த ஆட்டு மந்தைக் கூட்டமும் தினமும் ரேஷன் கார்டை எடுத்துக் கொண்டு ஆயிரத்தைப் பிச்சையெடுக்க குவாரிக்குப் படையெடுத்து வருகிறது. இந்த ஆயிரம் எத்தனை நாட்களுக்கு வரும்?? நமக்கு எதற்காக ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்?? இதனால் அவர்கள் அடையப்போகும் ஆதாயம் என்ன என்பன போன்றவற்றையெல்லாம் சிந்திக்கும் நிலையில் மக்கள் இல்லை. நம்முடைய இயற்கை செல்வத்தை கொள்ளையடிப்பதற்கு நமக்கே லஞ்சம்!! எங்கு போய் முட்டிக் கொள்வது??
சுதந்திரமடைந்து சுமார் 63 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நாம் கண்ட பலன், நம்மைச் சுற்றி நடக்கும் அட்டூழியங்களையும், லஞ்ச லாவண்யங்களையும் வேடிக்கை பார்க்கும் துர்ப்பாக்ய நிலையிலிருப்பது மட்டுமே! வேறென்ன செய்ய??
- - யதிராஜ சம்பத் குமார்
Posted by IdlyVadai at 8/17/2009 01:15:00 PM 14 comments
Labels: கட்டுரை, செய்தி, விருந்தினர்
ஹலோ டாக்டர்(ரேட்)
சில மாதங்களுக்கு முன், வறுமையான குடும்பத்தில் பிறந்து, 'கரஸ்'ஸில் எம்சிஏ படித்துவிட்டு, ஒரு தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்க்கும் என் நண்பன் "நைட் பத்துமணி வரைக்கும் கிளாஸ் எடுக்கிறேன். எப்படியாவது கரஸ்ஸில் சேர்ந்து எம்.பில் படிச்சா காலேஜில லெக்சரா போலாம். கொஞ்சம் கஷ்டம் தீரும்" என்று என்னிடம் பேசினான். ஆனால், அவன் கஷ்டங்கள் தீரவே, தீராது. காரணம், இனி எம்.பில்., படிப்பு 'ரெகுலரில்' தான் சேரமுடியும் என்று யு.ஜி.சி அறிவித்துவிட்டது.
பல்கலைக்கழகங்களில், பிஎச்.டி., மற்றும் எம்.பில்., ஆகியவற்றின் கல்வித்தரம் மிகவும் குறைந்து வருவதைத் தொடர்ந்து, இதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்க யு.ஜிசி., தீர்மானித்தது.
பேராசிரியர் பி.முன்ஜேகர் தலைமையிலான குழு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இதுகுறித்து யு.ஜி.சி., வகுத்துள்ள விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது: எந்த ஒரு பல்கலைக்கழகமோ, நிகர்நிலைப் பல்கலைக்கழகமோ, பிஎச்.டி., மற்றும் எம்.பில்., ஆகிய படிப்புக்களை தொலைதூரக் கல்வி முறையில் வழங்கக் கூடாது. இக்கல்விகளின் தரத்தை உறுதி செய்ய, நுழைவுத்தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலமே மாணவர்களை சேர்க்க வேண்டும்.
பிஎச்.டி., படிப்பில் சேரும் மாணவர்கள் தங்கள் ஆய்வு பகுதி குறித்து விவாதிக்க வேண்டும். சேர்க்கை முடிந்த பின், மாணவர்கள், ஒரு பருவம் வரை தயார் நிலை படிப்பு பயில வேண்டும். ஆராய்ச்சி மாணவர்கள், அடுத்த கட்ட நிலையான ஆய்வறிக்கை எழுத அனுமதி வழங்குவதற்கு, குறைந்த பட்ச தகுதி நிர்ணயம் செய்ய வேண்டும். அந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களையே ஆய்வறிக்கை எழுத அனுமதிக்க வேண்டும்.
மாணவர்களின் ஆய்வறிக்கை இரண்டு நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும். இதில் ஒருவர் வெளிமாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகம் விருப்பப்பட்டால், வெளிநாட்டில் இருந்தும் வரவழைக்கலாம். இவ்வாறு அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்து பல்கலைக்கழகங்களிலும், ஒரே மாதிரியாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, யு.ஜி.சி., வட்டாரங்கள் தெரிவித்துஉள்ளன.
இந்த விதிமுறைகள், ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபடும் மாணவர்களுக்கு வேண்டுமானால் பயன்தரலாம். ஆனால் மற்ற மாணவர்கள், குறிப்பாக நடுத்தரகுடும்பத்தை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கபடுவர்கள்.
எம்.பில்., எனப்படும் Master of Philosophy, படிப்பை எடுத்துக்கொண்டால், அதை 'ரெகுலரில்' படிப்பவர்களைவிட, 'கரஸ்'ஸில் படிப்பவர்களே மிக அதிகம். பொதுவாக, இதை சம்பள மற்றும் வேலை உயர்வு போன்றவற்றுக்காக படிப்பவர்களே அதிகம்.
ஒரு குறிப்பிட்ட வயதை கடந்தோர், திருமணமானவர்கள், வேலையில் இருப்போர் மற்றும் குறிப்பாக நடுத்தர, கீழ் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் எப்படிப்போய் ரெகுலர் வகுப்புகளில் சேர்ந்து படிக்கமுடியும்???
இப்படிபட்ட மாணவர்களின் பிரச்சினைகளை ஆராயாமல் ஏன் புதிய விதிமுறைகளை அறிவிக்கிறார்கள்?
பிஎச்.டி., எனப்படும் (Doctor of philosophy) , படிப்புக்கு ஒவ்வொரு பல்கலைகழகங்களும் ஆராய்ச்சி படிக்கவிரும்பும் மாணவர்களை வழிநடத்துவதற்கு 'குறிப்பிட்ட நபர்களை' (Recoganized Guide) வைத்து இருக்கிறார்கள். இவர்களிடம் மாணவ,மாணவிகள் படும் அவஸ்தைகளை சொல்ல இயலாது.
எனக்கு தெரிந்த ஒரு ஆராய்ச்சி மாணவனை அவனது கைடு, தான் வளர்க்கும் நாயை வாக்கிங் கூட்டிக்கொண்டு போகச்சொன்னார். மாணவர்கள் நிலை இப்படி என்றால் மாணவிகளின் நிலை?
ஒரு மாணவியிடம் " மெட்ராசில வெயில் ஜாஸ்தி ஆய்டிச்சு இல்ல " என்று அவர் கைடு கேட்க, அதற்கு அந்த மாணவியும் 'ஆமாம்' என்று தலையாட்ட, அதற்கு அவர் சொன்னது " டோன்ட் வொர்ரி. நாம(?) ஊட்டி போய்டலாம் ".
தன் எதிர்காலம் கருதி மாணவிகள் இத்தகைய கொடுமைகளை மறைத்துவிடுகிறார்கள் அல்லது அட்ஜஸ்ட் செய்துவிடுகிறார்கள். ஆசிரிய 'பெருமக்களின்' காமவிளையாட்டுக்கள் பள்ளி மாணவிகளையும், குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை என்பதான செய்திகள் அன்றாடம் வருகின்றன.
மாதா,பிதா,குரு,தெய்வம் - என வேதம் ஓதும் இந்த சாத்தான்களை, க(ல)ல்வி மிருகங்களை பற்றி தனியே ஒரு பதிவு போடுவதை விட, அவர்களையே 'போடலாம்' என்று தோன்றுகிறது.
ஆராய்ச்சி படிக்கும் மாணவ, மாணவியரின் இத்தகைய அவஸ்தைகளை பற்றி யாராவது சிந்தித்து பார்த்தார்களா என்று தெரியவில்லை.
அமலுக்கு வந்துவிட்ட இந்த விதிமுறைகளால் பலன்கள் என்ன? இதனால் பாதிக்கப்பட்ட/ படப்போகும் மாணவர்கள் நிலை என்ன? கல்வியின் தரம் உயர்ந்து நல்ல மாணவர்கள் உருவார்களா? அப்படியே உருவானாலும் இந்தியாவில் பணிபுரிவர்களா? இதற்க்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
வாழ்கவே மாணவ சமுதாயம் வாழ்கவே.
-இன்பா
Posted by IdlyVadai at 8/17/2009 07:30:00 AM 12 comments
Labels: இன்பா, செய்திவிமர்சனம்
Sunday, August 16, 2009
அம்மாவுக்கு ஒரு பகிரங்க கடிதம்
அன்புள்ள அம்மாவுக்கு,
வணக்கம். நலமா? நலமறிய ஆவல். கடைசியாக போன வருடம் பிப்ரவரி மாதம் தலைமைக் கழகத்தில் உங்களிடம் சில வார்த்தைகள் பேசியதாக நினைவு. பின்னர் ஓரிருமுறை திருமணங்களில் விரல்களை உயர்த்தி நலம் விசாரித்து புன்னகை பூத்தீர்கள். அப்புறம் கட்சிக்கு நேற்றைக்கு வந்தவர்களின் உத்தரவிற்குத்தானே என்னைப் போன்ற சீனியர்கள் கட்டுப்பட வேண்டிய காலக்கிரஹம்! எங்கே உங்களிடம் மனம் விட்டுப் பேசுவது?
நேராக விஷயத்திற்கு வருகிறேன் அம்மா. அமரர் எம்.ஜி.ஆர். வளர்த்த இந்தக் கழகம், இன்று மாலுமி இல்லாத கப்பல்போல் எங்கெங்கோ போய் சீரழிவதைப் பார்க்கும் போது இரவு படுத்தால் எங்கே தூக்கம் வருகிறது? எஃகு கோட்டையாக, எம்.ஜி.ஆரையும் இரட்டை இலையையும் தவிர வேறு தெரியாத லட்சோபலட்சம் வெறிபிடித்த தொண்டர்கள் இயங்கிய இந்த இயக்கம் ஏன் இப்படி படுத்துவிட்டது?
ஜெ.-ஜா. பிளவுக்குப் பிறகு, ஆர்.எம்.வீ, நாவலர், பண்ருட்டி, மாதவன், கே.ஏ.கே., அரங்கநாயகம் உள்பட எம்.ஜி.ஆர். காலத்துத் தளபதிகளும், கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருநாவுக்கரசு, கருப்பசாமி பாண்டியன், செங்கோட்டையன், முத்துசாமி போன்ற இளைய தளபதிகளும் உங்கள் தலைமைக்குக் கீழேதானே வந்தார்கள்? அனுபவமும், இளமையும் சேர்ந்த எவ்வளவு அற்புதமான கூட்டணி அது! எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின்னர், மதுரை கிழக்கிலும், மருங்காபுரியிலும் இடைத்தேர்தலை சந்தித்தீர்கள். தி.மு.க.
ஆட்சியில் வெற்றி பெறுவோமா என்று உங்களுக்கே சற்று தோல்வி பயம். அப்போது மதுரை கிழக்கிற்கு கே.கே.எஸ்.எஸ்.ஆரும், மருங்காபுரிக்கு திருநாவுக்கரசும் பொறுப்பாளர்களாக களத்தில் இறங்கினார்கள். ஆட்சியைப் பறிகொடுத்த ஆதங்கத்தில் தொண்டர்கள் சூறாவளியாகச் சுழன்றார்கள். இரண்டிலும் அ.தி.மு.க. அமோகமாக வென்றது - நீங்கள் பிரசாரத்திற்குப் போகாமலேயே. இன்றைக்கு இடைத்தேர்தல் என்றாலே ஒப்பாரி வைக்கிறீர்கள்!
அந்தப் படைத் தளபதிகளும், தொண்டர்களும் எங்கே போனார்கள் அம்மா? தளபதிகளை வெளியே அனுப்பியது யார்? எதற்காக அனுப்பப்பட்டார்கள்? ஒவ்வொருவரையும் உங்களுக்கு எதிரானவர்களாக சித்திரித்து, இந்தக் கட்சியை தங்கள் குடும்ப ஆதிக்கத்தில் கொண்டு வர வேண்டும் என்ற சூழ்ச்சி வலை பின்னியது யார் என ஊருக்கே தெரியும். ஆனால் உங்களுக்கு மட்டும் எப்படித் தெரியவில்லை?! இன்று அ.தி.மு.க. தொண்டன் எதிர்காலம் புரியாமல் கிராமங்களில் பரிதாபமாக சுற்றிக் கொண்டிருக்கிறான்.
எம்.ஜி.ஆர். ஊர் ஊராய் சுற்றி, லட்சக்கணக்கான தொண்டர்கள் ரத்தம், வியர்வை சிந்தி வளர்த்த இந்த இயக்கத்தின் பொறுப்பாளர்களை, தேர்தல் வேட்பாளர்களை இன்று தேர்ந்தெடுப்பது டாக்டர் வெங்கடேஷ் என்ற யாரோ ஒரு இளைஞராம்! இவருக்கும் கட்சிக்கும் என்ன தாயே சம்பந்தம்? ஒரே சம்பந்தம், உங்கள் உயிர்த்தோழி சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் செல்ல மகன். இவர் சகோதரி அனுராதா உங்கள் ஆசி பெற்ற, அருகிலேயே இருக்கும் பெண்மணி. இவர் கணவர் டி.டி.வி. தினகரன் நேற்றுவரை கட்சியில் அதிகாரத்தில் இருந்தவர். சின்னம்மா பிரஷர் தந்தால் மீண்டும் வருவார். வெங்கடேஷின் மாமனார் பாஸ்கரன் எந்த நேரத்திலும் போயஸ் தோட்டத்தின் ஆளுயர இரும்புக் கதவுகளைத் திறந்து கொண்டு சுவாதீனமாக நுழையக் கூடிய அளவிற்கு செல்வாக்குப் பெற்றவர். இவர்களைத் தவிர மகாதேவன், திவாகரன், இளவரசி என்று ஒரு டஜன் உருப்படிகள் அதிகார மிடுக்குடன் தோட்டத்தைச் சுற்றி வருகின்றனர்.
எங்களைப் போன்று கட்சியில் நீண்ட காலம் பணியாற்றியவர்களே நேரிடையாக தோட்டத்தில் உங்களை சந்தித்துவிட முடியாது. தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, கோவை ராவணன், திருச்சி கலியமூர்த்தி, சென்னை மோகன், எம்.என் (நடராஜன்) தம்பிகள் பழனிவேல் மற்றும் எம்.ஆர். என்கிற ராமச்சந்திரன் போன்ற சின்னம்மா குடும்ப விசுவாசிகளைத்தான் முதலில் அணுக வேண்டும்.
இப்போது சமீபத்தில் நடந்த ஒரு வேதனையை உங்கள் காதில் போட்டு வைக்கிறேன். தமிழகம் முழுவதுமுள்ள கிளைக் கழகத்திலிருந்து மேல்மட்டம்வரை கட்சிப் பொறுப்பாளர்களை நியமனம் செய்வதற்கு, ஒவ்வொரு பதவிக்கும் இவ்வளவு ரேட் தரவேண்டுமாம். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிளைச் செயலாளர் பதவிக்கு இருபதாயிரம் ரூபாய் என்றும், ஒன்றியச் செயலாளர் பதவிக்கு ஐம்பதாயிரம் வரை பேரம் பேசப்பட்டிருக்கிறது. `கையில் காசு இல்லாதவன் கடவுளே ஆனாலும் கதவைச் சாத்தடி' என்று பழைய படத்தில் சிதம்பரம் ஜெயராமன் பாடுவார். அதை `கட்சிக்காரனேயா னாலும்' என்று மாற்றிப்பாடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டதே என்று மத்திய சென்னையிலிருந்து மானா மதுரைவரை புலம்புவது கொடநாட்டில் குடிகொண்டிருக்கும் உங்கள் காதில் விழவில்லையா? நமது கட்சியில் நிஜமான உழைப்பிற்கும், தியாகத்திற்கும், தகுதிக்கும் மரியாதை இல்லையா?
அடுத்தது உங்களிடம் கேட்க வேண்டிய ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது. சாதாரண தொண்டன் ஒரு திருமணத்தில் தி.மு.க.காரரை எதேச்சையாக சந்தித்தால் கூட அவன் கதை முடிந்தது. மறுநாள், `நமது எம்.ஜி.ஆரில்,' கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கட்டம் கட்டி சுலபமாக அந்த ஏழைத் தொண்டனை வீட்டுக்கு அனுப்பி விடுகிறீர்கள். அதே சமயம், சசிகலா பங்குதாரராக உள்ள `மிடாஸ்' மதுபான ஆலையிலிருந்து தி.மு.க. அரசின் டாஸ்மாக்கிற்கு எப்படி தங்கு தடையில்லாமல் சரக்கு போகிறது? அதுவும் இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முப்பது சதவிகிதத்திலிருந்து சுமார் ஐம்பது சதவிகிதம் வரை மிடாஸ் சரக்கை வாங்குவதை அரசு அதிகப்படுத்தி விட்டதாக செய்திகள் வருகின்றனவே... அது எப்படி? அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.கவோடு வணிகத் தொடர்பு வைத்திருக்கிறார் என்று குற்றஞ்சாட்டி அண்மையில் வெளியே அனுப்பினீர்கள். எஸ்.வி.சேகரை தேவையில்லாமல் வெறுப்பேற்றினீர்கள். இதற்கு முன்பு கருப்பசாமி பாண்டியன், சேலம் செல்வகணபதி என்று அருமையான தளபதிகளையெல்லாம் ஓரங்கட்டி அவமானப்படுத்தினீர்கள். இன்று நீங்கள் யாரையெல்லாம் பயன்படுத்தாமல் வெளியே அனுப்பினீர்களோ அவர்களெல்லாம் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் தி.மு.க.வில் கௌரவப்படுத்தப்படுகிறார்கள். என்ன செய்யப் போகிறீர்கள் அம்மா? ஒன்றரைக் கோடி தொண்டர்களின் உழைப்பும், தியாகமும் ஒரு குடும்பத்துடைய பொருளாதார வளர்ச்சிக்கும், சுகத்திற்கும் பயன்படுகிறது என்பதை எப்போது உணரப் போகிறீர்கள்?
கண் கெட்டதற்குப் பிறகு சூரிய நமஸ்காரம் செய்து பயனில்லை அம்மா!
இப்படிக்கு,
-இப்போதும் இந்த இயக்கத்திற்காக கவலைப்படும் தொண்டன்..
( நன்றி: குமுதம் )
Posted by IdlyVadai at 8/16/2009 09:36:00 PM 14 comments
மீண்டும் நேசமுடன் மடல் இதழ்
மீண்டும் நேசமுடன் மடல் இதழ்.. விவரம் கீழே...
மேலை நாடுகளில், பல எழுத்தாளர்கள் தம் பெயரிலேயே தமக்கான சொந்த
அச்சிதழைத் தயாரித்து, வாசகர்களுக்கு அனுப்பும் வழக்கம் உண்டு. நேரடியாக
தம் வாசகர்களைச் சென்று சேருவது இதன் நோக்கம். இந்தக் கருத்தை மனத்தில்
வாங்கிக்கொண்டு, ஐந்தாண்டுகளுக்கு முன்பு நேசமுடன் என்ற மடல் இதழைத்
தொடர்ந்து எழுதி, நண்பர்களுக்கு மின்னஞ்சலில் ஒவ்வொரு புதன்கிழமை அன்றும்
அனுப்பிவந்தேன். 34 இதழ்கள் வரை நடத்தினேன். ஒவ்வொரு இதழிலும் 3, 4
இலக்கிய மற்றும் பல்துறைக் கட்டுரைகள் எழுதி, என் கருத்துகளை,
எதிர்பார்ப்புகளை, எண்ணங்களை நண்பர்களோடு பகிர்ந்துகொண்டேன். மூத்த
எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் அப்போது
மிகவும் அனுசரணையான மின்னஞ்சல் அனுப்பி என்னை ஊக்கப்படுத்தினர். அதில்
இருந்து தொகுத்த கட்டுரைகளையே பின்னர், ‘நேசமுடன்’ என்ற புத்தகமாக
கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டது.
இப்போது மீண்டும் நேசமுடன் மடல் இதழைத் தொடங்கியிருக்கிறேன். சென்ற
வெள்ளியன்று (14.08.09) முதல் இதழ் அனுப்பி வைக்கப்பட்டது. இனி ஒவ்வொரு
வாரமும் புதன் அன்று அடுத்து வரும் இதழ்களை அனுப்ப உத்தேசம். இந்த மடல்
இதழைப் பெற, எனக்கு உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க,
venkatesh.nesamudan@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு, ஒரு மெயில்
தட்டிவிடுங்கள் போதும். என் மெயிலிங் லிஸ்ட்டில் உங்களைச்
சேர்த்துக்கொள்வது சுலபமாக இருக்கும்.
இதனைத் தொடர்ந்து, என் எழுத்துகளைப் வலைத்தளத்திலும் மீண்டும் பிரசுரிக்க
ஆரம்பித்திருக்கிறேன். என் வலைத்தளம்: http://www.nesamudan.com. வந்து
பாருங்கள்.
நேசமுடன்
வெங்கடேஷ்
Posted by IdlyVadai at 8/16/2009 02:22:00 PM 2 comments
Labels: அறிவிப்பு
Saturday, August 15, 2009
'தாயுமான' கிருஷ்ணன்
"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் , வாடினேன்" என்று பாடினார் வள்ளலார். பயிர்கள் வாடுவதையே தாங்கமுடியாத மனம்..உயிர்கள் வாடுவதை தாங்கமுடியுமா ? இப்படிப்பட்ட மனம் நடைமுறையில் சாத்தியமா? இதற்கு விடை தெரிந்துக்கொள்ள கீழே படிக்கவும்....
இந்தகாலத்திலும் வள்ளலார் மனம் கொண்ட ஒருவர் நம்மிடையே இருக்கிறார்.
அவர் மதுரை N.கிருஷ்ணன். CNN-IBN மற்றும் Reliance நிறுவனங்கள் இந்தியா முழுவதும் சமூகத்தில் 'நிஜ கதாநாயகர்களை' அடையாளம் கண்டு வருடந்தோறும் விருது வழங்கிவருகிறது. அந்த விருதை தனது தன்னலமற்ற சமூக சேவைகளுக்காக இந்த வருடம் பெற்று இருக்கிறார் திரு.கிருஷ்ணன்.
அப்படி என்ன செய்கிறார் கிருஷ்ணன்?
”நான் பிச்சைக்காரர்களுக்கு உண்வு கொடுப்பதில்லை. அவர்களை அவர்களே கவனித்துக்குக் கொள்வார்கள்.மனநிலை குன்றியவர்கள் தான் யாரிடமும் உணவோ, காசோ கேட்க தெரியாது. அவர்களுக்கு உதவுகிறேன்” என்கிறார் கிருஷ்ணன்.
யார் இந்த கிருஷ்ணன்?
மதுரை மாநகர தெருக்களில், மனநிலை குன்றிய 400 பேருக்கு வருடம் 365 நாட்களும், நாளுக்கு மூணு வேளையுமாக உணவு வழங்கிக் கொண்டு இருக்கும் இவருக்கு அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை. வெறும் 28 தான். கடந்த ஏழு வருடங்களாக, அக்ஷ்யா டிரஸ்ட் என்னும் தொண்டு நிறுவனம் மூலமாக இதை செய்து வருகிறார்.பெங்களூருவின் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில், சமையலை தொழிலாக(செஃபாக) செய்து வந்த அனுபவம் கைகொடுத்து இருக்க வேண்டும். சுத்ததிலும், பாத்திரங்கள் பளபளவென்று அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் நேர்த்தியிலும , அரிசி பருப்பு, காய் கறி, மசாலா சாமான்களின் தரத்திலும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சமையலறையை ஒத்திருக்கிறது கிருஷ்ணனின் சமையலறை.
”தினமும் மெனுவை மாற்றி விடுவேன்.ஒரெ உணவை சாப்பிட்டால் அவஙகளுக்கு சலித்து போயிடுமில்ல?” உற்சாகமான அவருடைய புன்னகை நம்மை எளிதில் தொற்றிக்கொள்கிறது.
இரண்டு சமையல்காரர்களின் உதவியோடு, தினமும் மூன்று வேளையும் சமைத்து, தன் வளர்ப்பு மக்களை தேடி தெருத்தெருவாக தானே எடுத்து செல்கிறார்.மனநிலை குன்றியவர்கள அடிக்கடி இடம் பெயர்வதில்லையாம், தினமும் அதே இடத்தில் தான் சந்திக்கிறாராம்.
ஒரு பெரிய பாத்திரத்தில் தயிர் சாதமும், சிறியது ஒன்றில் ஊறுகாயுமாக, ஒரு மாருதி வேனில் கிளம்புகிறார். வேன்? மதுரையின் ஒரு தயாளர் தானமாக கொடுத்தது. பத்து நிமிட பயணம். வேன், ஒரு சுவரின் அருகில் படுத்து இருக்கும் மனிதரின் அருகில் நிற்கிறது,கிருஷ்ணன் தயிர்சாதத்தை அவர் அருகில் வைக்க, அவர் அதை சீண்டக்கூட இல்லை. தண்ணீர் பாட்டிலை வாங்கி மட மட என்று குடிக்கிறார்.”பாவம் ரொம்ப தாகம். கொஞ்சம் கழித்து சாப்பிடுவார்” இது கிருஷ்ணன் சொன்னது.
வேனின் அடுத்த நிறுத்தம். தானே இலையில் சாதம் போட்டு, கொஞ்சம் எடுத்து ஒரு மனிதருக்கு ஊட்டியும் விடுகிறார். இரண்டு கவளத்துக்கு பிறகு அவர் தன்னாலேயே சாப்பிட ஆரம்பிக்கவும், கிளம்பி, அடுத்து ஒரு ட்ராஃபிக் சிக்னல். அழுக்கும், கிழிசலும், தாடியுமாக அந்த கூட்டத்தில் தனியாக தெரிந்த நாலு பேர், வேனை நோக்கி வருகிறார்கள். அவர்களிடம் எந்த் பரபரப்பும் இல்லை, “இந்த வேன் வந்தால் சாப்பாடு, கிருஷ்ணன் அவர்களுக்கு காத்திருப்பார்” என்பதை அவர்களுடைய மனது அறிந்தே இருக்கிறது.
”அவர்களுக்கு தனக்கு தானே தண்ணீர் கூட எடுத்துக் கொள்ள தெரியாது” ஒரு மரத்தடியில் அவர்களுக்கு சாப்பாடு பரிமாறி, தண்ணீரும் தந்து கொண்டே சொல்கிறார்.
அக்ஷய பாத்திரம் காலி ஆகும் வரை நகர்வலம் வருகிறது கிருஷ்ணனின் மாருதி வேன். மீண்டும் இரவு உணவுக்கு பாத்திரம் நிறையும். பயணம் துவங்கும்.
இத்தனைக்கும் சாப்பிட்ட ஒருவர் கூட கிருஷ்ணனுக்கு நன்றி சொல்வதில்லை. நன்றி என்ன நன்றி? ஒரு புன்னகை? ஒரு தலையசைப்பு? ஒன்றும் கிடையாது. அவரவர் வேலைகளை செய்வதற்கே நாமெல்லாம் நன்றியை எதிர்பார்க்கும் இந்த காலத்தில்,கிருஷ்ணன் பாட்டுக்கு அவர் பணியை தொடர்கிறார்.ஒரு நாளைக்கு 12000 ரூபாய் செலவு ஆகிறதாம். “மாதத்தில் 22 நாட்களுக்கு ”Donars” இருக்கிறார்கள். மீதி நாட்களை நானே சமாளிக்கிறேன்” அயராமல் சொல்வதோடு, “மீதி நாட்களுக்கும் கூடிய விரைவில் கிடைத்து விடுவார்கள்” என்னும் குரலில் ஏராளமான நம்பிக்கை.அக்கவுண்டுகளை வெகு சிரத்தையாக கையாள்கிறாராம். அக்ஷயா ஆரம்பித்த பிறகு, முதன்முதலாக,பலசரக்கு வாங்கிய ரசீதை செண்டிமெண்டாக வைத்து இருக்கிறார்.பொருளாதார வீழ்ச்சி இவரையும் விட்டு வைக்க வில்லை, 25 ஆக இருந்த Donars, 22 ஆக குறைந்து போய் இருக்கிறார்க்ள்.
இன்ஃபோஸிஸ், டிவிஎஸ் நிறுவனங்கள் இவருடைய சேவைக்காக 3 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க, அதில் ஒரு காப்பகம் அமைக்க திட்டம் இட்டு, முதலில் 80 பேர் தங்கும் அளவில் ஒரு பெண்கள் பகுதிக்கு அடித்தளம் மாத்திரம் கட்டிய நிலையில், நிதி தட்டுப்பாட்டினால், அப்படியே கிடப்பில் இருக்கிறது.
கிருஷ்ணனின் எல்லை உணவு கொடுப்பதோடு முடிந்து விடவில்லை.இன்னும் பரந்து இருக்கிறது. கேட்பாரற்று இருக்கும் அனாதை பிணங்களுக்கு இறுதி சடங்கு செய்யும் பணியையும் செய்து வருகிறார் கிருஷ்ணன்.பிணத்தை claim செய்து, குளிப்பாட்டி, உரிய முறையில் நல்லடக்கம் தருவதுமாக இருக்கும் இவரை, மதுரை முனிசிபாலிடியில் இருந்தும், பொது மருத்துவமனையில் இருந்தும், இறுதி சடங்கு செய்ய சொல்லி அழைக்கிறார்கள்.
நம் தேசபிதா காந்தியை கதராடை கட்டவைத்து 'மகாத்மா' ஆக காரணமாக இருந்த மதுரையே இவரது மாற்றத்திற்கும் காரணம். இப்படி இப்பட்செய்ய தூண்டியது ? என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு நினைவு கூர்கிறார் "பெங்களூருவில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்த நான், வெளிநாடு செல்வதற்கு முன் சொந்த ஊர் மதுரைக்கு வந்தேன். டாக்ஸியில் ஏர்போர்ட் செல்லும் போது மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் தன் மலத்தை தானே உண்ணும் அவலத்தை பார்த்து பதறி அடித்து அருகில் இருந்த ஹோட்டலுக்கு ஓடி, அவருக்கு பத்து இட்லி வாங்கி கொடுத்தேன். அரக்க பரக்க சாப்பிட்டு முடித்த அவர் என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பு தான் என்னை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டியது, அதன்பின், இத்தகையவர்களுக்கு உணவிடுவதே தன் தொழில் என முடிவு செய்துவிட்டேன்".
இவ்ருக்கு இன்னும் திருமணமாக வில்லை. "நாள் முழுக்க மற்றவர்களுக்கு சமைத்து கொண்டு இருக்கும் என்னை யார் கல்யாணம் செய்து கொள்வார்கள்?" என்று கேட்கிறார்.தன்னை திருமணம் செய்து கொள்பவர்,அவருடைய இந்த வாழ்க்கை முறைக்கு ஒத்து வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.ஆரம்பத்தில் அதிர்ச்சியான இவருடைய பெற்றோர்கள் கூட இப்போது இவருக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள்.ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டு விட்டு, மனனலம் குன்றியவர்களுக்கு சமையலும், அனாதை பிணங்களுக்கு காரியமும் செய்கிறீர்க்ளே? என்று ஆதங்கப்படுபவர்களுக்கு இவரது பதில், “எனக்கு இது பிடித்து இருக்கிறது”.
இவர் மதுரையில் நடத்திவரும் அக்க்ஷயா ட்ரஸ்ட் சேவைமையத்திற்கு ஏழு வயதாகிறது.
தன் வயிறுபசித்தால் பாலுக்குகூட அழதெரியாத மனநலம் குன்றிய
குழந்தைகளுக்கு தேடிபோய், தானே சமைத்து உணவிடும்
'தாயுமான' கிருஷ்ணனுக்கு, உதவி செய்துவரும் பல கரங்களோடு,
இந்த நன்னாளில் நம் கரங்களையும் இணைப்போம்.
எல்லோருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
ஜெய்ஹிந்த்.
நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஓருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை - ஔவையார்
தகவல்/படங்கள் உதவி:
http://news.rediff.com/slide-show/2009/aug/12/slide-show-1-he-gave-up-a-5-star-job-to-feed-the-mentally-ill.htm
http://www.akshayatrust.org/
பிகு: இந்த கட்டுரையை எழுத தூண்டிய குரு பிரசாத்துக்கும், இதை தமிழில் எழுத உதவிய இரண்டு நண்பர்களுக்கும் என் நன்றி.
Posted by IdlyVadai at 8/15/2009 12:01:00 AM 29 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல், சமுதாயம்
Friday, August 14, 2009
கேப்டன் லெட்சுமி - ஒரு பார்வை
"பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்" என்றான் பாரதி. தங்களால் போரினையும் நடத்தமுடியும் என நிரூபித்தவர் கேப்டன் லெட்சுமி.
அக்டோபர் 24, 1914 ஆம் வருடம், அப்போது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நம் சென்னையில் பிறந்தார். அவரது தந்தை S.சுவாமிநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர், தாய் அம்மு அவர்கள் கேரளாவை சேர்ந்த சமுகசேவகர் மற்றும் சுதந்திரபோராட்ட வீரர்.
ஏழை மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கோடு, 1938 ஆம் வருடம் சென்னை மருத்துவகல்லூரியில் பட்டம் பெற்றார். அதன்பின் சிங்கப்பூர் சென்று, அங்கு வாழும் ஏழை இந்திய தொழிலாளிகளுக்கு மருத்துவமையம் அமைத்தார். 1942 ஆம் வருடம் சிங்கப்பூர், ஜப்பான்வசம் வந்ததும், போரினால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சைகள் செய்தார்.
அப்போதுதான் அவர் வாழ்கையின் முக்கியமான திருப்பமான சம்பவம் நடந்தது. ஜூலை 2, 1943 ஆம் வருடம் சிங்கப்பூர் வந்த நேதாஜி அவர்கள் பெண்களுக்கான படைபிரிவை ஜான்சி ராணியின் பெயரால் தொடங்கவிருப்பதாக அறிவிக்க, கணமும் தாமதிக்காமல் அதில் இணைந்தார் லெட்சுமி. ராணுவ சேவைகளோடு, மருத்துவ சேவைகளையும் கவனித்தார். தனது சிறப்பான பணிகளால் விரைவில் ஜான்சிராணி படைபிரிவின் தலைமை பொறுப்பை ஏற்று கேப்டன் லெட்சுமி ஆனார்
1946, மார்ச் 4 ஆம் தேதி, பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு, சென்னைக்கு கொண்டுவரப்பட்டவர், நீண்ட சிறைவாசத்திற்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.
1970 களில் நேதாஜியின் வழிகாட்டுதலின்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிபணிகளிலும், வங்கதேச போர்காலங்களில் அகதிகளுக்கான மருத்துவ சேவைகளில் ஈடுபட்டார். 2002 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதிக்கான தேர்தலில் நமது அப்துல்கலாம் அவர்களை எதிர்த்து, கம்யூனிஸ்டுகள் ஆதரவோடு போட்டியிட்டு, தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. தனது கணவர் பிரேம்குமரோடு கான்பூரில் செட்டில் ஆகி, ஏழை எளியவர்களுக்கான மருத்துவ சேவைகளை தொடருகிறார்.
அடுப்புஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று இருந்த அந்த காலகட்டத்தில் கேப்டன் லெட்சுமி சாதித்துக்காட்டிஇருக்கிறார். இவரைபோன்று 'வெளிச்சத்திற்கு' வராமல் 'இருட்டில்' இருக்கும் பாரதி கண்ட புதுமைபெண்கள் எத்தனயோ?
அடுத்த சுதந்திர தினம் கொண்டாடுவதற்கு முன்பாவது, பெண்களுக்கான 33% சதவித இட ஒதுக்கிடு நிறைவேறுமா?? எதோ ஒரு மொழி தெரியாத நடிகை தனது பட 'அனுபவங்களை' சொல்லிகொண்டுஇருக்கும் டிவியை சிறிது நேரமாவது நிறுத்திவிட்டு, பாரதமாதாவை பிராத்தனை செய்வோம்.ஜெய்ஹிந்த்
-இன்பா
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நாளை டிவியை அணைத்துவிட்டு, காந்தியடிகள் எழுதிய சத்திய சோதனையை 15 பக்கமாவது படிக்க முடிவு செய்துள்ளேன். நீங்கள் ?
முதல் சுதந்திர தின படங்கள் கீழே போனஸாக..
( படங்களை அனுப்பிய கார்த்திக்கு நன்றி )
Posted by IdlyVadai at 8/14/2009 02:09:00 PM 27 comments
(ஒரு திகில்) பஞ்சர் அனுபவம்
சென்ற வாரம் நடுவழியில் பஞ்சரான எனது தந்தையின் இருசக்கர வாகனத்தை பஞ்சர் ஒட்டும் போது ......யதிராஜ சம்பத் குமார் சொல்லும் திகில் பஞ்சர் அனுபவம்!
கீழ்ப்பாக்கத்திலிருந்து வில்லிவாக்கம் வரும் வழியில் "நியூ ஆவடி ரோட்டின்" மத்தியில், RTO அலுவலக சமீபத்தில் தனது பைக் பஞ்சராகிவிட்டதாகவும், அருகில் மெக்கானிக் ஷாப் ஏதும் தென்படவில்லை எனவும் வீட்டிலிருந்த எனக்கு எனது தந்தை சுமார் மாலை 4.30 மணிக்கு செல்பேசினார். உடனே நான் எனது பைக்கில் பஞ்சர் ஸ்தலத்தை அடைந்தேன். வண்டியின் தள்ளாமை நிலையைப் பார்த்துவிட்டு அங்கிருந்து சிறிது தொலைவிலிருந்த "விஜய்ஸ்ரீ மஹால்" திருமண மண்டபம் அருகிலிருந்த மெக்கானிக் ஷாப் ஒன்றிற்கு மெக்கானிக்கை அழைத்து வரும் நிமித்தம் பொருட்டு சுமாராக இருந்த மெக்கானிக் ஷாப்பிற்குள் நுழைந்தேன்.
"வாங்க சார், வண்டில இன்னா ப்ரச்சனை??" என்று மெக்கானிக் போன்று தோற்றமில்லாத ( சட்டையில் வண்டி மை, ஆயில் கறை போன்ற சமாச்சாரம் ஏதுமில்லை ) ஒரு இளைஞர் வினவினார். அவரது தோற்றத்திலேயே எனது வயிற்றில் ஒரு பயப் பந்து உருண்டது. என் வண்டில ப்ரச்சனை ஏதுமில்ல சார்....RTO ஆபீஸ் பக்கத்துல அப்பாவோட வண்டி பஞ்சராகிடுச்சு....தள்ளிட்டு வர முடியாது, கொஞ்சம் வரீங்களா?? என் வண்டில போய் வீல கழட்டிட்டு வந்துடலாம் என்றேன். அவர் எனது அப்பாவினுடைய வண்டியின் ஜாதகத்தை என்ஜின் நம்பர் தவிர அனைத்தையும் விசாரித்தார். இதெல்லாம் ஏன் என்பது போன்ற எனது சந்தேகப் பார்வைக்கு, பேக் வீல் கழட்டறதுக்கு என்ன வண்டின்னு தெரிஞ்சாதான் சரியான ஸ்பேனர் எடுத்துட்டு வரமுடியும் என சென்னைத் தமிழில் பதிலளித்தார். சரி என்று பஞ்சர் ஸ்த்லத்தை அடைந்து அங்கு "ரியர் வீலை" கழட்டி எனது அப்பாவை அங்கேயே நிறுத்திவிட்டு மெக்கானிக் ஷாப்பை அடைந்தோம். இதுவரை எல்லாமே சுமூகமாகத்தான் நடந்தது.
டயரைப் பிரித்து ட்யூபை ஆராய்வதற்குள் என்ன அவசரமோ தெரியவில்லை, யாருக்கோ தனது செல் பேசியிலிருந்து ஒரு "மிஸ் கால்" அருளினார். "மிஸ் கால்" வரம் பெற்றவர் திரும்பவும் கால் செய்தார், அவரிடம் சுமார் ஒரு பதினைந்து நிமிடங்கள் இங்குமங்கும் நடந்து கொண்டே பேசினார். வண்டி டயரை சீக்கிரம் பாருங்கள் என்று கெஞ்சும் பாவனையில் அவரை இருமுறை பார்த்தேன். போனால் போகட்டுமென்று டயரைப் பிரித்து ட்யூபை ஆராய்ந்ததில் ஒரு ஆணி குத்திய அளவிற்கு ஒரு துளை இருந்தது. மேலும் ஆராய்ந்ததில் காற்றடிக்க உபயோகப்படும் "மெளத்"ற்கு அருகில் சரியாக ஒரு துளை. இத்தனைக்கும் வண்டியின் வயதே 8 மாதங்கள்தான் ஆகின்றன. டயரும், ட்யூபும் வண்டியோடு வந்த ஒரிஜினல் சமாசாரங்கள். எப்படி "மெளத்தில்" துவாரம் விழ முடியும் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, "சார் ட்யூப்தான் மாத்தணும், வேற வழியில்ல. நம்மகிட்டே கம்பெனி ட்யூப் ஒரு வருஷ வாரண்டியோட இருக்கு மாத்திடலாமா?? 180 லயும் இருக்கு, 230 லயும் இருக்கு.,என்று ட்யூபை மாற்றும் ஆயத்தத்துடன் என்னிடம் கேட்டார். அவர் காட்டிய கம்பெனி (??) ட்யூபை பார்த்தவுடனேயே இன்னும் இரண்டு நாட்களில் அது பல்லிளிக்கும் போல எனக்கு தோன்றியதால், இல்ல சார் பக்கத்துலதான் "MRF Show Room" இருக்கு அங்க போய் வாங்கிட்டு வந்துடறேன், நீங்க வீல் மட்டும் மாட்டி குடுத்துடுங்க என்றேன். அவர் முகம் சற்றே விகாரமாகி என் வயிற்றில் அமிலத்தை உற்பத்தி செய்தது. சற்றே மரியாதையை விட்டு, "அல்லாம் நம்மதும் கம்பெனிதான் இங்கயே போட்டுக்க" என்று சென்னையின் இலக்கியத் தமிழுக்கு மாறினார். நான் சற்றே சுதாரித்துக் கொண்டு, "இல்ல சார், "MRF" Dealer எனக்கு தெரிஞ்சவரு, சகாயமா தருவாரு என்று ஒரு புளுகை அவிழ்த்துவிட்டு, அவர் பதில் பேசும் முன்பு வண்டியைக் கிளப்பிவிட்டேன்.
ஷோ ரூமில் ட்யூபை வாங்கிக் கொண்டு மெக்கானிக் ஷாப்பிற்கு திரும்பி வந்தால் அங்கு கடை மட்டும்தான் இருந்தது. மெக்கானிக்கும், அவர் சார்ந்த பொருட்களும் இட்சிணி வேலை போல் மறைந்து விட்டிருந்தன. இதென்னடா புதுப் பிரச்சனை என்று நொந்து கொண்டு அருகில் இருந்த "சீட் கவர் மற்றும் ஹெல்மெட்" கடையில் விசாரித்தேன். அங்கிருந்த பெரியவர் நான் கேட்டதைக் கவனிக்காமல் எனது பைக்கின் சீட் மற்றும் பெட்ரோல் டாங்கின் கவர்களைப் பார்த்துவிட்டு, "என்ன சார் "Evening Star" ல போட்டீங்களா?? நம்மகிட்ட சீப்பா கிடைக்கும் சார்.....இந்த "STUDDS" ஹெல்மெட் அங்க என்ன ரேட் ஆகுது என்று என்னிடம் வியாபார பேச ஆரம்பித்தார். நான் வெறுத்துப் போய், சார் வண்டி வீல கழட்டி பஞ்சர் ஒட்ட குடுத்தேன், ட்யூப் வாங்க்ட்டு வரதுக்குள்ள கடைய பூட்டிகிட்டு போயிட்டாரு மெக்கானிக், எங்க போயிருக்காருன்னு தெரியுமா?? என்று 16 வயதினிலே சப்பாணி பரட்டையிடம் "ஆத்தா வையும் சந்தைக்கு போவணும் காசு குடு" என்னும் ரேஞ்சில், அப்பா அங்கே காத்திருக்கிறார் என்று சொன்னேன். அதற்கு அவர் என்ன தம்பி "மெளத்துல" ஓட்டையா என்று கேலி தொனிக்கக் கேட்டார். நான் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, ஆமா சார், இவர்கிட்ட ட்யூப் வாங்க சொன்னாரு, நான் Dealer கிட்ட போய் வாங்க போய்ட்டு வரதுக்குள்ள இவர காணோம், எங்க போயிருக்காருன்னு தெரியுமா என்றேன். அவர், தெரியலப்பா, இவனுகளால இந்த தொளிலுக்கே கேவலம், கஸ்டமர இப்படித்தான் நட்டாத்துல உட்டுட்டு பூடுவானுங்க" என்று அங்கலாய்த்தார். இதற்கிடையே எனது தந்தையிடமிருந்து அடிக்கடி செல்பேசி அழைப்புகள்....அவரிடம் ஒருவாறு விஷயத்தைச் சொல்லி சற்றே காத்திருக்குமாறு சொல்லிவிட்டு மெக்கானிக்கிற்காக தவமியற்ற ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் ஆயிற்று, மெக்கானிக் வரும் வழியாகத் தெரியவில்லை. என்னிடம் சற்றே "சீட் கவர்" கடைக்காரருக்கு கருணை பிறந்திருக்க வேண்டும் போலும், மெக்கானிக்கினுடைய செல் நம்பரை என்னிடம் கொடுத்து, தம்பி ட்ரை பண்ணி பாரு ஆனா நான் நம்பர் குடுத்தேன்னு சொல்லாதே, அவன் கேட்டா ஏதானு சொல்லி சமாளி என்று நம்பரைக் கொடுத்தார்.
அவர் கொடுத்த நம்பருக்கு செல்லினேன். அலோ, சார் வீல கழட்டி போட்டுட்டு கடைய பூட்டிகிட்டு போய்ட்டீங்க, எவ்வளவு நேரம் நிக்கிறது, எப்ப வருவீங்க என்று கேட்டேன். அவர் முதலில் கேட்டது, "நம்பர் எப்படி கெடச்சது?" சீட் கவர் பெரியவரின் பயம் இப்போதுதான் புரிந்தது. என்ன பொய் சொல்லி சமாளிக்கலாம் என்று யோசிக்கும்போதே, இங்கதான் பக்கத்துல ஒரு அவசர வேலையா வந்தேன், இருங்க வரேன் என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். அதன் பிறகு ஒரு பத்து நிமிடம் வரை வரவில்லை, திரும்பவும் முயற்சி செய்த போது அவரது செல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. இது என்னடா பெரிய வம்பாகிப் போய்விட்டதே என்று நினைத்துக் கொண்டிருக்கையில், சீட் கவர் பெரியவர், இந்த பசங்க எல்லாம் "மெளத்" ல வேணும்னே நம்ம பாக்காதப்ப ஓட்டய போட்டுட்டு, அவங்ககிட்டயே ட்யூப் வாங்க சொல்லுவாங்க...அவங்க வியாபார தந்திரம் என்று எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினார். இதனிடையே அப்பா செல்லில், மெக்கானிக் வரலேன்னா வண்டிய ஏதாவது "Three Wheeler" ல ஏத்தி சர்வீஸ் சென்டருக்கு கொண்டு போய்டலாம் என்றார். இல்லப்பா இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம், வீல் அவன்கிட்ட இருக்கு என்று சொல்லிவிட்டு, மறுபடியும் நேரத்தைக் கொன்றதில் அரை மணியில் வந்து சேர்ந்தார் மெக்கானிக். ஒரு ஐயாயிரம் ரூபாய் பணம் வரணும் அதான் போனேன் என்று சொல்லிவிட்டு அடுத்த "மிஸ் காலுக்கு" தயாரானார். நான், சார் ஏற்கனவே ரெண்டரை மணிநேரமா அப்பா அங்க நின்னுட்டு இருக்கார், நீங்க வேற கடைய பூட்டிட்டு போய்ட்டீங்க, கால் அப்பறம் பண்ணலாம் முதல்ல ட்யூப மாட்டி வீல போட்டு குடுத்துடுங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு ஒரு ஆட்டோ வந்தது. ஆட்டோ ட்ரைவர் நமது மெக்கானிக்கிற்கு அத்யந்த ஸ்நேகிதன் போலும். ஆட்டோ ட்ரைவரின் தோற்றப் பொலிவைக் கண்டதும், சரி நமக்கு இன்று ஏழரை உச்சம் என்று நினைத்துக் கொண்டேன். நடுவில் ஆட்டோ ட்ரைவர் வேறு என்னிடம் ஏதோ சென்னைத் தமிழில் கேட்க, எனக்கு அது புரியவில்லை. உடனே ஆட்டோ, மெக்கானிக்கிடம், அவன்ட சொல்றா என்று சொன்னான். பிறகு ஒருவழியாக ட்யூபைப் போட்டுவிட்டு, மெக்கானிக் என்னிடம் நீங்க முன்னாடி வண்டில போங்க நான் ஆட்டோல வரேன் என்றார்.....இல்ல சார் வண்டில போய்டலாம் என்றதை பொருட்படுத்தாமல் ஆட்டோவில் கிளம்பினார்.
மணி எட்டு. என்னுடைய வண்டியின் ஹெட்லைட் வெளிச்சத்தில் வீலை மாட்டியதும் மெக்கானிக் என் அப்பாவிடம் 150 ஆச்சு சார் என்றார். எங்கள் இருவருக்கும் மயக்கம் வராத குறை. என்ன சார் வீல கழட்டி மாட்றதுக்கு 150 ரூவாயா?? என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டேன். அப்போதுதான் ஆட்டோ ட்ரைவர் எதற்கு உடன் வந்தார் என லேசாகப் புரிந்தது. அவர் மெக்கானிக்குடன் சேர்ந்து கொண்டு, "கேட்டத குடு சார், கடைய ஆளில்லாம உட்டு வந்திருக்காரில்ல இம்மாந்தூரம்??" என்று மிரட்டும் தொனியில் கூறினார். நான், அப்பா, ஏதோ பிரச்சனை பண்ணுவாங்க போலருக்கு பேசாம குடுத்துட்டு முழுசா ஆத்துக்கு போய்ச் சேரலாம்....என்று ஆங்கிலத்தில் (வாழ்க ஆங்கிலம்) கூறிவிட்டு 150 ஐ அழுதுவிட்டு ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தோம்.
- யதிராஜ சம்பத் குமார்.
கடைசியில் பஞ்சர் ஆனது யார் ?
Posted by IdlyVadai at 8/14/2009 07:11:00 AM 26 comments
Labels: அனுபவம், விருந்தினர்