அன்பு இட்லிவடை,
காமராஜ் பிறந்தநாளான இன்று அவரைப் பற்றி நான் எழுதிய கவிதை ஒன்றை அனுப்புகிறேன்... முடிந்தால் தங்கள் தளத்தில் வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறேன்..
நெடுநாள் வாசக அன்பன்
ஈ ரா .
வெள்ளைக் கதருக்குள்
கறுப்பாய்
ஒரு
பச்சைத் தமிழன் .
நீ
கல்விச்சாலையில்
கற்றது கைமண் அளவு
ஆனால்
கல்வி சாதனையில்
கடந்தது கடல் அளவு.
விருது நகரின் விழுது
வெள்ளந்தி மனது.
நீ
சம்சாரக் கடலில்
மூழ்காத
கட்டைப் பிரம்மச்சாரி.
உன்னிடம்
பந்தமும் இல்லை
பந்தாவும் இல்லை.
நீ
ஏழைக் குழந்தைகளுக்குக்
கூட்டானவன்
ஆனால்
ஏட்டுச் சுரைக்காய்களுக்கு
வேட்டானவன்.
பலமான அணைகளைப்
பரிசாகத் தந்தவன் - பல
பாலங்கள் கட்டத்
தானே
பாலமாய் இருந்தவன்.
அறம் பேசிய
உன் வாய்
புறம் பேசியதில்லை
அடுக்கு மொழி தெரியா
உன் நாக்கு என்றும்
தடம் புரண்டதில்லை.
வெட்டும் துண்டும் உன்
வார்த்தையில் மட்டும்தான்
வாழ்க்கையில் இல்லை.
நீ செவிக்கும் வயிற்றுக்கும்
சேர்ந்தே ஈய்ந்தவன்
சமுக நீதிக்கே
சருகாய்த் தேய்ந்தவன்.
உன்னிடம்
வார்த்தை ஜாலமும் கிடையாது
உனக்கு
வாரி சுருட்டவும் தெரியாது.
நீ
விடியலுக்கு வித்து
கல்விக் கதிரவன்
என்பதைக்
காலத்தே கண்ட
தொலை நோக்கி.
நீ
கையூட்டு பெறும்
அரசியல்வாதிகள்
தொடக்கூடாத
கையேடு.
நீ
நான்கு வேட்டி மட்டுமே
சொத்தாய்க் கொண்ட
நல்லவன்
நாடாளும் வித்தையில்
கரை கண்ட
வல்லவன்.
நீ
ஒரு நாளும்
தலை தாழ்ந்ததில்லை
அதனால்தானோ என்னவோ
உம்மைத் தோற்கடித்த நாங்கள்
இன்னமும்
தலை நிமிரவே இல்லை !!
- ஈ ரா ( http://padikkathavan.blogspot.com )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, July 15, 2009
கல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்
Posted by IdlyVadai at 7/15/2009 04:05:00 PM
Labels: கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
19 Comments:
//நீ
ஒரு நாளும்
தலை தாழ்ந்ததில்லை
அதனால்தானோ என்னவோ
உம்மைத் தோற்கடித்த நாங்கள்
இன்னமும்
தலை நிமிரவே இல்லை !!//
எவ்வளவு சத்தியமான உண்மை, கவிதை மிகவும் சுவையோடு சிந்திக்கவும் வைக்கிறது
72 வருடங்கள் வாழ்ந்த காமராஜர் அவர்களுக்கு இந்த
72 வரிக் கவிதை சிறந்த அஞ்சலி!
//நீ
நான்கு வேட்டி மட்டுமே
சொத்தாய்க் கொண்ட
நல்லவன்
நாடாளும் வித்தையில்
கரை கண்ட
வல்லவன்.//
இதைவிட எளிமையை, இவ்வளவு வலிமையை சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.....
வாழ்த்துக்கள் ஈ.ரா.
நன்றி இட்லிவடை......
காமராஜ் வாழ்க உன் புகழ்
வளர்க உன் சிந்தனை
உன்னை போல் ஒரு முதல்வர் தமிழகத்தில் மீண்டும் வரவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
நிறத்தில் நிரம்பிய முதல் பத்தி
பாராட்டை அள்ளிய அடி நெத்தி
பந்தமும் பந்தாவும் இல்லை என சொல்லி
வினாவும் எழுப்பி விடையும் பகர்ந்த உத்தி அடி நெத்தி
ஈ.ரா என்று பெயர் உனக்கு,
பகுத்தறிவு பகலவன் நினைவு எனக்கு
படிக்காதவன் என்ற வலைப் பதிவுப் பெயர் எதுக்கு.
Fantastic Lyrix.
EeRaa, Hats Off to you.
Eee Raa .. Hats off to you.. Its really touching.. But whats the use ... the Congress part itself is not remembering the great leader... I dont think we can't even dream of such leaders in present day.. Modi may come little close - Batchelor, honesty in public life , etc.. i dont think anybody else can come close
அன்பு ஈ.ரா. அவர்களுக்கு,
கவிதை அருமை.. சிந்திக்கவைக்கும் வார்த்தைகள்.
"நீ
கையூட்டு பெறும்
அரசியல்வாதிகள்
தொடக்கூடாத
கையேடு."
வைர வரிகள். வாழும் வையகம் உள்ளவரை
காமேஷ்
Great men realised as great only after they are no more.
a amn. true tamil, not belonging to fake pagutharivalar a great visionary simple but great action oriented man. We have suffering for the last 42 years for defeating hIm.We believed in nrhetoric and dramas and defeated HIm. SO we have no right to cry now
"நீ
கையூட்டு பெறும்
அரசியல்வாதிகள்
தொடக்கூடாத
கையேடு."
தொடாதே, கையை எடு என்று சொல்லாமல், வலுக்கட்டாயமாகத் தொட வையுங்கள்.
அப்படியும் திருந்தாவிட்டால், 'வையுங்கள்';அடி-உதைகளுடன்.
டியர் ராம்ஸ்,
கர்மவீரரைப் பற்றிய அருமையான கவிதை. //உன்னிடம்
வார்த்தை ஜாலமும் கிடையாது
உனக்கு
வாரி சுருட்டவும் தெரியாது.// வாரிசு மூலம் சுருட்டவும் தெரியாது என்றும் படிக்கலாம்...
பாராட்டுகள் திரு ஈ.ரா.
கர்ம வீரருக்கு நல்ல காணிக்கை.
இன்றாவது "காக்கை கூட்டம்" சேர்ந்து அஞ்சலி செலுத்தினரா?? இல்லை திரு கக்கன் பிறந்தநாள் விழா கதிதானா?
எத்தனையோ எழுத்தாளர்கள் காமராஜைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.
நாகூர் ரூமி என்ற சமநிலையற்ற எழுத்தாளர் எழுதி கிழக்கு வெளியிட்டுள்ள “காமராஜ்” என்ற 117 பக்க நூலை இரண்டு நாட்கள் முன்னர்தான் படித்தேன். குப்பை!
நேற்று தினமணியில் பழ.கருப்பையா எழுதியுள்ள கட்டுரையையும் படித்தேன். சுமார்.
“கல்விபூ காமராஜ் மலர்ந்த நாள்” கவிதை என்னை ஆட்கொண்டுவிட்டது.
வாழ்த்துக்கள்.
Valthukal EeRa
Oru Nalla Visiyam posting seitha
Idly vadaikum Nandri
Ki
Dubai
தமிழகத்தில் இருந்த வெகு சில நல்ல அரசியல் வாதிகளில் ஒருவர் காமராஜர். நல்ல கவிதை வாழ்த்துக்கள்...
காமராஜர் எளிமைக்கு, குடும்பம் என்ற பந்தத்தில் சிக்காதது ஒரு காரணமோ? அப்படி பார்த்தால் "J" க்கு கூட தான் குடும்பம் இல்லை.. ஆனால் அதற்கும் சேர்த்து உடன் பிறவா சகோதரி குடும்பம் சம்பாதிக்கிறது....
எளிமை.. நேர்மை.. உண்மை.. உழைப்பு.. தொலை நோக்கு பார்வை.. ம்ம்ம்.. காமராஜரின் இந்த குணங்கள் இன்று எந்த அரசியல் வியாதிக்கு (yes, I meant it... அரசியல் வியாதிக்கு.. ) உள்ளது?
Mohan Kumar
இட்லி வடைக்கு நன்றிகள் பல ....
தவநெறி செல்வன், கவுதமன், கோபி, படுகளி, அருண், சுவாமி, காமேஸ்வர ராவ், ராஜாராமன், ஈரோடு நாகராஜ், ஷங்கர், மானஸ்தன், கிருஷ்ணமூர்த்தி, கி, மோகன் குமார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்....
அன்புடன்
ஈ ரா
ARPUTHAM!
HATS OFF, I.V. AND E.RA.
அன்பு ஈ.ரா. அவர்களுக்கு,
கவிதை அருமை.. சிந்திக்கவைக்கும் வார்த்தைகள்.
அய்யாவை பற்றி போலியாய் பேசும் மனிதர்கள் மத்தியில் கவிதை எழுதி அவரை நினைவு படுத்தி சிந்திக்க வைத்ததற்கு நன்றிகள் உங்களுக்கும் இட்லி வடைக்கும்.
ஈ ரா உங்க மெயில் வந்தது. நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் :-)
Post a Comment