பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 30, 2009

அம்மாமி கிடைக்காமலா போய்டுவா? - கலைஞர் அறிக்கைமேலே உள்ள படம் போன மாதம் விகடனில் வந்த கேலிச் சித்திரம்..
அதற்கு கலைஞர் ரியாக்ஷன் கீழே...

கலைஞர் அறிக்கை....

அருகில் இருந்தும், தொலைவில் இருந்தும் உடன் பிறப்புகள் என் மீது அன்பைப் பொழிந்து கொண்டும் - "அண்ணனே, உனக்காக உயிரையே தரத் தயாராக இருக்கிறேன்'' என்ற உறுதிமொழிகளை வழங்கிக் கொண்டும் -என் நாடி நரம்புகளில் பாசப்பெரு வெள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது -சில வார ஏடுகள் (எல்லா ஏடுகளும் அல்ல) என்னைக் கேலி செய்தும், என் எழுத்துக்களை இழிவுபடுத்தி விமர்சித்தும்- கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள் என "கான மயிலாட கண்டிருந்த வான்கோழிபோல" ஆடிப்பார்க்கும் அவலட்சணத்தின் அநாகரீகத்தின் உச்சமே அந்த ஏட்டாளர்களுக்கு மிச்சம்.

இதோ! என் துணைவி ஆம்- உன் அண்ணி தயாளு அம்மையாரைப் பற்றி கேலிச் சித்திரம் போடவும், தயங்கிடவில்லை என்பதற்கு அடையாளமாக 24-6-2009 தேதிய ஆனந்த விகடனில் "கன்னா பின்னா'' கார்ட்டூன்களில் ஒன்று வெளிவந்துள்ளது.

அக்ரகாரத்துக்கு எவ்வளவு ஆணவம் பார்த்தாயா? நாமும் கார்ட்டூன் வரைந்திட அவா ஆத்துல ஒரு அம்மாமி கிடைக்காமலா போய்டுவா?

என்னிடத்தில் ஆழ்ந்த அன்பும் பற்றும் பாசமும் கொண்ட இளங்கவிஞர் தமிழ்தாசன் இந்தப் படங்கள் குறித்தே ஒரு கண்டனக் கடிதத்தை எனக்கெழுதி - அதே ஆனந்த விகடன் 25-4-1954-ல் எழுதிய "மனோகரா'' திரைப்பட விமர்சனத்தையும் -அந்த ஏட்டிலிருந்தே எடுத்து எனக்கு அனுப்பியுள்ளார். அதை அப்படியே இந்தக் கடிதத்துடன் இணைத்திருக்கிறேன்.

"தாயைத் தெய்வமாகக் கொண்டாடும், அவளை வழிபட்டு வணங்கும் தமிழ்ப் பெரு மரபிலே, ஒரு தமிழ் மகன் எத்தனை வீறுகொண்டு எழுந்தாலும், எப்பேர்ப்பட்ட எரிமலை போல் குமுறிக் கிளம்பினாலும், "தாய்'' என்ற ஒரே ஒரு மந்திரச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அடங்குவான்.

இந்த மகத்தான உண்மையை வற்புறுத்துகிறது "மனோகரா''.

மனோகரனைச் சங்கிலிகளால் கட்டிச் சபை நடுவே இழுத்து வரச்செய்து, வசந்தசேனையிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறான் மன்னன். "என்ன குற்றம் செய்தேன், அரசே! பதில் சொல்லும்'' என்று இடி முழக்கம் செய்த இளவரசன், சங்கிலிகளை அறுத்துக் கொண்டு கத்தியை ஓங்கியவாறு சண்டமாருத மென முன்னேறும் சமயம், "இனி இந்தச் சூறாவளியை யாரால் நிறுத்த முடியும்? தொலைந்து போனான் அரசன்!'' என்று நாம் முடிவு கட்டும்போது, "என் மார்பிலே உன் கத்தியை முதலில் பாய்ச்சு! பிறகு என் சவத்தின் மீது நின்று கொண்டு உன் தந்தையுடன் சண்டை போடு!'' என்று கூறுகிறாள் அந்தப் பதிவிரதா ரத்னம்.

தாய்மையின் வெற்றி மனோகரனை அடக்குவதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவனை வீரனாக்கி, மாசற்ற மனம் படைத்தவனாகவும் ஆக்குகிறது.

மனோகரனைத் தூணிலே சங்கிலியால் கட்டியிருக்கிறது. சாட்டை கொண்டு அவனை அடிக்கிறான் ஒரு பாதகன். வசந்தசேனையும் அவள் ஆரம்பக் காதலனும் மனோகரனின் பச்சிளம் பாலகனை எடுத்துவரச் செய்து, அவன் கண்ணெதிரிலேயே கத்திக்கு பலியாக்க விழைகிறார்கள்.

எந்தக் கணவனை உத்தேசித்து இதுவரை பொறுமையை மேற்கொண்டாளோ, அவனே சிறையிலே விழுந்துவிட்ட பின், பொறுமையைக் கைவிடும்படி மகனுக்கு ஆக்ஞை கொடுக்கிறாள் தாய்.

"மகனே, பொறுத்தது போதும்... பொங்கி யெழு!'' என்று அவள் கூறியதும், எதிர்பார்த்தது நடைபெறுகிறது. சங்கிலி அறுகிறது; தாயின் துயர் துடைக்க, தாய் நாட்டை மீட்க, கொந்தளித்துக் கொண்டு பாய்கிறான் மனோகரன்.

தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலே போட்டா போட்டி! தர்மம் சளைத்து விட்டது போன்று காண்கிறது; அதர்மம் வலுவடைந்து வருவது போலும் தோன்றுகிறது. கடைசியில் தர்மம் வென்று, அதர்மம் புல் முளைத்துப் போகிறது.

சிவாஜி கணேசனும், கண்ணாம்பாவும் இவ்விரு பாத்திரங்களை ஏற்று, அவற்றிலே ஊறி, படமெங்கும் தங்கள் ஒளியைப் பரவி வீசிவிட்டார்கள்.

வசந்த சேனை (டி.ஆர்.ராஜகுமாரி) கல் நெஞ்சம் படைத்த வஞ்சகி. ஹாஸ்ய பாத்திரமாக வரும் வஸந்தன் (எஸ்.ராதாகிருஷ்ணன்) பைத்தியக்காரன். அரசன் புருஷோத்தமன் (சதாசிவராவ்) நூற்றுக்கு நூறு மோகாந்த காரத்தில் மூழ்கிப் போனவன். இந்த பாகங்களை ஏற்று நடிப்பவர்கள் பிரதான பாத்திரங்களுடைய தரத்தைக் குன்றச் செய்யாமல் இருப்பது, இந்தப் படத்திலே ஒரு சிறந்த அம்சம்.

நல்ல கதையாக இருந்தால், ஜீவசக்தியுள்ள சம்பாஷணைகள் இருந்தால், பிரதான நடிகர்கள் நன்றாக நடித்துவிட்டால், பொது ஜன அபிமானம் கிட்டாமல் போகாது என்பதற்கு "மனோகரா''வை எடுத்துக் காட்டலாம்.''

இவ்வாறு விகடன் விமர்சனம்

எழுதியது 1954ல்!

எனக்கு கோபம் இருந்திருந்தால்...

அந்தத் தம்பியின் கடிதத்தின் முடிவில் அந்தத் தம்பியே எழுதியிருக்கிறார் -மனோகரா வசனங்களைப் புகழ்ந்துவிட்டு அந்த வசனங்களை எழுதியுள்ள உங்கள் பெயரை அந்த ஏடு வெளியிடவே இல்லையே என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் தம்பி தமிழ்தாசன்!

தம்பி தமிழ்தாசனுக்குச் சொல்கிறேன், மற்ற தம்பிமார்களுக்கும் கவனமூட்டுகிறேன். அந்த ஏடு மனோகரா படத்துக்கு வசனம் எழுதிய என் பெயரையே மறைத்துவிட்டது என்ற கோபம் எனக்கு இருந்திருந்தால் அதே ஏடு நடத்திய ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவுக்கு நான் சென்றிருப்பேனா? அதே போல, ஆனந்த விகடன் சார்பில் வெளியிட்ட "பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்'' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள குடியரசு தலைவராக இருந்த அப்துல்கலாம் வர மறுத்த நிலையிலும்கூட, நான் அந்த விழாவிலே கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அரசு நூலகங்களில் எல்லாம் அந்தப் புத்தகங்களை முப்பது லட்சம் ரூபாய்க்கு வாங்கிட வேண்டுமென்றும் ஆணையிட்டிருப்பேனா?

அது மாத்திரமல்ல, ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த பாலசுப்பிரமணியம் மீது தமிழகச் சட்டமன்றத்தின் சார்பில், அ.தி.மு.க. ஆட்சியிலே நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்யும் அளவிற்கு நிலைமை சென்ற நேரத்தில், அந்தச்செய்தியினை வெளியூருக்கு காரிலே சென்று கொண்டிருந்த நான் வானொலியிலே கேட்டு விட்டு- உடனடியாக திண்டிவனத்திலே என் காரை நிறுத்தச் சொல்லி -அந்தச் செய்கையைக் கண்டித்து அங்கிருந்தே அறிக்கை கொடுத்திருப்பேனா?

நானும் ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில் பத்திரிகைகளிடம் பகைமை பாராட்டுவதில்லை. அப்படிப் பாராட்டும் பண்பு எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பேனா?

உருப்படியான பதிவு எதுவும் போடலையா என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவு :-)

12 Comments:

God said...

Though his dialogues are a bit dry these days, telling that tsunami is imminent after his decision to write dialogue, is taking it a little too far....

Sethu Raman said...

ஏங்க இ.வி.
1954ம் வருஷம் அண்ணாச்சி கிட்ட
இருபத்தாறு (வெளிவந்த வரை)
கோடி இருந்ததா? இந்த 55
வருஷத்திலே என்னெல்லாம்
நடந்திருக்குது, அது அவருக்குத்
தெரியாதா?
ஆமாம் அம்மா பத்தி வந்தவுடனே
கலாய்க்கிறாரே, அப்படித்தானே
மத்தவங்களுக்கும் இருக்கும்!!
ஒரு சொலவடை உண்டு - கண்ணாடி
வீட்டிலே இருக்கிறவங்க கல்லை
எறியக்கூடாது!! அண்ணாச்சி அதை
மறந்து போய்ட்டார் போல இருக்கு!!
ஆமாம் இ.வி. அண்ணாச்சி சொல்லி
யிருக்கிறாரே கோபாலபுரம் வீட்டிலே
ஏழைகளுக்கு ஒரு மருத்துவமனை - அதிலே ஒரு தொக்கு இருக்கு பாத்தீங்களா, எப்போ அந்த வீடு மருத்துவமனையாகும் -
அண்ணாச்சிக்கும், அப்புறம் அவங்க
துணைவிக்கும் பிறகு தான். ஏங்க நாம யாராவது துணைவிங்கிரபோது, அவிங்களுக்கு ஏதாவது வரும்முனு விரும்புவோங்களா!!

Anonymous said...

வழக்கமான காரம் இல்லையே கலைஞர் அறிக்கையில்.. ஆனாலும் இன்னும் எவ்வளவி நாளைக்குத்தான் மனோகராவப் பத்தியே பேசப் போறாங்களோ? உளியின் ஓசை பத்தி தமிழ்தாசன் ஓசையே போடலையே..

Baski said...

50 வருசத்துக்கு முன்னாடி (1954) நல்ல கவிதை , வசனம் எழுதினாரு. வாஸ்தவம் தான். என்னக்கும் அந்த கருப்பு வெள்ளையில் அருமையான வசனமும் சிவாஜி அவர்களின் நடிப்பும் ரொம்ப பிடிக்கும். இவரை அந்த காலத்து நல்ல கவிஞர்/திரை கதையாளர் என ஒப்புக்கொள்ளலாம்.

இப்போ மணி ரத்தினம் ஸ்டைல். சுஜாதா சார் போல் வாக்கியங்களை சுருக்கி சிறியதாக வசனம் வைப்பது தான் ரசிக்கப்படும். இப்போ மனோகரா வசனம் பேசினால் மக்கள் வெளியே போய் தம் அடித்துவிட்டு வருவார்கள். ஒருத்தனும் உட்க்கார மாட்டான்.

இவருடைய வெற்றி(?) இவரது தற்போதைய படைப்புகளின் வரவேற்ப்பை பார்த்தல் தெரியும்.
கண்ணம்மா , உளியின் ஓசை ரெண்டு படமும் செம ஊத்தல்.

வாலி, வைரமுத்து போன்றவர்களின் பாராட்டுகளை மட்டும் கேட்கும் காதுக்கு இந்த விமர்சனம் அமிலமாக தான் இருக்கும். BTW விகடனுக்கு இவர் மேல் என்ன கோவமோ தற்சமயம் அவரை கிழித்து விமர்சனம் பண்ணுகிறது.

Anonymous said...

All the AV readers, I.V readers - AND the intellectuals of all castes -please note:
CM WANTS THE (G)OLDEN DAYS OF BRAHMIN Vs NON-BRAHMIN to return - to gain political and social ground - so that He and His generation can reap a lot in the generations to come. That is why the AV & JV mags are being used by them. Please realise this and watch the drama - without supporting any side.
:: SIDHARTHZ ::

Rajaraman said...

Thanks IV

Anonymous said...

Possibly Sidarthz could be correct.

Couple of years back, there were rumours that Vikatan was bought over by Karunanithi / Veerasamy family but keeping Sreenivasan as a binami (just like srinivasan of India cements). Remember Vaiko' s statements.

Just to create social unrest, Mk family could be using divide and rule policy by writing from both sides.

Ignore them

Nellai Ravi

Kasu Sobhana said...

//All the AV readers, I.V readers - AND the intellectuals of all castes -please note:
CM WANTS THE (G)OLDEN DAYS OF BRAHMIN Vs NON-BRAHMIN to return - to gain political and social ground - so that He and His generation can reap a lot in the generations to come. That is why the AV & JV mags are being used by them. Please realise this and watch the drama - without supporting any side.
:: SIDHARTHZ :://

I also hold the same view.

Anonymous said...

Our CM Muka is a neo Tamil-Brahmin.
It is not surprising that he hates the old original Brahmins and ridicules them in every possible manner.
As an aside, is it not unconstitutional for a Chief Minister to propagate hatred against a sect of citizens of India by his writings and speeches? Is there any law in India against hate crime as is here, in USA?
Kudiyeri

R.Gopi said...

இப்போதான் கொஞ்ச நாள், சும்மா இருந்தாறேன்னு சந்தோஷப்பட்டேன்....

தையல் பிரிச்சு, பழையபடி, வந்துட்டாரே... அதான்.... வரசகவி... வேலையை ஆரம்பித்து விட்டார்......

இதை எல்லாம் லூசுல விடுங்க பாஸு.....

Anonymous said...

The reaction from MK is just. However, as someone here has said, not enough kaaram.

MK should have reacted strongly - with stronger biting words than just ammaammi.

AV is not a cartoon. It is more than that. Cartoon in decent magaizine can straightaway refer to personalities or politicians and make readers think or focus the areas where they could see things as they are.

In indecent cartoon, they adopt names to indicate indirectly,as in the cartoon.

The style is quite paarppanana style. They are willing to offend, but afraid to strike.

Someone said here, லூசுன்ன விடுப்பா...for the paarppnars writing here.

This should be acturally said by the other party: Just leave AV to its paarppana ways; and, carry on with your government.

Jeyalalitha will give a more stronger reaction to AV if AV dares to portray her calling her mayalalitha instead of Jeyalalitha. AV will have to fork out a lot of money as lawyers fees in Madras High Court.

சில ஜன்மங்க திருந்தாது.

Anonymous said...

விரசம் இல்லாமல் திரு மு.க.வின் அறிக்கை!~??? என் கண்ணை நம்ப முடியவில்லை.


மஞ்சளுக்கு மஞ்சள்:
அய்யோ!! எவ்ளோவ் ஒரு உருப்படியான பதிவு இது!!!! வளர்க உம் பணி.