அருண் வைத்யநாதனை இங்கு பலருக்கும் தெரிந்திருக்கும். தமிழ் இணையம் பரவலாக ஆரம்பித்த சில வருடங்களில் தமிழோவியம் என்றொரு தமிழ் இணைய இதழைத் தன் நண்பருடன் இணைந்து துவக்கினார். பின்னர் தனியாக அவரது ப்ளாகில் எழுதி வந்தார். தனக்குச் சரியென்று தோன்றுவதை அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும், நகைச்சுவை கலந்தும் தன் எழுத்தில் வெளியிடும் பிரபலமான வலைப்பதிவராக இருந்தார்.
அருண் ஐ டி வேலைக்காக அமெரிக்கா வந்த பொழுதிலும் தன் தணியாத தாகமான திரைப்படத் துறையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். நியுயார்க் ஃப்லிம் அகடமியில் படித்தும் சின்ன சின்னக் குறும் படங்களை எடுத்தும் வந்தார். அருண் இயக்கிய குறும் படங்கள் உலக அளவில் பல்வேறு அவார்டுகளை வென்றன. குறும் பட உலகில் ஒரு கவனிக்கத்தகுந்த இயக்குனரானார். இருந்தாலும் முழு நீளப் படம் ஒன்றை அதையும் தமிழில் எடுப்பது ஒன்றே அவர் கனவாக இருந்தது. அந்தக் கனவு பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் இப்பொழுது நனவாகியிருக்கிறது. அவர் எழுதி இயக்கிய அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படம் சென்றவாரம் திரையரங்குகளில் தமிழ் நாட்டிலும் அமெரிக்காவிலும் வெளியிடப் பட்டு அனைத்துப் பத்திரிகை விமர்சனங்களின் பாராட்டுதல்களைப் பெற்று வருகிறது. சீர்காழியைச் சேர்ந்த அருண், தற்பொழுது வசிப்பது நியுஜெர்ஸியில். அங்குதான் இந்தப் படத்தையும் முழுக்க எடுத்திருக்கிறார். விமர்சனம் கீழே...
அச்சமுண்டு அச்சமுண்டு - விமர்சனம் ச.திருமலை
அச்சமுண்டு அச்சமுண்டு பல விதங்களில் தமிழில் ஒரு குறிப்பிடத்தக்க படமாக விளங்குகிறது. முதலில் ரெட் காமிரா என்னும் தொழில் நுட்பத்தில் எடுக்கப் பட்ட படம். ரெட் என்னும் இந்தக் கேமரா டிஜிட்டல் சினிமா கேமரா. நேரடியாக விடியோவை ஹார்ட்-டிஸ்கில் சேமித்து விடலாம். தற்போதைய கேமராக்களைப் போல ஃபிலிம்
போட்டுப் படம் பிடிக்கத் தேவையில்லை. அதுதான் கேம்கார்டரே செய்து விடுமே
என்று கேட்கலாம். கேம்கார்டரின் resolution மிக மிகக் குறைவு. மற்ற டிஜிட்டல் கேமராக்களைப் போலில்லாமல் இதில் CMOS based sensor இருப்பதால் அசாத்தியமான துல்லியம் கிட்டுகிறது. விலை கிட்டத்தட்ட 20000 டாலர். ஆனால் இவ்வளவு வசதிகளை இந்த அளவுக்குக் குறைந்த விலையில் தந்ததால்தான் அது பெரிய வெற்றியடைந்திருக்கிறது, மேலதிக விபரங்களுக்குப் பார்க்க: http://en.wikipedia.org/wiki/Red_camera
அ அ ஒரு த்ரில்லர். ஆனால் சஸ்பென்ஸ் படம் அல்ல. ஒரு த்ரில்லர் என்பதற்காக பார்ப்பவர்களை பயமுறுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வலிந்து சேர்க்கப் பட்ட எந்தக் காட்சிகளும் இதில் கிடையாது. திட்டமிட்டுத் தவிர்த்திருக்கிறார் அருண். அபத்த காமெடி, ஆபாச குத்துப் பாட்டு, ஹீரோ வானத்தில் பறந்து போடும் சண்டைகள், அழுவாச்சி காட்சிகள்,. திகில் காட்சிகள், ரத்தம், வெட்டு, குத்து போன்ற எந்த உபத்திரவங்களும் இல்லாமல் திரைக்கதையை மட்டுமே நம்பி எடுக்கப் பட்ட தெளிந்த நீரோட்டம் போன்ற ஒரு சிம்ப்பிளான சினிமா அ அ. சொல்லப் போனால் எந்தத் திருப்பமோ, திகிலோ, டிராமாவோ இல்லாமல் இது இப்படி என்று எடுக்கப் பட்டிருக்கும் ஒரு சிம்ப்பிளான திரைப்படம். அந்த ஒரு காரணத்தினாலேயே இந்தப் படம் பலருக்கும் பிடிக்காமல் போகலாம். ஏக் தீன் அச்சானக் போன்ற இந்தித் திரைப்படங்களையும், யவனிகா போன்ற மலையாளப் படங்களையும் பார்த்து இது போல இயல்பான திரைப்படங்கள் தமிழில் வருவதில்லையே என்று பெருமூச்சு விடுபவர்களின் குறையை அருண் தனது முதல் தமிழ் முயற்சியிலேயே தீர்த்திருக்கிறார்.
தமிழில் எந்த விதச் சினிமாத்தனங்களும் இல்லாமல் இது போல யதார்த்தமான நேர்த்தியுடன் வந்த படம் பாலு மகேந்திராவின் “வீடு”, உன்னைப் போல் ஒருவன் போன்ற ஒரு சில அபூர்வமான படங்கள் மட்டுமே. அச்சமுண்டு அச்சமுண்டு அமெரிக்க வாழ் தமிழர்களின் பொதுவான வாழ்க்கையை அப்படியே எந்தவித மிகையும் இன்றி சித்தரிக்கிறது. அமெரிக்கா வாழ் ஐ டி தமிழரின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்பதை இந்த சினிமா மிகைப் படுத்தாமல் சொல்கிறது. தூர தேசத்தில் வாழ நேரும் பொழுது ஏற்படும் தனிமை, அதை நம் ஆட்கள் எதிர் கொள்ளும் விதம், மன அமைதிக்காக நாடும் கோவில், நம் சடங்குகளில் நாட்டம், கணவன் மனைவிக்கிடையே கலாச்சார ரீதியாக ஏற்படும் ஊடல்கள், நட்புகள், வார இறுதிக்கள் என்று எங்கள் ஒருவரது வீட்டில் நடக்கும் வாராந்திரக் காட்சிகளை அப்படியே சினிமாவாக மாற்றி பாதி படம் ஓடி விடுகிறது. கார்களில் பழைய பாடல் கேட்டுக் கொண்டு போவது, இந்திய பலசரக்குக் கடைகளுக்குப் போவது, மன நிம்மதி தேடி கோவில்களுக்குச் செல்வது, ஆம்வே ஆசாமிகளுக்குப் பயப்படுவது, கிரிக்கெட் விளையாடுவது, வாரா வாரம் பிறந்த நாள் விழாக்களுக்கு ஆஜராகுவது என்று அமெரிக்கத் தமிழர்களின் வாழ்க்கையை வெகு இயல்பாக படமாக்கியிருக்கிறார்.அமைதியான நதியாக மகிழ்ச்சியுடன் போய்க் கொண்டிருக்கும் ஒரு கணவன், மனைவி, குழந்தை ஆகியோர் கொண்ட சிறிய தமிழ் குடும்பத்தின் வாழ்க்கையில் எதிர்பாராமல் தாக்கும் ஒரு கொடூரமே கதை. கதையில் எதுவும் புதிது இல்லை. இதே போன்ற பல சைக்கோ கதைகள் பல ஹாலிவுட் படங்களிலும், இந்தியப் படங்களிலும் சொல்லப் பட்டிருப்பதுதான், இருந்தாலும் சிறு குழந்தைகளைக் கடத்திச் சென்று தனது செக்ஸ் வக்கிரத்திக்குப் பயன் படுத்தும் வன்முறை இன்னமும் கூட பலரும் அறியாத ஒரு குற்றமாக இருந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவிற்குப் புதிதாக வரும் தமிழர்களுக்கு ஃபிடோபைல்களைப் பற்றிய பொது அறிவு அவ்வளவாக இருப்பதில்லை. மற்றபடி வழக்கமான ஒரு சைக்கோ தாக்குதல் கதைதான்.அந்தக் கதையைச் சொல்லிய விதமும், சினிமாவாக மாற்றிய விதமுமே அருணின் அ அ வை பிற தமிழ் படங்களில் இருந்து முற்றிலும் வேறு படுத்திக் காட்டுகிறது.
தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களாகிய மணிரத்னம், கமலஹாசன் போன்றோர் முதல் இப்பொழுதைய தமிழ் பட உலகின் பிரதான இயக்குனர்களாகிய பாலா, அமீர், ஆகியோர் கூட தொடத் துணியாத யதார்த்தத்தையும், இயல்பான கதையோட்டத்தையும் அருண் தொட்டிருக்கிறார். அந்த வகையில் இது ஒரு மைல் கல் படம். இத்தனையாண்டுகாலம் தமிழ் சினிமாவில் குப்பை கொட்டிய கமலஹாசன் கூட ஒரு சண்டை இல்லாத, வன்முறை இல்லாத, ஒரு காதல் இல்லாத, ஒரு முத்தம் இல்லாத, ஒரு காமெடி இல்லாத, ஒரு அதிரடி இல்லாத சினிமாவை எடுக்கத் துணிந்தவர் இல்லை. மலையாளத்தில் இது போன்ற முயற்சிகள் நிறைய வந்துள்ளன ஆனால் தமிழில் ஒரு பாலு மகேந்திராவின் ஒரே ஒரு முயற்சிக்குப் பிறகு ஒரு அருண் வைத்யநாதன் அத்திப் பூத்தாற் போல வந்திருக்கிறார். அமீர், சசி, பாலா போன்ற இளைய தலைமுறை இயக்குனர்களுக்கும் கூட காதல், குத்து டான்ஸ், ஆபாசக் காமெடிகள் ஆகியவற்றைத் தவிர்க்கத் தெரிந்திருந்தாலும் கூட அந்த இடத்தை கட்டற்ற வன்முறை கொண்டுதான் நிரப்புகிறார்களே அன்றி வன்முறை சார்ந்த குறுகிய வட்டத்தில் இருந்து வெளி வந்து படங்கள் எடுக்கத் துணிவதில்லை. இன்னமும் மதுரை வட்டார அருவாள் வெட்டுக்களில் இருந்து இந்தப் புதிய இயக்குனர்களாலும் கூட வெளியேற முடியவில்லை. ஒன்று சதையை நம்புகிறார்கள் அல்லது உள்ளே இருக்கும் எலும்பையும் ரத்தத்தையும் நம்புகிறார்களே அன்றி, கதையை நம்புவோரும் , உலகத் தரமான படங்களை தமிழில் முயற்சிப்போரும் கூட தமிழ் சினிமா உலகில் இல்லை. பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் மொழி போன்ற ஜனரஞ்சகமான படங்கள்தான் உலகத் தரமான படங்கள் என்ற ஒரு வித மாயையில் தமிழ் ரசிகர்கள் தள்ளப் பட்டிருக்கிறார்கள். படத்தின் பலம் அருணின் திரைக்கதையும், இயக்கமுமேயாகும். ஸ்நேகாவும், பிரசன்னாவும் அப்படி ஒரு இயல்பான நிஜ தம்பதிகள் போலவே எங்கள் அக்கம் பக்கத்தில் வாழும் ஒரு தம்பதியினராகவே மாறி நடித்திருக்கிறார்கள். ஒரு இளம் தமிழ் தம்பதியினர் வாழும் வீட்டில் காமெராவை ஒளித்து வைத்து எடுத்தாற்போல அவ்வளவு இயல்பாக அவர்களது அந்நோன்யம் வெளிப்படுகிறது. அப்படி ஒரு கணவன் மனைவி ஸ்நேகத்தை தன் இயக்கத்தால் சாத்தியப் படுத்தியிருக்கிறார் அருண். வில்லனாக வரும் ஜான் ஷே ஒரு ஹாலிவுட் நடிகர். அவரிடமும் அவரது திறமைகள் அனைத்தையும் வெளிக் கொணர்ந்திருக்கிறார் அருண். ஒரு இந்திய இளம் இயக்குனரிடம் தனக்கு இப்படி ப்ரேக் கிடைக்கும் என்று அவரும் கூட நினைத்திருக்க மாட்டார். சிறு குழந்தைகளைக் கடத்திச் சென்று தன் பாலியல் இச்சைகளுக்குப் ஆட்படுத்தும் சைக்கோவாக வரும் ஜான் ஷே. வில்லன் என்பதற்காக எந்தவிதமான பிரத்யோகமான வில்லத்தனமும் செய்வதில்லை. அவரது நோக்கம் தெரிய வந்த பிறகு அவரது சிரிப்பே தேவையான அச்சத்தையும் திகிலையும் ஏற்படுத்தி விடுகிறது. இறுதிக் காட்சிகளில் நடக்கும் சண்டைகள் கூட சாதாரணமாக எந்தவித அதிரடித் திருப்பமும் வில்லத்தனமும் இல்லாத, சாதாரணமாக வீட்டில் உள்ள சாமான்களை வைத்து தள்ளு முள்ளுக்களாகவே அமைத்திருக்கிறார் இயக்குனர். ஹாலிவுட்டில் வெற்றிகரமான இயக்குனரான மனோஜ் நைட் ஷியாமளன் கூட தன் படத்தில் திகில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே சில காட்சிகளை அமைத்திருப்பார். அது போன்ற எந்தவிதமான சமரசங்களையும் தன் படத்தி நுழைக்காதது இயக்குனருக்குத் தன் திறமையின் மீதிருக்கும் முழு நம்பிக்கையைக் காட்டுகிறது.
இங்கு வாழும் பெரும்பாலான அமெரிக்கத் தமிழர்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பது குறித்த பிரக்ஞை அவ்வளவாக இருப்பதில்லை. தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ குழந்தைகளை பிறரிடம் நெருங்க அனுமதிக்கக் கூடாது, சிறு குழந்தைகளிடம் பாலியல் அத்து மீறல்களைச் செய்பவர்களும், கடத்திக் கொண்டு போய் அனுபவிக்கும் கொடூரர்களும் நிறைந்த உலகம் இது. இந்தியாவும் இந்த கொடுமைகளுக்கு விதி விலக்குக் கிடையாது. அப்படி பரவலாக எல்லோராலும் அறியப் படாமல் இருக்கும் ஒரு வன்முறையை இந்தப் படம் தொட்டுச் செல்கிறது. அதற்காக எந்தவிதப் பிரச்சாரத்திலும் இறங்குவதில்லை. பட ஆரம்பத்திலேயே செக்யூரிட்டி படிக்கும் நியூஸ் பேப்பரின் தலைப்புச் செய்தியாக காணாமல் போன குழந்தைகளைப் பற்றிய நியூஸ் இருப்பது, பாம்பு ஒன்று இரவில் சீறுவது, குழந்தை ரித்திக்கா பர்த் டேவுக்குப் போகும் வீட்டில் காணாமல் போவது அங்கு சின்னாபின்னமாக இருக்கும் பொம்மைகள், கவுண்ட்டி ஃபேரில் கோமாளி குழந்தையிடம் நெருங்குவது, ராபிட்சனின் தவிப்புகள், காணாமல் போகும் சிறுவனின் தாய் தூரத்தில் அழுவது, என்று ஏராளமான இடங்களில் மிக மென்மையாக தனது இயக்குனர் முத்திரையை துருத்திக் கொண்டு தெரியாமல் மிக மிக சப்டிலாகப் பதித்திருக்கிறார் அருண். பிரசன்னா, ஸ்நேகா, குழந்தை அக்ஷயா, ஜான் ஷே ஆகிய அனைவரின் முழுத் திறமையையும் வெளிக் கொணர்ந்திருக்கிறார். பிரசன்னாவின் அலுவலக நண்பராக நடித்திருக்கும் நவீண் நாதன் சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் பிரபலமான நாடக நடிகர். அவரது இயல்பான நடிப்பையும் நன்கு பயன் படுத்திக் கொண்டிருக்கிறார் அருண். பிரசன்னா தன் மெருகேறிய அமைதியான மென்மையான நடிப்பினால் நம்மைக் கவர்கிறார். தமிழில் இவரது திறமைகள் வீணடிக்கப் படாமல் இருந்தால் நடிப்பில் பல உயரங்களை எட்டும் திறமை கொண்டவராகவே நம்பிக்கையளிக்கிறார்.
கார்த்திக் ராஜாவின் இசையில் வரும் காட்சிகளின் பின்னால் மெலிதாக வரும் பாடல்கள் யாவும் சிறப்பாக கேட்டவுடனேயே மேலும் கேட்க்கத் தூண்டும் பாடல்களாக அமைந்துள்ளன. படம் முழுவதும் வரும் பின்னணிக் காட்சிகளில் வரும் இசையும் கூட அதிர வைக்காமல் மிரட்டாமல் சூழலுடன் இணைந்து செல்கின்றன. வில்லன் தன் விரக தாபத்தில் நெளியும் காட்சிகளுக்கு இசைக்கப் பட்டிருக்கும் இசை குறிப்பிடத் தக்கது.
முதல் படம் என்பதினால் சாதாரணமான கதையாக இருந்தாலும் தன் சொந்தக் கதையை நம்பியே இறங்கியிருக்கிறார் அருண், அடுத்த முயற்சிகளில் இருந்து தமிழின் திறமையான எழுத்தாளர்களின் படைப்புக்களைப் பயன் படுத்தி தன் முழுத் திறமையையும் இயக்கத்தில் மட்டுமே செலவிடலாம்.
இந்தப் படம் அருண் வைத்யநாதனிடம் இருக்கும் திறமையை வெளிக் காட்டியுள்ளது. இனி துணிந்து தயாரிப்பாளர்கள் தயக்கமில்லாமல் இவரிடம் நம்பி படங்களை ஒப்படைக்கலாம். எளிதில் திறக்க முடியாத தமிழ்த் திரையுலகின் இரும்புக் கதவுகளைத் திறக்கும் சாவியை, தமிழ் சினிமா உலகில் ஒரு புதிய அலையைப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் பாஸ்போர்ட்டை அருணுக்கு இந்தப் படம் அளித்துள்ளது. விவேக்/வடிவேலு காமெடி இல்லாமலும், முமைத்கான் ஆட்டம் இல்லாமலும், முலைகளின் மேல் முதலீடு செய்யாமலும், லிட்டர், லிட்டராக ரத்தம் கொட்டாமலும், அருவாள்கள் இல்லாமலும், பொறுக்கிகளின் காதல் கதைகளை நம்பாமலும் மிக நேர்த்தியாக மலையாளப் படத்திற்கு இணையாக தமிழிலும் ஒரு சினிமா செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் அருண். அவர் காட்டியுள்ள பாதையில் ஒரு சில படங்களேனும் வருடத்திற்கு எடுக்கப் படும் என்றால் தமிழ் சினிமாவிலும், தமிழர்களின் ரசனையிலும் ஒரு ஆரோக்யமான ஒரு மாற்றம் ஏற்படும். அருண் பாதையில் தமிழ் சினிமா போகப் போகிறதா அல்லது தமிழ் சினிமா பாதையில் அருண் போகப் போகிறாரா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
- ச.திருமலை
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, July 29, 2009
அச்சமுண்டு அச்சமுண்டு - விமர்சனம்
Posted by IdlyVadai at 7/29/2009 11:01:00 AM
Labels: சினிமா, விமர்சனம், விருந்தினர்
Subscribe to:
Post Comments (Atom)
52 Comments:
என்ன ஒரு குசும்பு? எப்படித்தான் இப்படி ஒரு படத்துக்கு இப்படி ஒரு விமரிசனத்தை எழுத துணிவு வருகிறதோ!
அதிலும் இப்பட டைரக்டரை பாலா, அமீர், கமல், நைட்ஷியாமளன் இவர்களின் வரிசையில் வைத்துப்பார்க்க கண்டிப்பாக சிறப்பான மூளை கொண்டவராகவே இருக்க வேண்டும்.
படமாய்யா அது....... போயி வேற வேலைய பாருங்கய்யா....
அருண் வைத்யநாதனுக்கு எனது மனதார வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அருண் வைத்யநாதன் வாழ்க வளமுடன்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Due to price increase of Ulundu Dal,there was no Idly Vadai on 28 July 09
கண்டிப்பாக இயக்குனரை - அருண் வைத்யநாதனுக்கு பாராட்ட வேண்டும்..புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்!
//Anonymous said...
Due to price increase of Ulundu Dal,there was no Idly Vadai on 28 July 09
//
ரிப்பீட்டு
:)))))))))
:)))))))))
//தமிழில் எந்த விதச் சினிமாத்தனங்களும் இல்லாமல் இது போல யதார்த்தமான நேர்த்தியுடன் வந்த படம் பாலு மகேந்திராவின் “வீடு”, உன்னைப் போல் ஒருவன் போன்ற ஒரு சில அபூர்வமான படங்கள் மட்டுமே. //
********
பாலு மகேந்திராவின் “வீடு” ஒகே.... இன்னொரு படம் உன்னை போல் ஒருவன்-நு போட்டு இருக்கே? இது எந்த படம்?
//பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் மொழி போன்ற ஜனரஞ்சகமான படங்கள்தான் உலகத் தரமான படங்கள் என்ற ஒரு வித மாயையில் தமிழ் ரசிகர்கள் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.//
இது ரொம்ப ஓவர்டி செல்லம்......
//அவர் காட்டியுள்ள பாதையில் ஒரு சில படங்களேனும் வருடத்திற்கு எடுக்கப் படும் என்றால் தமிழ் சினிமாவிலும், தமிழர்களின் ரசனையிலும் ஒரு ஆரோக்யமான ஒரு மாற்றம் ஏற்படும். அருண் பாதையில் தமிழ் சினிமா போகப் போகிறதா அல்லது தமிழ் சினிமா பாதையில் அருண் போகப் போகிறாரா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்//
வாழ்த்துக்கள் அருண்......
//zorbathebuddha said...
என்ன ஒரு குசும்பு? எப்படித்தான் இப்படி ஒரு படத்துக்கு இப்படி ஒரு விமரிசனத்தை எழுத துணிவு வருகிறதோ!
அதிலும் இப்பட டைரக்டரை பாலா, அமீர், கமல், நைட்ஷியாமளன் இவர்களின் வரிசையில் வைத்துப்பார்க்க கண்டிப்பாக சிறப்பான மூளை கொண்டவராகவே இருக்க வேண்டும்.
படமாய்யா அது....... போயி வேற வேலைய பாருங்கய்யா....//
**********
அடி ஆத்தி...உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி???? "வில்லு", "ஏகன்", "குருவி"களுக்கு மத்தியில் இது நல்ல படம்தானே?
//இத்தனையாண்டுகாலம் தமிழ் சினிமாவில் குப்பை கொட்டிய கமலஹாசன் கூட ஒரு சண்டை இல்லாத, வன்முறை இல்லாத, ஒரு காதல் இல்லாத, ஒரு முத்தம் இல்லாத, ஒரு காமெடி இல்லாத, ஒரு அதிரடி இல்லாத சினிமாவை எடுக்கத் துணிந்தவர் இல்லை.//
இது எல்லாம் இல்லாதது ஒரு படமா??
/**** R.Gopi said...
அடி ஆத்தி...உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி???? "வில்லு", "ஏகன்", "குருவி"களுக்கு மத்தியில் இது நல்ல படம்தானே?*****/
திரையில் காட்டப்படுவதால் இவை எல்லாம் திரைப்படங்களாக இருக்கலாம், ஆனால் அவைகளை எல்லாம் மற்ற படங்களூடணும் ஒப்பீடாதீர்கள் (படங்களா அதெல்லாம் கருமம்)!!!! மீறி அவைகளுடன் ஒப்பிட்டால் வெறும் திரை கூட நன்றாக தான் இருக்கும்!!! நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை பார்த்து விட்டு சொல்கிறேன்!!!!
ஆனாலும் விமர்சகர் ரொம்ப சொறிஞ்சி விட்டுருக்காரு... ஒரேடியா தலையில தூக்கி வெச்சி பேசுறதில் தவறில்லை, அதற்காக நம்ம ஆட்கள் நன்றாக ஓட வைத்த படங்களை குப்பை என்பதுபோல் பேசுவதால் அவர் தமிழ் சினிமா ரசிகர்களைத்தான் கேவலப்படுத்துகிறார். படம் நல்லா இருந்தா நீங்க 100 தடவை கூட பாருங்க, எங்களுக்கு எந்த படம் புடிச்சிருக்கோ அதைத்தான் நாங்க பாப்போம் அப்படின்னு யாராவது சொல்லுங்கப்பா..
This is not a review.. This is just an opinion from one person, and the person wants to become a critic, he has to learn to do it. Achchamundu Achchamundu could be a good movie, a great movie, or a bad movie, if you are a good critic, talk about the movie, its technical details, the performance of the actors, the direction, photography and music. There is no need to reveal 3/4th of the story, nor is there any need to criticise other masterminds of the tamil industry who have made equally good or better movies and showcased to the world audience winning accolades.
Dear Mr. Gopi
"Unnaippol Oruvan" was a film by Jayakanthan based on his own novel, made in early 60s,directed by K.Vijayan,if my memory serves me right.
Anbudan.
Raju,dubai
Eswari said...
//இத்தனையாண்டுகாலம் தமிழ் சினிமாவில் குப்பை கொட்டிய கமலஹாசன் கூட ஒரு சண்டை இல்லாத, வன்முறை இல்லாத, ஒரு காதல் இல்லாத, ஒரு முத்தம் இல்லாத, ஒரு காமெடி இல்லாத, ஒரு அதிரடி இல்லாத சினிமாவை எடுக்கத் துணிந்தவர் இல்லை.//
இது எல்லாம் இல்லாதது ஒரு படமா??
Yes you are correct, விமர்சகர் ரொம்ப சொறிஞ்சி விட்டுருக்காரு...
Vadaiya pathi oru news - http://thatstamil.oneindia.in/news/2009/07/29/tn-vada-hurled-at-dmk-councillor-at-nellai-corp.html
// படம் நல்லா இருந்தா நீங்க 100 தடவை கூட பாருங்க, எங்களுக்கு எந்த படம் புடிச்சிருக்கோ அதைத்தான் நாங்க பாப்போம் அப்படின்னு யாராவது சொல்லுங்கப்பா.. //
சொல்லிட்டோமில்ல....
No Yellow Comment ?
என்னனமோ சொல்றீங்க.. ஆனா ஒண்ணும் புரியல..
Hasn't kamal touched the same/similar theme in mahanadhi? konjam overthaan paaraattu.
கமலஹாசனின் மஹாநதியில் விபாச்சார விடுதிக்கு பெண்களைக் கடத்துபவர்களைப் பற்றிதான் வருகிறது அது வேறு ஃபிடோஃபைல் என்பது வேறு. சிறு குழந்தைகளைப் பாலியல் இச்சைகளுககுப் பயன் படுத்துபவர்களை அமெரிக்காவில் பயங்கர குற்றவாளிகளாகக் கருதுகிறார்கள். ஒரு சிலர் 9 வயது பெண்ணை வன்முறையாகப் புணர்ந்த ஒருவன் எந்தக்காலத்தில் இருந்தாலும் மனநோய் பிடித்த மிருகமே.
மஹாநதியில் அந்தப் பிரச்சினையை மட்டும் கமலஹாசன் காட்டவில்லை. அத்துடன் கூட அவருடைய ஹீரோத்தனத்தைக் காட்ட ஜெயில் சண்டைகளும், பிற சண்டைகளும் வைத்திருந்து தன் மசாலா புத்தியைக் காண்பித்திருப்பார். அது போன்ற தேவையற்ற மசாலாக்களைத் திணிக்காமல் அருண் வைத்தியநாதன் எடுத்திருப்பதால்தான் கமலஹாசனிடம் இருந்து அருண் வேறு படுகிறார். சொல்லியிருக்கிற விஷயத்தை ஒழுங்கா புரிஞ்சிக்கிட்டுப் பேசுங்க சாமி
/***Anonymous said...
அத்துடன் கூட அவருடைய ஹீரோத்தனத்தைக் காட்ட ஜெயில் சண்டைகளும், பிற சண்டைகளும் வைத்திருந்து தன் மசாலா புத்தியைக் காண்பித்திருப்பார். அது போன்ற தேவையற்ற மசாலாக்களைத் திணிக்காமல் அருண் வைத்தியநாதன் எடுத்திருப்பதால்தான் கமலஹாசனிடம் இருந்து அருண் வேறு படுகிறார். ****/
ஐயா சொன்னா சரி தானுங்க!!!!
விரக்தியில் இருக்கும் ஒரு மனிதனுள் இருக்கும் கோபத்தின் வெளிப்பாடுதான் அந்த சண்டை காட்சி, அவர் ஒண்ணும் 15 அடியாட்களை பறந்து பறந்து அடிக்கவில்லை, ஒருவனை கையில் கிடைப்பதை வைத்து ஆத்திரம் தீரும் வரை அடிப்பார், உண்மையில் அந்த படத்தில் நீங்கள் Involve ஆகி இருந்தால் உங்களுக்கும் அந்த கேரக்டரை அதை விட மோசமாக அடிக்க வேண்டும் என்று தோன்றி இருக்கும், நீங்கள் இது போல சண்டையை நேரில் பார்க்கவில்லை என்று பொய் சொல்லாதீர்கள்!!!!! என்னை பொறுத்தவரையில் மகாநதி கமலுக்கு ஒரு பொன்குஞ்சு தான்!!!!
விரக்தியில் இருக்கும் ஒரு மனிதனுள் இருக்கும் கோபத்தின் வெளிப்பாடுதான் அந்த சண்டை காட்சி, அவர் ஒண்ணும் 15 அடியாட்களை பறந்து பறந்து அடிக்கவில்லை, ஒருவனை கையில் கிடைப்பதை வைத்து ஆத்திரம் தீரும் வரை அடிப்பார்,
அப்படியா அநாநி
மீண்டும் படத்தை ஒரு முறை நன்றாகப் பாருங்கள். உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டவும் கமலஹாசனின் புஜபலத்தைக் காட்டவும் வைக்கப் பட்ட திணிக்கப் பட்ட யதார்த்தமில்லாத சண்டைகள் அவை. சிறையில் மட்டும் அல்ல பின்னர் வில்லன் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் போய் கொல்வார். சற்றும் யதார்த்தமில்லாத மசாலா அது. இங்கு பேசப் படுவது யதார்த்தப் படங்கள் பற்றி. ஒரு கமலஹாசனின் மஹாநதியும், அருணின் அ அ வும் உலக அளவில் ஒரு திரைப்பட விழாவிற்குப் போட்டியிடுமானால் மா நதி திரையிடுவதற்குக் கூட தேர்ந்தெடுக்கப் படாது. அ அ ஏற்கனவே இரண்டு அவார்டுகள் வாங்கியுள்ளது. மேலும் க ஹா படங்களுக்கும் ப்ரொஃபஷனிசத்துக்கும் ரொம்ப தூரம். முழு ஸ்கிரிப்ட்டையும் பக்காவாகத் தாயாரித்து விட்டு மொத்தம் 28 நாட்களில் மொத்தப் படத்தையும் ஹாலிவுட் ஸ்டைலில் முடித்திருக்கிறார் அருண். நேற்று வந்த ஒரு சின்னப் பையன் அருணால் இவ்வளவு தொழில் நேர்த்தியிடனும், திட்டமிடலுடனும், வெகு யதார்த்தமாக ஒரு படம் செய்ய முடிகிறது. அத்தகையத் தொழில் நேர்த்தியுடன் கமலஹாசன் ஒரு படத்தையாவது அணுகியிருப்பாரா?
மஹாநதி, அன்பே சிவம், விருமாண்டி எல்லாம் பாதி உருப்படி பாதி படு குப்பைகள். இப்படி அரையும் குறையுமாக இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் படம் எடுப்பதினால்தான் கமலஹாசன் படங்கள் எந்த விருதுக்கும் அருகில் கூட செல்வதில்லை.
கொஞ்சம் மஹாநதியையும் பார்த்து விட்டு பிரபலமான சிறை படங்களான ஷெஷாங்க்ஸ் ரிடெம்ப்ஷன், எஸ்கேப் ஃபிரம் அல்காட்ராஸ், பாப்பிலான் போன்ற படங்களையும் பாருங்கள் எங்கு கமலஹாசன் இடறுகிறார் என்பது புரியும்.
வேண்டாம் மஹாநதியைப் போலவே கிட்டத்தட்டக் கதையுள்ள லால்ஜோசின் அச்சன் உறங்காத வீட்டையாவது பாருங்கள் அந்தப் படத்தின் அருகில் கூட வர முடியாது மஹா நதி. அதில் நடித்த சலீம்குமார் தேசீய விருதுக்கு அருகில் வரை சென்றார். சும்மா குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாதீர்கள் கொஞ்சமாவது உலகத்திரைப்படங்களை, வேண்டாம் பக்கத்து கேரளாவில் வரும் படங்களையாவது பார்த்து விட்டு அப்புறம் கமலஹாசன் புகழ் பாடுங்கள்.
கமலஹாசனுக்கு முதலில் genre என்றால் என்ன என்பதில் குழப்பம் இருக்கிறது. தான் எடுப்பது டிராமாவா, த்ரில்லரா, ரொமான்ஸா, ஆக்ஷனா, காமெடியா என்பதில் அவருக்கு முதலில் எந்தவிதத் தெளிவும் கிடையாது. அவருக்கு ரெண்டு ஜோடி வேண்டும், அவரது புஜபல பராக்கிரமத்தைக் காண்பிக்க சண்டைகள் வேண்டும், அவரது நடனத் திறமையைக் காண்பிக்க நடனம் வேண்டும், முத்தம் இடும் திறமையைக் காண்பிக்க முத்தம் வேண்டும், ரெண்டு ஜோடி வேண்டும், நாலு டூயட் வேண்டும் இவை எல்லாம் ஒரே படத்தில் இருந்தும் தொலைக்க வேண்டும். அப்புறம் எப்படி இவர் படம் வெளங்கும்? விருதுக்குப் போகும்? சும்மா ஆஸ்கரைக் குறை சொன்னால் போதுமா? நான் கமலஹாசனின் ஹாஸ்யப் படங்களுக்கு எந்தவித லாஜிக்கும் எதிர்பாராமல் ரசிக்கிறேன் அதில் எனக்கு ஏதும் பிரச்சினையில்லை. அதில் மட்டுமே அவர் படங்கள் நன்றாக இருக்கின்றன. முதலில் அவர் கமலஹாசன் என்ற இமேஜை உதறி விட்டு கதைப்படியான காரெக்டராக மாற வேண்டும். சொல்வது புரிகிறதா? வனப்பிரஸ்தத்தில் ஒரு மோகன்லாலைப் போல, களியாட்டத்தில் வரும் ஒரு சுரேஷ் கோபியைப் போல,கொஞ்சம் அவை போன்ற உருப்படியான படங்களையெல்லாம் பார்த்து விட்டு அப்புறமாக கமலஹாசன் புகழ் பாட வாருங்கள். கமலஹாசன் மிகத் திறமைசாலி தன் ஈகோவையெல்லாம் உதறி விட்டு தன்னை ஒரு திறமையான இயக்குனரிடம் ஒப்படைத்து விட்டால் நிச்சயம் அவருக்கும் அவார்ட் கிடைக்கும். அதற்கு மனம் வேண்டும், உங்களைப் போன்ற ஜால்ராக்கள் அவரை உசுப்பி விடுவதை நிறுத்த வேண்டும்
/***மீண்டும் படத்தை ஒரு முறை நன்றாகப் பாருங்கள். உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டவும் கமலஹாசனின் புஜபலத்தைக் காட்டவும் வைக்கப் பட்ட திணிக்கப் பட்ட யதார்த்தமில்லாத சண்டைகள் அவை. சிறையில் மட்டும் அல்ல பின்னர் வில்லன் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் போய் கொல்வார். சற்றும் யதார்த்தமில்லாத மசாலா அது.***/
உங்க வீட்டு பெண்ணை அனுப்ப கூடாத இடத்திற்கு அனுப்பிய நல்லவரை நீங்கள் கோவில் கட்டிகுல தெய்வமாக கும்பிடுவீர்களா???? அருமை அருமை!!!!!
"There is no truth. There is only perception"
/"There is no truth. There is only perception//
அனானி சொல்வது உண்மைதான்.. அவரே சொல்லிவிட்டார்.. அவர் சொன்னதில "There is no truth. There is only perception" இதற்கப்புறம் பேசி என்ன பயன்.. நன்றி அனானி அவர் அவர்களுக்கு அவர் அவர் பர்சப்ஷன்.
Well established actors and directors a taste illathavan sollrathanala unga taste romba perusu nenacha we are sorry gentle man.... emotion nna evlo vila nu kekkra groupnu nenaikran neengal ellam.... America vulum thaniya thavikra family katha nna supportukku varichi kattitu vanthadratha....
//உங்க வீட்டு பெண்ணை அனுப்ப கூடாத இடத்திற்கு அனுப்பிய நல்லவரை நீங்கள் கோவில் கட்டிகுல தெய்வமாக கும்பிடுவீர்களா???? அருமை அருமை!!!!!
"There is no truth. There is only perception"//
நான் ஒரு கமல் ரசிகன். ஆனால் இங்கு விமர்சனம் செய்யப்பட்டிருப்பது ஒரு யதார்த்தமான படம். கண்டிப்பாக மகாநதி யதார்த்தமான படம் அல்ல. அது ஒரு நல்ல கமர்ஷியல் படம் அவ்வளவுதான்.
தைய தக்க நு குதிச்சு ஒன்னும் பிரயோசனம் இல்லை. இன்னொரு அனானி சொல்வது போல் விருதுக்கு தகுதியான படங்களை கமல் எடுப்பது இல்லை. அவர் எடுப்பது நல்ல படங்கள் அவ்வளவுதான். அச்சமுண்டு நல்ல படமே. அதை வேறு கமர்ஷியல் படங்களுடன் ஒப்பிடாதீர்கள் ப்ளீஸ்.
நம்முடைய இணைய பக்கத்திற்கு அல்லது பதிவிற்கு அதிக ஹிட்ஸ் கொண்டு வருவதில் திரட்டிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. உங்கள் பதிவுகளை அல்லது இனைய பக்கத்தை அனைத்து தமிழ் திரட்டிகளிலும் வெளியிட ஒரு பட்டன் மட்டுமே போதும்.
தமிழ் பக்கங்களை Reedit.com, Digg.com என்று submit செயும்போது கிடைக்கும் ஹிட்ஸ்கலை விட தமிழ் திரட்டிகளில் submit செயும்போது அதிக ஹிட்ஸ் கிடைக்கும். அதுவே இந்தியா சார்ந்த ஆங்கில தளங்கள் என்றால் Hotkilix, Humsuffer போன்ற இந்திய ஆங்கில திரட்டிகளில் இருந்து அதிக ஹிட்ஸ் கிடைக்கும் .
தற்போது FindIndia.net என்ற இணையத்தளம் இந்த சேவையை வழங்குகிறது . இந்த பட்டனை முற்றிலும் இலவசமாக இந்திய மொழி தளங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம் . இதை நாம் நம் பிளாக்கர் ப்ளாகிலோ அல்லது நமது இணையத்தளத்தில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் ( எனது ப்ளாகின் Sidbarல் காண்க). இதன் மூலம் அதிக பார்வையாளர்களை நம் தளத்திற்கு வர செய்யலாம்.
தற்போது BETA பதிப்பில் உள்ள இத்தளம் தற்போது தமிழ் , இந்திய ஆங்கில Social Bookmarking தளங்களுக்கு பதிவுகளை submit செய்வதற்கான பட்டங்களை
வழங்குகிறது. இது தமிளிஷ், தமிழ்மணம், தமிழர்ஸ் என்று பல பட்டன்கள் நம் தளத்தில் add செய்வதற்கு பதில் ஒரு Buttonலையே எல்லா திரட்டிகளிலும் பதிவுகளை submit செய்ய எளியதாக இருக்கும் .
Add-தமிழ் பட்டன் பெறுவதற்கான இணையதள முகவரி : இங்கு கிளிக் செய்யவும்
//Well established actors and directors a taste illathavan sollrathanala unga taste romba perusu nenacha we are sorry gentle man.... emotion nna evlo vila nu kekkra groupnu nenaikran neengal ellam.... America vulum thaniya thavikra family katha nna supportukku varichi kattitu vanthadratha....//
ஐயோ ஐயோ. பேரரசு கூட well established. ஏ.வெங்கடேஷ் கூட well established. பி.வாசு வும் well established. அவங்க என்ன ரொம்ப நல்ல டேஸ்ட் படம் எடுக்குறாங்களா ? போங்கப்பா. நல்ல படத்துக்கும், நல்ல மசாலா படத்துக்கும் கூட வித்தியாசம் தெரியாம இருக்காங்க நம்ம மக்கள். அவங்கள சொல்லி தப்பு இல்ல. நம்மள நல்ல படம் பாக்க விடாம வளர்த்துவிட்டார்கள்.
//இன்னொரு அனானி சொல்வது போல் விருதுக்கு தகுதியான படங்களை கமல் எடுப்பது இல்லை. அவர் எடுப்பது நல்ல படங்கள் அவ்வளவுதான். ///
oscar award டை பெறனும்னு குட்டையா, நெட்டையா, மொட்டையா, தட்டையா எல்லாம் நடிச்சி பாத்தாரு... ஆனா என்னாச்சு ....ஆஸ்கார் தமிழன் என்கிற title வேற யாருக்கோ கிடைச்சாச்சு !!
இதை அவர் கிட்டயும் அவர் 'fans' கிட்டயும் சொல்லுங்கப்பு ;-)
kudos to arun !
உடனடியாக பதில் தெரியவேண்டிய "இரண்டு" கேள்விகள் (துணைக் கேள்விகள்)!
(1) இட்லிவடை இந்தப் படத்தைப் பார்த்தாரா, இல்லையா? ஏன் இன்னும் பயாஸ்கோப்பு பலராமன் இந்தப் படத்திற்கு மார்க் போடவில்லை?
(2) ஏற்கனவே அறிவித்து இருந்த போட்டி முடிவுகள் என்ன ஆயிற்று? நல்ல கேள்விகள் வரவில்லையா? இல்லை பரிசு குடுக்க மனசு வரவில்லையா?
என்னை மாதிரி முட்டாளுக்கும் புரிவது மாதிரி தெளிவாகப் பதில் சொல்லவும்.
வாழ்த்துகள் .., அருன் ரொம்ப சந்தோசம்..
/****oscar award டை பெறனும்னு குட்டையா, நெட்டையா, மொட்டையா, தட்டையா எல்லாம் நடிச்சி பாத்தாரு... ஆனா என்னாச்சு ....ஆஸ்கார் தமிழன் என்கிற title வேற யாருக்கோ கிடைச்சாச்சு !!
இதை அவர் கிட்டயும் அவர் 'fans' கிட்டயும் சொல்லுங்கப்பு ;-)
kudos to arun !
*****/
Hi Mr.Raj,
The person who got OSCAR award did he get it for tamil movie????if yes i appreciate your comment, otherwise keep the doors locked!!
/**** Cable Sankar said...
/"There is no truth. There is only perception//
அனானி சொல்வது உண்மைதான்.. அவரே சொல்லிவிட்டார்.. அவர் சொன்னதில "There is no truth. There is only perception" இதற்கப்புறம் பேசி என்ன பயன்.. நன்றி அனானி அவர் அவர்களுக்கு அவர் அவர் பர்சப்ஷன்.****/
The same is applicable to all comments posted here.....
/****கமலஹாசன் மிகத் திறமைசாலி தன் ஈகோவையெல்லாம் உதறி விட்டு தன்னை ஒரு திறமையான இயக்குனரிடம் ஒப்படைத்து விட்டால் நிச்சயம் அவருக்கும் அவார்ட் கிடைக்கும். அதற்கு மனம் வேண்டும், உங்களைப் போன்ற ஜால்ராக்கள் அவரை உசுப்பி விடுவதை நிறுத்த வேண்டும்***/
neengalum arunukku jaalraa adippathaaka thondrukirathu.....
//Hi Mr.Raj,
The person who got OSCAR award did he get it for tamil movie????if yes i appreciate your comment, otherwise keep the doors locked!!//
First of all Oscar is for english movies only. Even if Tamil film wins Oscar, it can be for best other language movie category. First know that one.
ARR went from Tamil to English. If really Kamal deserves he could have gone from Tamil to English cine field by now. Even he is now not in the movie "16 steps" because there was importance for Asin's role. What happened to "Marmayogi" ? Why was the production stopped ? Ivar paruppu anga ellaam vegaathu.
Kamal is never ever going to leave Tamil cine field and win Oscar unless until he respects others.
Though I am a fan of Kamal, truth has to be accepted.
/****First of all Oscar is for english movies only. Even if Tamil film wins Oscar, it can be for best other language movie category. First know that one.****/
அது கூட வெள்ளைக்காரன் படமா தான் இருக்கணும், அவன் சொன்ன மாதிரி தான் கேட்கணும் (அவனுக்கு சொம்பு தூக்கணும், அந்த வேலை ரஹ்மானுக்கு கை வந்த கலை (He deserves for it!, if you ask any singers or instrumentalists like Hari, SPB, Drums siva they say rahman will give all the freedom to singers and instrumantal people (it means that he accepts the suggestions are given by the singers and the instrumentalist then no meaning to say him as a composer, it is not his work)இதற்கு பெயர் தான் சொம்பு தூக்குவது, நீங்கள் செய்யும் வேலையில் அடுத்தவர் மூக்கை நுழைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா??? ஒத்து கொள்கிறேன் கமல் மூக்கை நுழைப்பார் ஆனால் நுழைக்க அனுமதிக்க மாட்டார், ஒரு காலத்தில் Mozart, Bach போன்றோர்களின் இசையும் இன்றைய கமல் படங்கள் போல கீழ்தரமாக விமர்சீக்கப்பட்டது, ஆனால் இன்று No body will comment about Mozart's albums!!!!!
அது கூட வெள்ளைக்காரன் படமா தான் இருக்கணும், அவன் சொன்ன மாதிரி தான் கேட்கணும் (அவனுக்கு சொம்பு தூக்கணும், அந்த வேலை ரஹ்மானுக்கு கை வந்த கலை (He deserves for it!, if you ask any singers or instrumentalists like Hari, SPB, Drums siva they say rahman will give all the freedom to singers and instrumantal people (it means that he accepts the suggestions are given by the singers and the instrumentalist then no meaning to say him as a composer, it is not his work)இதற்கு பெயர் தான் சொம்பு தூக்குவது, நீங்கள் செய்யும் வேலையில் அடுத்தவர் மூக்கை நுழைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா??? ஒத்து கொள்கிறேன் கமல் மூக்கை நுழைப்பார் ஆனால் நுழைக்க அனுமதிக்க மாட்டார், ஒரு காலத்தில் Mozart, Bach போன்றோர்களின் இசையும் இன்றைய கமல் படங்கள் போல கீழ்தரமாக விமர்சீக்கப்பட்டது, ஆனால் இன்று No body will comment about Mozart's albums!!!!!
//அவனுக்கு சொம்பு தூக்கணும், அந்த வேலை ரஹ்மானுக்கு கை வந்த கலை//
கம்ப்யூட்டர் இருந்தா யாரு வேணா என்ன வேணா டைப் பண்ணலாம். உண்மை உலகத்துக்கு தெரியும். அடுத்தவர் சொல்லும் நல்லதை கேட்பவன் தான் உயர்வான். ரகுமான் எடுத்துகாட்டு. இல்லாதவன் குண்டு சட்டியில் குதிரை ஓட்டலாம். கமல் எடுத்துக்காட்டு.
//ஒத்து கொள்கிறேன் கமல் மூக்கை நுழைப்பார் ஆனால் நுழைக்க அனுமதிக்க மாட்டார்,//
இது என்ன ஞாயம். கண்டிப்பா இது உருப்படுவதற்கு வழியே இல்லை.
//Mozart, Bach போன்றோர்களின் இசையும் இன்றைய கமல் படங்கள் போல கீழ்தரமாக விமர்சீக்கப்பட்டது, ஆனால் இன்று No body will comment about Mozart's albums//
மொசார்ட் காது கேளாதவர். அவர் பிறவி ஞானி. கமல் பிறவி ஞானி அல்ல. அவர் மேல் பாசம் இருந்தால் நீங்கள் அப்படி நினைத்து கொள்ளுங்கள். கமல் படம் கீழ்த்தரம் என்று இங்கு யாரும் சொல்லவில்லையே. சொன்னால் அது முட்டாள்தனம். அவருக்கு திறமை நிறைய உள்ளது. அவருடைய தேவையற்ற குணநலன் அவரை உலக அளவு போக விடாது. கோவம் வந்து ஒரு பிரயோசனமும் இல்லை.
எல்லாமே உணரப்பட்டு விட்டது. 1992 இல் படவுலகுக்கு வந்த ரகுமான் உயர்ந்தது அவருடைய குணநலனால்தான். 1960 இல் படவுலகுக்கு வந்த கமல் இன்னும் அதே படவுலகில் உள்ளதும் அவர் குணத்தால் தான்.
/*****எல்லாமே உணரப்பட்டு விட்டது. 1992 இல் படவுலகுக்கு வந்த ரகுமான் உயர்ந்தது அவருடைய குணநலனால்தான்.*****/
அதற்கு சொம்பு தூக்குவது என்று பெயர், பிறர் கூறும் நல்லவைகளை ஏற்றுக் கொள்ளட்டும், கூடவே அவர் பெயரையும் போட சொல்லுங்கள் பார்ப்போம்!!! காரி துப்புவார்கள் மக்கள். மன் பானையாக இருந்தாலும் நாம் செய்ததாக இருக்க வேண்டும், அடுத்தவர் செய்து கொடுத்த வெள்ளி பானையை காட்டி பெருமை படுவது பெருமை அல்ல கேவலம்.நம்ம ஊர்க்காரன் விற்றால் அது மன் பனை, அதையே வெள்ளைக்காரன் விற்றால் அது பொன் பானை!!!!! என்னே கேவலம்!!!
/****கம்ப்யூட்டர் இருந்தா யாரு வேணா என்ன வேணா டைப் பண்ணலாம். உண்மை உலகத்துக்கு தெரியும். அடுத்தவர் சொல்லும் நல்லதை கேட்பவன் தான் உயர்வான். ரகுமான் எடுத்துகாட்டு. இல்லாதவன் குண்டு சட்டியில் குதிரை ஓட்டலாம்.***/
அவார்ட் வாங்கிய படத்தில் அவர் செய்த சாதனை என்ன?????? வெள்ளைக்காறனுக்கு சொம்பு தூக்கியதை தவிர வேறு ஒன்றும் இல்லை, அவர் தமிழில் இசையமைத்த படங்களுடன் ஒப்பிட்டால் விருது படத்தின் இசை குப்பை என்பதையும் உலகு அறியும்!!!!இதுதான் குண்டு சட்டிக்கு வெளியே குதிரை ஓட்டுவது!!! அருமை!!!!!!
/***கம்ப்யூட்டர் இருந்தா யாரு வேணா என்ன வேணா டைப் பண்ணலாம்***/
இது உங்களுக்கும் பொருந்தும்!!!
//கூடவே அவர் பெயரையும் போட சொல்லுங்கள் பார்ப்போம்!!! காரி துப்புவார்கள் மக்கள்.//
எனக்கு தெரிஞ்சு அவர் இசை அமைத்த படங்களுக்கு அவர் பெயர் தான் போட்டிருக்காங்க. உங்களை தவிர யாரும் காறி துப்பியதாக தெரியவில்லை.
//நம்ம ஊர்க்காரன் விற்றால் அது மன் பனை, அதையே வெள்ளைக்காரன் விற்றால் அது பொன் பானை!!!!! என்னே கேவலம்!!!//
கமல் வாங்கினா அவார்டு, ரகுமான் வாங்கினா சொம்பு தூக்குறதா ? என்னே அறிவு.
//அவர் தமிழில் இசையமைத்த படங்களுடன் ஒப்பிட்டால் விருது படத்தின் இசை குப்பை என்பதையும் உலகு அறியும்!!!!இதுதான் குண்டு சட்டிக்கு வெளியே குதிரை ஓட்டுவது!!! அருமை!!!!!!//
தமிழ் படங்களில் உள்ள இசையை விட ஸ்லம்டாக் நல்ல இசை இல்லைதான். ஆனால் அவரின் தமிழ் மற்றும் இந்தி திரைப்பட பாடல்களை கேட்டு தான் அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இவ்வளவு தூரம் ரகுமான் லோ கிளாஸ் (அனானி கருத்து. என்னுடையது இல்லை. ரகுமான் ரசிகர்கள் பாயாதீர்கள்) இசை அமைத்து அவருக்கு விருது வருகிறது. ஹாலிவூட்காரன் ரசனை அவ்வளவு மோசம். அவ்வளவு மோசமான ஹாலிவூட் இல் நுழைய கூட முடியவில்லை உலக நாயகனால். குண்டு சட்டிக்கு வெளியே குதிரை ஓட்டுவது தான் புத்திசாலித்தனம். இது போட்டி நிறைந்த உலகு.
இவ்வளவு கஷ்டப்பட்டு அனானி கதறுகிறார். அவரையும் உலக நாயகன் மதிப்பார் ? கண்டிப்பாக மாட்டார். ஐயோ ஐயோ.
எல்லா புகழும் இறைவனுக்கு. மனுஷனையும் இறைவனையும் மதிக்காதவனுக்கு ஏற்றம் இல்லை. இறைவனை மதிக்காட்டி கூட பரவாயில்லை. சக மனிதனை மதிக்காதவன் உயரவே முடியாது. குறைந்த பட்சம் அடுத்தவன் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும்.
/****இவ்வளவு கஷ்டப்பட்டு அனானி கதறுகிறார். அவரையும் உலக நாயகன் மதிப்பார் ? கண்டிப்பாக மாட்டார். ஐயோ ஐயோ.
எல்லா புகழும் இறைவனுக்கு. மனுஷனையும் இறைவனையும் மதிக்காதவனுக்கு ஏற்றம் இல்லை. இறைவனை மதிக்காட்டி கூட பரவாயில்லை. சக மனிதனை மதிக்காதவன் உயரவே முடியாது. குறைந்த பட்சம் அடுத்தவன் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும்.****
உங்க முயாலுக்கு நாலு கால், நான் புடிச்ச முயலுக்கு மூணு காலாகவே இருக்கட்டும்.....
/****மொசார்ட் காது கேளாதவர். அவர் பிறவி ஞானி.****/
Super Comedy!!!!! Please make sure before you tell. Beethovan was deaf.
/*****//பிறர் கூறும் நல்லவைகளை ஏற்றுக் கொள்ளட்டும், கூடவே அவர் பெயரையும் போட சொல்லுங்கள் பார்ப்போம்!!! காரி துப்புவார்கள் மக்கள்.****//
எனக்கு தெரிஞ்சு அவர் இசை அமைத்த படங்களுக்கு அவர் பெயர் தான் போட்டிருக்காங்க. உங்களை தவிர யாரும் காறி துப்பியதாக தெரியவில்லை.
*****/
Hi Annonies,
காறி துப்பினார்களா இல்லையா என்பது பற்றி எனக்கு தெரியாது, ஆனால் எனக்கு தெரிந்து கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு (திருடா திருடா ) பாடலின் ரிதம் டிரம்ஸ் சிவமணியால் கம்போஸ் செய்யப்பட்டது ஆனால் படத்தில் அவர் பெயர் வரவில்லை, ரஹ்மான் பெயர் மட்டுமே வந்தது, பாடல் ஹிட், பெருமை யாருக்கு??????
//உங்க முயாலுக்கு நாலு கால், நான் புடிச்ச முயலுக்கு மூணு காலாகவே இருக்கட்டும்.....//
அப்பிடி ஒத்துக்கொண்டு போங்க. நான் என் பேசுறேன்.
//Super Comedy!!!!! Please make sure before you tell. Beethovan was deaf//
தவறுக்கு மன்னிக்கவும் ராகுல்.
//கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு (திருடா திருடா ) பாடலின் ரிதம் டிரம்ஸ் சிவமணியால் கம்போஸ் செய்யப்பட்டது ஆனால் படத்தில் அவர் பெயர் வரவில்லை, ரஹ்மான் பெயர் மட்டுமே வந்தது, பாடல் ஹிட், பெருமை யாருக்கு//
ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா!!!!! முடியல. தன்னுடைய பக்கம் விவாதம் இல்லை என்றால் புரளி கிளப்புவது வாடிக்கையே. இங்கே இருப்பவர் எல்லோரும் ரசிகர்கள் இல்லை. வெறியர்கள். கஷ்டம்டா சாமி.
/****//கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு (திருடா திருடா ) பாடலின் ரிதம் டிரம்ஸ் சிவமணியால் கம்போஸ் செய்யப்பட்டது ஆனால் படத்தில் அவர் பெயர் வரவில்லை, ரஹ்மான் பெயர் மட்டுமே வந்தது, பாடல் ஹிட், பெருமை யாருக்கு//
ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா!!!!! முடியல. தன்னுடைய பக்கம் விவாதம் இல்லை என்றால் புரளி கிளப்புவது வாடிக்கையே. இங்கே இருப்பவர் எல்லோரும் ரசிகர்கள் இல்லை. வெறியர்கள். கஷ்டம்டா சாமி.
****/
நீங்கள் சொன்னால் அது 100% உண்மை அடுத்தவர் சொன்னால் அது புரளி!!! என்ன நியாயம்?? நல்ல பழக்கம்.... உங்களுக்கு confirm பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்லை அணானி, நான் கேள்விப்பட்டதை சொன்னேன் அவ்வளவு தான், நான் யாருடைய வெறியரும் அல்ல!!!!
நான் புரளியே கிளப்பவில்லை. கமல் திறமையற்றவர் என்றும் கூறவில்லை. அவர் திமிர் பிடித்தவர் என்று கூறினால், அவர் அப்படியல்ல என்று கூறவேண்டும். அதை விட்டு விட்டு யாரோ ஒருவர் ஆஸ்கார் தமிழன் ரகுமான் என்று கூறினால், வேலியில போகிற ஓணானை வேட்டிக்குள் விடுவது போல் ரகுமான் சொம்பு தூக்கினார், சிவமணியை காப்பி அடித்தார் என்றெல்லாம் கூறக்கூடாது.
என்னதான் நீங்கள் கூறினாலும் அவர் தன்னை நிரூபித்துவிட்டார்.
தன் திறமையை நிரூபித்தவர்களின் திறமையை குறை கூறக்கூடாது.
அவ்வகையில் நான் ஞாயமாக தான் மறுமொழி அளித்துள்ளேன். என் மறுமொழி எதிலும் கமலின் திறமையை குறை கூறவில்லை. அவரின் தனிப்பட்ட குணம், அவரின் திறமையை உலகுக்கு தெரியாமல் மறைக்கிறது. அவர் மாறும் வரை அது மறைந்தே தான் இருக்கும்.
ஓரிரு நாட்கள் முன்னால் என் பதிவில் எழுதியிருந்தேன்"தமிழ் சினிமா இழிவின் முகம்" என்ற தலைப்பில் என் வருத்தத்தை.படத்தை நேற்று பார்த்தேன். அச்சமுண்டு பார்த்தபின் கொஞ்சம் நம்பிக்கை பிறக்கிறது. தமிழ் சினிமா இது போல் பலமுறை என்னை ஏமாற்றி இருப்பதும் ஞாபகம் வருகிறது. ஹிட்ச்காக் சொன்னதை நினைவுறுத்த விரும்புகிறேன். படத்தில் "முதல் காட்சியில் வெடிகுண்டைக் காட்டினால் இறுதிக் காட்சிக்குள் அது வெடிக்க வேண்டும்". சில காட்சிகள்(ஷாட்ஸ்)தேவையில்லை போல் தெரிந்தன. பாம்புக்காட்சியும் அதில் ஒன்று. படம் தமிழுக்கு புது கனத்தைச் சேர்க்கிறது.இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.ரொம்ம்ம்ப் நாள் கழித்து நான் ரசித்த தமிழ்ப்படம். நன்றி.
/***Raj said...
oscar award டை பெறனும்னு குட்டையா, நெட்டையா, மொட்டையா, தட்டையா எல்லாம் நடிச்சி பாத்தாரு... ஆனா என்னாச்சு ....ஆஸ்கார் தமிழன் என்கிற title வேற யாருக்கோ கிடைச்சாச்சு !!
இதை அவர் கிட்டயும் அவர் 'fans' கிட்டயும் சொல்லுங்கப்பு ;-)******/
வேலியில போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டவர் இவர் தான்....நான் அல்ல...
அதனால் தான் வெள்ளைக்காரன் அவார்டு கொடுத்தால் அது சிறந்ததாகி விடாது என்று கூறினேன், வெள்ளைக்காரன் நம்மை ஆண்ட போது கொடுத்த சர் பட்டம் போல தான் இன்றைய ஆஸ்கர்....Slumdog millionare என்ற படத்திற்கு ஆஸ்கர் கொடுப்பார்கள் ஆனால் தேவர் மகன், ஹே ராம் படங்களுக்கு கொடுக்க மாட்டார்கள்...நீங்கள் ஆயிரம் சொல்லுங்கள் தேவர் மகன், ஹே ராம், மகா நதி Slumdog millionare ஐ விட ஆயிரம் மடங்கு சிறந்தது தான்....
நல்லாத்தான் சண்டை போடுறீங்க, ஆனா அதை ஏன் உங்க பேர்லயே வந்து போடக்கூடாது, ரெண்டு பேருமே அனானியா வந்து ஏன் இப்படி???? என்னமோ போங்க சார்...
//வேலியில போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டவர் இவர் தான்....நான் அல்ல...
அதனால் தான் வெள்ளைக்காரன் அவார்டு கொடுத்தால் அது சிறந்ததாகி விடாது என்று கூறினேன், வெள்ளைக்காரன் நம்மை ஆண்ட போது கொடுத்த சர் பட்டம் போல தான் இன்றைய ஆஸ்கர்....Slumdog millionare என்ற படத்திற்கு ஆஸ்கர் கொடுப்பார்கள் ஆனால் தேவர் மகன், ஹே ராம் படங்களுக்கு கொடுக்க மாட்டார்கள்...நீங்கள் ஆயிரம் சொல்லுங்கள் தேவர் மகன், ஹே ராம், மகா நதி Slumdog millionare ஐ விட ஆயிரம் மடங்கு சிறந்தது தான்....//
வெண்பூ அவர்கள் கூறியதால் நான் என் பெயரில் வருகிறேன். கமல் ரசிகர்களாகிய நீங்கள் தான் குருதிபுனல் ஆஸ்கர் போகுது, ஹேராம் ஆஸ்கர் போகுது அந்த படம் போகுது இந்த படம் போகுதுன்னு கிளப்பி விட்டீங்க. கமலும் கைபுள்ளை ஆகிட்டாரு. இன்னுமா அவர் உங்கள மாதிரி ரசிகர்களை நம்புகிறார் ? (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)
கிடைக்கவில்லை என்றதும் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று நரி கூறிய கதையாய் ஆஸ்கரையும் ஆஸ்கர் வாங்கியவரையும் இழிவுபடுத்துகிறீர்கள்.
உங்களுக்கு கமலை ஒருவர் கிண்டல் பேசினால் கிண்டலடித்தவரை தான் நீங்கள் தாக்க வேண்டும். அதை விட்டு ரகுமானை பற்றி தரக்குறைவாக பேசக்கூடாது.
ஒரு கமல் ரசிகனாக நானும் பிற விருது வாங்கிய திரைப்படங்களை பார்ப்பதற்கு முன் கமலுக்கு விருது வரவில்லை என்று வருத்தப்பட்டது உண்டு. அது இன்னமும் உள்ளது. ஆனால் மசாலா படத்திற்கு விருது வராது.
மற்றவர்கள் எடுப்பது மொக்கை மசாலா படம். கமல் எடுப்பது நல்ல மசாலா படம். என்ன செய்ய ?
/**வெண்பூ அவர்கள் கூறியதால் நான் என் பெயரில் வருகிறேன்.**/
This is Bala.
உண்மையில் ஆஸ்கர் ஒரு புளிக்கும் பழம் தான்.....
இன்னும் நம்ம ஊரில் audio synthesisers புழக்கம் இல்லை, உங்களுக்கு ஆர்வம் இருந்தால் Fruty loops எனும் audio synthesiserai install செய்து கொஞ்சம் கம்போஸ் பண்ண முயற்சி செய்தால் ரகுமானின் லீலைகள் புரியும் (அவரின் சில பாடல்கள் என்னை ரொம்ப கவர்ந்தவை ஆனால் ஆஸ்கல் விருது பாட பாடல்கள் என்னைகவரவே இல்லை.... )உறுதியாக சொல்கிறேன் இன்னும் 5 வருடங்களுக்குள் பெரும்பான்மையான மக்கள் இதை உணர்வார்கள், இன்று அனைவரும் நான் சொன்னதை படித்து சிரிப்பீர்கள், எனக்கு கவலை இல்லை, Slumdog millionare படத்திற்காக கொடுக்கப்பட்ட விருதுகள் வியாபார நோக்கத்தீற்காக மட்டுமே!!!(நீங்கள் சிரிப்பது என் காதில் கேட்கிறது!!!), இந்தியாவில் அப்பப்டம் ஈட்டிய வருமாணத்தை மட்டும் வைத்து சொல்லாதீர்கள், இந்திய படத்திற்கு ஆஸ்கர் என்ற ஹைப் உலக அளவில் பெரிய வருமணத்தை ஈடியாது என்பது தான் உண்மை. 1650 ல் வெள்ளையனக்கு நாம் நம்மை அறியாமலே எப்படி அடிமைகள் ஆனோமோ ( ஆகப்பட்டோமோ) அது போல தான் இதுவும்...
/****ஆஸ்கரையும் ஆஸ்கர் வாங்கியவரையும் இழிவுபடுத்துகிறீர்கள்.***/
Slumdog millionar படத்திற்காக விருது வாங்கியதால் அது கேவலம் தான்,
1. இந்தியாவை எவ்வளவு கீழ் தரமாக காட்ட முடியுமோ அவ்வளவு. (இது உண்மை தான் என்றால் ஒரு இந்தியன் மேலை நாடுகளில் இருக்கும் இதே மாதிரியான நிலையை படமாக எடுக்க விடுவார்களா? எடுத்தால் தான் release ஆகுமா?)
2. இந்தியர்களுக்கு விருது கொடுத்தது மேற்கூறியாவற்றை மறைக்கும் ஒரு திரை சீலை.
நான் வேறு எதொடு ஒப்பிட்தாலும் விடுவேன், இந்த படத்தோடு ஒப்பிட்டால் நான் இப்படி தான் எழுதுவேன்...
உண்மையிலே ஆஸ்கர் சிறந்த படங்களுக்கும், கலைஞர்களுக்கும் கொடுக்கப்பாடும் விருது என்றால்,
Life is beautiful, Pianist போன்ற படங்கள் ஏன் குறைந்த விருதுகளே பெற்றன??? விருதுகள் என்பது வெறும் politics , இந்தியாவில் ஆளும் காட்சிக்கு சோப்பு போட்டால் பத்ம விபூசன் கூட சுலபமாக கிடைக்கும்......வெள்ளைக்காரனுக்கு போட்டால் வேறு என்ன வேண்டுமானாலும் கிடைக்கும்... ஒவ்வாத கருத்துகொண்டவர்களுடன் மெனக்கெட்டு ஒத்து போவது தான் சொம்பு தூக்குவது.
/****உங்களுக்கு கமலை ஒருவர் கிண்டல் பேசினால் கிண்டலடித்தவரை தான் நீங்கள் தாக்க வேண்டும்*****/
தவறான உதாரங்களுடன் ஒப்பிடும் போது தவறான உதாரங்களை தான் திருத்த வேண்டும்....
http://free-loops.com/download-fruity-loops-8.php
தோரணை, வில்லு படங்களுக்கு அ அ ஒரு நல்ல படமே...இயல்பான திரைக்கதை...நடிப்பு...ஒளிப்பதிவு...இசை எல்லாம் பிரமாதம்...இயக்குநரைப் புகழ கமல்ஹாசனையும்...பாலாவையும் ஆமீரையும்...மட்டம் தட்டுவது அதிகம்..ஆரம்பக் காட்சியில் ப்ரசன்னாவின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் இன்னொரு அமெரிக்கனை மடக்க செய்யும் காட்சிகள் உங்களுக்கு ஆபாசமாகப் படவில்லையா...வில்லனைப் பெரிய சைக்கோவாகக் காட்ட அவர் செய்யும் உடற்பயிற்சியில் இரத்தம் தெறிப்பது...வன்முறை ஆகாதா..சிந்தியுங்கள் தலைவா...
ranna
I have seen this movie recently...for all the hype this is a very stupid movie.
I still do not understand what Director want to convey in this movie. Better luck next time Arun
Post a Comment