பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, July 26, 2009

ஏ.ஆர்.ரகுமானுக்கு ராதாரவி கண்டனம்

ஏ.ஆர்.ரகுமான் தமிழ் படத்துக்கு இசை அமைத்து தான், இசையமைப்பாளராக அறிமுகமானார். அவருடைய முதல் படம் `ஸ்லம் டாக் மில்லினர்' அல்ல. கவிதலாயா நிறுவனம் தான் அவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தது. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் படஉலகை மறந்துவிட்டார்.

அவர் ஆஸ்கார் விருது பெற்றதற்காக தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்த தேதி கேட்டோம். ஆனால் அவர் எங்களுக்கு தேதி தராமல், வேறு ஒரு மாநிலத்தில் பாராட்டு விழா நடத்த சம்மதித்து இருக்கிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழ கலைஞர்களுக்கு மற்ற மாநிலத்தில் தான் மதிப்பு ஜாஸ்தி. உத: டி.கே.பட்டம்மாள்

22 Comments:

வலைஞன் said...

//தமிழ கலைஞர்களுக்கு மற்ற மாநிலத்தில் தான் மதிப்பு ஜாஸ்தி. : டி.கே.பட்டம்மாள்//

இப்போ தெரிகிறது, மு.க ஏன் இரங்கற்செய்தி கொடுக்கவில்லை என்று!

கிருஷ்ண மூர்த்தி S said...

"தூ"ன்னு துப்பமுடியாது பல்லிடுக்கில மாட்டிக்கிட்டது து..பருப்புங்கிரத்தையும் சேர்த்துப் படிச்சாத் தான் சரியா வருமோ?

பாராட்டு விழா நடத்துற சாக்கில, இவங்க மூஞ்சியையும் வெளிச்சம் போட்டுக் காமிக்க முடியலேன்னா ஆத்திரம் வரத் தானே செய்யும்?

Krish said...

இதெல்லாம் பேசி தீத்துக்கங்க! இதுக்கு ஒரு கண்டனமா?

பா. ரெங்கதுரை said...

ராதாரவியை அதிமுகவில் எவரும் கண்டுகொள்வதில்லை. ரஹ்மானுக்குப் பாராட்டு விழா நடத்துகிறோம் என்ற போர்வையில் கருணாநிதியை வரவழைத்து அவர் காலை வருடி திமுகவில் சேரலாம் என்ற எண்ணத்தில்தான் இந்தப் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்கிறார்கள் என்பது ரஹ்மானுக்குத் தெரியாதா என்ன?

ராதாரவிக்கு தைரியமிருந்தால் தமிழ்ப் படங்களில் இசையமைக்க ரஹ்மானுக்கு யாரும் வாய்ப்புத் தரக்கூடாது என்று தீர்மானம் போடட்டும் பார்க்கலாம்.

Erode Nagaraj... said...

இதெல்லாம் ஒரு காரணமா? ஆஸ்கர் வாங்கின ஒரு கலைஞனை இத்தனை நாள் ஏன் கௌரவிக்கவில்லை.. Direct to Stage from Airport... என்று கூட கொண்டாடியிருக்கலாமே? இப்படியே போய், மெட்ராஸ் தயாரிப்பாளருக்கு தேதி இல்லைன்னு சொல்லீட்டு, திருநெல்வேலி டைரக்டருக்கு தேதி குடுத்தார்னு போராட்டம் பண்ணுவீங்களா?

யதிராஜ சம்பத் குமார் said...

தமிழ் தமிழன் என்று கதறிவிட்டு சிவகங்கை ராமநாதபுரம் மாவட்ட கரிசல் பூமியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்களுக்கு வாய்ப்பு தராமல் சிங்கள நடிகையைத் தேடிப் போன இயக்குனரை யாராவது கண்டித்தார்களா??

Anonymous said...

Wasnt there a felicitation done by the music directors association where MSV, Ilayaraja, M Balamuralikrishna etc honoured ARR ?.

-Ram

Harish said...

தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற போதிலும், எல்லாம் வர்த்தகம் என்றாகிவிட்ட இன்னாளில் பணமும் புகழும் எங்கு அதிகம் கிடைக்கிறதோ அதை நோக்கி ஒடுதல் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகி விடுகிறது. அதை தவிர்ப்பவன் சமூகத்தால் மேலும் மதிக்கப்படுகிறான். ஆனால் சமூக மதிப்பா, பணமா என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுடையது. ராதாரவிக்கு எந்த அளவு பணம் குறைவாய் கிடைக்கும் நல்ல பாத்திரத்தையும், பணம் நிறைய கிடைக்கும் சாதாரண பாத்திரத்தையும் தீர்மானிக்கும் உரிமை உள்ளதோ அந்த அள்வு ரக்மானுக்கும் தீர்மானிக்கும் உரிமை உண்டு.

Hari (http://harish-sai.blogspot.com)

Baski said...

/***Erode Nagaraj... said...
இதெல்லாம் ஒரு காரணமா? ஆஸ்கர் வாங்கின ஒரு கலைஞனை இத்தனை நாள் ஏன் கௌரவிக்கவில்லை.. Direct to Stage from Airport... என்று கூட கொண்டாடியிருக்கலாமே?***/


இது தவறு, அவர் ஆஸ்கர் வாங்கிய அன்றே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இதை முடிவு செய்தது என்பது அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் வந்த செய்தி, அதனால் இது கண்டனத்திற்கு உரியதுதான்!!!! சும்மா எல்லா பதிவிலும் போடும் பின்னூட்டத்தை இதற்கும் போடாதீர்கள். அவர் தமிழ் சினிமாவிற்கு கொஞ்சம் (நிறையவே என்று கூட வைத்து கொள்ளலாம்) வஞ்சகம் செய்கிறார் என்பதே சுடும் நிஜம். இசை பற்றிய நுணுக்கம் தெரிந்த நீங்களே இப்படி பேசுவது கொஞ்சம் மனத்திற்கு வருத்தம் அளிப்பதாக இருக்கிறது....

R.Gopi said...

//பா. ரெங்கதுரை said...
ராதாரவியை அதிமுகவில் எவரும் கண்டுகொள்வதில்லை. ரஹ்மானுக்குப் பாராட்டு விழா நடத்துகிறோம் என்ற போர்வையில் கருணாநிதியை வரவழைத்து அவர் காலை வருடி திமுகவில் சேரலாம் என்ற எண்ணத்தில்தான் இந்தப் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்கிறார்கள் என்பது ரஹ்மானுக்குத் தெரியாதா என்ன? //

Rightly said Mr.Pa.Rangadurai....

ஃபித்னா.காம் said...
This comment has been removed by a blog administrator.
Baski said...

/****புலியாக மாற மறுத்த சிறு பிள்ளையைக் கதறக் கதற கொலை செய்த கொடூரன் பிரபாகரன் குறித்து அந்தப் பிள்ளையின் தாய் அளித்த பரபரப்பு வாக்குமூலம் ***/

இந்த பதிவை இங்கு நீக்கி இருக்கலாம்!!!!

Anonymous said...

காசே தான் கடவுளப்பா, இந்த அல்லா ரெக்கா ரெஹ்மானுக்கும் தெரியுமபப்பா!!!

Anonymous said...

முதல்வர் கருணாநிதி வாழ்த்து
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிறுபான்மை சமுதயாத்தைச் சேர்ந்த இந்தச் செல்வம் இன்று ....
தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும், அதற்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற நானும்,....
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

//இத வச்சி நம்ம அரசியல் வாதிங்க ஓட்டு வேட்டை நடத்துவாங்க பாருங்க! தி.மு.க அரசின் சாதனை இதுன்னு சொன்னாலும் ஆச்சரிய பட முடியாது!//

//இதுவே "எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறியது" ஒரு இந்துவாக இருந்திருநதால் - "தம்பி நீ மூட நம்பிக்கைகளை துறந்து உழைப்பை நம்பினால் பலப்பல விருதுகள் தேடி வரும் உன்னை" என்று அறிக்கை விட்டிருப்பார்//

Note: AR afraid of cunning politicians, that may the reason for his hesitation.

Karthik said...

/***Note: AR afraid of cunning politicians, that may the reason for his hesitation.
***/

அண்ணே அணானி,
உங்க கண்டுபிடிப்பு ரொம்ப அருமை!!!! ரெஹ்மாணிடம் ஒரு அட்வைசர் பணியிடம் காலியாக உள்ளதாம், நீங்கள் தயங்காமல் விண்ணப்பிக்கலாம்!!

Prabhu Swaminathan said...

/// யாழ் திலீபன் said...

புலியாக மாற மறுத்த சிறு பிள்ளையைக் கதறக் கதற கொலை செய்த கொடூரன் பிரபாகரன் குறித்து அந்தப் பிள்ளையின் தாய் அளித்த பரபரப்பு வாக்குமூலம் http://sweetlanka.blogspot.com/

How was this comment allowed here?

Hello!! said...

I don't belive that commant please remove that blog information for this place

Anonymous said...

/// யாழ் திலீபன் said...

புலியாக மாற மறுத்த சிறு பிள்ளையைக் கதறக் கதற கொலை செய்த கொடூரன் பிரபாகரன் குறித்து அந்தப் பிள்ளையின் தாய் அளித்த பரபரப்பு வாக்குமூலம் http://sweetlanka.blogspot.com/***/

Please remove this comment!!!

sudar said...

no comments

Anonymous said...

முட்டாள் தனமான (கேவலமான) மஞ்சள் கமெண்ட், /****தமிழ கலைஞர்களுக்கு மற்ற மாநிலத்தில் தான் மதிப்பு ஜாஸ்தி. உத: டி.கே.பட்டம்மாள்
***/

நம்ம ஊரில் முதலில் மதிக்கப்பட்டால் தான் பிறகு வேறு ஊரில் வாலாட்ட முடியும், விதை முலைப்பதும், செடியாவதும், மரமாகுவதும் இங்கு தான் பிறகு தான் மற்றவை எல்லாம். இதற்கு மாறான உதாரணம் உங்களால் தர முடியுமா????? அதனால் கண்டிக்க பட வேண்டியது தான்!!!

Anonymous said...

/***இது தவறு, அவர் ஆஸ்கர் வாங்கிய அன்றே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இதை முடிவு செய்தது என்பது அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் வந்த செய்தி, அதனால் இது கண்டனத்திற்கு உரியதுதான்!!!! ****This is also true!!!!

Anonymous said...

வைரமுத்து பேசுகையில், அண்ணன் மு.க. அழகிரி மதுரைக்கு மட்டுமல்ல, மக்களுக்கே காவலன் என்று பாராட்டினார்.

தொடர்ந்து பேசுகையில், தன்னுடைய சின்னச் சின்ன ஆசைகள் பாடல்தான் ஏஆர் ரஹ்மானை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றதாகக் குறிப்பிட்டார்.

http://thatstamil.oneindia.in/movies/news/2009/08/05-azhagiri-praises-vairamuthu.html

சென்னையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடந்த பட்டமளிப்பு விழாவில் நான் கலந்து கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் கவிஞர் வைரமுத்துவின் திரை இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

ஒரு தம்பி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டாலும் இன்னொரு தம்பி வைரமுத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் பழைய பாடல்களை விரும்பி கேட்பவன். புகழ் பெற்ற பழைய கவிஞர்கள் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம், ஜி.ராமநாதன், கண்ணதாசன் போன்ற வர்களின் பாடல்களை ரசித்து கேட்பேன்.

இவர்களின் மொத்த உருவமாக வைரமுத்து இருக்கிறார். தமிழ்திரை உலகத்திற்கு கவிஞர் வைரமுத்துவின் சேவை தொடர்ந்து தேவை, என்று பாராட்டினார்.