அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அதிமுக, பா.ம.க, மதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளது. தேர்தல் புறக்கணிப்புக்கு 'அடுத்த திருமங்கலம்' என்று கூறி, எதற்கு நாங்கள் போட்டி போடணும் என்று இவர்கள் சொல்லும் காரணம்.
ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி இப்படி செய்யலாமா என்று சில பத்திரிக்கைகள் கேள்வி எழுப்புயுள்ளது. சட்டமன்ற கூட்டத் தொடர் முழுவதும் கொட நாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் எதிர்கட்சி தலைவியிடம் பொறுப்பை எப்படி எதிர்ப்பார்க்க முடியும் ? பொது மக்களுக்கு பொறுப்பு பற்றிய கவலையைவிட பருப்பு பற்றிய கவலை தான் தற்போது அதிகம்.
இந்த தேர்தல் புறக்கணிப்பே காங்கிரஸை திமுக கூட்டணியிலிருந்து பிரிக்க அம்மாவின் மூவ் என்கிறார்கள் சிலர். எப்படி என்று யாரும் விளக்கம் அளிக்கவில்லை. திமுக தலைவர் தான் சாப்பிடும் உணவில் கூட காங்கிரஸ் கூட்டணி உணவாக சாப்பிடுகிறார். அப்படி இருக்க அம்மாவால் எப்படி கூட்டணியை உடைக்க முடியும் ?
ஆனால் ஒன்று நிச்சயம் - தேமுதிக இந்த தேர்தலில் இரண்டாம் இடத்துக்கு வந்துவிடும். யார் ஜெயித்தால் நமக்கு என்ன யார் தோற்றால் நமக்கு என்ன ? இந்த ஐந்து தொகுதி மக்களுக்கும் பணத்தைத் தராமல் போனால் வாக்காளர்கள் ஏமாற்றமடைவார்களே என்பதுதான் இட்லிவடையின் ஆதங்கம்.
கடைசி செய்தி: இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டி என்கிறார் இல.கணேசன். அட்லீஸ்ட் தமிழ் இந்து மும்தாஜை நம்பி இருக்கிறது ஆனால் இவர் யாரை நம்பி இருக்கிறார் ? ஆண்டவா !
பிகு: மானஸ்தன் லீவில் இருக்கிறார். முதல் பின்னூட்ட இடம் காலியாக இருக்கிறது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, July 24, 2009
இடைத்தேர்தல் புறக்கணிப்பு யாருக்கு லாபம் ?
Posted by IdlyVadai at 7/24/2009 01:08:00 PM
Labels: செய்திவிமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
19 Comments:
hiiiiiiiii
me the first
நானும் மானஸ்தன் தான்!!!!!
அதிமுக போட்டியிடவில்லை என்றால், இட்லி வடை நீங்கள் போட்டியிடலாமே!
பாஜக விட அதிக ஓட்டு உங்களுக்கு விழும்.
இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என்ன சொல்லுகிறது???? மன்சூர் அலிகான் எந்த கூட்டணியில் உள்ளார்??? இதெல்லாம் தான் முக்கியம், சும்மா அம்மா ஒதுங்கூராங்க, அய்யா ஒதுங்கராங்க னு எதுக்கு வெறும் பேட்சு?
இந்த வீடியோவை பார்க்கவும்
www.youtube.com/watch?v=dy4AzEp6YuY
(otherwise type in google TR The Terror - Comedy 2008)
அதிர்ச்சியாக உள்ளது... மக்களுக்கு பெரும் ஏமாற்றம்... அப்ப இலவச பிரியாணி, ப்ரிட்ஜ் இல்லையா?
இதையும் பாருங்கள்
http://video.google.com/videoplay?docid=6731812594831851861&hl=en
இ,வ
ரொம்ப வசதியா போச்சு... காசு செலவு பண்ணாம இந்த முறை 5 தொகுதிகள்.
முக விற்கு இருக்கும் ஆஸ்திகள் கோபாலபுரம் வீடும், 14 ஏக்கர் நிலம் தானம்..
அறிவிப்பு வந்திருக்கிறது. இது எப்படி இருக்கு.
காமேஷ்
//பிகு: மானஸ்தன் லீவில் இருக்கிறார். முதல் பின்னூட்ட இடம் காலியாக இருக்கிறது.//
லீவ்ல தானே இருக்காரு..,
புறக்கணிப்பு எதுவும் செய்யலையே..!?
எங்கள் வோட்டு
49(O) விற்கே!!!
இதை தேர்தலில் நிற்காத
கட்சிகள் - இப்பொழுது தொடங்கி
சொல்லத் துவங்குவது நல்லது.
இது ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு என தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ள கட்சிகள் கூறுகின்றன. ஏற்கனவே ஜனநாயக ரீதியில் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக இதே பாணியில் புறக்கணித்தது. ஆனால் நடந்தது வேறு.
தேர்தலை அரசியல் கட்சிகள் புறக்கணிப்பதை விட மக்கள் புறக்கணிப்பது ஒருவகையில் நல்ல எச்சரிக்கையாக அமையும். ஓட்டு போட்டுதான் என்ன பயன்?? சிவகங்கையில் நடந்த எண்ணி ஜனநாயகம் எள்ளி நகையாடுகிறது.
தேர்தலை மக்கள் புறக்கணிப்பதை ஜனநாயகக் கடமையிலிருந்து தவறுகிறீர்களே என்று தட்டிக் கேட்கும் அரசியல் கட்சிகள், தாங்களே தேர்தலைப் புறக்கணிப்பது ஏற்கத்தக்கதன்று. அல்லது, கூட்டணிக் கட்சியின் வெட்பாலைரையாவது முழு மனதாக ஆதரித்து, எல்லா இடத்திலும் பணிகளில் ஈடுபடவேண்டும்.
இம்முஅய் பணம் விளையாடினால், அறிவியல்பூர்வமாக அதை நிரூபிப்பது எப்படியென்று சிந்தித்து அதை, தடுக்கு விதமாய் செயல்படவேண்டும்.
இது ஜெயலலிதாவின் அரசியல் தந்திரமாக கூட இருக்கும். தேமுதிக எவ்வாறு தாக்குப்பிடிக்க முடிகிறது என்பதை பார்பதற்காகவும், அவர்களின் உண்மையான ஓட்டு வங்கியை கணிப்பதற்காகவும் இப்படி செய்திருக்கலாம். மேலும் இதை நினைத்து வெட்கப்படவேண்டியது தேர்தல் ஆணையமும், ஆளும்கட்சியும்தானே தவிர அதிமுக அல்ல. ஜெயலலிதா போட்டியிடாமலே திமுகவிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டார்.
பி.கு:
தமிழ் இந்து மும்தாஜை நம்பி அல்ல என்னற்ற படைப்பாளர்களையும் , வாசகர்களையும் நம்பி உள்ளது.
தலைவர் கார்த்திக் என்ன சொல்கிறார்?
தேர்தலை புறக்கணிக்க கூடாது. தேர்தல் நடக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள எல்ல ஓட்டு சாவடியையும் கேமராவின் மூலம் கண்காணிக்கலாம்.
தேர்தல் ஆணையம் நினைத்தால் கள்ள ஓட்டை தடுக்க முடியும்
என்னது........ மானஸ்தன் இந்த தேர்தல புறக்கணிச்சுட்டாரா???
ரொம்ப லேட்டா சொல்றீங்களே இட்லிவடை!!!
லாபம் விஜயகாந்துக்குதான் ஃ
போட்டோல "தல" இன்னா பண்றாருப்பா? "மொய் விருந்தா"??
IV - please post this image as a new post. an Ad in Indian Express (Delhi)
http://churumuri.files.wordpress.com/2009/07/evm-ad.jpg?w=520&h=864
http://churumuri.wordpress.com/2009/07/31/the-whore-who-couldnt-dance-wails-on-the-floor/
மஞ்சள் கமெண்ட் கொஞ்சம் (ரொம்பவே) ஓவர். :-x
:-D
Post a Comment