பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, July 19, 2009

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

கர்நாடக இசை உலகில் மாமேதை என்று சொல்லலாம் டி.கே.பட்டம்மாளை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தடையை மீறி மேடைகளில் பாரதியா‌ரின் பாடல்களை பாடியவர். இந்தியா சுதந்திரமடைந்தபோது (அதாவது ஆகஸ்டு 14-ந் தேதி இரவு) அகில இந்திய வானொலியில் பாரதியா‌ரின் ஆடுவோமே பள்ளு பாடுவோமே பாடலை பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இது நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரம் அவர் வானொலியில் தேச பக்தி பாடல்களை பாடினார்.

ஒரு முறை திருநெல்வேலியில் டி.கே.பட்டம்மாள் இசைக்கச்சேரி நடத்தியபோது பாரதியார் பாடல்களை உணர்ச்சி பூர்வமாக பாடிக்கொண்டு இருந்தார். அதை முதல் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த பாரதியாரின் மனைவி செல்லம்மாள், கச்சேரி முடிந்ததும் டி.கே.பட்டம்மாளை கட்டிப்பிடித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது.

இந்திய படை வீரர்களுக்காக 1999ல் சென்னையில் 18 மணிநேர கச்சேரி செய்து நிதி திரட்டினார்.

காஞ்சிபுரத்தில் 1919ல் பிறந்த டி.கே.பட்டம்மா‌ள், தனது பத்தாவது வயதிலேயே வானொலியில் பாடினார். மத்திய அரசு 1971-ம் ஆண்டு இவருக்கு `பத்ம பூஷண்' விருதையும், 1998-ம் `பத்ம விபூஷண்' விருதையும் வழங்கி கவுரவித்தது.

அவரது மறைவுச் செய்தி வெளியானதும் கலைஞர்கள் பல திரளாகச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். எதிர்கட்சி‌க் தலைவர் ஜெயலலிதா இரங்கல் செய்தி வெளியிட்டார்.

பாரதியின் பாடல்களை பரப்பியதில் கணிசமான பங்கு வகித்தவர், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தடையை மீறி மேடைகளில் பாடியவர், 'பத்ம பூஷண்','பத்ம விபூஷண்' போன்ற விருதுகளை வாங்கியவரை, தமிழக அரசு மற்றும் மற்ற அரசியல் தலைவர்கள் யாரும் கண்டுக்கொண்டதாக இதுவரை செய்தி இல்லை. அவரது மறைவுக்கு அரசு சார்பில் எவ்வித இரங்கல் செய்தியும் வெளியிடப்படவில்லை. அரசு சார்பில் அமைச்சர்களோ, அதிகா‌ரிகளோ அஞ்சலி செலுத்தியதாகவும் செய்தியில்லை.

பிரபல சரோட் இசைக் கலைஞரான உஸ்தாத் அலி அக்பர் கான், அமெரிக்காவில் போன மாதம் காலமானார். பிரதமர் உடனே இரங்கல் செய்தி வெளியிட்டார். டி.கே.பட்டம்மாள் பற்றி யாரும் அவருக்கு சொல்லவில்லை போலும். வாழ்க!

சென்னை கிரீன்வேஸ் சாலை டிஜிஎஸ் தினகரன் சாலை என்று பெயர் மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவை படுக்கையிலிருந்தே கருணாநிதி கையெழுத்திட்டார் போன்றவை சில பழைய செய்திகள்.

இரங்கல் கவிதை தேவையில்லை, முதலமைச்சர் என்ற முறையில் இல்லை என்றாலும் கலைஞர் என்ற முறையில், இரண்டு வரி இரங்கல் செய்தி தெரிவிக்கலாம்( பிரமணராக இருந்தால் கூட )

19 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

டி.ஜி.எஸ் தினகரன் அளவிற்கு டி.கே.பட்டம்மாள் பெரிய மனிதரில்லை என அரசும் ஆளுங்கட்சியினரும் நினைத்திருக்கலாம்!! இந்த ஒப்பீடே மிகவும் அபத்தம், இருப்பினும் ஒரு ஆதங்கம்!!

Anonymous said...

டி.கே.பட்டம்மாள் oru Bhramanar, Avaruku Anjali Seluthinal Bharmanar Yaar Oru Vote Kuda Povaithilai.

DGS Dhinakaran Oru Sirubanmai Vagaupai Sernthavar,Avaruku Anjalai Seluthinal Vote Vizhum.Ithai Thane Solla Varinga Idly Vadai ?

Anonymous said...

"விரச கவி" கருணாநிதியை இனியும் கலைஞர் என்று எழுதி உண்மையான நல்ல கலைஞர்களை அவமானப்படுத்தாதீர்.

Anonymous said...

மறைந்த திருமதி பட்டம்மாளின் பெயரில் "DK" உள்ளது என்று முதலமைச்சரின் அல்லக்கைகள் யாராவது அவரிடம் எடுத்துச் சொன்னால் அந்த இரண்டு எழுத்துகளுக்காக இரண்டு வரிக் கவிதை நிச்சயம்.

Anonymous said...

//( பிரமணராக இருந்தால் கூட )//
நீங்கள் பிராமணர் காலை ஒடித்து விட்டீர்.
கலைஞர், வசை பாடாமல் இருந்தால் போதாதா?
2 வரிகளில் 'பா....' இடிப்பு சாத்தியமா?

varagi said...

MK knows he is not going to gain anything by giving condolence message for DKP. Avaruku MANADA MAYILADA than sir "kalai" mathadhu yellam "kollai"

Anonymous said...

//2 வரிகளில் 'பா....' இடிப்பு சாத்தியமா?//

இரண்டு வார்த்தைகளிலேயே - முடியுமே!
இதோ:
"பார்ப்பனப் பாடகி"

Unknown said...

அவலம் ஐயா,

இரங்கல் தெரிவிப்பதில் கூடவா ஜாதி ... கடவுள் தான் காப்பற்ற வேண்டும்.

காமேஷ்

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

முதலமைச்சரோ அல்லது பிரதமரோ இரங்கல் தெரிவிப்பது அவரது தனி விருப்பம்..

அவர் பதவியில் இருப்பதால் இரங்கல் தெரிவிப்பது செய்தியாகிறது

ஆகவே யாராவது வருத்தம் தெரிவிக்காமல் இருப்பதற்கெல்லாம் காரணம் கற்பித்துக் கொள்ளாமல் இருப்பது நலம்

கலைக்கோவன் said...

பட்டம்மாளின் நினைவு பதிவு ,
பாடல்களுடன்
http://radiospathy.blogspot.com/2009/07/blog-post_18.html

ஹரன்பிரசன்னா said...

பட்டம்மாள் ஒரு பிராமணர். ஏன் இறங்கல் தெரிவிக்கவேண்டும். மன்மோகன் சிங்குக்கு தமிழ்ப் பாடகிகளைத் தெரிந்திருக்கமுடியாது. அதிலும் சமிஸ்கிருதப் பாடல் பாடும் ஒரு பிராமணப் பாடகியை பாராட்டித் தொலைந்தால் பின் வரும் விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது? உஸ்தாத் அலி அக்பர் கான் இந்தியர். அவருக்கு எப்படி வாழ்த்துச் சொல்லாமல் இருக்கமுடியும்?

Baski, Chennai said...

MK can change Chennai's name as "Dinakaran Pattinam".

Dinakaran is a man of miracle...(?). He can make blind to see., can make a deaf and dump to hear and talk... what else you need...(?)

btw.. PK is a great singer and patriot... dont compare her with some low profile people...

don't expect anything reasonable from MK or from any politician...? They are busy playing their cheap politics.

थमिज़ ओजिका---वाज्का हिन्दी said...

இந்திய தேசதந்தை அகிம்சைவாதி காந்திய கொன்ற கோட்சே/ஆர்.எஸ்.எஸ் சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்தவருக்கு அஞ்சலி செலுத்தினால் தீவிரவாத செயல் ஆகாதா?
ஒரு மாநிலத்தின் முதல்வர் இதை செய்யலாமா?

இப்படிக்கு
அகிம்சை

Prabhu Swaminathan said...

These politicians have time to go and wish Mr. Esra Sargunam but dont even have a minute to talk about this great lady.

It is not these politicians mistake, it is ours because irrespective of how they humiliate us, we bring them to power.

Instead of pitying her we should really pity ourselves.

sreeja said...

டி.கே.பட்டம்மாளுக்கு சில பேர் கவிதை பாடித்தான் புகழடய வேண்டுமென்பதில்லை. அவருடய புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

Anonymous said...

Sivanesachelvan Writes,
(1) She Was 6 Years Old. Shri Sankaracharya Swamigal Ordered This Girl To Sing On VIJAYADHASAMI Day . She Was Gifted With A CoConut Placed On The Poorna Khumbham
(2)She Was 12 Years Old. When She Was Studying , She Portrayed As " SAVITHIRI" In Sathyavan Savithri Drama. By Her Acting She Drew Tears From The Eyes Of Spectators. The Entrance Charges For This Drama Was 25Paise And A Sum Of Rs 900 Was Collected !!
(3) It Was 26th May 1940 When She Got Married At Tiruchanoor And This Was Attended by Kalki, Kamraj, Annadhurai, Rajaji, Bhathavathsalam. On Seeing her Wearing A Diamond Necklace, Rajaji (In A Lighter Vein) Remarked, "When You Are Having Priceless Music In Your Possession , Is It Necessary That You Were This Also ? " From That Day Onwards She Desisted From This(Wearing)
(4) That Girl -- Is None Other Than The Present 88 Years Old D.K. Pattammal -- Talking ,Singing, Eating The Great Musician.
(5) My Reverential Homage To Her. May Her Soul Rest In Peace.
Taken From Pages 141 & 142 Of Anandha Vikatan Dt.12-12-2007
Sivanesachelvan India 20th Jul'09 12.45A.M.

(3) It Was 26th May 1940 When She Got Married At Tiruchanoor And This Was Attended by Kalki, Kamraj, Annadhurai, Rajaji, Bhathavathsalam. On Seeing her Wearing A Diamond Necklace, Rajaji (In A Lighter Vein) Remarked, "When You Are Having Priceless Music In Your Possession , Is It Necessary That You Wear This Also ? " From That Day Onwards She Desisted From This(Wearing)
(4) That Girl -- Is None Other Than The Present 88 Years Old D.K. Pattammal -- Talking ,Singing, Eating The Great Musician.
(5) My Reverential Homage To Her. May Her Soul Rest In Peace.
Taken From Pages 141 & 142 Of (Thanks To ) Anandha Vikatan Dt.12-12-2007
Sivanesachelvan India 20th Jul'09 12.45A.M.

Anonymous said...

'Avar' orutharukku kavithai ezhuthaama irukurathe periya mariyaathai thaan.

sila samayam ippadi manasatchi padi nadappar...:) Avara paaratunga..!

-Ashok