பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 07, 2009

சினிமா வளர்ந்த கதை - சாண்டில்யன் - புத்தக விமர்சனம்

சனிக்கிழமை மத்தியான வெயிலுக்கு நியூ புக் லேண்ட்ஸ் சென்றிருந்தேன். அங்கு தான் ஓசியில் மோர் கொடுப்பார்கள். மோர் மட்டும் குடித்துவிட்டு வந்தால் நல்லா இருக்காது அதனால் குடித்த மோருக்கு சின்ன புத்தகம் ஒன்றை சும்மா புரட்டி பார்த்தேன்.

சாண்டில்யனின் - சினிமா வளர்ந்த கதை, 96 பக்கம்.
விஜயா பப்ளிகேஷன்ஸ் ( விஜயா - வாஹினியின் சார்பு நிறுவனம் )
விலை ரூ80/=

முத்தா.V.சீனிவாசன் முன்னுரை இப்படி எழுதியிருந்தார்.

"திரு சாண்டில்யன் அவர்கள் எழுதிய சினிமா வளர்ந்த கதை நூலுக்கு முகவுரை எழுதித் தருமாறு என்னிடம் கேட்டார்கள். திரு சாண்டல்யன் அவர்களின் விசிறி நான். அவரது நூல்கள் பெரும் பாலானவைகளை நான் படித்துள்ளேன். சில நூல்களை நான் இரண்டு முறை கூட படித்துண்டு. அவ்வளவு உயர்ந்த நடை - கதை நகர்த்திச் செல்லும் பாணி அற்புதம்.

ஆனால் -

இந்த நூலில் அவர் சொல்கிற கருத்துக்கள், எனக்கு கொஞ்சமும் ஏற்புடையது அல்ல. நூலின் தொடக்கம் முதல் இறுதிவரை தமிழ் சினிமாவை முழுவதுமாக அவர் தூற்றியிருப்பதை, அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பிழைத்த என்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?


....

என்று எழுதியதை படித்தவுடன், புத்தகத்தை வாங்கிவிட்டேன்.


நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம் இது.

சாண்டில்யன் பதினாலு வருட சினிமா அனுபவங்கள் 'பொம்மை' பத்திரிக்கையில் தொடராக வந்தது.. இதை எழுதியது 1985ல் - 25 வருடத்துக்கு முன்பு!. தற்போது புத்தக வடிவில்

"நான் பத்து வயதிலிருந்து சினிமா பார்த்து வருகிறேன். பள்ளிப் பருவத்திலேயே ஆங்கில சீரியல் படங்களை விரும்பி பார்ப்பேன். இந்த வாரம் சனிக்கிழமை படத்தின் இந்த வாரம் சனிக்கிழமை படத்தின் முதல் பகுதி... அடுத்த வாரம் இரண்டாம் பகுதி.. இப்படி எட்டு வாரங்கள் காத்திருந்து எட்டு பகுதிகளாக ஒரு சீரியல் படத்தை பார்த்திருக்கிறேன்.


தமிழ் பட வரலாற்றுடன் தான் பார்த்த ஆங்கில பட அனுபவங்களையும் எழுதியிருப்பது படிப்பவர்களுக்கு போனஸ் !


அந்த காலத்தில் சினிமா எடுக்க எவ்வளவு பிரயத்தனம் செய்திருக்கிறார்கள்.

"அந்தக் கால கண்ணகி படத்தில், கடைசிக் காட்சியில் நடிகை கண்ணம்மா, காமிராவுக்கு எந்தப் பக்கம் போக வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஒரு நாள் பூராவும் விவாதம் நடந்தது"


போன்ற தகவல்களும்...

"அப்போதெல்லாம் கதையை எழுத குறைந்தது ஆறு மாதமாகும். கதையை எழுதினால் மட்டும் போதாது. ஷூட்டிங் ஸ்கிரிப்ட் தயார் பண்ண வேண்டும்.. அதில் காமிரா வைக்க வேண்டிய இடம் ஆர்டிஸ்ட் எத்தனை அடி நடக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கும் இந்த ஸ்க்ரிப்டை கையில் கொண்டு 'லைட்மேன்; கூட டைரக்ட் செய்யலாம்"


இப்படி இவர் சொல்லும் சினிமா 85க்கு முன்னால் இப்படி என்றால் தற்போது கேட்கவே வேண்டாம்.

'சினிமா வளர்ந்த கதை' என்ற தலைப்பு ஏன் என்று ஆரம்பித்து 'சினிமா தளர்ந்த கதை'யை சொல்ல ஆரம்பிக்கிறார். முதல் பக்கத்தில் ஆரம்பிக்கும் நக்கலும் நையாண்டியும் 96 பக்கத்தில் தான் முடிவடைகிறது. கடல் புறா, யவன ராணி, கடல் ராணி, ஜலமோகினி என்று நமக்கு தெரிந்த சாண்டில்யனா இது ?

தமிழ் சினிமா 96% ஏன் தோல்வி அடைகிறது என்று கேள்வி எழுப்புகிறார். ஏன் மக்கள் வேறு மொழி படங்களுக்கு போகிறார்கள்?
.

"....அது மட்டுமல்ல தாய் மொழியை அவமானப்படுத்தவும் செய்கிறார்கள்(மக்கள்). தமிழ்ப்படம் ஓடும் தியேட்டர் வந்ததுமே வேகமாக ( அங்கு மக்கள் கிராஸிங் இடமில்லாதிருந்தாலும் கூட) எதிர்ப்பக்கமாக ஓடி, மலையாளப்படம் தெலுங்குப்படம், இந்திப் படம் - இவையிருக்கும் தியேட்டர்களில் நுழைந்து விடுகிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் தங்கள் கண்களை மூன்று மணி நேரம் ராவிக்கொள்ள இஷ்டப்படாதுதான்..."


படங்கள் ஏன் தோல்வி அடைகிறது என்று கேள்விக்கு சிலர் சொல்லும் காரணம் - மக்கள் ரசனை வளரவில்லை, சர்கார் போடும் வரி.." என்று சொல்லும் முன் "எண்டர் தி டிராகன்" என்ற படத்தை வரியையும், வெய்யிலை லட்சியம் செய்யாமலும் க்யூவில் நின்று வருஷக்கணக்கில் பார்த்தார்கள் என்பது ஏன் என்று கேள்வியை முன்வைக்கிறார். அதே போல் திருநீலகண்டர் படம் மீண்டும் சென்னை தியேட்டரில் திரையிடப்பட்டபோது அதற்கு டிக்கெட் கிடைக்கவில்லை. ஆக மக்கள் எதை விரும்புகிறார்கள் என்று படம் எடுப்பவர்கள் புரிந்துக்கொள்ள் வேண்டும்.

படங்கள் தோல்வியுறுவதற்கு சில காரணங்கள் முன்வைக்கிறார். இந்த காரணம் இன்றும் உண்மையாக இருக்கிறது.

1. கதை எப்படி இருந்தாலும் பாதகம் இல்லை என்ற நினைப்பு
2. எந்த நடிகர்களை அமர்த்தினால் உடனடியாக விநியோகஸ்தர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு வருவார்களோ, அவர்களை அமர்த்தி படத்தை சரிக்கட்டி விடலாம் என்ற தீர்மானம்.
3. படபிடிப்பில் யாருமே எதையும் செய்துவிடலாம் என்ற துணிவு.
4. அதிகப்படியான் துணிவு - எல்லாவற்றையும் ஒருவரே செய்துவிடலாம் என்ற அசட்டு தைரியம்.

பழைய காலத்தில் ஒருவரே எல்லாவற்றையும் செய்வதில்லை. சினிமா எடுப்பது ஒரு கூட்டுறவு முயற்சி என்கிறார். எ.நாராயணன் ஊமை படம் இருந்த காலத்திலிருந்து டைரக்டராக இருந்தவர் அவர் "எனக்கு டைரக்ஷன் தவிர எதுவும் தெரியாது" என்றும் கே.ராம்நாத் காமிராமேனாக இருந்து, டைரக்ஷனிலும் பெரும் பங்கு கொண்ட போதிலும் தனக்கும் டைரக்ஷனுக்கும் எந்த வித சம்பந்தமில்லாதது போலவே காட்டிக் கொண்டார் என்று இரு உதாரணங்களை சொல்லுகிறார்.


பிடித்திருந்தால் தொடருகிறேன் ...


( படம்: என்வீடு, நன்றி The Hindu. இந்த படத்துக்கு வசனம் சாண்டில்யன், சாண்டில்யன் படம் - நன்றி: http://koottanchoru.wordpress.com/ )

14 Comments:

Anonymous said...

////இந்த நூலில் அவர் சொல்கிற கருத்துக்கள், எனக்கு கொஞ்சமும் ஏற்புடையது அல்ல. நூலின் தொடக்கம் முதல் இறுதிவரை தமிழ் சினிமாவை முழுவதுமாக அவர் தூற்றியிருப்பதை, அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பிழைத்த என்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?////


இட்லி வடை குடுத்து இருக்கும் gist-ம், மேலே எழுதப்பட்டுள்ள முகவுரையும் ஒத்துப் போகவில்லையே!
அப்டி என்னதான் தூற்றியுள்ளார் என்று ரெண்டு மூணு சாம்பிள்-ஆவது குடுங்க, அடுத்த பதிவில்.

Unknown said...

பிடிச்சிருக்கு, தொடருங்க :-)

கௌதமன் said...

திரு சாண்டில்யன் அவர்கள் மிகவும் தைரியமாகப் பேசக் கூடியவர்.
அவரை நான் பார்த்தது "திசைகள்" வார இதழ் வெளியீட்டு விழாவில்..
மேடையில் அவர் பேசியபோது இரண்டு பெண் எழுத்தாளர்களுடனும்
(கதைகளில் தன நீல வர்ணனைகள் குறித்து) மேலும் திரு சுஜாதா
அவர்களுடைய (அப்போது குமுதத்தில் வெளி வந்து பிரச்னையைக் கிளப்பிய
சரித்திரத் தொடர் சம்பந்தமாக) சரித்திர அறிவு பற்றியும் கூறி - சூடான விவாதங்கள்
நடந்தது நினைவுக்கு வருகிறது.
நீங்கள் மேலும் எழுதலாம். இட்லி வடை வாசகர்களுக்கு மேலும் நிறைய அவல்!
கௌதமன்.

Unknown said...

இ,வ,

முக்தா ஸ்ரீனிவாசன் வருதபடுமளவுக்கு அப்படி என்ன தூற்றி இருக்கிறார் ஆசிரியர்,
இன்னும் கொஞ்சம் எழுதினால் தேவலை.... Enter the Dragon பற்றி அவரது கருத்து சரியே

திரு சாண்டில்யன் அவர்களில் படைப்புக்களில் (சரித்திரம் மற்றும் சமூக நாவல்களை) பெருமளவுக்கு படித்து இருக்கிறேன்.. இந்த வகை நூல்கள் அதிகம் படித்ததில்லை ..
தொடர்ந்து எழுதுங்கள் பிறகு முடிவு செய்யலாம்

இதுக்கெல்லாம் மஞ்சள் கமெண்ட் ... என்ன சார் இது

காமேஷ்

Krish said...

நன்றாக இருக்கிறது. இன்னும் சற்று விரிவாக இருந்தால் நன்றாக இருக்கும்.

mazhai said...

தொடருங்கள், நன்றாக உள்ளது.

Anonymous said...

IV

do you know anybook which talks more about road to Politics through Kollywood in Tamil? I am sure there would be!

Apart from known politicians, I am sure there are lots of interesting offstage events with actors/actresses who failed to make a footmark in politics

(englipeesil eluthiyathirku mannikkavum)

- JK Rithees rasigargal sangam

ஹரன்பிரசன்னா said...

Pl DO continue for sure.

Anonymous said...

இட்லி மற்றும் வடை,

அப்படியே தமிழ் சினிமா உலகை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கி***வ மத அமைப்புகள் குறித்தும் எழுதினால் பல நிஜங்கள் தெரியவரும்.

கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற சவுதி போன்ற நாடுகளை நம்பி இருக்கிற தயாரிப்பாளர்கள், நல்ல படம் எடுக்கக் காசே இல்லாமல் தவிக்கும் தயாரிப்பாளர்கள் இருக்கும்போது, இந்துக்களை திட்டுகிற, ஜாதிவெறியை வெட்கமில்லாமல் பெருமையாகக் காட்டிக்கொள்ளுகிற படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறது என்பது தெரிந்தால் அதுவும் நல்லது.

(பக்கத்து மாநிலமான கேரளாவில் கதையை மையமாக வைத்துப் படங்கள் வருவதற்குக் காரணம் அங்கே அந்த அளவு பணப்புழக்கம் இல்லாததால்தான் என்று கேரள டைரக்டர் ஒருவர் சமீபத்தில் சொன்னார். பணப்புழக்கம் அதிகம் இருந்தால் தமிழ்நாட்டைப் போல சதையை மையமாக வைத்துப் படம் எடுப்பார்கள்.)

விடுதலைப்புலிகள்கூட, சர்ச்சுகளின் மூலம் தமிழ் திரையுலகில் ஏகப்பட்ட பணத்தை போட்டு வைத்திருப்பதாக தகவல். அவர்களின் ஒரே தலைவரை இனவெறிபிடித்த சிங்கள அரசு போட்டுத் தள்ளியபின்பு, திருப்பித் தராமல் இருப்பதற்கான முயற்சிகள் ஜகமெல்லாம் புகழ்பெற்ற கஸ்பரின்...ஸாரி...கர்த்தரின் ஆசிகளோடு நடைபெறுவதாகவும் தகவல்.

தொடர்ந்து எழுதுங்கள். இட்லிவடை படிப்பதைத் தவிர வேறு என்ன முக்கியமான வேலை எங்களுக்கு இருக்கப் போகிறது?

Erode Nagaraj... said...

சான்டிலயனை ஒரு சரித்திர நாவலாசிரியர் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சற்று மென்மையான வார்த்தைகளில் காமம் எழுதினர், அவ்வளவே. இது பற்றி ஒரு நாள் மயிலாப்பூர் ஆஞ்சநேயர் கோவில் வாசலில் பாலகுமாரனுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

உடையார் பற்றிப் பேசினோம். அதற்கு சில நாட்களுக்கு முன், அவர் மஹா பெரியவாளை தரிசித்ததையையும் எப்படி யோகி ராம்சுரத் குமாரிடம் சென்றார் என்பது பற்றியும் சொன்னார். (விரிவாக என் ப்ளாக்-ல் உள்ளது)

பிரபஞ்சனின் "வானம் வசப்படும்" ஒரு நிஜமான நல்ல சரித்திர நாவல்.

Erode Nagaraj... said...

எனக்கு இன்னும் ஒரு கோபம் கூட உண்டு. நாடு சுதந்திர போராட்டத்தில் திளைத்துக் கொண்டிருந்தபோது சென்னையில் சிவ கவியோ ஏதோ ஒரு படம் தமிழ் கூறும் நல்லுலக மஹா ஜனங்களால் ஒரு வருடத்திற்கு மேல் ஓட்டப்பட்டிருக்கிறது. இதில், ப்ரூஸ்லீ படத்திற்கு வரி இருந்தால் என்ன.. இல்லையென்றால் என்ன?

(ஒன்று உண்மை. ப்ரூஸ்லீ படம் (photo) எதுவாயினும் வரிகள் (இரத்தக் கோடுகள்) இருக்கும்)

Erode Nagaraj... said...

krish:

//நன்றாக இருக்கிறது. இன்னும் சற்று விரிவாக இருந்தால் நன்றாக இருக்கும்.//


ஆஹா... இங்கேயே எல்லாத்தையும் ஓசீல படிக்கலாம்னு ஒரு plan-ஆ... கெளம்பீட்டாய்ங்கய்யா....

பெசொவி said...

நன்றாக இருக்கிறது. தயவு செய்து தொடருங்கள்.

Boston Bala said...

பிடிச்சிருக்கு, தொடருங்க :-)