பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 06, 2009

மெய்ப்பொருள் - சினிமா விமர்சனம்

தமிழ் வலைப்பதிவில் மொத்தம் 10 பேர் இந்த படத்தை பார்த்திருந்தால் அதிசயம். 11வது நபராக நேற்று தான் இதை பார்க்க முடிந்தது.

முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்று சொல்லுகிறார்கள். இதில் பெருமை பட எதுவும் இல்லை. இந்த கதையை எங்கு வேண்டும் என்றாலும் எடுக்கலாம். நடித்திருக்கும் நடிகர் - நடிகையர் அனைவரும் அமெரிக்காவில் வேலை செய்யும் நம்ம மக்கள்(கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், டாக்டர்கள்...). நடிகர்கள் சுமாராக நடிக்கிறார்கள், அதாவது அவர்கள் நடிக்கிறார்கள் என்று நமக்கு தெரியவில்லை. சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், விஜயகாந்த் போன்றவர்கள் நடித்தால் நமக்கு அவர்கள் நடிக்கிறார்கள் என்று தெரியும். ஆனால் கேரக்டர் போலவே வாழ்ந்து காண்பித்தார்கள் என்று விமர்சனம் எழுதுவோம். இந்த படத்தில் அது போல எதுவும் இல்லை.

கதை: கதை தான் படத்தின் ஹீரோ!. நல்ல வேளை இந்த கதை நம்ம மசாலா இயக்குனர்களின் கைகளில் சிக்கவில்லை. தமிழ் சூப்பர்களும், சுப்ரீம்களும், அல்டிமேட் ஸ்டார்களும், புரட்சி நாயகன்களும் ... இந்த கதைக்கு யோசிக்கவே திகிலாக இருக்கிறது. நிச்சயம் கதையை ஆம்லெட் போட்டு சாப்பிட்டிருப்பார்கள். இதற்காகவே இவர்கள் இந்த படத்தை அமெரிக்காவில் எடுத்தார்கள் போலும்.

தமிழ் பேசும் தம்பதியின் சின்ன குழந்தையை பார்த்துக் கொள்ள வரும் பெண் திடும்மென பெற்றோரை தடியால் தாக்கி குழந்தையை கடத்தும் ஆரம்பம் நல்ல திகில்...

அமெரிக்காவில் நியூரோ சர்ஜனாக வேலை செய்கிறார் டாக்டர் ஷாம் ( கிருஷ்பாலா). மனைவி தேவி(அனுஷா). நண்பர் விஷ்வா(நாராயண்). ஷாமுக்கு பாரில் புது நண்பராக அறிமுகம் ஆகிறார்கிறார் ராஜா (குமார்). அவருக்கு ஈ.எஸ்.பி மூலம் நடப்பதை முன்கூட்டியே சொல்லும் ஆற்றல் இருக்கிறது. அவர் சொல்லும் ஒவ்வொரு விஷயங்களும் நடந்தேறுகிறது. அதற்கு எடுத்துக்கொள்ளும் சம்பவங்கள் திரைக்கதைக்கு பலம்.(அடுத்த ஆபரேஷனில் உங்க நோயாளி சாவார், கவர்னர் மகன் கடத்தப் படுவார்.. போன்றவை) ஒரு கட்டத்தில் டாக்டர் ஷாமுக்கு ஆகஸ்ட் 10 அன்று மரணம் - அவர் மனைவியால் என்று ராஜா சொல்ல கதை வேகமாக நகர்கிறது. அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பது க்ளைமாக்ஸ்.

திரைக்கதை: அருமையான திரில்லர் படமாக எடுத்திருக்கலாம். டம்பளர் உருளும் சத்தம், வீட்டில் தனியாக இருக்கும் போது, திடீர் என்று பூனை ஒன்று குறுக்கே போவது.. போன்ற எதுவும் இல்லாமல் "அடுத்தது என்ன?" என்று ஆர்வம் மட்டுமே ஏற்படுத்தி நல்ல சஸ்பென்ஸ் திரில்லராக படத்தை நகர்த்திக்கொண்டு போகிறார்கள்.

நடிகர்கள்/நடிகைகள்: படம் ஆரம்பித்தவுடன் நடிகர்கள் மற்றும் அவர்களின் பேச்சுக்களை பார்க்க அமெச்சூர் தனமாக இருக்கிறது என்று நினைக்க தோன்றுகிறது. ஆனால் போக போக அதுவே இந்த படத்துக்கு பலமோ என்று எண்ண வைக்கிறது. சினிமாவில் நாடகத்தன்மை இருந்தால் தான் அதை சினிமா என்று ஒத்துக்கொள்ள வீட்டு நாய் போல நாம் பழக்கப்பட்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. (சினிமா ஆரம்பித்து முதல் பத்து நிமிஷத்துக்கு பிறகு ஒரு பாட்டு, கிளைமாக்ஸுக்கு 20 நிமிஷம் முன் ஒரு பாட்டு என்ற ஃபார்முலா இதில் இல்லை).

இசை, ஒளிப்பதிவு: ஜான் மேஷாய் படத்துக்கு இசை. என்ன தேவையோ அதற்கு ஏற்ப இசை வருகிறது. பணம் கொடுத்திருக்கிறார்களே தேவையில்லாத இடங்களில் இசை இல்லை.. எல்டிரிஜா ஒளிப்பதிவு - ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்ல மாட்டேன் ஆனால் மோசம் கிடையாது.

கொசுறு தகவல்: இந்த படத்தை இயக்கியிருக்கும் நட்டிகுமாரின் அப்பா மோகமுள் படத்தின் தயாரிப்பாளர்.


மெய்ப்பொருள் காண்பது அறிவு. அதனால் நீங்களே படத்தை பார்த்துவிட்டு எப்படி என்று முடிவு செய்யுங்கள்
இட்லிவடை மார்க் 7.5/10

24 Comments:

ஹரன்பிரசன்னா said...

அழகிய திருமகன் கதை மாதிரி இருக்கு?!!

Anonymous said...

////மெய்ப்பொருள் காண்பது அறிவு. அதனால் நீங்களே படத்தை பார்த்துவிட்டு எப்படி என்று முடிவு செய்யுங்கள்.////

Appears to be a pretty achromatic and unbiased review.
இட்லிவடை, மஞ்சள் கமெண்ட் பின்னிடீங்க - வழக்கம் போல.

அக்னி பார்வை said...

அடுத்து திரை விமர்சனம் என்ன மந்திரிகுமாரியா? மாயாபஜாரா?

Anonymous said...

படத்தை எங்கே பார்ப்பது? வலையில் பார்க்க முடியுமா?

IdlyVadai said...

//அடுத்து திரை விமர்சனம் என்ன மந்திரிகுமாரியா? மாயாபஜாரா?//

அடுத்தது சாண்டில்யனின் எழுதிய புத்தகத்தின் விமர்சனம்.

Unknown said...

இந்த படத்தோட டி.வி.டி எங்க கெடைக்குமின்னு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்.......

Eswari said...

உங்கள் விமர்சனத்தை பார்த்தால் படம் தேட்டரில் ஓடுதோ இல்லையோ C.D / V.C.D நல்ல ஓடும்.

Krish said...

nice!

sankarkumar said...

good vimarsanam..
valmigi parthingila>>?

T.V.ராதாகிருஷ்ணன் said...

சில தமிழ்ப் படங்களோடு ஒப்பிடுகையில்..இப்படம் எவ்வளவோ பரவாயில்லை..நீங்கள் சொல்வது போல் திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருந்தால்..அருமையான திரில்லர் ஆகி இருக்கும்

Motley Fool said...

idly, ஏன் இவ்வளவு late?

IdlyVadai said...

//idly, ஏன் இவ்வளவு late?//

நான் நேற்று தான் பார்த்தேன், அதனால் :-)

Swami said...

திருட்டு DVD கிடைக்குமா ? இல்ல அமெரிக்கா போய் தான் பாக்கணுமா ? நீங்க எங்க பாத்திங்க ?

♫சோம்பேறி♫ said...

/* அடுத்தது சாண்டில்யனின் எழுதிய புத்தகத்தின் விமர்சனம். */

ஓஹோ.. நெசமாவே ரொம்ப சந்தோஷம்..

ரிஷபன்Meena said...

//Anonymous said...
படத்தை எங்கே பார்ப்பது? வலையில் பார்க்க முடியுமா//
இந்த படத்தோட டி.வி.டி எங்க கெடைக்குமின்னு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்.......//

பத்தாவது பரிட்சை வேணாம்கிற மாதிரி,இந்தக் கேள்விகளை இட்லி சாய்ஸ்-ல் விட்டுவிட்டதா ?

IdlyVadai said...

படத்தின் சிடி எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. நான் பார்த்த சிடி என் நண்பர் கொடுத்தது.
(தி.நகர் ரங்கநாதன் தெருவில் 40 ரூபாய்க்கு வாங்கியது.)

Unknown said...

// IdlyVadai said...

படத்தின் சிடி எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. நான் பார்த்த சிடி என் நண்பர் கொடுத்தது.
(தி.நகர் ரங்கநாதன் தெருவில் 40 ரூபாய்க்கு வாங்கியது.) //40 ரூவாயா....???? ரொம்ப அநியாயம்..... உங்குளுக்கும் வேண்டாம் , எனக்கும் வேண்டாம்.... 20 ரூவா போட்டுக்கோங்க..... ரெண்டு டி.வி.டி வாங்கிக்கிறேன்.....!!!!

mazhai said...

///* அடுத்தது சாண்டில்யனின் எழுதிய புத்தகத்தின் விமர்சனம். *//

தயவு செய்து "யவன ராணி"-யை மறந்து விடாதீர்கள்.

இது போன்ற படங்களுக்கு புத்தகங்களை படிக்கலாம்.

Unknown said...

IV,

There are certain movies which go unnoticed may be this is one of them where can I download this ...

Kamesh

Anonymous said...

yaarukku yaaro padathin vimarsanathai podadhadhayum.. 2025 varuda thamizhaga mudhalvar annan SAM ANDERSON padathai podadhadhai kandithu...idlyvadai yai vittu velinadappu seigiren...

- chiccha mani -

Erode Nagaraj... said...

மெய்ப்பொருள் காண்பதரிது

Anonymous said...

பளிச்சுன்னு ஒரு திரை விமர்சனம் புட்டு புட்டு வெச்சா மாதிரி...நானும் இந்த படம் பாத்தேன்..நல்லா இருந்துச்சு, ஆனா ஏன் ஒடலைன்னு புரியல...புது முகங்கள்?

கௌதமன் said...

இ வ வில் அதிக மதிப்பெண் வாங்கி இருக்கின்ற படம்,
க தொ கா வில் இலவசமாக வழங்குகிறார்களே - என்று
நேற்று (22-08-2009) படம் பாத்தேன்.
ஒரே கேள்வி கேட்கிறேன்:
படத்தை தமிழில் எப்பொழுது எடுக்கப் போகிறார்கள்?

Anonymous said...

என்னையா ஏழறை மார்க்கு குடுத்தீர், விருதை குடுத்துட்டாங்க!