பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 31, 2009

80% ஹாலிவுட் + 20% மசாலா = 100% கோலிவுட்


இந்த வார குமுதத்தில் வந்த முதல் பக்க கட்டுரையில் இவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்

ஹாலிவுட் படங்களிலிருந்து கதையின் கருவை 80% இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு அதற்கேற்ற லோக்கலான திரைக்கதை 10% கமர்ஷியல், யதார்த்தமான ஆக்ஷன் சண்டைக்காட்சிகள் 5%, கிளாமர் டேஸ்ட்டுக்காக குளுகுளு பாடல் காட்சிகள் 2%, காமெடி கலாட்டாவிற்குகாக சைடு ட்ராக் காமெடி 2% .... கோலிவுட் சினிமாவின் சக்ஸஸ் ஃபார்முலா


அந்த கட்டுரையில் சில முக்கிய படங்களின் பெயர்களை கொடுத்து அவர்களுக்கு எங்கிருந்து இன்ஸ்பிரேஷன் வந்தது ( அல்லது சுட சுட எடுக்கப்பட்டது ) என்று ஒரு சின்ன பட்டியல் தந்துள்ளார்கள்.

21 grams - சர்வம்
Bangkok Dangerous - பட்டியல்
Network - வேகம்
Hardcore - மகாநதி
Planes Trains and Automobiles - அன்பேசிவம்
What bob can do - தெனாலி
Hot bubblegum and American Pie - பாய்ஸ்
Shop around the corner - காதல்கோட்டை
Big - நியூ
Very Bad things - பஞ்சதந்திரம்
Sliding Doors - 12B
Too Much - காதலா காதலா
She Devil - சதிலீலாவதி
Butch Cassidy & The Sundance Kid - திருடா திருடா
Fear - காதல் கொண்டேன்
Barefoot in the park - அலைபாயுதே
Sense and Sensibility - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
Brewster's Millions - அருணாசலம்
Corsican Brothers - அபூர்வ சகோதரர்கள்
Life of David Gale - விருமாண்டி



குறிப்பு : இவை சாம்பிள்கள் தான் பட்டியல் இன்னும் நீளமானது என்று கட்டுரையில் சொல்லியிருக்கிறார்கள். மக்கள் தங்களுக்கு தெரிந்த 'சுட்ட படங்களை' பற்றி பின்னூட்டத்தில் சொல்லலாம். ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய், சிம்பு, வடிவேலு, விவேக்... என்று எல்லா ரசிகர்களும் கலந்துக்கொள்ளலாம் :-)

எனக்கு தெரிந்து திருவிளையாடல் தவிர மற்ற எல்லா படமும் சுட்ட படம் தான் போல!

77 Comments:

Rahul said...

மணிரத்னத்தின் அனைத்து படங்களும் inspired from ஏதாவது ஒரு வேற்று நாட்டு படம் (தளபதி நம்ம ஊரு கதை) இதை ஏன் குமுதம் விட்டு விட்டார்கள்??? ஆனால் அதை திறமையாக நன்றாக எடுத்து விடுவார். நல்ல கலைஞர்களை வைத்து.

Rahul said...

இதில் ஒன்றும் தப்பு இல்லை, அதில் கூற நல்ல கருத்தை நம்ம மக்களுக்கு உரிய வகையில் மாதிரி எடுப்பது (கிட்டத்தட்ட ஒரு மொழி பெயர்ப்பு தான், அதை அப்படியே டப் செய்தால் நீட்சாயமாக அவ்வளவு ரீச் ஆகாது ), இது பாரதியின் கனவு..... 'பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தில் வேண்டும்; இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்; மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை '

Unknown said...

Green Card - http://en.wikipedia.org/wiki/Green_Card_(film) - நளதமயந்தி

Unknown said...

Lucky Number Slevin (English), 3-Iron (Korean) - Laadam

Kasu Sobhana said...

காபி அடிப்பதில் காதல் இளவரசன் ஒரு சக்கரவர்த்தி என்று தெரிகிறது.
அதிகச் சுடல்கள் - அவர் படங்களே.
ஆனால் - Doubtfire ஐ விட - அவ்வை சண்முகி மிகவும் நன்றாகவும் ரசனையாகவும் இருந்தது
என்பது மறுக்க முடியாத உண்மை.

Kasu Sobhana said...

சுட்ட படம் வேண்டுமா - சுடாத படம் வேண்டுமா?
சுட்ட படம் : ரசிகர்களுக்கு
சுடாத படம் : Oscar மற்றும் இன்னபிற அவார்டுகளுக்கு! ஜனாதிபதி பதக்கம் கூட கிடைக்கலாம் - (அவர் அதைப் பொறுமையுடன் முழுவதும் பார்த்திருப்பாரா?)

Kasu Sobhana said...

ஆங்கில தலைப்புடன் வெளிவந்த முதல் தமிழ்த்திரைபடம் எது ?

Alli Arjunaa?

தமிழ் தலைப்பு என்றால் -
அல்லியும், அர்ஜுனனும் என்றல்லவா இருந்திருக்கும்!
Am I right Arivu madhi?

butterfly Surya said...

எவ்வளவோ யோசித்தும் "மணிரத்னத்தை யாரும் Beat பண்ண முடியாது...


நாயகன் - காட்பாதர்

நாயகன் - ஒரு பத்து பதினைந்து நிமிட sequence அப்படியே
காட்பாதரில் சுட்டது. காட்பாதரின் மகனை எதிராளிகள் கொன்று
விடுவார்கள். பேரனின் பேப்டிசம் நடக்கும்போது இந்த கும்பல் சென்று பழிவாங்கும். தமிழில் பேப்டிசத்துக்கு பதிலாக திவசம். அவ்வளவுதான். ஆங்கில படத்தில் கதவில் எட்டி பார்ப்பவரின் கண்ணில சுடுவார்கள். தமிழிலும் அதே. கொஞ்சமாவது மாற்ற வேண்டுமென்றுகூட கவலைப்படாமல் சுடுபவர்..



அக்னி நட்சத்திரம் படத்தில் மகன்கள் அப்பாவை கட்டிலோடு இடம் மாற்றுவது கூட ஃகாட்பாதரில் இருந்து சுட்டது தான்.


திருடா திருடா - கிளிப்ஹேங்கர்

ரோஜா - ஒருமாதிரியாக ராமாயணத்தை உல்டா செய்தது.

தளபதி - மகாபாரத உல்டா

கன்னத்தில் முத்தமிட்டால் கதை "stuart little" கதையை ஒத்து இருக்கும்.


ஆயத எழுத்து - Amerros perros {நிறைய ஒத்து இருக்கும்}


'குரு' - ஆர்சன் வெல்ஸ் என்னும் இயக்குனரால் எடுக்கப்பட்ட 'சிட்டிசன் கேன்' என்னும் படத்தின் அதே கதைதான்


ரித்விக் கட்டக் இயக்கிய "மேகதாரா" (1962 என்று ஞாபகம்) பாலச்சந்தர் இயக்கிய "அவள் ஒரு தொடர்கதை"யின் கதையும் காட்சியமைப்புகளும் மேற்சொன்ன படத்தை பெருவாரியாக ஒத்திருந்ததது.


கண்ணெதிரே தொன்றினாள். உயிரா? மானமா{ஜெய்சங்கர் & முத்துராமன் } அப்ப்டியே காப்பி..


மே மாதம் - Roman Holiday


கஜினி---- Memento


ஜெஜெ ---- Serendipity


அவ்வை ஷண்முகி - Mrs Doubtfire


தெனாலி - What about bob


வெற்றி விழா - Bourne identity

12B - Sliding Doors

ருத்ரா - பஃபூன் வேஷம் போட்டு கொள்ளையடிக்கும் காட்சி சீன் பை சீன் பில் முர்ரெயின் quick change படத்திலேருந்து சுட்டது


சூரியன் - Point of impact by stephen king

நான் சிகப்பு மனிதன் - Death wish

காதல் கோட்டை - Shop around the corner

தோஸ்த் :சரத் குமார் ரகுவரன் படம். - Double jeapordy

யுவா - Amerros perros

அருணாச்சலம் - Brewster's Millions

மைடியர் மார்த்தாண்டன்- Coming to America

ஆத்மா .- The Miracle

வசூல்ராஜா - Patch Adams

காதல் கொண்டேன் - Klassenfahrt

சதி லீலாவதி - She Devil

மகளிர் மட்டும் - Nine to Five

பச்சைக்கிளி முத்துச்சரம் - Derailed

சில தகவல்கள் என் பழைய மெயிலில் வந்தவை.

போதுமா.. இன்னும் வேணுமா..??

Rahul said...

/***சுடாத படம் : Oscar மற்றும் இன்னபிற அவார்டுகளுக்கு! ***/

இது தவறு,சுட்ட படங்கள் கூட ஆஸ்கர் விருதுகள் வாங்கி உள்ளன.

Rahul said...

Hi வண்ணத்துபூச்சியார்,
Please provide further movies if you have!!!!

Anonymous said...

அவ்வையார் படம் ஒரிஜினல் தமிழ் படம். ----

IMDB என்கிற சைட்தான் கோடம்பாக்க ’கதை பண்ணும்’ கலைஞர்களின் சுரங்கம்....
--டில்லி பல்லி

butterfly Surya said...

இனி வரப்போகிறது அனைவராலும் ஆவலாய் எதிர்பார்க்கும் மிஷ்கினின்

”நந்தலாலா”

ஆனால் அதுக்கும் இந்த பதிவிற்கும் சம்மந்தமில்லை..

http://butterflysurya.blogspot.com/search/label/Kikujiro

அவ்வ்வ்வ்

Anonymous said...

விசில் - urban legend

வால்பையன் said...

காதலர் தினம்=honey i've got the mail

பல படங்களிலிருந்து சீனை மட்டும் உருவுகிறார்கள்!

Anonymous said...

வண்ணத்துபூச்சியார் //

வெற்றிவிழா, bourne identityக்கு பல வருடங்களுக்கு முன்பு வந்த படம். ஆத்மாவும் அப்படியே...

Anonymous said...

ilavarasan, the bourne identity that preceded vetrivizha is http://www.imdb.com/title/tt0094791/
Not the Mattdemon movie.

prasanna said...

all maniratnam movies have been copied from others

he is no one ulta director

RRSLM said...

அந்நியன் விட்டுடிங்களே வண்ணத்து பூச்சியார்; SEVEN -ன் தழுவல் தான் அந்நியன். Morgan Freeman, Brad Pit and Kevin Spacey நடித்தது.
Momento -வ அப்படியே காப்பி அடிச்சிட்டு முருகதாஸ் என்னமா பீத்திகிறாரு.

Anonymous said...

Kalaignar Arivippu:

Tamil padangalai copy adithaal mattume vari vilakku

Baski said...

மணிரத்தினம், கமல் போன்றோர் தமிழ் சினிமாவின் பெருமை. இதை காபி அடித்தல் என்பது அவர்களை அசிங்க படுத்துவது போல இருக்கு.

ஒரு நல்ல தேவையான/ரசிக்கக்கூடிய கருத்தை எடுத்து நமது ரசனைகேற்ப வழங்கியது அவர்கள் சாதனை.

பெரும்பான்மையான மக்களுக்கு (என் போன்றவர்களுக்கு) ஹாலிவுட்ன் வெற்றி படங்கள் மட்டுமே தெரியும். (டைடநிக் , சுரச்சிக் பார்க்).

ஒரு புத்தகத்தை மொழியாக்கம் செய்வது வேறு. அதை மாதிரியாக வைத்து வேறு புத்தகம் எழுதுவது வேறு. நமது பண்பாடு/பழக்கவழக்கம்/ சார்ந்த வசனமும் கதை அமைப்பும் ஹாலிவுட் படங்களில் கிடையாது. அதனால் காபி அடித்தால் சன் டிவியில் வரும் "சனி கிழமை சனியன்" டப்பிங் படம் போல் இருக்கும். அவாகள் நல்ல உழைப்பளிகளே.

வேண்டுமென்றால் ஹாலிவுட் படத்தை மாதிரியாக எடுத்துகொண்டார்கள் என சொல்லலாம்.

இவங்கள விடுங்க, நம்ம இளம் ஹீரோக்கள் தமிழ், தெலுகு, ஹிந்தி மொழி படங்கள் ரைட்ஸ் வாங்கி காபி அடித்துகொ(ல்)ள்கிறார்களே அதை கொஞ்சம் சொல்லகூடதா?

அட நம்ம அரசாங்கமே பிரிட்டிஷ் அமைப்பை காபி (மாதிரியாக) கொண்ட அமைப்பு தானே? அங்கே ராணி எலிசபத் குடும்பம். இங்கே மாமா நேரு குடும்பம்.

இட்லிவடை கூட யாரையோ காபி அடித்து தான் இந்த ப்லோக் ஆரம்பித்ததாக கேள்வி (இது என் உண்டான்சு) :-) ?

ராமகுமரன் said...

julie ganapthy - remake of misery
janma natachithiram - remake of omen

நெல்லை எக்ஸ்பிரஸ் said...

இககடே சூடு கண்ணா...

-----------------------
திமிரு - சண்டைக்கோழி

மலைக்கோட்டை - சண்டைக்கோழி

தோரணை - மலைக்கோட்டை
-----------------------------------
கில்லி - திருமலை
திருப்பாச்சி - கில்லி
சிவகாசி - திருப்பாச்சி
குருவி - சிவகாசி
வில்லு - குருவி
வேட்டைக்காரன் - You are right. நீங்க சொல்றது ரொம்ப சரி :)

:-)

ரவிஷா said...

இதையும் சேத்துக்குங்க! அண்ணாமலை = Kane & Abel (Novel by Jeffrey Archer)

Unknown said...

sondha muyarchiyil kadhai pannum iyakkunarkalum ullanar.... Ameer, cheran, bala ...

Jenma Natchathiram - Omen
Asuran - Predator
Saroja - Judgement Night
Aegan - Back to school
Kakka Kakka - 1st half- untouchables
Vegam - Cellular
Nayagan - part of movie from cellular
Chanakya - Climax copied from phone booth
Vaa Arugil Vaa - Child's Play
Maya Bazaar - Ghost

டகிள் பாட்சா said...

சுட்ட பழம் இருக்கட்டும். அதாராணு ஷோக்கு குட்டி. சுட்ட பழமா! ஸாரி படமா! வாழ்க உங்கள் கலைப்பணி!

வம்பளந்தான்முக்கு said...

Bourne identity ரிலீஸ் ஆனது 2002ல். வெற்றிவிழா 1990க்கு முன்னால். நம்மவர்களை பார்த்தும் அவர்கள் காப்பி அடிக்கிறார்கள்.உதா.வரும் காட்சிகள் வெற்றிவிழா படத்திலும் உண்டு.

வலைஞன் said...

முக்கால்வாசி தமிழ் படங்கள் (நல்லவை) காப்பி அடிக்கப்பட்டவையே.
பாலு மகேந்திரா இக்கலையில் மன்னர்.மணிரத்தினம் சக்கரவர்த்தி

வலைஞன் said...

தமிழா மனம் தளராதே
இதோ ஒரு நற்செய்தி
There will be blood எனும் அற்புதமான படத்தில் ஹீரோ Daniel Day-Lewis இன் நடிப்பு அப்படியே நம் நடிகர் திலகத்தின்
inspiration.பல காட்சிகளில் நான் கண்டது நம் சிவாஜியை!
Simply marvellous!

Venkatesh Kumaravel said...

புட்ச் காசிடி & சண்டன்ஸ் கிட் - திருடா திருடா ஒரு இழவு சம்மந்தமும் கிடையாது. யுவா அமோரஸ் பெரொஸ் என்றும், ஆயுத எழுத்து 21 கிராம்ஸ் என்றும் எழுதியிருக்கிறார்கள். அட்டகாசம்! திரைக்கதை உருவுவதையெல்லாம் திருட்டென்றால் பின்ன தளபதி சோசப்பு விசய் செய்யுறதெல்லாம் கலைச்சேவையா?
நாயகன் ஒரு இன்ஸ்பிரேஷன். ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா, நாயகன், அண்டச்சபிள்ஸ் முதலிய பற்பல காட்ஃபாதர் படங்களுக்கு செய்த ட்ரிப்யூட். சும்மா திருட்டுன்னு சொல்லிறக்கூடாது! டைம்ஸ் பத்திரிக்கைக்கு இது கூடவா தெரியாது?
லியான் என்ற அற்புதமான படத்தை சூரியப்பார்வை என்ற பெயரில் ரணகளப்படுத்திய அனாமதேய மகன் அர்ஜுனை வசைபாடினால் தகும். அதைவிட்டுவிட்டு மணிரத்னத்தை குறை சொல்லவேண்டாம்! மகாபாரதத்திலிருந்து இன்ஸ்பிரேஷன் எடுக்கக்கூடாதா? அங்கனயெல்லாம் பைபிள்ல இருந்து சுட்டா ரெஃபரன்சுன்னு போடுவாய்ங்க! எ.கொ.இ.ச!?

ரிஷபன்Meena said...

ஓரிரு நாட்களுக்கு முன் வெளியிட வேண்டாம் என்று குறிப்புடன் வந்த என் பின்னூட்டம் வெளியானது. ஆனால் இன்று என் பின்னூட்டம் வெளியாகவில்லை. எதேனும் ஸ்பெஷல் காரனம் இருக்கிறதா ?

கிரி said...

:-))))

Matra said...

Not all movies are copies/inspiration of Hollywood movies. Movies like Vetri Vizha, Captain Magal (Eye of the Needle) are from famous novels.

பெசொவி said...

Vannaththu Poochiar said

//மைடியர் மார்த்தாண்டன்- Coming to America//

It is "Return to America"


//எனக்கு தெரிந்து திருவிளையாடல் தவிர மற்ற எல்லா படமும் சுட்ட படம் தான் போல!//

Dear Idlyvadai,

எந்த ஒரு புராண படமும் புராணத்தில் இருந்து சுட்டது தானே!

பெசொவி said...

Baski said :

//மணிரத்தினம், கமல் போன்றோர் தமிழ் சினிமாவின் பெருமை. இதை காபி அடித்தல் என்பது அவர்களை அசிங்க படுத்துவது போல இருக்கு.

ஒரு நல்ல தேவையான/ரசிக்கக்கூடிய கருத்தை எடுத்து நமது ரசனைகேற்ப வழங்கியது அவர்கள் சாதனை. மக்களுக்கு (என் போன்றவர்களுக்கு) ஹாலிவுட்ன் வெற்றி படங்கள் மட்டுமே தெரியும். (டைடநிக் , சுரச்சிக் பார்க்).

ஒரு புத்தகத்தை மொழியாக்கம் செய்வது வேறு. அதை மாதிரியாக வைத்து வேறு புத்தகம் எழுதுவது வேறு. நமது பண்பாடு/பழக்கவழக்கம்/ சார்ந்த வசனமும் கதை அமைப்பும் ஹாலிவுட் படங்களில் கிடையாது. அதனால் காபி அடித்தால் சன் டிவியில் வரும் "சனி கிழமை சனியன்" டப்பிங் படம் போல் இருக்கும். அவாகள் நல்ல உழைப்பளிகளே.

வேண்டுமென்றால் ஹாலிவுட் படத்தை மாதிரியாக எடுத்துகொண்டார்கள் என சொல்லலாம்.

இவங்கள விடுங்க, நம்ம இளம் ஹீரோக்கள் தமிழ், தெலுகு, ஹிந்தி மொழி படங்கள் ரைட்ஸ் வாங்கி காபி அடித்துகொ(ல்)ள்கிறார்களே அதை கொஞ்சம் சொல்லகூடதா?

அட நம்ம அரசாங்கமே பிரிட்டிஷ் அமைப்பை காபி (மாதிரியாக) கொண்ட அமைப்பு தானே? அங்கே ராணி எலிசபத் குடும்பம். இங்கே மாமா நேரு குடும்பம்.//


இப்படி சொல்லி அவர்கள் காபி அடிப்பதை தயவு செய்து நியாயப் படுத்த வேண்டாம்

ரவிஷா said...

என்னங்க அந்த முக்கூடல்-வம்பளந்தான்மூக்கு (என்ன இப்படி பேரு வெச்சிருக்காரு! டைப் அடிக்கறதுக்குள்ள மூக்கு நெளிஞ்சே போச்சு!) இப்படி அப்பாவியா இருக்காரு! Bourne Identity முதலில் நாவலாக வந்தது 1986’இல்! பிரதாப் போத்தன் அதை படிச்சு எடுத்த படம்தான் வெற்றி விழா! இது தெரியாம நம்மள பாத்துதான் அவங்க காப்பி அடிச்சாங்கன்னு அப்பாவியா சொல்லிட்டு திரியுறாரு! அது போகட்டும்! சுமார் பத்து வருஷத்துக்கு முன்னால நம்ம விஜய் அமிர்தராஜ் வாத்தியாரின் “எங்க வீட்டு பிள்ளையை” சுட்டு ஹாலிவுட்டில் நம்ம வான் டேமை வெச்சு ஒரு படம் எடுத்தாரே! Double Impact-ன்னு நெனைக்கிறேன்!

தவிரவும், உல்லாசம் படத்தின் கரு Departed படத்தின் கருவைப் போலவே இருக்கும்! உல்லாசம் வந்தது 1997-இல்! Departed வந்தது அதற்குப் பிறகு! ஒரு வேளை உல்லாசம் பட டைரக்டர் ஏதாவது நாவலைப் படித்து படமெடுத்திருப்பாரோ? ஆண்டவனுக்கே வெளிச்சம்!

புதுமைபித்தன் said...

//Baski said...

மணிரத்தினம், கமல் போன்றோர் தமிழ் சினிமாவின் பெருமை. இதை காபி அடித்தல் என்பது அவர்களை அசிங்க படுத்துவது போல இருக்கு.

ஒரு நல்ல தேவையான/ரசிக்கக்கூடிய கருத்தை எடுத்து நமது ரசனைகேற்ப வழங்கியது அவர்கள் சாதனை. //


ஐயா Baski உங்களுக்கு பெரும்பான்மை ஆங்கில படங்கள் பற்றி தெரியாமல் இருப்பது பாதகமில்லை, ஆனால் plagiarism (அறிவு திருட்டு) பற்றி தெரியாமல் இருப்பது வேதனை,
மற்றும் காபி சம்மதமாக நீங்கள் கொடுத்திருக்கும் அத்தனை எடுத்து காட்டுகளும் சப்பை கட்டு, அப்படி இவர்கள் HOLLYWOOD படங்களை கோப்பி செய்து மக்களுக்கு சேவை செய்வதாக இருந்தால் நேரடியாக அவர்களிடமே காப்புரிமை வாங்கட்டுமே, அப்போது தெரியும் காப்புரிமை தரும் பணத்தில் இவர்கள் பத்து படம் எடுக்கலாம்,

யாவரும் நலம் படம் HOOLLYWOOD போன விஷயம் தெரியுமா உங்களுக்கு?

அறிவு திருட்டு எப்படி எந்த ரூபத்தில் எங்கு நடந்தாலும் தவறே.

Anonymous said...

//அந்நியன் விட்டுடிங்களே வண்ணத்து பூச்சியார்; SEVEN -ன் தழுவல் தான் அந்நியன். Morgan Freeman, Brad Pit and Kevin Spacey நடித்தது. //

But I feel "Anniyan" is better than "Seven" because even the motive of the killer is not properly established in "Seven"

Narayanaswamy G said...

10ல 8 கமல் படம்

R.Gopi said...

ASALUM NAGALUM - KAMAL

1) Mrs. Doubtfire (1993, Robin Williams) - AVVAI SHANMUGI

2) Green Card (1990, Andie McDowell, Gerard Depardieu) – NALA DHAMAYANDHI

3) Very Bad Things (1998) – PANJA THANTHIRAM

4) What about Bob (1991, Bill Murray, Richard Dreyfuss) - TENALI

5) She-Devil (1989, Meryl Streep, Roseanne) – SATHI LEELAVATHI

6) Nine to Five (1980, Jane Fonda, Dolly Parton) – MAGALIR MATTUM

7) To Sir With Love (1967, Sidny Poitier) - NAMMAVAR

8) Planes, Trains & Automobiles (1987, Steve Martin, John Candy) - ANBE SIVAM

9) Memories of Murder (Korean Movie) – VETTAIYADU VILAIYADU

ASALUM NAGALUM – VIJAY

1. STEVEN SPEILBERG / TOM CRUISE - MINORITY REPORT – VIJAY’s ATM

சுகுமார் said...

latest


The Following - Vamanan

Unknown said...

I am yet to watch a heart moving movie like "Mahanadhi" and to hear that its an inspiration from the movie "Hardcore" made me to do a little research. "Hardcore" seems to be inspired from "Mahanadhi" which hit the screens much before the hollywood one

சாம் அன்டேர்சன் said...

எதையும் காப்பி அடிக்காமல் எடுத்த ஒரே தமிழ் படம் "யாருக்கு யாரோ ஸ்டெப்நீ "

இப்படிக்கு
சாம் அன்டேர்சன்

Anonymous said...

//
8) Planes, Trains & Automobiles (1987, Steve Martin, John Candy) - ANBE SIVAM//

Planes, Trains & Automobiles படத்தை ஒப்பிடும் போது ‘அன்பே சிவம்' ஆயிரம் மடங்கு சிறந்தது.

Anonymous said...

Ramanarayanan movies are not copied; all the atha movies are original.
Bharathiraja movies - except Captain Magal, and perhaps Tajmahal, and of course bommalttam - are original too

Kasu Sobhana said...

சொல்ல மறந்துட்டேன்:
பிரதாப் போதனுடைய
மூடு பனி = Alfred Hitchcock's "Psycho"

பெசொவி said...

Dear R Gopi, thanks for asalum nagalum - Kamal.

மைகேல் மதன காமராஜன் படத்தின் climax ஒரு சார்லி சாப்ளின் படத்தில் இருந்து சுட்டதுதான். (unfortunately, i forgot the name of the film)

Unknown said...

இ.வ

காதல் இளவரன் படம் தான் பெரும்பாலும் இறக்குமதி சரக்கு போல இருக்கே.. உண்மையை சொன்ன கோபம் தான் வரும் ...ஏற்கனவே நெறைய பேருக்கு கோவம் போல ... இது செராக்ஸ் இல்ல ... முலகதயிலிருந்து உருவல் ..அப்படி இப்படின்னு அர்குமேன்ட் வேற ...

இப்பல்லாம் ஜனங்கள ரொம்ப முன்னேறிட்டாங்க.. படம் வந்த ஒரு வாரத்தில் அசல் எது போலி எதுன்னு பட்டிமன்றம் நடத்துவாங்க போல.

காமேஷ்

பெசொவி said...

Every Kamal's film is almost a copy of some English film. The climax of "Michael Madana Kamarajan" is a copy of a scene in a Charlie Chaplin's film.

Sara Suresh said...

//ரோஜா - ஒருமாதிரியாக ராமாயணத்தை உல்டா செய்தது.//

ரோஜா தமிழரான இந்தியன் ஆயில் நிறுவன மேலாளர் காஷ்மீரில் கடத்தப்பட்ட சம்பவம். அவரது மனைவி மத்திய அரசை பல தடவை கெஞ்சியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திடீரென்று ஒரு நாள் கடத்தப்பட்டவரே தப்பித்து வந்தார்.

Anonymous said...

What Women Want (Mel Gibson) படத்தை உல்டா அடித்து விவேக் ஒரு படத்தில் காமெடி செய்திருப்பார் (ஷாக் அடித்ததால் பெண்கள் நினைப்பதெல்லாம் கேட்கும்)

Anonymous said...

இந்த உபயோகம் இல்லாத சினிமா பதிவிற்கு ஐம்பது பின்னூட்டங்கள். ரொம்ப அவசியம்.
All vetti boys - என்னையும் சேத்துதான் சொல்றேன்.

சரி, இதுக்குள்ள வந்ததுக்காக ஒரு கேள்வி.

ஆங்கிலப் படத்தைக் காப்பி அடித்து தூய தமிழில் பெயர் வைத்து படம் எடுத்தால் திரு. மு.க. வரி விலக்கு குடுப்பாரா, மாட்டாரா?

Harish said...

சுஜாதா சொன்னது போல் யாரும் எதுவும் புதிதாய் சொல்ல முடியாது. எல்லாம் சொல்லப்பட்டுவிட்டது. அவரவர்கள் தங்கள் பாணியில் present பண்ணலாம். உங்களுக்கு ஆங்கில படங்களும் தமிழ் படங்களும்தான் தெரியும். ஜெர்மன், ரஷ்யன், இரான், சீனா என்று பல மொழி படங்கள் பார்ப்பவர்கள் எத்தனை ஹாலிவுட் படங்கள் காப்பி அடிக்கப்பட்டவை என்று ஒரு பெரிய லிஸ்ட் குடுக்கலாம். அமெரிக்காவில் இருப்பவர்களும் மனிதர்கள்தான் சொல்லப்போனால் அமெரிக்கர்களைவிட காப்பி அடிப்பவர்களை யாரும் பார்க்க முடியாது. தொழில் நுட்பத்தை adopt செய்வதை போன்று பாதித்த விஷயங்களை நமது வட்டார கலாசரத்தில் பதிவதை adopt செய்ய வேண்டியதுதான். அப்படி ஏற்காமல் பார்த்தால், இன்று இருக்கும் TV showக்களில் இருந்து நாம் போட்டிருக்கும் pant, shirtலிருந்து இந்த Blog,comment சமாச்சாரம் வரை எல்லாம் எல்லாம் காப்பிதான்

Harish said...

சுஜாதா சொன்னது போல் யாரும் எதுவும் புதிதாய் சொல்ல முடியாது. எல்லாம் சொல்லப்பட்டுவிட்டது. அவரவர்கள் தங்கள் பாணியில் present பண்ணலாம். உங்களுக்கு ஆங்கில படங்களும் தமிழ் படங்களும்தான் தெரியும். ஜெர்மன், ரஷ்யன், இரான், சீனா என்று பல மொழி படங்கள் பார்ப்பவர்கள் எத்தனை ஹாலிவுட் படங்கள் காப்பி அடிக்கப்பட்டவை என்று ஒரு பெரிய லிஸ்ட் குடுக்கலாம். அமெரிக்காவில் இருப்பவர்களும் மனிதர்கள்தான் சொல்லப்போனால் அமெரிக்கர்களைவிட காப்பி அடிப்பவர்களை யாரும் பார்க்க முடியாது. தொழில் நுட்பத்தை adopt செய்வதை போன்று பாதித்த விஷயங்களை நமது வட்டார கலாசரத்தில் பதிவதை adopt செய்ய வேண்டியதுதான். அப்படி ஏற்காமல் பார்த்தால், இன்று இருக்கும் TV showக்களில் இருந்து நாம் போட்டிருக்கும் pant, shirtலிருந்து இந்த Blog,comment சமாச்சாரம் வரை எல்லாம் எல்லாம் காப்பிதான்

Anonymous said...

After Watching AYAN movie, I thought the scenes are taken from burne Ultimatum, 12 B ( French Action Movie , I am not sure of the movie name), Australia, Apocalypta. the base of the movies taken from "Catch me if you can".

I had no interest to see this flim. after watching half of the flim. They say we did this. We worked out hard. For what ? they worked out hard for seeing DVD.

the one scene from that movie itself summarizes the background that movie. ( Bank robbery - Surya gives some movie names )

Anonymous said...

Saroja - Judgement Night
http://www.imdb.com/title/tt0107286/

Rama Karthikeyan said...

"மணிரத்தினம், கமல் போன்றோர் தமிழ் சினிமாவின் பெருமை. இதை காபி அடித்தல் என்பது அவர்களை அசிங்க படுத்துவது போல இருக்கு.

ஒரு நல்ல தேவையான/ரசிக்கக்கூடிய கருத்தை எடுத்து நமது ரசனைகேற்ப வழங்கியது அவர்கள் சாதனை."

இதெல்லாம் காபிக்கு சப்பைக்கட்டு. இது அவர்கள் திறமை பற்றிய கேள்வி இல்லை. என்னை போன்ற அப்பாவி ரசிகர்களை இது அவர்கள் சொந்த கற்பனை என்று நம்ப வைத்தது, என்னை பொறுத்த வரை தவறு.

நல்ல கருவை தமிழில் எடுப்பது தவறில்லை. பட டைட்டில் லில் அதை ரசிகர்கள்ளுக்கு தெரிவிப்பதே ந்யாயம்!!

Arumugaraj said...

மணிரத்னம்,கமல்ஹாசனை பற்றி குறை கூறுபவர்கள் இங்கே எத்தனை பேர் தங்களுடைய Blog ல் தன்னுடைய சொந்த படைப்புக்களை எழுதுகின்றனர்.
இட்லி வடை கூட இதை குமுதத்தில் இருந்து தானே சுட்டு போட்டுள்ளார்.. ஒரு பதிவிற்காக இப்படி COPY அடிக்கும் போதும் அவர்களை குறை கூறுவது அர்த்தமற்றது ..

Baski said...

For the first time lot of people scolded me.. I am happy...I think i can start my own blog...;)

Well... I can understand your view points..

Every movie scripted out of some inspiration.. no body starts with new whole story in mind... that inspiration could be a movie.. or a real life...or book...

This happens even in Hollywood...
There is a Titanic earlier.. even a Jurasic Park.. oh.. I dont know how many books on it..

How they have presented to you is what matters...

Avvai Shanmugi : K.S. Ravikumar
Anbe Sivam: Sundar. C

Still.. you say its Kamal movie.. thats Kamal.!

"பழுத்த பழத்தில் தான் கல்லடி படும்" என்பது சரி தான் போலருக்கு

Baski said...

//இககடே சூடு கண்ணா...

-----------------------
திமிரு - சண்டைக்கோழி

மலைக்கோட்டை - சண்டைக்கோழி

தோரணை - மலைக்கோட்டை
-----------------------------------
கில்லி - திருமலை
திருப்பாச்சி - கில்லி
சிவகாசி - திருப்பாச்சி
குருவி - சிவகாசி
வில்லு - குருவி
வேட்டைக்காரன் - You are right. நீங்க சொல்றது ரொம்ப சரி :)
///


Awesome ! Thanks Nellai Express..

(IV.. This blog's comments may hit century soon.)

giri said...

துரை - Gladiator

Gladiator படத்தில் வரும்..சுவையான காட்சிகளை அப்படியே..அடித்திருப்பார் இயக்குனர்

Anonymous said...

Mani - atleast accepts that he's inspired by certain incidents etc.
Kamal -ulaga nayagan? donno if the title has pun intended. was uruving from around the world WITH OUT giving credit. Also dissing Hollywood for the same.

REMAKE is what they do.
LIES is what they tell about the story origin.
PIRACY is what middlemen do.
THIRUTU DVD is what we do.

It doesn't make KAMAL's thirutu any less.

Anonymous said...

In Ullasam (Ajit and Vikram movie i think) the concept of bus driver's son becoming a gunda in the gang of a local rowdy is taken from (or copied or inspired by) the movie Bronx tale, directed by Robert De Niro.

Regarding Baski's comments about Kamal, all those movies directed by different directors with Kamal as hero did not have any of their style. Even those directors have said like this.."kamal called me one day...he told me this story...he has everything typed in his computer...i was amazed after hearing the story...he magnanimously gave this opportunity to me..etc etc " Even if Steven Spielberg makes movie in which kamal acts, our media will say it is a Kamal movie only. In all the interviews, all the members of the film crew (right from lightman to director) will not take any credit for their work; all will say it was due to kamal only..he got up at 2 am to apply makeup, he did not eat anything for 220 hours for the movie...all the Hollywood technicians were amazed by his talents and knowledge...etc etc...but ultimately (most probably) the movie will be a Avial of lot of hollywood movies mixed with his scrwed up sidhaanthams...

Anonymous said...

Derailed - pachhai kili muthu charam

Baski said...

// துரை - Gladiator //

நானும் அந்த கொடுமையை பார்த்தேன், இது அர்ஜுன்க்கு இருக்கும் ரொம்ப நாள் நோய் ...

அவர் காட்சிகளை அப்படியே எடுக்க முயற்சிப்பார். ஆனால் தமிழ் பட பட்ஜெட்டுக்கு அது ஒத்துவராது. இது அவருடைய குறை :-(

Anonymous said...

walk in the clouds - Pooveli;
Unlawful entry - Aasai
Two Much - Naam Iruvar Namakku Iruvar

I have watched the movie "Life of David Gayle", except for meeting the prisoner, there is no other relation to Virumandi.

Anonymous said...

/***I have watched the movie "Life of David Gayle", except for meeting the prisoner, there is no other relation to Virumandi.***/

summa ethavathu titles ah map panni vida vendiathu......athaan namakku kai vantha kalai.

கால்கரி சிவா said...

படம் வருவதற்கு முன்னமே கதையை காப்பியடித்து ஒலக நாயகன் எடுத்த படம் தசாவதாரம். கதை Angels and Demon

Anonymous said...

Vetri Vizha is not the same as Bourne Identity.
Life of David Gale is not the same as Virumaandi.
And Gautham Menon paid for the rights to convert the book 'Derailed' into a Tamizh movie.
inga makkal judge panradha paarthaa, Kamba Ramayanam kooda copy nu solliduvaanga pola irukku ba.

Anonymous said...

/****படம் வருவதற்கு முன்னமே கதையை காப்பியடித்து ஒலக நாயகன் எடுத்த படம் தசாவதாரம். கதை Angels and Demon****/

This is too much......en ivvalavu kobam kamal mela?????


/****Kamba Ramayanam kooda copy nu solliduvaanga pola irukku ba.***/

Kambaramayanam remake than, ithil enna santhegam??

Erode Nagaraj... said...

//கதவில் எட்டி பார்ப்பவரின் கண்ணில சுடுவார்கள். தமிழிலும் அதே. கொஞ்சமாவது மாற்ற வேண்டுமென்றுகூட கவலைப்படாமல் சுடுபவர்..//

டியர் வண்ணத்துப் பூச்சி, அதுவே சுடும் சீன் தானே...

ஐயா அனானி, பொம்மலாட்டம் சுஜாதாவின் சிறுகதையிலிருந்து உருவியது.

Erode Nagaraj... said...

The difference between getting inspired and just copying is a very thin layer. Many directors think that if the names of people and places are changed to regional colour, they can survive under the inspiration effect, but they fail to realise that the "ins" will vanish sooner.

Erode Nagaraj... said...

The reason for the so called "inspiration" (copying)is because of the creativity and skill lying in-separation?

Prosaic said...

If you ask Kamal to copy a scene which was beautifully performed by another actor, he will match the performance or may even better it. But how many other actors can do it?

As a writer Kamal maybe questioned, but his acting skill is no inferior to anyone in this world.

Anonymous said...

All the movies are not copied as it is..... they just present the movie in which tamil audience understands.... there is nothing wrong in it... kamal and manirathnam are legends...

Anonymous said...

some scenes of ayan movie, where they smuggle the drugs by swallowing was copied scene by scene from spanish movie - maria full of grace. Initially, I thought the director has really done some research to put a screenplay for drug smuggling scenes. But he seem to have simply relied on hollywood movies and vomitted them in Ayan movie.

Anonymous said...

Kannathil muthamittal got 11 NAtional awards but

KANNATHIL MUTHAMITTAL inspired from SECRET AND LIES

But i ll definitely go wit kamal for his extraordinary atheism in the movie anbe sivam...
Extraordinary casting of each character..

Shyam said...

Nagayan - adding salt tubes to the smuggling goods was inspired by "Once upon a Time in America"