பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, July 04, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 4-7-2009


இந்த வார முனி கடிதம்....

முனி,

நாம் வெட்டியாய் வம்புச் செய்திகளையே எழுதிக்கொள்வதாக சிலர் சலித்துக் கொள்கிறார்கள். உனக்கு ஒர் உண்மை தெரியுமா? கிசுகிசு, மற்றும் வம்பு பேசுவது உடல் நலத்துக்கு நல்லது என்று அமெரிக்க பல்கலைக்கழகம் சொல்லியுள்ளது. இந்தியர்களின் நீண்ட ஆயுளுக்கு இந்த வம்பு பேசுவதுதான் காரணம் என்று மருத்துவரீதியாக விளக்கியுள்ளார்கள். இந்தியாவில் பெண்கள் ஏன் ஆரோக்யமாக இருக்கிறார்கள் என்று இப்போது புரிகிறதா? இட்லிவடை பற்றி கூட நிறைய கிசுகிசு அடிக்கடி டிவிட்டரில் பேசப்படுகிறது. கலிகாலத்தில் நாரதரின் வேலையை சிவனே ஏற்றுக்கொண்டுள்ளார். சிவனுக்கு அதிக ஆயுளை சிவனின் குமரன் அருளட்டும்.

நம் திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. சரி எல்லோருக்கும் தெரியும் முருகன் தமிழ் கடவுள் என்று ஆனால் 'தமிழ்' இந்து சைட்டில் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை என்று ஒருவரிடம் கேட்டேன் அடுட்த இரண்டு நாளில் எழுதிவிட்டார்கள். அவர்களுக்கு பெரியாரின் மறுபக்கம், சல்மான் ருஷ்டி போன்ற இந்து மதக் கொள்கைகளைப் பரப்புவதிலேயே நேரம் சரியாக இருக்கிறது. ஆன்மிக ஹிந்துகளுக்கும், அரசியல் ஹிந்துக்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. (இதை நான் சொல்லவில்லை, சொன்னவர் யார் என்று சொன்னால் கோஷ்டி சண்டை வரலாம்). மும்தாஜின் 'மல மல' பாடலைக் கேட்காமல் இருப்பது ஹிந்து ஆன்மிகம், அந்தப் பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொடிபிடிப்பது ஹிந்து அரசியல். என்ன புரிந்ததா? நமக்கு ஏன் ஊர் வம்பு?

முன்பு 'மல மல மருத மல' என்று மும்தாஜுக்கு வாலி பாட்டு எழுத, அந்தப் படத்தை இயக்கியவர் தற்போது 'மலை மலை' என்று பெயர் வைத்து இரண்டு வேலைச் செருகி வைத்து முன்பு செய்த பாவத்திற்கு பிராயசித்தம் தேடியுள்ளார்.

ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது 'தமிழ்இந்து'வில் நாளுக்கு 3, 4 கட்டுரைகளைப் பொழிகிறார்கள். அவர்களைக் காட்டிலும், ஓயாது பேசும் மிர்ச்சி (இப்போது ரேடியோ ஒன்) சுச்சி தேவலை. தன் வீட்டு நாய்குட்டிக்கு கபாலிஸ்வரி என்று பெயர் வைத்திருக்கிறார். ஒரு காலத்தில் "கந்தசாமியே எங்கள் சொந்தசாமியே" என்று பித்துக்குளி பஜனை செய்தார். சாமியாக நடித்தவரிடம் "எக்ஸ்யூஸ் மீ கந்தசாமி என்கிறார்" சுச்சி. கொஞ்சம் கடி ஜோக் தான் ஆனால் மூட்டை பூச்சி அளவுக்கு இது கடி இல்லை!.

ராத்திரி பயணம் மேற்கொள்ளும் பயணிகள், மூட்டைப் பூச்சிக் கடிக்கு ஆளாகி, கடும் அவதியடைந்து வருகின்றனர் என்று இந்த முறை சட்டசபையில் பேசியுள்ளார்கள், எனக்கு என்னவோ அடிக்கடி வெளிநடப்பு செய்வது கூட இந்த மூட்டை பூச்சி தொல்லையால் இருக்குமோ என்று தோன்றுகிறது. எதற்கும் மருந்து அடிக்கும் போது சட்டசபைக்கும் சேர்த்து அடிப்பது நல்லது. மூட்டை பூச்சி, கொசு, அரசியல்வாதி இவர்களை எல்லாம் எந்த மருந்து கொண்டும் அழிக்க முடியாது என்பது வேறுவிஷயம்.


தற்போது ரீமிக்ஸ் பாடல்கள் எல்லாம் காதை என்னவோ செய்கின்றன. கொசுக்கள் சுற்றி வரும் போது நம் காதில் 'ஞொய்ஞ்' என்று ஒரு சத்தம் வருமே அது போல இருக்கிறது. கேட்டு முடித்தவுடன் நல்ல பசி தாகமும் ஓடிக்களைத்ததுபோல் சோர்வும் ஏற்படுகிறது. இந்த 'ஞொய்ங்' சத்தம் கேட்கும் போது நமக்கு எரிச்சலாக இருக்கும்; ஆனால் அவை கொசுக்களின் காதில் கவிதைகளாக ஒலிக்குமாம். ஒருவகை கொசுக்கள் காதல் 'டூயட்' கூட பாடுமாம். இந்த கொசுக்கள் தான் நோய்களை பரப்புகின்றனவாம். ஆக கவிதை எழுதுபவர்கள் ஏதையாவது பரப்புகிறார்கள். அதை கேட்பவர்களுக்கு தான் வலி அதிகம். நல்ல வேளை குதலைக் கவிதைகள் இப்போது வருவதில்லை, அவர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்று கேள்வி.

நேற்று ஒரு ஆன்மிகச் சொற்பொழிவுக்கு போயிருந்தேன். "கண்ணன் குழல் ஊதும் போது ஆங்காங்கே இருந்த பட்ட மரங்கள் எல்லாம் துளிர்த்தன..." என்று சொன்னதும் பக்கத்தில் இருந்தவர் "கண்ணன் கையில் வைத்திருந்த புல்லாங்குழல் மட்டும் ஏன் துளிர்க்கவில்லை?" என்று கேட்டார். நான் நேராக வீட்டுக்கு வந்துவிட்டேன்.

வீட்டில் கலைஞர் டிவியில் கண்ணனே பேசிக்கொண்டிருந்தார். ஆனா இவர் ஜாக்கிசான், ஸ்பீல்பெர்க், டயானா பற்றி எழுதிய கண்ணன். இன்று காலை வலைப்பதிவைப் பார்த்தால் அவர் பேச்சில் மயங்கி கட்அவுட் கூட வைத்திருக்கிறார்கள். கண்ணன் கேமராவை நேராகப் பார்த்து பேசாமல், கேமராமேனையே பார்த்து பேசிகொண்டிருந்தார். கண்ணன் எப்போதும் உமனை தான் பார்ப்பார் என்று படித்ததுண்டு. அதனால் கேமராவை இயக்கியவர் உமனாக இருப்பார் என்பது என் எண்ணம். மைக்கேல் ஜாக்சன் பற்றி ஏதாவது தெரியவேண்டும் என்றால் கண்ணனுக்கு ஒரு ஃபோன் போடு என்று பத்திரிகை உலகில் பரவலாகப் பேச்சு.

மைகேல் ஜாக்சன் இறப்பதற்கு முன் இரவீந்தரநாத் தாகூர் எழுதிய வரிகளை படித்தார் என்று ஒரு செய்தி படித்தேன். உயிருடன் இருந்திருந்தால் இவர் பேட்டியைப் பார்த்திருப்பார். தப்பித்துவிட்டார். யார் என்று நீயே முடிவு செய்.

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை - மாநகரக் காவல் படத்தின் பாடல் வரிகள். இந்தப் பாட்டில் நடுவில் திடீர் என்று சம்பந்தமே இல்லாமல் ஒரு டப்பாங்குத்து பிட் வரும். ஏன் இது மாதிரி நல்ல பாடலில் இப்படி வருகிறதே என்று யோசித்ததுண்டு. அப்புறம்தான் சினிமா மியூசிக் ஃபில்டில் இருப்பவரிடம் விசாரித்ததில் பாட்டு கம்போஸிங் நடந்துக்கொண்டிருந்த போது தபலா (டிரம்ஸ்?) வாத்தியக்காரர் வாசிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, "நீ ஏம்பா சும்மா இருக்க" என்று மியூசிக் டைரக்டர் சத்தம் போட "டண்டனக்க டண்டனக்க" என்று அந்த மியூசிக் வந்ததாக பேச்சு. அந்த மியூசிக் டைரக்டர் மாதிரி "நீ ஏம்பா சும்மா இருக்க? எங்களுக்கு புத்தகம் எழுது" என்று தற்போது ஒரு பதிப்பகம் எல்லோரையும்(?!) எழுதச் சொல்லுவதாகக் கேள்வி. தமிழ்நாட்டில் புத்தகம் படிப்பவர் முட்டாள், எழுதுபவர்கள் புத்திசாலி, விற்பவர்? அதி புத்திசாலி!

தமிழ் நாட்டு மக்கள் முட்டாள் என்றால் உடனே கோபப்படாதே. அதை நான் சொல்லவில்லை. சொன்னவர் நடிகை ரோஜா. ஆந்திராவை விட தமிழக அரசியலில் ஈடுபட்டிருந்தால் இந்நேரம் எம்.எல்.ஏ. ஆகியிருப்பேன்'' என்கிறார் ரோஜா. ரோஜா சொல்லுவதை பார்த்தால் தமிழ் மக்கள் முட்டாள் என்பது உண்மையாக இருக்கும் என்று தான் தோன்றுகிறது. ஆக யாராவது எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்றால் தமிழ் நாட்டுக்கு வாங்கப்பா. இவர் படங்களைப் பார்த்த நமக்கு இதுவும் வேண்டும் இன்னுமும் வேண்டும்.

தமிழ் நாட்டு மக்களை காட்டிலும் உத்திர பிரதேச மக்கள் இன்னும் முட்டள்கள் என்று நினைக்கிறேன். மாயவதி தன் உருவ சிலைகளுக்கும் தன் கட்சி சின்னமான யானை சின்னத்துக்கும் பளிங்குக் கற்களால் சிலை அமைத்துள்ளார். இதற்கு ஆன செலவு 60 கோடி ரூபாய். எல்லாம் மக்கள் வரி பணம். மத்திய அரசிடம் வளர்ச்சிக்கு அதிக நிதி கேட்டது எதற்கு என்று இப்போது புரிகிறது. எதாவது சாதனை செய்து சிலை வைத்து கொண்டால் பரவாயில்லை, ஆனால் சிலை வைப்பதே ஒரு சாதனையாக.... அந்த எஸ்டரா சிலை இன்னும் வைக்கவில்லை. புதிய நியூட்டனின் மூன்றாம் (தலை)விதி - "மக்கள் போட்ட ஒவ்வொரு ஓட்டுக்கும் எதிர்ப் பலன் உண்டு"

ஆஹாவில் ஹீரோவாக நடித்த ராஜீவ் கிருஷ்ணா நியூட்டனின் மூன்றாம் விதி படம் வழியாக வில்லனாக கோடம்பாக்கத்துக்குள் நுழைந்திருக்கிறார். அடுத்த அஜித் படத்துக்கு இவர் தான் வில்லன். ஏன் வில்லன் என்று கேட்டால் சினிமாவில் கதைதான் ஹீரோ மற்ற எல்லோருமே வில்லன் என்று தத்துவத்தை உதிர்க்கிறார். இவர் திரைக்கதை செய்த இரண்டு ஹிந்திப் படங்களும் சென்ற வருடம் ரிலீஸாகி சரியாகப் போகவில்லை. இப்போது நியூட்டனின் மூன்றாம் விதியும் ஊத்திகிச்சு ஏன் என்று கேட்டால் இவர் சொல்லும் பதில் - ஐ.பி.எல் கிரிக்கெட். ஆக சினிமாவில் கதை தான் ஹீரோ, வில்லன் ஐ.பி.ல்.

இப்ப அதிமுகவிற்கு வில்லன் எஸ்.வி.சேகரா இல்லை திமுகவா என்று குழம்பி போயிருக்கிறார்கள் மக்கள். நேற்று சட்டசபையில் "அவா அவா செய்த பாவம் அவாளுக்கு. நீ செய்த பாவம் நோக்கு; நாங்க செய்த பாவம் நேக்கு" என்று நேக்காகப் பேசியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். "இந்த பேச்சை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள முடியாது. இது பிராமணர் சமுதாயம் பேசுகிற வழக்காகும். பிராமணர் சமுதாயத்தை அவர் புண்படுத்தியிருக்கிறார்" என்று நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் சீரியஸாகப் பேசியுள்ளார். முன்பு சட்டசபையில் பாப்பாத்தி என்று ஒருவர் சொன்னபோது இவர் சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். இனி எஸ்.வி.சேகருக்கு மிரட்டல் ஃபோன் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

ராஜா நீதிபதியை மிரட்டினாரா இல்லையா என்பது தெரியாது ஆனால் பின்னூட்டம் ஒன்று இப்படி வந்தது

ராஜா!
ராஜாதி ராஜன் இந்த ராஜா !
தூக்காத ஜட்ஜுக்கெல்லாம் கூஜா !
ஜாமீன் இல்லை மிரட்டல் இல்லை -
அப்பவும் நான் ராஜா!
'வானவில்' உண்டு - வாங்கும் கை உண்டு -
எப்பவும் நான் ராஜா!

சூப்பர் சிங்கர் ஜூனியர் - 2 என்று நல்ல வேளை பெயர் வைத்தார்கள். இனி 2020ல் கூட இவர்கள் அதை முடிக்கலாம், கவலையில்லை. அதற்கு மேல் இழுத்தடித்தால் போட்டியில் கலந்துக்கொள்ளும் ஜூனியர்ஸ் எல்லாம் சூப்பர் சிங்கர் சீனியர் போட்டியிலும் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. நேற்று காண்பித்த எபிசோடுகளில் செலக்ட் ஆகாத கோவை பசங்க எல்லாம் சிரித்துக்கொண்டுதான் போனார்கள். விஜய் டிவி அப்படியும் சோக ம்யூசிக் போட்டு அவர்களை ஸ்லோ மோஷனில் நடக்கவிட்டார்கள் ... சரி, அவர்களுக்கு இது பிசினஸ்.


ஜெயமோகன் அமெரிக்கா பயணம் செய்ய போகிறார், அதனாலா என்று தெரியாது ஆனால் தற்போது 'ஜெமோ, சாரு' எழுத்து அடிதடி பிசினஸ் இணையத்தில் சூப்பராக விலைபோகிறது. 'தலை'களைவிட 'என் தலையைச் சொன்னவனைத் தாய் தடுத்தாலும் விடேன்' என்று கிளம்பியிருக்கும் சிஷ்யகேடிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதுதான் எதில்முடியும் எப்போது இந்தப் புயலும் புயல் சார்ந்த புழுதியும் அடங்கும் என்று தெரியவில்லை. ஜெயமோகனுக்கு அமெரிக்க டிக்கெட் கிடைத்ததற்கே இந்த அர்ச்சனை என்றால் போய் சேர்ந்தவுடன் ஆர்த்தி காண்பித்து மணி அடித்துவிடுவார்கள்.

மணி பற்றி ஒரு கேள்வி..

கடிகாரம் ஐந்து நொடிகளில் 6 தடவை மணி அடிக்கிறது. அப்படி என்றால் 12 அடிக்க எவ்வளவு நொடிகள் எடுத்துக்கொள்ளும்?

தெரியாதவர்கள் ரேடியோ ஒன் நிகழ்ச்சியில் 9.43க்கு ரஜினி பாட்டு போடுவார்கள். அதைக் கேளு :-)

முனி கடிதத்தில் நான்-வெஜ் படங்களாக இருக்கிறது, என்று சில பெண் வாசகர்கள் கோபித்துக் கொண்டதால் இந்த வார படங்கள் எல்லாம் சுத்த சைவம் :-)

இப்படிக்கு
இவ

24 Comments:

பா. ரெங்கதுரை said...

//"நீ ஏம்பா சும்மா இருக்க? எங்களுக்கு புத்தகம் எழுது" என்று தற்போது ஒரு பதிப்பகம் எல்லோரையும்(?!) எழுதச் சொல்லுவதாகக் கேள்வி.//

அதை ஏன் கேக்குற முனி, எல்டாம்ஸ் ரோடு தபால் ஆபிஸுக்கு வருபவர்கள்கூட இப்போது பயப்படுகிறார்களாம். யாரேனும் அங்கேயே உட்கார்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தால், உடனேயே மொட்டைமாடிக்குக் கீழே உள்ள மாடிக்குத் தூக்கிக்கொண்டு போய்விடுகிறார்களாம்.

Anonymous said...

// 'தலை'களைவிட 'என் தலையைச் சொன்னவனைத் தாய் தடுத்தாலும் விடேன்' என்று கிளம்பியிருக்கும் சிஷ்யகேடிகள் //

should have been like this...'தலை'களைவிட 'என் தலையைச் சொன்னவனைத் "தலை" தடுத்தாலும் விடேன்'...

Erode Nagaraj... said...

ஓடாத பல படங்களை எண்ணிப் பார்த்தால், வில்லோ குருவியோ அவற்றிற்கு விஜய் தான் வில்லன். கதையே ஒன்றுமில்லை ரகம் தான். ஆனால், அதே கதையில் ஒரு அறிமுக அல்லது மூன்றாவது வரிசை ஆள் யாரேனும் 'நடித்திருந்தால்' இன்னும் கொஞ்சம் நல்ல பெரும் மேலும் சில நாட்கள் ஓட்டமும் கிடைத்திருக்கும். ராஜீவ் கிருஷ்ணா சொல்வது பெரும்பாலும் உண்மை.

Erode Nagaraj... said...

"கண்ணன் கையில் வைத்திருந்த புல்லாங்குழல் மட்டும் ஏன் துளிர்க்கவில்லை?"

அது பட்ட மரம் அல்ல; சுட்ட மரம் ஐயா...

அப்படியே துளிர்த்தாலும், துளிர்த்து, பூத்து, காய்த்து, விதை பெருக்கி, சந்ததிகளாய் வீரப்பர்களாலோ - பா.ம.கா.வாலோ வெட்டுப்பட்டு வாழும் அவல வாழ்க்கை, கிருஷ்ணனின் கைக்கு வந்தும் எப்படித் தொடரும்? பிறவியற்ற மோக்ஷமல்லவா அது?

Erode Nagaraj... said...

//should have been like this...'தலை'களைவிட 'என் தலையைச் சொன்னவனைத் "தலை" தடுத்தாலும் விடேன்'...//

விடுங்கள்.

ஜெயமோகன்-சாரு காமெடியில் வம்பில் திளைக்கும் வாசகப் பெருந்தகைகள் சகல நலன்களும் பெறட்டும். நோயற்ற வாழ்வு அடைப்பற்ற வாழ்வு ஏதாவதொரு வகையில்.

Erode Nagaraj... said...

//இவர் படங்களைப் பார்த்த நமக்கு இதுவும் வேண்டும் இன்னுமும் வேண்டும்.//

ஓ.. அந்தப் படத்தை நீர் பாத்தாச்சா...நல்லா தான் இருந்திருக்கும் போல.. இன்னமும் வேணுங்கறீரே ...

டன்மானடமிழன் said...

//சிஷ்யகேடிகள்//

சிஷ்யகேடிகள்னு சொல்றது கூட
தப்பு
அரைவேக்காடுகள் சரியான வார்த்தை

தமிழ் வலையுலகத்தில்
முதன் முதலாக
ஒருவருக்கு "அரைவேக்காடு"னு
பட்டம் கொடுத்தாங்களே
அது யாரு?... யாருக்கு கொடுத்தது?

நல்லா "ஸ்மைல்" சாரி "டைம்" எடுத்து யோசித்தாலும் ஞாபகத்துக்கு
வரமாட்க்குதே இ.வ
உங்களுக்கு ஞாபகம் இருக்கா...?;-)

R.Gopi said...

//கண்ணன் கையில் வைத்திருந்த புல்லாங்குழல் மட்டும் ஏன் துளிர்க்கவில்லை?" என்று கேட்டார்//

*********

Idlyvadai, vijaarichchu paarunga.. Unga pettai MLC aa irukkum....

//முனி கடிதத்தில் நான்-வெஜ் படங்களாக இருக்கிறது, என்று சில பெண் வாசகர்கள் கோபித்துக் கொண்டதால் இந்த வார படங்கள் எல்லாம் சுத்த சைவம் :-)//

Innaabaa ore VEG ??/ Sutha bore...

sreeja said...

சைவ படங்களும் நல்லாதான் இருக்கு.

எல்லா ஏரியாவையும் தொட்டுட்டு வந்தாச்சு.

நல்லாஇருந்துச்சு.

Venkatramanan said...

//தெரியாதவர்கள் ரேடியோ ஒன் நிகழ்ச்சியில் 9.34க்கு ரஜினி பாட்டு போடுவார்கள். அதைக் கேளு :-)//
For 5 gaps time = 5 sec.
For 11 gaps time = 11 sec

& ரேடியோ ஒன்(94.3இல்) 9.43க்குத்தான் ரஜினி பாட்டு! 9.44க்கு அல்ல!

இட்லிவடைக்கும்...!

Unknown said...

கண்ணுக்கு குளிர்ச்சியாக படத்தைப் போட்டு , நாட்டு நடப்பை பக்காவாக முனி விளக்கிடுச்சி....

கௌதமன் said...

என்ன எல்லாம் சைவப் படங்களா?
முதல் படத்தில் கத்திரிக்காய்க்கு அருகில்
கனிவாக அமர்ந்திருப்பது அரை (அவிச்ச) முட்டையா -
அல்லது இட்லி வடையா?
( பின் குறிப்பு: ராஜாதி ராஜா பாடல் வெளியிட்டதற்கு நன்றி)

வாழவந்தான் said...

//
இந்த வாரம் முனி இவக்கு எழுதும் கடிதம்....

முனி,
//
இப்படி ஆரம்பிச்சு.......


//
இப்படிக்கு
இவ
//
இப்படி முடியுது...
எது சரி... இந்த கடிதத்தின் விடுனர், பெறுனர் யாரு?

m said...

I like this post... it is true that along with vitamins and minerals, a daily dose of gossip is really good for health!


@ Kggouthaman.... athu Avocado...pathiya vetinathu... i think that is the one which we call as Butter fruit around the hill areas in TN!

எவன் சிவன் said...

//இட்லிவடை பற்றி கூட நிறைய கிசுகிசு அடிக்கடி டிவிட்டரில் பேசப்படுகிறது. கலிகாலத்தில் நாரதரின் வேலையை சிவனே ஏற்றுக்கொண்டுள்ளார். சிவனுக்கு அதிக ஆயுளை சிவனின் குமரன் அருளட்டும்.
//

ஆமாம். இப்போதெல்லாம் ஒரு வெப்சைட்டையோ, ப்ளாகையோ ஆரம்பித்துவிட்டு அதை பிரபலப்படுத்த வேண்டுமென்றால் நீங்கள் சிவனாரிடம் சொன்னால் போதும். உடனே அவர் ட்விட்டரில் கிசு, கிசுத்துவிடுவாராம். ஒருகாலத்தில் தான் கடுமையாக துதி பாடிக்கொண்டிருந்த அமெரிக்க விஜய எழுத்தாளரைப் பற்றி கூட அவர் இப்போதெல்லாம் கிசு, கிசுத்துக் கொண்டிருக்கிறாராம். நான் கூட ஒரு ப்ளாக் ஆரம்பித்துவிட்டு என்னை ஒரு இந்துத்துவவாதி என்று சிவனிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். இவர் இலக்கிய பத்திரிகைக்கு ஆசிரியரானதற்கு பதிலாக வாரமலருக்கு ஆசிரியராகப் போயிருக்கலாம். இந்த கிசு, கிசு எழுத்தாளர் இன்னொரு கிசு, கிசு எழுத்தாளரான சாருவைக் கடுமையாக வசைபாடுவதுதான் இதில் மிகப்பெரிய காமெடி :-)

Anonymous said...

முனி இவக்கு எழுதும் கடிதம்....

முனி,.....
...
இப்படிக்கு
இவ

Krish said...

///இந்த வாரம் முனி இவக்கு எழுதும் கடிதம்.////

இவ முனிக்கா இல்லை , முனி இவக்க?

M Arunachalam said...

//ராஜா நீதிபதியை மிரட்டினாரா இல்லையா என்பது தெரியாது ஆனால் ... //

அவருக்கு மந்திரி பதவி வாங்கி குடுத்து ஒருத்தர் பட்ட அவஸ்தை கதையை ("விக்ரமாதித்தனும், வேதாளமும்" ) இங்கே படிங்க:

http://hereisarun.blogspot.com/2009/07/blog-post.html

Krish said...

எழுத்தாளர் ன்ன ரொம்ப அறிவாளியா matured இருப்பாங்கன்னு நெனைச்சான். சில்லறை தனமா இப்படி இருவரை ஒருவர் திட்டிகிறதா பார்த்த அசிங்கமா இருக்கு. அரசியல், சினிமா தாண்டி, இப்போ எழுத்தாளர்களும் இப்படி அடிப்பொடிகளை ஏத்திவிட்டு publicity தேடிக்கிரங்க.

Anonymous said...

திரு இட்லி மற்றும் திரு வடை அவர்களே!
சும்மா சொல்லக் கூடாது ஒங்களோட திறமையை!!
என்னமா ஒவ்வொரு நியூசையும் link பண்ணி "பின்னி" இருக்கீங்க! அதுக்காகவே ஒரு பெரிய சபாஷ் உங்களுக்கு.
ரெண்டாவது பலே, சுத்த சைவப் போஸ்ட் போட்டதுக்கு. படிக்கும் போதே சந்தோஷமா இருக்கையா!!!

நல்ல இருங்க"தெக்கத்தி" ராசா மார்களே!!!!

Anonymous said...

////இது பிராமணர் சமுதாயம் பேசுகிற வழக்காகும். பிராமணர் சமுதாயத்தை அவர் புண்படுத்தியிருக்கிறார்" என்று நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் சீரியஸாகப் பேசியுள்ளார். முன்பு சட்டசபையில் பாப்பாத்தி என்று ஒருவர் சொன்னபோது இவர் சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். இனி எஸ்.வி.சேகருக்கு மிரட்டல் ஃபோன் வரும் என்று எதிர்பார்க்கலாம்.////

இட்லியும் - வடையும் உஷாரா இருங்க! இப்டி ஓப்பனா மிரட்டல் வரும் என்று போட்டுளீர்கள்! நீங்கள் தான் போன் செய்வீர்கள் என்று நினைத்து அதற்கு முன்னால் உங்களுக்கு "ஆட்டோ" அனுப்பிவிடப்போகிறார்கள்! இது கலிகாலமையா! ஜாக்ரதை!

Unknown said...

இ வ,

ஹிந்து அரசியல் மற்றும் ஹிந்து ஆன்மிகம் --- வித்யாசம் பலே
மூட்டை பூச்சி மற்றும் கொசுவை கூட அழித்துவிடலாம் ஆனால் அரசியல்வாதி ? சந்தேகம் தான்
லேட் ஞானோதயம் ரோஜாவின் சினிமா வை பற்றி ? இவர் சினிமாவில் மட்டுமா நடித்தார் ? சுர்லா வுக்கே வெளிச்சம்
சிலை திறப்பு விழா ... இப்போது மாயாவதிக்கு ப்ரசின்னை
பிராம்மண சமுதாயத்தி பற்றி சேகருக்கு என்ன ஒரு அக்கறை

வழக்கம் போல் கலக்கி இருக்கு முனி கடிதம்

காமேஷ்

கால்கரி சிவா said...

//முதல் படத்தில் கத்திரிக்காய்க்கு அருகில்
கனிவாக அமர்ந்திருப்பது அரை (அவிச்ச) முட்டையா -
அல்லது இட்லி வடையா?
//
ஐயா, அது அவகடோ (Avacado) என்ற பழம்/காய். மெக்ஸிகன் உணவில் இது இல்லாமல் இல்லை. இதை வைத்து கோகமொலெ என்ற சட்னி நம்மூர் தேங்காய் சட்னி மாதிரி

முனி பக்தன் said...

இட்லிவடை எழுதுவது பலரை யோசிக்க வைக்கிறது. பதில் சொல்ல வைக்கிறது.

ஆன்மீக இந்துத்துவம், அரசியல் இந்துத்துத்துவம் பற்றி முனி சொன்னதற்கு, ஒரு சுவையான பதிலை இங்கே சொல்லியிருக்கிறார்கள். (ஹி ஹி ஹி, பதில் கவர்ச்சியாகவும் இருக்கிறது !)

முனி ரொம்பவும் மரியாதைப்பட்டவர் என்பது தெரிகிறது.