பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 09, 2009

சினிமா வளர்ந்த கதை - சாண்டில்யன் - புத்தக விமர்சனம் - 2

எழுத்தாளர்களுக்கு எதற்கு அசிஸ்டெண்ட் ?


அசிஸ்டெண்டாயிருப்பவர் எப்படி எழுத்தில் அசிஸ்ட் செய்ய முடியும் ? என்று கேட்காதீர்கள். அவர் நமக்கு எத்தனையோ உபயோகமாக மாயிருக்கலாம். அவரும் எழுதத்தான் வேண்டும் என்று அவசியமில்லை. நாம் பத்து படங்களை ஒப்புக்கொண்டால் பத்து ஷூட்டிங்கிலும் ஏக காலத்தில் காட்சியளிக்க நாம் கிருஷ்ணனாயிருக்க முடியாத காரணத்தால், அஸிஸ்டெண்ட் தேவைப்படுவார். பத்து படங்களுக்கு கதை எழுதவோ, டைரக்ட் செய்யவோ ஒருவரால் முடியுமா என்பது இன்றைய சினிமாவில் அர்த்தமற்ற கேள்வி, "நானிருக்க பயமேன்?" என்று அஸிஸ்டெண்ட் நமது வேலைகளைப் பூர்த்தி செய்வார்.

எப்படி பூர்த்தி செய்ய முடியும் என்பதற்கு உதாரணமாக பெரிய கவி ஒருவர் எப்படி தன் அஸிஸ்டெண்டுடன் கூத்தடித்த்தார் என்று விவரிக்கிறார். அதற்கு எப்படி பலர் ஜால்ரா போட்டார்கள் என்றும் விவரிக்கிறார். அவர்கள் பாஷையிலேயே எழுதியிருப்பது சுவை.

1930ல் ஆங்கில படங்களுக்கு சப்டைட்டில் இருந்தது என்று படித்து ஆச்சரியப்பட்டேன்!. சப் டைட்டில் புரியாத கிராமவாசிகள் ? எப்படி என்று இதை படித்துப்பாருங்கள்

எல்மோலிங்கன், எட்டிபோலோ, ஜாக் டாக்கர்டி ஆகிய இந்தப் பிரதான நடிகர்களில் ஒவ்வொருவரும் திறமையான
நடிகர். பேச முடியாத சினிமாவில் கண்களாலும், நடிப்பினாலுமே பேசினார்கள். இந்த சினிமாத் தொடர்கதைகள் சிலவற்றில் அதாவது படங்களில் 'சப் டைட்டில்' கள் இருப்பதும் உண்டு. அதைப் புரிந்துக்கொள்ளாத கிராம மக்களுக்கு புரிய வைக்க கதை சொல்பவர்களும் அந்த காலத்தில் உண்டு.
வெளியூர் கொட்டகைத் தியேட்டர்களில் இத்தகைய படங்கள் ஓடும்போது ஒருவர் இரைந்து படத்துடன் கதையும் சொல்லிக் கொண்டு போவார். "அதோ எட்டி போலோ கிளம்பிவிட்டார். எதிரிகளைப் பிடிக்க மோட்டார் சைக்கிள் பறக்கிறது. நெருங்கி விட்டார் எதிரிகளை. அதோ குதிக்கிறார் மோட்டார் சைக்கிளிலிருந்து, பத்து எதிரிகள், ஆனால் எட்டிப் போலோவுக்கு அவர்கள் எம்மாத்திரம். அதோ குத்துகிறார். 'டும்' அதோ இன்னொருவர் கிழே விழுகிறார் ஐயையோ எல்லோரும் ஓடிவிட்டார்கள்!" இப்படி கதாநாயகனின் வீரப் பிராதாபங்களை பாத்திரத்தின் நிகழ்ச்சிகளை ஒட்டி கூறிக் கொண்டே போவார். இப்படி தொண்டை கிழியக் கத்துபவருக்கு மாதம் 50 ரூபாய் சம்பளம். உணவு இலவசம்"


ரன்னிங் கமெண்டரி இங்கே தான் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். இதே போல ரன்னிங் கமெண்டரியை ரஜினி படத்துக்கு யோசித்துப்பாருங்கள் சிரிப்பு தான் வரும்.

தமிழ் மக்களின் பெருமையை இப்படி சொல்லுகிறார்.

தமிழ்மக்களை போல் அப்பாவிகள் உலகத்தில் யாருமில்லை, அவரகளை போல் கெட்டிகாரர்களும் யாரும் கிடையாது. அப்பாவி எப்படி கெட்டிக்காரனாக முடியும் ? என்று நீங்கள் வியப்படையலாம். சினிமாவில் அது சாத்தியம்.
"எதையும் தமிழ் மக்கள் தலையில் கட்டி விடலாம் என்று தமிழ்ப் பட முதலாளிகள் நினைப்பதால், அவர்கள் கண்களில் தமிழ் மக்கள் அப்பாவிகள்!. படம் ஏதாவது ஓடா விட்டால் 'நமது படம் ஹைக்ளாஸ் அதனால் தான் ஓடவில்லை' என்று முதலாளிகள் சொல்வதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.


லட்சியபடங்கள் ஏன் ஓடவில்லை என்று காரணங்களை அடுக்கிக்கொண்டு போகும் சாண்டில்யன் சொல்லும் ஒரு காரணம் சிந்திக்க வைக்கிறது.

"ஒரு பெரிய பக்தன் கதையை எடுக்கும் போது, மக்கள் பக்தியைக் கண்டு பயப்படுவார்கள் என்று நினைத்து, ஒரு பார்ப்பான் தலையில் பூவைச் சுற்றி அவனைத் தேவடியாள் வீட்டுக்குச் செல்வது போலும் உதை படுவது போலும் காட்சிகளை அமைத்து பக்தியையும் லட்சியத்தையும் சிதைத்தால், தமிழ் படங்கள் மண்ணைக் கவ்வின. லட்சிய படங்கள் என்று சொல்லப்பட்ட படங்கள் ஓடாததற்கு இது தான் முக்கிய காரணம்.

தமிழ் படங்களில் புரட்சி என்றால் கற்பழிப்பு நிச்சயம் இருக்க வேண்டுமா என்ன என்று கேள்வியும் கேட்கிறார்.

(அடுத்த பகுதியில் முடிக்க பார்க்கிறேன்)

பகுதி - 1

3 Comments:

Unknown said...

இ,வ,
அஹா அருமையான விளக்கம்., இதைபோல் புத்தகம் முழுவதும் கிண்டலடித்து இருந்தால் ஒரு தயாரிப்பாளராக, இயக்குனராக முக்தாவின் வருத்தம் ந்யாயம். அண்ணல் என்ன செய்ய உண்மை சுடும். Subtitle concept அருமை,

"தமிழ் படங்களில் புரட்சி என்றால் கற்பழிப்பு நிச்சயம் இருக்க வேண்டுமா என்ன என்று கேள்வியும் கேட்கிறார்." - நெத்தியடி

"லட்சியபடங்கள் ஏன் ஓடவில்லை" - அருமையான சிந்தனை

ஆவலுடன் அடுத்த பகுதிக்கு காத்திருப்போர் பட்டியலில் நானும்...

காமேஷ்

கௌதமன் said...

Good.
Very interesting.
Please continue...

mazhai said...

// (அடுத்த பகுதியில் முடிக்க பார்க்கிறேன்) //

Why ? Your way of writing is good, please don't stop, continue.