இந்த வார முனி கடிதம்..
வணக்கம் முனி,
இந்த கடிதம் ஞாயிறு அன்று டிவியில் முனி படம் பார்த்ததில் உன் ஞாபகம் வந்து எழுதுகிறேன். ஞாபகம் என்று சொன்னவுடன் தான் ஞாபகம் வருகிறது. கவிஞர் பா விஜய் முதல்முறை கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள படம் ஞாபகங்கள். அதில், "ரஜினியின் அடுத்த படம் என்ன?" என்று கதாநாயகி கேட்க அதற்கு பா.விஜய், "ரஜினி இப்போது எந்திரன் படத்தில் நடிக்கிறார், அடுத்த ஆண்டு படம் ரிலீஸாகும்" என்பார்.ரஜினி என்றால் கூடவே கமல் பற்றி சொல்லாமல் இருந்தால் அது சினிமா மரபு இல்லையே அதனால் கதாநாயகியின் அடுத்த கேள்வி, "கமல் எப்படியிருக்கார்? கன்னமெல்லாம் இன்னும் கொழுக் மொழுக்குன்னு அப்படியே இருக்கா?"
அதற்கு பா.விஜய் தரும் பதில்: "இப்போ அவரை விட பெரிய பெரிய நடிகர்களெல்லாம் வந்தாச்சு தமிழ் சினிமால!!"
இதே பதிலை அவர் ரஜினிக்கு மட்டும் சொல்லியிருந்தால் அதுவே அவரது கடைசிப் படமாகவும் இருந்திருக்கும்.
இப்போது ரஜினியின் அளவுக்கு உயர்ந்து நிற்பவர் ராகுல் காந்தி தான். என்ன நான் சொல்வது புரியவில்லையா ? ராகுலின் 39வது பிறந்த நாளன்று 39 அடி உயர கட் அவுட் வைத்து 39 குடங்களில் பால் அபிஷேகம், 39 தேங்காய்கள் உடைத்து, கொண்டாடியிருக்கிறார்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் உருவாக்கிய காங்கிரஸ் கட்சி. ஹூம், ஏதோ அவர்களுக்கு அதில் ஓர் அல்ப சந்தோஷம்.
சரி இன்னொரு சந்தோஷமான விஷயம் சொல்கிறேன். 'உலகத்திலேயே சந்தோஷமாக இருப்பவர்கள் யார்?' என்பது பற்றி ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பணக்கார நாடுகளை விட ஏழை நாடுகளில் வசிப்பவர்கள் உண்மையிலேயே அதிக சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை `நியூ இகனாமிக்ஸ்' பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை நடத்தியது. உலகிலேயே அதிக சந்தோஷமாக இருப்பவர்கள் கோஸ்டாரிகா நாட்டினர்தான் என்பது இந்த ஆய்வில் தெரியவந்து உள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் டொமினிக்கன் குடியரசு நாடும், 3-வது இடத்தில் ஜமைக்கா நாடும் உள்ளன. உலகப் பணக்கார நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து நாட்டினர் மனநிறைவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இந்தப் பட்டியலில் 74-வது இடத்தில் உள்ளனர். ஜார்ஜியா, பர்மா ஆகிய நாட்டினரை விட தாங்கள் மகிழ்ச்சி குறைவாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர். ஃபிரான்சு நாடு இந்தப் பட்டியலில் 71-வது இடத்திலும், ஜெர்மனி 43-வது இடத்திலும் உள்ளது. இந்தியர்கள்? தெரியாது ஆனால் இந்தியர்கள் தான் எல்லா இடத்திலும் இருக்கிறார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளவேண்டியது தான். யார் அதிகம் பேசுபவர்கள் என்று ஒரு சர்வே வைத்தாலாவது இந்தியர்களுக்குதான் முதல் இடம் கிடைக்கும்.
சில வாரங்களுக்கு முன் அத்வானி நொந்து போய் இப்படிப் பேசியிருக்கிறார்:
"நமது கட்சியில் ஏராளமான செய்தித் தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் டெலிவிஷனில் முகம் தெரியவேண்டும் என்பதற்காக தேவையின்றி எதையும் பேசக் கூடாது. இது கட்சி அமைப்பை பலவீனப்படுத்துவதுடன் காங்கிரசுக்கு சாதகமாகிவிடும். எனவே பேசும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அப்போதுதான் தவறுகள் ஏற்படாது. எனவே அளவுக்கு அதிகமாக பேசும் போக்கை பா.ஜனதா தலைவர்கள் குறைத்துக் கொள்ளவேண்டும்"
அத்வானியை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. இது என்ன ஜெ கட்சியா, ஓசையே வராமல் பேச?
டாக்டர் அய்யா நடத்தும் தமிழ்ஓசை - "நாளிதழின் முதல் பக்கத்தில் பிரணாப் முகர்ஜியை - பிரணாப் முகர்சி - என்றும், கடைசிப் பக்கத்தில் ஜெயலலிதாவை - ஜெயலலிதா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதே; ஜெயலலிதாவை மட்டும் செயலலிதா என்று எழுத டாக்டர் அய்யாவின் ஏடு பயப்படுகிறதே அது ஏன்?’’ என்று முரசொலியில் கேள்வி கேட்டுள்ளார்கள். கூட்டணி தர்மம் என்றால் யாருக்காவது ஜெ போட்டுக்கொண்டு தானே இருக்க வேண்டியிருக்கிறது, இது கூடத் தெரியாதா என்ன ?
அடுத்து கலைஞருக்கு ஜெ போடும் லிஸ்டில் இருப்பவர்கள் - மார்க்சிஸ்ட் கட்சியினர் தான். அடுத்த தேர்தலுக்குள் அவர்கள் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் சேர முயற்சித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பது குருவி சொன்ன தகவல். அரசியலில் சமயத்திற்கு தகுந்தார்போல் செயல்பட வேண்டும். இன்று வேட்டி கட்டிக்கொண்டிருப்பவர்கள், நாளை லுங்கி கட்டிக்கொண்டால் ஆச்சரியப்பட கூடாது. அவர்களுக்கு டிரஸ் கோட் எல்லாம் கிடையாது. இந்த மட்டிலும் டிரஸ் இருக்கிறதே என்று சந்தோஷப்பட வேண்டியதுதான்.வடபழனி பஸ் நிலையம் அருகில் உள்ள கமலா தியேட்டரில் டிரஸ் கோட் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு இரண்டு தியேட்டர்களாக கட்டப்பட்டு உள்ளது. தியேட்டர் வாயிலில் லுங்கி அணிந்து வருவோருக்கு அனுமதி இல்லை என்று போர்டு எழுதி வைத்திருக்கிறார்கள். ஏன் என்று கேட்டதற்கு அவர்கள் சொல்லும் காரணம்: "லுங்கி அணிந்து வருபவர்களில் சிலர் மதுபானங்களை தியேட்டருக்குள் மறைத்து கொண்டு வந்து தொந்தரவுகள் செய்கிறார்கள், அவர்களுக்காக இந்த ஏற்பாடு." ஆனால் லுங்கி கட்டிக்கொண்டு வரும் சாஃப்ட்வேர் காரர்களுக்கு அனுமதி உண்டாம். சாஃப்ட்வேர் மக்களுக்கு எப்போதும் நாட்டில் சாஃப்ட் கார்னர்தான்.
அரசு கேபிள்டிவியை அடக்கம் செய்தபின் தமிழன் சேனலுக்கு இருந்த சாஃப்ட்கார்னர் போயே போச்சு. இப்பொழுது தமிழன் தொலைக்காட்சியை சென்னையைத் தவிர மற்ற இடங்களில் தேட வேண்டியுள்ளது. அங்கு வேலை செய்பவர்கள் பலர் விஜய் டிவியை முற்றுகையிட்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன். போன வாரம் மாம்பலம் சகோதரிகள் பாடும்பொழுது "மாம்பழம் சகோதரிகள்" என்றும் நாஞ்சில் நாடன் பேசும் பொழுது " நாஞ்சில் நாதன்" என்றும் போட்டார்கள். ஆச்சி தமிழ் பேச்சி எங்கள் மூச்சி (ஹி ஹி - ஆச்சி தமிழ் ... அப்புறம் இருப்பது எல்லாம் நம்ம சரக்கு) அப்பறம் ஒரு சிறுமி பேசும் பொழுது "பயம் கொல்லல் ஆகாது பாப்பா" என்றார். இதில் என்ன தவரு என்று கேட்கும் அப்பாவிகல் தாரலமாக இட்லிவடையில் சேரலாம்.ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸ் விஜய் நாராயணன் பற்றியும் கொஞ்சம் செல்ல வேண்டும். விஜய் இறுதி போட்டிக்கு வர வேண்டும் என்று விரும்பிய மக்களில் நானும் ஒருவன். பயலுக்கு நல்ல ஞானம். நேற்று தான் இவர் வலைப்பதிவு கூட வைத்திருக்கிறார் என்று தெரிந்துக்கொண்டேன். இவர் இடுகை ஒன்றும் படித்தேன் அதன் சம்மரி இது தான் - பிரசன்னா சும்மா பம்மாத்து வேலை செய்து நேயர்களை கவர் செய்கிறார்; அதனால் அவர் கிட்டத்தட்ட கடைசிவரை வந்தார், ஆனால் ரஞ்சனி எவ்வளோ முயன்றும் வர முடியவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார். (சூப்பர் சிங்கர் கேமராமேன் எவ்வளவு முயன்றும் ராகினிஸ்ரீ வர முடியவில்லை என்பது வேறு விஷயம்). இவர் சங்கீதத்தை தவிரவும் மீனம்மா பாடிய மனோ, பம்சிக்கு பம்சிக்கு பாடிய எஸ்.பி.பி இவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
பம்சிக்கு பம்சிக்கு பம் பம் பாம் என்ற பாடலுக்கு ஏற்றார் போல் அமெரிக்கவில் Laguna Niguel என்ற இடத்தில் "Mooning of the trains" என்ற கலாசாரம் இன்றும் இருந்து வருகிறது. என்ன என்று கேட்பவர்கள் படத்தை பார்க்க. டிரேயின் போகும் போது பின்பக்கத்தைக் கழற்றிக் காண்பிக்கிறார்கள். 1979ல் ஆரம்பித்த இந்தப் பழக்கம் இன்றும் இருக்கிறது. சிக்குபுக்கு சிக்குபுக்கு என்பது ரயில் ஓடும் சத்தம். பம்சிக்கு பம்சிக்கு என்றால் அந்த ஸ்டேஷனில் ஆடும் சத்தம்.
இந்தியா அப்படி எல்லாம் இல்லை; கலாசாரத்துக்கு பேர் போனது. ஆனால் தற்போது ஓரினச் சேர்க்கைக்கு நீதிமன்றம் பச்சை கொடி காட்டிவிட்டது. ஆனால் முன்பு ரயிலுக்கு பச்சைக் கொடி காண்பித்த அமைச்சர் லாலு இதற்கு சிகப்பு கொடி காண்பிக்கிறார். கலாசார காவலர்களான ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கூட இதை இப்படி எதிர்க்கவில்லை.
லாலு என்றவுடன் இந்த மாடு ஜோக் நினைவுக்கு வருகிறது.
"சார் என் மாடு காணாமப் போச்சு"
"என்னய்யா, போனமாசம்தானே எங்க பேங்க்ல லோன் எடுத்து வாங்கின, எப்டி காணாமப் போச்சு?"
"என்ன சார், நீங்க தானே சொன்னீங்க, மாசத்துக்கு ஒரு வாட்டி கட்டினா போதும்னு"எது எப்படியோ ஆடி மாசம் வந்தால் ஜவுளிக் கடைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். ஆடித் தள்ளுபடி என்று விளம்பரம் போட்டுத் தாக்கிவிடுவார்கள்.
மாமியார் வீட்டுக்கும் மாமனார் வீட்டுக்கும் என்ன வித்தியாசம் ?
ஆடிக்கு அழைச்சுட்டுப் போனா மாமனார் வீடு
அடிச்சு இழுத்துகிட்டுப் போனா மாமியார் வீடு
அன்புடன்
இட்லிவடை.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, July 14, 2009
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 14-7-2009
Posted by IdlyVadai at 7/14/2009 12:47:00 PM
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Subscribe to:
Post Comments (Atom)
21 Comments:
முனி form-ல இல்ல. ரொம்ப சுமாரான லெட்டர்.
///ஆடிக்கு அழைச்சுட்டுப் போனா மாமனார் வீடு
அடிச்சு இழுத்துகிட்டுப் போனா மாமியார் வீடு////
மொதல் எடத்துல stress பண்ணிக் கேட்டா bracelet கிடைக்கும்.
ரெண்டாவது எடத்துல கேக்காமலேயே போடுவாங்க!
சூப்பர் தலைவா
இ,வ,
"இதே பதிலை அவர் ரஜினிக்கு மட்டும் சொல்லியிருந்தால் அதுவே அவரது கடைசிப் படமாகவும் இருந்திருக்கும்." - சுப்பர்
காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தி பிறந்தநாள் கொண்டாடியதில் கோஷ்டி இல்லை என்று உங்களால் சொல்லடா முடியுமா ?
"இந்தியர்கள் தான் எல்லா இடத்திலும் இருக்கிறார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளவேண்டியது தான்." -- ஆறுதல்
And the Punch --- that's nice one
Once gain a good one from Muni
காமேஷ்
மானஸ்தன் உங்க விண்ணப்பம் வந்து சேர்ந்தது. நீங்களே அதை எல்லாம் ஒரு டைஜஸ்டா எழுதி தந்தால் நான் போடுகிறேன். இது என் விண்ணப்பம் :-)
அன்புள்ள முனிக்கு,
உன் அருமை அண்ணன் பிசாசு எழுதிக்கொல்வது என்னவென்றால் உன் சகவாச தோஷத்தால் நானும் வேதாள உலகத்தில் புகுந்து ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறேன். உனக்கு நேரமிருந்தால் என் பிளாக்குகளைப் பார்த்துவிட்டு "இவனுக்கு நாம் எவ்வளவோ தேவலை" என்று ஆறுதல் அடைந்துகொள்ளவும். முக்கியமாக உனக்கு மிகவும் பிடித்தமான இட்லி, சாம்பாரைப் பற்றி ஓட்டை இங்கிலீசில் பொளந்து கட்டியிருக்கிறேன்.
பார்த்துவிட்டுப் பிடித்திருந்தால் நாலு அட்சதை தூவவும். நன்றி.
Midday Musingshttp://jayan-middaymusings.blogspot.com/search/label/Idly%20Sambaar%20and%20Intelligence.
“ஙே”! http://jayan-comedy.blogspot.com/
////IdlyVadai said...
மானஸ்தன் உங்க விண்ணப்பம் வந்து சேர்ந்தது. நீங்களே அதை எல்லாம் ஒரு டைஜஸ்டா எழுதி தந்தால் நான் போடுகிறேன். இது என் விண்ணப்பம் :-)////
உங்கள மாதிரி "பெரியவாதான்" post போடணும்.
அத விட்டுட்டு, என்ன மாதிரி பின்னோட்டம் (மட்டுமே) போடற புள்ளயாண்டான்கிட்ட போயி
"டைஜஸ்டா எழுதி தந்தால் நான் போடுகிறேன். இது என் விண்ணப்பம் :-)" அப்டின்னு சொல்றது "சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு!
:-D
//உங்கள மாதிரி "பெரியவாதான்" post போடணும். //
ஒரு மாறுதலுக்கு நீங்க போடலாம், தப்பில்லை ! ( தப்பிக்கலாம் என்று பார்க்காதீர்கள் )
என்ன தான் அய்யா இங்க நடக்குது... நடுவில் முனிக்கு பிசாசிடமிருந்து வரச்சொல்லி ஒரு வேண்டுகோள் .... நிஜமாகவே இது வேதாள உலகம ... அப்ப நாங்க யாரு ...
காமேஷ்
போன வாரம் தான், அரங்கேற்ற "ஆல்பம்" காட்டிய ஒரு பையனிடம் "என்னடா எல்லாரும் நேரா பாத்துண்டு நிக்கறா... ஒருத்தர் கூட அந்தப் பக்கம் திரும்பல.. இதப் போயி All-Bum-னு சொல்றியே என்று வாரிக்கொண்டிருந்தேன்... நெஜமாவே All-Bum போட்டாச்சு இட்லிவடைல...
But(!), i like the word album. It gives room for more pun-fun.
This is a caption for a collection of photos of my guru Umayalpuram Sri K.Sivaraman, in my facebook profile: "let my AL-B-UMayalpuram sir"
அண்ணே ஈரோட்டாரே!!
"பம்"மிண்டு இருக்கற "பம்"பரம் விடற பையன்கிட்டே "பம்" பத்தி கேட்டுட்டு அத டம்"பம்"ஆ இங்க வந்து சொல்லரீரே!!
இது ஒங்களுக்கே நியாயமா இருக்கா?
என்னை மாதிரி கல்மிஷம் இல்லாத கொழந்தைகள் மனசைக் கெடுக்காதீங்க!!!
:-D
//ரஜினியின் அடுத்த படம் என்ன?" என்று கதாநாயகி கேட்க அதற்கு பா.விஜய், "ரஜினி இப்போது எந்திரன் படத்தில் நடிக்கிறார், அடுத்த ஆண்டு படம் ரிலீஸாகும்" என்பார்.
ரஜினி என்றால் கூடவே கமல் பற்றி சொல்லாமல் இருந்தால் அது சினிமா மரபு இல்லையே அதனால் கதாநாயகியின் அடுத்த கேள்வி, "கமல் எப்படியிருக்கார்? கன்னமெல்லாம் இன்னும் கொழுக் மொழுக்குன்னு அப்படியே இருக்கா?"
அதற்கு பா.விஜய் தரும் பதில்: "இப்போ அவரை விட பெரிய பெரிய நடிகர்களெல்லாம் வந்தாச்சு தமிழ் சினிமால!!"
இதே பதிலை அவர் ரஜினிக்கு மட்டும் சொல்லியிருந்தால் அதுவே அவரது கடைசிப் படமாகவும் இருந்திருக்கும்.//
ஆ..ஹா.... மறுபடியும் மொதல்ல இருந்தா?? ஒப்பனிங்கே டெர்ரர்ரா இருக்கே. பத்த வச்சுட்டியே இட்லிவடை..... இப்போதான் கொஞ்சம் ஆறி போயிருந்த இந்த மேட்டருக்கு, பெட்ரோல் ஊத்தி பத்த வச்சுடீங்கலே?
//இதில் பணக்கார நாடுகளை விட ஏழை நாடுகளில் வசிப்பவர்கள் உண்மையிலேயே அதிக சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.//
நம்ம "தலை" கூட இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்காராமே? து.மு.எஸ்கேப் எபெக்ட்?
//அத்வானியை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. இது என்ன ஜெ கட்சியா, ஓசையே வராமல் பேச?//
அதுதானே?
//கூட்டணி தர்மம் என்றால் யாருக்காவது ஜெ போட்டுக்கொண்டு தானே இருக்க வேண்டியிருக்கிறது, இது கூடத் தெரியாதா என்ன ?//
வேர் ஈஸ் தி பார்ட்டி என்ற பாடல் சுத்தமான ஆங்கிலம் கலந்து எழுதப்பட்ட தமிழ்பாட்டுன்னு "Kalaignar TV’s Isaiaruvi Channel and Social Media music awards for the year ௨௦௦௮" நம்ம கவிப்பேரரசு, இளைய கம்பன் "சிலம்பரசன்"உக்கு கொடுத்து இருக்காங்களாம்.
//ஆடிக்கு அழைச்சுட்டுப் போனா மாமனார் வீடு
அடிச்சு இழுத்துகிட்டுப் போனா மாமியார் வீடு//
வழக்கமான கலக்கல் பன்ச்.....
//ரெண்டாவது எடத்துல கேக்காமலேயே போடுவாங்க!//
மானஸ்தன்........ எவ்ளோ தடவ வாங்கி இருக்கீங்க?? இல்ல,... யாருக்காவது வாங்கி கொடுத்து இருக்கீங்களா, இது வரைக்கும்.
//என்ன மாதிரி பின்னோட்டம் (மட்டுமே) போடற புள்ளயாண்டான்கிட்ட போயி
"டைஜஸ்டா எழுதி தந்தால் நான் போடுகிறேன். இது என் விண்ணப்பம் :-)" அப்டின்னு சொல்றது "சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு!
:-த//
ஆ...ஹா...அடக்கமானவர் என்பதற்கு நேராக "மானஸ்தன்" என்று அர்த்தம் போட சொல்லலாமே? தமிழருவில இருந்து ஏதாவது பரிசு கெடச்சுதா?
"அண்ணே ஈரோட்டாரே!!
"பம்"மிண்டு இருக்கற "பம்"பரம் விடற பையன்கிட்டே "பம்" பத்தி கேட்டுட்டு அத டம்"பம்"ஆ இங்க வந்து சொல்லரீரே!!
இது ஒங்களுக்கே நியாயமா இருக்கா?
என்னை மாதிரி கல்மிஷம் இல்லாத கொழந்தைகள் மனசைக் கெடுக்காதீங்க!!!"
டியர் மானஸ்,
உம்ம பதிவப் பார்த்து நீர் ஒரு "மேற்கு-தல" வாசி என்று அறிந்துகொண்டேன்... உபரி தகவலாக நீர் ஒரு கல்மிஷம் இல்லாத கொழந்தை என்பது மிகுந்த சந்தோஷம்! :ப இக்காலப் பய்யங்களும் பெண்களும் இருக்கும் range-ஏ வேற... CAT-க்கு படிப்பதற்கு முன்பே, வேறு ஒரு CAT-ல் கில்லாடிகளாய் இருக்கிறார்கள்...
அது என்ன என்று மண்டையை உடைத்துக்கொள்ளாமல் சுய விலாசமிட்ட அஞ்சல் உரை அனுப்பி அறிந்துகொள்ளவும்.. righttu... :D
//பயம் கொல்லல் ஆகாது பாப்பா//
ஆமா மாமே இதுல இன்னா தப்புங்கறேன் ???
//வேறு ஒரு CAT-ல் கில்லாடிகளாய் இருக்கிறார்கள்...
அது என்ன என்று மண்டையை உடைத்துக்கொள்ளாமல் சுய விலாசமிட்ட அஞ்சல் உரை அனுப்பி அறிந்துகொள்ளவும்.. righttu... :த//
மானஸ்தன்..... இது என்னன்னு தெரிஞ்ச உடனே, எனக்கு மட்டும் கொஞ்சம் சொல்லுங்க.
//டிரேயின் போகும் போது பின்பக்கத்தைக் கழற்றிக் காண்பிக்கிறார்கள். //
பின்நவினத்துவவாதிகளா இருப்பாங்களோ!
//இது ஒங்களுக்கே நியாயமா இருக்கா?
என்னை மாதிரி கல்மிஷம் இல்லாத கொழந்தைகள் மனசைக் கெடுக்காதீங்க!!!//
*********
ந்த கல்மிஷம் இல்ல என்கிற வார்த்தையை படிச்ச உடனே. எனக்கு மானஸ்தன் அவர்களின் "சில்மிஷம்" ஞாபகம் வந்ததை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி தலைவா!
engalblog பதிவான 'விஜய் T V வழுக்கல்கள்' (வலைப் பதிவு 20)
சமீபத்திய இட்லி வடை -- 'முனி' கடிதத்தில் இடம் பெற்றுள்ளது.
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 14-7-2009
இ வ வுக்கு 'எங்கள்' நன்றி.
ஆ கு.
http://engalblog.blogspot.com
இந்தக் கடிதம் கொஞ்சம் சுமார் தான். தமிழ்நாட்டு முனீஸ்வரர் கர்நாடக முனீஸ்வரர் ஆயிட்டாரோ?
பைதிவே, முனி கடிதத்தை மையமாக வைத்து எழுதப் பட்ட இந்த இலக்கிய ஆக்கங்கள் முனி கண்ணில் தட்டுப் பட்டதா?
ஊர்வம்பு - மல மல மல மல்லே மல்லே...
பாகம் 1: http://www.tamilhindu.com/2009/07/oorvambu-mala-male/
பாகம் 2: http://www.tamilhindu.com/2009/07/oorvambu-mala-male-part2/
இந்த மறுமொழியைக் கூட போடணும்னு அவசியம் இல்ல.. இது பத்தி என்ன நினைக்கறீங்கன்னு அடுத்த கடிதத்தில சொல்லுங்களேன்.
நன்றி.
Post a Comment