பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 30, 2009

பேராசிரியர் மா.ரா.அரசு

அன்புள்ள இ.வ,
பேராசிரியர் மா.ரா.அரசு பற்றி இ.வ வாசகர்களும் அறிந்து கொள்ளும் வகையில், இந்தச் சிறப்பிதழ் பற்றிய பதிவைத் தங்கள் வலைப்பூவில் போடுவீர்களா?
அன்புடன்,
லலிதா ராம் (varalaaru.com)

பதிவு கீழே...


பேராசிரியர் மா.ரா.அரசு, புகழ் பெற்ற வரலாற்று அறிஞரும் தமிழ்ப் புலவருமான டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் மகன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணி புரிந்த இவர், தமிழ் இதழியல் வரலாற்றை முறையாகத் தொகுத்து வெளியிடல், இதழியல் பற்றிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்துதல் இவற்றை நோக்கங்களாகக் கொண்டு 1983-ல் டாக்டர் மா.இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையத்தை நிறுவினார். 1986-87-ல் திங்கள் ஒரு பொழிவென ஒரு வருட காலம் தமிழ் இதழியல் பற்றி ஆய்வுத் தொடரொன்றை இந்த மையம் நடத்தியது. தமிழ்நாட்டில் முதல் முறையாக இதழியல் பற்றி ஓராண்டு தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுத் தொடர் இதுவேயாகும்.


உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள், திராவிட இயக்க இதழ்கள், தமிழ் ஆய்வு இதழ்கள், பொதுவுடைமை இயக்க இதழ்கள், மகளிர் இதழ்கள், தமிழ் இலக்கிய இதழ்கள், தமிழ் இதழியல் என்னும் தலைப்புகளில் பதினொரு கருத்தரங்குகள் செம்மையாக நடத்தியதிலும், அக் கருத்தரங்கத் தொகுதிகளை எழிலுற அச்சிட்டதிலும் பெரும் பங்கு மா.ரா.அரசுவையே சேரும். 'இதழாளர் இராஜாஜி' எனும் ஆய்வு நூலையும் 'இளமையின் குரல்'. 'கொறிப்பு' எனும் மாணவர்க்கான இதழ்களையும் இவர் நிறுவிய மையம் மூலம் வெளியிட்டுள்ளார். வ.உ.சி-யைப் பற்றிய ஓரு தரமான ஆய்வின் மூலம் முனைவர் பட்டத்தைப் பெற்ற இவர், பேராசிரியர் பணி மூலம் உருவாக்கியுள்ள தமிழறிஞர்கள் ஏராளம்.

சிறந்த எழுத்தாளர், ஆசிரியர் மட்டுமின்றி நயம்பட பேசுவதிலும் வல்லவர். ஆசிரியர் பணியிலிருந்து ஒய்வு பெரும் வேளை, அவர் சாதனைகாளைத் திரும்பிப் பார்க்கத் தோதான ஒன்று. அதனால் http://www.varalaaru.com சார்பில் இவருக்காக சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளோம். இவருடைய நேர்காணலை இங்கு காணலாம்:

Read More...

மனுநீதி சோழன் பஸ் ஸ்டாப்


இன்று வந்த இந்த செய்தியை எவ்வளவு பேர் படித்திருப்பார்கள் என்று தெரியது.



"புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர போலியான மதிப்பெண் பட்டியலைத் தாக்கல் செய்தது தொடர்பாக ஒரு மாணவர் மீதும் அவரது தந்தை மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மத்திய அமைச்சர் ஒருவர் என்னை மிரட்டினார்"


சொன்னவர் - நீதிபதி ரகுபதி,
சொன்ன இடம் - சென்னை உயர்நீதிமன்றம்

"அவர் யார் என்பதை இப்போது நான் தெரிவிக்க விரும்பவில்லை. இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் நான் கடிதம் எழுத நேரிடும்" என்றார் ரகுபதி.

மத்திய அரசு மன்னிப்பு கேட்டால் விவகாரம் முடிந்துவிடுமா ? அந்த மத்திய அமைச்சர் உடனே பதிவி விலக வேண்டும், அல்லது மன்மோகன் சிங் அவரை பதவியிலிருந்து துக்க வேண்டும். இது இரண்டும் நடக்காது அதனால்


I, ....do swear in the name of God (or solemnly affirm) that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will faithfully discharge the duty….. " என்று அமைச்சர்கள் பதவி பிரமாணம் எடுக்கும் போது பேசுவது.


நீதிபதியை மிரட்டிய அமைச்சர் யார்? என்று நீதிபது உடனே பகிரங்கமாக அறிவிக்க வேண்டும், அது தான் நியாயம். அல்லது சென்னை உயர்நீதிமன்றம் முன் இருக்கும் மனுநீதி சோழன் சிலையை எடுத்து பீச் பக்கம் வைக்க வேண்டும். அட்லீஸ்ட் 'மனுநீதி சோழன் பஸ் ஸ்டாப்' என்ற உபயோகமாவது அதற்கு இருக்கும்.


Read More...

zoozooவின் பெற்றோர்கள்

ஐ.பி.எல்லில் fakeiplplayerக்கு அடுத்து பலரை கவர்ந்தது சூ சூ(ZooZoo) வோடோ ஃபோன் விம்பரம். சூசூக்கள் அனிமேஷன் இல்லை என்று சொன்னால் அடிக்க வருவீங்க

இந்த சூசூவின் பெற்றோர்கள் ஸ்னேகா வர்மா, பிரகாஷ் வர்மா - பெங்களூர்காரர்கள்

"பல தயாரிப்பாளர்களை தற்போது புதுமையாக(out-of-the-box) யோசிக்க வைத்துள்ளது இந்த விளம்பரம்" என்கிறார் நிர்வாணா ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஸ்னேகா வர்மா

"சிம்பிளாகவும், புதுமையாகவும் ஏதாவது செய்ய நினைத்தோம். அனிமேஷன் செய்து நிஜத்தை போல காண்பிப்பதற்கு பதிலாக நிஜத்தை கொண்டு அனிமேஷன் போல காண்பித்தோம். இதனால் எங்களுக்கு பணம், நேரம் மிச்சம். படபிடிப்புக்கு 15 நாட்கள் முன்பு தான் சூசூ ஸ்கெட்சை இறுதி செய்தோம்" என்கிறார் டைரக்டர் பிரகாஷ் வர்மா.

முதலில் இவர்கள் குழந்தைகளை சூசூக்களாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்கள், ஆனால் குழந்தைகளை சூசூக்களின் முகமூடிகளை போட்டுக்கொண்டு நடிக்கும் போது மூச்சு திணரல் போன்ற பிரச்சனைகளால் அது சாத்தியப்படவில்லை. பிறகு பெரியவர்களை கொண்டு செய்துள்ளார்கள். பின்னாடி பேக்ரவுண்ட் பெரிதாக காண்பிக்கப்பட்டதால் சிறுவர்கள் போல் இவர்கள் காட்சி தருகிறார்கள்.

முகமூடி போட்டுக்கொண்டு நடிப்பதால் இவர்களுக்கு ஒன்றும் தெரியாது அதனால் முன்பே ஒத்திகை பார்த்துவிட்டு இயக்குனர் சொல்லுவதை கேட்டு சூசூக்கள் நடிக்க வேண்டும். முகமூடி போட்டுக்கொண்டால் எவ்வளவு பிரச்சனை பாருங்க.

நம்ம ஊர் மக்கள் உடனே என்ன செய்வார்கள் ?

சூசூக்களுக்கு தற்போது ஃபேஸ் புக்கில் 3,10,755 விசிரிகள் இருக்கிறார்கள்(முகமூடிகளுக்கு நிறைய ஃபாலோவர்ஸ் இருப்பாங்க), இந்த விளம்பரங்களை வோடோ ஃபோன் சிடியாக வியாபாரம் செய்கிறது, சூசூ சாக்லேட் எல்லாம் வர தொடங்கிவிட்டது. ஒருவர் தனக்கு சூசூ குழந்தைகள் பிறந்த மாதிரி கனவு கூட கண்டுவிட்டார்.

தற்போது லேட்டஸ்ட் சூசூ கல்யாண பத்திரிகை




சூசூக்கள் சுட்டி டிவியில் தினமும் வரும் பூம்பா மாதிரி இருக்கிறது. நீங்க என்ன நினைக்கீறீங்க ?


பிகு: சூசூவின் படங்கள் பல உங்களுக்கு ஈமெயிலில் வந்திருக்கும், அதனால் இங்கே அவைகளை இங்கே போடவில்லை.

Read More...

Monday, June 29, 2009

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்பு

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம், ஆன் லைனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 2ம் தேதி நடக்கிறது.

அதற்கான யாகசாலை பூஜை கடந்த வெள்ளியன்று இரவு துவங்கியது. தினமும் காலை, மாலையில் நடக்கும் யாகசாலை பூஜைகள் http://www.tiruchendurmurugantemple.com/livetelecast.aspx என்ற இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக கும்பாபிஷேக நிகழ்ச்சிகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமென கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பார்க்க இங்கே

Read More...

Friday, June 26, 2009

10 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - 11th std மாணவர் கருத்து

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாட திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாணவ மாணவியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இத்திட்டத்தை மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்கிறது. இதன் அடிப்படையில் 10-வது வகுப்பு பொது தேர்வை ரத்து செய்து விட்டு 12-ம் வகுப்பு பொது தேர்வை மட்டும் மாணவர்களுக்கு வைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.
( அடுத்த வாரம் ஞாநியிடமிருந்து கபில் சிபலுக்கு பூச்சிண்டு நிச்சயம் )

இதை பற்றி இன்று வந்த கருத்துக்களை படித்தால் பலரை பற்றி புரிந்துக்கொள்ள முடிகிறது. குறிப்பாக பொற்றோர்கள்...


இன்று வந்த செய்திகளில் ( மாலைமலர் ) டாக்டர், என்ஜினீயர், வக்கீல், ஆசிரியர் சில மாணவர்கள் கருத்து ஒரே மாதிரி இருக்கிறது - அதாவது பொது தேர்வு தேவை என்று.

சில மாணவர்கள் மட்டும் பொது தேர்வு ரத்து வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.

"எஸ்.எஸ்.எல்.சி. (10-ம் வகுப்பு) தேர்வை ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு கேரள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று கேரள கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி கூறியுள்ளார். எவ்வளவு மக்கள் இதை படித்திருப்பார்கள், இவர் எவ்வளவு மக்களிடம் கருத்து கேட்டிருப்பார் என்று தெரியாது. அரசியல்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்தால் மாணவர்கள் மத்தியில் படிப்பு பற்றிய பயம் போய்விடும் மற்றும் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணம், ஆர்வம் மங்கிவிடும் என்று நிறைய பெற்றோர்கள் கூறுவதாகவும் செய்தி வந்திருக்கிறது.

பொற்றோர்கள் மாணவர்கள் படிப்பை பயத்துடன் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கு தங்கள் பிள்ளைகள் அறிவை வளர்க்க விருப்பப்படவில்லை என்று தெரிகிறது.

வாசகர் கமெண்ட் ஒன்று இப்படி வந்திருக்கிறது

நானும் பத்தாம் படிச்சி 395 மதிப்பேன் பெற்றுள்ளேன். இது மட்டும் பொதுத்தேர்வு இல்லாம இருந்தால் நான் 250 கூட எடுத்திருக்க மாட்டேன். இப்ப நான் கேட்ட குருப் கிடைக்குது. இல்லாட்டி லோலோன்னு சுத்த வேண்டியது தான். அதனால் பொதுத்தேர்வு ரத்து செய்ய கூடாது. இப்படிக்கு மாணவர்கள் நலம் விரும்பும் 11thமாணவர்


இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள், நாளை அமெரிக்கா சென்று திரும்பியவுடன் ஏர்போர்ட்டிலிருந்து கால் டாக்ஸியில் வரும் போது... "அமெரிக்காவில் இந்த மாதிரி பொது தேர்வு எல்லாம் கிடையாது சார், அங்கே படிப்பே வேறு மாதிரி....இங்கேயும் தான் இருக்கே.... அமெரிக்கா அமெரிக்கா தான்" என்று சலித்துக்கொள்வார்கள்.

Read More...

மைக்கேல் ஜாக்சன்


August 29, 1958 – June 25, 2009

Read More...

Thursday, June 25, 2009

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

எல்லோரும் சென்னையை வெயிலில் சுற்றி பார்க்க வசதியாக பள்ளி விடுமுறையின் போது எழுத நினைத்தது. இப்போது தான் நினைவு வந்தது. 'சொந்த சரக்கு' இல்லையா என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவு சமர்பணம். :-)

சென்னையில் LIC மற்றும் செண்டரல் ஸ்டேஷன் எதற்கு என்று ரொம்ப நாள் யோசித்ததுண்டு. எனக்கு தெரிந்து இவை இல்லை என்றால் தமிழ் சினிமாவில் யாருமே (எடமலைப்பட்டியிலிருந்து எக்மோருக்கு வருபவர்கள்கூட) சென்னைக்கு வந்தார்கள் என்று காண்பிக்க முடியாது. அதே போல் கூவத்துக்கு மேல் வளைவு வளைவான பாலம் காண்பித்தால் நிச்சயம் அங்கே யாரோ தற்கொலை


அல்லது கொலை செய்யப்பட்டு அடுத்த சீனில் பாதிக்கபட்டவர் பிண்டத்தை
வேறு ஏதாவது ஊரில் கரைக்க ஆரம்பிப்பார் என்று நம்பலாம்.

கொஞ்ச நாள் வரை காந்தி சிலை, ஏதாவது கடத்தலுக்கு உபயோகமாக இருந்தது. ஆனால் தற்போது காந்தி சிலை அவ்வளவாக தமிழ் சினிமாவில் காண்பிக்கப்படுவதில்லை. காந்தி தப்பித்துவிட்டார்.

மெரீனா கடற்கரையில் அருகம்புல் ஜூஸ் குடிக்க காலையில் போகலாம். மக்கள்தொகையில் கழிவறை இல்லாதோர் எண்ணிக்கையும் இங்கே தெரியும். காணும் பொங்கல் அன்று குப்பை போட நிறைய பேர் இங்கேதான் வருவார்கள்.

சிலமாதங்களுக்கு முன்பு கபாலீஸ்வரர் கோயில் உண்டியல் திருடு போனதால் கொஞ்சம் பிரபலமாக இருந்தது பிறகு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. வருடத்துக்கு ஒரு முறை மயிலை திருவிழாப் பதிவில் பத்ரி பஞ்சுமிட்டாய் சாப்பிடும்போது நமக்கும் நினைவுக்கு வரும். ஆனால் மைலாப்பூர் போனால் நிச்சயம் கோயில் பக்கத்தில் இருக்கும் கற்பகாம்பாள் மெஸ், கிரி டிரேடர்ஸ். சுக்ரா ஜுவல்லர்ஸை விட்டுவிட்டால் தாய்க்குலம் மன்னிக்காது.

சில சமயம் சினிமாவில் கோயிலைக் காண்பித்தால் எங்கே ஹிந்து படம் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்து சாந்தோம் சர்ச், ஆயிரம் விளக்கு மசூதியைக் காண்பிப்பார்கள். மற்றபடி ஆயிரம் விளக்கு மசூதிக்கு முன்பு எப்போதும் ஏதாவது ஒரு பிறந்த நாள் டிஜிட்டல் பேனர் இருக்கும். கதாநாயகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கும் போது கோயில், சர்ச், மசூதி என்று காண்பிக்க ரொம்ப நாளாக இது பயன்படுகிறது.

சென்னையில் இருப்பவர்களே எக்மோர் பக்கத்தில் இருக்கும் அருங்காட்சியகம் சென்றிருப்பார்களா என்பது சந்தேகம். சில வருடங்களுக்கு முன் சைக்கிளோ லாரியோ அடித்தவுடன் கண்ணகி ஒரு விசிட் அடித்தாள் என்று தெரியும்.

ஜார்ஜ் கோட்டை என்பது தற்போது சட்டமன்றக் கட்டிடம். அடிக்கடி எதிர்க்கட்சிகள் காப்பி சாப்பிட வெளிநடப்பு செய்வதை தொலைக்காட்சி செய்திகளில் பார்க்கலாம்.

திமுக கவியரங்கம், கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தத் வேண்டும் என்றால் அதற்கு வள்ளுவர் கோட்டம்தான் சிறந்த இடம். உள்ளே கவியரங்கம் என்றால் வெளியே சில்லறை உண்ணாவிரதம் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பேர்போன இடம்.

விளையாட்டைத் தவிர மற்ற எல்லா ஆட்டமும் நடக்கும் இடம் நேரு ஸ்டேடியம். இதை நேரு உள்விளையாட்டு அரங்கம் என்றும் சொல்லுவார்கள். ரஜினி விழா( அதாவது ரஜினி கலந்து கொள்ளும் விழா என்று படிக்கவும், ரஜினி ஏற்பாடு செய்த விழா என்றால் அதற்கு வாய்ப்பில்லை. தான் சம்பந்தப்பட்ட விழாக்களை நேரு ஸ்டேடியத்தில் வைத்துக்கொள்ள ரஜினி விரும்புவதில்லை. காரணத்தை அவரிடமே நீங்கள் கேட்கலாம்). கமல் பற்றி தெரியவில்லை ( கமல் ராம்கி மாதிரி யாராவது இருக்கீங்களா ? )

), அந்நியன், திரைப்பட பாடல் ரிலீஸ், மானாட மயிலாட ஃபைனல்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த மிகவும் சௌகரியமான இடம். கடைசியாக என்ன விளையாட்டு நடந்தது அல்லது அப்படி எதுவும் நடந்ததா என்றே நினைவில்லை.

அண்ணா, எம்.ஜி.யார் சமாதி அல்லது நினைவிடம். வருடத்துக்கு இரண்டு முறை திராவிட கட்சிகளுக்கு நினைவு வரும் அப்போது க்ருப்பாக வந்து மலர்தூவி வணங்குவார்கள். அல்லது வயிறு சரியில்லை என்றால் 2 மணி நேர உண்ணாவிரதத்துக்கு இங்கே பந்தல் போட்டு உட்காருவார்கள். நல்ல காற்றோட்டமான இடம்.

கதாநாயகன் வில்லனைத் துரத்த வேண்டும் என்றால் முன்பெல்லாம் கலர்ப்பொடிகளைக் கவிழ்ப்பது, காய்கறிகளை கண்டமேனிக்கு இறைப்பது, சட்டிபானைகளை உடைப்பது, சோடா பாட்டில்களை சுக்குநூறாக்குவது, என்று பொரி கடலை மார்கெட் அல்லோலப்படும் இப்பொழுதெல்லாம் ஸ்பென்சர் பிளாசாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கேட்டால் பெரிய பட்ஜட் படமாம். நிச்சயம் இந்த மாதிரி துரத்தும் சீனில், வில்லன் ஏதாவது கடைக்குள் புகுந்து வெளியே வந்து எஸ்கலேட்டரில் ஓடி கீழே வந்து ஹீரோவிடம் அடி வாங்குவார். கடலை போடவும், விண்டோ ஷாப்பிங்கிற்கும் ஏற்ற நல்ல இடம். இன்னும் சண்டகளுக்கு பாப்புலர் ஆகாத இடம் சிடி செண்டர். இன்னும் கொஞ்ச நாளில் வில்லன் இங்கே அடிவாங்குவார்.

ஹீரோ பெரிய கம்பெனியில் வேலை செய்யபவராக காண்பிக்க டைடல் பார்க் நிச்சயம் இருக்கும். இல்லை ஏழை ஹீரோ மொட்டை மாடியில் அழகான குடிசையில் இருக்க பேக்ரவுண்டில் டைடல் பார்க் இருக்கும்.

சினிமாவில் ஒருவர் வக்கீல் உடையை அணிந்துவிட்டாரென்றால் அவசியம் ஒருமுறையாவது அவர் ராஜாஜி ஹால் படிகளை ஏறி இறங்கியே ஆகவேண்டும். எப்போதும் கோர்ட் சீனுக்கு ராஜாஜி ஹால் படிகள்தான். கோர்ட் சீனுக்குப் பின் வில்லனும் ஹீரோவும் ஆளுக்கு பாதிப்படி இறங்கி அல்லது ஏறித்தான் வீர சபதம் செய்வார்கள்.

நம்ம ஊரு "white house" ரிப்பன் பில்டிங். இந்தியன் தாத்தா படம் வந்த போது பார்த்தது. அதற்கு பிறகு எந்த படத்திலேயும் இதை யூஸ் செய்யவில்லை.

உடல்நலமில்லை என்றாலும் சினிமாவில் மட்டும் எல்லோரும் சூர்யா ஆஸ்பத்திரியில்தான் சேர்க்கிறார்கள். எனக்கு தாங்க முடியாத சந்தேகம், சூர்யா ஆஸ்பத்திரி நிஜ மருத்துவர்கள் எப்படி சரியாக உண்மையான நோயாளி அறைகளை மட்டும் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கிறார்கள் என்பது. அல்லது அப்படி ஒன்றே நடப்பதில்லையா என்று நினைக்கும் அளவுக்கு சினிமாவின் நிரந்தர மருத்துவ செட் சூர்யா ஹாஸ்பிடல்.

அண்ணா மேம்பாலம். இதில் அண்ணா எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம். மேம்பாலம் கீழே தெருப்பிள்ளையார் சைஸில் சின்னத்தம்பியாக இருக்கிறார் அண்ணா. சினிமாவில் டிராஃபிக் ஜாம் காண்பிக்க வேண்டும் என்றால் பட இயக்குனர்கள் இங்கே ஆஜராகிவிடுவார்கள். இல்லை ஏதாவது கார் கீழே விழ வேண்டும் என்றால் தூரத்திலிருந்து அட்டை கார் கீழே விழும். இப்பொழுதெல்லாம் டிஆர் பாலுவின் கூலிங்கிளாஸ் மேற்பார்வையில் கட்டப்பட்ட கத்திபாரா மேம்பாலம் அந்த இடத்தைப் பிடித்துவருகிறது.

சினிமாவில் எந்த சில்லுண்டி தண்டனையிலிருந்து தலையைச் சீவிய குற்றம்வரை ஹீரோ அல்லது வில்லன், சென்னை மத்திய சிறைச்சாலை வாசலில் இருக்கும் இக்குணூண்டு கதவைத் திறந்துகொண்டு வெளியே வர சோப்ளாங்கியாய் இரண்டு காவர்கள் சல்யூட் அடித்து அனுப்பிவைப்பார்கள். வானத்தையே பார்க்காதது போல் அண்ணாந்து பார்ப்பவரை மாலைபோட்டு ஒரு அம்பாசடர் கார் அள்ளிகொண்டு போகும். இட்லிவடையில் பாடிகார்ட் முனி கடிதங்கள் வந்ததன் பயனால் இனி அந்தச் சிறை பழைய படங்களில் மட்டுமே பார்க்கமுடியும்; புழல் அதனிடத்தைப் பிடித்துக்கொள்கிறது.

அமெரிக்கன் எம்பஸி அருகிலிருக்கும் உட்லண்ட்ஸ் ஹோட்டலை சீல்வைத்திருக்கிறார்கள். வலைப்பதிவர்கள் போண்டா அராஜகத்தை ஒடுக்க அரசே கையகப்படுத்திவிட்டதாக வெளியே தலயணை விற்பவர் சொன்னார். நடேசன் பூங்காவையும் தாண்டி அராஜகம் இப்பொழுதெல்லாம் கிழக்கு மொட்டைமாடியில் தொடர்வதாக காராசேவுத் தகவல். கிழக்குக்கும் இங்கே கூடுபவர்களுக்கும் ஒரு சம்பந்தமுமில்லாவிட்டாலும்கூட 4 பேர் சந்திக்க நினைத்தால், 'மொட்டை மாடிக்கு வந்துவிடு' என்று தகவல் கொடுத்துக்கொள்வதாகக் கேள்வி.

விரைவில் மற்ற ஊர்களை பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன் :-)

Read More...

Wednesday, June 24, 2009

ராசியான நடிகர் யார் ? - ஜெயம் ரவியா ? ரஜினியா ?

சூப்பர் ஸ்டார் ரஜினி சார்தான் என்னை காப்பாற்றி அதிர்ஷ்டசாலி நடிகையாக்கினார். எந்த கஷ்டம் வந்தாலும் என்னை கைவிட மாட்டார் என நம்புகிறேன் - சொன்னர்வர் நடிகை ஸ்ரேயா.

என்ன சொல்லுகிறார் ஸ்ரேயா ?

நான் அறிமுகமானது எனக்கு 20 உனக்கு 18 படத்தில்தான். ஆனால் அந்தப் படம் ஓடவில்லை. அடுத்து ஜெயம் ரவியுடன் 'மழை' படத்தில் நடித்தேன். பொதுவாக தமிழில் ஜெயம் ரவிக்கு ஒரு ராசி உண்டு. அவருடன் நடிக்கும் புதுமுக நடிகைகள் எல்லோரும் பிரபலமாகி விடுவார்கள். சதா, திரிஷா , அசின், ஜெனிலியா என அப்பட்டியல் நீள்கிறது. நானும் இந்தப் பட்டியலில் வந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன். ( அதான் வந்துட்டீங்களே )

ஆனால் எனக்கு அது நேர் விரோதமாக அமைந்துவிட்டது. அவருடன் நான் நடித்த 'மழை' படம் சரியாகப் போகவில்லை. என் முதல்படமும் சுமாராகத்தான் அமைந்தது. உடனே எனக்கு ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி விட்டார்கள். ( அப்படியா ? )

இனி தமிழ் படங்கள் அவ்வளவுதான் என்று நினைத்து தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அப்போதுதான் சூப்பர்ஸ்டார் ரஜினி சாருடன் 'சிவாஜி' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சிவாஜி வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

அதிர்ஷ்டமில்லாமலிருந்த நான் ரஜினியால் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியானேன். ராசி இல்லாத நடிகை என்ற 'இமேஜ்' விலகியது. இன்று என் நடிப்பு வாழ்க்கை ஹாலிவுட் வரை நீண்டதற்குக் காரணம் சிவாஜி என்ற படமும், ரஜினிசாரும்தான்.

நம்பர் ஒன் நடிகை போட்டியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லா நடிகைகளுமே ஒவ்வொரு கால கட்டத்தில் நம்பர் ஒன் ஆக இருப்பார்கள். யாருக்கும் அது நிரந்தரமானது அல்ல... நான் சாய்பாபா பக்தை. எந்த கஷ்டம் வந்தாலும் அவர் கைவிடமாட்டார்", என்றார் ஸ்ரேயா. ( அப்ப ரஜினி ? )

யார் ராசியான நடிகர் ? ஜெயம் ரவியா ? ரஜினியா ?

Read More...

Tuesday, June 23, 2009

மாவோயிஸ்ட்!

மாவோயிஸ்ட் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்து மத்திய அரசு நேற்று தடை விதித்தது. இதை முன்பே இந்திய அரசு செய்திருக்க வேண்டும், ஆனால் அதிகபடியான லால்கார் வன்முறையும், லால்கார் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50 கிராமங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து மாநில போலீசார், துணை ராணுவப்படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய பின் தான் இந்திய அரசுக்கு புத்தி வந்திருக்கிறது.

மேற்கு வங்க ஆளும் அரசோ மாவோயிஸ்ட்டுகளை இதுவரை தடை செய்ய தயக்கம் காட்டியே வந்ததுள்ளது..



யார் இந்த மாவோயிஸ்ட்கள் ?

2004ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி உருவாக்கப்பட்டதே சிபிஐ மாவோயிஸ்ட் கட்சி. இது ஒரு அரசியல் கட்சியாக பெயரளவில்தான் இருந்தது. உண்மையில் இது ஒரு நக்சல்பாரி இயக்கமாகவே செயல்பட்டு வந்தது.

சிபிஐ (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), மக்கள் போர், இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட கட்சிதான் சிபிஐ மாவோயிஸ்ட்.

இந்த இணைப்பு 2004ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி அறிவிக்கப்பட்டது. மக்கள் போர் அமைப்பின் தலைவரான முப்பால லட்சுமண ராவ் என்ற கணபதியே, இந்த மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

கணபதி, ஆந்திர மாநிலம் கரீம் நகரம் மாவட்டம் பீர்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர் கணபதி. வாரங்கலில் உயர் படிப்புக்காகப் போன இடத்தில், மாவோயிஸ்ட் தலைவர்களான நல் ஆதி ரெட்டி, கொண்டபள்ளி சீதாராமய்யா ஆகியோரைச் சந்தித்து அவர்களின் செயல்பாடுகளால் கவரப்பட்டு நக்சல்பாரி இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 1967ம் ஆண்டு தோன்றி பெரும் வெற்றியைப் பெற்ற நக்சல்பாரி இயக்கத்தின் கருத்துக்களை ஒத்ததாக மாவோயிஸ்ட் கட்சி விளங்கியது. மேலும், இந்தக் கட்சியும் நக்சல்பாரி இயக்கமாகவே மாறி செயல்படத் தொடங்கியது.

நோக்கம் என்ன...

மாவோயிஸ்ட் கட்சியின் முதல் நோக்கமே மக்களைத் திரட்டி அரசுகளுக்கு எதிராக போர் புரிவது என்பதுதான். சீனாவில் மாசே துங் (மாவோ) மக்களைத் திரட்டி கொரில்லாப் போரில் ஈடுபட்டதால் அந்த அடிப்படையை மாவோயிஸ்டுகள் பின்பற்றி வருகின்றனர்.

இந்தியாவில் பிகார், ஆந்திரா [^], சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு நல்ல பலம் உள்ளது.

இந்த மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளைப் பிடித்து புரட்சிகர பகுதியாக மாற்றும் திட்டத்துடன் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒரு அங்கமாகவே லால்கரையும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களையும் அவர்கள் தங்களது கட்டுப்பாட்டில் கடந்த 9 மாதங்களாக வைத்துள்ளனர். இவர்களுக்கு உள்ளூர் பழங்குடியின மக்களும் உறுதுணையாக இருந்ததால் இது சாத்தியமாயிற்று.


சிபிஐ மாவோயிஸ்ட் உருவாக்கப்படுவதற்கு முன்பு செயல்பட்டு வந்த ஆயுதப் பிரிவுகளான மக்கள் விடுதலை கொரில்லா ராணுவம் [^], மக்கள் கொரில்லாப் படை ஆகியவற்றை இணைத்து மக்கள் விடுதலை கொரில்லாப் படை என்ற பெயரில் ஆயுதக் குழுவை இந்தக் கட்சி உருவாக்கியது. இந்த ஆயுதக் குழுதான் தற்போது பல்வேறு தாக்குதல்களை மேற்கண்ட மாநிலங்களில் நடத்தி வருகிறது.

மாவோயிஸ்ட் நக்சலைட் அமைப்பில் கிட்டத்தட்ட 9000 முதல் 10 ஆயிரம் ஆயுதப்படையினர் வரை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் 6500 அதி நவீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இந்தியா முழுவதும் இவர்களுக்கு கிட்டத்தட்ட 20 ஆயிரம் சாதாரண தொண்டர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேற்கு வங்க சம்பவத்திற்குப் பின்னர் மாவோயிஸ்டுகளுக்குக் கடிவாளம் போட வேண்டிய நேரம் வந்து விட்டதாக உணர்ந்துள்ள மத்திய அரசு தற்போது சிபிஐ மாவோயிஸ்டுகளுக்குத் தடை விதித்துள்ளது.
( நன்றி: தட்ஸ் தமிழ் )




எதிர்நோக்கும் பேராபத்து!
மேற்கு வங்கத்தில் வெடித்திருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தின் பின்னணியும், அதன் பின்விளைவுகளும் வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையுள்ள எவரையுமே திடுக்கிட வைக்கிறது. கட்சிக்கும் ஆட்சிக்கும் வேறுபாடு இல்லாத நிலைமை ஏற்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து என்ன என்பதற்கு முன்பு நந்திகிராமும் இப்போது லால்கரும் எடுத்துக்காட்டுகள்.

கடந்த முப்பது ஆண்டுகளாகவே வளர்ச்சி என்கிற பெயரில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன. ஆதிவாசிகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. ஊடகங்கள் நகர்ப்புற, வசதி படைத்த சமுதாயத்தின் பணக்காரப் படாடோபங்களை நாளும்பொழுதும் படம்பிடித்துக் காட்டிக் கொண்டிருப்பதை, அரைவயிற்றுக் கஞ்சிக்கு வழியில்லாமல், வேலையில்லாமல், வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை நாள்தான் பார்த்துப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? "முதலாளித்துவம்' பற்றி வாய்கிழியப் பேசியவர்களே முதலாளிகளாகிவிடும் விபரீதத்தை எத்தனை நாள்தான் சகித்துக் கொண்டிருப்பார்கள்?

கடந்த நவம்பர் மாதம் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியாவின் உயிருக்குக் குறி வைத்துத் தோல்வி அடைந்தனர் மாவோயிஸ்ட்டுகள். அடக்குமுறையை அவிழ்த்துவிட்டது மார்க்சிஸ்ட் கட்சி. கட்சித் தொண்டர்களும், அவர்களுக்கு உதவியாகக் காவல்துறையினரும் அப்பாவி மக்களைக் கைது செய்வதும், வீடுகளில் சோதனைகள் நடத்துவதுமாகச் செய்த இம்சைகளின் விளைவாக உருவானதுதான் காவல்துறை அடக்குமுறைக்கு எதிரான மக்கள் இயக்கம் என்பது. இப்போது, இந்த இயக்கத்தினருடன் மாவோயிஸ்ட்டுகள் கைகோர்த்துக் கொண்டுவிட்டனர்.

மக்கள் இயக்கத்தின் துணையுடன் மாவோயிஸ்ட்டுகள், லால்கரிலுள்ள மார்க்சிஸ்ட் தோழர்கள் மீதும், கட்சி அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடத்தி அவர்களை ஊரைவிட்டே ஓடச் செய்துவிட்டனர். இந்த மாவோயிஸ்ட்டுகளின் அட்டகாசம், அடுத்தடுத்த ஊர்களிலும், மாவட்டங்களிலும் பரவத் தொடங்கி இருக்கிறது. ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 900 சதுர கிலோமீட்டர் இப்போது மாவோயிஸ்ட்டுகளின் பிடியில். சத்தீஸ்கரிலுள்ள தண்டேவாடாவுக்குப் பிறகு இது அடுத்த மாவோயிஸ்ட் தளம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிங்குரிலும், நந்திகிராமிலும் நடந்த விஷயங்கள் நமக்குத் தெரியும். மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பூம் மாவட்டத்தில் போல்புர் என்கிற கிராமம். இந்தக் கிராமத்தில் 9 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகண்டன் சாந்தி நிகேதன் கட்டமைப்பு நிறுவனம் என்கிற தனியார் நிறுவனத்துக்காக, மேற்கு வங்கத் தொழில் வளர்ச்சிக் கழகம் 300 ஏக்கர் விவசாய நிலத்தைக் கையகப்படுத்தியது. வாக்குறுதி அளித்த நஷ்ட ஈட்டைத் தரவில்லை என்பதுடன், பலருக்கும் நஷ்ட ஈடே தரப்படவில்லை என்பதுதான் வேதனை. அதைவிட வேதனை, இன்றுவரை அங்கே எந்தவிதத் தொழிற்சாலையும் நிறுவப்படவும் இல்லை.

விவசாயிகள் பொறுமை இழந்தனர். சுற்றிலும் போடப்பட்டிருக்கும் கம்பி வேலிகளை உடைத்தெறிந்து மீண்டும் விவசாயம் செய்ய முற்பட்டனர். இவர்களைத் தடுத்து நிறுத்தியது காவல்துறை அல்ல, மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள். கைகலப்பும், அடிதடியும் என்று தொடங்கி, தோழர்களுக்கு ஆதரவாகக் காவல்துறையினர் களத்தில் இறங்கி, இப்போது பிரச்னை பூதாகரமாகி இருக்கிறது.

இடதுசாரி அரசின் 32 ஆண்டு ஆட்சியின் மிகப்பெரிய தவறு ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள வேறுபாடு அகற்றப்பட்டதுதான். தங்களுக்குச் சாதகமான அல்லது கட்சி சார்புள்ள அதிகாரவர்க்கத்தை மட்டுமே தங்களைச் சுற்றி வைத்துக் கொண்டனர். காவல்துறை, அரசு இயந்திரம் என்று அனைத்திலும் கட்சித் தொண்டர்கள் நியமிக்கப்பட்டனர். உள்ளூரில் பிரச்னை ஏற்பட்டால் அதை நிர்வாகமோ, காவல்துறையோ தலையிட்டுத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, கட்சியினர் தீர்வு காண்பது என்கிற கலாசாரம் நிலைநிறுத்தப்பட்டது. சிங்குரில், நந்திகிராமில், போல்புரில், இப்போது லால்கரில் என்று இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம், நிர்வாக இயந்திரம் என்பது செயலிழந்துவிட்டதுதான். கட்சித் தொண்டர்களின் கட்டளையை நிறைவேற்றுவதுதான் நிர்வாகத்தின் கடமை என்கிற தவறான கலாசாரத்தால், நல்லது கெட்டது சொல்லவோ, பிரச்னைகளுக்கு நிர்வாக ரீதியான தீர்வு காணவோ வழியில்லாத நிலைமை ஏற்பட்டு விட்டிருக்கிறது.

லால்கரில் மாவோயிஸ்ட்டுகள் தங்களைச் சுற்றி, உள்ளூர் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு ஏற்பட்டது ஏன்? எப்படி? மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிகார் மற்றும் ஒரிசாவில் உள்ள தீவிரவாதிகள் மத்தியப் பிரதேசம், ஆந்திரம் மற்றும் சத்தீஸ்கரிலுள்ள தீவிரவாதிகளுடன் கைகோர்த்து கொண்டால் அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருக்கும். இவர்களுக்கும், வடகிழக்கு மாநிலங்களிலுள்ள தீவிரவாதிகளுக்குத் தருவதுபோன்ற ஆதரவை சீனா நிச்சயமாகக் கொடுக்கும் என்று நாம் நம்பலாம்.

எழுபதுகளில் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற இடதுசாரிகள் நக்சலைட் இயக்கத்துக்கு ஆதரவளித்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள். இப்போது இடதுசாரிகளை அரசியல்ரீதியாக எதிர்கொள்ளாமல், இந்தத் தீவிரவாத இயக்கங்களுக்குத் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க முற்படுகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. அதற்கு மத்திய அரசும் காங்கிரஸýம் துணைபோகாது என்று நம்புவோமாக.

ஒன்று மட்டும் நிச்சயம். மாவோயிஸ்ட்டுகளின் வளர்ச்சி என்பது இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த சீனா செய்யும் முயற்சி என்பதை நினைவில் வைத்து, அதை வேரறுப்பதில் தயக்கம் காட்டலாகாது!
( நன்றி: தினமணி )


Fight Mao with Mao - Chandan Mitra

Maoists have declared war on the nation, but the Scotch-sipping, mall-going urban Indian thinks that’s happening in some remote part of the planet, maybe Belize or Benin. In reality, however, ultra-left groups have bared their fangs and progressively seized territory, created No-Go areas, taken over the local administration and even civil society functions. When Maoists take control of a geographical region they drive out not only the police and other organs of the State, including teachers and doctors, but also all political functionaries opposed to them. In other words, the entire fabric of the democratic as well as republican order collapses, leaving residents completely at the mercy of the promoters of chaos and revolution. Even the judicial system is supplanted by kangaroo courts; rough-and-ready justice being delivered at public gatherings presided by heavily armed commissars representing the ‘State-within-the-State’.

The statistics are frightening enough: An estimated 160 to 170 of India’s 600-odd districts are officially admitted to be Maoist infested. But what has happened in recent months is even more chilling. Around 20 districts spread over Chhattisgarh, Orissa, Jharkhand, West Bengal and Bihar seem to have slipped into their hands almost completely. Andhra Pradesh may have driven them out temporarily, but the writ of the Indian state still runs somewhat tenuously in certain parts of that State. In eastern Maharashtra and pockets of Karnataka the desperadoes are gaining ground daily, while districts adjoining Nepal in Uttarakhand have also steadily come under Maoist influence. But the really worrisome developments are in the first four contiguous States in East-Central India.

The creation of a virtual ‘liberated zone’ in and around Lalgarh in West Bengal’s Midnapore district has rightly attracted media attention on account of the sheer ferocity of Maoist onslaught and undeniable popular support their foray appears to command. The Naxalites, operating in the State where they first took birth in 1969, have turned public anger against the high-handed and corrupt CPI(M) machinery into a veritable war against the State. The police wait helplessly outside the cordon determined by Maoist authorities, all agencies of the Government have fled the blood-splattered villages, CPM activists have been mercilessly beaten and driven out, their offices burnt, while palatial homes of local apparatchiks demolished brick by brick in broad daylight by rampaging mobs. Maoist commanders are freely accessible to the media and declare their plans to build infrastructure — such as roads, culverts, schools and hospitals over the next few years “to compensate for the neglect of this impoverished region by the CPM Government in West Bengal”. This is a significant change of strategy on the Maoists’ part. Recognising the people’s craving for infrastructure, they have now decided to set up their own delivery mechanisms to address this aspect of public need. So far they were content destroying official structures; now they are confident of holding territory long enough to construct parallel governmental machinery.

A senior police official engaged in combating Maoist insurgency recently told me that seizures conducted across States indicates that Maoist groups collect around Rs 2,200 crore annually through extortion of mine owners, contractors and other businessmen. Most of the money is used to buy increasingly sophisticated arms and ammunition. Much of the information gathering and quotation collecting, believe it or not, happens through the internet! Overground activists of these groups are in regular touch with their bosses deep inside jungles and have successfully set up a communication network, which is yet to be fully cracked by law enforcing agencies. These overground members and sympathisers include teachers, lawyers, Government servants and doctors. It was not without reason that Chhattisgarh Police arrested Dr Binayak Sen although the Government was recently forced by the Supreme Court to release him on bail.

Indian Maoists have a global network operating through so-called human rights activists, bleeding heart NGOs and even Christian Missionary groups. They are engaged in drumming up sympathy for Pol Pot clones, allegedly working to help the underprivileged and downtrodden against a ‘brutal’ Indian state. That these “selfless” do-gooders go around ruthlessly murdering those they remotely suspect of wavering, throw even six-year-old children into the flames of renegades’ huts they routinely set on fire, is of course something that will never come into the public domain because much of the media, too, is irredeemably hostile to the agencies of the State. Under orders of secret committees hundreds of tribals have been shot, beheaded and hanged from trees over the last 20 years of mindless Maoist violence. In fact they have killed more of their “own” people than the police or para-military forces.

Arguably, organs of the State as well as political parties committed grievous errors in the past antagonising forest-dwellers, mainly tribal. But over the years, the tribal in India’s forest belt has ceased to conform to the romantic picture painted by the likes of Verrier Elwin. His modern-day disciples don’t want to acknowledge this reality because it goes against their conviction that by definition the State can do no good and that the tribal should be kept away from the “evils” of civilisation, in reservations akin to museums of natural history. Perhaps the problem began with British laws that theoretically took away the tribals’ right to their forest, something they are unable to accept even after 150 years. But then the forest is no longer an Eden of Bliss in which man endearingly cohabited with animals, spirits of the jungle, totems and witch doctors. Much of India’s forests have been mercilessly degraded since Independence — particularly in Jharkhand and West Bengal. Even remote Bastar in Chhattisgarh is no more the idyllic haven it once was, complete with maverick Rajas and supine tribals. However, it is their sense out outrage at the State’s failure to protect them against rapacious mine-owners and sundry contractors that has created fertile ground for the diabolical ideas of Maoism to sprout. Conditions for Maoism’s rise vary from State to State: Caste exploitation is probably its root in Bihar, while CPM’s atrocities, coupled with abject poverty and official neglect is the cause in Bengal.

But this is not the time for academic brainstorming into the resurgence of the Maoist movement in India. This is the time to act — swiftly and firmly. Mao Zedong’s famous dictum, “Power flows from the barrel of the gun” has to be turned around by the security forces to demonstrate to the merchants of mayhem that two can play that game. Districts severely infested by the Maoist menace needs to be brought under the Disturbed Areas Act, while commandos trained on the lines of Andhra’s Greyhounds should be set on the desperadoes.

Mao talked of combating “White” (meaning official) terror with “Red” terror. This, too, has to be turned on its head to terrorise the very peddlers of terror for that is the only language they understand. Their intellectual sympathisers need to be confronted at every forum with evidence of Maoist tyranny.

These self-anointed messiahs of the downtrodden should also be directed to Lenin’s pertinent pamphlet titled “Left wing Communism — An Infantile Disorder”.
( Source: Dailypioneer )

Read More...

Monday, June 22, 2009

சுவர் விளம்பரமா - சுவர் இலக்கியமா ?

நோட்டீஸ் ஒட்டாதே, அச்சுப்பதிக்காதே, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' - செய்தி - கட்டுரை - செய்தி

செய்தி
சென்னையில் அண்ணாசாலை மற்றும் காமராஜர் ஆகிய இரு சாலைகளிலும் ஜூன் 10ம் தேதி முதல், சுவர் விளம்பரம் எழுதவும், சுவரொட்டிகள் ஒட்டவும் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

சென்னை மாநகராட்சி பணியாளர்கள் அண்ணாசாலையில் பெரியார் சிலை எதிரில், அண்ணாசாலை - சேமியர்ஸ் சாலை சந்திப்பில், எல்.ஐ.சி. வளாகம், அண்ணா மேம்பாலம், நந்தனம் சிக்னல், தேனாம்பேட்டை சிக்னல், காமராஜர் சாலையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகம் அருகில், லைட் அவுஸ் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மற்றும் சுவர் எழுத்துக்களையும் அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அண்ணாசாலை பேருந்து நிறுத்தங்களில் அனுமதி பெறாத விளம்பரங்கள் அகற்றப்படும். நடைபாதைகளில் விளம்பரங்கள் வைத்திருந்தால் அகற்றப்படும். மீறி செயல்படுபவர் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும்.



கட்டுரை
சென்னை நகரின் அண்ணா சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் சுவரொட்டிகள், சுவர் எழுத்துகள் தடை செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மெல்ல மெல்ல நகர் முழுமைக்கும் இந்தத் தடையை விரிவுபடுத்தும் நோக்கம் அரசுக்கு உள்ளது. மக்களுடைய கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் இந்த அராஜகச் செயலை சிவில் உரிமை சங்கங்கள் உட்பட எல்லா ஜனநாயக அமைப்புகளும் எதிர்க்க வேண்டும்.

சுவரொட்டி என்பது நீண்ட மரபு உடைய சுவர் இலக்கியம். இன்றைக்கு இதை தடை செய்யும் ஆட்சியை நடத்தும் தி.மு.க கட்சியின் வளர்ச்சிக்குக் கூட சுவரொட்டிகளும் சுவர் எழுத்துகளும் பெரும் பங்கு வகித்திருக்கின்றன. கும்பி எரியுது குடல் கருகுது குளுகுளு ஊட்டியில் சட்டசபைக் கூட்டம் எதற்கு, அரியலூர் அழகேசா, நீ ஆண்டது போதாதா, மக்கள் மாண்டது போதாதா, கூலி உயர்வு கெட்ட அத்தான் குண்டடி பட்டு செத்தான் போன்ற மக்களை உசுப்பிய அரசியல் வாசகங்கள் பலப்பல சுவரொட்டிகள் , சுவர் எழுத்துகள் மூலமாகத்தான் மக்களிடம் ஒரு காலத்தில் பரப்பப்பட்டன.

இன்று சிறு தொழில் செய்பவர்கள், சிறு இலக்கிய, கலாசார, அரசியல் அமைப்புகள், எல்லாருமே விளம்பரத்துக்கும் கருத்துப் பரப்பலுக்கும் சுவரொட்டிகளையும் சுவர் எழுத்துகளையும் நம்பியிருப்பவர்களாவர். சுவரொட்டி தடை என்பது இவர்களை முடக்கும் வேலையாகும்.

அமைப்புகள் மட்டுமல்ல தனி நபர்கள் கூட சுவரொட்டிகளைப் பயன்படுத்த முடியும் என்பதுதான் அந்த சாதனத்தின் சிறப்பு. என் நண்பரின் தாயார் இறந்துவிட்டார் என்றால், அவர் எங்கள் குடியிருப்புப் பகுதியில் பலராலும் நேசிக்கப்பட்ட்வர் என்கிறபோது நண்பர்கள் சேர்ந்து அவருக்கான கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை ஒட்டுவது அஞ்சலியின் ஒரு பகுதியாகிறது. இதிலெல்லாம் அரசு தலையிடுவது என்பது சுத்தமான அத்துமீறல்.

பொருளாதார வசதி குறைந்தவர்கள் இந்த பெரு நகரத்துக்குள் இருக்கத் தேவையில்லை அவர்கள் வெளியேறட்டும் என்ற அரசின் கண்ணோட்டத்தின் தொடர்ச்சியாகவே சுவரொட்டி தடையும் எனக்குப் படுகிறது. ஆற்றங்கரை குடிசை வாசிகளை ஊருக்கு வெளியே அனுபுவது போல, அடித்தட்டு மக்களின் கருத்துப் பிரச்சார சாதனங்களையும் நகருக்குள் தடை செய்கிறது அரசு.

பாதசாரிகளுக்கு ஒழுங்கான நடைபாதைகளே இல்லாத நகரம் சென்னை. ஆனால் பணக்காரர்கள் தொப்பையைக் குறைப்பதற்கு வாக்கிங் போவதற்கு கடற்கரையிலும் ஒவ்வொரு பூங்காவிலும் நடைபாதைகளை இழைத்து இழைத்துக் கட்டிக் கொண்டே இருக்கிறது.

சுவரொட்டிகளுக்கு தடை விதிப்பது நகரத்தை அழகுபடுத்துவதற்காக என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. நகரத்துக்கு எது அழகு என்பது முதலில் வரையறுக்கப்படவேண்டும். அழகான புராதனக் கட்டடங்களை இடிப்பது, பெட்டி பெட்டியாக இரும்பும் கண்ணாடியுமாக நகரின் வெப்ப தட்ப நிலைக்குப் பொருந்தாத புது கட்டடங்கள் கட்டுவது, சீன, கொரிய, தாய்லாந்து, ஜப்பானிய வாஸ்துக்களின் பெயரால் விசித்திரமான வண்ணங்களை வீட்டுக்குப் பூசுவது என்று எல்லா நடைமுறைகளிலும் அழகின் பெயரால் அரசு தலையிடுமா என்று அறிய விரும்புகிறேன்.

குண்டும் குழியுமான சாலைகளும், குறுக்கும் நெடுக்குமாக கணடபடி கட்டப்பட்டிருக்கும் கேபிள் வயர்களும் ஆங்காங்கே குப்பைமேடுகளும் நிரம்பியிருக்கும் சென்னையின் அழகை எப்படி சுவரொட்டிகள் மட்டும் கெடுத்துவிடும் என்று புரியவில்லை.

விளம்பரம் செய்வதை ஒரேயடியாகத் தடுப்பது அரசின் நோக்கமா என்றால் நிச்சயம் இல்லை. கருணாநிதியின் அரசு விளம்பர வெறி பிடித்த அரசு. வேறு எந்த மாநிலத்திலும், வேறு எந்த நாட்டிலும், இந்த அளவுக்கு ஆட்சியில் இருக்கும் அரசியல் தலைவர் முகத்தை எங்கு திரும்பினாலும் பார்த்தே தீரவேண்டிய நிலைமை மக்களுக்கு இருக்காது.

அறுபதுகள் வரை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எத்தனையோ சாலைகள் போட்டு அணைகள் கட்டி தொழிற்சாலைகள் திறந்து வளர்ச்சி வேலைகள் செய்தபோதும் அவற்றுக்கு பெரும் திறப்புவிழாக்கள் நடத்தியதில்லை. நடத்திய விழாககளிலும் அரசின் இலச்சினை மட்டும்தான் இருக்கும். காமராஜர், பக்தவத்சலம் போன்ற முதல்வர்களின் முகங்கள் மண்டை மண்டையாக அச்சிடப்பட்டதில்லை. இதையெல்லாம் தொடங்கிவைத்தவர் கருணாநிதிதான். இந்த வாரம் ஆயிரம் மாணவர்களுக்கு அரசின் சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்படும்போது, அந்தக் கணினி திரைகளிலும் கருணாநிதி முகம் தெரிகிறமாதிரி ஏற்பாடு. .

கருணாநிதியின் ஆட்சியும் சரி, பெரும் தொழிலதிபர்களும் சரி தங்களையும் தங்கள் சரக்குகளையும் விளம்பரப்படுத்திக் கொள்ள பெரும் செலவு செய்து தொலைக்காட்சி போன்ற சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு மேஜிக் ஷோவுக்கு 500 ரூபாய் சன்மானம் வாங்குபவர், ஒரு தண்ணீர் தொட்டியைக் கழுவ 75 ரூபாய் பெறுகிறவர் போன்ற சாதாரண தொழில் முனைவோர் எப்படி விளம்பரம் செய்வார்கள் ? சுவர் எழுத்துகள் மூலம் தான் செய்ய முடியும்.

அரசு செய்ய வேண்டியதெல்லாம் ஒவ்வொரு தெருவிலும் நூறடிக்கு ஒரு விளம்பரப் பலகைச் சுவர் ஒதுக்கி இங்கே மட்டும் சுவரொட்டிகளையும் சுவர் எழுத்துகளையும் பதியுங்கள் என்று கேட்டுக் கொள்வதுதான். இதைச் செய்ய அரசுக்குப் பெரும் செலவு ஆகாது.
( நன்றி: குமுதம் )


செய்தி
ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது அம்சா மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கதிரவன் ஆகியோர் அண்ணாசாலை தர்கா எதிரில் 2 டிஜிட்டல் பேனர்களை வைத்திருந்தனர். அன்று காலை 11-45 மணியளவில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அண்ணாசாலை தர்காவில் நடந்த தொழுகையில் பங்கேற்பதற்காக வந்தனர். தொழுகை நடந்து கொண்டிருந்த போது மாநகராட்சி ஊழியர்கள் சிலர் காரில் வந்தனர். அவர்கள் டிஜிட்டல் பேனர் கட்டப்பட்டிருந்த கயிறுகளை வெட்டி அப்புறப்படுத்த முயன்றனர்.

கயிறு வெட்டப்பட்டதும் பேனர்கள் கீழே விழுந்தன. இதை கவனித்த காங்கிரசார் மாநகராட்சி ஊழியர்களை விரட்டியடித்தனர். ஒரு ஊழியர் கட்சி தொண்டர்களிடம் சிக்கினார். அவருக்கு தர்ம அடி விழுந்தது.

அண்ணாசாலையில் விளம்பரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தியதாக தெரிகிறது. இதற்கிடையில் காங்கிரஸ் தொண்டர்கள் அண்ணாசாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்கு வரத்து ஸ்தம் பித்தது.

அப்போது தர்காவில் தொழுகை நிகழ்ச்சியை முடித்து விட்டு தங்கபாலு வெளியே வந்தார். பேனர் அகற்றப்பட்டதை கேள்விப்பட்டு ஆவேசம் அடைந்தார். அவர் உடனடியாக போலீஸ் அதிகாரிகளை அழைத்து மீண்டும் பேனர்களை கட்டித் தராவிட்டால் மறியல் தொடரும் என்று கண்டிப்புடன் கூறினார்.

உடனே, பேனர்களை மீண்டும் அதே இடத்தில் கட்டிக்கொடுத்தனர். இதை தொடர்ந்து காங்கிரசார் மறியலை கைவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மேயர் மா.சுப்பிரமணியனிடம் கேட்ட போது அவர் சொன்ன பதில்:

அண்ணாசாலை மற்றும் கடற்கரை சாலைகளில் சென்னை நகரை அழகு படுத்தும் விதமாக சுவர் எழுத்துக்கள் மற்றும் சுவரொட்டிகளுக்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. ஆனால் டிஜிட்டல் பேனர்களை பொறுத்தவரை நிகழ்ச்சிகள் நடப்பதற்கு 3 நாட்கள் முன்பாகவும், நிகழ்ச்சி முடிந்தபின் 2 நாட்களும் வைத்து கொள்ளலாம் என்று ஏற்கனவே முதல்- அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். எனவே அனுமதி பெற்ற பேனர்கள் ஒரு போதும் அகற்றப்பட மாட்டாது. சென்னையை எழில்மிகு சென்னையாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்”



டிஜிட்டல் பேனர் வைத்தால் சென்னை நகரம் அழகாக இருக்கிறது என்ற காரணத்தால் கீழே இந்த பேனரை வைக்க சிபாரிசு செய்கிறேன்

( மேலே உள்ள படம் இட்லிவடை ரசிகர் ராஜா, போன வருடம் எனக்கு அனுப்பியது, அவருக்கு என் நன்றி )

Read More...

ஆரம்பப் பாடங்கள்! - கௌதமன்.

ஆரம்பப் பாட சாலையும், ஆசிரிய, ஆசிரியைகளும் எப்பொழுதுமே நம் நினைவில் தங்கி(விடும்; விடுவார்கள்).. மூன்றாம் வகுப்பிலோ அல்லது நான்காம் வகுப்பிலோ - ஒரு பாடம்.

பாட ஆரம்பத்தில் ஒரு சிறுவன் - அரை டிரௌசருடன், கைகளை - அம்பயர் WIDE சொல்வது போல் காட்டியபடி - நின்று கொண்டு, அவனருகே - என்ன காரணமோ - ஒரு சேவல் படமும் இருக்கும்.

பாடத்தின் பெயர் : திசைகள்.

சின்ன வயதில் - இந்த பாடம் என்னைக் குழப்பிய அளவிற்கு வேறு எதுவும் குழப்பியிருக்க முடியாது!

" சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"

இதில் ஏதும் குழப்பம் இல்லை.

நாம் தினமும் காலையில் எழுந்திருந்து, சூரியனைப் பார்த்தபடி நின்றோமானால், நம் முகத்துக்கு முன்னே இருப்பது கிழக்கு.

ஹும் .... சிறிய குழப்பம் ஆரம்பம்.

காலையில் பாயில் சுருண்டு படுத்திருந்தவனை - வனமாலினி (அக்கா) தண்ணீர் முகத்தில் தெளித்து, "இப்பொழுது எழுந்திருக்கவில்லை என்றால் - அடுத்தது ஒரு அண்டா தண்ணி வரும்" என்ற எச்சரிக்கையைக் கேட்டு, மருண்டு, உருண்டு எழுந்த பின், 'சூரியன் எங்கே?' - என்று கேட்க - அதை சரியாகக் கவனிக்காத அக்கா - 'எல்லாம் நீ ராத்திரி எங்கே வச்சியோ அங்கேதான் இருக்கும்' என்று சொல்வாள்.

சரி நாமே தேடிக் கண்டுபிடிப்போம் என்று துணிந்து வெளியே வந்து பார்த்தால் - வீட்டுக்கு முன்னே சட்டயப்பர் கோவில் மதிள் சுவர்தான் தொ¢யும். நம் புத்தகத்தில், "நாம் தினமும் காலையில் எழுந்திருந்து, சூரியனைப் பார்த்தபடி நின்றோமானால், நம் முகத்துக்கு முன்னே இருப்பது கிழக்கு" என்றுதானே போட்டுள்ளது; எழுந்திருந்தவுடன் சூரியனைப் பார்த்தபடி எப்படி நிற்பது?

வாசலுக்கு வரலாமா அல்லது கூடாதா? என்று மிகச் சிறிய சந்தேகங்கள்.

சரி - இந்த அற்ப சந்தேகங்கள் நிவர்த்தியானால் கூட -

சூரியனை நான் மதிள் சுவருக்கு அந்தப் பக்கம் ஸ்பாட் செய்து, அவருக்கு நேரே முகத்தை வைத்துக் கொள்ளும் பொழுது -

மேலும் சில சந்தேகங்கள். அவையாவன:

1) என் முகத்திற்கு நேரே இருப்பது கிழக்கு என்றால், காலுக்கு நேரே இருப்பது? கைகளுக்கு நேரே இருப்பது?

2) அதோ பக்கத்து வீட்டு தண்டு நிற்கிறானே - அவன் முகத்திற்கு முன்னே இருப்பது?

3) ஓரு வேளை - இந்த சட்டயப்பர் கோவில் சுவர்தான் கிழக்கோ?

KGS வந்து தலையில் ஒரு குட்டு வைத்தவுடன் - உழக்கு இரத்தம் வரும் முன்னே கிழக்கு முழுவதும் விளங்கிவிட்டது.

அடுத்த கட்டம்:

"நம் பின் பக்கம் இருப்பது மேற்கு"

ஆஹா - ஆரம்பிச்சுட்டான்யா - ஆரம்பிச்சுட்டான்....

மேலே கண்ட 1,2,3 கேள்விகளில், முகத்திற்கு பதில் முதுகும், சட்டயப்பர் கோவில் சுவருக்கு பதிலாக - கொல்லைப் பக்கத்து சுவரும், தண்டு விற்கு பதிலாக - நாகராஜ ஐயராத்து ஸ்ரீ ராமும் போட்டுக் கொள்ளுங்கள்.

என்னுடைய குழப்பங்கள் - உங்களுக்கும் வரும்.

இப்பொழுது நம் பின் பக்கம் இருக்கும் திசையைப் பார்க்க நம் முகத்தைத் திருப்பினால்,

கிழக்கு அங்கேயே இருக்குமா - அல்லது முகத்துக்கு எதிரே - அதுவும் திரும்பி - மேற்கைப் பார்க்கவிடாமல் செய்துவிடுமா?

அதையும் தவிர, தலை 180 டிகிரி திரும்பாதே!

K G Subramanian வருவதற்குள் விடை காண்பது அறிவு...

அதற்கும் அடுத்த கட்டம்:

நம் இடக்கைப் பக்கம் வடக்கு;

வலக்கைப் பக்கம் தெற்கு.

இந்த வாக்கியங்களை நான் எத்தனை முறைகள் கடம் அடித்தாலும்,

"நம் இடக்கைப் பக்கம் வலக்கு"

"வலக்கைப் பக்கம் இடக்கு"

"இலக்கைப் பக்கம் வலக்கு"

"வடக்கைப் பக்கம் இலக்கு"

என்றெல்லாம் - permutation's and combination's தான் வரும் - சரியாக வராது.

இவற்றுக்கும் மேலே சென்றால் - அது இன்னும் காமெடி!

"வடக்குக்கும் கிழக்குக்கும் நடுவே இருப்பது வடகிழக்கு"

ஏன் கிழ வடக்கு இல்லை?

"தெற்குக்கும் கிழக்குக்கும் நடுவில் இருப்பது தென்கிழக்கு"

ஏன் கிழ தெற்கு இல்லை?

Similarly -----

ஏன் மேல் தெற்கு இல்லை?

ஏன் மேல் வடக்கு இல்லை?

திசைகள் சுற்றிச் சுற்றி இப்படிக் குழப்புவதால்,

நமக்கு கிழக்கு மேற்கு மட்டுமே சுலபமாக விளங்குவதால்,

நான் கீழ்க் கண்ட 8 திசைகளை சிபாரிசு செய்கிறேன்:

1) கிழக்கு

2) மேற்கு

3) மேல் கிழக்கு

4) கிழ மேற்கு

5) மேல் கிழ கிழக்கு

6) கிழ கிழ மேற்கு

7) கிழ மேல் மேற்கு

8) மேல் மேல் கிழக்கு.

அன்புடன்

கௌதமன்.
நான் ஆட்டத்துக்கு வரலை :-)

Read More...

Sunday, June 21, 2009

எங்கே பா.ஜ.க ?

தேர்தல் தோல்விக்கு பிறகு எப்படி காங்கிரஸ் கட்சியை மேலும் வளர்க்கலாம் என்று பா.ஜ.க தலைவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்பட ஆரம்பித்துள்ளார்கள். மிகவும் கட்டுப்பாடான கட்சி என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட கட்சி இன்று பலவீனமான கட்சியாக எல்லோராலும் பார்க்கப்படுகிறது.

தேர்தலில் மக்களை கவர என்ன செய்யலாம் என்று எல்லோரும் யோசித்துக் கொண்டுருக்க, பா.ஜ.க மூத்த தலைவர்களை எப்படி சமாதானம் செய்யலாம் என்று தன் நேரத்தை வீண் செய்தது. பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டத்தை அருண் ஜேட்லி புறக்கணித்தார் உடனே அவரை சமாதானம் செய்ய ராஜ்நாத் சிங், அத்வானி, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் உள்ளிட்டோர் முயற்சி மேற்கொண்டனர். அருண் ஜேட்லியின் கோபம் - சுதன் ஷூ என்பவருக்கு கட்சியில் வட கிழக்கு மாநில கூடுதல் பொறுப்பாளர் என்ற பதவியை அவருக்கு கொடுத்தால்.

அத்வானி பா.ஜ.கவில் இருக்கிறாரா என்ற சந்தேகம் கூட வருகிறது. ஏதோ கட்சி கூட்டத்தில் குத்துவிளக்கு ஏற்றிய பிறகு தன் கடமை முடிந்துவிட்டது என்று எண்ணுகிறார். பா.ஜ.க என்ற முக்கியமான எதிர்கட்சி இன்னும் சில வருடங்களில் இருக்குமா என்று சந்தேகமே கூட வருகிறது.

பாரதிய ஜனதா கட்சியில் கொள்கை குழப்பம் அதிகமாக இருக்கிறது. பாஜக ஆட்சியிலிருந்தபோதிலும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தபோதிலும் அது ஹிந்துத்வா கொள்கையை ஒழுங்காகக் கடைப்பிடிக்கவில்லை. நாட்டில் எவ்வளவோ வாகனங்கள் விதவிதமாக வந்திருக்க அத்வானி ரதயாத்திரை என்று நேரத்தை வீண் விரயம் செய்கிறார்.

நேற்று தேர்தல் தோல்வியால் ஹிந்துத்வா கொள்கையைக் கைவிடப் போவதில்லை என்கிறார் - ராஜ்நாத் சிங். இந்த அறிவிப்பு என்ன சொல்லுகிறது ? அவர்களுக்கே இப்போழுது சந்தேகம். மேலும் ராமர் கோவிலைக் கட்டும் முடிவிலிருந்து பின்வாங்காது என்று சொல்லுவது போலியான ஹிந்துத்வா கொள்கையாகும். இவர்கள் கோயிலை கட்டவில்லை என்றால் அயோத்தியில் ராமர் பிறக்கவில்லை என்று ஆகிவிடுமா ? நாட்டுக்கு தேவையான எவ்வளவோ விஷயம் இருக்கும் போது, இந்த மாதிரி ஊசிப்போன அறிவிப்புகள் தேவையா என்று பா.ஜ.க யோசிக்க வேண்டும். ராமர் மீது நம்பிக்கை இருந்தால் அந்த இடத்தில் ராமரே கோயில் கட்ட ஏற்பாடு செய்வார். ராமருக்கு ராஜ்நாத் சிங்கும், அத்வானியும் தேவையில்லை. இவர்களுக்கு உண்மையான ஹிந்துத்துவா பற்று இருக்கா ? இல்லவே இல்லை. ஏதோ ஆ.எஸ்.எஸின் மதிப்பை பெற இது மாதிரி ஏதாவது சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியிருக்கு.

அத்வானி தோல்விக்கு பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்கிறார், பிறகு மற்றவர்கள் கேட்டுக்கொண்டதற்காக வாபஸ் பெறுகிறார். இதே போல் யஷ்வந்த் சின்ஹா அருண் ஜேட்லிக்கு ராஜ்ய சபா எதிர்கட்சி தலைவர் பொறுப்பு தரப்பட்டதால் ராஜினாமா செய்கிறார். இப்படி தினமும் இவர்கள் தமாஷ் தொடர்கிறது. இது போறாது என்று ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, அருண் ஜேட்லி கட்சியின் பொறுப்பிலிருந்து ராஜினாமா என்ற கூத்தும் தொடர்கிறது. இந்த கூத்து எல்லாம் முதலில் பத்திரிக்கைகளுக்கு லீக் செய்துவிட்டு தான் இவர்கள் செய்கிறார்கள்.

தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராயப் புறப்பட்டுள்ள இவர்கள், அத்வானிக்கு பிறகு யார் என்ற விடை தேட தான் உண்மையாக புறப்பட்டுள்ளார்கள். எங்கே மோடி வந்து குட்டையை குழப்பிவிடுவார்களோ என்று பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். அத்வானி இவை எல்லாம் நடக்காதது போல் பாசாங்கு செய்கிறார். எவ்வளவு நாளைக்கு ?

பா.ஜ.க மூத்த தலைவர்களின் அறிவு எல்லாவற்றையும் சேர்த்தால் கூட ராகுல் காந்தியின் அறிவில் 1% கூட இருக்காது என்று நிருபித்துவிட்டார்கள்.


பலவீனமான பிரதமர் மன்மோகன் சிங் என்று தேர்தலின் போது சொல்லிய அத்வானி அவரை சிட பலவீனமானவர் என்று தற்போது நிருப்பித்துள்ளார். Bharatiya Janata Party - The Party with a Difference என்று அவர்கள் சைட்டில் சொல்லியுள்ளார்கள். எவ்வளாவு உண்மை !



Read More...

Saturday, June 20, 2009

ஒலிப்புதிர் - 4

ரொம்ப நாள் கழித்து மீண்டும் ஒலிப்புதிர். இரண்டு பாடல்களை மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. ஒன்று சுலபம்.

Read More...

Friday, June 19, 2009

பதில் தெரியாத உபயோகமான கேள்விகள் - 5

உபயோகமான கேள்விகள் 5 இங்கே இருக்கிறது. நல்ல பதில் வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

1. கரோக்கே பாடல் என்றால் என்ன ? ஒரு சினிமா பாடலை எப்படி கரோக்கே பாடலாக மாற்றுவது ?

2. பழைய டேப்பில் இருக்கும் பாடல்களை எப்படி MP3 வடிவில் மாற்றுவது ?

3. டப்பர் வேர் டப்பாவில் நேற்று எடுத்துக்கொண்டு போன குழம்பு வாசனையை எப்படி எடுப்பது ?

4. இப்போதுள்ள நிலையில் வேலை வாய்ப்புக்கு எந்த மேல் படிப்பு /காம்பயுடர் கோர்ஸ் படிக்கலாம்? எந்த துறைக்கு வரும் காலத்தில் நல்ல டிமான்ட் இருக்கும்?

5. பங்கு சந்தையில் தற்போது முதலிடு செய்யலாமா ? என்னென்ன விஷயங்கள் கவனிக்க வேண்டும் , எந்த ஷேர் வாங்கலாம் ?

நல்ல பதில் இங்கே அப்டேட் செய்யப்படும். வேறு கேள்விகள் இருந்தாலும் கேட்கலாம்.

Read More...

Thursday, June 18, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 18-06-2009

இந்த வாரம் முனி இட்லிவடைக்கு எழுதும் கடிதம்..

அன்புள்ள இட்லிவடை

நலமா?
முதலில் முக்கியமான நியூஸ் சொல்லணும். மல்லிகா ஷெராவத்திற்கு. (தசாவதாரம் படத்தில் கம்பத்தைப் பிடித்துக்கொண்டு டான்ஸ் ஆடுவாரே, என் உடம்பு எவ்வளவு தெரிகிறதோ அதைவிட அதிகமா தமிழ் தெரியும்னு சொல்வாரே அவரே தான்) "ப்யூர் ஆத்மா" என்ற பட்டத்தை சங்கராச்சாரியார் கொடுத்திருக்கிறார். தமிழ்நாட்டு சங்கராச்சாரியார் இல்லை; கர்நாடகாவில் இருக்கும் ஒருவர். கோகர்ணாத்திலுள்ள ஸ்ரீராமச் சந்திரப்பூர் மடத்துக்கு மல்லிகா விஜயம் செய்த போது இந்த பட்டம் அவருக்கு கிடைத்திருக்கிறது. முற்றும் துறந்தவரிடமிருந்து இன்னொரு முற்றும் துறந்தவருக்கு பட்டம் கிடைப்பது சரிதானே! இனி டாக்டர் பட்டம் எல்லாம் ஃபேஷன் இல்லை என்றாகிவிடுமோ?

டாக்டரின் தைலாபுரம் தோட்டம் பக்கம் போயிருந்தேன். பெரிய அரங்கு, பழக்க தோஷத்தில் ஓட்டுப் பெட்டி கூட வைத்திருந்தார்கள். ராமதாஸ் வெகுநேரம் பேசிக்கொண்டே இருந்தார். பாட்டாளிகள் எல்லாம் நெளிய ஆரம்பித்தனர். ஆப்ரேஷன் தியேட்டர் மாதிரி கதவுகள் மூடப்பட்டிருத்தால் அறுவை சிகிச்சையிலிருந்து யாரும் எழுந்து வெளியே தப்பித்துப் போக முடியவில்லை. பேச்சாளர் ஒரு கட்டத்தில் சுயநினைவுக்கு வந்து, "ஸாரி ரொம்ப நேரம் பேசிட்டேன் இல்ல? வரும்போது வாட்ச் கட்டிவர மறந்துட்டேன் அதான்" என்றார்.

கடைசியில் இருந்த தொண்டர் சத்தமாகச் சொன்னார். "யோவ் உன் எதிரில் காலண்டர் மாட்டியிருக்கு அதையாவது பார்த்திருக்கலாம் இல்ல?" ஆனால் அதைவிட நிஜமான ஒரு பெரிய ஜோக் கேள்...

சில நாட்கள் முன் "எந்தக் கட்சியிடமும் உள்ளாட்சிச் தேர்தலில் இந்த வார்டு வேண்டும் என்றும், சட்டசபை தேர்தலில் இந்த தொகுதி வேண்டும் என்று எதுவும் கேட்க வேண்டியதில்லை. இனி அந்த மாதிரி எந்தக் கட்சியிடமும் சீட் கேட்கப் போவதில்லை" என்று சொல்லியுள்ளார். என்னமோ இவர் கேட்டதும் மற்ற கட்சிகள் தூக்கிக் கொடுத்துவிடப் போவதுமாதிரி. "தேங்காய்ச் சட்னி - கொளுந்தியாள் மாதிரி; தொடாத வரை நல்லது," என்று வைரமுத்து முன்பு ஒரு முறை சொல்லியிருக்கிறார். இப்போது ராமதாஸும் தேங்காய் சட்னி மாதிரி தான்.

'சாப் ஸ்டிக்' என்பது ஆங்கில வார்த்தையா என்று தெரியாது ஆனால் Chinese Pidgin English வார்த்தை என்று சொல்லுகிறார்கள். நம்ம தமிலிஷ் மாதிரி. அதில் "Chop Chop" என்றால் சீக்கிரம் என்று அர்த்தம். ஆங்கில வார்த்தைகளை அங்கீகரித்து, புழக்கத்தில் விடும் பொறுப்பு, அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள "குளோபல் லேங்குவேஜ் மானிட்டர்' என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு நிபுணர்கள் இதில் உள்ளனர். பல்வேறு நாடுகளில் வெளியாகும் புத்தகங்கள், பாடல்கள், கவிதைகள், இன்டர்நெட், ப்ளாக்குகள் போன்றவற்றில் வெளியாகும் புதுப்புது வார்த்தைகளை இந்த அமைப்பில் உள்ள நிபுணர்கள் ஆராய்ந்து அங்கீகரிப்பர். பல நாடுகள் பல வார்த்தைகளை அனுப்பியுள்ளன. தமிழ் ப்லாக்குகளில் நிறைய கிடைக்குமென்பது அவர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. பெண்கள் அணியும் உள்ளாடை "கட்டீஸ்' என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தையும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "ஜெய் ஹோ' என்ற பாடலின் அந்த வார்த்தையும், பத்து லட்சமாவது வார்த்தை ஆகும் போட்டியில் இடம்பெறுகின்றன. கட்டீஸுக்கு ஜெய் ஹோ!

படத்தில் நீ பார்ப்பது ஜெர்மனியில் நடந்த ஒரு டிவி ஷோவில் விருந்தினர் சாப் ஸ்டிக்கை வைத்துக்கொண்டு 25 மாடல் பெண்களின் பிராவைக் கழட்டுகிறார். அவர் மேல எந்த தப்பும் இல்லை. விருந்தினருக்கு சாப் ஸ்டிக் கொடுத்துவிட்டு உடனே ஏதாவது சாப்பிட கொடுத்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா? நாடு ரொம்ப முன்னேறி விட்டது, முற்போக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே அது இதுதானா என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.

திருவாரூர் அருகே உள்ள தங்களது குடும்பத்தின் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்குச் சென்று துணை முதல்வர் ஸ்டாலின் வழிபாடு செய்தார். காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகம் அம்மாள் சமாதிக்கு தனது மனைவி துர்காவுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, சமாதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நாம் நாள் கிழமை என்றால் கோயிலுக்கு போவதில்லையா, திதி எல்லாம் செய்வதில்லையா அது போல தான் இதுவும். பகுத்தறிவுக்கோ, பெரியாருக்கோ தோல்வி எல்லாம் இல்லையாக்கும்!

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தோல்வி அடைந்து அரை இறுதி வாய்ப்பை இழந்ததைத் தொடர்ந்து டோனி உருவபொம்மையை எரித்திருக்கிறார்கள் நம் ரசிகர்கள். நல்ல வேளை டெண்டுல்கர் வேடிக்கை பார்க்க மட்டும் போயிருக்கிறர். இனிமேல் ரிடையர் ஆன கிரிக்கெட் வீரர்கள் கமெண்டரி சொல்லப் போகலாம் அல்லது சியர் லீடர்ஸாக(யாருக்கு?)ப் போகலாம், கவர்ச்சியாக இருக்காது அவ்வளவு தான்.

கதாநாயகர்கள் தாங்கள் நடிக்கிற படங்களில் பாடுகிற கலாசாரம், சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கமலஹாசன், விஜய் ஆகிய இருவரையும் தொடர்ந்து, விரைவில் திரைக்கு வர இருக்கும் `கந்தசாமி' படத்தில் விக்ரம் சொந்தக் குரலில் 4 பாடல்களைப் பாடியிருக்கிறார். இதேபோல் `ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் தனுஷ் சொந்த குரலில் பாடியிருக்கிறார். யார் சொன்னது, தமிழனுக்கு சகிப்புத் தன்மை கிடையாது என்று?

4 வயதில் தட்டமை நோயால் பாதிக்கப்பட்டு பார்வையைப் பறிகொடுத்த சக்கரவர்த்தி இப்போது கோவை மாவட்ட 3-வது கூடுதல் முன்சீப் கோர்ட்டின் நீதிபதி. சட்டம் ஒரு இருட்டறை என்று அண்ணா சொன்னார் - இனியாவது நியாயத் தராசில் வெளிச்ச மழை பொழியட்டும்.

ராமநாதபுரம் மாவட்டம் பொந்தம்புளி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(31) தற்போது திருச்சியில் குடும்பத்துடன் வசிக்கும் முத்துராமலிங்கம், காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். 2 மகன், ஒரு மாத பெண் குழந்தை உள்ளது. ஒரு நாளைக்கு ரூ.100 முதல் 150 வரை மட்டுமே சம்பளம் பெறும் இவர், கடந்த மே 8ம் தேதி ‘இந்தியாவின் கடனை அடைக்க’ என்று குறிப்பிட்டு ரூ.5,000க்கு டி.டி. எடுத்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பினார். அதை பிரதமர் நிவாரண நிதியில் சேர்த்துக் கொண்டனர். அவருக்கு நன்றி தெரிவித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பியுள்ளனர். இதுபற்றி முத்துராமலிங்கம் கூறுகையில்,‘ நம் நாடு வெளிநாடுகளில் வாங்கியிருக்கும் கடனால், ஒவ்வொரு இந்தியனுக்கும் ரூ.30,000ம் கடன் உள்ளது என்று பத்திரிகையில் படித்தேன். எனவே, சேமித்த பணத்தை, கடனை அடைக்க என்று எழுதி பிரதமருக்கு அனுப்பினேன்’ என்றார். ராமநாதபுரத்தில் ஏன் மழை பெய்வதில்லை?

ஈரோடு மாவட்ட காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி ஜோதிமணி தம்பதியின் மகன்கள் அருண் செல்வராஜ்(12) அன்பு வெற்றி(7). தமிழ் ஆர்வலரான சுப்பிரமணி தன் மூத்த மகன் அருண் செல்வராஜை 1330 திருக்குறள்களையும் மனப்பாடம் செய்யவைத்தார் அவன் மேடை ஏறி திருக்குறள் அனைத்தையும் கூறி விளக்கி பலரது பாரட்டைப் பெற்றுவருகிறான். இந்த நேரத்தில் விதி விளையாடியது. இதய நோயாளியான அவன் அம்மா உயிரைக் காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. வியசாயக் கூலித் தொழிலாளியான சுப்பிரமணி சோர்ந்துபோனார். ஆனால் மனம் தளராது அருண் செல்வராஜ் தாயின் உயிரைக் காப்பாற்ற மேடை மேடையாக ஏறினான். ஏறக்குறைய 500 மேடைகளில் தனது மழலைக் குரலால் திருக்குறள் ஒப்புவித்து கண்ணீர் மல்க உதவி கேட்டான். பலர் உதவி செய்தார்கள். ஆனால் அவர் அம்மா ஆபரேஷன் செய்தும் பிழைக்கவில்லை. அருண் மனம் தளரவில்லை. தற்போது திருக்குறள் பொருள் கூறி சிடி வெளியிட்டுள்ளான். தற்போது தொல்காப்பியம், திருமந்திரம், பாரதியார், பாரதிதாசன் கவிதைகளை மனப்பாடம் செய்துவருகிறான். அண்ணனிடம் திருக்குறள் பயிற்சி பெற்று வருகிறான் தம்பி. தாயின் இடத்தை தாய்மொழி இட்டு நிரப்பட்டும்.

நடிகைளின் தாய்க்குலங்கள் எழுத்தாளினிகளுக்கு இணையாக இப்பொழுது பத்திரிகையில் கேள்வி பதில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது அட்வைஸ் - லேட்டஸ்ட் வரவு த்ரிஷா அம்மா. எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம், எந்த நடிகைகளின் அம்மாவை பார்த்தாலும் அக்கா தங்கை மாதிரி இருக்கிறார்களே ஏன்? சில சமயம் அம்மா தங்கை மாதிரியும் பெண் அக்கா மாதிரியும் இருக்கிறார்களே ஏன்? ஏன்??

ஔவையார் தெரியும் அவர் தங்கை உவ்வையார் தெரியுமா ?. இருவருக்குமாக ஒரு கோயில் நாகை மாவட்டத்தில் துளசியாபட்டினத்தில் உள்ளது. அவ்வை உவ்வை கோயில் என்று அழைக்கப்படுகிறது. அடுத்த ஷங்கர் படத்தில் அங்கவை சங்கவை மாதிரி அவ்வை உவ்வை காமெடி வந்தாலும் வரலாம்.

நயன்தாரா பற்றி நக்கீரன் முதல் ஆனந்தவிகடன் வரை கவர் ஸ்டோரி போட்டுவிட்டார்கள். நானும் என் பங்கிற்கு ஏதாவது போட வேண்டும் - சமீபத்தில் நயன்தாரா கேரளாவில் நடிக்கும் மலையாள படத்திற்காக இலவசமாக ஒரு நடனக் காட்சி அமைத்துக் கொடுத்தாராம் பிரபுதேவா படத்தின் பெயர் - பாடிகாட்.

கேரளாவில் இல்லாத இலக்கியச் செழுமை தமிழ்நாட்டில் இருக்கிறது என்கிறார் மனுஷ்யப்புத்திரன். இதற்கு சாரு, ஜெயமோகன் என்ன சொல்லுவார்கள் ? நிச்சயமா எனக்கு விடை தெரியாது ஆனால் "ஃபஸ்ட் நைட் லாஸ்ட் என்ன வித்தியாசம்?" என்பதற்கு விடை


பூ மேல நீ படுத்தா அது ஃபஸ்ட் நைட்.
படுக்கும்போது உன் மேல பூ விழுந்தா அது லாஸ்ட் நைட்


இப்ப குட் நைட்
அன்புள்ள
முனி

Read More...

Wednesday, June 17, 2009

யாருக்கு சபாஷ் சொல்லுவது ?

டெல்லி செய்தி:
3 நாள் ரஷிய பயணத்தை முடித்து டெல்லி திரும்பிய பிரதமர் மன்மோகன்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த 16-ந்தேதியன்று தன்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அத்வானி, தேர்தல் பிரசாரத்தின் போதான தனது பேச்சுகளுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும், தானும் தனது பேச்சுகளுக்காக அவரிடம் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் எதிர்கட்சி தலைவரான அத்வானியுடன் நல்லுறவை பேண விரும்புவதாகவும் கூறினார்.


சபாஷ் அத்வானி, மன்மோகன் சிங்!


சென்னை செய்தி:

தமிழக சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி அ.தி.மு.க. உறுப்பினர் எஸ். வி.சேகர் பேசினர்....

...என் அருகில் இருக்கும் உறுப்பினர்கள் என்னை துரோகி என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மை இல்லை. “உறுப்பினர் கலைராஜன், “அடுத்து நீ பேசினால் போட்டு விடுவேன்” என்று கூறுகிறார். சட்டத்தை மதிக்க வேண்டிய சட்டசபையிலேயே இப்படி சொல்கிறார். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது உயிருக்கோ,உடமைகளுக்கோ ஏதாவது நடந்தால் அதற்கு யார் காரணம் என்பதை இந்த சட்டசபையில் நான் பதிவு செய்கிறேன். நான் வாழ்த்து மட்டும் சொல்ல விரும்பினேன். துணை முதல்-அமைச்சர் பல்லாண்டு வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்”.

கலைராஜன் பேச்சு - இங்கு பேசிய எட்டப்பன் எஸ்.வி.சேகர் நாளை பன்றிக்காய்ச்சலால் “படார்” என்று போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு நான் பேச வில்லை.


அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் நாமம் வாழ்க!, தமிழ் வாழ்க!!


அப்டேட்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான நடிகர் எஸ்.வி.சேகருக்கு எந்திர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டுக்கும் துப்பாக்கி போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். எஸ்.வி.சேகர் வெளியில் செல்லும்போதும் அவரோடு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக செல்வார்கள். கொலை மிரட்டல் வந்ததையொட்டி, எஸ்.வி.சேகருக்கு இந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை நகர போலீசார் தெரிவித்தனர்.

Read More...

கொக்கிக் காய்ச்சல்(H1,L1) பரவுவது ஏன்? - விஞ்ஞானிகள் ஆய்வு

கொக்கிக் காய்ச்சல் வைரஸ் இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் எவ்வாறு பரவியது என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். பல விஞ்ஞானிகள் சமீபத்தில் உலகளவில் ஏற்பட்ட தொற்று நோய்களான புத்தகப் புழுக் காய்ச்சல், சினிமா மூட்டைக்கடிக் காய்ச்சல், பட்டர் ஃப்ளைக் காய்ச்சல், வலைப்பதிவுக் காய்ச்சல் ஆகியவை குறித்து நீண்ட ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர்.

அந்தக் கட்டுரையில், வைரஸ் காய்ச்சல் பற்றி ஏராளமான தகவல்களைத் தெரிந்து கொண்டாலும், பதில் தெரியாத சில கேள்விகளும் உள்ளன. உதாரணமாக, வைரஸ் ஒரு இனத்தில் இருந்து மற்றொரு இனத்திற்கு இணையத்தில் பரவுதல், மனிதனில் இருந்து மனிதனுக்குப் பரவுதல், முகமூடி அணிந்த மனிதனைக் கூட தவிர்க்காமல் தாக்குதல், கடந்த காலத் தொற்று நோய்கள் மற்றும் தற்போது ஏற்பட்டிருக்கும் புதிய தொற்று நோய் ஆகியவற்றிற்கான காரணிகள் மற்றும் காரணம் என்ன? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தப் புதிய வைரஸ் காய்ச்சலுக்குக் காரணமான கொக்கி வைரஸை (கேள்விக் குறி போன்ற வடிவில் இருக்கும் வைரஸ்) தீவிரமாகக் கண்காணிப்பதன் மூலம், இந்த நோய் ஆபத்தாக மாறுவது மற்றும் மனிதர்களுக்கு இடையே பரவுவது போன்றவற்றிற்கு காரணம் வேலையில்லா திண்டாட்டம் என்றும் கண்டறியலாம். நம் மக்கள் H1, L1 வீசா வாங்கிக்கொண்டு அமெரிக்கா சென்று ரிசஷனில் தன் வாழ்க்கையே கொக்கியாய் இருக்கும் போது, அடுத்தவனுக்கு ஏராளமான கொக்கிகளை மாட்டி ஆற்றிக் கொள்வதால் இதற்கு எச்-1 எல்-1 வைரஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த வைரஸைக் கண்காணிப்பதால், விஞ்ஞான ரீதியாக பல அரிய தகவல்கள் கிடைக்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அமைத்த சர்வதேச அளவிலான குழு ஒன்று, கொக்கிக் காய்ச்சல் வைரஸின் தோற்றம் அதன் ஆரம்ப கால வளர்ச்சி ஆகியவை குறித்து அறிய பரிணாம ஆய்வு ஒன்று செய்துள்ளது.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "இணையத்தில் பல வைரஸ்கள் சேர்ந்து, அதிலிருந்து இந்தக் காய்ச்சல் நோய்க்குக் காரணமான வைரஸ் உருவாகிறது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு தொற்றுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே உருவாகி உள்ளது," என்றனர். அதே சமயம் இது பட்டர் ஃப்ளை காய்ச்சல், அல்லது சினிமா மூட்டைக்கடிக் காய்ச்சல், புத்தகப் புழு ரகங்கள் போல் அதிக அபாயம் இல்லை என்றும் கூறப்படுகிறது. என்றாலும் உலகம் முழுவதும் இந்த நோய்த் தொற்று பரவியது எப்படி என்ற கேள்வி பெரிதாகப் பேசப்படும் பரபரப்பான விஷயமாகியுள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகையில், "இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தன் அப்பன் பேர் வைத்த கடுப்பு முதல் தன் துணையிடம் என்னவெல்லாம் பிடிக்கவில்லை என்பதுபோன்ற மாற்றுக் கருத்துகளோடும் துணை இல்லாத போது என்னவெல்லாம் செய்யலாம் என்பது போன்ற மாற்றுச் சிந்தனைகளோடும் எதிர்மறை எண்ணங்களின் பாற்பட்டும், அடுத்தவன் வீட்டைப் பார்த்து வெதும்பியும் தனக்குத் தானே மன உளைச்சலுக்கு ஆளாகிக் கொண்டு இருப்பதும், கேரட் தான் போட்ட மோர்க்குழம்பு சாப்பிடுவதும், குரங்கு நீர்வீழ்ச்சிக் குளியல் போடுவதும், மற்றவர்களை இமிடேட் செய்வது, பேஸ் வாய்ஸில் பாடுவது ... என்று பல பல அறிகுறிகள் இந்நோயின் முக்கிய அறிகுறி" என்று தெரிவித்துள்ளார்.

"இந்த காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் அந்தரங்கத்தில் அடங்கியிருந்த பல உப வைரஸ்கள் விழிப்புற்றிருப்பதால் குடும்பத்தினரையும் குடும்ப அமைதியையும்கூட பாதிக்கக் கூடிய சூழ்நிலை இருப்பதால் ஒருவர் தாக்கப்பட்டாலும் சமுதாயத்தில் பலரையும் பாதிக்கும் அபாயம் நிலவுகிறது' என்று சமூகவியலார் கவலையான கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த காய்ச்சலில் '32' வயதே ஆன ஒரு இளம் பீடா எழுத்தாளர் பாதிக்கப்பட்டு, கிலோ கணக்கில் காதல் கதை எழுத தொடங்கிவிட்டார், அதே போல இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பல்லை எடுத்துவிட்டார்கள். இப்படி 'சொக்கத் தங்கமாக' இருந்த பலர் இன்று 'உருப்படாத' 'சோம்பேறி'கள் ஆகி இந்தக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த காய்ச்சல் வந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமால் காலாவதியான இணையர்களையும் இது இழுத்துவைத்துத் தாக்குவதோடு முகமூடி அணிந்தவர்களும் இதிலிருந்து தப்பமுடியவில்லை என்பது குறித்து சுகாதரத் துறை மேலும் கவலை தெரிவித்துள்ளது.

கொக்கிக் காய்ச்சல் நோயால் பாதிக்கபட்டவர்கள் பெரும்பாலோர் தமிழ் பேச எழுதத் தெரிந்தவர்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. "வளர்ச்சியடைந்த மொழிகள் மற்றும் நமது மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது, 221 பேர் இந்தக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது ஒன்றுமேயில்லை" என்று பெருமையாக சொல்லுகிறார் தமிழக அரசு அதிகாரி. ஆனால் நாளுக்கு 40 பேர் என்ற அளவில் பரவிக்கொண்டிருக்கும் இந்த வைரஸ் தாக்குவோரின் எண்ணிக்கை 4ன் மடங்கில் வளர்ந்துகொண்டே வருகிறது.


கொக்கி காய்ச்சலை பரவாமல் தடுப்போம், சுற்றுப்புற சூழலை காப்போம்!


Read More...

Tuesday, June 16, 2009

இன்று படித்த செய்தி, எப்போதோ படித்த ஜோக்

"வீட்டோட வேலைக்காரி கிடைப்பாளா?"
"உங்களுக்கத்தான் வீடே இல்லையே, அப்புறம் எதுக்கு வேலைக்காரி?"
"அதான் வீட்டோட வேலைக்காரி கிடைப்பாளான்னு கேட்டேன்"

Read More...

Saturday, June 13, 2009

நகை+சுவை = நகைச்சுவை


2004ல் இட்லிவடையில் வந்துக்கொண்டிருந்தது. விஷயம் இது தான்.
ஜோக்கின் ஒரு பகுதியை கொடுத்துவிட்டு மீது உள்ள பகுதியை மற்றவர்கள் சொல்ல வேண்டும். அப்போது பின்னி பெடலேடுத்தவர் 'அச்சமுண்டு அச்சமுண்டு' அருண் !

இன்றைய ஜோக் -1:

அவனும் அவளும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். திடீரென்று நின்றவள், "எனக்கு எங்கே அம்மை குத்தினார்கள் என்று உனக்கு காட்டட்டுமா ? " என்று கேட்டாள்

அவன் மூச்சு அடைக்கும் பரபரப்புடன் "எங்கே காட்டு .. காட்டு" என்றான்

அவள் சொன்ன பதில் என்ன ?

ஜோக் - 2
இரண்டு பேர் பஸ் ஸ்டாப்பில்
முதல் நபர் - "என் மனைவி ஒரு தேவதை!"
பக்கத்தில் இருப்பவர் என்ன பதில் சொன்னார் ?

ஜோக் - 3

சிறந்த சிக்கன யோசனை கூறும் ஊழியருக்கு 100ரூபாய் பரிசு என்று மேனேஜர் அறிவித்தார். அவருடைய ஸ்டெனோவிற்கு பரிசு கிடைத்தது.
அந்த ஸ்டெனோ கொடுத்த யோசனை என்ன ?


ஜோக்-4
தொ-1: "தலைவரை எங்கே தேடியும் மூணு நாளா கிடைக்கல நம்ப மாட்டே GHல மார்ச்சுவரில கூட போய் பார்த்தாச்சு"
தொ-2: "அப்பறம்?"
தொ-1: ?

Read More...

Friday, June 12, 2009

அ. இ. ஆ. மு.க

சினிமா இயக்குனர்கள் படம் தொடங்கும்முன்பே செய்யும் முதல்காரியம் பிலிம் சேம்பருக்குபோய் 'டைட்டிலை' பதிவு செய்வதுதான். அந்த 'பழக்கதோஷத்தில்' ,கட்சி ஆரம்பிக்கும் முன்பே தனது கட்சியின் பெயரை அறிவித்துஇருக்கிறார் நடிகர் எஸ். வி. சேகர்.

அகில இந்திய ஆர்ய முன்னேற்றக்கழகம் - இதுதான் அந்தப்பெயர். இந்திய அரசியல் வரலாற்றில், முதல் முறையாக(?) பிராமணர்களுக்காக தொடங்கபோகும் ஒரு சாதிக்கட்சி. கட்சிபெயரை பார்த்தால் சாதிக்கட்சி மாதரி தெரியவில்லை. எதோ நடிகர் ஆர்யாவின் ரசிகர்மன்றம்போல இருக்கிறது. சிறுத்தை, புலி,சிங்கம் என்று சேர்த்தால்தானே இளைஞர்களுக்கு சமுதாய 'உணர்வு' வரும்?

கட்சிபெயரை அறிவித்துவிட்டு அவர் ஒரு பேருரை ஆற்றினார்.

"பிராமணர்கள் பொருளாதாரத்தில் நலிந்து உள்ளனர். அவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம், ஒவ்வொரு கட்சியும் தலா 5 தொகுதிகளை பிராமணர்களுக்கு ஒதுக்க முன்வந்தால் நாங்கள் கட்சி தொடங்க அவசியம் இருக்காது. எனவே கட்சி ஆரம்பிப்பதும், ஆரம்பிக்காததும் தமிழக அரசியல் கட்சிகள் கையில் இருக்கிறது.

தந்தை பெரியார் சொன்னது போல் எல்லா சமூகத்தினருக்கும் சமமான பங்களிப்பு வேண்டும். பிராமணர்களுக்காக நான் துவங்கிய அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. பண பலமும், ஆட்கள் பலமும் சரியாக அமைந்தால் கட்சி துவங்குவேன்.

12 தொகுதிகளில் ஜெயிக்க கூடிய அளவு நாங்கள் உள்ளோம். குறைந்தது 5 எம்.எல்.ஏ.க்களாவது எங்கள் சமூகத்தின் சார்பில் சட்ட மன்றத்துக்கு செல்ல வேண்டும். அதற்கு ஆதரவான கட்சிகளுடன் இணைந்து செல்லவும் தயாராக இருக்கிறோம்"

என்றவர், ஹைலைட்டாக "தமிழக பிராமணர்கள் ஈழத் தமிழர்களை விடமோசமான நிலையில் உள்ளனர். இலவச கலர் டி.வி. பெட்டிகூட தர மறுக்கிறார்கள். புது கட்சி துவங்கினால் அது ஆர்யர்கள் முன்னேறத்துக்காகவும், ஆர்ய-திராவிட ஒற்றுமைக்காகவும் பாடுபடும்" என்று பஞ்ச் வைத்தார் சின்ன கேப்டன்(!).

கட்சியின் சின்னத்தில் தேசிய கொடியின் வண்ணங்களும், ராஜாஜி உட்பட்டோரின் படங்களும் இருக்கும் என்றார் ('ஜெ' வுக்கு இடம் உண்டா?).

விரைவில், 'இனமான சிங்கம் எஸ். வி. சேகர் அழைக்கிறார், அலை கடலென அணி திரள்வீர்' என்ற டிவி விளம்பரத்துடன், மயிலாப்பூரில் விரைவில் ஒரு மாநாடு நடத்துவார் (பிரியாணிக்கு பதில் தயிர்சாதம்?). ' அவாள்' ல பாதிப்பேர் அமெரிககாவில் இருகிறார்கள். அலைகடல் கூட்டத்திற்கு எப்படி 'ஆள்' தேற்றுவார் என்று தெரியவில்லை.

'யார்' வந்தாலும் சேர்த்துகொள்ளும் பாஜகவுடன் கூட்டணிஅமைத்து, வரும் சட்டமன்ற தேர்தலில் சில தொகுதிகளில் போட்டியிடகூடும்.

சு.சாமி, சோ, சங்கர மடத்தினர் போன்றோர் 'வெளியில் இருந்து' ஆதரவு அளிக்க வாய்ப்புகள் அதிகம்.

சாதிக்கட்சிகளுடன் கூட்டணி என்பதையெல்லாம் 'ஓல்டு பேஷனாக்கி' , தமிழக அரசியலில் தனது 'இலவசங்களால்' புது 'டிரெண்டை' செட் செய்துவிட்டார் நம் 'சதாபிஷேக தலைவர்(??)'. இந்த யுகத்தில் சாதிக்கட்சி தொடங்கவிரும்பும் எஸ். வி. சேகர், அவரது நாடக பாணியில் சொல்வதானால்,
ஒரு அய்யோ பாவம்.

பலமுறை எழுப்பபட்ட , விடைதெரியாத மெகா 'பாரத' கேள்விகள் இரண்டு.

பரமஏழையாய் பிறந்த ஒருவர், பிராமிணர் என்ற ஒரே காரணத்துக்காக அரசின் உதவிகளுக்கு புறக்கணிக்கபடுவது, சரியா?

சகலவசதிகளுடன் பிறந்த ஒருவர், தனக்கான இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை பயன்படுத்துவதை சரி என்பதா? இல்லை தவறு என்பதா?

இந்த முரண்பாடுகளுக்கு, மாற்றுத்திட்டங்கள் எந்த அளவுக்கு சாத்தியம்?
- இன்பா


இன்பா எழுதும் போஸ்டுக்கு மஞ்சள் கமெண்டே தேவையில்லை :-)

Read More...

மகேசன் சேவை - மக்கள் சேவை



மக்கள் சேவை
பிரபல தொழில் அதிபரான மந்திரி காலி ஜனார்த்தன ரெட்டி, நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.
இரவில் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர் நேற்று காலை, ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.45 கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கினார். திருப்பதி திருமலை தேவஸ்தான சிறப்பு நிர்வாக அதிகாரி எ.வி.தர்மாரெட்டி, அவரிடம் இருந்து வைர கிரீடத்தை பெற்றுக்கொண்டார்.

21/2 அடி உயரம் உள்ள இந்த கிரீடம், ஏறத்தாழ 34 கிலோ எடை கொண்டதாகும். 2 ஆண்டு கால திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஏராளமான பொருட்களை காணிக்கையாக வழங்கி இருக்கிறார்கள்.

இந்த நூற்றாண்டில் செலுத்தப்பட்ட காணிக்கைகளில் இதுவரை ரூ.10 கோடி மதிப்புள்ள காணிக்கைதான் அதிக மதிப்புமிக்கதாக இருந்தது. தற்போது கர்நாடக மந்திரி வழங்கிய ரூ.45 கோடிவைர கிரீடம்தான் இதுவரை வந்த காணிக்கைகளில் மிகவும் விலை உயர்ந்தது என்று கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தங்கத்தில் வைரக்கற்கள் பதித்த இந்த கிரீடம், கைதேர்ந்த தொழில் நுட்ப கலைஞர்களால் கடந்த 9 மாதங்களாக தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமைகளில் வாராந்திர அபிஷேகம் முடிந்ததும் ஏழுமலையானுக்கு இந்த வைர கிரீடம் அணிவிக்கப்படும்.



மகேசன் சேவை
45 கோடியில் என்ன செய்யலாம் ?

90,000 ஏழை குழந்தைகள் ஒரு வருட படிப்புக்கு ஆகும் செலவு.
44,000 ஏழை குழந்தைகளுக்கு உணவு, உடை, மருத்துவம் - ஒரு வருடத்துக்கு ஆகும் செலவு
1,73,077 அனாதை குழந்தைகளை ( மூன்று வயது வரை ) பராமரிக்கலாம்
90,000 மூளை வளர்ச்சி குன்றிய சிறுவர்களை ஒரு வருடம் பராமரிக்கலாம்.
- தகவல் உதவி உதவும் கரங்கள்.

மக்கள் சேவையே மகேசன் சேவை

Read More...

Thursday, June 11, 2009

சொல்வனம்



நண்பர்களே,

சொல்வனம் என்ற புதிய மாதமிருமுறை இணைய இதழைத் தொடங்கியிருக்கிறோம். இந்த இதழை http://www.solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள், புத்தகவிமர்சனம், அறிவியல் சர்ச்சைகள், சமூகம், இசை, வாழ்வியல் ரசனை, மொழிபெயர்ப்பு, இதழ்பார்வை எனப் பல்வேறு திறப்புகளில் படைப்புகள் கொண்டிருக்கும் முதல் இதழே இந்த இதழின் பன்முகத்தன்மையைக் காட்டுவதாய் இருக்கும் என நம்புகிறோம்.

இந்த இதழுக்கு உங்களுடைய ஆதரவையும், படைப்புகளையும் எதிர்பார்க்கிறோம். வன்முறையைத் தூண்டாத, காழ்ப்புணர்வில்லாத எந்த படைப்பையும், அது எந்தத்துறை, கொள்கையைச் சார்ந்ததாய் இருப்பினும் வரவேற்கிறோம். உங்கள் மேலான கருத்துகளையும், படைப்புகளையும், விமர்சனங்களையும் editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.


முதல் இதழின் உள்ளடக்கம்:

திலீப்குமாரின் இலக்கிய உலகம் - ச.திருமலைராஜன்
அக்ரகாரத்தில் பூனை - திலீப்குமார் - சிறுகதை
அரசியலாக்கப்படும் அறிவியல் - க்ளோபல் வார்மிங் புனைவா? உண்மையா? - அருணகிரி
திசை - சுகா
இந்திய இசையின் மார்க்கதரிசிகள் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ், கத்ரி கோபால்நாத், தெபாஷிஷ் பட்டாச்சார்யா ஆகியோரை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை - ஸ்ரீ
ஒலிக்காத குரல்கள் - கோபிகிருஷ்ணனின் 'உள்ளேயிருந்து சில குரல்கள்' புத்தகத்தை முன்வைத்து - ஹரன்பிரசன்னா
அறிவியல் கல்வியின் சமுதாயத்தேவை - அரவிந்தன் நீலகண்டன்
வன்முறையின் வித்து - ஓர் விவாதம் - ஹரிவெங்கட்
மகரந்தம் - இதழ் பார்வை

அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழுவினர்.
http://www.solvanam.com

இப்ப சைட்டில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை( இப்படியே இருந்தா நல்லா இருக்கும்), வந்த பிறகு படித்துவிட்டு மஞ்சள் கமெண்ட் எழுதலாம் என்று இருக்கேன் :-)

Read More...

Wednesday, June 10, 2009

தகுதியா ? பரம்பரையா ?


பரம்பரை சொத்தாகும் பாரத தேசம்



தகுதியுள்ள வாரிசுகளுக்கு தடையெதற்கு?

உரத்த சிந்தனை என்ற தலைப்பில் வந்த இரண்டு தினமலர் கட்டுரை.

பரம்பரை சொத்தாகும் பாரத தேசம்
லோக்சபா தேர்தல் முடிந்து விட்டது. சரியாகச் சொல்வதென்றால், இது இந்திய அரசியல்வாதிகள், மக்கள் மீது தொடுத்த தேசிய யுத்தம். இதில் தோற்றவர்கள், வழக்கம் போல் மக்களே.தனியாக அடித்தால் வெல்ல முடியாது என்பதால், கூட்டு சேர்ந்து அடிப்பது தான் போர் யுக்தி.அதாவது, அடுத்தவர் வலிமை பற்றி இவர்கள் கவலைப்பட்டனர்; தமக்கு வலிமை இல்லை என்பதை புரிந்து கொண்டதால், இவர்களில் சிலர், தேர்தலுக்கு முன் சிலரைத் திட்டினர். இப்போது, வேறு சிலரைத் திட்டுகின்றனர். யாருக்குமே மக்களைப் பற்றி கவலையில்லை.

இந்திய ஜனநாயகத்தில், மக்கள் தம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்பது பிரமை, மாயை, சடங்கு, நாடகம். வார்த்தை எதுவாக இருந்தால் என்ன? உட்கட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெல்பவர்களே வேட்பாளர்கள் என்ற முறை அறிமுகமானால் மட்டுமே, திணிக்கப்படும் வேட்பாளர்களைத் தவிர்க்க முடியும்; ஆனால், அது தான் நடக்கிறது.கட்சித் தலைவரே வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார். நேர் காணல், ஆலோசனை என்பவை பம்மாத்துச் சொற்களே. யாருடன் கூட்டணி வைப்பது என்பதையும் கட்சித் தலைவர்களே முடிவு செய்கின்றனர். இதற்கு ஜனநாயகப் பூச்சூட்டல் உண்டு.அதாவது, தலைவருக்கு இந்த அதிகாரத்தை செயற்குழு வழங்கியது; இது அடிமை சாசனம்.நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில், கட்சியிலும், ஆட்சியிலும் இருந்த தலைவர்கள், ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசித்தனர்.

ஆனால், அடுத்த தலைமுறையினர், கட்சிக்குள்ளேயே ஆதரவாளர்களைத் திரட்டி, கூச்சல் பெரும்பான்மைக்கு வழி அமைத்தனர். அப்போதே அடிமை சாசனம் தயாராகி விட்டது. ஆனால், இவ்வளவு வெளிப்படையாக இல்லை.தலையைச் சுற்றித் தாமே ஒளிவட்டம் சுழல விடும் சாமர்த்தியசாலித் தலைவர்கள், தலைமைப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள சிரமப்படுவதில்லை. ஒருவருக்கு கைதட்ட சிலரும், கூச்சலிட பலரும் இருந்தால் போதும், அவரது தலைமை நிலை நிறுத்தப்படுகிறது.ஜால்ராக்களை ஓங்கித் தட்டுபவர்களும், ஜிந்தாபாத் கோஷங்களை எழுப்புபவர்களும், நிலை நின்ற தலைவர்களின் நிழலிலேயே காலம் கழித்து விடுகின்றனர். தொண்டர்கள் தான் பாவம், வெயிலில் வாடுகின்றனர். சுகவாசித் தலைவர்கள் கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் முள் கிரீடத்தைச் சுமப்பதாக நாடகமாடுவர்."எங்களுக்காகவே நீங்கள் சிலுவை சுமக்கிறீர்கள்' என்று, இரண்டாம் கட்டத் தலைவர்கள் சாமரம் வீசுவர்; மூன்றாம் கட்டத் தலைவர்கள் ஒத்து ஊதுவர். தலைவர்கள், பல்லக்குகளிலேயே பயணிப்பர்.சுமப்பவர்கள், சுமப்பவர்களாகவே இருந்து விடலாம் என்று முடிவு செய்த பிறகு, பயணிப்பவர்களுக்கு என்ன கவலை?

இது ஏதோ இன்றைய போக்கு என்று நினைத்து விடாதீர்கள்; சுதந்திரத்திற்கு முன், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் அப்படித்தான் நடந்து கொண்டார்.நேதாஜியை காந்தி எப்படி ஓரங்கட்டினார்? சர்தார் படேலை ஒதுக்கிவிட்டு, நேருவுக்கு முடி சூட்டியது யார்? அப்போதே காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் செத்து விட்டதே. அப்புறம் காந்திகள், எந்த காந்தியும் குஜராத் காந்தியல்ல... நேரு வம்ச காந்திகளே!ஜவகர்லால் நேரு, தன் மகளை காங்கிரஸ் கட்சித் தலைவராக்கியது போலவே, சோனியாவும், மகனை கட்சி பொதுச் செயலராக்கினார். அடுத்த படிக்கட்டு பிரதமர் பதவி.அந்தக் காலத்தில், குல்சாரிலால் நந்தா கிடைத்தது போல், இப்போது மன்மோகன் சிங் கிடைத்திருக்கிறார். கிழவர் கொஞ்ச நாள் இருக்கப் போகிறார்; ஆட்சி கவிழும், அப்புறம் நாம் தானே என்று நினைத்த சோனியாவை, தொலைவிலேயே வைத்து ஐந்து ஆண்டுகள் அசராமல் ஆட்சி நடத்தினார் நரசிம்மராவ்.

அதை காங்கிரஸ்காரர்களே எதிர்பார்க்கவில்லை. இனி, ஒரு நரசிம்மராவ், காங்கிரஸ் கட்சியில் தலைதூக்க முடியாது! இன்றைய நிலையில் நேரு குடும்பம் அல்லாத தலைமை காங்கிரசுக்கு இல்லையே ஏன்? மன்மோகன் சிங், நேரு குடும்பம் சாராதவரே. அவர் இரண்டாம் பதவிக்காலப் பொறுப்பை ஏற்றவர் என்கின்றனர். அது வரலாற்று உண்மை; ஜனநாயக உண்மையல்ல.ஐந்தாண்டு காலம், அசல் பிரதமராக இருந்தவர் சோனியாவே; மன்மோகன் சிங் முகமூடி. ராகுலுக்காக மீண்டும் மன்மோகன் சிங் என்ற முகமூடியை அணிந்திருக்கிறார் சோனியா. ராவ் காலத்து மன்மோகன் சிங்கிடம் இருந்த கம்பீரம், சோனியா காலத்தில் எங்கே போயிற்று?

ராகுலுக்கு, பிரியங்காவுக்கு அடுத்து, அந்தக் குடும்பத்தில் யார் யார் என்று பட்டியல் போடப்பட்டால், வரிசையில் நின்று தம் தலைமுறைகள் சார்பாகவும் கையெழுத்து போட்டுக் கொடுக்க, மன்மோகன் சிங் உட்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தயார். இது தேர்தலுக்குப் பிறகு அவர்கள் உருவாக்கும் ராகுல் மாயையிலிருந்து தெரிய வருகிறது.ஐம்பது ஆண்டுகளுக்கு முன், நேருவுக்குப் பிறகு இந்திரா என்ற கேள்வி எழுந்த போது, கைதட்டிகளுக்கிடையே எதிர்த்தவர்களும், முணுமுணுத்தவர்களும் சிலர் இருந்தனர்.இப்போது அப்படி யாரும் காங்கிரசில் இல்லை.

1964ல் கொஞ்சம் யோசித்தவர்கள் கூட, இந்திரா வேண்டாம் என்று சொல்லவில்லை. "உடனேயா?' என்று தான் கேட்டனர். அதனால், லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். இந்திரா கொல்லப்பட்டவுடன் ராஜிவ் விஷயத்தில், "உடனேயா' என்ற கேள்வி எழவில்லை.கடந்த 1984ம் ஆண்டை விட, 2009ல் ஜனநாயகம் பிரமாதமாக வளர்ந்திருக்கிறது. "வாராய் என் யுவராஜா, வாராயோ, மந்திரி பதவிக்கு வாராயோ' என்று காங்கிரசார் கோரஸ் பாடுகின்றனர். "பிகு' செய்து கொள்வது போல சோனியாவும், ராகுலும் நடிக்கின்றனர். இவர்களை ஆதரிக்கும் பிற கட்சிகளின் லட்சணம் இது தான் என்பதே ஜனநாயகத்தின் அவலம்! இதில், யார் யாரைக் குறை சொல்ல யோக்கியதை இருக்கிறது?நாடு சுதந்திரம் பெற்ற போது, யுவராஜாவாக இருந்த கரண் சிங்கும், "ராகுல் ஜிந்தாபாத்' என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

ஜனாதிபதி பதவிக்கு இவரை விடப் பொருத்தமானவர் பிரதிபா பாட்டீல் என்று முடிவு செய்த சோனியாவை எதிர்த்து, கரண் சிங் என்ன செய்துவிட முடியும்?அவரது, ராஜகுலப் பெருமையும், படிப்பும் (அரவிந்தரை ஆய்வு செய்து பிஎச்.டி., பட்டம் பெற்றவர்) வெறுமனே கைதட்டும் வேலையைத்தானே அவருக்குத் தந்திருக்கிறது.இப்படி மோசமான போக்கில், இந்திய ஜனநாயகம் செல்லும் ஆபத்து இருக்கிறது என்று, 1962லேயே ராம் மனோகர் லோகியா போன்ற தேசாபிமானத் தலைவர்கள் பேசி வந்தனர்; எழுதி வந்தனர். அது அன்றே யார் காதிலும் விழவில்லை. இன்று யார் கேட்டுக் கொள்ளப் போகின்றனர்?அன்று, பிற கட்சிக்காரர்களும், வாரிசுப் பாதையில் மூத்த கட்சி போகிறதே என்று வருத்தப்பட்டனர்.



இன்று, ஒரு சில நீங்கலாக எல்லாமே வாரிசுகளை வளர்க்கும் கட்சிகளாகி விட்டன. அதை தடுக்க மக்களால் முடிவதில்லை. இந்த நிலையில், ஒன்றே ஒன்றை செய்வது நலமாக இருக்கும். இந்தியா ஜனநாயக நாடு என்று இனியும் நாம் நாடகம் போட வேண்டிய அவசியமில்லை. ஒரு காலத்தில் இந்தியா, 56 ராஜாக்கள் ஆண்ட தேசம் தானே.இன்றும் அதே மாதிரி 56 தலைவர்களை அழைத்து, நாட்டை துண்டு போட்டு, அவர்களிடம் கொடுத்து விட்டு, "நீங்களும் உங்கள் வாரிசுகளுமே நாட்டை ஆள்வீர்களாக' என்று சொல்லி விடலாம். தேர்தல் செலவாவது மிஞ்சும்.இன்னும் இரண்டு மூன்று தேர்தல்களுக்குப் பிறகு, இந்திய ஜனநாயகத்திற்கு மரணமே கதி என்று நினைக்கிறேன். வாரிசுகளைத் திணிப்பதில் சில அரசியல்வாதிகளுக்கு இருக்கும் துணிவு, அதை எதிர்ப்பவர்களுக்கு இல்லை என்ற நிலையில் உயிரை விடுவதைத் தவிர, இந்திய ஜனநாயகத்திற்கு வேறு என்ன வழி?

-ஆர்.நடராஜன்,கட்டுரையாளர், அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்
( தினமலர் - 31-5-09 )



தகுதியுள்ள வாரிசுகளுக்கு தடையெதற்கு?

"பரம்பரை சொத்தாகும் பாரத தேசம்' என்ற தலைப்பில் கடந்த வாரம் இதே பகுதியில் வெளியான கட்டுரையைப் படித்தேன்; அதிர்ச்சியுற்றேன். "உயிரை விடுவதைவிட, இந்திய ஜனநாயகத்திற்கு வேறு என்ன வழி' என்று அந்த கட்டுரை ஆசிரியர் அங்கலாய்க்கிறார்; ஆரூடம் கூறுகிறார். உலகில் இன்று மக்களாட்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நாடு அமெரிக்கா என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதே அமெரிக்காவில் புஷ் அதிபரானார். அதன்பின் அவரது மகன் அதிபரானார். ஒரு தடவை அல்ல; இரு தடவை. இது எப்படிச் சாத்தியமாயிற்று? அது மக்கள் விருப்பம்.


அதிபர் புஷ் மகன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஜனநாயகம் அழிந்துவிட்டதாக யாரும் கூக்குரல் எழுப்பவில்லை. அவர்களுக்குத் தங்கள் மீது, தங்களது ஜனநாயக அமைப்பின் மீது நம்பிக்கை இருந்தது; இருக்கிறது. இல்லாவிடில் ஒரு ஒபாமா வந்திருக்க முடியுமா? இவ்வளவுக்கும் அங்கே, நம் நாட்டைவிட பதவிக்கு வருவது சிரமம். முதலில், கட்சி தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தத் தேர்தலே சிக்கலானது; அதன்பின் தான் மக்கள். அதே போல, அதிபர் கிளிண்டனின் மனைவி, இன்றைய வெளியுறவு அமைச்சர். இது எப்படிச் சாத்தியமாயிற்று? திறமையை மதிக்கின்றனர். இன்னமும் அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னாரது மகன், மகள் அல்லது மனைவி என்பதற்காக ஒதுக்குவதில்லை. அப்படி ஒதுக்குவது மக்களாட்சி ஆகாது. அண்டை நாடான பாகிஸ்தானில் புட்டோ மகள் பெனசிர் புட்டோ இறந்த பிறகு அவரது மகன் - 19 வயது பிலாவல் மற்றும் பெனசிரின் கணவர் அசீப் அலி சர்தாரி இருவரையும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டுத் தலைவர்களாக நியமிக்கவில்லையா? அங்கு ஜனநாயகம் இந்தச் செய்கையால் அழிந்துவிட்டது என்றோ, அழியப் போகிறது என்றோ யாரும் கூறவில்லையே?


மற்றொரு அண்டை நாடான இலங்கையை எடுத்துக் கொள்வோம். பண்டார நாயகாவின் குடும்பத்தார் மூன்று தலைமுறையாக ஆட்சி நடத்தவில்லையா? அந்தக் காரணத்தால் அங்கு மக்களாட்சி முடிந்து விட்டதா? மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தில் நடந்ததை தான் மறந்துவிட முடியுமா? "நேதாஜி ஓரங்கட்டப்பட்டதில் எனக்கும் வருத்தம் தான். ஆனால், பட்டாபி சீதாராமய்யா தோற்கடிக்கப்பட்டதும், பட்டாபியின் தோல்வி என் தோல்வி' என, காந்திஜி கூறியபோது, "அண்ணல் காந்தியின் விருப்பம் இல்லாமல் நான் காங்கிரசின் தலைவராக நீடிக்க விரும்பவில்லை' எனக் கூறி, உடனடியாக நேதாஜி, பதவியை ராஜினாமா செய்தார் என்றால், அவருக்கு காந்திஜியிடம் இருந்த மதிப்பு எத்தகையது? அதே போல, காந்திஜியின் முடிவை காங்கிரஸ் கட்சியும் ஒருபோதும் ஒதுக்கித் தள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து என்ன புரிகிறது? ஒரு தலைவர் ஒரு முடிவு எடுத்தால், அது கட்சியின் நன்மைக்கே, சமூகத்தின் நன்மைக்கே என்பதை கட்சியினர் ஏற்றுக்கொள்கின்றனர்.


அதே போல நேரு இருந்தபோது, அவர் தான் கட்சியை நடத்திச் செல்ல வேண்டும் என்று காங்கிரசார் விரும்பினர். இந்திராவின் நிலையும் அத்தகையதே. மக்கள் விரும்பினர், அந்தக் கட்சியைத் தேர்ந்தெடுத்தனர். வேறு எந்தக் கட்சியும் தேர்தலில் போட்டிபோடக் கூடாது என்று தடை விதித்தனரா என்ன? அதே இந்திரா காந்தியை அவசர நிலைப் பிரகடனத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் தூக்கி எறியவில்லையா? இங்கு தான் நமது நாட்டின் மக்களாட்சியின் மாண்பைப் பார்க்கிறோம். எதிர்க்கட்சிகளால் ஒரு நீடித்த நல்லாட்சியைத் தர முடியாமல் போன போது, மீண்டும் அதே இந்திரா காந்தியிடம் இந்திய மக்கள், ஆட்சியை ஒப்படைக்கவில்லையா? சோனியாவைப் பொறுத்தவரையில், அரசியலில் இருந்து ஒதுங்கியே இருப்பது என்ற அவரது முடிவை மாற்றிக்கொள்ளச் செய்தது காங்கிரஸ் கட்சி தானே.


சோனியா வந்தால் தான் கட்சி வலுவடையும் என்று ஏகோபித்த குரலில் காங்கிரசார் கோரிக்கை விடவில்லையா? சோனியா பிரதமர் ஆகக்கூடாது என்று கூச்சலிட்ட பவாரும், சங்மாவும் கூட, யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளவில்லையா? இன்று அதே சங்மாவின் மகள், சோனியாவைத் தலைவராகக் கொண்டுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அமைச்சரவையில் ஒரு இணை அமைச்சர். இது ஜனநாயகம் இல்லாமல் வேறு என்ன? "ராகுல் பிரதமர் பதவிக்கு வர வேண்டும்' என்று, அர்ஜுன் சிங் உட்பட பல தலைவர்கள் கோரவில்லையா? ஒருவர் எப்படி அமைச்சர் பதவிக்கு வரலாம் என்பதை நமது அரசியல் சாசனம் வரையறுத்துள்ளது. இதை யாரும் மீற முடியாது. அதற்கு உட்பட்டு யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம். பார்லிமென்ட் உறுப்பினர் ஆகவேண்டும். அப்படி பார்லிமென்ட் உறுப்பினர் ஆவதற்கும் சட்டதிட்டங்கள் உள்ளன. பிரதமரின் விருப்பம் இருந்தால் அமைச்சர் ஆகலாம். லோக்சபாவில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் பிரதமர் ஆகலாம். இத்தகைய ஆதரவு ராகுலுக்குக் கிடைத்தால் அதை யார் தடுக்க முடியும்? ஏன் தடுக்க வேண்டும்? தடுப்பது ஜனநாயகம் ஆகிவிட முடியுமா?


மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. நம் நாட்டில் இருப்பதைவிட சுதந்திரமாக இயங்கும் தேர்தல் கமிஷனை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அப்படியிருக்க இந்த விவாதம் தேவையா? தமிழகத்தில் 1967ம் ஆண்டு காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டு, தேர்தலில் தி.மு.க., ஆட்சிக்கு வரவில்லையா? பின், அ.தி.மு.க., வரவில்லையா? அண்ணா மீது, கருணாநிதி மீது அல்லது எம்.ஜி.ஆர்., அல்லது ஜெயலலிதா மீது, மக்களுக்கு உள்ள நம்பிக்கை தான் இதற்குக் காரணம். மக்கள் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட முடியாது என்பது, நாம் நிதர்சனமாகப் பார்த்த உண்மை. ஸ்டாலின் மீது கட்சியினருக்கு நம்பிக்கை இருப்பதாக நினைத்தே, அவரைத் துணை முதல்வராக்கியுள்ளார் முதல்வர் கருணாநிதி.


ஒரு கட்சிக்கு மக்கள், ஆட்சி வாய்ப்பை அளித்துவிட்டால், அமைச்சர்களை நியமிப்பது கட்சித் தலைமையின் உரிமை. கட்சி சரிவர செயல்படாவிடில் தேர்தலின்போது, அதை நிராகரிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு. ஆக, இதில் பரம்பரைச் சொத்து என்ற கருத்தே அபத்தமானது, தேவையற்றது. அப்படி எண்ணுவோர் ஒரு கட்சியின் சார்பாகவோ அல்லது தனிப்பட்ட முறையில் சுயேச்சையாகவோ தேர்தலில் போட்டியிட்டு, மக்கள் தீர்ப்பை நாடலாமே. "சர்ச் பார்க் கான்வென்டில் படித்தவர், எதிராஜ் கல்லூரியில் பொருளாதார எம்.ஏ., முடித்தவர், பத்திரிகையாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், "கருத்து' அமைப்பின் இணை அமைப்பாளர், தமிழ்ச் சங்கமத்திற்குக் காரணகர்த்தா, எம்.பி., சமூக உணர்வு மிக்கவர்' என இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஒருவருக்கு, தமிழக முதல்வரின் மகள் என்ற ஒரே காரணத்துக்காக மத்தியில் அமைச்சர் பதவி கிடைக்காமல் போனது துருதிர்ஷ்டவசமே. இது என் தனிப்பட்ட ஆதங்கம்.

- ஹெச்.ராமகிருஷ்ணன், சென்னைத் தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி ஆசிரியர்

( தினமலர், 7-6-09 )

லியோனி பட்டிமன்றம் பார்த்த எஃபெக்ட் . இட்லிவடைக்கு யார் வாரிசு என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்

Read More...

நோ கமெண்ட்ஸ்


இது மன்னார்குடி ராஜகோபாலன் கோவிலில் கிளிக் செய்தது ( அனுப்பிய நண்பருக்கு நன்றி )

Read More...

Tuesday, June 09, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 09-06-2009

வழக்கம் போல் ரொம்ப நாள் கழித்து முனிக்கு கடிதம்...

முனியே வணக்கம்,

கொஞ்சம் அவசரத்துல எழுதற கடிதம். இப்ப எல்லாம் நிறைய வேலை. ’வியாபாரி’ படத்துல எஸ்.ஜே.சூர்யா செஞ்சதுமாதிரி பதிவு எழுத பேசாம இட்லிவடையை குளோனிங் செஞ்சுடலாம் போல இருக்கு.

’ரையுஜோ யனாகிமிச்சி’ (படிக்கும்போதே நாக்கு சுளுக்கிக்கிச்சி.) பத்தி நீ கேள்விப்பட்டிருக்கியா ? இவர் குளோனிங் செய்ற விஞ்ஞானி. எலியை குளோனிங் செய்றதுதான் ரொம்ப கஷ்டமாம். அதோட உடலமைப்பு அப்படியாம். அவருடைய மனைவி ஹீரோக்கோ. புத்திர பாக்கியம் இல்லாத தம்பதி!.

சில நாட்களுக்கு முன்னால குளோனிங் முறைல, உலகத்துலயே இரண்டாவது எருமைக் கன்னுக்குட்டியை உருவாக்கி இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைச்சிருக்காங்க. இந்தியால, குளோனிங் முறைல முதல்ல உருவாக்கப்பட்ட எருமைக் கன்னுக்குட்டி நிமோனியா காய்ச்சல் வந்து ஒரே வாரத்துல இறந்திடுச்சாம். நம்ப விஞ்ஞானிகள் சளைக்கலையே. அடுத்த மூணே மாசத்துல இன்னோரு எருமைக் கன்னுக்குட்டியை குளோனிங் முறைல பிறக்கச் செஞ்சு சாதனை படைச்சிருக்காங்க. "என்ன அதிசயம், நான் பெத்தது எல்லாமே எருமை"தான்னு அலுத்துக்கறாரு எங்க பக்கத்துவீட்டுக்காரரு. விஞ்ஞானிகளாவது எருமை, எலியோடு இவங்க ஆராய்ய்சியை நிறுத்திண்டா பரவாயில்லை. உணர்ச்சிவசப்பட்டு அரசியல்வாதிகளை குளோன் செஞ்சுடப் போறாங்க. அப்பறம் அணு ஆயுதத்தைவிட மோசமான கண்டுபிடிப்பு அதுவாத்தான் இருக்கும். போகட்டும், இந்தக் குட்டிக்கு "கரிமா' ன்னு பேர் வெச்சிருக்காங்க. கருத்தம்மான்னு தமிழ் பேரா இருந்திருந்தா ஒரு தங்க மோதிரமாவது கிடைச்சிருக்கும்!.

தமிழக அரசு இப்போ புதுசா ஒரு ஏற்பாடு செஞ்சிருக்கு. "மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயர் சூட்டினால் அந்தக் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு அளிக்கப்படும்' ன்னு அரசு அறிவிச்சிருக்கு. இதுக்கு ஒரு குழு அமைச்சு, ”அது தமிழ் பெயர் தானா?” ன்னு ஆராய்ஞ்சு மோதிரம் கொடுக்கப் போறாங்களாம். இஷ்டத்துக்கு கருணாநிதி, ஆதித்யான்னெல்லாம் பேர் வெச்சா கிடையாதாம். இதை ஆரம்பிச்சு வெச்சவர் மு.க.ஸ்டாலின். ஸ்டாலின் தமிழ் பெயரா ?

தங்கம் வாங்க தமிழ்நாட்டுல இப்படி எல்லாம் தமிழ் பேர் வெச்சு கஷ்டப் படறோம். ஆனா ஆந்திர மாநிலத்துல விஷயமே வேற. சில நாள் முன்னாடி கர்னூல்ல இருக்கற வயல்கள்ல விவசாயிகள் சின்னச் சின்ன கண்ணாடிக் கற்களை கண்டெடுத்தாங்க. மினுமினுப்பா இருந்ததால மக்கள் கிடைச்சதை எல்லாம் எடுத்து பாக்கெட்டுல போட்டுண்டு போயிருக்காங்க. ஜியோ மைசூர் அப்படீங்கற நிறுவனம் ஆய்வு நடத்திப் பார்த்தா அதெல்லாம் வைரக் கல்லாம். இது மட்டும் இல்லை ஆய்வுல தங்க உலோகம் இருக்கறதும் கண்டுபிடிச்சிருக்காங்க. உடனே அந்தப் பகுதி மக்கள் அரக்கப்பரக்க மண்ணைத் தோண்டி தங்கம்-வைரம் இருக்கான்னு தேடுதல் வேட்டையில் குதிக்க ஆரம்பிச்சுட்டா. கொஞ்சம் பேருக்கு வைரக் கல்லும் கிடைச்சிருக்கு. அதை அந்த விவசாயிகள்கிட்டேயிருந்து வைர வியாபாரிகள் குறைஞ்ச விலைக்கு வாங்கிப் போயிருக்கா. ரொம்ப கூட்டம் கூடிட்டதால அந்தப் பகுதில போலீசைக் குவிச்சுட்டாங்க. இனிமே அது அரசியல்வாதிகளோட சொத்து. ஹூம், இதைத்தான் ரெட்டிகாரு பஞ்சதந்திரத்துலயே "சின்ன கல்லு பெரிய பிசினசு"ன்னு சொன்னாரு போல.

நான் இந்த ஸ்கீரின் ரைட்டிங் பயிற்சிக் களத்தை ஆரம்பிக்க காரணம் இது என் 30 வருட கனவு” அப்படீன்னு கமல் குமுதத்துல பேட்டி கொடுத்திருக்கார். ஆனா அதே குமுதத்துல, ”ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே, திரைக்கதை, எழுத்து பயிற்சி முகாம் நடத்திய தமிழ் சினிமா நடிகர் கமல்ஹாசனுக்கு இந்த வார குட்டு" ன்னு ஞாநி குட்டியிருக்கார். இந்த ஸ்கிரீன் ரைட்டிங் பயிற்சியை அவர் தமிழ் பட ஆர்வலர்களுக்காக மட்டுமே நடத்தலை. இந்தியா முழுக்க இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு நடத்தியிருக்கார். அதில் தமிழ் தெரிஞ்சவங்க மிகச் சிலரே. இது இப்படி இருக்க எப்படி ஞாநி கமலை குட்டலாம்? ஞாநிக்கு வாரா வாரம் யாரையாவது குட்டணும். அதுக்கு கமல்தான் கிடைச்சாரா?

பணவீக்கம் வந்தாலும் வந்தது வேலை எக்கசக்கமா இருக்கு. எங்க கம்பெனியில் என் ஃப்ரெண்டைக் கூப்பிட்டு, “நீ எப்போதிலிருந்து வேலை செய்ற?” ன்னு கேட்டேன். அதுக்கு அவன், “நேத்தி பாஸ் என்னைக் கூப்பிட்டு வேலை செய்யாட்ட வீட்டுக்கு அனுப்பிடுவேன்னார். அதுனால நேத்திலேருந்து"ங்கறான். வேலை செய்யவே மறந்து போனவங்க என்ன செய்வாங்களோ பாவம். இவங்களுக்கு நினைவூட்டல் பயிற்சிப் பட்டறை ஒன்னு மொட்டை மாடில ஆரம்பிக்கலாம்.

இந்த படத்தை ஒருவர் எனக்கு மெயிலில் அனுப்பியிருந்தார் படத்துல இருக்கற இவருக்கு சொந்த ஊர் எதுன்னு விசாரித்துச் சொல்லு.

நாமளானா இப்படி தமிழ் தமிழ்னு உயிரை விடறோம். ஆனா பிரபல இந்தி நடிகைகளை தமிழுக்குக் கொண்டுவந்து தமிழர்களோட தாகம் தீர்க்கிற வேலையை செஞ்சுகிட்டிருக்கற புண்ணிய இயக்குநர்கள் லிஸ்டுல தன்னையும் இணைச்சுகிட்டிருக்கார் ராஜுசுந்தரம். அஜீத் நடிக்க, இவர் இயக்கற படத்துல கேத்ரினா கைப்(katrina kaif) நடிக்கப் போறாராம். ஒருவேளை இவர் நடிக்கலைன்னா தமிழ் கூறும் நல்லுலகம் ஏமாந்துடுமோன்னு கவலை இல்லை. ஏன்னா, ரஜினிக்கு ஜோடியாக ஐஸ் நடிக்கிறார் நடிக்கறார்னு ஒவ்வொரு படத்திலும் ஏமாந்த நமக்கு இது எல்லாம் பழகிடுச்சு. இப்போதைக்கு கேத்ரினா கைஃப்தான் கூகிள்ல அதிகம் தேடப்படற பெண்ணாம். என்ன செய்ய, ஐஸுக்கு கல்யாணம் ஆயிடுச்சோன்னோ. ஆனா முனி நீ கேத்ரினா படங்களை டவுன்லோட் செய்யும் போது ஜாக்கிரதையா இரு, அதுல வைரஸ் இருக்காம். அந்த வைரஸுக்கு கேத்ரினான்னு பேர் வெச்சது மெக்காபி. அமெரிக்காவுல பேரழிவையே கொண்டுவந்த ஒரு பெரிய புயலோட பேர் கேத்ரினா. அதே போல இவர் மற்ற நடிகைகளுக்கு பேரழிவை தருவார்னு நினைக்கறேன். படு ஹாட்டான கேத்ரினா படத்தை ரிஸ்க் எடுக்காம பார்க்க விருப்பம் இருக்கறவங்க இங்க பார்க்கலாம். (வீட்டுல யாரும் இல்லாத போது ஓப்பன் செய்யலைன்னா, குடும்பத்துல புயல் அடிக்கும். அலுவலகத்துல வேண்டவே வேண்டாம், கேர்ள்ஸ் எக்ஸ்க்யூஸ் மீ!)

குற்றாலத்துல இப்ப சீசன். எல்லா அருவிலயும் தண்ணீ கொட்டோ கொட்டுனு கொட்டுதாம். அதேபோல தற்கொலை சீசனும் ஆரம்பிச்சாச்சு. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேத்த மத்திய அரசு முயற்சி(செய்யற மாதிரி பாவ்லா காண்பிச்சா) நாடாளுமன்றத்துக்குள்ளயே தற்கொலை செஞ்சுப்பேன்னு ஐக்கிய ஜனதாதளத் தலைவர் சரத் யாதவ் மிரட்டியிருக்கார். ஜனாதிபதி உரைல வழக்கம்போல இந்த முறையும் 33% வந்துடுத்து. எனக்கு ஒரு சந்தேகம், வலைப்பதிவுல 33% பெண்கள்(அட ரா(உ)மா, பெண் பேர்ல எழுதறவங்க இல்லை) இருக்காங்களா? எவ்வளவு பேர்னு உனக்குத் தெரிஞ்சா சொல்லு. (அப்படியே இருந்தாலும் பல்பிடுங்கறதை எழுதறாங்க.) நிச்சசயம் 33% இருக்காது. இருந்திருந்தா நாங்க வலைப்பதிவர் எல்லாருமே இந்நேரம் தற்கொலை செஞ்சிருந்திருப்போமே. "மகளிர் இடஒதுக்கீடு மசோதா பற்றிய சரத் யாதவின் கருத்தை நான் வரவேற்கிறேன்" னு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவிச்சிருக்கார். இவருக்கு என்ன போச்சு, இவரா தற்கொலை செஞ்சுக்கப் போறார்?

சரி, வோட்டுப் போடற இடத்தை ஏன் வாக்கு சாவடின்னு சொல்றோம் தெரியுமா?

ஜெயிச்சுவந்ததும் தேர்தலுக்கு முன்னாடி கொடுத்த வாக்கை சாவடிச்சுடறாங்களே அதான்" ஹி ஹி.

பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருந்தால், தி.மு.க., கூட்டணிக்கு கூடுதலாக மயிலாடுதுறை, தென் சென்னை, திருச்சி ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகள் கிடைத்திருக்கும். - எஸ்.வி.சேகர். இதுக்கே தனியா ஒரு தற்கொலை செஞ்சுக்கலாம் போல இருக்கு.

காங்கிரஸ் கட்சில இருக்கறவங்க இனிமே ஒரு நேரத்துல ஒரு பதவி மட்டுமே வகிக்க முடியும்னு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தெரிவிச்சுட்டாராம். ஒரு வேலையைச் செயுங்கோ, அதையாவது நன்னா செய்ங்கோன்னு இதுக்கு அர்த்தம். தமிழ்நாட்டுல ஒருத்தனுக்கு ஒரு மனைவின்னு யாராவது சொன்னா நன்னா இருக்கும். சரி ஒரு ஜோக்

காதலன் அரவணைப்பில் இருந்த போது டெலிபோன் அடித்தது. அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டு எழுந்து போய் பேசிவிட்டு திரும்பினாள் அவள்.

"யார் கூப்பிட்டது" கேட்டான் அவன்"

"என் புருஷன்"

""ஐயையோ என்ன சொன்னான்"

"உங்களுடன் கால்ஃப் விளையாடிக்கொண்டிருப்பதாக"

மருத்துவக் கல்லூரில நன்கொடை கொடுத்துப் படிக்கற ஒருத்தரோட நேத்து பேசிகிட்டிருந்தேன். 40 லட்சம் கொடுத்தாராம். "சரி, உங்களுக்கு ஸ்பெஷலா என்ன சொல்லித் தருவாங்க?"ன்னு கேட்டேன்.

அவர் சொன்ன பதில்- "பிரிஸ்கிரிப்ஷன்களைப் புரியாதபடி எழுதவும், பில்களை புரியும்படி எழுதவும் சொல்லித்தருவர்கள்". இந்த ஜகத்தை ரக்ஷிக்க ஜெகத்ரட்சகன் வந்தால் தான் உண்டு!

Read More...