பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 08, 2009

ஒரு தொகுதியின் கதை!

ஒரு தொகுதியின் கதை! என்ற தலைப்பில் இந்த வார விகடனில் வந்த கட்டுரை(?)தன் வீடு எந்தத் தொகுதி என்று அறியாதவர்கள்கூட திருமங்கலத்தைத் தெரிந்துவைத்திருப்பார்கள். கரன்சியால் குளிப்பாட்டப்பட்ட களம் அது!

''ஐயையோ, தேர்தல் இவ்வளவு சீக்கிரமா முடிஞ்சிருச்சே'' என்று அம்மக்களே கவலைப்பட்ட காலம் அது.

பாக்கெட்டில் பைசா இல்லையா, 'கட்சிப் பந்தல்ல போயி வாங்கிட்டு வா!' என்று சொல்லி வாங்கும் அளவுக்கு வசதியாகத் திறந்தவெளி ஏ.டி.எம். சென்டர்களாக எலெக்ஷன் பூத்துகள் இருந்தன. ஜனநாயக நெறிமுறைகள் மீது மரியாதை வைத்திருப்பவர்கள் வெட்கித் தலைகுனியும் வகையில் நடந்து முடிந்தது திருமங்கலம் இடைத் தேர்தல்.

இப்போதும் ஒரு தொகுதியில் இப்படித்தான். அண்ணன்தான் வேட்பாளர் என்று முடிவானதும் அநேகமாக தமிழ்நாட்டின் முக்கியத் தொழிலதிபர்கள், அதிகார மையங்கள் அனைத்துக்கும் தகவல் தரப்பட்டது. 'தேர்தல் செலவுக்கு அண்ணன் பணம் கேட்டாரு'. இதற்காக, சென்னையின் கடலோரப் பகுதி வீட்டிலும், பரப்பரப்பான பகுதி ஹோட்டல் ஒன்றிலும் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டன. ஒரு மாதத்தில் 50 சி-யைத் தாண்டியதாம் வசூல். இதை எப்படிக் கொண்டுபோவது?

வேட்பாளருக்கு நெருக்கமானவர் ஐடியா கொடுத்தார். 'பஸ்ல கொண்டுபோயிடலாம்.' பயணிகள் இல்லாத ஆம்னி பஸ்களில் இந்தப் பெட்டிகள் ஏற்றப்பட்டன. ஆனால், பாதுகாவலர்கள் மட்டும் இருந்தார்கள். பகலில் இந்த பஸ்கள் பயணமாகின. நகரின் மையப் பகுதியான கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டன. சில பெட்டிகள் மட்டும் ஒரு வீட்டுக்குள் பதுக்கப்பட்டன. அந்த வீட்டின் எந்த அறையைத் திறந்தாலும் பணப் பெட்டிதான் என்று சொல்லும் அளவுக்கு கரன்சி குவியல்கள் இருப்பதாக ஊருக்குள் வதந்தி. மொத்தமுள்ள வாக்காளர்களுக்கும் தலைக்கு 500 போட்டால் எவ்வளவு வரும், 1,500 போட்டால் எவ்வளவு தேவை என்று கணக்கு போட்டுப் பார்க்கிறார் அண்ணன். அவருக்கே தொகை கண்ணைக் கட்டுகிறது. 'முதல்ல 500 போடுங்க' என்று உத்தரவு போடுகிறார். இரண்டு தெருக்களில் பட்டுவாடா ஆரம்பமாகிறது. ஆனால், கவரை வாங்கியவர்களுக்குச் சந்தோஷம் இல்லை. உதட்டைப் பிதுக்கியவர்கள், 'இவ்ளோதானா?'' என்று சுருதி இறங்கியதாக அண்ணனுக்குத் தகவல் வந்தது. 'கொஞ்சம் பிரசாரம் போயிட்டு அப்புறமாக் குடுக்கலாம்'' என்று சொல்லிவிட்டுத் தெருவில் இறங்க ஆரம்பித்தார்.

''ஏன் பாட்டி! என்னைத் தெரியுதா?'' என்று கேட்கிறார் அதிகார மையமான அந்த வேட்பாளர். தெரியும் என்கிறார் பாட்டி. ''அப்படின்னா எனக்குத்தான ஓட்டு போடுவீங்க'' என்று மறுபடியும் கேட்கிறார். 'ஆமாம்' என்று பாட்டி தலையை ஆட்டியதும் நகர்கிறது வேட்பாளரது வாகனம். உடனே அந்தப் பாட்டி, ''ஏதோ 5,000 ரூபாய் தருவீங்கன்னு சொன்னாங்களே?'' என்றதும், அடியாட்கள் அந்தப் பாட்டியை அலேக்காக அள்ளிக் கொண்டு போனார்கள். ''நாங்கதான் தருவோம்ல... அதுக்காக அண்ணன்கிட்டயா கேக்குறது?'' என்று செல்லமாகச் சொல்லி அனுப்பிவைத்தார்கள். எப்ப வருமோ, எப்ப வருமோ என்று காத்துக்கிடக்கிறார் பாட்டி.

பகுதிச் செயலாளரைப் பார்க்க ஓர் ஆள் அதிகாலையில் வந்திருக்கிறார். என்ன என்று அவர் கேட்பதற்கு முன்பே மஞ்சள் பைக்குள் இருந்து வெளியில் வந்தது ரேஷன் கார்டு. 'இந்தாங்கண்ணே... ஒரு கார்டுக்கு 7,000 தர்றீங்களாமே?'' என்கிறார். 'அட்ரஸை மட்டும் குடுத்துட்டுப் போப்பா. வீடு தேடி வரும்!'' என்று பக்குவமாக அனுப்பிவைக்கிறார் பகுதிச் செயலாளர்.

இன்னோர் இடத்தில் வாக்கு கேட்டு வாகனம் வருகிறது. வயதான முதியவர், வேட்பாளருக்கு அருகில் வருகிறார். ''ஐயா, எங்க சொந்தக்காரங்க எல்லாம் திருமங்கலத்துல குடிசையை மாத்திட்டு ஓட்டு வீடு போட்டுட்டாங்க. நான் இனி குடிசையில இருந்தாக் கேவலம். எனக்கும் வழி பண்ணுங்க'' என்கிறார். இதைக் கேட்ட அண்ணன், அருகில் இருந்தவர் காதில் ஏதோ கிசுகிசுக்கிறார். முதியவரைத் தனியே அழைத்துச் சென்று ஏதோ சொல்கிறார். அநேகமாக அவருக்கான நம்பிக்கை வார்த்தைகளாகத்தான் இருக்கும்.

''உங்களுக்கு டி.வி. எல்லாம் கிடைச்சுதா?'' என்று கேட்கிறார் வேட்பாளர். 'இல்லை' என்று கூட்டம் தலையை ஆட்டுகிறது. 'அவங்களைக் கூட்டிட்டுப் போயி காட்டுங்க' என்று கோபமாகச் சொல்கிறார். ஊர் முக்கியஸ்தர் வீட்டுக் கதவு திறக்கப்படுகிறது. அங்கு டி.வி-க்கள் நூற்றுக்கணக்கில் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. 'இதெல்லாமே உங்களுக்குத்தான். தேர்தல் நேரம்கிறதுனால கொடுக்க முடியாது. தேர்தல் முடிஞ்ச தும் வீடு தேடி வரும்'' என்று ஆசை வார்த்தை சொல்லப்படுகிறது. 5,000 பணம் கிடைக்கும், வீட்டுக்குத் தேவையான டி.வி. கிடைக்கும், கேஸ் ஸ்டவ் வரும் என்று நம்பிக்கையுடன் மக்கள் வாசலைத் திறந்து வைத்துக் காத்திருக்கிறார்கள்.

தூங்காமல் இருக்கிறார் வேட்பாளர். ஏன்தான் வேட்பாளரானோமோ என்ற வருத்தம் அவரை வாட்டாமல் இல்லை. நித்தமும் யார் யாரோ வந்து, 'அந்தப் பகுதி பரவாயில்லைண்ணே. இந்த ஏரியாதான் வீக்கா இருக்கு' என்று தன்னிடம் தலை சொரிந்து நிற்பதைப் பார்க்க அவருக்குச் சகிக்கவில்லை. ஆனால், ஜெயித்தாக வேண்டும். எனவே, தொகுதியை நகர், புறநகர் என்று இரண்டாகப் பிரித்தார். இரண்டு பேர் வசம் இது ஒப்படைக்கப்பட்டது. நித்தமும் காலையில் இவர்கள் அண்ணன் முன் ஆஜராகிறார்கள். நல்லது கெட்டதுகளைப் பேசிவிட்டுக் கலைகிறார்கள். இவர் கள் வம்புதும்பு, அடிதடி, பட்டுவாடாக்களில் தலை யிடக் கூடாது. அதாவது 'டீசன்ட்டான கைகள்'. இவர்களுக்குக் கீழே நகர், ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இருக்கும் பகுதிச் செயலாளர்கள் போக, தேர்தல் வேலைகளைக் கவனிக்க எக்ஸ்ட்ரா ஒன்பது பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நகர் 72 சிறு பகுதிகளாகவும் புறநகர் 300 கிளைக் கழகங்களாகவும் இருக்கிறது. பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். பூத்துகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு பூத்துக்கு 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை தினசரிச் செலவு. கொடி, தோரணம் கட்டுவது, நோட்டீஸ் போடுவது போக, அங்கு வந்து போகும் ஆட்களுக்கான செலவுக்கு இது தரப்படுகிறது. பூத் பொறுப்பாளர் தினமும் 1,000 ரூபாயை எடுத்துக்கொள்ளலாம். அன்றைய தினம் அண்ணன் அந்த பூத் உள்ள தெருவுக்கு ஓட்டு கேட்க வருகிறார் என்றால், கூடுதல் பணம் வந்து சேரும். பிரியாணிப் பொட்டலங்கள் மலையளவு குவியும். அண்ணன் வரும்போது, ஆரத்தித் தட்டு காட்டுவதற்காக முன்னமே பெண்கள் ஏற்பாடு செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு 200 ரூபாய். விளக்குகளைக் கொண்டுவந்து வரவேற்பு கொடுத்தால், அதற்கும் தனி காசு. மாலைகள், சால்வைகள் அணிவிக்க அனுமதிப்பதில்லை. அண்ணன் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால் வந்து, ஆரத்தி, குத்துவிளக்குகளை செக் பண்ணுகிறது ஒரு க்ரூப். கட்சிக்காரர்களுக்குத் தெரியாத குடும்பமாக இருந்தால் நீக்கிவிடுகிறார்கள். கும்ப வரவேற்பு இந்தத் தேர்தலில் முக்கியமான ஹைலைட். அதாவது ஒருவர் வீட்டில் இருந்து பித்தளை அல்லது சில்வர் செம்பு கொண்டுவந்துவிட வேண்டும். அதற்கு முந்தைய நாள் இரவு ஊருக்குள் ஒரு மினி வேன் வரும். அதில் தேங்காய்கள் இருக்கும். அவை வீடு வீடாகக் கொடுக்கப்படும். அத்துடன் நூறு ரூபாய் பணமும். செம்பைக் கழுவி எடுத்து வந்தால் போதும். இதற்கு நான் நீ என்று பெண்களிடம் போட்டி.

'இங்க நான் வர்றதுக்கு முன்னாடி எப்படி இருந்துச்சு?' இப்ப எப்படி இருக்கு?' என்று மறுநாள் காலையில் அண்ணன் கேட்பார். 'அந்தத் தெரு மட்டும் இன்னும் கொஞ்சம் வீக்கா இருக்கு' என்று பதில் வந்தால், அந்தப் பகுதி ஆட்களுக்கு அதிகமாகப் பாய்கிறது பணம். 'அங்க சரியில்ல... இங்க சரியில்லன்னு என்னிட்ட யாரும் வந்து சொல்லக் கூடாது. என்ன செய்யணுமோ செய்வோம். ஓட்டு வரணும் அவ்வளவுதான்' என்று தீர்க்கமாகத் தனது கருத்தைச் சொல்லிவிட்டு வாக்கு சேகரிக்கக் கிளம்புகிறார். வீக்கான பகுதியின் பொறுப்பாளர்களுக்குக் கேட்கும் தொகைக்கும் கூடுதலாகப் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது.

மதியம் வீட்டுக்குச் சாப்பிட வருபவர் ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துப் புறப்படத் தயாராகும்போது, தொழிலதிபர்கள் காத்திருக்கிறார்கள். தினமும் மதிய நேரம் அவர்களுக்கானது. நிதி வசூல் பொறுப்பானவர் 'பக்தி'யுடன் நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலதிபர்கள், கான்ட்ராக்டர்கள் என லிஸ்ட் வைத்துக்கொண்டு இவர் போன் செய்கிறார். தெரியாத நம்பர் என்று யாராவது எடுக்காமல் போனால், உயர் பொறுப்பில் இருக்கும் ஓர் அதிகாரியிடம் நம்பரைக் கொடுத்து 'ஆணை'யிடச் சொல்கிறார். 'மத்தியானம் மூணு மணிக்கு அண்ணனைப் பார்க்க உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட். எல்லாம் ரெடி பண்ணிட்டு வந்துடுங்க'' என்கிறார்கள். பெட்டிகள் படபடக்கின்றன. 'தேர்தல் செலவுக்காக' என்று கொடுக்கப்பட்டு, மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்துவிட்டுக் கிளம்புகிறார்கள். ஒரு நாளைக்கு '2 சி' தேறுகிறதாம்.

எதிரணியைக் கவனிக்க இரண்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எல்லாப் பகுதிச் செயலாளர்களும் தங்கள் பகுதியில் எதிரணிக்காக ஓடியாடி உழைக்கும் ஆட்களின் பட்டியலையும் செல்போன் நம்பரையும் வாங்கி இவர்கள் இருவரிடமும் கொடுக்க வேண்டும். பேரும் நம்பரும் கிடைத்ததும் கைத்தடிகள் இருவரும் போன் செய்வார்கள். இன்னார் பேசுறேன் என்றதும் அலறக்கூடிய அளவு பிரபலம் அவர்கள். 'வளர வேண்டிய வயசுல நீங்க ஏன் அந்தக் கட்சியில உழைக்கிறீங்க? இந்தப் பக்கமா வந்திருங்க' என்று அன்பால் அட்டாக் பண்ணுவார்கள். 'உங்களுக்கு 500 ஓட்டு விழுமாமே? அதுக்கு ஒரு ரேட் ஃபிக்ஸ் பண்ணிட்டு இந்தப் பக்கமா வந்திருங்க' என்பார்கள். கோபமாகவோ நடுங்கியோ எதிர்ப் பக்கம் இருந்து வரும் பதிலைப் பொறுத்து இவர்களது அடுத்தகட்ட ரியாக்ஷன் இருக்கும். சம்பந்தப்பட்ட செல்வாக்கு நபர் மீது ஏதாவது ஸ்டேஷனில் புகார் இருக்கிறதா என்று பார்க்க ஒரு டீம் இருக்கிறது. அடுத்த சில நாட்களில் அவரைத் தங்கள் பக்கம் இழுக்கிறார்களோ இல்லையோ, அவரது உற்சாகத்தை இந்த இருவர் அணி நொறுக்கிவிடுகிறது. அப்படி மீறியும் எதிரணிக்கு வேலை பார்த்ததால், ஒரு தலை உருண்டது.

'5,000 கொடுக்கப் போறாங்க, ரேஷன் கார்டுக்குப் 10,000 கொடுக்கப் போறாங்க' என்று கிளம்பிய வதந்திகளை மக்கள் நம்பிவிட்டார்கள். அண்ணன் கொடுப்பதை உள்ளூர் ஆசாமிகள் அமுக்கிவிடுவதாக மக்கள் நினைக்கிறார்கள். எனவே, ரொம்ப வீக்கான இடங்களுக்கு இரண்டா யிரமும் மற்ற இடத்துக்கு ஆயிரமுமாகக் கவர் போடுகிறார்கள். ஊருக்குள் ஏதாவது விஷேச தினம் வந்தால், அன்று அமைதியாக சப்ளை பண்ணுவதற்காக பிரித்துத் தரப்பட்டுவிட்டது. 100 ஓட்டுக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் கவர்கள் பிரித்துத் தந்திருக் கிறார்கள். தங்கள் பூத் செலவுக்கான தொகையாக இதை வாங்கிக்கொள்கிறார்கள். இப்படி கவர் போடப்பட்ட பணம் மட்டும் 50 சி-யைத் தாண்டுமாம்.

சில வீடுகளுக்கு மட்டும் சிலிப் தரப்பட்டுள்ளது. 'சிலிப்பை வெச்சுக்கோங்க. திடீர்னு போன் வரும்... அங்க வந்திருங்க. அல்லது வீடு தேடி உங்களுக்கு வரும்' என்று சொல்லிவிட்டு ஆட்கள் போகிறார்கள். மக்கள் அந்த நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். பள்ளிக் கட்டணத்தைக் கட்டிவிட்டு வந்து ரசீதைக் கொடுத்தால், பணம் கிடைக்கும். ரேஷன் கார்டுக்கு 10 ஆயிரம், பூத்துக்கு தினமும் போனால் 300 ரூபாய் சம்பளம் என்று பரவும் வதந்திகளுக்கு அளவே இல்லை. இதில் எது உண்மை, எது வதந்தி என்று மக்களுக்குப் புரியவில்லை. திடீரென்று ஒரு கல்யாண மண்டபத்தின் பெயரைச் சொல்லி, அங்கு பணம் கொடுக்கிறார்கள் என்று தகவல் பரவி, ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். 'காட்டுத் தீ மாதிரி பரவும் செய்திகளை வைத்து கணக்குப் போட்டாலே 200 சி தாண்டுகிறது' என்கிறார் அரசியல் விஷயங்களை உன்னிப்பாகக் கவனிக்கும் தொழிலதிபர் ஒருவர்.

இவை ஒருபக்கம் இருக்க, அடிதடிக்குப் பேர் போன தலைகளை அண்ணன் அழைத்துப் பேசுகிறார். ''எனக்கு இது மானப் பிரச்னை. இதுல நான் ஜெயிச்சா மட்டும்தான் உங்களுக்கு எதிர்காலம். இல்லைன்னா, உங்களோட வாழ்க்கையும் கேள்விக்குறிதான். அதுக்காக என்னை மாட்டிவிடுற மாதிரியான வம்பில் ஈடுபடாதீங்க'' என்று கேட்டுக்கொண்டவர், தங்கள் பகுதியில் எதிரணிக்காக வேலை பார்க்கும் ஆட்களை மட்டும் அன்பாகக் கவனிக்கச் சொல்லியிருக்கிறார். இவர்கள் அனைவரும் கட்சிக்காரர்களோடு சேர்த்து பூத் கமிட்டிகளுக்குள் நுழைக்கப்பட்டுள்ளார்கள். எதிரணி பிரசாரம் செய்ய வரும்போது, தங்கள் பூத்தில் இந்த ஆசாமிகள் உட்கார்ந்து பார்வையால் மிரட்டி வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு நாளைக்கு 5,000 வரை சம்பளம் தரப்படுகிறது. ஒரு பூத்துக்குத் தினமும் போய் செட்டில் ஆனாலே அன்றாட வாழ்க்கைக்கு உத்தர வாதம் என்ற நிலை பல அல்லக்கைகளுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. இவர்கள்தான் தெருவுக்குள் வரும் எதிரணி ஆட்களது பெயரைக் கண்காணிக்கும் ஸ்பைகள். இதற்கு நித்தமும் 500 வரை தரப்படுகிறது.

காசு தண்ணீராகச் செலவு செய்யப்படுவது போலவே, தங்கமாகச் சேகரிக்கவும் படுகிறது. எனவே பல தொழிலதிபர்கள், வசூல் வெயிலுக்குப் பயந்து குளிர்ப் பிரதேசத்துக்குப் பதுங்கிவிட்டார்கள். ஒப்புக்குப் பணம் கொடுப்பவர்கள் அதட்டப்படுகிறார்கள். அதே போல் நான்கைந்து பேர் சேர்ந்து ஒரு தொகை கொடுப்பதையும் அண்ணன் ஏற்பதில்லை. '10 லட்சத்தை எடுத்துட்டு 20 பேர் வந்துட்டீங்களா?' என்று கேள்வி கேட்டு, ஒவ்வொருவருக்கும் தனித் தனி ரேட் ஃபிக்ஸ் பண்ணி வசூலான கொடுமையும் நடந்திருக்கிறது. வசூலும் செலவுமாகக் கழிகிறது காலம்.

கிராமமாக இருந்தால் கோயில், நகரமாக இருந்தால் அதிகாலையில் பட்டுவாடா நடக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இடைத் தேர்தலில் சில பகுதியில் போட்ட கவர்கள் சரியான நபர்களுக்குப் போய்ச் சேரவில்லை என்று புகார்கள் வந்ததால், இம்முறை பட்டுவாடா பொறுப்பு மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.

தனது நட்பு வட்டாரத்தை அவர் அரசியலுக்குள் கொண்டுவந்தார். 20 செல்போன்கள் இவர்களுக்கு முன் குவிந்துகிடக்கின்றன. கட்சிக்காரர்கள், பூத் ஏஜென்ட்டுகள், பொதுமக்கள் என வைக்கப்பட்டிருக்கும் டெலிபோன் நம்பர் நோட்டைப் பார்த்து இந்த இளைஞரணி போன் போடுகிறது. 'உங்களுக்கு என்ன குறை? பணம் வந்து சேர்ந்துச்சா?' என்று கேட்கிறார்கள். எதிரிடையாகப் பதில் வந்தால், சம்பந்தப்பட்ட தலைக்கு போன் செய்து திட்டுகிறார் மகன்.

இதனால் கலங்கிப் போயிருக்கிறார்கள் தேர்தல் பொறுப்பாளர்கள். வாங்கிய பணத்தை ஒழுங்காக சப்ளை செய்தாக வேண்டிய நெருக்கடி. ஒரே ஆள் மீது அதிக புகார் வந்தால், அப்பாவிடம் சொல்கிறார் மகன். மற்றபடி மனைவி, மகள் பிரசாரக் களத்தில் இருக் கிறார்கள். மகன் தலைமையிலான பறக்கும் படை செய்யும் காரியங்கள்தான் தனக்கான வெற்றியைத் தேடித் தரும் என்று நம்புகிறார் அதிகார வேட்பாளர்.

பல்லாயிரம் கோடி பாயும் என்கிறார்கள். ஆனால், மக்களின் எதிர்பார்ப்பு அதைவிட அதிகமாக இருக்கிறதே!
( நன்றி: விகடன் )

42 Comments:

Anonymous said...

சூப்பரான சினிமா பாத்த மாதிரி இருந்தது......சும்மா சொல்லக் கூடாது!!!!!! என்ன சொன்னாலும் அண்ணன் ரொம்பவே நல்லவருங்க!

திரு நரேஷ் குப்தா இத படிச்சு நடவடிக்கை எடுப்பாரா? (சொல்லிருக்காரே, பேப்பர்-ல வந்ததை வைத்து நடவடிக்கை எடுப்பேன் என்று!)..

மதுரையில் தேர்தல் ஒத்திவைப்பு என்று செய்தி வந்து "அப்பனுக்கும்-புள்ளைக்கும்" வெக்கணும் ஆப்பு!

ரிஷபன்Meena said...

இந்த மாதிரி உத்திகள் தற்காலிகமாக கை கொடுக்கலாம். ஆனால் கண்டிப்பாக அரசியலில் நீடித்து நிற்க உதவாது.

UMA said...

என்ன கொடுமை இது. மக்களை கிளப்பி விட இதற்க்கு மிகுந்த பப்ளிசிட்டி வேறு. அனைத்து பத்திரிகைகளும் 5000, 10000 என செய்தி வெளியிட பல்போன கிழவி முதல் சிறுவர் வரை அனைவரும் பணத்தை எதிர்பார்க்க வாய்த்த புண்ணியம் பெரும்பாலும் பத்திரிகைகளை தான் சாரும். அதே போல் ஒன்றும் இல்லாத இலங்கை விவகாரத்தை ஜவ்வாக இழுத்ததும் பத்திரிகைகளையே சாரும். தேர்தலுக்கு பின்னர் அவை போகுமிடம் தெரியாது.

அக்குஹீலர் சுப்ரமணியன் said...

// UMA said...
என்ன கொடுமை இது. மக்களை கிளப்பி விட இதற்க்கு மிகுந்த பப்ளிசிட்டி வேறு. அனைத்
//

TRY TO DIGEST THE TRUTH...

Kaliraj said...

இது ஒரு வியாபாரம் மாதிரி ஆகிவிட்டது. இந்த தேர்தல்ல தோத்தா அடுத்த தேர்தலுக்கு இப்படி பணம் கொடுக்க நினைப்பானா?
அஞ்சாநெஞ்சன் என்று பெயர் வைத்துக்கொண்டு இப்படி நேருக்கு நேர் தேர்தலை சந்திக்க வக்கில்லை.

இன்று மதுரையில்பெரிய அளவில் சொத்துக்கள் யாரும் வாங்கவோ,விற்கவோ முடியவில்லை.ரெஜிஸ்டர் ஆபீசுலே சொல்கிறார்கள்,அண்ணனைப் போய் பார்த்துட்டு வாங்க என்கிறார்கள். தருதலை அவனுக்கு ஒரு பங்கு கொடுக்கணுமாம், இவ்விசயத்தில் என் நண்பரே நேரடியாக பாதிக்கப்பட்டார்.இப்படியேபோனால் நம்ம பிள்ளைகளுக்கு நாம கொடுக்கும் சொத்திலும் கூட பங்கு கேட்பான். எவனெவனோ சாகுறான் இவனும் இவன் அப்பனும்.........

இப்படிக்கு,
காலம் காலமாக தி.மு.க வுக்கு ஓட்டு போட்ட குடும்பத்தை சேர்ந்தவன்.

Krish said...

அசிங்கமா இருக்கு! இவனெல்லாம் ஜெயிச்சி என்ன பண்ண போறான்?

Anonymous said...

I will link this degradation in Tamil nadu politics to the immoral stand of pretty much 90% of the population on the reservation issue. Once people in such large numbers, such large percentage of the society, make a immoral compromise in one issue, they lose any right to complain in any other issue. Sit back, relax, and enjoy the ride. If you are lucky to be in this constituency, in addition to the preferred spot in BC,MBC list etc, you may also get 500-1000.

I am not saying the other states have no degeneration. Obviously, your state degraded more because your state has the largest BC/MBC list.

Baski said...

அஞ்சாநெஞ்சனுக்கு என்ன இப்படி "அல்லு" விடுது?

இவன் தோற்கத்தான் போகிறான். ஒருவேளை ஜெயிச்சா !

"சட்டம்-ஒழுங்கு" நன்றாக இருக்கும் (அண்ணனின் இஷ்டப்படி).

இவன் கைகூலிகள் அப்பப்போ அன்பளிப்பு (மாமூல்) கேட்பார்கள். கொடுக்காவிட்டால் எடுத்துக்கொள்வார்கள். உங்களுக்கு சில உதைகளும் கிடைக்கும்.
.
"அண்ணனுக்கு" பிறந்தநாள் செலவு செய்ய தயாராகி கொள்ளுங்கள். இல்லாட்டி உங்கள் இழவுக்கு செலவு செய்ய வேண்டிருக்கும்.

வியாபாரம் செய்பவர்கள் பக்கத்துக்கு மாவட்டம் / மாநிலங்களுக்கு சென்று விடுவது நன்று!

மதுரை மக்களே,
ஆயிரம் ரூபாகாக உங்களுக்கு நீங்களே உங்களுக்கு ஆப்பு வைச்சுகாதீங்க!
அப்புறம் உங்க இஷ்டம் !! அஞ்சு வருசத்துக்கு அனுபவிக்கனும்.

NO "அரசியல் விபசாரம்" Please

கிரி said...

கோலங்கள் சீரியல் விரைவில் முடிய போகிறதா!!!! ;-)

Anonymous said...

@Rishaban
That's wrong... they can easily get all these money back in less than 1/2 years. So the same modus-operandi for Elections will continue forever, if not controlled with a iron hand.

For instance the very same Annan fixed a rate of 100+ C for the Mayor election for Madurai for nomination on DMK seat. On seeing so many people ready with the amount with in 2/3 days he had to increase the rate multifold. Just imagine how much the current Mayor would've made money now.

Anonymous said...

This is a gang rape/murder of Democracy. Kudos to Vikatan/IV for daring to publish this.

Anonymous said...

Jaya has to come back atleast for killing this Evil Monster.

UMA said...

JAYA IS NOT DIFFERENT. ONLY VIJAYAKANTH HAS TO COME TO KILL THE CORRUPTION.

UMA said...
This comment has been removed by the author.
Anonymous said...

இட்லி வடை

தமிழ் நாட்டில் அழகிரியைக் கேட்பதற்கு எவனுக்குமே அருகதை கிடையாது.

தானும் தன் குடும்பமும் நன்கு முன்னேறிய பின்னும் பிள்ளை குட்டிகள் எல்லாம் அமெரிக்காவில் இருந்தாலும் இன்னும் ரிசர்வேஷன் வேண்டும் என்று கேட்கும் மக்களுக்கும் இந்த அழகிரிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

தங்கள் தொண்டர் லீலாவதியைப் பெண்ணென்று கூடப் பாராமல் ஈவு இரக்கமின்றி வெட்டிக் கொன்ற கொலைகாரனுடன் கொஞ்சம் கூட மனசாட்சி இன்றி கூடிக் குலாவி கூட்டணி வைத்த இடதுசாரிகளுக்கும் அழகிரியைக் கேட்க்க அருகதை கிடையாது

மறவர் ஜாதி மயிறு ஜாதி என்று வீண் ஜம்பம் பேசித் திரிந்து தலித்துகளையும் கீழேயுள்ளவர்களையும் மிரட்டி தங்கள் இனத்தில் ஒரு பெரிய ஆளையே வெட்டிக் கொன்றவனுக்கு இன்னும் பயந்து கொண்டு கூட்டணி வைத்துக் கொண்டு திரியும் மதுரையின் பெரும் இனமான தேவர்களுக்கும் அருகதை கிடையாது

மூன்று இளைஞர்களை உயிரோடு எரித்தவனிடம் காசு எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாக்களுக்கும் அருகதை கிடையாது

இவன் செய்யும் இதே கட்டப் பஞ்சாயத்துக்களையெல்லாம் கொஞ்சம் லோ லெவலில் செய்து கொண்டிருந்த அம்மா கட்சியின் ராஜன் செல்லப்பா போன்ற ரவுடிகளுக்கும் அருகதை கிடையாது

அந்தக் காலத்தில் அரக்கர்களை கடவுள் அவதாரம் எடுத்து அழிப்பார். இது கலிகாலம் அரக்கர்கள் மக்கள் உருவிலும் அழகிரி உருவிலும் அவன் அப்பன் உருவிலும் எங்கும் நிறைந்து இருக்கிறார்கள். இவர்கள் கடவுளையே அழித்து விடுவார்கள்

இன்று காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் ஒவ்வொருவரும் நாளைக்கே இன்னொருவன் கூடக் கொஞ்சம் காசு கொடுத்தால் தன் பெண்டாட்டி, மகள்கள் ஏன் அம்மாவைக் கூடக் கூட்டிக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். இழி ஜென்மங்கள் நிறைந்த நாடு தமிழ் நாடு.

இவனுக்கு ஓட்டுப் போடும் ஒவ்வொருவரின் விரலிலும் நிச்சயம் ஓட்டுப் போட்ட அடையாள மை இருக்காது, தா கியையும், லீலாவதியையும், அப்பாவி இளைஞர்களையும் இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத ஆளையும் கொலை செய்தானே அந்தக் கொலைகாரனின் வாய் விழிம்பில் இருந்து பல் இடுக்கில் இருந்து வழியும் ரத்தக் கறை மட்டுமே ஒவ்வொருவர் விரலிலும் இருக்கப் போகிறது. கண்ணகி இன்னொரு முறை வரட்டும் இன்னொரு முறை எரிக்கட்டும் மதுரையை ஒரு முறை எரித்தால் போதாது சாம்பல் கூட விழாமல் எரிக்க வேண்டும் அப்புறமும் அந்த மதுரை சுத்தமாகாது.

வயித்தெரிச்சலில் சொல்கிறேன். இவர்கள் எல்லாம், இவன் மட்டும் அல்ல இவனுக்கு ஓட்டுப் போடும் மக்களும் சேர்ந்தே ****** ******. இது சாபம்

UMA said...

தமிழக அரசியல்வாதிகள்
இப்போது இருக்கும் அனைத்து கட்சிகளும் மோசமானவை தான்.

புதிதாக வந்துள்ள விஜயகாந்த் நன்றாக ஆட்சி செய்ய வாய்ப்பு உள்ளது.
ஆனால் பார்லிமண்ட் தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பு குறைவு .

ஜெயா ரொம்ப அடாவடி கேசு. அவர் ஆட்சியில் ஒரு திட்டமும் செய்யாமல் காசு அடிப்பார் .

யாரையும் மதிக்க மாட்டார்.அவரை தரிசிக்க மந்திரிகள் எல்லாம் டோக்கன் வாங்க வேண்டும் . MLA யானால் பார்க்கவே முடியாது . உதாரணம் S.V .சேகர்.

எல்லாம் நான் , நான் , நான் தான் . நானே தந்தேன், நானே கொடுத்தேன் என்பார். (யார் காசை? ).

கருணாநிதி ஆட்சியில் திட்டமும் நடக்கும் காசும் அடிப்பார் . கருணாநிதி ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் நிறைவேறி உள்ளன. தமிழகமெங்கும் புத்தம் புதிய பாஸ் , நல்ல ரோடு மற்றும் மேம்பாலங்கள் அதற்கு உதாரணம்.

ஜெயா ஆட்சியின் பொது எல்லா ரோடும் மோசம். டப்பா பஸ்கள் தான். எப்போது வெள்ளம் புயல் வரும் என்று ஜெயா காத்திருப்பார். எனென்றால் அப்போது தான் காசு அடிக்கலாம்.

சுனாமியின் போது அனைவரும் வருத்தப்பட்ட போது சந்தோஷமாக இருந்த ஒரே ஒருவர் ஜெயா தான்.

சுனாமிக்கு பின்னர் அசாமிலிருந்து வந்த மூங்கில்கள் எல்லாம் ஜெயா தோட்டத்துக்கு பந்தல் போட போய் விட்டது.

அரசு ஊழியர்கள் அளிக்கும் சாபம் அவரை நரகத்தை விட கீழான இடத்துக்கு தான் தள்ளும் .

சென்னை முதலான நகரங்கள் முன்னேற வேண்டுமானால்,ஏழை மக்கள் நலம் பெற வேண்டுமானால் , தொழிலாளிகள் வாழ்கை வளம் பெற வேண்டுமானால் அது கருணாநிதி கரத்தை வலுப்படுத்தினால் தான் நடக்கும்.

எப்போதும் கொடநாடு பங்களாவில் ரெஸ்ட் எடுக்கும் ஜெயாவால் கெடுதல் தான் நடக்கும்.

ஜெயா அவமத்திதவர்கள் பலர்: சென்னா ரெட்டி, சேஷன், அத்வானி, சோனியா

ஜெயாவின் பொய்கள் பல: அதில் தலையாயது .டான்சி நிலம் வாங்கியபோது போட்ட கையெழுத்து என்னுடையதல்ல.பின் வாங்காத டான்சி நிலத்தை அரசுக்கு திருப்பி கொடுத்து எப்படி ?

ஜெயாவின் கொடுமைகள்: ஒரு லக்ஷத்து 72 ஆயிரம் பேரை சீட்டு கிழித்தது.

ஜெயாவின் படபடோபம்: ஆடம்பர திருமணம்.

ஜெயாவின் திமிரு: சென்ற தேர்தலின் போது ஜெயா டிவியில் மேம்பாலத்தில் ( ஓவர் பிரிட்ஜ்) ஏறி வந்தவருக்கு மாலை போட்டு கிண்டல் செய்தது.

மேம்பாலங்கள் தான் சென்னையின் நாடி நரம்புகள். கத்திப்பாரா சாலை சந்திப்பு இதற்கு உதாரணம்.

தொடரும் பொய்: இன்னமும் 1996 ஆம் ஆண்டு வருமான வரி கணக்கை சரி செய்யாமல் கோர்ட்டில் இழுத்தடிப்பது.(இவருடைய வங்கி கணக்கில் வெளி நாட்டிலிருந்து பல கோடி டாலர் பணம் வந்தது இவருக்கு தெரியாதாம். யாரோ இவர் அக்கவுன்டில் கோடிக்கணக்கில் பணம் போட்டு விட்டார்களாம்.அதே போல் எனக்கு தெரியாமல் என்னுடைய அக்கவுன்டில் ஒரு கோடி டாலர் போட சொல்லுங்களேன் )

ஜெயாவின் ஆடம்பரம்: மக்கள் வெயிலில் வாடும் போது போயஸ் தோட்டத்தில் 50 குளிர் சாதன பெட்டிகள். போயஸ் பங்களா தாஜ் ஹோட்டலை விட ஆடம்பரம் என்று அத்வானி சர்டிபிகேட் .

ஜெயா கொடுத்த பேமஸ் அடைமொழி: செலக்டிவ் அம்னீஷியா ( அத்வானிக்கு)

வைகோ, ராமதாஸ் ஆகிய அரசியல் வியாபாரிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பினால் அதோ கதிதான்.

வைகோவுக்கு பட்ட பாடு எல்லோருக்கும் நன்கு தெரியும்.

ராமதாஸ் ஜெயாவின் அராஜகத்தை பற்றி பேசிய வார்த்தைகள் அப்படியே மக்கள் நினைவில் உள்ளன .

சந்தர்ப்பவாத இடதுசாரிகள் பியுஸ் பிடுங்கிய பல்பு . அவர்களின் கோட்டை மே. வ . காலியாகி விட்டது.

UMA said...

அம்மாவின் ஆலோசனை கூட்டம்.

ஜெயா: என்ன பன்னீர், தேர்தல் நிலவரம் எப்படி இருக்கு ?

பன்னீர்: அதை ஏம்மா கேட்கறீங்க ? இந்த விஜயகாந்த் புகுந்து விளையாடுகிறார் அம்மா. நமக்கு வர வேண்டிய ஓட்டெல்லாம் அவருக்கு போகும் போல இருக்கு அம்மா .

ஜெயா : வைகோ நீங்க என்ன பண்ணுறீங்க ? ஒழுங்கா ஒப்பாரி வச்சு இலங்கை ஆதரவு ஓட்டை வாங்க பாருங்கள்.

வைகோ: அதெல்லாம் மக்கள் சாதாரனமாக எடுத்துகிட்டாங்க அம்மா.

ராமதாஸ் : இந்த பிரபாகரனை இன்னும் 50 வருடத்துக்கு பிடிக்க முடியாது. அதனால போர் தொடரும். ஈழத்தமிழன் தினமும் சாவான். அதுக்கு கருணாநிதிதான் காரணம். ஒரே தீர்வு அம்மாதான்.

வைகோ : அந்த திருமா நம்ம வண்டவாளத்தை நல்லா விளக்கமா திருச்சி மீடிங்குல பேசியத கேட்டால் எவனும் நம்ம நம்ப மாட்டானம்மா.

ஜெயா: அப்படியெல்லாம் விடமுடியாது. எங்கேயாவது விமானப்படை விமானம் வந்தால் நம்ம ஆளை குறுக்கே படுக்க ஏற்பாடு பண்ணுங்க. ஏற்கெனவே ஒருமுறை விமானம் முன்பு படுத்து போராட்டம் நடத்தி இருக்கோம் .

ஜெயா: அப்புறம் நம்ம ஆளுங்கள கடலில் குதிக்க சொல்லுங்க .

பன்னிர்: ஏனம்மா?

ஜெயா: கடற்படை வந்தால் மறிக்கத்தான்.

ஜெயா: அந்த சோனியா நம்ம வழிக்கு வருவாங்களா?

பன்னீர்: நீங்க திட்டாத திட்டா? பதி பக்தி உண்டான்னு கேட்டதை மறந்திருபாங்களா?

ஜெயா : அதெல்லாம் சகஜம் பன்னீர். இந்த அரசு உழியர்கள் ஒரு லக்ஷத்து 72 ஆயிரம் பேரை ஒரே கைஎழுத்தில் சீட்டை கிழித்ததை இடதுசாரிகள் மறந்ததை போல எதுவும் நடக்கும்.

பன்னீர்: ஆமாம் அம்மா. இந்த கருணாநிதி எல்லோருக்கும் நல்லது பண்ணி இருக்காரே. விவசாய கடன் தள்ளுபடி, இனிமேல் கடனுக்கு வட்டி கிடையாது என்று.

ஜெயா: அதை பற்றி கவலைபட வேண்டாம். . நம்ம மக்கள் ரொம்ப யோக்கியமானவர்கள். கடனை ஒழுங்கா கட்டிவிட்டார்கள். எனவே அவர்களுக்கு பயன் இல்லை. அடுத்தவருக்கு மட்டும் பயன் என்றல் எவன் ஒட்டு போடுவான்? அந்த ஒட்டு நமக்கு தான்.

பன்னீர்: அந்த கலர் டிவி வாங்கினவங்க.

ஜெயா: அவங்கல விட வாங்கதவங்க தான் ஜாஸ்தி. அவர்களை கவர் பண்ணு.

பன்னீர்: அதுவும் முடியாதம்மா. அதான் தேர்தல் முடிந்ததும் கண்டிப்பாக தருவோமுனு ஸ்டாலின் வாக்குறுதி தராறேயம்மா.

பன்னீர் : கர்ப்பிணி பெண்களுக்கு 6000 ரூபாய் , திருமண உதவி 20 ஆயிரம் ரூபாய் என்று கலைஞர் கொடுத்த எல்லாத்தையும் மக்களுக்கு ஞாபகப்படுத்தறாங்க அம்மா.

பன்னீர்: அந்த அரசு உழியர் எல்லாம் நல்லா ஞாபகமாக சொல்லுராங்க அம்மா. கலைஞர் டிவில விளக்கமா காட்டுராங்கம்மா .

ஜெயா: கலாநிதி மாறன் மேல ஊழல் புகார் சொன்னேன் . மக்கள் சிரிக்கராங்கலே ஏன்?

ராமதாஸ்: ஊழலை பத்தி நாம் பேசக்கூடாதம்மா, அதை வைகோவிடம் உடனுமம்மா.

வைகோ: நானும் தான் டாட்டா வை கலாநிதி மிரட்டினாரென்று போன தேர்தலின் பொது அவுத்து உட்டேன் யாரும் நம்பலயே. டாட்டாவே அது என்ன என்று கேட்டு சிரித்தாரம்மா. இப்ப ஒரு லக்ஷம் கோடி ஊழல் என்றாலும் எவனும் காது கொடுத்து கேட்க மாட்டேனுங்கராங்களே . என்ன செய்வது.

ஜெயா: இலங்கை ரசாயன குண்டுதான் பாக்கி.

வைகோ: அதையும் சொல்லி பார்த்தாச்சு. பிரயோசனம் இல்லை. இந்த மக்கள் இதனால் எங்களுக்கு என்ன என்று கேட்கரானுங்க. சுத்த சுயநலம். அந்த பிரபாகரன் எந்த சின்னம் என்று கேட்கராங்கம்மா . அவருக்கே நேரா போட்டுடுரோமுனு சொல்ராங்கம்மா.

ஜெயா: இந்த ராஜபக்சே கூட தெண்டம். குண்ட போட்டு போர தொடராம நம்ம ( தமிழர்கள) ஏமாத்தறான். நாம வந்தால் பிரபாகரனை பிடித்து தூக்கில் போடணும்.

ராமதாஸ் , வைகோ: அய்யோ , அய்யோ, எங்கள் வயிற்றை கலக்குதே..

ஜெயா: என்ன வெயில்? என்ன வெயில் ? என்ன சசி நாம கொட நாடு ரெஸ்ட் எடுக்க போலாமா? இனிமேல் அடுத்த தேர்தல் வந்தா பார்க்கலாம்.

mazhai said...

இஸ் ... அப்பா ... மானஸ்தன் பதிவிற்கு கண்ண கட்டுதா இல்ல உமா-உடைய பின்னுஉட்டதிற்கு கண்ண கட்டுதா தெரியலையே கள்ளழகா...

ஆனாலும் கோடீஸ்வரர்களை மட்டும் வேட்பாளர்களாக நியமித்த விஜயகாந்துக்கு மட்டும் ஆதரவு தருவது என்பது ... யோசிக்க வேண்டிய விஷயம்... காரணம் இந்த தேர்தலில் விதைக்கிறார்கள்.. அறுவடை செய்ய மாட்டார்களா ... அப்படியே பயிரை விட்டு விட்டு போயி விடுவார்கள உமா அவர்களே ..

mazhai said...

//இஸ் ... அப்பா ... மானஸ்தன் பதிவிற்கு கண்ண கட்டுதா இல்ல //

சாரி - விகடன் கட்டுரை

Anonymous said...

* Just learnt from a fairly reliable source.

There is a big plot of about 8-10 grounds near Adyar Anandha Bhavan, Lattice Bridge Road. The area is being cleaned and some big construction is going to come up. This is a prime area where the ground value can be around 3 crores or more. It is rumoured that the plot has been purchased by Thiru M. K Stalin's relative.

Anonymous said...

the following is a comment on an item appeared in google news on madurai seat :
if u consider it okay, u may put this in ur blog.

sorry to remain anonymous, with this request
===================================

Blaming Azhagiri
by Jay Sen on May 09, 2009 03:19 PM Permalink | Hide replies

I note with amusement that someone in this disc thread has equated our collective abuse of Azhagiri - with suppression of BCs and OBCs!!! Oh my God!!! LoL.

This is the precise ill that has gripped TN over the last 40 years, and this has intensified over the last 15 years or so.

An old, blind, horriblly corrupt, bed-ridden fox like Karunanidhi can be propped up as a CM ONLY in TN. His goonda sons and the goonda party will ensure that. Invoke caste, bribe or threaten officials, judiciary, and terrorise people for this purpose.

TN's politicos are the worst breed - headed by the DMK. Not that Amma is any better. In her ten years in power, she with her cohorts Sasikala and goons, intimidated people to grab thousands of acres of fertile all over TN - either at throwaway prices or gratis. Prime properties in Madras were snatched flagrantly. Rules, laws - flouted at will. A 100-crore wedding - in which jewellers were forced to part with gold either free or on terms like pay-when-I-feel-like-what-I-feel-like.

Karunanidhi is one unifying factor his goonda DMK to remain one. After him, the anarchy and mayhem will increase manifold. Stalin and Azhagiri and their goons will fight pitched battles in the open. And the police will harass other ordinary civilians, block traffic, etc for facilitating this fight. Anyone questioning this will be termed as an upper-caste tormentor mocking BCs and OBCs.

God save TN!!!

People deserve the politicians they get!!!

நிதர்சன உண்மைகள் said...

For the first time in my life I feel ashamed to have born in this ridiculous Country, especially in a horrible state like TN.

Inba said...

கழகத்துக்காகவும், கட்சிக்காகவும்
யாருடைய இன்னுயிரையும் எடுப்பதற்கு
'அஞ்சா நெஞ்சன்' அவர்களை
எதிர்த்து நிற்கும் (வேறு வழியின்றி!)
இடதுசாரி தோழர்களை
இந்த சந்தர்ப்பத்தில்
வாழ்த்துகிறேன்

Anonymous said...

எடுத்தற்கெல்லாம் மேசை முறிக்கி,
எதோ இவர்கள்தான் அரிவாளை கண்டுபிடித்தவர்கள்போல்
வசனம் பேசும்
முக்குலத்து கூட்டம்
இப்போது
அண்ணனின் அதிகாரத்தின் முன்னால்
முதுகுஒடிந்த கூட்டமாகிவிட்டது.

Anonymous said...

"இட்லி வடை

தமிழ் நாட்டில் அழகிரியைக் கேட்பதற்கு எவனுக்குமே அருகதை கிடையாது.

தானும் தன் குடும்பமும் நன்கு முன்னேறிய பின்னும் பிள்ளை குட்டிகள் எல்லாம் அமெரிக்காவில் இருந்தாலும் இன்னும் ரிசர்வேஷன் வேண்டும் என்று கேட்கும் மக்களுக்கும் இந்த அழகிரிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

தங்கள் தொண்டர் லீலாவதியைப் பெண்ணென்று கூடப் பாராமல் ஈவு இரக்கமின்றி வெட்டிக் கொன்ற கொலைகாரனுடன் கொஞ்சம் கூட மனசாட்சி இன்றி கூடிக் குலாவி கூட்டணி வைத்த இடதுசாரிகளுக்கும் அழகிரியைக் கேட்க்க அருகதை கிடையாது

மறவர் ஜாதி மயிறு ஜாதி என்று வீண் ஜம்பம் பேசித் திரிந்து தலித்துகளையும் கீழேயுள்ளவர்களையும் மிரட்டி தங்கள் இனத்தில் ஒரு பெரிய ஆளையே வெட்டிக் கொன்றவனுக்கு இன்னும் பயந்து கொண்டு கூட்டணி வைத்துக் கொண்டு திரியும் மதுரையின் பெரும் இனமான தேவர்களுக்கும் அருகதை கிடையாது

மூன்று இளைஞர்களை உயிரோடு எரித்தவனிடம் காசு எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாக்களுக்கும் அருகதை கிடையாது

இவன் செய்யும் இதே கட்டப் பஞ்சாயத்துக்களையெல்லாம் கொஞ்சம் லோ லெவலில் செய்து கொண்டிருந்த அம்மா கட்சியின் ராஜன் செல்லப்பா போன்ற ரவுடிகளுக்கும் அருகதை கிடையாது

அந்தக் காலத்தில் அரக்கர்களை கடவுள் அவதாரம் எடுத்து அழிப்பார். இது கலிகாலம் அரக்கர்கள் மக்கள் உருவிலும் அழகிரி உருவிலும் அவன் அப்பன் உருவிலும் எங்கும் நிறைந்து இருக்கிறார்கள். இவர்கள் கடவுளையே அழித்து விடுவார்கள்

இன்று காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் ஒவ்வொருவரும் நாளைக்கே இன்னொருவன் கூடக் கொஞ்சம் காசு கொடுத்தால் தன் பெண்டாட்டி, மகள்கள் ஏன் அம்மாவைக் கூடக் கூட்டிக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். இழி ஜென்மங்கள் நிறைந்த நாடு தமிழ் நாடு.

இவனுக்கு ஓட்டுப் போடும் ஒவ்வொருவரின் விரலிலும் நிச்சயம் ஓட்டுப் போட்ட அடையாள மை இருக்காது, தா கியையும், லீலாவதியையும், அப்பாவி இளைஞர்களையும் இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத ஆளையும் கொலை செய்தானே அந்தக் கொலைகாரனின் வாய் விழிம்பில் இருந்து பல் இடுக்கில் இருந்து வழியும் ரத்தக் கறை மட்டுமே ஒவ்வொருவர் விரலிலும் இருக்கப் போகிறது. கண்ணகி இன்னொரு முறை வரட்டும் இன்னொரு முறை எரிக்கட்டும் மதுரையை ஒரு முறை எரித்தால் போதாது சாம்பல் கூட விழாமல் எரிக்க வேண்டும் அப்புறமும் அந்த மதுரை சுத்தமாகாது.

வயித்தெரிச்சலில் சொல்கிறேன். இவர்கள் எல்லாம், இவன் மட்டும் அல்ல இவனுக்கு ஓட்டுப் போடும் மக்களும் சேர்ந்தே ****** ******. இது சாபம்"

Neenga solrathu enga endha(Avanukkum namakkum) naikkum uraikka poradhillai....Vazgha Jananayagam...Kavalaiye padadhinga ... sunami ennannu ninaikkaringa...global warming prachanai valarathu....unga nalvakku viraivil ellai konja konjama palikkum...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
UMA said...

கலைஞர் ஆட்சியின் சாதனைகள். ( ஜெயாவை குறைகள் பற்றி எதுவும் பேச முடியாமல் ஈழத்தை பற்றி மட்டும் பேச வைத்தது. )

இந்த தேர்தலில் கருணாநிதியின் தமிழக அரசும் மன்மோகன் சிங்கின் மத்திய அரசும் ஆட்சியில் எந்த குறையும் சொல்லமுடியாத விதத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றயும் அனைத்து தரப்பட்ட மக்களுக்கு சலுகைகள் பலவும் செய்துள்ளதால் ஜெயா, (மரம் வெட்டி, காடு வெட்டி, கள்ள தோணி, பச்சோந்தி இடதுசாரி ) கும்பலால் எந்த புகாரும் சொல்லி பிரசாரம் செய்ய முடியவில்லை.

1. கப்பல் மற்றும் போக்குவரத்து துறை முலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 லக்ஷம் ரூபாய் செலவில் 4676 கிலோ மீட்டர் நீள் தேசிய நெடுஞ்சாலைகள், 3276 கிலோ மீட்டர் 4 வழி சாலைகள் , மிகப் பிரமாண்டமான போக்குவரத்து மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்க பணிகள், நீர்வழி போக்குவரத்து ஆகியவை நிறைவேற்ற பட்டு வருகின்றன.

2. நெசவாளர் பயனடைய சென்வாட் வரி நீக்கம்.

3. ரூபாய் 1000 கோடி செலவில் கடல் நீரை குடி நீராக்கும் திட்டம்.

4. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை. மீண்டும் 200 நாட்களாக ஆக்கும் கலைஞரின் உறுதி மொழி .

5. சென்னை மோட்டார் வாகன சோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்.

6. சேலத்தில் ரயில்வே கோட்டம் போடா, எஸ்மா , டெஸ்மா சட்டங்கள் ரத்து.

7. செல் போன் கட்டணங்கள் குறைப்பு . 50 காசு செலவில் இந்தியாவெங்கும் தொலைபேசியில் பேசும் வசதி. .

8. ரூபாய் 1828 கோடி செலவில் 90 ரயில்வே மேம்பாலங்கள் .

9. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் சேலம்

10. மெடிக்கல் காலேஜ் 1290 கோடி ரூபாய் செலவில் சுப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை.

11. அரசு துறையில் பல்வேறு பல்கலை கழகங்கள் , மனேஜமேன்ட் கல்லுரிகள் மருத்துவகல்லுரிகள், பொறியியல் கல்லுரிகள் திட்டம்/ தொடக்கம்.

12. இந்திய முழுவதும் 72000 ஆயிரம் கோடி மற்றும் தமிழகத்தில் ரூபாய் 7000 ஆயிரம் கோடி விவசாய கடன் ரத்து. ( முடியாது, பொய் , பணம் ஒதுக்கவில்லை, மற்றும் பணம் இல்லை என்ற எதிர் ( மக்களின் ) கட்சிகளின் முகத்தில் சாணியை பூசி பணம் ஒதுக்கினார் சிதம்பரம் )

13. மாணவர்களுக்கு சுலப கல்விக்கடன் நுழைவு தேர்வு என்ற பகல் கொள்ளையை ரத்து செய்து கிராமத்து மாணவர்களுக்கு நன்மை .

14. அரசு உழியர்களுக்கு நல்ல ஊதியம் மற்றும் மருத்துவ இன்சூரன்ஸ் பாதுகாப்பு.

15. புதிய ஓய்வூதியம் அனைத்து தரப்பு மக்களுக்கு.

16. அனைத்து முக்கிய ஊர்களுக்கும் புத்தம் புதிய பஸ் .

17. நல்ல ரோடு வசதி செய்யப்பட்டு வருகிறது. தமிழ் நாடெங்கும் நிறைய மேம்பாலங்கள். சென்னை .

18. ஏழை பெண்களுக்கு திருமண உதவி ரூபாய் 20,000.

கர்ப்பிணி பெண்களுக்கு ரூபாய் 6,000 உதவித்தொகை.

19. ஒரு கோடி குடும்பங்கள் பயன் பெற உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பிட்டு திட்டம்.

20. முதியோர்,ஆதரவற்றோர், உனமுற்றோர் உதவித்தொகை ரூபாய் 400 ஆக உயர்வு.

21. இலவச வண்ண தொலைகாட்சிபெட்டி மதிய உணவில் வாரம் மூன்று முட்டை.

மற்றும் பல்வேறு நல திட்டங்கள்.

பாஸ் கட்டணம், மின்சார கட்டணம் ஏற்ற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Anonymous said...

யாருப்பா அது இன்பா இடதுசாரிகளை வாழ்த்துவது. இடதுசாரிங்க லட்ச்சணம் தெரியாதா? லீலாவதியைக் கொன்ற பின்னும் கருணாநிதியுடன் வெட்க்கம் கெட்டுப் போய் கூட்டணி வைத்தது இதே இடதுசாரிகள்தான். இப்பொழுது அவன் துரத்தி விட்டதும் வெளியில் வந்து வீரம் பேசுகிறார்கள்.

மதுரையில் தோழர் மோகன் அஞ்சா நெஞ்சனிடம் காசு வாங்கிக் கொண்டு மெட்ராசில் போய் குடல் வலி என்று சொல்லி ஆஸ்பத்ரியில் குப்புறப் படுத்துக் கொண்டார். எத்தனை சி அதுக்கு வாங்கினாரோ? மதுரையில் பிரச்சாரம் பண்ணாமல் சென்னை ஆஸ்பத்திரியில் போய் சவுகரியமாக ஒதுங்கிக் கொண்ட துரோகி மோகனுக்கா வாழ்த்து? மோகன் தி மு க விலேயே சேர்வதற்குக் கூடத் தயாராகத்தான் இருந்தார். அழகிரியிடம் காசு வாங்கிக் கொண்டு எந்த வேலையும் செய்யாமல் ஒதுங்கிய முதல் பார்ட்டி இந்த வீர மறவன் மோகன் தான். இப்ப சொல்லுங்க இன்னுமா இடது சாரிகளுக்கு வாழ்த்து?

UMA said...
This comment has been removed by a blog administrator.
UMA(edited) said...

நான் ஒரு தஞ்சாவூர் மாவட்ட கிராமத்து பெண்.

எனக்கு எந்த கட்சியும் பிடிக்காது. அனைவர்களும் திருடர்கள் என்பது எனது கருத்து. ஆனாலும் நாம் இந்த நாட்டில் வாழ வேண்டும். எனவே இருப்பதில் நல்லது செய்த சிலரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எனக்கு தெரிந்ததை மற்றும் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சொல்வதை,கண்கூடாக கண்டதை ,எனது எண்ணத்தை எழுதுகிறேன். அதுவும் விளக்கமாக எழுதுகிறேன். எனது விளக்கத்தில் தவறு இருந்தால் திருத்திகொள்கிறேன். அனேகமாக நான் எல்லா பத்திரிகைகளையும் தினமும் படிப்பேன் ( இன்டர்நெட்டில்) . பத்திரிகைகளை ஆதாரமாக கொண்டே எழுதுகிறேன்.

எப்போதும் அடுத்தவர் குரலுக்கு மதிப்பு கொடுத்து அவர்கள் சொல்வதை புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம். ஒரே என்னத்தை அனைவரும் சொன்னால் பின்னர் அது ஜெயாவின் கட்சி ஆலோசனை கூட்டம் போலத்தான் இருக்கும்.

என்னுடைய எழுத்துக்கள் தேவையில்லை என்று இட்லி வடை எண்ணினால் நான் இனிமேல் எழுதவில்லை. நன்றி. வணக்கம்.

IdlyVadai said...

//என்னுடைய எழுத்துக்கள் தேவையில்லை என்று இட்லி வடை எண்ணினால் நான் இனிமேல் எழுதவில்லை. நன்றி. வணக்கம்.//

நான் அப்படி நினைக்கவில்லை. தொடர்ந்து எழுதுங்கள். நாமும் அரசியல் கட்சி தலைவர்கள் போல் ஆக வேண்டாம் :-)

Anonymous said...

Everyone who have commented have guessed very easily who the article was referring to & why JV didnot have the guts to name him if it had all the proofs for the information. What type of journaiism is it to indirectly name the person ; it could be due to fear or the Info is not true. An organisation as Ananda Vikatan doesnot have the courage to expose then all that it is doing is for improving its circulation & not a scial service. It should be prepared to face the consequences legally & brought the person to book.
Thyagu

Unknown said...

அன்புள்ள உமா பாட்டி, முரசொலி மட்டும் படித்துவிட்டு அனைத்துப்பத்திரிக்கைகளும் படித்ததாக பொய் சொல்லக்கூடாது!

Anonymous said...

UMA is a dmk fanatic. But few words of him or her make sense.

Karunanidhis rule will have gud schemes but the core reasons for implementing those schemes is to earn money for himself and his family and party functionaries. So ethu nanmaiyil themaiya ellai themayil nanmaiya solla theriyalai..

Just travel once in guindy kathipara bridge(matter padam ottara jothi theatre kuda ennikki andha bridge thandha visiblity la pudhu padama podaran) you will how much it has reduced traffic woes of office goers and common people...I hate dmk to the core but this time my vote is for dmk. I am guilty for this but i have no other choice...

Inba said...

'அஞ்சா நெஞ்சன்' அவர்களை
எதிர்த்து நிற்கும் (வேறு வழியின்றி!)'

அன்பு அனானி,

நான் இடதுசாரிகளை வாழ்த்துவதை
வஞ்ச புகழ்ச்சி அணி என்று சொல்வார்கள்

எல்லா கட்சிகளும் ஒரே குட்டையில் விழந்த மட்டைகள்தான்
என்பது நமது நாட்டின்
தேசிய பழமொழி ஆக மாறிவிட்டது.

இடதுசாரிகள் அல்லது வலதுசாரிகள் என்பதின் அர்த்தம்
அவைகள் யாரையாவது சார்ந்தே இருப்பார்கள் என்பதுதான்
முன்பு கலைஞரை, இப்போது அம்மாவை

நாளைக்கே அஞ்சா நெஞ்சனுக்கு மாலை போட்டு,
தோள் கொடுக்கவும் தயங்க மாட்டர்கள் நம் தோழர்கள்.

Unknown said...

மதுரை தினகரன் ஊழியர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி!

Anonymous said...

ஹலோ உமா!

கருணாநிதியும் அவன் குடும்பமும் தமிழ்நாட்ல கொள்ள அடிச்சு சேர்த்து வச்சிருக்கிற பணம் எவ்வளவுன்னு தெரியுமா? 1000 கோடிக்கும் மேல்!

இப்ப அழகிரி மதுரைல ஜெயிகிரதுக்காக மட்டும் 200 கோடி செலவு பண்ண போறானம்... பஞ்ச பரதேசி!

கருணாநிதியையும் அவன் குடும்பத்தையும் சப்போர்ட் பண்ணாதிங்க!

நீங்க சொல்லியிருகிரதுல பாதி கூட அவன் பண்ணதில்ல.. எல்லாம் சும்மா பேப்பர் வாசகங்கள்!

கருணாநிதி ஒரு தமிழின துரோகி!

UMA said...

தனி ஈழம் பற்றி ஏன் சோனியா பேசவில்லை - ஜெயா கேள்வி

இலங்கை பிரச்சனை நம்ம பிரச்சனை அல்ல.

அது நம்ம வெட்டி அரசியல் வாதிகளும்,மார்க்கெட் போன சினிமா இயக்குனர்களும், நாலு பேர்களும் கூட பின்னால் வராத நெடுமாறனும், வெட்கம் கேட்ட வைகோவும் ( தன்னை சிறையில் அடைத்த ,அதுவும் இலங்கை பிரச்சனைக்காக , ஜெயாவுடன் கூட்டு ), நாலு வருடம், பதினோரு மாதம்,29 நாட்கள் மந்திரியாக இருந்து பின் ஞானோதயம் வந்த அன்புமணியின் ராமடாசும் , பேச ஒன்றும் இல்லாத காரணத்தால் பிடித்துக்கொண்டுள்ள இலங்கை பிரச்சனை ஒரு வெளி நாட்டு பிரச்சனை.

இதில் இந்தியா தலை இடுவது கடினம். அதுவும் பிரபாகரனிடம் பிணை கைதிகளாக இருக்கும் தமிழர்களின் உயிர் பிரச்சனை. தன் உயிரை காக்க மக்களை காவு கொடுக்கும் , மற்ற தமிழ் தலைவர்களை ஈவு, இரக்கம் இல்லாமல் கொன்ற பிரபகாரனை மட்டும் காப்பாற்ற வேண்டும் என்ற இவர்களின் போராட்டம் ஏற்புடையதல்ல.

அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டுமானால் அது பிரபகாரால் தான் முடியும். தான் பிடித்துள்ள பிணை கைதிகளை விடுவித்து பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அனுமதித்தல் அல்லது தானே முன் நின்று போராடுதல் இவையே மக்களை காப்பற்ற வழி.

இது எல் .கே .ஜி படிக்கும் பாப்பாவுக்கும் தெரியும்.

இது இந்தியாவின் தேர்தல். இந்திய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் தேர்தல்.

இப்போதுள்ள ஆட்சியை பற்றி குறை சொல்ல எதுவும் இல்லை என்பதால் வேண்டாத வேலையெல்லாம் ஜெயா சொல்லுகிறார்.

விஜயகாந்த் ஒருவர் தான் ஓரளவு சிந்தித்து பேசுவது போல தெரிகிறது.

Kannan S said...

// தனி ஈழம் பற்றி ஏன் சோனியா பேசவில்லை - ஜெயா கேள்வி

இலங்கை பிரச்சனை நம்ம பிரச்சனை அல்ல.
//

-- That's great.. Then, why our honourable CM telling us to take Fasting and Bandhs ?

// நம்ம வெட்டி அரசியல் வாதிகளும்,மார்க்கெட் போன சினிமா இயக்குனர்களும், நாலு பேர்களும் கூட பின்னால் வராத நெடுமாறனும், வெட்கம் கேட்ட வைகோவும் ( தன்னை சிறையில் அடைத்த ,அதுவும் இலங்கை பிரச்சனைக்காக , ஜெயாவுடன் கூட்டு ), நாலு வருடம், பதினோரு மாதம்,29 நாட்கள் மந்திரியாக இருந்து பின் ஞானோதயம் வந்த அன்புமணியின் ராமடாசும் , பேச ஒன்றும் இல்லாத காரணத்தால் பிடித்துக்கொண்டுள்ள இலங்கை பிரச்சனை ஒரு வெளி நாட்டு பிரச்சனை.

இதில் இந்தியா தலை இடுவது கடினம். அதுவும் பிரபாகரனிடம் பிணை கைதிகளாக இருக்கும் தமிழர்களின் உயிர் பிரச்சனை. தன் உயிரை காக்க மக்களை காவு கொடுக்கும் , மற்ற தமிழ் தலைவர்களை ஈவு, இரக்கம் இல்லாமல் கொன்ற பிரபகாரனை மட்டும் காப்பாற்ற வேண்டும் என்ற இவர்களின் போராட்டம் ஏற்புடையதல்ல.

அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டுமானால் அது பிரபகாரால் தான் முடியும். தான் பிடித்துள்ள பிணை கைதிகளை விடுவித்து பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அனுமதித்தல் அல்லது தானே முன் நின்று போராடுதல் இவையே மக்களை காப்பற்ற வழி.

இது எல் .கே .ஜி படிக்கும் பாப்பாவுக்கும் தெரியும்.
//
-- Can't stop laughing...!
-Sorry, if my words hurt you.

+ Thanks to Idlyvadai for posting this..

Anonymous said...

www.maduraispeaks.blogspot.com

Anonymous said...

///விஜயகாந்த் ஒருவர் தான் ஓரளவு சிந்தித்து பேசுவது போல தெரிகிறது.///


வடிவேலு காமெடி-ய விட ரொம்பக் காமெடி-யா இருக்கு!!!!!!

Anonymous said...

an info to all who say they would vote for DMK because there are no other alternatives "There is an act called 49-O". It's basically an official way to say "I don't want to vote", instead of saying that from home. I'm not sure how much it can affect the election (if majority of the constituency does this, then there should be some effect like a 'media coverage' atleast), but it's a decent and democratic way to express your discontented.

idlyvadai, as a request if you could blog about this it would reach more people. maybe late for this election, atleast for next one....better late than never....

--arun