பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 02, 2009

நேற்று - எனக்குள் ஒருவன் , இன்று - உன்னைப்போல் ஒருவன்


நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் அவற்றைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும் - கமல்ஹாசன்


ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம், யு டி.வி. மோஷன் பிக்சர்ஸýடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் "உன்னைப்போல் ஒருவன்'. ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற "எ வெட்னஸ்டே' என்ற படத்தைத் தழுவி இந்தப் படம் உருவாகிறது.

இதில் கமல்ஹாசனும், மலையாள நடிகர் மோகன்லாலும் முதல்முறையாக இணைந்து நடிக்கிறார்கள். அமெரிக்காவின் ஃபுளோரிடா திரைப்படக் கல்லூரியில் பயின்ற சக்ரி டொலேடி படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

மேலும் எழுத்தாளர்கள் இரா.முருகன் வசனகர்த்தாவாகவும் மனுஷ்யபுத்திரன் பாடலாசிரியராகவும் அறிமுகமாகிறார்கள். பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் மனோஜ் சோனி ஒளிப்பதிவு செய்கிறார். தோட்டாதரணி கலை இயக்கத்துக்குப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்தப் படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது - அவரது பதில்கள்...

"தலைவன் இருக்கின்றான்' என்ற தலைப்பை மாற்றியதற்கு காரணம்?

அதை விட "உன்னைப்போல் ஒருவன்' என்ற தலைப்பு பொருத்தமாக இருந்ததால். தவிர, இது எழுத்தாளர் ஜெயகாந்தனின் தலைப்பு. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறேன்.

[ ஒரு புதன்கிழமை என்று வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ]

சிறந்த கதாசிரியரான நீங்கள் ஒரு ஹிந்திப் படத்தை "ரீமேக்' செய்ய வேண்டிய காரணம்?

இது கம்பனிடமிருந்து வந்த "ஐடியா'; வால்மீகி எழுதிய ராமாயணத்தைத் தமிழில் கம்பன் எழுதியதுதான் காரணம். நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் அதைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த "ரீமேக்'. ஹிந்தியில் இந்தக் கதையைச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். அந்த நல்ல விஷயத்தைத் தமிழகத்துக்கும் தர வேண்டும் என்ற ஆசைதான்.

ஹிந்தியில் ஒரு பிரச்னையை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு பிரச்னை பெரிய விஷயமாக இருக்கும். ஜார்க்கண்டில் இனப் பிரச்னை என்றால் தமிழகத்தில் தற்போது ஈழப் பிரச்னை இருக்கிறது. தமிழுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்து படத்தை உருவாக்கி வருகிறோம்.
[ புதன்கிழமை தேசிய பிரச்சனையை வைத்து எடுக்கப்பட்ட படம். தேசிய பிரச்சனை தமிழ் நாட்டு பிரச்சனை இல்லை என்று சொல்ல வருகிறாரா கமல் ? தற்போது தமிழ்நாட்டு பிரச்சனை என்ன ? ]

அப்படியானால் இந்தப் படத்தில் ஈழப் பிரச்னை இடம்பெறுகிறதா?

இல்லை. ஈழப் பிரச்னை பற்றி ஒரு படம் எடுக்கும் எண்ணம் இருக்கிறது. இப்போது அதற்கான தைரியம் இல்லை.

தமிழ் நடிகர்கள் பலர் இருக்க, மலையாள நடிகர் மோகன்லாலை இந்தப் படத்தில் நடிக்க வைப்பதற்கான காரணம்?

மொழிக்கு அப்பாற்பட்டது கலை. மோகன்லாலை அவர் இன்னார் இன்னார் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. அவர் மிகச் சிறந்த நடிகர். அவருடைய திறமைக்காகத்தான் இந்த வேடம். கடந்த சில ஆண்டுகளாகவே இணைந்து நடிக்க வேண்டும் என அடிக்கடி பேசிக் கொள்வோம். இப்போதுதான் சரியான களம் அமைந்திருக்கிறது.

படத்தின் சிறப்பம்சம்?

நல்ல கதை. மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுவது பலம். படத்தில் "ரெட்' கேமராவை முதல்முறையாகப் பயன்படுத்துகிறோம். காலை படமாக்கும் காட்சிகளை இரவில் "எடிட்' செய்துவிடலாம்.

"அன்பே சிவம்' உள்ளிட்ட உங்களுடைய சில தரமான படங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடையாததற்கு காரணம்?


சில சமயங்கள் அவ்வாறு நடப்பதுண்டு. யாரையும் குற்றம் சொல்லமுடியாது. எம்.ஜி.ஆரை விட அடித்தட்டு மக்களைச் சென்றடைந்த ஒருவர் இருக்க முடியாது. அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரின் "பாசம்' என்ற நல்ல படம் 10 நாள்களைத் தாண்டி ஓடவில்லை.

இதுபோன்ற விஷயங்களில் தோல்விகள் ஏற்பட்டாலும் மனம் தளராமல் தொடர்ந்து நல்ல முயற்சிகளில் ஈடுபடுவேன். எல்லாத் தலைவர்களுமா தேர்தலில் வென்று விடுகிறார்கள்? தோற்றாலும் தொடர்ந்து அரசியலில் இருப்பதில்லையா? அதுபோலத்தான்.
நிகழ்ச்சியில் ஸ்ருதி ஹாசன், எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன், இரா.முருகன், யு டி.வி. மோஷன் பிக்சர்ஸ் ராம் மிர்சந்தானி, பட இயக்குநர் சக்ரி ஆகியோர் கலந்துகொண்டனர்.


திரையுலகில் 50-ம் ஆண்டில் கமல்!

தமிழ்த் திரையுலகம் தோன்றி 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் சூழலில் நடிகர் கமல்ஹாசன் "உன்னைப்போல் ஒருவன்' படத்தின் மூலம் திரையுலகில் தனது 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

ஏ.வி.எம். நிறுவனம் தயாரிப்பில் கமல், குழந்தை நட்சத்திரமாக நடித்த "களத்தூர் கண்ணம்மா' 1959 ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியானது.

"உன்னைப்போல் ஒருவன்' படத்தின் அனைத்துப் பணிகளும் மே மாதம் நிறைவடைந்து, ஜூன் இறுதியில் வெளியாகத் தயாராகிவிடும். இருப்பினும் ரசிகர்கள், திரையுலக நண்பர்கள் அனைவரின் விருப்பப்படியும் பொன்விழாவை முன்னிட்டும் "களத்தூர் கண்ணம்மா' வெளியான ஆகஸ்ட் 12-ம் தேதி "உன்னைப்போல் ஒருவன்' படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த படத்தில் ஹீரோயின் இல்லை என்பது குறிப்பிடத்தக்க தகவல். கமல் முத்தத்தை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்


பிகு: யாவரும் நலம் படம் தற்போது ஹாலிவுட்டில் ரிமேக் செய்கிறார்கள் என்று படித்தேன்.

19 Comments:

Vinitha said...

That movie would be a big flop.

அக்னி பார்வை said...

இந்த படத்தின் இயக்குனர் சக்ரி டொலிடி ‘சலங்கை ஒலி’ படத்தில் கமலை தப்பு தப்பாக போட்டோ எடுக்கும் சிறுவனாக நடித்தவர்... பார்ராஆ....

சொதப்பாம ஒழுங்க எடுத்தா சரி

பா. ரெங்கதுரை said...

//இந்த படத்தில் ஹீரோயின் இல்லை என்பது குறிப்பிடத்தக்க தகவல். கமல் முத்தத்தை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.//

அவசரப்படாதீர்கள். Gay Pride March-பற்றிய படமாக இருந்து தொலைக்கப்போகிறது.

அஞ்சா நஞ்சன் said...

இளையராஜா சரிப்பட மாட்டார் என்று நினைத்தாரோ?

UMA said...

பல நல்ல கமல் படங்கள் மக்களை சென்றடைய வில்லை.

அன்பே சிவம் மிகவும் சிந்தனைக்கு வேலை தரும் எதார்த்த நகைச்சுவையுடன் படம் முழுவதும் பரவி கிடக்கும். முடிவு யாரும் கற்பனை செய்ய முடியாது. தெனாலி மற்றொரு கமல் சிறந்த படம்.

முழுவதும் நகைச்சுவையுடன் முடிவு எதிர்பாராத சூப்பரான படம். இந்தியன் ஒரு நல்ல கருத்துள்ள படம். இவைகளை எங்கள் வீட்டில் அனைவரும் பல முறை பார்த்து மகிழ்ந்த பாடங்களில் சில.

சிவாஜிக்கு பின்னர் பல்வேறு வேடங்களில் மிக சிறந்த நடிப்பால் மக்களை கவர்ந்தவர். கமல்.

Anonymous said...

நாளை - யாரைப் போல் யாரோ.
no more comments.

Anonymous said...

This will be Quality Movie for Tamil Film.Though not a hit movie Vinitha madam.!

Anonymous said...

Read & Enjoy KAMAL HASSAN full interview :


`ஈழத்தமிழர் வாழ்க்கையை படமாக்க ஆசை; தைரியம்தான் இல்லை' கமலஹாசன் கருத்து


சென்னை, மே.2-

`ஈழத்தமிழர் வாழ்க்கையை படமாக்க ஆசை இருந்தாலும் தைரியம் தான் இல்லை' என்று கமலஹாசன் கூறினார்.

2 மொழிகளில்...

நடிகர் கமலஹாசனின் சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், யுடிவியுடன் இணைந்து, `உன்னைப்போல் ஒருவன்' என்ற படத்தை தயாரித்து வருகிறது. முதலில் இந்த படத்துக்கு, `தலைவன் இருக்கின்றான்' என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. பின்னர், `உன்னைப்போல் ஒருவன்' என்று மாற்றப்பட்டது.

தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகிறது. தெலுங்கு படத்துக்கு, `ஈநாடு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது, `வெட்னஸ்டே' என்ற இந்தி படத்தை தழுவிய கதை. இந்தி படத்தில் நசிருதீன் ஷா, அனுபம்கேர் ஆகிய இருவரும் நடித்து இருந்தார்கள்.

கமல்-மோகன்லால்

தமிழில், `உன்னைப்போல் ஒருவன்' படத்தில் கமலஹாசன், மோகன்லால் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். சக்ரி டொலேடி, டைரக்டு செய்கிறார். இவர், அமெரிக்காவில் உள்ள புளோரிடா திரைப்பட கல்லூரியில் படித்தவர். `சலங்கை ஒலி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

கமலஹாசனின் மகள் சுருதி ஹாசன், இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சுருதி இசையமைக்கும் முதல் படம் இது.

பேட்டி

படத்தை பற்றிய தகவல்களை, கமலஹாசன், மோகன்லால், டைரக்டர் சக்ரி டொலேடி, சுருதி ஹாசன் ஆகியோர் நிருபர்கள் மத்தியில் வெளியிட்டார்கள். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு கமலஹாசன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- `தலைவன் இருக்கின்றான்' என்ற பெயரே நன்றாகத்தான் இருந்தது. அந்த பெயரை ஏன் மாற்றினீர்கள்?

பதில்:- `உன்னைப்போல் ஒருவன்' என்ற பெயரும் நன்றாகத்தான் இருக்கிறது. இந்த பெயர், ஜெயகாந்தனிடம் இருந்து பெறப்பட்ட பெயர். இது, அவருக்கு நான் கொடுக்கும் மரியாதை. `தலைவன் இருக்கின்றான்' என்ற பெயரை விட்டுவிட மாட்டேன். அதை இன்னொரு படத்துக்கு வைப்பேன்.

நட்பு-ரசனை

கேள்வி:- இந்த படத்தில், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை நடிக்க வைப்பது ஏன்?

பதில்:- இந்த கேள்வியை மலையாள பத்திரிகையாளர்கள் கேட்டிருந்தால், நான் மலையாள படங்களில் நடித்திருக்க முடியாது. மோகன்லால் நடிப்பதற்கு நட்பு ஒரு காரணம். ரசனை ஒரு காரணம். மோகன்லால் மாதிரி, திறமையான நடிகரை பார்க்க முடியுமா? நம்மிடம் உள்ள மிக திறமையான நடிகர்களில் அவரும் ஒருவர்.

கேள்வி:- இன்னொரு மொழியில் வந்த படத்தை ஏன் `ரீமேக்' செய்ய வேண்டும்?

பதில்:- கம்பன் கூட ராமாயணத்தை `ரீமேக்'தான் பண்ணினார். இந்தி படத்தை அப்படியே எடுக்காமல், தமிழுக்கு தகுந்தபடி சில மாற்றங்களை செய்து இருக்கிறோம். அரசியல், நாட்டுக்கு நாடு மாறுவதில்லையா? அதே போல் ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு பிரச்சினை இருக்கிறது அல்லவா? நாங்கள் இங்குள்ள பிரச்சினைகளை படத்தில் சேர்த்து இருக்கிறோம்.

கேள்வி:- இதில், ஈழ தமிழர் பிரச்சினை சேர்க்கப்பட்டு இருக்கிறதா?

பதில்:- இல்லை.

சுருதி ஹாசன்

கேள்வி:- இந்த படத்துக்கு, உங்கள் மகள் சுருதி ஹாசனை இசையமைக்க வைத்திருப்பது பற்றி சொல்ல முடியுமா?

பதில் (சிரித்தபடி):- சுருதியிடம் நான் ரொம்ப நாட்களாக என் படத்துக்கு இசையமைத்துக்கொடு என்று கேட்டுக்கொண்டிருந்தேன். நீங்கள் டைரக்டு செய்யும் படத்துக்கு இசையமைக்க மாட்டேன்...வேறு படத்துக்கு வேண்டுமானல் இசையமைக்கிறேன் என்று கூறினார். அதனால் இந்த படத்துக்கு அவரை இசையமைப்பாளர் ஆக்கி இருக்கிறோம்.

பாசம்

கேள்வி:- உங்கள் படத்தின் திரைக்கதை பி அண்ட் சி என்று சொல்லப்படுகிற அடித்தட்டு மக்களை போய் அடைவதில்லை என்று சொல்லப்படுகிறதே?

பதில்:- எம்.ஜி.ஆர். மாதிரி மக்களின் ரசனையை அறிந்தவர் யாராவது உண்டா? அவர் படத்தை அங்குலம் அங்குலமாக அளந்து பார்ப்பவர். அவர் நடித்த `பாசம்' படம் பரமக்குடியில் பத்து நாட்கள்தான் ஓடியது. எல்லோரும் எப்போதும் ஜெயித்துக்கொண்டிருக்க முடியாது.

கேள்வி:- `மர்மயோகி' படம் என்ன ஆனது?

பதில்:- அப்புறம் சொல்கிறேன்.


கேள்வி:- `தசாவதாரம்' படத்தை அடுத்து உங்கள் பெரிய முயற்சி எது?

பதில்:- 19 ஸ்டெப்ஸ் என்ற படம்.


தீவிரவாதம்

கேள்வி:- நீங்கள் தயாரித்து, நடித்த `குருதிப்புனல்' படமும் தீவிரவாத கதைதான். அந்த படத்துக்கும், `உன்னைப்போல் ஒருவன்' படத்துக்கும் என்ன வித்தியாசம்?

பதில்:- மூன்றாம் பிறை படம், காதல் கதைதான். அதே போல் வாழ்வே மாயமும் காதல் கதைதான். இரண்டுக்கும் வித்தியாசம் இருந்தது அல்லவா? இது, ஒரு வித்தியாசமான முயற்சி. தேசம் முழுவதும் போய் சேர வேண்டிய விஷயம்.

கேள்வி:- இலங்கையில் நடைபெறும் பிரச்சினை பற்றி உங்கள் கருத்து?

பதில்:- அங்கு அமைதி ஏற்பட வேண்டும்.


கதாநாயகிகள்

கேள்வி:- இரண்டு பெரிய கதாநாயகர்கள் சேர்ந்து நடிக்கிறீர்கள். இரண்டு பேருக்கும் ஜோடி இல்லை என்றால் எப்படி?

பதில்(சிரித்தபடி):- நீங்கள் என்னை ரசிக்கவில்லையா?

கேள்வி:- பட தயாரிப்பில், சமரசங்களுக்கு நீங்கள் இடம் கொடுப்பீர்களா?

பதில்:- சமரசங்கள் இல்லாமல் வாழ்க்கை கிடையாது.

கேள்வி:- நசிருதீன் ஷா, அனுபம் கேர் என்ற இரண்டு சாதாரண நடிகர்கள் நடித்த கதையில், கமல்ஹாசன், மோகன்லால் என்ற இரண்டு மாபெரும் நடிகர்கள் நடிக்கிறீர்களே, தேவையா?

பதில்:- தப்பு உங்ககிட்டதான். நடிகர்களான எங்களை நட்சத்திரங்களாக்கி அழகு பார்த்தவர்கள் நீங்கள்தான். நீங்கள் கொடுத்த கிரீடத்தை அவ்வளவு சுலபமாக கழற்ற முடியாது.

50 ஆண்டு பொன்விழா

கேள்வி:- நீங்கள் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறதே. இதை விழாவாக கொண்டாடுவீர்களா?

பதில்:- உன்னைப்போல் ஒருவன் படம் மே மாதத்தில் முடிந்து விடும். என்றாலும் ஆகஸ்டு 12-ந் தேதி வெளியிட முடிவு செய்து இருக்கிறோம். ஆகஸ்டு 12-ந் தேதிதான் என் முதல் படம் `களத்தூர் கண்ணம்மா' வெளிவந்தது. பொன்விழா ஆண்டையொட்டி வரும் இந்த படத்தையும் அதே தேதியில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். இதை பெரிய விழாவாக எடுக்க ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

ஈழ தமிழ் படம்

கேள்வி:- ஈழ தமிழர்களின் வாழ்க்கையை படமாக்குவீர்களா?

பதில்:- எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது. ஆனால் தைரியம்தான் இல்லை.

இவ்வாறு கமலஹாசன் பதில் அளித்தார்.

பேட்டியில், மோகன்லால், சுருதி ஹாசன் ஆகியோரும் கலந்துகொண்டு பதில் அளித்தார்கள். படத்துக்கு வசனம் எழுதும் எழுத்தாளர் இரா.முருகன், பாடல் ஆசிரியராக அறிமுகமாகும் மனுஷ்யபுத்ரன் ஆகிய இருவரும் உடன் இருந்தார்கள்.

http://dailythanthi.com/article.asp?NewsID=485252&disdate=5/2/2009

VIKNESHWARAN ADAKKALAM said...

என்னக் கொடுமை சார் இது... வலையுலக பிரபல எழுத்தாளர் தான் சொல்லி தான் கமல் பெயரை மாற்றிவிட்டார் பணம் கொடுக்கலைனு வருத்தப்பட்டுக்கிறாரு :)

Inba said...

ஆளவந்தான், ஹே ராம், அன்பே சிவம் போன்ற படங்களில் உள்ள
ஒரு ஒற்றுமை
நல்ல கருத்துகளை சொல்லுவதை விட
அவையெல்லாம் கமலின் மேதாவிதனதையும்,
தான் நெறைய படித்தவன் என்றும் பறை சாற்றுவதாக உள்ளன.

சொல்லவந்த விஷயம் யாரோ நாலு பேருக்கு இல்லாமல்
பெருவாரியான மக்களை போய் சேரவேண்டும்
அழகியலோடு கூடிய எளிமை முக்கியம்

என்னை போல் ஒருவனில் அவர் மட்டும் புரிந்துகொண்டதுபோலே இல்லாமல்
ஹாலிவுட் படங்களின் தாக்கம் இல்லாமல்
நேரடியான திரைக்கதை இருந்தால் வெற்றி நிச்சியம்.

நல்ல படங்களை தொடர்ந்து நம்ம மக்கள் ஏற்று கொண்டுஇருகிறார்கள்
(சமிபத்திய உ.தா : வெண்ணிலா கபடி குழு )

Inba said...

ஆளவந்தான், ஹே ராம், அன்பே சிவம் போன்ற படங்களில் உள்ள
ஒரு ஒற்றுமை
நல்ல கருத்துகளை சொல்லுவதை விட
அவையெல்லாம் கமலின் மேதாவிதனதையும்,
தான் நெறைய படித்தவன் என்றும் பறை சாற்றுவதாக உள்ளன.

சொல்லவந்த விஷயம் யாரோ நாலு பேருக்கு இல்லாமல்
பெருவாரியான மக்களை போய் சேரவேண்டும்
அழகியலோடு கூடிய எளிமை முக்கியம்

உன்னை போல் ஒருவனில் அவர் மட்டும் புரிந்துகொண்டதுபோலே இல்லாமல்
ஹாலிவுட் படங்களின் தாக்கம் இல்லாமல்
நேரடியான திரைக்கதை இருந்தால் வெற்றி நிச்சியம்.

நல்ல படங்களை தொடர்ந்து நம்ம மக்கள் ஏற்று கொண்டுஇருகிறார்கள்
(சமிபத்திய உ.தா : வெண்ணிலா கபடி குழு )

நாகு (Nagu) said...

//கேள்வி:- நசிருதீன் ஷா, அனுபம் கேர் என்ற இரண்டு சாதாரண நடிகர்கள் நடித்த கதையில், கமல்ஹாசன், மோகன்லால் என்ற இரண்டு மாபெரும் நடிகர்கள் நடிக்கிறீர்களே, தேவையா?//

அவர்கள் இரண்டு பேரும் சாதாரண நடிகர்களா? என்ன கொடுமை இது சரவணன்?

//நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் அவற்றைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும் - கமல்ஹாசன்//

இவரிடம் இருந்துதான் அந்த மீசைக்காரர் இந்த வரியைச் திருடினாரோ?

கொடும்பாவி-Kodumpavi said...

நாமும் செய்ய மாட்டோம் செய்யறவனையும் விடமாட்டோம்.. எவனாவது ஏதாவது உருப்படியா செஞ்சா ‘நொனக்கு மொனக்கு' சொல்ற பழக்கத்தை எப்போ தமிழன் விட்டொழிப்பானோ அப்போ அவன் வளர்ச்சிக்கு எந்த தடையும் இல்லை. ஒரு நல்ல படம் The Wednesday அதை தமிழக மக்களும் ரசிக்கட்டும் என்ற எண்ணத்தில் கமல் எடுக்கறாரு. முந்திரி கொட்டை கணக்க அது ‘ஓடாது' அது ‘big flop' 'small flop' ச்சும்மா பொட்டிக்கு முன்னாடி தட்டிகிட்டு இருந்தா மட்டும் போதாது கொஞ்சம் அடுத்தவன் encourage பண்ணலைன்னா சும்மாவாவது இருக்கோனம். யாரு இவுங்க கிட்ட மைக்க நீட்டினது?

Anonymous said...

//அவசரப்படாதீர்கள். Gay Pride March-பற்றிய படமாக இருந்து தொலைக்கப்போகிறது //

சொல்லிட்டாருப்பா அறிவாளி ....

tamil satish said...

///VIKNESHWARAN said...
என்னக் கொடுமை சார் இது... வலையுலக பிரபல எழுத்தாளர் தான் சொல்லி தான் கமல் பெயரை மாற்றிவிட்டார் பணம் கொடுக்கலைனு

வாந்தி எடுப்பவநேல்லாம் வலையுலக பிரபலமாம் !!!!

குறை சொல்ல மட்டுமே தெரிந்த இவனுக்கெல்லாம் படம் கொடுக்கபடாது, உதை த்தான் கொடுக்கணும்!!!!

sundaikai said...

கொடும்பாவி சொல்வது மிக சரி, ஆங்கிலத்தில் "constructive criticism" என்பார்கள். நம்முடைய கருத்து அடுத்தவர்களின் நல்ல முயற்சிகளை ஊக்கி வைக்க உதவ வேண்டுமே தவிர - அவர்களின் திறமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருக்க கூடாது.

மூன்று மணிநேர சினிமாவை உருவாக்க, தொழில் நுட்ப கலைஞர்கள் படும் பாடு ஒரு தாயின் பிரசவத்திற்கு இடானது. சில குழுந்தைகளே பிற்காலத்தில் எல்லோராலும் போற்ற படும் இடத்தை பிடிகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது.

VambeSivam said...

//சமரசங்கள் இல்லாமல் வாழ்க்கை கிடையாது.//

Hmmm.... If only he practiced what he is preaching now in press conferences, he would not have had the misfortune of two marriage divorces & two live-in break-ups - all within two decades.

Anonymous said...

&&&&&&&&&&&&&&&&&

படத்தின் இயக்குனர் சக்ரி டொலேடி அமெரிக்காவில் புளோரிடா திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். அவர் இயக்கும் முதல் படம் இது. ஆனாலும் சக்ரி தமிழ்த் திரைக்குப் புதியவர் இல்லை என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஆம், திரு கமல் ஹாசனின் ‘சலங்கை ஒலி’ திரைப்படத்தில் போட்டோகிராபர் குட்டிப்பையனாக வந்து கலக்கிய குழந்தை நடிகர் தான் இவர். சமீபத்தில் தசாவதாரம் படத்திலும் கமல் அவர்களின் அமெரிக்க நண்பராக நடித்திருக்கிறார்.
&&&&&&&&&&&&&&&&&&&&

உன்னைப் போல் ஒருவன் பற்றிய மற்ற பல சுவையான தகவல்கள் இனி வரும் நாட்களில் தொடர்ந்து வெளியாகும். இப்படத்தைப் பற்றிய சுடச்சுட செய்திகள் பெற, www.unnaipoloruvan.com இணைய தளத்திற்கு வருக.

&&&&&&&&&&&&&&&

From http://www.eramurukan.in/tamil/magazines.php

Anonymous said...

Having seen "A wednesday", i don't think it will strike the chords in Tamil. Unfortunately, It will go down as another Anbe Sivam.