ஈரோடு நிலவரம் பற்றி வால்பையன்...
மற்ற மாவட்டங்களில், மாநிலங்களில் வாழ்பவர்களுக்கு முதலில் ஈரோடு மாவட்ட மக்களின் மனநிலையை தெரிந்து கொள்ளவேண்டும்!, தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ நேரடியாக போட்டியிட்டு இருந்தால் ஒருவேளை மகழ்ச்சியாக இருந்திருப்பார்கள் போல!, ஓட்டு போடும் வாக்களர்களுக்கு மட்டுமல்ல, தெரு தெருவாக ஓட்டு கேட்டு செல்லும் தொண்டர்களுக்கும் ஒன்றுமில்லையாம்!
ஈரோட்டில் போட்டியிடும் கட்சிகளையும் அதன் வெற்றி தோல்வி வாய்ப்புகளையும் பார்ப்போம்!
காங்கிரஸ்:
தி.மு.க கூட்டணி ஆதரவுடன் களம் இறங்கியிருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்த கட்சியின் வேட்பாளர். ஈரோட்டில் இருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் வாக்கு இவருக்கு விழந்தால் டெபாசிட் தப்பிக்கலாம், இல்லையென்றால் அதுவும் கிடைக்காது.
ஈரோட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் பண்ணிய கேலி கூத்துக்கள் தி.மு.க.வின் மேலிருந்த மரியாதையை வெகுவாக குறைத்ததும் ஒரு காரணம்.
கடைசியாக அவர் கொடுத்த பேட்டிகளில் தெளிவாக உளறியது மேலும் பின்னடைவை ஏற்ப்படுத்திவிட்டதாக காங்கிரஸ் தொண்டர்களே பேசி கொள்கிறார்கள்!
ம.தி.மு.க:
அ.தி.மு.க கூட்டணி ஆதரவுடன் களமிறங்கி இருக்கும் கணேஷமூர்த்தி இந்த கட்சியின் வேட்பாளர், இந்த கட்சியின் பலமே ஆளங்கட்சியின் மேல் இருக்கும் அதிருப்தி என்பது அவருக்கே தெரியும். ஈழப்பிரச்சனையை பொறுத்தவரை மொத்தம் ஒரு சதவிகிதம் பாதித்திருப்பெதே அதிகம் எனலாம்! ஆயினும் பெயரளவிலாவது ஆதரவு இருக்கிறதே என இக்கட்சிக்கு நடுத்தர மக்கள் ஆதரவு உண்டு!
தே.மு.தி.க:
தனித்து போட்டியிட்டே வேட்பாளருக்கு செலவு இழுத்து வைக்கும் விஜயகாந்த கட்சி, வழக்கம் போல் பாட்டாளி மக்கள் ஓட்டு டெபாசி வாங்கி கொடுக்கும் என எதிர்பார்த்தாலும், இன்னும் இக்கட்சி அரசியலில் பாலபாடத்தில் இருந்து வெளிவராதது கொஞ்சம் பின்னடைவு தான்! மக்களிடையே தொடர்சியான பிரச்சாரம் இல்லாததது!, எது தான் அவர்களுது கொள்கை என அவர்களுக்கே தெரியாதது!, செலவு செய்ய தயங்குவது போன்றவை இவர்களை இன்னும் வளரனும் தம்பி ரேஞ்சுக்கே வைத்திருக்கிறது!
இந்த மூன்று பெயர் சொல்லும் அளவுக்கு இருக்கும் கட்சிகளுக்கே இம்முறை தண்ணி காட்டுவது முன்று மாதங்களுக்குள் ஆரம்பித்த கொங்கு பேரவை என்னும் கட்சி, கொங்கு வேள்ளாள சமூக மக்களின் சார்ப்பில் களமிரங்கியிருக்கும் கட்சி இது, ஆயினும் இளங்கோவனை தவிர மற்ற அனைவரும் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது சிறப்பு, கட்சியின் மேல் மக்களுக்கு இருக்கும் வெறுப்பு, கொங்கு பேரவையின் வீட்டு வீடு பிரச்சாரம் இம்முறை ஒட்டுகளை பரவலாக பிரிக்கலாம் என தெரிகிறது.
மொத்தத்தில் காங்கிரஸ் ஓட்டுகளை தே.மு.தி.கவும், கொங்கு பேரவையும் பிரிக்க குறைந்த பட்ச ஓட்டு வித்தியாசத்தில் ம.தி.மு.க வெற்றி பெறும் வாய்ப்பு தெரிகிறது!
- வால்பையன்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, May 12, 2009
தேர்தல் 2009 - ஈரோடு யாருக்கு ?
Posted by IdlyVadai at 5/12/2009 02:15:00 PM
Labels: தேர்தல்2009, விருந்தினர்
Subscribe to:
Post Comments (Atom)
44 Comments:
உரையாடல்களில் கலந்து கொள்ளும் பொருட்டு முதல் பின்னூட்டமாக நானே இட்டு கொள்கிறேன்!
//மொத்தத்தில் காங்கிரஸ் ஓட்டுகளை தே.மு.தி.கவும், கொங்கு பேரவையும் பிரிக்க குறைந்த பட்ச ஓட்டு வித்தியாசத்தில் ம.தி.மு.க வெற்றி பெறும் வாய்ப்பு தெரிகிறது!//
//ஆயினும் இளங்கோவனை தவிர மற்ற அனைவரும் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது சிறப்//
?????
:-)))))))
இட்லி வடையில் வால்பையன் கணிப்பு...
வாழ்த்துக்கள் வால்பையன்
நல்ல ஆய்வு, பொது மக்கள் கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. கணேஷமூர்த்தி ரொம்ப நாளா அரசியலில் உள்ள வைகோ விசுவாசி. அவர் ஜெயித்தால் நல்லது தான். கொங்கு பேரவை நம்ம பகுதியில நல்லா ஓட்ட பிரிக்கும்.
//
//ஆயினும் இளங்கோவனை தவிர மற்ற அனைவரும் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது சிறப்////
கொங்கு வேளாளக்கவுண்டர்கள். இளங்கோவன் - நாயக்கர்.
//ஆயினும் இளங்கோவனை தவிர மற்ற அனைவரும் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது சிறப்//
ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், பரவலாக அறியப்பட்ட கட்சிகளின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியினால் அந்த கட்சியின் வேட்பாளர்கள் புறக்கணிக்கபடுகிறார்கள்!
ஈரோட்டில் பெரும்பான்மை கொங்கு சமூகம் தான் என்றாலும் கட்சி ஆரம்பித்து மூன்றே மாதத்தில் ஓட்டை பிரிக்கும் அளவுக்கு வளார்ந்த காரணமும் அதுவே!
தி.மு.க முன்னாள் அமைச்சர் N.K.K.P. ராஜாவின் மேல் உள்ள அதிருப்தி ஈரோட்டில் தி.மு.க.வே தலையெடுக்காமல் போகவூம் வாய்ப்புண்டு!
kongu naadu makkalkatchi may change the result, just wait and see...
also in pollachi too....
வாழ்த்துக்கள் வால்
ஈரோட்டுப் புயல் அருண் தி ஹீரோ - தி க்ரேட்.
நல்ல கருத்துக்கணிப்பு வால்
வாழ்த்துக்கள்
Good analysis !!!
Good analysis !!!
"யார் இந்த முத்துக்குமார்?”
இதுக்கு effect என்ன வால்பையன்.
வாழ்த்துக்கள் வால்பையன், நல்ல கணிப்பு உங்கள் கணிப்பு நடந்தால் சரி தான்.
கலக்குறேள் வால் !!!
THANKS Mr.Vaalpaiyan, Exactly i felt the same.
why you are not attaching the corresponding flags with the city name at the right side of the page?
sivagangai please????
முத்து குமார் யார் என்றதுக்கும், பெரியார் சிறு வயதில் முன்ன பின்ன தான் இருந்தார் அதனால் சீமான் அவருக்கு பேரனாக இருந்திருக்கலாம் என்று சொல்லி பெரியாரையும் கேவலப்படுத்திய இளங்கோவன் deposit கூட வாங்க கூடாது
//"யார் இந்த முத்துக்குமார்?”
இதுக்கு effect என்ன வால்பையன்.//
டெபாசிட் கிடைத்தால் பெரிய விசயம்!
What about other result.I think After election result comes u will put.
Only 1 days is there , Remaining result??????????
கவுண்டர்கள் எனப்படும் கொங்கு வேளாளர்களின் ஜாதி வெறியை அடக்கும் விதமாக மற்ற சாதியினர் அனைவரும் ஒட்டு மொத்தமாக இளங்கோவனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும்.
ரொம்ப சுமாரான அலசல். வால் பையன் did not do justice.
other election team members who had agreed/committed to provide the info from the constituencies have failed and let "Idly vadai" down miserably!!
very sad :-(
தேர்தல் டீமில் சேர்ந்துகொண்டு தொகுதி நிலவரம் பற்றி எழுதாத அனைவரும் "அரசியல்வாதிகளே"!
(இட்லி வடைக்கு) கொடுத்த வாக்குறுதியை "காற்றில் பறக்க விட்டதால்"!
இட்லி-வடை-"அல்வா" என்று பேரை கொஞ்சம் மாற்றி வைத்துக்கொள்ளலாமே!
கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை may WIN and be talk of TN after election results :)
ஆஹா!!
வாழ்த்துக்கள்!!
நல்ல கருத்து கணிப்பு
/// கொங்கு பேரவையும் //
நாங்கேள்விப் பட்டவரைக்கும் கொங்கு பேரவை செயிக்கலாம். மதிமுக என்ன முக்கினாலும் அங்கே பருப்பு வேவாது வால். காரணம் அதே மந்திரி(&son)தான்.
வாழ்த்துக்கள் வால்!
தேமுதிக விற்கு மட்டும் அல்ல, இங்கு யாருக்குமே அவர்கள் கொள்கை என்ன எனபது தெரியாது. முடிந்த வரையில் துட்டு சம்பாதிப்பது மட்டுமே தற்போதைய கொள்கை
அடங்கொக்கமக்கா.....!! ஓய்...... இட்லி வட.... !!! என்ன கூத்துயா இது ...?
இந்த ஆப்பிரிக்கா மண்டையன் பேச்ச கேட்டுட்டு நீ எப்புடி இந்த மாதிறி எழுதலாம்...?????
இது அத்தனையும் செல்லா ஓட்டு ..........
// பா. ரெங்கதுரை said...
கவுண்டர்கள் எனப்படும் கொங்கு வேளாளர்களின் ஜாதி வெறியை அடக்கும் விதமாக மற்ற சாதியினர் அனைவரும் ஒட்டு மொத்தமாக இளங்கோவனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும்.
//
இது போன்ற லூசுக்களின் கேவலமான பின்னூட்டம் யாரையும் ஒன்னும் செய்யாது......
//மானஸ்தன் said...
தேர்தல் டீமில் சேர்ந்துகொண்டு தொகுதி நிலவரம் பற்றி எழுதாத அனைவரும் "அரசியல்வாதிகளே"!
(இட்லி வடைக்கு) கொடுத்த வாக்குறுதியை "காற்றில் பறக்க விட்டதால்"!
இட்லி-வடை-"அல்வா" என்று பேரை கொஞ்சம் மாற்றி வைத்துக்கொள்ளலாமே!//
மானஸ்தன் வாழ்க
(இதில் வஞ்ச புகழ்ச்சி எதுவுமில்லை)
இந்நிலைமை ஈரோட்டில் மட்டும் தானா???? இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
// ஈரோடு: ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி 47,343 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மதிமுக பொது செயலாளர் வைகோ விருதுநகர் தொகுதியில் தோல்வியடைந்த நிலையில்
ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது
அக்கட்சியினருக்கு ஆறுதல் தந்துள்ளது.
கணேசமூர்த்தி தனக்கு அடுத்து இரண்டாவது இடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை சுமார் 47,343 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். //
@ valpayan,
what a perfect prediction !!! compare to other cyber bullying person on the blogsphere you did good job. hats off you. all the best.
with care & love,
Muhammad Ismail .H, PHD,
gnuismail.blogspot.com
வால்பையன் Won. நல்ல கருத்துக் கணிப்பு.
..ஈரோடு மக்களவைத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 47,343 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இவரை எதிர்த்து அ.இ.அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
வால்பையனின் கணிப்பு கனகச்சிதம்...
இருப்பதிலேயே தேர்தல் நிலவரம் கடைசியாக எழுதி கொடுத்தது நான் தான்!
15 நாட்கள் முழுவதுமாக எடுத்து கொண்டு, பார்க்கும் நண்பர்களிடமெல்லாம் அரசியல் பேசி, நகரம் மட்டுமல்லாது கிராமபுற நிலவரங்களையும் அலசியதால் மட்டுமே, கொங்கு பேரவையின் தாக்கத்தை எங்களால் உணரமுடிந்தது!
இன்றைய இளைஞர்களிடம் சாதி அரசியல் பற்று இல்லையென்றாலும், கொங்கு பேரவையின் பிரச்சாரம் கண்டிப்பாக பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்பதௌ உணர்ந்து தான் கொங்கு பேரவையின் முக்கியதுவத்தை பதிவில் எழுதினேன்!
எங்களது கணிப்பை போலவே கொங்கு பேரவை ஈரோட்டில் இரண்டாம் இடம் பிடித்தது, அ.தி.மு.க. மூன்றாம் நிலை தான் பிடித்தது!
ஊக்கமளித்த நண்பர்களுக்கும், வாய்ப்பளித்த இட்லிவடைக்கும் எங்கள் குழுவின் சார்பாக நன்றிகள்!
//எங்களது கணிப்பை போலவே கொங்கு பேரவை ஈரோட்டில் இரண்டாம் இடம் பிடித்தது, அ.தி.மு.க. மூன்றாம் நிலை தான் பிடித்தது!//
ஈரோட்டில் அதிமுகவும் போட்டியிட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைகிறேன் :-(
மன்னிகவும் தி.மு.க என்று டைப் செய்வதற்கு பதிலாக முன்னால் ஒரு ”அ” சேர்ந்து விட்டது.
நான் எந்த கட்சியையும் சேராஹவன் என்பதால் இக்குழப்பங்கள் அடிக்கடி நேருகிறது!
கட்சியில் சேருவதை தவிர வேறு எதாவது வழியிருந்தால் சொல்லுங்கள். இப்பிரச்சனை தீர!
ஆனால் நின்றது என்னவோ காங்கிரஸ் தான்! அதை கூட தி.மு.க கூட்டணின்னு படிங்க!
(அரசியல் பேசுறதுகுள்ள தாவூ தீருதே)
//மன்னிகவும் தி.மு.க என்று டைப் செய்வதற்கு பதிலாக முன்னால் ஒரு ”அ” சேர்ந்து விட்டது.//
ஈரோட்டில் தி.மு.க. போட்டியிட்டது என்பதை கேள்விப்பட்டு முன்பைவிட அதிகமாக அதிர்ச்சி அடைகிறேன்.
நல்ல ஆளை வெச்சுதான் அலசுறாங்கய்யா அலசல் :-)))
//எங்களது கணிப்பை போலவே கொங்கு பேரவை ஈரோட்டில் இரண்டாம் இடம் பிடித்தது, அ.தி.மு.க. மூன்றாம் நிலை தான் பிடித்தது!//
அப்புறம் தேர்தல் முடிவுகளை சரியாகப் பார்க்கவும். கொங்குப் பேரவைக்கு ஈரோடு உள்ளிட்ட எந்தத் தொகுதியிலும் டெபாசிட்டும் கிடைக்கவில்லை, இரண்டாவது இடமும் கிடைக்கவில்லை :-)
கொங்கு முன்னேற்ற பேரவை ஒரு லட்சம் வாக்குகள் பெற்றிருக்கிறது ஈரோட்டில்!
அப்படினா டெபாசிட் கொடுக்கமாட்டாங்களா?
எனக்கு மெய்யாலுமே தெரியாது தலைவா?
Post a Comment