பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 31, 2009

இதழ்கள் ஆய்வு - மாலன்

அப்டேட்: புதிய லிங்க் வேலை செய்கிறது!

சில வருடங்கள் முன் (2004) விளம்பரம், படம், மேட்டர் என்ற ஒரு பதிவு போட்டிருந்தது நினைவிருக்கலாம்.


நேற்று திரு.மாலன் அவர்களிடமிருந்து வந்த மின்னஞ்சல்...


அன்புள்ள 'இட்லிவடை',

தமிழ் இதழ்கள் குறித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டிருக்கிறேன். தமிழ் இதழ்களைத் தொடர்ந்து வாசிப்பவர் என்ற முறையில் உங்கள் பதில்கள் எனக்குப் பயன்படக்கூடும்.

http://www.surveymonkey.com/s.aspx?sm=xwg9rVOVbQHHZUc2kxEh1A_3d_3d


என்ற் சுட்டிக்குச் சென்று பதிலளிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

இயன்றால் உங்கள் வாசகர்களும் பங்கேற்க உதவும் வகையில் உங்கள் வலைப்பதிவில் இந்தத் தகவலை வெளியிடக் கேட்டுக் கொள்கிறேன்
நன்றி

அன்புடன்
மாலன்


இதன் முடிவுகளை இட்லிவடையிலும் போட மாலன் அவர்கள் அனுமதி தருவார் என்று நம்புகிறேன்.

Read More...

Saturday, May 30, 2009

கருணாநிதியின் கவலைகளும் பிரபாகரன் பற்றிய கவலைகளும் - ஞாநி

கருணாநிதியின் கவலைகளும் பிரபாகரன் பற்றிய கவலைகளும் - ஞாநி - ஓ-பக்கங்கள், குமுதம்...( ஒரு பகுதி மட்டும் இங்கே )

தொலைக்காட்சிகளில் டெல்லியில் தள்ளு வண்டியில் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை வைத்து தள்ளிக் கொண்டு சென்றபடி அவருடைய குடும்ப உறுப்பினர்களும் குடும்ப விஸ்வாசிகளும் வலம் வந்த காட்சிகளைப் பார்த்தபோது பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை அனுபவத்தை நான் சிறுகதையாக எழுதியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது.

ஒரு டி.வி. நிகழ்ச்சிக்காக அந்த விடுதலை வீரரை நான் சென்னைக்கு வரக் கேட்டிருந்தேன். . அவருக்கு வயது எண்பதுக்கு மேல். உடல் தளர்ச்சி பெரிதாக இல்லாவிட்டாலும் கடும் மன தளர்ச்சியில் இருந்தார். சென்னைக்கு அழைத்து வந்தவர்கள் அவ்ருடைய பிள்ளையும் பேரனும். நிகழ்ச்சிப் பதிவு முடியும்வரை என் வீட்டில் தங்கியிருந்தார்கள். எல்லாம் முடிந்து ஊருக்குத் திரும்பும் தினத்தன்று ரயிலுக்குப் புறப்படுவதற்கு முன்னால் அவர் என் அறைக்கு பேரனுடன் வந்தார். என்னிடம் ஒரு உதவி வேண்டுமென்று தயங்கித் தயங்கிச் சொன்னார். என்னவென்று கேட்டேன் பேரனுக்கு சினிமாவில் சேர ஆசை. எப்படியாவது கமல்ஹாசனிடம் சொல்லி சேர்த்துவிடவேண்டுமென்று கேட்டார் ஆங்கிலேய ஆட்சியில் தேசத்துக்காகஅடி உதை அவமானங்களை சந்தித்திருந்த அந்த விடுதலை வீரர். ஏற்கனவே பல முறை பேரன் சென்னைக்கு வந்து முயற்சித்த கதையையும் சொன்னார். விடுதலை வீரருடன் ரயிலில் வந்தால் உடன் வரும் உதவியாளருக்கு டிக்கட் இலவசம் என்பது அரசு அளித்திருக்கும் சலுகை. எனவே அடிக்கடி இந்த விடுதலை வீரரை பேரன் சென்னைக்கு அழைத்து வந்து நாள் முழுக்க ரயில்வே நிலையத்திலேயே உட்காரவிட்டுவிட்டு, கோடம்பாக்கத்தில் வாய்ப்பு கேட்கப் போய்விடுவான். இரவு ரயிலில் ஊர் திரும்பும் வரை ரயிலடியில் விடுதலை வீரர் கிடக்க வேண்டியதுதான்.

தள்ளு வண்டிக் கலைஞரை டெல்லிக் காட்சிகளை டி.வியில் பார்த்தபோது ஏனோ இந்த உண்மைக் கதை நினைவுக்கு வந்தது. ஒரு காலத்தில் மொழிக்காக, தமிழ் மக்களின் உரிமைக்காக, ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து டெல்லிக்கு எதிராகப் போராடிய இளைஞர், இன்று 84 வது வயதில் மகனுக்கும் மகளுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவி பெற்றுத் தருவதற்காக தள்ளு வண்டியில் வைத்து அலைக்கழிக்கப்படுகிறார். விடுதலை வீரருக்கும் இவருக்கும் ஒரே வித்யாசம், இப்படி அலைவது இவருக்கும் பிடித்திருக்கிறது என்பதுதான்.

தி.மு.க என்பது திருக்குவளை மு.கருணாநிதி லிமிடெட் கம்பெனியாகிப் பல காலம் ஆயிற்று. கட்சி என்கிற கம்பெனியின் கண்ட்ரோலிங் ஷேர்ஸ் எல்லாம் குடும்பத்திடமே இருக்கின்றன. குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகள் வரிசையாக நிர்வாகப் பொறுப்புகளுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அதை ஒழுங்காக முடித்துத் தருவதற்காக ஓய்வு பெறும் வயதைத் தாண்டியபிறகும் போர்ட் சேர்மன் பதவியில் கலைஞரை தொடரவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டி.வியில் பார்த்த டெல்லிக் காட்சிகளில் தள்ளு வண்டி ஊர்வலத்தில் பின்னால் போகிற பிரமுகர்களில் ஒரு பலியாடு மாதிரி முகத்தைப் பார்த்தேன். தெரிந்த முகமாயிருந்தது. வயதாகிவிட்டதால் கொஞ்சம் பின் வழுக்கையும், முன்புறம் வயதை மீறிய கருந்தாடியுமாக - திருச்சி சிவா! தி.மு.கவின் ராஜய சபை உறுப்பினர். ஸ்டாலினுடன் இளைஞர் தி.மு.க உதவி தளபதிகளில் ஒருவராகத் துடிப்புடன் செயல்பட்டு விஸ்வாசமாக சுமார் 30 வருடங்களுக்கு மேல் கட்சியில் இருக்கிறவர். புத்தகம் படிக்கிற ப்ழக்கமும், எழுதுகிற பழக்கமும் உடைய கண்ணியமான மனிதர். கட்சி அவருடைய விஸ்வாசத்துக்கு அளித்த உச்சமான பரிசு எம்.பி.பதவி மட்டும்தான். இந்த முறை அவருக்கு ஓர் இணை மந்திரி பதவியாவது தருவார்கள் என்று நினைத்தேன். ம்ஹூம். எம்.ஜி.ஆர் விஸ்வாசியாக இருந்து கல்வித் தந்தையாக மாறி அண்மையில் தி.மு.கவில் இனைந்து எம்.பியான கோடீஸ்வரர் ஜெகத்ரட்சகனுக்கெல்லாம் மந்திரி பதவி கொடுத்த பிறகு மீதி பதவி எதுவும் இல்லையே. மன்மோகன் சிங் குறைந்தது தி.மு.கவுக்கு பத்து இணை அமைச்சர் பதவிகளையாவது கொடுத்திருந்தால், சிவா மாதிரி அரசியல் அசடுகளுக்கும் வாய்ப்பு கொடுத்திருப்பார்களோ என்னவோ..

மூத்த கட்சிக்காரரான டி.ஆர்.பாலுவை ஓரங்கட்டிவிட்டதாக பத்திரிகைகள் எழுதுகின்றன. இதில் ஒன்றும் வியப்பு இல்லை. பண்ணையார் வீடுகளில் எப்போதும் துடிப்பான புது இளம் கணக்குப் பிள்ளைகள் வந்துவிட்டால், வயசான பழைய கணக்குப் பிள்ளைகள் தாமாகவே குறிப்பறிந்து ஒதுங்கிக் கொள்வதுதான் மரபு. இன்னும் கொஞ்சம் கவுரமாக பாலுவுக்கு ஏதாவது மாநில ஆளுநர் பதவி வாங்கிக் கொடுத்து ரிட்டையர் ஆக்கியிருக்கலாம்.

வாசிப்புப் பழக்கம், எழுதும் ஆற்றல், ஆங்கில அறிவு உடையவர்களை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு எம்..பிகளாக அனுப்பி தங்கள் கொள்கைகளுக்காக திறமையாக வாதாடக் கூடிய நபர்களை - அண்ணா, சம்பத், நாஞ்சில் மனோகரன் , இரா செழியன்,முரசொலி மாறன், டாக்டர் கலாநிதி, வைகோ போன்றோரை -- அனுப்பும் கட்சியாக இருந்த திமு.க இன்று எப்படிப்பட்டவர்களை அனுப்புகிறது ? யாரெல்லாம் அமைச்சர் ஆக்கப்படுகிறார்கள் ? எப்படி இருந்த தி.மு.க இப்படி ஆகிவிட்டது ? இன்னும் அடுத்த பத்தாண்டுகளில் என்னவெல்லாம் ஆகப்போகிறதோ ?

நீ ஒன்றும் எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று ஆவேசப்பட வேண்டாம். நீங்களேயாவது உங்களைப் பற்றிக் கவலைப்படுங்கள். என் கவலையெல்லாம் உங்களின் இலவச மயக்கங்களில் சிக்கியிருக்கும் மக்களின் கதியைப் பற்றித்தான்.

நன்றி: குமுதம், 26-5-2009

Read More...

Friday, May 29, 2009

துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்


தமிழகத்தின் துணை முதல்வராக மு.க. ஸ்டாலின் நியமனம்

கவர்னர் மாளிகையின் அறிக்கை:

முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக கவர்னர் நியமனம் செய்து அறிவித் துள்ளார். இதுவரை முதல்- அமைச்சர் கவனித்து வந்த பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள், தொழில், சிறுபான்மை நலம், பாஸ்போர்ட், சமூக சீர்திருத்தம் ஆகிய துறைகளை மு.க.ஸ்டாலின் கவனிப்பார். இனி அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் என்றழைக்கப்படுவார்.

தமிழக வரலாற்றில் துணைமுதல்வராக ஒருவர் பதவியேற்பது இதுவே முதல் முறையாகும்

கலைஞர் அறிக்கை
கடந்த பிப்ரவரி திங்களில் இருந்து சுமார் நான்கு மாத காலமாக என் உடலில் தவிர்க்க முடியாததும் அபாயம் நிறைந்ததுமான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக உடல் நலிவுற்று-இன்னமும் நடக்க முடியாமல், சக்கர நாற்காலியில் தான் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது. இந்த உடல் நலிவுடன் அரசு நிர்வாகப் பணிகளில் முழு கவனம் செலுத்த இயலவில்லை. வாரம் ஒன்றுக்கு நூறு கோப்புகளுக்குக் குறையாமல் பார்த்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. மேலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு வாரியப் பணிகள் மற்றும் அரசுத்துறை பணிகளை எல்லாம் அன்றாடம் கலந்து பேசி முடிவெடுத்து செயல் பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு கவனிக்க வேண்டிய அவசிய மும் உள்ளது. எனவே இந்தப் பணிகளை நமது நிதியமைச்சர் பேராசிரியர் ஏற்று நடத்த முடியுமா என்று அவரிடம் விவாதித்ததில் அவருக்கும் உடல் நிலை இடந்தராத நிலைமையை எடுத்துச்சொல்லி, அதன் பிறகு நாங்கள் இருவரும் கலந்து பேசி இரண்டொரு முக்கிய துறைகளின் பொறுப்புகளை மட்டும் நான் வைத்துக் கொள்வதென்றும் பேராசிரியர் அவையின் முன்னவராகவும், நிதி அமைச்சராகவும், தொடர்வதென்றும், எங்கள் இரு வருக்கும் அடுத்து இப்போது பகிர்ந்தளிக்கப்டுகிற இலாக்காக்களையும் பொறுப்பேற்று துணை முதல்வர் என்ற நிலையில் மு.க.ஸ்டாலின் செயல்படுவதென்றும் முடிவு செய்து அதற்கான அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.




பிரொடொகால் படி மத்திய கேபினட் மந்திரி மாநில மந்திரியை விட ஒரு படி மேல். துணை முதல்வர் அப்படி கிடையாது.

Read More...

Konkatsu bra

இது என்ன என்று புரியாதவர்கள் கீழே படிக்கலாம்...பார்க்கலாம் !

ஜப்பானியப் பெண்களுக்கு திருமணம் மீதான ஆசை குறைந்து வருகிறதாம் ( அப்படியா ? ) நிறைய பெண்கள் தாமதமாகத் திருமணம் செய்து கொள்கின்றனர்; அல்லது தனியாக வாழ்ந்து முடிக்க முடிவு செய்கின்றனர். நாட்டின் மக்கள் தொகை குறைவதில் கவலைப்பட்ட உள்ளாடை நிறுவனம் ஒன்று, 'கணவனை வேட்டையாடும் பிரா' என்ற பெயரில் ஒரு உள்ளாடையை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த உள்ளாடையின் மையப்பகுதியில் திருமண கடிகாரம் ஒன்று ஓடிக்கொண்டிருக்கும். கல்யாண வயசு நெருங்குவதை இது ஞாபகப்படுத்தும்( என்ன டெக்னாலஜி ). இதன் அருகே இதய வடிவில் சாவித்துவாரம் போன்ற ஒரு துளை இருக்கும். திருமணம் நிச்சயமானதும் இதற்குள் ஒரு மோதிரத்தை சொருகினால், கல்யாண வாழ்த்து பாட்டு பாடியபடி கடிகாரம் நின்றுவிடுமாம்.

ஆண்களே உஷாராக இருங்கள். இந்த மிஷினை பார்த்தால் இது உங்களுக்கு வைத்த டைம் பாம்!

Read More...

Thursday, May 28, 2009

அழகிரி ஆகிய நான் ...

சற்று முன் மு.க.அழகிரி பதவியேற்றார்...

வைகையிலிருந்து யமுனைக்கு! என்ற தலைப்பில் இன்றைய தினமணி தலையங்கம்

சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, நெல்லை, சேலம் என்று ஏனைய நகரங்கள் எல்லாம் மத்திய அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இப்போது முதல்முறையாக மதுரைக்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார்.

முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் செயல்பாடுகளிலும் அவர் கையாளும் அரசியல் வழிமுறைகளிலும் நம்மில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். மத்திய அமைச்சரவையில் அவர் இடம்பெற்ற விதத்தில் கூட நம்மில் பலர் முகம் சுளித்தது உண்மையிலும் உண்மை. ஆனால் அதைவிட நிதர்சனமான உண்மை மு.க.அழகிரி மத்திய அமைச்சர் என்பது!

முதல்வர் கருணாநிதியின் மகன், திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்கிற தகுதிகள் எல்லாம் பின்னால் தள்ளப்பட்டு இப்போது தமிழகத்தின் சார்பில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக மத்திய அமைச்சரவையில் ஒரு பொறுப்புள்ள பதவி வகிக்கும் மாண்புமிகு அமைச்சராக மு.க.அழகிரி மாறியிருப்பது அவரிடம் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்ப்பதில் தவறு காணமுடியாது.

அழகிரிக்கு ஆங்கிலம் பேசத் தெரியுமா? கோப்புகளைப் பார்க்கத் தெரியுமா? நாடாளுமன்றத்தில் அவ்வப்போது எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியுமா? பல மேதைகளும் அரசியல் ஜாம்பவான்களும் அமர்ந்த இடத்தில் போய் அமரும் தகுதி இருக்கிறதா? இப்படி எத்தனை எத்தனையோ விமர்சனங்கள் திமுகவின் எதிர் முகாம்களில் இருந்தும் ஊடகங்களிலும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த விமர்சனங்களுக்கு அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

1952 முதல் இதுவரை அமைந்த 15 மக்களவைகளின் உறுப்பினர்களாக இருந்த பலரைப் பற்றி மேலே எழுப்பப்பட்ட கேள்விகள் இப்போதும் எழுப்பப்படலாம் என்பதுதான் உண்மை. ஆங்கிலம் தெரிந்திருப்பதும் விவாதங்களில் பங்கேற்று உரையாற்றும் திறமை உள்ளவர்களும் மட்டுமே மக்களவை உறுப்பினர்களாக ஆகவேண்டும் என்று சட்டமும் இல்லை. அப்படிப்பட்ட தகுதி இல்லாதவர்கள் அனைவருமே செயல்படாத உறுப்பினர்களாக இருந்துவிடவும் இல்லை.

வைகைக் கரையில் தன்னைச் சுற்றி சிறியதொரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு அரசியல் நடத்தத்தான் அழகிரிக்குத் தெரியும் என்று விமர்சனம் செய்பவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். யமுனைக் கரையில் தேசிய அரசியல் நீரோட்டத்தில் சங்கமிக்கும்போது ஆர்ப்பாட்ட, அடாவடி அரசியலால் தங்களை அடையாளம் காட்டிக் கொண்ட பலரும் அரசியல் முதிர்ச்சியும் நாகரிகமும் பெற்றவர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள் என்பதுதான் சரித்திரம் நமக்கு உணர்த்தியிருக்கும் உண்மை.

திமுகவின் பொருளாளரும் முதல்வர் கருணாநிதியின் இளைய மகனும் மாநில உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்குக் கிடைக்காத வாய்ப்பு மத்திய அமைச்சராகி இருக்கும் மு.க.அழகிரிக்கு கிடைத்திருக்கிறது. முன்பு சென்னை மாநகர மேயராகவும் இப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் செயல்படும் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய சாதனை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவுமே செய்துவிட முடியவில்லை. அதற்குக் காரணம் கருணாநிதி என்கிற ஆலமரத்தின் கீழே வேறு எதுவும் தழைத்துவிட முடியாது என்பதுதான்.

ஆனால் மத்திய அமைச்சரான மு.க.அழகிரிக்கு அப்படிப்பட்ட நிர்பந்தங்கள் எதுவும் இல்லை. மாநில அரசு போலில்லாமல் மத்திய அரசில் அமைச்சர்கள் தங்களது தனித்துவத்தை நிலைநாட்டிக் கொள்ளும் சுதந்திரமும் அவகாசமும் முழுமையாகத் தரப்படுகிறது. எடுத்த காரியத்தை முடிக்கும் திறமை உடையவர் என்று அவரது ஆதரவாளர்களால் வர்ணிக்கப்படும் மு.க.அழகிரி, மத்திய அமைச்சராக நல்ல பல திட்டங்களை நிறைவேற்ற முற்படுவாரேயானால் அவரை நாடு போற்றும்.

எழுபதுகளின் ஆரம்பத்தில் மத்திய உணவுத்துறையின் அப்போதைய அமைச்சர் சி.சுப்பிரமணியத்தின் தொலைநோக்குப் பார்வையில் உருவானதுதான் "பசுமைப்புரட்சி' திட்டம். அதன் விளைவாக இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. உணவு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியத்தின் பங்களிப்பு இப்போதும் பேசப்படுகிறது, பாராட்டப்படுகிறது. அதுபோல அமைச்சர் மு.க.அழகிரி இந்திய சரித்திரத்தில் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டால் அது ஒன்றும் இயலாத விஷயமல்ல.

தேவிலாலும் லாலுபிரசாத் யாதவும் முலாயம்சிங் யாதவும் அமைச்சர்களாகச் செயல்பட்டு முத்திரை பதிக்க முடிந்ததென்றால், முதல்வர் கருணாநிதியின் மகனால் முடியாத விஷயமாக அது இருக்க முடியாது. அரசியலையும் நிர்வாகத்தையும் சுவாசித்து வளர்ந்த அழகிரி, நேர்மையும் திறமையும் உள்ள நிர்வாகிகளைத் தேடுகிறார் என்கிற செய்தி வியப்பளிக்கவில்லை. தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு வித்தியாசமான அழகிரி, யமுனைக் கரையில் உருவாகக் கூடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இனிமேல் அழகிரி பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை. அதிகாரம் என்பதுகூட அவர் பார்க்காததோ, அனுபவிக்காததோ அல்ல. ஆனால், புகழ் என்பதும் சாதனை என்பதும் தகுதி என்பதும் அவர் தேடிக்கொள்ள வேண்டிய விஷயங்கள். அதற்கான வாய்ப்பை மத்திய அமைச்சர் பதவி அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. "செயல் வீரர்' அதை நன்கு பயன்படுத்துவார் என்று நம்புவோமாக!

நன்றி:



Read More...

என் தலைவன் இறந்து விட்டான்? உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்? அவனை நினைத்து அழுவதற்கு உரிமை தாருங்கள்?

என் தலைவன் இறந்து விட்டான்? உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்? அவனை நினைத்து அழுவதற்கு உரிமை தாருங்கள் ?
- ஜோர்ஜ்,குருஸ்சேவ்

இருபது வருடங்களுக்கு முன்பாக தாயகத்தின் முதல் இதழை வெளியிடுவதற்காக அச்சிட்டுத் தயார் செய்து விட்டு மறுநாள் வினியோகிக்கும் உத்தேசத்துடன். இரவு வேலைக்கு சென்று நள்ளிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது. கனடாவில் இருந்த கூட்டணி பா,உ ஒருவருக்கு நெருக்கமாக இருந்த ஒருவர் எலிவேட்டரில் கண்ட போது. சக தமிழர் என்பதை உணர்ந்து அமிர்தலிங்கத்தைச் சுட்ட லேட்டஸ்ட் செய்தியைச் சொன்னார், அத்துடன் றோ தான் செய்திருக்கு என்ற அரசியல் ஆய்வையும் கூடவே போனஸாக தந்தார்,

எனவே. முதல் முதலாய் வெளியிடும் பத்திரிகையில் சுடச் சுடச் செய்திகளை முந்தித் தர வேண்டும் என்பதற்காக வேறுவழியின்றி. அமிர்கொலை பற்றிய செய்தியை உடனடியாக அச்சமைப்புச் செய்து. மறுநாள் காலை பிரதி செய்து பொருத்தி வெளியிட வேண்டி வந்தது, முதல் ்முன்று இதழ்களிலும் செய்தியின் பின்னால் வந்த குறிப்புகளில் ஒன்றாக. அமிரின் கொலையும் வளர்த்த கடாக்களுக்கே பலிக்கடாவோ என்ற குறிப்புடன் வெளிவந்தது, (அந்தப் பிரதிப் பகுதி மட்டும் மஞ்சள் நிறத்தில் வெளிவந்ததால் தான். பின்னால் ஐரோப்பியக் கவிஞர் தாயகத்தை மஞ்சள் பத்திரிகை என்று பிரகடனம் செய்;தாரா என்பது இது வரை தெரியாது?)

முதல் இதழை கடைகளில் வினியோகித்து வந்த பின்னால். முதலில் தொலைபேசி எடுத்து கருத்துத் தெரிவித்து நேரில் சந்திப்பதில் ஆர்வம் கொண்டது தேடகம் நண்பர்கள், அடுத்த வந்த அழைப்பில் ஒன்று,,, பக்கத்துக் கட்டிடத்தில் ஜாகை அமைத்து புலிக்கு வேலை செய்து கொண்டிருந்த கும்பலில் ஒன்றான ஞானமில்லாத பண்டிதன், மிரட்டல் பாணியில் வந்த அந்த அழைப்பின் நோக்கமே. அந்த வளர்த்த கடாக்களுக்கே பலிக்கடாவோ என்ற பதத்தை பயன்படுத்துவதற்கான உரிமை பற்றியதே, நீ எப்பிடி அப்பிடி எழுதுவாய், அதாவது அந்தக் கொலைக்கான பழி புலிகள் மீது இல்லை என்பதை வலியுறுத்தி. மிரட்டிப் பணிய வைத்து. முடியாவிட்டால் தம்பிக்கு இருட்டடி போட்டு முளையிலேயே கிள்ளி விட எடுத்த முயற்சி அது,

முன்பாக வேறெந்த வழிகாட்டிகளும் இல்லாமல். யாருமே பயணிக்காத ஒரு பாதையில் காலடி எடுத்து வைத்து. தமிழர்கள் கருத்துச் சுதந்திரம் குறித்து மதிப்புக் கொண்டிருப்பார்கள் என்ற அதீத நம்பிக்கையில் சுதந்திரமான கருத்தாடலுக்கான ஒரு களம் அமைக்கப் புறப்பட்ட முயற்சி அது, அப்போது நான் பயமறியாத இளங்கன்று? (இப்போது முதிர்ச்சியடைந்த முரட்டுக் காளையாய் இருக்கக் கூடும்,)

இவ்வாறான அனுபவங்கள் முன்பின் இல்லாவிட்டாலும். இவ்வாறான மிரட்டல்களைக் கண்டு பயந்து கடையைப் பூட்டி விட்டு புறுபுறுத்துக் கொண்டே நம்ம வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் நோக்கமோ. பிரபாகரனின் படத்தை முன்பக்கத்தில் போட்டு ஆயுத ஒப்படைப்புச் செய்து ஈனப்பிழைப்பு நடத்தும் கீழ்மைப் புத்தியோ இல்லாமல். இவ்வளவு தூரம் வந்த பின்னாலும் இவர்களுக்குப் பயந்து வாழ வேண்டுமோ என்ற எண்ணம் தான் மனதில் தலை தூக்கியது,

அந்த முயற்சிக்கு தேடகம் நண்பர்கள் உட்பட்ட பல்வேறு ஆர்வலர்கள் கொடுத்த தோள்கொடுப்புகளும். தாயகம்காரர் என்ற முத்திரை குத்தலுக்குப் பயம் கொள்ளாது எழுதிய எழுத்தாளர்களும் கவிஞர்களும். கண்;ணாடி உடைப்புகளுக்கும் பயப்படாமல் பத்திரிகை விற்ற வியாபார நிலையங்கள். இவ்வாறான ஒரு பத்திரிகை வெளிவர வேண்டும் என்பதற்காகவே மிரட்டல்களுக்குப் பயப்படாமல் விளம்பரம் செய்த வர்த்தகர்களும். எல்லாவற்றுக்கும் மேலாக முழுநேர வேலையையும் செய்து கொண்டே பத்திரிகை நடத்த வேண்டிய நிலையில் நேரத்திற்கு ஒழுங்காக பத்திரிகையை வெளியிட முடியாத போதும் கடைகளில் காத்திருந்து வாங்கிச் சென்று வாசித்த வாசகர்களும் என தாயகம் புலிகளின் தடையையும் மீறி தொடர்ந்தும் வெளிவந்தது,

எந்த வித இயக்க அரசியல் பின்னணியும் இல்லாத தனிமனிதனுக்கு இந்த மிரட்டல் என்றால்,,,

அமிரின் கொலை நினைவாக அவரது ஆதரவாளர்கள் ரொறன்ரோவில் ஒரு நினைவு நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தனர், அதில் கலந்து கொள்ளச் சென்ற போது நிலக்கீழ் தொடருந்து நிலையத்திலிருந்து அருகிலிருந்த மண்டபம் வரைக்கும் இருமருங்கிலும் புலிக்காடையர்களும் குண்டர்களும் அணிவகுத்து நின்று போவோர்கள் மீது நெற்றிக்கண் அனல் பார்வை வீசிக் கொண்டிருந்தனர், தங்களால் கொலை செய்யப்பட்ட. ஒரு மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவனின் மரணத்தை நினைவு கூரச் சென்றவர்களை நேரடியாக மிரட்டாமல். உங்களைக் கவனிக்கிறம் என்ற செய்தியைத் தருவதற்காக நடத்தப்பட்டதே அந்த அணிவகுப்பு, தனியாக அந்தக் கூட்டத்தைக் கடந்து தான் மண்டபத்திற்கு செல்ல வேண்டி வந்தது, (சிங்கம் சிங்கிளாத் தாண்டா வரும். பண்டிதான்டா கூட்டமா வரும்?)

மண்டபத்தில் பின்னால் வரிசையாக நின்று அந்த உலகத்தமிழ்த் தொண்டரடிப் பொடிகளும் குண்டரடிதடிப் பொடியளுமாய். அட்டகாசமாய் சிரிக்கும் தமிழ்ப் படத்து வில்லன்களின் பின்னால் கையைக் கட்டிக் கொண்டு தலையைச் சரித்து இளிக்கும் அடியாட்கள் போல. கூட்டத்தில் உரையாற்றுவோர்கள் மீது மிரட்டல் தொனியில் பார்த்த பார்வையைக் கண்டு எமது இனம் வந்து சேர்ந்திருக்கும் சீரழிவு நிலையைக் கண்டு மனம் வெதும்பத் தான் முடிந்தது,

தங்கள் தலைவனை யார் கொன்றார்கள் என்பதைத் தெரிந்து கொண்டாலும் அதைப் பகிரங்கமாகச் சொல்ல யாரும் தயாராக இருக்கவில்லை, அந்தக் ஆயுதம் தாங்கிய கொலைகாரர்கள் ஜனநாயகத்திற்கு விடுக்கும் அச்சுறுத்தல் பற்றிக் கடல் கடந்து வந்த பின்னாலும் கண்டனம் செய்ய எவரும் துணியவில்லை,

கூட்டணியின் தூண்கள் என்றில்லாவிட்டாலும் சுவர்க் கற்களாக எண்ணப்படக் கூடியவர்களில் ஒருவரான சட்டத்தரணி. இளைஞர்களே. உங்களைத் தான் நம்பியிருக்கிறோம் என்று. அங்கு வந்து உரையாற்றிய பாவத்திற்கு மன்னிப்புக் கேட்டார்,

அமிரின் வாரிசாக கருதப்பட்ட சட்டத்தரணி எழுந்து. என் தலைவன் இறந்து விட்டான். உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். அவனை நினைத்து அழுவதற்கு எனக்கு உரிமை தாருங்கள் என்று கேட்ட போது தான் இத்தனை ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வந்தும் எங்கள் சுதந்திரத்தை எங்கள் உரிமைகளுக்காகப் போராடும் வீரர்களிடம் பறிகொடுத்த அவலம் மனதைக் குடைந்ததுடன் எங்கள் இனத்தின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியது,

வயிற்றுப்பசியால் உணவு வேண்டும் ஒரு பிச்சைக்காரனைப் போல. விரல்களைக் குவித்து தன் அழும் உரிமையை யாசித்த அந்தக் கணம் இன்றும் மனதில் படிந்திருக்கிறது, சம்பந்தப்பட்டவர்கள் அந்த கசப்பான கணத்தை தற்போதைய சூழ்நிலைகளில் மறக்க பிரயத்தனப்பட்டிருக்கலாம், மீள நினைவு கொள்வதில் அச்சம் கொண்டிருக்கலாம், ஆனால். இந்த பகுத்தறிவை இழந்த பைத்தியக்காரத்தனத்திற்கு எதிராக கொலைப்பயமுறுத்தல் மற்றும் உயிணு இழப்பு பற்றிய அச்சம் இன்றி குரல் எழுப்ப வேண்டும் என்ற ஓர்மத்தைக் கொடுத்த காரணங்களில் அந்தக் கணமும் ஒன்று?

வரலாறு சுற்றுக்களாய் சுழல்கிறது, இந்த மிருகத்தனத்திற்கு முடிவு வரும் என்ற நம்பிக்கை மட்டும் மனதை விட்டு என்றுமே அகன்றதில்லை, தாயகம் மூலமாய் அறிந்து கொண்ட சகோதரர் ஒருவர் சில வருடங்களுக்கு முன்பாக. சமாதான காலத்தில் புலிகள் வகைதொகையின்றி மாற்று இயக்கத்தினரைக் கொன்று குவித்ததைக் கண்டு. கடவுள் கூட இதைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார் என்று மனம் வெதும்பியிருந்தார், அப்போது நான் அளித்த பதில் இதுதான், அண்ணை. நாங்கள் தற்போதைய காரணிகளை வைத்துக் கொண்டு தான் மாற்றம் வராது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், மாற்றம் வரும், ஆனால் அது நாங்கள் எதிர்பார்க்காத விதத்தில் வரும், கம்போடியா. லெபனான் என்று எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இழந்த இடங்களில் எல்லாம் சகஜ வாழ்வு எப்படி திரும்பியது என்பதையும் அவருக்கு ஞாபகப்படுத்தியிருந்தேன், இதெல்லாம் எழுபது கோடியை வாங்கிக் கொண்டு மகிந்தவை ஜனாதிபதியாக்குவதற்கு முன்பான உரையாடல்,

அமிர்தலிங்கத்தைக் கொல்வதில் சூத்திரதாரியாக இருந்த மாத்தயாவினால் தாயகம் தடை செய்யப்படுகிறது என்று ஒரு கும்பல் எங்களை தெருவில் மறித்து மிரட்டுகிறது, போராட்டத்திற்கு துரோகம் இழைக்கிறீர்கள் என்றும் கொச்சைப்படுத்துகிறீர்கள் என்றும் மேலிடம் முடிவு எடுக்கும் என்றும் அச்சுறுத்தப்படுகிறது,

அதே மாத்தயா அதே புலிகளால் துரோகி என்று கைது செய்யப்பட்டு கொல்லப்படுகிறார், தங்கள் தலைவனை இழந்து தவித்த மாத்தயாவின் விசுவாசிகள் அழுவதற்கான உரிமையை மட்டுமல்ல. உயிர் வாழ்வதற்கான உரிமையையும் இழந்து காட்டுக்குள் கொன்று புதைக்கப்படுகிறார்கள், அதில். எங்களை வழியில் வைத்து மிரட்டி. பின்னால் களம் சென்று மாத்தயாவின் மெய்க்காப்பாளரானவரும் அடக்கம்,

சிறி சபாரத்தினம் கொல்லப்படுகிறார், பல போராளிகள் எரிநெருப்பில் உயிரோடு தூக்கி எறியப்படுகிறார்கள், பத்மநாபா கொல்லப்படுகிறார், அவரது ஆதரவாளர்கள் துரோகிகளாக்கப்படுகிறார்கள்,

திட்டமிட்டு தமிழ் அரசியலின் தலைமைகள் ஒவ்வொன்றாக அழிக்கப்படுகின்றன, அந்த தலைமைகளின் வழிநடந்தவர்களுக்கு வாழும் உரிமை கூட மறுக்கப்படுகிறது,

ஆனால். ஆயுதம் தாங்கிய மிருகத்தின் கொடுமை கண்டு. பொங்கி எழ முடியாவிட்டாலும். இயலாமையால் மௌனமாகவாவது இருக்க வேண்டிய இனம் துரோகிகள் அழிக்கப்பட்டார்கள். தடைக் கற்கள் நீங்குகின்றன. களைகள் பிடுங்கப்படுகின்றன என்று ஆனந்தக் கூத்தாடுகிறது, மனித நாகரீகமே கண்டு வெட்கப்படும் காட்டுமிராண்டித் தனம் விடுதலைக்கான வழியாவது கண்டு வெட்கித் தலை குனிய வேண்டிய இனம். இறுமாப்பில் பெருமை கொள்கிறது, வீடு கொழுத்தும் மன்னனுக்கு கொள்ளி எடுத்துக் கொடுக்க மூலைக்கு மூலை மந்திரிமார்கள்,

அப்போதே தங்களுக்கான புதைகுழியை இவர்கள் தோண்டத் தொடங்கி விட்டார்கள், தங்கள் கொலை வெறி எப்படி ஒரு சுற்றின் பின்னால். வந்து தங்களையே பலி கொள்ளும் என்பதை உணர்ந்து கொள்ள முடியாதபடி ஆயுத மோகம் என்னும் அபின் போதையூட்டி மதி மயக்கி விட்டது, அந்த சுய அழிப்பை எங்கள் கண் முன்னாலேயே காணும் பேறு பெற்ற சாட்சியங்களாக நாங்கள் இங்கே?

ஊரெல்லாம் அவலக் குரல் எழுவதற்கு காரணமானவர்கள். இன்று தங்கள் அவலக் குரலுக்கு ஓடி வர யாருமின்றி அவலமாய் அழிந்ததை எங்கள் கண் முன்னாலேயே நாங்கள் கண்டு கொண்டிருக்கிறோம்,

இத்தனை வருடங்கள் கழிந்த பின்னாலும். விடுதலைக்கான பாதையை தங்களுக்குக் காட்டிய தலைமைகள் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னாலும். தங்கள் தலைவர்களுக்காகவும் தங்களோடு இருந்து உயிர் நீத்த போராளிகளுக்காகவும் அஞ்சலி செலுத்தி நினைவு கூரும் பண்பாட்டை மாற்றியக்கப் போராளிகள் இன்னமும் இழந்து விடவில்லை, ஒரு நூறு பேரையாவது கூட்டி. அமிர்தலிங்கத்தை நினைவு கூர்வதற்கு இன்றும் பலர் பயமுறுத்தல்களுக்கும் பயப்படாது தயாராக இருக்கிறார்கள்,

ஆனால். சூரிய தேவன் என்று தூக்கிக் கொண்டாடி வழிபட்ட ஒரு தலைவன் இறந்து விட்டான் என்பதை பகிரங்கமாக அறிவிக்க முடியாத நிலையில். மக்களுக்காக அழுகிறோம் என்று கூறிக் கொண்டே தங்கள் தலைவனை நினைந்து. தெருத்தெருவாக கறுப்பு ஆடையுடுத்தி கண்ணீர் விட்டு கதறி அழும் நிலையைக் கண்டதும் இந்த அவலத்திற்கான சூத்திரதாரிகளே தங்கள் தவறை இன்னமும் உணர்ந்து கொள்ளாமல் நீலிக்கண்ணீர் வடிப்பதாகவே உணர முடிகிறது, சீவியத்தில் நேசித்தவர்கள் மரணத்தில் மறந்து போய் கடைக் கண்ணாடிகளில் கண்ணீர் அஞ்சலியும் கார்களில் கறுப்பும் கொடியும் கூடக் கட்ட முடியாமல் விக்கித்துப் போய் திணறிக் கொண்டிருக்கிறார்கள், தன்னுடைய எல்லாளத் தாக்குதல் சிங்கள இராணுவ பூதத்தின் தலையில் ஆப்பாக இறங்கியிருக்கிறது என்று கடைசி மாவீரர் தின உரையில் பிரகடனம் செய்த தலைவரின் உச்சந்தலையை துணியால் மறைத்துக் காட்ட வேண்டிய பரிதாப நிலைக்கு அந்த இராணுவ பூதம் தள்ளியதைக் கண்ட அதிர்ச்சியிலிருந்து இவர்கள் இன்னமும் மீளவில்லை,

நேற்று வரைக்கும் தலைவர் வெள்ளி திசை கண்டு அடுத்த ஆண்டு தமிழீழப் பிரகடனம் செய்வார் என்று சுத்திக் கொண்டிருந்த தமிழ் ஊடகங்கள் இன்று அந்த மரணத்தை பகிரங்கமாக அறிவிக்க முடியாமல் திணறிக் கொண்டுள்ளன, துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் எல்லாம் கொல்லப்படும்போது முன்பக்கச் செய்தி போட்டு உசுப்பேத்தியவர்கள் இன்று தங்கள் பிழைப்புக்கு வழி வகுத்த தலைவனுக்கு பெட்டிச் செய்தி போடக் கூட நாதியற்றுப் போய் விட்டார்கள்,

ஐயோ. செய்தியை வெளியிட்டால். கண்ணீர் அஞ்சலி விளம்பரத்தில் காசு கிடைக்குமே என்று வாய் ஊறினாலும். எந்தப் பக்கத்தில் இருந்து அடி விழுமோ என்ற பயத்தில் பத்திரிகைகள் எப்போதோ சொன்ன செய்திகளை வைத்து தலைவருக்கு உயிருட்டிக் கொண்டிருக்கின்றன, தூங்கிக் கிடந்த தமிழினத்தை தூங்க விடாமல் விடிய விடிய பிரபாகரன் படை வெல்லும் என்று பாட்டுப் போட்ட வானொலிகள் செனாய் இசையுடன் உண்மை ஒரு நாள் வெளியாகும் என்ற அந்தக் காலத்து திருச்சி லோகநாதன் பாட்டை எங்கோ தேடிப் பிடித்து ஒலிபரப்பி. எங்கள் தேசத்தின் மேலே இடி விழுந்தது ஏனம்மா என்று கேள்வி கேட்டுக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்,

ஒரு இனத்தின் போராட்டத்தை முப்பது வருடங்கள் நடத்திச் சென்ற ஒரு தலைவனுக்கு. அரை நிமிட மௌன அஞ்சலி செலுத்தக் கூட ஆளில்லை, பொன் முட்டையிடும் வாத்தாக ஊடக ஆய்வாளர்கள் முதல் பணம் சேர்ப்பவர்கள் வரைக்கும் அள்ளிக் கொடுத்த வள்ளலை. செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி போல. புலன் பெயர்ந்த தமிழர் மனங்களில் சாக விடாமல் வைத்திருக்க பலத்த பகீரதப் பிரயத்தனங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன,

தலைவரின் மூளைக்குள் குடியிருந்தது போல. தலைவர் அப்படிச் சிந்தித்தார். இப்படி உபாயம் வகுத்தார் என்றெல்லாம் கதை அளந்து. நடந்து முடிந்தவைகளை நேரில் பார்த்தது போலவும். நடக்கப் போவதை முன்கூட்டியே உணர்ந்தது போலவும் மந்தை மேய்த்துக் கொண்டிருந்த ஆய்வாளர்கள் எல்லாம். அந்த மூளையே சிதறிப் போன கதையை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் வாந்தி எடுக்கவும் முடியாமல் தலைக் கறுப்புக் காணாமல் தலைமறைவாகி விட்டார்கள், பணத்துக்கும். வயிற்றுப் பிழைப்புக்கும். புகழுக்கும். சமூக அந்தஸ்துக்குமாய் புலியின் முட்டாள்தனங்கள். கொடுமைகள். அநீதிகள் எல்லாவற்றுக்குமே புத்திஜீவி முலாம் பூசி தெருத் தெருவாய் விற்றவர்கள் இன்று கண் முன்னால் கிடக்கும் தங்கள் திருவாய் மலர்வுகளின் தடங்கள் சாட்சியமாகிக் கிடப்பதைக் கண்டு வெட்கித்துப் போய் முகம் காட்ட முடியாமல் மறைந்து விட்டார்கள்,

தங்களின் தலைவனின் கொடுரமான முடிவை பகிரங்கப்படுத்த இவர்களால் எவ்வாறு முடியும்? தங்கள் தலைவன் இன்னமும் உயிரோடு தான் இருக்கிறான் என்று எப்படி இவர்களால் உறுதியாகச் சொல்ல முடியும்

இத்தனை காலமும் ஈரைப் பேனாக்கி. பேயைப் பெருமாளாக்கி. எட்டாம் வகுப்பே தாண்ட முடியாத ஒருவரை உலக மாமேதகு ஆக்கி. ஈனப் பிழைப்பு நடத்தி இழிந்த வாழ்வு வாழ்ந்தவர்களுக்கு. தங்கள் வயிற்றுப் பிழைப்பின் மூலாதாரத்திலேயே இடி விழுந்ததும் துன்ப அதிர்ச்சி கொள்ளாமல். இன்ப அதிர்ச்சியா கொள்ள முடியும்

இவர்கள் செய்தி வெளியிடுவதாக இருந்தால் அது புதினத்தில் வெளிவந்திருக்க வேண்டும், புதினத்தில் வெளிவருவதாக இருந்தால் அது அரசியல் பிரிவிடம் இருந்து வர வேண்டும், அரசியல் பிரிவிடம் இருந்து வருவதாயின் அது தலைவரின் அனுமதியோடு வர வேண்டும், அனுமதி வழங்க தலைவரும் இல்லை, வானொலிக்கு பேட்டியளிக்க நடேசனும் இல்லை, பின்னர் எப்படி புதினத்தில் செய்தி வரும்

எந்தச் செய்தியை வெளியிட்டாலும். உண்மையை எழுதி. உண்மையாய் எழுதும் பத்திரிகைகளும் வானொலிகளும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஊர்ஜிதம் செய்து கொண்ட பின்னால் தான் வெளியில் விடும் பத்திரிகாதர்மத்தின் படி தாண்டாப் பத்தினிகளாகக் கருதி தலைவரின் செய்தியை உறுதி செய்வதற்காக காத்திருக்கின்றன, அதற்கு தலைவர் ஆராவது விதானையைப் பிடிச்சு தன்னுடைய டெத் சேர்ட்டிபிக்கேட் அனுப்பிய பின்னால் தான் இந்த ஊடகங்கள் அந்தச் செய்தியை வெளியிடும், அதன் பின்னால் தான் இந்த ஆய்வாளர்கள் எனப்படும் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மண்டையில் போடப்பட்டதால் மரணம் சம்பவித்தது என்று கண்டு பிடித்து ஆய்வு செய்வார்கள்,

சரி. ஊடகங்களுக்குத் தான் இந்த நிலை, வன்னியோடு நேரடித் தொடர்பில் இருந்து வன்னி காலால் இட்ட கட்டளையை தலையால் நிறைவேற்றிய புலன் பெயர்ந்த புலித் தலைமைக்கு என்ன நடந்தது போன் அடிச்சால் லைன் பிஸி என்றோ. ஆரோ சிங்களவன் ஆன்ஸர் பண்ணிறான் என்றோ சொல்லிக் கொண்டிருக்க முடியுமா உலகெங்கும் எவருடனும் எந்தக் கணத்திலும் தொடர்பு கொள்ளக் கூடிய வல்லமை உள்ள புலித் தலைமையுடன் தொடர்பு கொள்ள முடிந்தால். உடனேயே தொடர்பு கொண்டு வானலையில் தவழ விட வேண்டியது தானே, இதுவரை காலமும் சூழ இருந்த கூட்டத்திற்கு விலாசம் காட்டவும். மிரட்டி வைக்கவும் இப்ப தான் தலைவரோட கதைச்சிட்டு வாறன் என்றவர்கள் இப்போது தலைவர் இருக்கிறாரா என்ற அடிப்படைக் கேள்விக்கே பதிலளிக்க மறுக்கிறாகளே போராளிகளை இழந்த கவலையில் தலைவர் மௌன விரதம் இருக்கிறார் என்று கதையைக் கிளப்பி விட கற்பனைக்கா பஞ்சம்

காரணம் இருக்கிறது, முகவர்களும் பினாமிகளும். இவர்களுடன் கோம்பை சூப்பியவர்களும் என ஒரு கூட்டத்தின் முழுமையான வருமானமுமே புலித் தலைவரின் இருப்பிலேயே தங்கியிருந்தது, தலைவரை உயிரோடு வைத்திருக்க எப்படித் தான் பகீரதப் பிரயத்தனம் செய்தாலும். இனிமேல் புலியைச் சொல்லி புலன் பெயர்ந்த தமிழரிடம் ஒரு சதம் வாங்கக் கூடிய நிலையில் யாரும் இல்லை, கமிசனுக்காக போராட்டத்திற்கு பணம் சேர்த்;த கோம்பை சூப்பிய கூட்டம் கவனிப்பாரற்றுப் போக. பினாமிகளுக்கும் முகவர்களுக்கும் இடையிலான குளிர் யுத்தம் இப்போது உயிர்ச்சேதத்தில் போய் முடியும் போலத் தெரிகிறது, மாபியாக் கூட்டமான புலி நடத்திய வியாபாரத்தில் புரண்ட கோடிக்கணக்கான பணமும் சொத்துக்களும் இன்று யார் யாரோ கையில், இந்த சொத்துக்களின் பாகப்பிரிவினை நடந்து முடியும் வரைக்குமாவது தலைவரை உயிரோடு வைத்திருந்தே ஆக வேண்டும்,

இதனால் தான் முன்பின் கண்டு கேட்டறியாத யாழ், செல்லும் படையணித் தளபதிகளும் வெளிநாட்டுப் புலனாய்வுத்தளபதிகளும் கனவில் தோன்றி அருள் பாலிக்கிறார்கள், ஈழப் போராட்டத்தை இணையத் தளத்திலாவது நடத்தியாக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள், அந்த மகராசன் போய்ச் சேர்ந்து விட்டார் என்பது முடிவாகத் தெரிந்தால் பினாமிகள் எல்லாம் சொத்துக்களை திருப்பிக் கையளிப்பார்களா எனவே. பல இனம் தெரியாதவர்களால் நடத்தப்படும் கொலைகளும் வெள்ளை வான் கடத்தல்களும் புலன் பெயர்ந்த நாடுகளில் விரைவில் அரங்கேறும், இந்த மரணங்களும் அஞ்சலி செலுத்த ஆளில்லா களப்பலிகளாகி முடியும்,

சரி. இந்தக் கூட்டம் தான் லாப நட்டம் கருதி தலைவர் மரணத்தை பூசணிக்காய் கதையாக்கி இருக்கிறது,

மகாவீரர்களுக்கு நினைவு தினம் நடத்தி விருந்து மண்டபங்களில் கூத்தடித்த மகாஜனங்கள். மெகாவீரனுக்கு கண்ணீர் விடக் கூடத் தயங்குவதன் காரணம் தான் என்ன

இதற்கு மரணம் பற்றி இவர்கள் கொண்டிருக்கும் கருத்தைப் பற்றிச் சற்றே சிந்திப்பது சாலவும் சிறப்புடைத்து, புலிகள் இயக்கத்தில் தலைவரின் பின்னால் சேர்ந்தவர்கள் எல்லோருக்குமே. மனித இருப்பும் பெருமையும் வாழ்வில் அல்ல. மரணத்தில் தான் என்பதே அரிச்சுவடியாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறது, வாழ்வை விட மரணமே பெருமை மிக்கதாகவும் அந்த உயிரை தன் தலைவனுக்காக இழப்பதைத் தவிர வேறெந்தப் பெருமையும் இல்லை என்பதே இயக்கத்தின் பாலபாடம், ஆனால் மரணத்திற்கே பயப்படாத மாவீரர்களை எல்லாம். பொட்டம்மானின் சித்திரவதைக்கூடத்தில் துரோகி என்று பட்டம் சூட்டினால் நடத்தப்படும் கவனிப்பு பயப்பட வைத்தது என்பது தான் தலைவரின் இருப்புக்கான காப்புறுதியாக அமைந்தது,

தான் இறந்தாலும் தனக்கு லெப்டினன்ட் கேணல் பட்டம் கிடைக்கும் என்பதும் தனக்கு சுவரொட்டி ஒட்டப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும் என்பதும் தனக்கு என ஒரு படுக்கை மாவீரணு துயிலும் இல்லத்தில் ஒதுக்கப்படும் என்பதும் என வெறும் அர்த்தமில்லாத ஒரு சிந்தனை பலிக்கடாக்களாக பயன்படுத்தப்பட்ட போராளிகளின் மூளைக்குள் திணிக்கப்பட்டிருந்தது, தன் முடிவுக்கான காரணம் என்ன என்பதையோ. அதனால் விளையக் கூடிய பயன் என்ன என்பதையோ மரணிக்கும் போராளி உணர்ந்து கொள்ள முடியாதபடிக்கு மூளைச்சலவை நடத்தப்பட்டிருந்தது, 25 ஆயிரம் பேர் வரைக்கும் அந்த பட்டியல் நீளும் வரைக்கும் இந்தச் சிந்தனையை யாருமே கேள்விக்குள்ளாக்கவில்லை, கேள்விக்குள்ளாக்கிய சிலரும் துரோகிகளாக்கப்பட்டு. வரலாற்றில் மறைக்கப்பட்டனர்,

அந்த மரணங்கள் எல்லாம் துயரத்தின் நினைவுகளாக இல்லாமல். விடுதலைக்கு இடப்பட்ட உரமாக. விதைக்கப்பட்ட விதைகளாக கதை விடப்பட்டு தலைமை தன் ஆடம்பர வாழ்க்;கையைத் தொடர்ந்தது, இறந்த போராளிகளின் உடல்கள் வீடுகளுக்கு கொண்டு வரும்போது கூட. பெற்றவர்கள் கூட கண்ணீர் விட்டுக் கதறி அழ முடியாதபடிக்கு மிரட்டப்பட்டார்கள், கணவனையும் மூத்த புதல்வனையும் இழந்த பின்னால். தன் பால் குடிப் பாலகனை வேலோடு போருக்கு அனுப்ப வேண்டும் என்று தாயை எதிர்பார்க்கும் புறநானூற்றுத் தலைவன் அல்லவா?

விடுதலைக்குத் தடையாக இருந்ததாகக் காட்டப்பட்ட தலைவர்களும் விடுதலைப் பயிர் விளைச்சலுக்கு தடங்கலாய் இருந்த களைகளும் என கதை விட்டு. போட்டுத் தள்ளத் தொடங்கிய போதெல்லாம் அந்த மரணங்கள் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி. துரோகிகளின் அழிப்பு ஒரு பெருமகிழ்வுக்குரிய. கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாக ஆக்கப்பட்டதிலிருந்தே தமிழினம் தன் பகுத்தறிவை இழந்து ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமாக ஆகி விட்டது,

மரணம் தன் துயரத் தன்மையை இழந்து ஒரு வெறும் கேலிக்கூத்தாகவே புலிகளின் தலைமையால் ஆக்கப்பட்டிருந்தது, ஆனால் இந்த மரணங்களால் பெற்ற பயன்களுக்கிடையில் தங்கள் மரணம் பற்றி சிந்திக்க மறந்து போனார்கள்,

தங்கள் இயக்கத்தில் இருந்தவர்கள் மரணிக்கும்போது கூட அதன் அரசியல் லாபம் தான் முக்கியமாக இருந்ததே தவிர. ஒரு உயிரின் அழிப்பு தரும் துயரம் பற்றி புலிகளுக்கு என்றுமே அக்கறை இருந்ததில்லை,

ஆரம்ப காலங்களில் மரணங்கள் சுவர்களில் அஞ்சலி நோட்டீஸ்களாக வருடக் கணக்கில். சாணி எறியாத எம்,ஜி,ஆர் பட நோட்டீஸ் கணக்கில் சாயம் இழந்து போகும் வரைக்கும் காட்சியளித்தன, மாவீரன். வீரமரணம் என்றெல்லாம் நடந்த அந்தக் கூத்து ஆட்சேர்ப்புக்கான ஒரு வழி தான்,

அதே புலிகள் மாத்தயாவின் கைதும் மரணமும் என இயக்கத்தின் நாறிக் கிடந்த உள்நிலையை மறைப்பதற்காக அடக்கி வாசித்தனர், உட்கொலைகள் எல்லாமே இப்படி வெளியில் தெரியாமல் பகிரங்க துரோக அறிவிப்புகள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன,

ஆனால் எதிரியின் கையால் மறைந்த தலைவர்களின் மரணத்தை வெளியில் அறிவிப்பது கூட. அது எதிரிக்குப் பெருமை சேர்க்குமா அல்லது அதை வைத்து எதிரியைக் குறை கூறலாமா என்பதை வைத்தே தீர்மானிக்கப்பட்டது, மரண அறிவித்தல் என்பது புலிகளைப் பொறுத்த வரைக்கும் ஒரு லாப லட்டக் கணக்கே?

தமிழ்ச்செல்வனின் மரணத்தில் ஒரு சமாதானப் புறாவைக் கொன்றதாக அரசை இக்கட்டில் மாட்டி அரசியல் லாபம் தேடுவது தான் முக்கியமான நோக்கமாக இருந்ததே தவிர தமிழ்ச்செல்வனின் இழப்புப் பற்றிய துயரம் யாருக்கும் இருந்ததில்லை, அதே தமிழ்ச்செல்வன் தாக்குதலில் காயப்பட்டு பின்னால் காலம் சென்று இறந்திருந்தால். அது அரசுக்கு பெருமை சேர்க்கும் என்ற காரணத்தால் மறைக்கப்பட்டிருக்கும்,

கடைசியாக நடந்த ஓய்ந்த அலைகள் யுத்தத்தில் கொல்லப்பட்ட முக்கியஸ்தர்களின் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது மட்டுமல்ல. அவர்களுக்கு வழங்கப்படும் சம்பிரதாய பூர்வ பதவி உயர்வுகள் கூட வழங்கப்படவில்லை, தீபன் உட்பட்ட அறுநூறு போராளிகள் ஈவிரக்கமின்றி வேட்டையாடப்பட்ட போது கூட. அந்தத் தகவல் எதிரிக்கு உளவியல் ரீதியாக உற்சாகத்தைக் கொடுக்கும். ஆதரவாளர்கள் சோர்ந்து போவார்கள். வெளிநாட்டு வீதிப் போராட்டங்கள் முடங்கிப் போய் விடும் என்ற அரசியல் கணக்கில் அமுக்கப்பட்டன,

சரியோ தவறோ. தங்கள் வாழ்நாளையே போராட்டத்திற்காக அர்ப்பணித்தவர்களின் தியாகம். தாங்கள் இறந்தாலும் தங்கள் இறப்புக் கொண்டாடப்படும் என்ற எண்ணத்தில் வளர்க்கப்பட்ட புலி இயக்க உறுப்பினர்களின் உயிரிழப்பு அரசியல் லாப நட்டம் பார்த்து வெளியில் விடாது மறைக்கப்பட்டதில் இருந்தே மரணம் அடைந்தவனை நன்றியோடு நினைவு கூர்கின்ற அடிப்படைப் பண்பே புலிகளுக்கு இல்லை என்பது தெரிய வரும், தங்கள் அழிவில் எதிரிகள் வெற்றி கொண்டாடி விடக் கூடாது என்பதற்காக புலிகள் எதையும் செய்யத் தயாராக இருந்தார்கள், இதற்காக கசிந்து வந்த உண்மைகளைக் கூட மறைப்பதற்காக தங்கள் பிரசார இயந்திரங்களை முடுக்கி விட்டு உண்மையை மறைக்கும் குருரத் தனம் புலிகளுக்கு மட்டுமே இருக்கும்,

உயிரிழக்கப் போகிறோம் என்று தெரிந்து கொண்டே போய் வெடித்துச் சிதறப் போகும் போராளிகளுடன் சிரித்துக் கொண்டே குறூப் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் குருரத் தனத்தை விட மோசமானதாய் வேறென்ன இருக்க முடியும்

இதையும் விட. தங்களுக்கு அதற்கான தகுதி இருப்பதாகக் காட்டிக் கொள்ளவும் தங்களுக்கு வால் பிடித்தவர்களைக் குழூpப்படுத்தவுமாக அறிமுகப்படுத்திய மாமனிதர். நாட்டுப் பற்றாளர் கோமாளித்தனங்கள் இன்னொரு புறத்தில், இதையெல்லாம் நம்பி தங்களுக்கும் அந்தப் பாக்கியம் கிட்ட வேண்டும் என்று வன்னி நோக்கித் தவமிருந்த கூட்டம் எத்தனை காசியில் போய் இறந்தால் கைலாசம் போகலாம் என்று காசி யாத்திரை போகும் பக்தர்கள் போல. வீரசுவர்க்கம் அடைவதற்காக பிணமாகவே வன்னிக்கு பாடை யாத்திரை போனவர்கள் எத்தனை

மரணத்தைக் கேலிக் கூத்தாக்கியதற்கு இதை விடச் சாட்சியங்கள் வேறெதற்கு

இன்று இந்த மரணம் முடிந்து இத்தனை நாட்களாகியும் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவித்து. ஒரு இறந்த மனிதனுக்கு செய்ய வேண்டிய இறுதிக் கிரியைகளும் கிருத்தியங்களும் செய்து ஆன்மா சாந்தியடைந்து அமைதியில் இளைப்பாற வேண்டிக் கொள்ளாமல். இறந்த மனிதனை தொடர்ந்தும் உயிரோடு வைத்திருக்க முயலும் குருரத்தனத்தை எந்த வகையில் சேர்க்க முடியும்

இதற்குக் காரணம் இருக்கிறது,

இப்படி எல்லாம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் (சுழற்சி முறை). ஆர்ப்பாட்டம். வழிமறிப்பு என்றெல்லாம் இன அழிப்புக் கூச்சல் போட்டதெல்லாம் மக்களுக்காகவா இல்லையே. தலைவருக்காகத் தானே என்ற நிலையில். அந்தத் தலைவன் இறந்து போனான் என்ற உண்மையை இவர்களால் எப்படி ஜீரணிக்க முடியும்

இனம் அழிக்கப்படுகிறது என்று கூச்சல் போட்டவர்கள். புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திச் சுட்டுக் கொன்ற மக்கள் இன்று அகதிகளாகவேனும் உயிர் வாழ்கிறார்களே என்று ஆறுதல் அடையாமல் கொந்தளிப்பதன் காரணமே. இவர்களின் முழு நோக்கமுமே தலைவரைக் காப்பாற்றுவதில் தான் என்பது தெளிவாகும், அந்த முயற்சி படுதோல்வியில் முடிந்த அவமானத்தை இவர்களால் எப்படித் தாங்க முடியும்

தலைவர் சூரிய தேவன். அவரை நெருங்கியவர்கள் கருகிச் சாம்பலாவார்கள் என்று விசுவசித்தவர்களால் இன்று தலைவர் இறந்த பின்பும் அவமானப்படுத்தப்பட்டு அரைகுறை நிர்வாணப் பிணமாகக் காட்சியளித்தார் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

தலைவர் உயிரோடு பிடிபட மாட்டார். குப்பி கடிப்பார் என்றெல்லாம் கற்பனைக் கோட்டை கட்டியவர்களால் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எதிரியின் காலடியில் மண்டியிட்டார் என்ற உண்மையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்

விடுதலைப் புலிகள் வீழ்வதுமில்லை என்றெல்லாம் வசனம் பேசியவர்களால் தங்கள் தளபதிகள் நாய்களைப் போலச் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்ததை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

தனியான அரசு. நீதிமன்றம். வீதிப் போக்குவரத்துப் பொலிஸ் என ஆகாயத்தில் தமிழீழக் கற்பனைக் கோட்டை கட்டி சுய இன்பம் கண்டவர்களால். தங்கள் கனவுகள் சில கணங்களிற்குள்ளேயே தகர்ந்து போனதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்

ஒருவேளை இதையெல்லாம் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியும், ஆனால் இவர்களால் ஒன்றை மட்டுமே தாங்கிக் கொள்ள முடியவில்லை,

தங்கள் தலைவன் இறந்த துயரத்தையும் இவர்களால் தாங்க முடியும், தளபதிகள் மண்ணான வேதனையையும் இவர்களால் மறக்க முடியும்,

ஆனால். தங்கள் எதிரிகள். துரோகிகள் எல்லாம் தங்களின் தலைவனின் உயிரிழப்பில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்ற நினைப்பை மட்டும் இவர்களால் தாங்க முடியவில்லை, இத்தனை நாளும் அடித்த பந்தாவிற்கு இன்று அவமானம் பிடுங்கித் தின்ன. இவர்கள் இன்று வரைக்கும் பகிரங்கமாகவே தங்கள் தலைவனுக்காக கண்ணீர் விட்டு அழாமல் இருப்பதன் காரணம் இது தான்,

ஐயா. கொலைகளைக் கண்டு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக நாங்கள் பகுத்தறிவைத் தொலைத்தவர்கள் இல்லை, மனித இறைச்சி வேகும் பானையைச் சுற்றி நடனமாடும் காட்டு மிராண்டிகள் இல்லை, பிணம் தின்னிப் பசாசுகள் போல கொலைகள் நடக்கும்போதெல்லாம். வானலையில் வந்து. உவங்களைப் போட்டால் தான் ஈழம் கிடைக்கும் என்று பறை சாற்றும் பட்டிக்காட்டுப் பாமரத்தனம் எங்களுக்கு இல்லை,

ஒரு மரணத்தினால் வரும் இழப்பின் வேதனை எங்களுக்குத் தெரியும், அதிலும் சம்பந்தமே இல்லாத மனைவியும் மகளும் அப்பாவிக் குழந்தையும் நாய்கள் போலக் கொல்லப்பட்டு அடையாளமே இல்லாமல் மறைக்கப்பட்ட மிருகத்தனத்தின் கொடுமையும் எங்களுக்குத் தெரியும், வாழும் காலத்தில் செய்தது சரியோ. தவறோ. சரணடைந்தவர்களுக்கு சர்வதேச விதிகளின்படி பாதுகாப்பு அளித்து. பின்னால் விசாரணைகளுக்கு உட்படுத்தடும் பாரம்பரியம் இல்லாமல் இவர்கள் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டதற்கு காரணமான சூத்திரதாரிகள் மனிதத்திற்கு எதிரான. யுத்தக் குற்றங்கள் புரிந்த குற்றச்சாட்டில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அளவுக்கு எங்களுக்கு மனிதாபிமானமும் உண்டு,

கடவுள். கர்மம். காலம். விதி என்று எதிலெல்லாம் நம்பிக்கையோ. அது அளித்த தண்டனை. பரிசு என்றெல்லாம் குத்திக் காட்டி துயர் அடைந்தவர்களைப் புண் படுத்தும் அளவுக்கு நாங்கள் மனிதம் சிதைத்து வந்தவர்கள் இல்லை,

தலைவர் போனால் என்ன உங்களுக்குத் தானே தேசியத் தலைவி ஜெயலலிதா இருக்கிறார், உலகெங்கும் இருந்து அவருக்கு வாழ்த்து அனுப்பிய தமிழர் அமைப்புகள் அடங்காப்பற்று இளையோரைக் கட்டி அனுப்ப. ஜெயலலிதா தலைமையில் உங்கள் போராட்டம் தொடரட்டும் என்று கேலி செய்யும் அளவிலும் நாங்கள் இல்லை,

எங்கள் அப்பாவித் தமிழ் மக்கள் அழியும் போது ஏற்பட்ட அதே மனவேதனை தான் உங்கள் தலைமையின் அழிவிலும் எங்களுக்கு உண்டு, தன் பதவி வெறிக்காக ஒரு இனத்தின் எதிர்காலத்தையே நிர்முலமாக்கிய கொடுங்கோலனாக இருந்தாலும். எதிரிக்குக் கூட இப்படியான முடிவு இருக்கக் கூடாது என்று நினைக்கும் பண்பு எங்களுக்கு நிறையவே உண்டு,

ஆனால். இந்த வேதனையிலாவது உங்களுக்குப் பகுத்தறிவு திரும்புமா என்பது தான் இன்று எங்களை வாட்டுகின்ற வேதனை, மற்றவர்களின் உயிரிழப்பில் கொண்டாட்டம் நடத்தி. உங்கள் உயிரிழப்பில் லாபலட்டக் கணக்குப் பார்க்கும் உங்களுக்கு ஒரு உயிரின் மதிப்பும் அதன் பிரிவு தரும் வேதனை என்ற இயற்கையான மனித உணர்வும் இப்போதாவது புரியுமா என்பது தான் எங்கள் கேள்வி,

சும்மா கிடந்தவனை சூரியதேவன் ஆக்கி. உங்கள் கண்களையே உங்கள் கைகளால் குத்தி. கண் கெட்ட பின்னால் சூரிய நமஸ்காரம் செய்யும் உங்களுக்கு இந்த நேரத்திலாவது ஒரு உயிரின் மதிப்புப் புரிய வேண்டும்,

தன் தலைவன் இறந்து விட்டான். அவனை நினைத்து அழுவதற்கான உரிமையை உங்களிடம் காலில் விழுந்து கெஞ்சி யாசித்துப் பெறவேண்டிய போதெல்லாம் நாகரீகம் கடந்து ஏளனப்படுத்திய உங்களுக்கு இனியாவது புத்தி வரவேண்டும்,

அவனால்தான் தலை நிமிர்ந்தோம் என்று நீங்கள் முழக்கமிட்ட உங்கள் தலைவன் உங்களை வாழ்நாள் பூராவும் தலை காட்ட முடியாமல் செய்துவிட்டுப் போயிருக்கிறானே,,,

தமிழன் செய்த பாவமும் பழியும் புலியோடு போய் முடியட்டும்,

அவனுக்காக அழுவதற்கான உரிமையை நீங்கள் யாரிடமும் கெஞ்சிப் பெற வேண்டிய நிலையில் இன்று இல்லை, நீங்கள் தாராளமாகவே உங்கள் கண்ணீர் வற்றிப் போகும் வரையில் அழலாம்,

அப்போது உங்கள் தலைவனுக்காக மட்டுமல்ல. இன்று உங்கள் தலைவன் புண்ணியத்தால் தங்கள் உரிமைகளை மட்டும் அல்ல. ஒரு நேர உணவைக் கூட தன் எதிரியிடம் யாசித்துப் பெற வேண்டிய நிலைக்கு வந்திருக்கும் எங்கள் ஈழத் தமிழர்களுக்காகவும் சேர்த்து அழுங்கள்?

நன்றி: தாயகம்
( Source: http://thenee.com/html/280509-1.html )

Read More...

Tuesday, May 26, 2009

ஜக்குபாய்


ராடன் டிவி தயாரிப்பில் ஜூனில் வெளியாக இருக்கிறது ‘ஜக்குபாய்’. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட அதே கதையில் சரத்குமார் நடித்திருக்கிறார்.

ஜோடியாக புதுமுகம் மதுமாலினியும் அவருக்கு மகளாக ஸ்ரேயாவும் நடித்திருக்கிறார்கள். படம் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவிலும் மலேஷியாவிலும் மட்டுமே படமாக்கப் பட்டிருக்கிறது. சரத்குமாரின் கேரியரில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். செண்டிமெண்ட்டும் ஆக்‌ஷனும் கலந்து சூப்பர் கலவையாக படத்தை கொண்டு வந்திருக்கிறார். கே.எஸ்.ஆர். படத்தின் ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர். ஜெமினி உட்பட கதாநாயகியாக பல படங்களில் நடித்த கிரண், இதில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார். அந்தப் பாடலை எழுதியிருப்பது நமது வலைப்பதிவர் கல்யாண்ஜி. அவர் எழுதியிருக்கும் பாடலின் பல்லவி என்ன தெரியுமா? ’ அச்சம் மடம் நாணம் - என்னை விட்டுப் போக வேணும்... நீ வா...! ஏ.ஆர்.ரஹ்மானின் பல படங்களில் உதவியாளராக பணி புரிந்து கொண்டே பாடல்களுக்கு குரல் கொடுத்திருக்கும் ரஃபி - இந்த ஜக்குபாய் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கவுண்டமணி வெளுத்துக் கட்டியிருக்கிறார், அப்பா மகள் செண்டிமெண்ட் ஆக்‌ஷன்(கனல் கண்ணன்) நிரம்ப இருக்கும் கதை(கே.எஸ்.ரவிகுமார்)...

சரத்குமாருக்கு இந்த முறை நிச்சயம் வெற்றி கூட்டணி என்று நினைக்கிறேன்!

Read More...

தமிழுக்குக் கோயில்!


செய்தி இது தான்: திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளபட்டியில் தமிழுக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் கோவில் கட்டப்படுகிறது. ( தினமலர், டைம்ஸ் பத்திரிகையில் வந்திருக்கிறது )

தமிழன்னைக்கு தினமும் தமிழின் உயிரெழுத்துக்களால் அர்ச்சனையும், பிரசாதமாக தேன், தினைமாவு, கனிகள் வழங்கப்படும் என்றும் விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் இசை, பா- புனைதல், இலக்கண வகுப்பு, தமிழ் வழிக்கலைகள் கற்றுத்தரப்படும். ஆண்டுக்கு ஒருமுறை தமிழ்திருவிழாவும், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை உலகளாவிய தமிழ் பெருவிழாவும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்கள்.

காலையில் இதை படித்துவிட்டு பா.ராகவன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ( அவரும் தமிழர் தானே ) எழுதிய பதிவு இது

தமிழன்னைக்கு தினமும் தமிழின் உயிரெழுத்துக்களால் அர்ச்சனை என்ற வரி என்னை யோசிக்க வைத்தது.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ,ஓ, ஔ, ஃ என்ற எழுத்துக்களை ராகமாக பாட போகிறார்களாம். இதைவிட


அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய்
உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரியவைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாயம்மா பேச வைத்தாய்
எண்ணும் எழுத்தெங்கும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளியவைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி


என்ற சரஸ்வதி சபதம் படத்தில் வரும் பாடலை பாடலாம். அட்லீஸ்ட் மக்கள் ரசிப்பார்கள்.


கடைசியாக ஒரு சந்தேகம்:

ஏன் தமிழை தமிழன்னை என்று சொல்லுகிறோம் ? ஏன் தமிழ்தந்தை என்று சொல்லுவதில்லை ?


Read More...

Monday, May 25, 2009

பௌர்ணமி

"நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உங்கள் முன்னால்..." என்ற அறிவிப்போடு வாணி மஹாலில் கே.பாலசந்தரின் பௌர்ணமி நாடகத்தை சக வலைப்பதிவர் ஒருவர் ஓசி டிக்கேட்டில் அழைத்துக்கொண்டு போனார்.

வாணி மஹால் ஒரு பெரிய ஹாலாக மாறியிருந்தது. இவ்வளவு பெரிய ஹால் எந்த பில்டர் இந்த மாதிரி கட்டித் தருகிறார்கள் என்று கேட்கணும். நாடகத்தில் சுவருடன் சேர்ந்து பூத்தொட்டி ஆடும் செட்டை பார்த்த நமக்கு இந்த செட் சினிமாத் தனமாக நல்லா இருந்தது.

ஒரே ஹாலில் முழு நாடகமும் நடக்கிறது. மிருதங்கங்களுக்கு வைப்பது மாதிரி நான்கு மைக் கீழே வைத்திருந்தார்கள். (முன் வரிசையில் வந்திருந்த கமல், கவுத்தமிக்கு தெரிந்திருக்கும் )


ஒரு பௌர்ணமியில் தொடங்கி அடுத்த பௌர்ணமியில் முடிவடையும் கதை. நாடகத்தின் பெயரும், அதில் நடிக்கும் நாயகியின் பெயரும் பௌர்ணமி. ரோஜா சாயல் கதை - "பாகிஸ்தான் தீவிரவாதியை விடுவித்தால் தான், அப்பாவி இந்தியனை(சாப்ட்வேர் என்ஜினியர், பிரேம்சாய்) விடுவிப்போம்" என்கிறது பாக் அரசு. அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் தான் கதை.

சாப்ட்வேர் என்ஜினியரை பிரிந்து மனைவி பௌர்ணமி (ரேணுகா) பதைபதைக்கிறார். மற்றவர்கள் சுமாராக பதைபதைக்கிறார்கள். நாடகத்துக்கு இது போறும் என்று நினைத்துவிட்டர்கள் என்று நினைக்கிறேன். ரேணுகாவின் மாமியார் எப்ப எந்த சீனில் வந்தாலும் யாருக்காவது காப்பி கொடுத்துவிட்டு போய்விடுகிறார். இவர் தான் "எங்கே பிராமணன்" சீரியலில் சமையல் செய்யும் மாமியாகவும் வருகிறார். அந்த சீரியலில் போட்ட காப்பியை இங்கே தருகிறாரோ என்று நினைக்க தோன்றுகிறது.

ரேணுகா (வழக்கம் போல்) துடுக்காக வசனம் பேசுகிறார், ஓவர் ஆக்ஷன் என்று கூட சொல்லலாம். எல்லாவற்றையும் கச்சிதமாக செய்கிறார் - பாலசந்தரின் பழைய புதுமை பெண் !

சாப்ட்வேர் என்ஜினியரின் தம்பியாக வரும் சுந்தர் எங்கோ பார்த்த மாதிரி ஒரு கேரக்டர். கையை நீட்டி நீட்டி ரொம்ப சத்தம் போடுகிறார், அடிக்கடி மீடியாவிற்கு போவேன் என்று அரசு அதிகாரிகளிடம் பூச்சாண்டி காண்பிக்கிறார். பாத்திமா பாபுவிற்கும் இவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. ரேணுகாவிற்கு பிறகு மனதில் நிற்பவர் இவரே.

சாப்ட்வேர் என்ஜினியர் தங்கையாக பாமா (காவ்யா, அதாங்க பாம்பு மாதிரி பொட்டு வைத்துக்கொண்டு வருவாரே அவரேதான்) எப்ப பார்த்தாலும் கையில் செல்போனுடன் இருக்கிறார். - தற்காலத்து அல்ட்ரா மாடர்ன் பெண்ணாம். தன் மாமியாராக வரப்போகும் பூங்கிழவி சாரி பூங்குழலி ( ஃபாத்திமா பாபு ) எப்போது வீட்டுக்கு வரும் போதும், காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார். எந்த வீட்டீலும் இது மாதிரி நடக்காததால் எல்லோரும் சிரிக்கிறார்கள். ஃபாத்திமா பாபு எல்லா சீன்களிலும் விதவிதமாக டிரஸ் செய்து வருகிறார். எப்படி சீக்கிரம் டிரஸ் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இவர் பாடம் நடத்தலாம். பாகிஸ்தானில் ரேணுகாவின் கணவர் சித்திரவதை அனுபவித்துக்கொண்டு இருக்க இவர்கள் இங்கே பதட்டப்படாமல் காலில் விழுந்து காமெடி செய்வது நல்ல தமாஷ்.

நாடகத்தில் அடிக்கடி ஹிந்தி பேசி, Waist Coat அணிந்து வந்தால் ... ? டெல்லியிருந்து வருகிறார் என்று அர்த்தம். அப்படி வருபவர் தான் ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் சந்திரகாந்த் ( பூவிலங்கு மோகன் ) டெல்லியில் நல்ல செல்வாக்கு உடைய இவர் பிரதமருடன் பெளர்ணமி பேச ஏற்பாடு செய்கிறார்.

கடைசியில் பெளர்ணமி பிரதமரிடம் "கணவருடன் நாடே முக்கியம், இந்த exchange offer வேண்டாம்" என்று சொல்லிவிடுகிறார். ஏதாவது நல்லது நடக்காதா என்று ஏங்கி காத்துக்கொண்டிருக்கிறார் பௌர்ணமி.

ஜெய்ஹிந்த்!


பௌர்ணமி 'பால'சந்திரனாக இருக்கிறது.

( வாணி மஹாலில் உள்ளே நுழையும் போது, ஃபோட்டோ எல்லாம் எடுக்க கூடாது என்று கராராக டிக்கெட் கொடுப்பவர் சொன்னார். அதையும் மீறி எடுத்த ஃபோட்டோக்கள் இவை )













Read More...

Sunday, May 24, 2009

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக விடுதலைப் புலிகள் உறுதி செய்துள்ளனர்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 17 ஆம் தேதி இராணுவத்துடன் நடைபெற்ற நேரடி மோதல்களில் கொல்லப்பட்டுவிட்டதை, அந்த அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பதமநாதன் தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் ஜனநாயக வழியில் தாங்கள் போராடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

( செய்தி: பிபிசி )
மே 25 முதல் ஒரு வாரம் விடுதலைப்புலிகள் துக்கம் அனுசரிக்க வேண்டுகோள் விடுதத்துள்ளார். மேலும் இந்த நேரத்தில் "restrain from harmful acts to themselves or anyone else in this hour of extreme grief" என்று சொல்லியுள்ளார்.

நாளை வைகோ, திருமா, பழ.நெடுமாறன் போன்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. நக்கீரன் வேறு ஏதாவது கவர் ஸ்டோரி ரெடி செய்வார்கள்.


அது தொடர்பாக பழ.நெடுமாறன் அறிக்கை இங்கே

செல்வராசா பத்மநாதனின் அறிவிப்பு மன்னிக்க முடியாத துரோகம் ஆகும் - வைகோஅறிக்கை

Read More...

சென்னை அணியின் தோல்விக்கு காரணம - இன்பா

இட்லிவடையில் தொடர்ந்து வரும் சூடான அரசியல் பதிவுகளுக்கு இடையே அரைகுறையாய் ஆடினாலும் அரையிறுதிவரை சென்று பெங்களுரு அணியிடம் உதைவாங்கி திரும்பியிருக்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் பற்றிய விமர்சனம்.


ஹைய்டன் : வெல்டன் என்று ஒரு வார்த்தையில் சொல்லலாம் அரையிறுதியை தவிர மற்ற எல்லா போட்டிகளிலும் ஆடிய இவரை.

ரைனா : 'ரன் ரெயினா' என்று சில போட்டிகளில் மட்டும் சொல்லவைத்தார். முக்கால்வாசி போட்டிகளில் கோடை 'ரெயின்' ஆனார்

பாலாஜி : வேகமாக ஓடிவந்து, நிதானமாக 'பேட்டை' நோக்கி பந்து விசினார். தோல்விக்கு இவர் முக்கிய பங்கு வகித்தார். பெயரில் 'லட்சுமி(!) ' இருப்பதாலோ என்னவோ தோனி இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து எரிச்சல் மூட்டினார்.

ஜேகப் ஓரம் : ஜேகப் 'ஓரம்போ' என்று இவருக்கு பெயர் வைத்திருக்கலாம். எதற்கு அணியில் இருக்கிறோம் என்று இவருக்கு கடைசி வரை தெரியவில்லை. இவரை தேர்வு செய்தவர்களுக்கும் தெரியவில்லை.

ஜகாதி : ஆடிய முதல் போட்டியில் 'ஜிகாதி' போன்று செயல்பட்டவர் பின் சதாம் போன்று எதிரணியிடம் சரண் அடைந்துவிட்டார்.

முரளிதரன் : முரளி 'தரம்' . அணியில் இருந்த ஒரே ஒரு பௌலர்.

தியாகி : சரியான பெயர் வைத்திருகிறார்கள் என்பதுபோல துவக்க ஓவர்களில் ரன்களை 'தியாகம்' செய்தார்.

ஆல்பி மோர்கல் : காலை 'வாருகல்' . ஒரு நல்ல ஆல் ரௌண்டர் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவர் கடைசியில் 'வைகோ' பணியில் பார்ம் அவுட் ஆகி கவுத்துவிட்டார்.

பத்ரிநாத் : சரியான 'உதிரி'நாத். ஓடி ஓடியே ரன் எடுக்கும் இவர் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும்தான் லாயக்கு.

பர்திவ்படேல் : வேகபந்து வீசும்போது மட்டும் 'பளார்' படேல் ஆகி, சுழல் பந்து
வரும்போது 'பரிதாப' படேல் ஆகிவிடுகிறார்.

மகேந்திர சிங்க் தோனி : சரியான திட்டமிடல் இல்லாதது, சூழ்நிலைக்கு ஏற்றதுபோல அணியை தேர்வு செய்யாதது, தன் பலம, பலவீனம் அறியாதது, அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை போன்ற காரணங்களால் 'கேப்டன்' தோற்றுவிட்டார். (கவனிக்க இரண்டு 'கேப்டன்'களும் ). அரையிறுதியில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல், ஐந்து ஓவர்களை வீணடித்தார்.

வெற்றிகோப்பை 'மிஸ்' ஆனதற்கு அடிப்படை காரணம
தோனியின் சென்னை 'மிஸ்' ஸிங்தான்.


- இன்பா

Read More...

சி.ஐ.டி. செயற்குழுக்கூட்டம்

சர்ச்சைக்குரிய டி.ஆர். பாலு, ஆ. ராசா, ஆகியோரை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள பிரதமர் திரு. மன்மோகன் சிங் முன் வந்துள்ள போதிலும், அவர்களுக்காக கருணாநிதி கேட்கும் இலாக்காக்களை ஒதுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



இதனால் மத்திய அமைச்சரவையில் தி.மு.க. சேர்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசில் கடந்த முறை வளம் கொழிக்கும் இலாக்காக்களை பெற்றிருந்த தி.மு.க, இந்தமுறையும் அதே இலாக்காக்களை தரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை நிர்ப்பந்தம் செய்து வருகிறது. ஆனால், இம்முறை மக்களவையில் பெரும்பான்மைக்கு தேவையான எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளதால், கருணாநிதியின் மிரட்டலுக்கு காங்கிரஸ் மேலிடம் பணியவில்லை என கூறப்படுகிறது. வளம் கொழிக்கும் தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை, தொலைத் தொடர்பு, சுற்றுச்சூழல், மின்சாரம் ஆகிய இலாக்காக்களை தி.மு.க. கோருவதாகவும், அதற்கு காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்து விட்டதாகவும் தெரிகிறது. டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால், அவர்கள் இருவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க முதலில் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், கருணாநிதியின் நிர்பந்தம் காரணமாகவே அவர்களை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள பிரதமர் திரு.மன்மோகன் சிங் தற்போது முன்வந்துள்ளதாவும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய நெடுஞ்சாலை பணிகளில் காட்டிய மெத்தனம், லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தீர்வு காண்பதில் அலட்சியம் போன்ற காரணங்களால் டி.ஆர்.பாலுவுக்கு மீண்டும் தரைவழிப்போக்குவரத்து மற்றும் கப்பல் துறையை ஒதுக்கவும், ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசா சிக்கியதால் அவருக்கும் முன்னர் வகித்த இலாகாவை ஒதுக்கவும் பிரதமர் விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் தொழில்நுட்பத் துறையை தி.மு.க.வுக்கு வழங்க பிரதமர் முன் வந்தபோதிலும், ராசாவுக்கு அந்த துறை வழங்கக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் அறிவித்தபடி, தி.மு.க., செயற்குழுக்கூட்டம் நேற்று முன்தினம் நடக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக, சென்னை சி.ஐ.டி., நகரில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டில் நேற்று காலை முதல் இரவு முழுவதும் சிஐடி நகர் வீட்டில் கருணாநிதியும், கட்சியின் முக்கிய தலைவர்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் யாருக்கு என்ன என்று விவாதித்தகாக தெரிகிறது.

டி.ஆர்.பாலு, ராசா, தயாநிதி மாறன் மற்றும் அழகிரி என்று நான்கு பேர் இருக்க மூன்று மந்திரி பதவிகளை எப்படி பங்கு போடலாம் என்று கருணாநிது குழம்பி போய் உள்ளார் என்று தெரிகிறது.

குடும்பத்துக்கு ஒரு மந்திரி பதவி தான் கொடுக்க முடியும் என்று கருணாநிதி விரும்புவதாக தெரிகிறது ஆனால் அந்த ஒருவர் யார் என்பது தான் பிரச்சனை.

அழகிரி, தயாநிதி இருவரும் தங்களுக்கு கேபினட் தான் வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. அழகிரிக்கு கேபினட் அந்தஸ்து வழங்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி கூறுவதாக தெரிகிறது.

கருணாநிதியின் பிரச்சனைனை தீர்க்க தனி மந்திரி பதவி ஒன்றை உருவாக்கலாமா என்று மன்மோகன் சிங் தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Read More...

Friday, May 22, 2009

பதில் இல்லாத கேள்விகள் !

இட்லிவடை அண்ணாச்சீ!
It is high time that you float a "கேள்வி-பதில்".

இல்லென, அட்லீஸ்ட் "கேள்விகள்" மட்டுமாவது.
மிச்சத நாங்க பாத்த்க்கறோம்!
- மானஸ்தன்

கீழே கேள்விகள்..

1. டெல்லியில் தற்போது நடைபெறும் நாடகத்துக்கு ஏற்ற பழமொழி என்ன ?

2. பாக்கியராஜ் டெல்லியிலிருந்தால் என்ன குட்டி கதை சொல்லியிருப்பார் ?

3. இனி கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதுவாரா, அல்லது மரங்களின் மீது கருணை கொண்டு எழுதாமல் இருப்பாரா ?

4. அழகிரி, கனிமொழி, தயாநிதி என்று ஏன் குடும்பத்துக்கு மட்டும் மந்திரி பதவி தருகிறார்( அல்லது தரப் போகிறார் ) ? (உமா போன்ற) திமுக தொண்டர்கள் கடைசி வரை தொண்டர்கள் தானா ? சங்கமத்தில் கூத்து நடத்தவாவது சான்ஸ் கிடைக்குமா ?

5. பிரதமர் நீளமாய் போட்ட லக்ஷ்மன் ரேகாவினால் இனி பாலு ராமர் பாலம் கட்ட முடியுமா ? பாலு வீட்டில் கேஸ் தீர்ந்து போனால் இனி யாருக்கு ஃபோன் போடுவார் ?

6. காங். சமரச முயற்சிக்கு கலைஞரை சந்திக்க சென்னை வரும் குலாம்நபி ஆசாத்துக்கு கலைஞர் வீட்டில் காப்பி கொடுப்பார்களா இல்லை ச்சாயாவா ?

7. ஏன் குறிப்பிட்ட இலாகா ஒதுக்கீட்டில் திமுக இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது ? காவிரி, முல்லை பெரியார் பிரச்சனையை தீர்க்க தண்ணீர் வளம் போன்ற இலாகாவை ஏன் கேட்டு பெறக்கூடாது ?

8. வெளியிலிருந்து ஆதரவு என்றால் என்ன ? விளக்கவும் ?

9. அ.ராசா தயாநிதி மீது குற்றச்சாட்டு வீசினார், தயாநிதி பதிலுக்கு வீசினார். ஆனால் மக்கள் இரண்டு பேரையும் தேர்ந்தெடுத்து திரும்பவும் டெல்லிக்கு அனுப்பியுள்ளார்கள் ஏன் ?

10. தலை நகர் சீர் அமைப்பு திட்டத்தில் டெல்லியில் பிச்சைக்காரர்களுக்கு தடை வருமா ?

பதில் பின்னூட்டதில் சொல்லாம். நல்ல பதிலுக்கு (சிலவற்றுக்கு)நிச்சயமாக பரிசு உண்டு( இந்த முறை சீக்கிரம் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன் )

Read More...

நேற்றைய தமிழ் செய்தி, இன்றைய ஆங்கில கார்ட்டூன்

பொதுவாக தொலைக்காட்சியை ரிமோட் மூலமும், அதில் உள்ள சுவிட்ச் மூலம் இயக்கலாம். சுவிட்ச் மூலம் இயக்க வேண்டுமென்றால் தொலைக்காட்சி அருகே செல்ல வேண்டும். ஆனால் ரிமோட் மூலம் இயக்கும்போது தூரத்தில் இருந்தே இயக்கலாம். அதே போல தான் தி.மு.க தலைவர் கருணாநிதியும் கோபாலபுரத்தில் இருந்துகொண்டே டெல்லியை இயக்கக் கூடியவர் - அமைச்சர் துரைமுருகன் ( ஜூலை 2008 )

Read More...

Thursday, May 21, 2009

திமுகவினர் நாளை ஏன் விமானத்தில் வருகிறார்கள் ?


மத்திய மந்திரிசபையில் தி.மு.க.வுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மந்திரி பதவி ஏற்க தி.மு.க. மறுத்து விட்டது. என்றாலும் காங்கிரஸ் கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரிக்க முடிவு செய்து உள்ளது.
இந்த பதிவு டைப் அடிக்கும் சமயம் குலாம் நபி ஆசாத் கலைஞருடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

சில மணி நேரம் முன்பு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிப்போம் என்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, கூறினார்.

நாளை காலை 10மணி விமானத்தில் திமுகவினர்( குடும்பத்தினர் என்று படிக்கவும் ) சென்னை திரும்ப உள்ளார்கள் என்று தெரிகிறது.

திமுகவினர் நாளை ரயிலில் வராமல் ஏன் விமானத்தில் வருகிறார்கள் ?

Ministerial berth மாதிரி ரயிலில் Upper Berth தான் வேண்டும் என்று அடம்பிடித்தால் ?

Read More...

Wednesday, May 20, 2009

Sri Lanka post-LTTE - Dr. Subramanian Swamy

Sri Lanka post-LTTE - Dr. Subramanian Swamy

The outcome of the recent elections in Tamil Nadu has been the defeat of the most faithful of the LTTE touts in India. These financial orphans of the LTTE have been thoroughly exposed because Tamilians do not care for the LTTE, contrary to media projections. The common joke today is that 'Puligal' (Tigers) have been reduced to 'Eligal' (Rats) because they (the LTTE) have had to hide in holes in the ground to try save themselves.

But the end of the LTTE does mean the end of Sri Lanka's human rights crisis. The Sri Lanka crisis is the consequence of a festering wound from the past, which however fortunately, is neither malignant nor cancerous. The wound that has festered had been originally inflicted by the tactics of the British imperialists when to administer the colony that Sri Lanka had become, they relied on the Tamils of the island for the purpose, and also brought to the plantations indentured Tamil labourers to exploit the fields.

But, instead of sincerely brokering peace between the Tamils and Sinhalas to rectify justified grievances, the Indian government under the leadership of Mrs. Indira Gandhi decided to train the Tamil militants including the LTTE in various camps in India.

But the LTTE was a disloyal renegade from the very first day. The irrationally jealous Prabhakaran leading the LTTE snared in the Jaffna jungles and got the leaders of other militant Tamil outfits assassinated, and soon in the vacuum, the LTTE emerged as the main and dominant militant organisation. In the classic pattern of guerilla organisations, the LTTE began to spread using the weapons of narco-terror and by buying influence using monetary means. The LTTE ferried Saddam Hussein's illegal shipments of crude oil in their tankers using Panamanian and other dubious flags, drug-running for Afghans and Thais, weapons trade for the Sicilian mafia from Palermo in Italy and even antique smuggling for the highly placed in India. It became, through the ill-gotten funds, a purchaser of weapons in the grey and clandestine markets. The Tamil diaspora whose families were in Jaffna were subject to extortion, while some others romanticised their proximity to the 'leader' and paid handsomely for it later. Indian politicians, academicians, journalists, lawyers, and retired diplomats began receiving donations for speaking up for the LTTE and for denouncing the opponents of the LTTE.

Rajiv Gandhi tried to rectify that. The Indian government dispatched a 100,000 troops to the northern areas of Sri Lanka to safeguard the Tamils and get implemented on the ground the 1987 Indo-Sri Lanka Accord signed by Rajiv Gandhi as Prime Minister and Jayewardene as President of Sri Lanka. The LTTE disinformation machine by now well established went on an over drive with salacious stories of the atrocities of the Indian army. Their Indian stooges held rallies and published booklets within India to discredit the IPKF. Rajiv Gandhi, by now beleagured by the Bofors scandal and the betrayal of the new President of Sri Lanka, Premadasa who had entered into a pact to fund the LTTE, agreed to withdraw the IPKF in a phased manner. However, RG lost his party's majority in the elections to Parliament in 1989, and his successor V P Singh whose allies openly supported the LTTE, immediately withdrew the IPKF. The LTTE, thus, was portrayed in the anti-India media as having "defeated" the world's third largest army, and thus acquired a larger than life image. It used its hero status with a vocal minority in Tamil Nadu who were the LTTE's large financial beneficiaries to build a network of supply chains within the Tamil Nadu state. They had access to hospitals for their injured cadre, supply of diesel, kerosene, and medicines for the Jaffna supporters, small arms manufacture units in Coimbatore, uniform stitching factory in Erode, and a modern wireless communication centre in Trichy. The second rank leaders of the LTTE traveled freely within the state in cars using the ruling DMK party flags to evade the police.

But the situation changed soon enough. The V P Singh government got toppled in 1990, and a government headed by Chandrashekhar took office. This author was the senior-most Minister in that government and also perceived as the architect of the new government formation. Rajiv Gandhi extended his party's support to the government. Within two months in office and under my supervision, the DMK government in the state was dismissed on the ground that there was collusion of the Chief Minister with the LTTE. The LTTE supply chain was thereafter destroyed.

The problem worsened for the LTTE with the declaration of mid-term elections to Parliament. The media hype, whether it was genuine, misinformed, or contrived disinformation, made out that Rajiv Gandhi would return with a majority in the elections, and become Prime Minister again. Having learnt of Rajiv Gandhi's unguarded remarks that he would "fix" the LTTE once he returned to office, Prabhakaran set into motion a plan to assassinate Rajiv Gandhi.

But Prabhakaran needed to obtain two things, to carry out his assassination plan successfully. First was to ensure that RG came to Tamil Nadu to be accessible to the LTTE assassins, and second, some people (as allies) highly placed in India, and so powerful that the blame for the assassination would not be pinned on the LTTE.

These two pre-conditions were understandable since trusted Tamil-speaking LTTE cadres could not move around secretly and freely anywhere in India except in Tamil Nadu and Pondicherry. Hence the assassination had to take place in Tamil Nadu.

But more importantly, seeing the popularity amongst Tamils of Chandrashekar government's decision to dismiss Karunanidhi's state government, the LTTE could ill-afford the stigma of Rajiv Gandhi's assassination. They had to have a powerful clique in India that could divert the investigative agencies from pursuing the LTTE as the suspects in the assassination.

The Rajiv Gandhi assassination is an important question of national security for Indians because the LTTE was a foreign terrorist organisation that killed our leader in our country, merely stating that because his policies were not to the LTTE's liking he had to be killed. Can we be safe if we allow such a terrorist organisation to strike roots in our neighbourhood and have a terror infrastructure than can vitiate the democratic politics of India with money, narcotics, and plain murder?

The LTTE from day one has been part of the problem of the Tamil-Sinhala conflict, and not a part of the solution. Part of the problem is the inability of the Sinhala majority to share power with the Tamil minority. Such a sharing can be best done in a Constitution with sufficient devolution --by replacing the present unitary Sri Lankan one with a quasi-federal Indian type or fully federal US type.

Tamils and Sinhalas are one people. They have the same DNA structure. There is thus no ethnic difference between them. They all had originated in the Indian mainland and today speak sister languages, Sinhala and Tamil, with a large vocabulary in common with Sanskrit and Pali, both Indian languages. Their scripts have both evolved from the Brahmi script. Thus, there is no fundamental linguistic difference either. Their religions, Hinduism and Buddhism believe in the same distinguishing and fundamental theology of darshan, re-incarnation and karma. In fact, Buddhism began as a reform movement of Hinduism and these reforms have been absorbed by Hinduism. Hence, there is also fundamentally no religious difference between a Sinhala Buddhist and Tamil Hindu.

The two communities grew apart during the colonial period because the Tamils had access to the British imperialist invaders, due to their earlier contacts with them on the Indian mainland. This gave the Tamils professional and educational advantages. The Sinhala majority upon getting independence used their brute majority to try and close the gap by undemocratic equalisation procedures and denying power to the Tamils by adopting a unitary constitution that had no safeguards for the Tamil minority. This of course backfired, in fact has landed Sri Lanka in to spiraling crisis.

The way out today, consistent with India's national security aims, is for Sri Lanka to immediately adopt a resolution in their parliament to implement a devolved constitution, and for India to assist liberally Sri Lanka since the LTTE insurgency menace is now finished off. The US, China and Israel, nations which can contribute for the implementation of this solution, must back India in this intervention. A word of praise for the resoluteness of President Rajapakse would also not be out of place. India must formally honour him for putting an end to the organisation that killed Rajiv Gandhi and so many democratic-minded leaders. At this hour I remember also Gamini Dissanayake who was murdered by the LTTE merely for promising us Indians that if he came to power in the Presidential Elections he would extradite Prabhakaran to India.

( Source: CNN-IBN )

Read More...

Tuesday, May 19, 2009

வடக்கு வாழ்கிறது - தெற்கு தேறுகிறது !

"கடந்த மே திங்கள் பத்தாம் நாள் சென்னை தீவுத்திடலில் தியாகத்திருவிளக்கு சோனியா காந்தியுடன் நான் கலந்து கொண்ட மாபெரும் பொதுக்கூட்டத்தில், "முன்பெல்லாம் வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது'' என்றிருந்த நிலை மாறி- இங்குள்ள அரசும், இந்திய மத்திய அரசும் இணக்கமான நிலை பெற்றிருப்பதால் இப்போது "வடக்கு வாழ்கிறது- தெற்கு தேறுகிறது" என்ற சிறப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான பட்டியலை விவரித்தேன்" - கலைஞர் அறிக்கை

தென்மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் தி.மு.க., வென்றுள்ளதால் மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக அழகிரி பொறுப்பேற்க உள்ளார். - செய்தி.

Read More...

Monday, May 18, 2009

முற்றும்!

விடுதலைப்புலிகளின் எழுச்சியும்- வீழ்ச்சியும்: 37 ஆண்டு கால போராட்ட வரலாறு

இந்தியாவின் தென்முனையில் கண்ணீர் துளிபோல இருக்கும் குட்டி நாடு இலங்கை.

சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மூர் இனத்தவர்கள் என்று பல்வேறு இனத்தவர்கள் வாழும் நாடு.

1948-ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து இலங்கை விடுதலை பெற்றது. அங்குள்ள சிங்களர்கள், தமிழர்கள் சுதந்திரக் காற்றை அனுபவிக்கத் தொடங்கினார்கள். ஆனால் பெரும்பான்மை இனமான சிங்களர்களுக்கு மட்டும் தமிழர்கள் மீது எரிச்சல் ஏற்பட தொடங்கியது.

ஆட்சி அதிகாரத்தில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துவதை அவர்கள் விரும்பவில்லை. இலங்கை பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நியமான உரிமைகளை பறித்தனர்.

கல்வி, வேலை வாய்ப்பு உள்பட பல விஷயங்களில் ஈழத்தமிழர்கள் ஓரம் கட்டப்பட்டனர். இது என்ன அநிநாயம் என்று ஈழத் தமிழர்களின் தலைவர்கள் கேள்வி கேட்டனர். அதை சிங்களர்கள் கண்டுகொள்ளவில்லை.

நம்ம ஊரில் மகாத்மா காந்தி சத்தியாகிரக வழியில் போராடி சுதந்திரம் பெற்று தந்தது போல, அங்கு ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் செல்வா உள்பட பல தமிழ் தலைவர்கள் தமிழர்களின் உரிமைக்காக அமைதி வழியில் போராடினார்கள்.

கல்வி, வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்படும் பட்சத்தில் சொந்த நாட்டில் ஈழத்தமிழர்கள் எப்படி வாழ முடியும் என்று குரல் எழுப்பினார்கள். ஆனால் தமிழ் இனம் ஒரு அடிமை இனம்போல இருக்க வேண்டியதுதான் என்று சொல்லாமல், சொல்லி சிங்கள தலைவர்கள் தொடர்ந்து தமிழர்களை புறக்கணித்தனர்.

இதையடுத்து தமிழர் பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டம் ஊர்வலங்கள் நடந்தன. தமிழர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்.

1954-ம் ஆண்டு பிறந்த பிரபாகரன் சிறு பையனாக இருந்தபோது, ஈழத்தமிழர்கள் மீது போலீசார் நடத்திய வெறியாட்டங்கள் அதிகரித்திருந்தன. அப்போது பிரபாகரன் கேட்ட கேள்வி, ஏன் அடிக்கிறார்கள்? நாம் ஏன் திருப்பி அடிக்கவில்லை?

இந்த சிந்தனை பிரபாகரன் போலவே பெரும்பாலான சிறுவர்கள் மனதில் ஏற்பட்டிருந்தது. அவர்கள் வளர்ந்து வாலிப வயதை தொட்டபோது, குட்ட குட்ட குனிவதா? உரிமைக்காக இனி ஆயுதம் ஏந்துவோம் என்றனர்.

பிரபாகரன் ஒருபடி மேலே சென்று, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு பகுதியை எங்களுக்கு தனியாக பிரித்து கொடுத்து விடுங்கள். நாங்கள் தமிழ் ஈழம் பெயரில் தனி சுதந்திர நாட்டை உருவாக்கிக் கொள்கிறோம் என்று ஆவேசமானார்.

இலங்கை மொத்த மக்கள் தொகையில் 73.8 சதவீதம் பேர் சிங்களர்கள். 13.9 சதவீதம் பேர் ஈழ தமிழர்கள். 4.6 சதவீதம் பேர் இந்திய வம்சா வழி தமிழர்கள். சுமார் 2 கோடி பேர் கொண்ட மக்கள் தொகையில் சுமார் 50 லட்சம் பேர் ஈழத் தமிழர்கள். இவர்களுக்காக தனி நாட்டை உருவாக்க போவதாக 1972-ம் ஆண்டு பிரபாகரன் அறிவித்தார். விடுதலைப்புலிகள் இயக்கம் பிறந்தது.

இலங்கையை வென்ற தமிழ் அரசன் சோழனின் கொடி புலிக்கொடி. அதையே பிரபாகரன் தன் கொடியிலும் பதித்தார். புலி தலையை சுற்றி 33 துப்பாக்கிக் குண்டு வளையம் அமைத்தார்.

அப்போது ஆட்சியில் இருந்த இந்திரா காந்தியும், எம்.ஜி.ஆரும், ஈழப் போராளிகளுக்கு உதவினார்கள். எதிரி நாடுகள் இலங்கை மண்ணில் தளம் அமைத்து விடக்கூடாது என்ற தொலைநோக்கு பார்வையில் இந்திரா காந்தி ஈழப் போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சியும் அளித்தார்.

ஏராளமான இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தனர். 1983-ம் ஆண்டு முதல் ஈழம் போர் தொடங்கியது.

விடுதலைப்புலிகள் நடத்திய முதல் கண்ணிவெடி தாக்குதலில் 13 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் சிங்கள மக்கள் வெறியர்களாக மாறினார்கள்.

கொழும்பில் அரசு பணியில் இருந்த, கடை வைத்திருந்த தமிழர்கள் ஓட, ஓட அடித்து விரட்டப்பட்டனர். 600 தமிழர்கள் கொல்லப்பட்டனர். கொழும்பில் ரத்த ஆறு ஓடியது.

1985-ம் ஆண்டு சிங்கள அரசு முதன் முதலாக ஈழப் போராளிகளிடம் பேச முன் வந்தது. ஆனால் அதை விடுதலைப்புலிகள் ஏற்கவில்லை.

இந்த சமயத்தில் டெலோ, ஈராஸ், இ.பி.ஆர்.எல்.எப்., டி.யூ.எல்.எப் என்று பல போராளிக் குழுக்கள் இருந்தன. இவர்களால் விடுதலைப்போராட்டம் திசை திரும்புவதாக கருதிய புலிகள் ஸ்ரீசபாரத்தினம், அமிர்தலிங்கம், பத்மநாபா ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. பிரதமர் பதவிக்கு வந்த ராஜீவ் காந்தி இலங்கை கொள்கையில் புதிய அணுகுமுறையை ஏற்படுத்தினார். ஒரு கட்டத்தில் புலிகளை ஒடுக்க இந்திய அமைதிப்படையை அனுப்பி வைத்தார்.

1990 வரை 3 ஆண்டுகள் இலங்கையில் தங்கியிருந்த இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளிடம் இருந்த ஆயுதங்களில் 90 சதவீதத்தை பறித்தது. பிறகு சுமார் 1000 ராணுவ வீரர்களை இழந்து விட்டு இந்தியா திரும்பியது. இது ஈழப்போரின் 2-வது கட்டமாக கருதப்படுகிறது.

இலங்கை பிரச்சினையை தீர்க்க ஜெயவர்த்தனேவுடன் ராஜீவ் காந்தி ஒரு ஒப்பந்தம் செய்தார். இது விடுதலைப்புலிகளிடம் அதிருப்தியை உருவாக்கியது.

1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அதன் பிறகு விடுதலைப்புலிகள் மீதான இந்தியாவின் பார்வை முழுமையாக மாறியது.

விடுதலைப்புலிகள் இயக்கம் மீது சர்வதேச பார்வை மாறவும் இது வழி வகுத்தது. என்றாலும் விடுதலைப்புலிகள் ஈழம் ஒன்றே குறிக்கோள் என்று போராட்டத்தை தீவிரப் படுத்தினார்கள்.

1993-ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் மனித வெடிகுண்டு மூலம் அதிபர் பிரேமதாசா கொல்லப்பட்டார். இந்த நிலையில் சிங்கள ராணுவமும் தன்னை நவீனப்படுத்தி வலுவாக்கிக் கொண்டது. இதன் காரணமாக 1995-ல் யாழ்ப்பாணம் முழுவதையும் சிங்கள ராணுவம் கைப்பற்றியது.

அதற்கு பதிலடியாக 1996-ல் முல்லைத் தீவில் இருந்த ராணுவ முகாமை விடுதலைப்புலிகள் பிடித்தனர். அங்கு இருந்த 1200 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் அதிரடி நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்த அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் 1997ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்தன.

ஆனால் எதை பற்றியும் கவலைப்படாத புலிகள் தங்கள் லட்சியப் பயணத்தில் உறுதியுடன் இருந்தனர். 1998-ல் கிளிநொச்சி ராணுவ முகாமை கைப்பற்றினார்கள். அங்கு இருந்த சுமார் 1000 சிங்கள ராணுவ வீரர்களை கொன்றனர்.

இதனால் வன்னிப் பகுதியில் புலிகள் வசம் பெரிய அளவில் நிலப்பரப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சுமார் 5 ஆண்டுகளில் தன் ஆயுத பலத்தை பெருக்கி புலிகள் இந்த அதிரடிகளை நடத்தியதை பார்த்து உலக நாடுகள் ஆச்சரியப்பட்டன.

புலிகள் வேகத்தை பார்த்த இங்கிலாந்து 2001-ல் புலிகளை தீவிரவாதிகள் என்று அறிவித்தது. இதை காதில் வாங்கிக் கொள்ளாத விடுதலைப்புலிகள் அதே ஆண்டு கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் அதிரடி தாக்குதலை நடத்தினார்கள். 6 விமானங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. உலகமே விடுதலைப்புலிகளை திரும்பிப்பார்த்தது.

இதையடுத்து உலகின் பல நாடுகள் சிங்கள அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க முன் வந்தது. ஆனால் விடுதலைப்புலிகள் இந்தியாவின் சமரசத்தை எதிர்பார்த்தது.

இந்தியா தலைமையில் ஒரு சமரச தீர்வு ஏற்பட வேண்டும் என்று பிரபாகரன் விருப்பம் தெரிவித்தார். ஆனால் சமரசத்தில் ஈடுபட இந்தியா விரும்பவில்லை. வெளியுறவு கொள்கை மாற்றம் காரணமாக இந்தியா அமைதி காத்தது.

இதையடுத்து நார்வே நாடு புலிகளிடம் பேச முன் வந்தது. அதை புலிகளும் ஏற்றுக்கொண்டனர். நார்வே நாட்டின் சமரச முயற்சி காரணமாக சிங்கள ராணுவத்தினரும் விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தம் செய்தனர்.

2002-ம் ஆண்டு நார்வே நாட்டில் வைத்து சமரச பேச்சு நடந்தது. இலங்கை வடக்கு- கிழக்கில் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது. இந்த அதிகார பகிர்வு திட்டத்துக்கு இரு தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

2003-ம் ஆண்டு இந்த சமரச திட்டத்தை ஏற்பதில் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

சொத்து, பணம் சேர்த்து சொகுசாக வாழ ஆசைப்பட்ட கருணா என்ற முரளீதரன் 2004-ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இருந்து விலகினார். அவருடன் கிழக்கு மாகாணப் பகுதியில் இருந்த சுமார் 3 ஆயிரம் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தனர். புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக இது கருதப்பட்டது.

அடுத்தடுத்து கருணா துரோக செயல்களில் ஈடுபட்டார். விடுதலைப்புலிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை சிங்கள ராணுவத்திடம் முழுமையாக சொல்லி கொடுத்தார்.

விடுதலைப்புலிகளை எங்கிருந்து, எப்படி தாக்கினால் வேரோடு அழிக்கலாம் என்றும் சொல்லிக் கொடுத்தார்.

இதையடுத்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளிடம் இலங்கை போர் கருவிகளை வாங்கியது. சர்வதேச கொள்கை மாற்றங்களும் சிங்கள அரசுக்கு சாதகமாக மாறின.

புதிதாக 2007-ல் ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்சேவுக்கு சீனா அதிகமான ஆயுத உதவி செய்தது. உடனடியாக ராஜபக்சே போரைத் தொடங்கினார். 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்.

2008ல் போர் நிறுத்தம் முறிக்கப்பட்டது. விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. கிழக்கு பகுதி முழுவதையும் விடுதலைப்புலிகள் இழந்தனர்.

4-வது ஈழப்போரை தொடங்குவதாக புலிகள் அறிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் போரில் கிளிநொச்சி, ராணுவத்திடம் வீழ்ந்தது. அதன் பிறகு முல்லைத் தீவு வீழ்ந்தது.

பிறகு மூன்றே மாதத்தில் வடக்கு பகுதி முழுவதையும் சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து விட்டது. நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளி வாய்க்காலில் ராணுவம் தன் போரை நிறைவு செய்து விட்டது.

விடுதலைப்புலிகளின் கொடி சின்னத்தில் புலி தலையை சுற்றி 33 குண்டு வைத்ததன் மூலம் 33 ஆண்டுகளில் ஈழம் மலர்ந்து விடும் என்று கூறுவதற்காகத்தான் என்று சொல்வார்கள்.

நேற்று போர் முடிந்த 17-05-2009 ன் கூட்டுத் தொகையும் 33 என்பது குறிப்பிடத்தக்கது.


"for all who draw the sword will die by the sword"
- Matt 26:52Holly Bible

அமென்!


( நன்றி: மாலை மலர், சில மாற்றங்களுடன் )

Read More...

பங்கு சந்தையில் எருதுகளின் எழுச்சி

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்த ஒரு நிமிடத்திலேயே சென்செக்ஸ் 2110 புள்ளிகளும் ( 17.3 சதவீதம் ), தேசிய பங்கு சந்தையில் நிப்டி 651 புள்ளிகளும் ( 15.05 சதவீதம் ) உயர்ந்திருந்தது. எருதுகள் எல்லாம் எழுந்து வேகமாக ஓடியது.







எருதுகள் வேகமாக ஓடியதற்கு எது காரணம்
1. இடது சாரிகள் இல்லாதது
2. இடது பக்கம் சாணியை போட்டது.

Read More...

பிரபாகரன் - கசப்பும் இனிப்பும்






செய்தி: பிரபாகரன் கொல்லப்பட்டார்.

Read More...

எங்க நிலமையை பார்த்தீங்களா

Read More...

Sunday, May 17, 2009

அடுத்த பிளான் என்ன ?

Read More...

தேர்தல் பொய்கள் !

Read More...

மூன்றாவது அணி ?


( ஜோக்: நன்றி விகடன் )

Read More...

சிவகங்கை - விருதுநகர் - என்ன நடந்தது ?

நேற்று மத்திய மந்திரி ப.சிதம்பரம், வைகோ போட்டியிட்ட தொகுதிகளில் தேர்தல் முடிவை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டது. இரண்டு பேரும் தோல்வியை தழுவியிருந்தால் நாட்டுக்கு நல்லாதாக இருந்திருக்கும்.

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் போட்டியிட்ட சிவகங்கை தொகுதியில், அ.தி.மு.க வேட்பாளராக தமிழக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். இந்த தொகுதியில் நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டபோது காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தார். இறுதிச்சுற்று ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. இறுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம், அ.தி.மு.க. வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட 3 ஆயிரத்து 354 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடும் விருதுநகர் தொகுதியில், ஓட்டுப்பதிவு நாளன்று 7 லட்சத்து 44 ஆயிரத்து 880 ஓட்டுகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. நேற்று 15 சுற்றுகள் வாக்கு எண்ணி முடிக்கப்பட்டபிறகு பதிவான வாக்குகள் 7 லட்சத்து 66 ஆயிரத்து 242 என்று தெரிவிக்கப்பட்டது. இது முதலில் அறிவிக்கப்பட்டதை விட 21 ஆயிரத்து 332 ஓட்டுகள் அதிகமாகும்.

இந்த தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாகூர் 15 ஆயிரத்து 764 ஓட்டுகள் மட்டுமே கூடுதலாக பெற்றுள்ள நிலையில், பதிவான ஓட்டுகளில் உள்ள வித்தியாசம் ஏற்புடையது அல்ல என்றும், முடிவை அறிவிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வைகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக எழுத்து மூலமாக ஆட்சேபனை மனுவை பெற்றுக்கொண்டபின், தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் தருவார் என்று உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இருந்தாலும் மதிமுக இத்தொகுதியில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அதன் நடைமுறை என்ன ? ....

அரசு அதிகாரிகளிடம் பேசிய போது, அவர்கள் சொல்லும் நடைமுறையைப் பார்த்தால், ப்ரோகிராமில் மாற்றுவது இயலவே இயலாது எனத் தெரிகிறது.

* ஒரு வோட்டிங் மெஷின் ரெடியானதும், ரிட்டர்னிங் ஆஃபிஸர் (இவர் டெபுடி ஐ ஏ எஸ் ரேங்கில் இருப்பவர்) கையில் ஒப்படைக்கப்படுகிறது.

* அவர் எல்லாக் கட்சி ஏஜெண்டுகளையும் அழைத்து, எல்லா பட்டனிலும் வாக்கு போட்டு, மீண்டும் அதை சரிபார்த்து கையெழுத்து வாங்கிக்கொள்கிறார்.

* பின்னர் அந்த மெஷின்கள் காவல்துறை வசம் ஒப்படைக்கப்படுகின்றன.

* மீண்டும் காலையில் வோட்டிங் துவங்கும்போது, மெஷினில் ரீசெட் பட்டன்கள் எல்லா ஏஜெண்டுகளின் முன் அமுக்கப்பட்டு, பதிவான வாக்குகளின் எண்ணிக்கை பூஜ்யம் என உறுதி செய்யப்படுகிறது.

* வாக்குப் பதிவு முடிந்ததும், ஒவ்வொரு மெஷினிலும் எத்தனை வாக்குகள் பதிவாகியிருக்கின்றன எனப்தை மெஷினிலேயே எல்லா ஏஜெண்டுகளிடம் காண்பித்து, அதில் கையெழுத்தும் வாங்கிக்கொள்கிறாகள்.

* மெஷின்கள், எல்லாக் கட்சி ஏஜெண்டுகளிடமும் கையெழுத்து வாங்கப்பட்ட படிவங்களுடன், பெட்டிக்குள் வைத்துப் பூட்டப்படுகின்றன. ஏஜெண்டுகளின் மோதிர முத்திரையோடு கூடிய அரக்கு சீல் வைக்கப்படுகிறடு.

* வாக்கு எண்ணிக்கையின்போது திறக்கப்படும் பெட்டிகளில், இந்த அரக்கு சீல் முத்திரையை ஏஜெண்ட் ஒப்புக்கொண்ட பின்பே, எண்ணிக்கை ஆரம்பிக்கிறது.

* ஒவ்வொரு மெஷினிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை ஏஜெண்ட் சரி பார்க்கிறார். வாக்குப் பதிவின் போது நடந்த எண்ணிக்கையும் இதுவும் ஒன்றா என சரிபார்க்கப்படுகிறது. பின்பு மெஷினில் ஒவ்வொரு எண்ணுக்கும் வாக்குகள் காண்பிக்கப்படுகின்றன. எண்ணும் கட்சியும் ஒப்பு நோக்கப்பட்டு கட்சிக்கான வாக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதை ஒவ்வொரு பூத் ஏஜெண்ட்டும் சரி பார்த்து கையெழுத்துப் போடுகிறார்கள்.

* நாம் சந்தேகப்படுவது போல் ப்ரோகிராம் செய்திருந்தால், ஒரு மெஷினில் அதிமுக 0 மற்றும் திமுக 4000 என வந்திருக்கவேண்டும். இப்படி வந்தால், எந்த ஏஜெண்ட்டும் சந்தேகித்துவிடுவான். எனவே இது நடக்க வாய்ப்பில்லை.

* ஒட்டுமொத்த மெஷினும் எண்ணிக்கையும், பூத் போலிங் எண்ணிக்கயும் ஒப்பிடப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றனவாம்.

* ஒரு மெஷினில் 1000 வாக்குகள் மட்டுமே அளிக்க இயலும். எனவே ஒரு பூத்தில் 1000க்கு உட்பட்ட மக்கள் வாக்களுக்குமாறு பார்த்துக்கொள்கிறார்கள். கூடினால் அவரை இரண்டு பூத்துகளாகப் பிரிக்கப்படும். அல்லது அருகில் குறைந்த வாக்காளர்கள் எண்ணிக்கையுள்ள பூத்துடன் இணைக்கப்படும்.

* அப்படியானால், சிதம்பரம் வென்றதாக நடந்த இடத்தில் நடந்த விஷயம் என்ன? ஆபிசர் மிரட்டப்பட்டு, ஏஜெண்டுகள் விலைக்கு வாங்கப்பட்டு, அதிகாரிகளுக்குத் தெரியாமல், அப்சர்வர் (இரண்டு அதிகாரிகள்) விலைக்கு வாங்கப்பட்டு, எத்தனை வாக்குகள் பதியப்பட்டனவோ அதற்கு இணையான வாக்குகளை ஒரு மெஷினில் பதிந்து, இந்த மெஷினை வைத்தால் மட்டுமே இது சாத்தியம். இருக்கும் குறைவான நேரத்தில் இது சாத்தியமா?

* வைகோ விஷயத்தில் நடந்தது பெரிய மர்மம்தான். 27000 வாக்குகள் எங்கிருந்து வந்தன? புதியதாக மெஷின்கள் சேர்க்கபப்ட்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம். இதை எளிதாகக் கண்டுபிடுத்துவிடலாம். எத்தனை மெஷின்களுக்கு பூத் ஏஜெண்ட்டுகள் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள் எனப் பார்த்து அவற்றைப் பிரிக்கவேண்டும். அவற்றில் ஏதேனும் காணாமல் போய், அதற்குப் பதிலாக புதிய மெஷின்கள் இருந்தால் (அதிக மெஷின்கள் சேர்க்க வாய்ப்பில்லை. ஏனென்றால், ஒரு மெஷின் என்பது ஒரு பூத். திடீரென இரண்டு பூத்துகளை யார் சேர்க்கமுடியும்) அதை உறுதி செய்யவேண்டும். செய்தால், இருக்கும் ஒரே வழி, எந்த இரண்டு மெஷின்க்ள் காணாமல் போனதோ, அந்த இரண்டு பூத்துகளில் வாக்குப்பதிவே.


* இதிலிருந்து தெரிவது என்ன? ஒரு குறிப்பிட்ட இடத்தில், மிரட்டி என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும் என்றாலும், அதைக் கண்டுபிடிக்க பல வழிகள் இருக்கின்றன. அதை செய்யப்போவது யார்? ஆனால், ஒரு கட்சிக்கு வாக்களித்தால் இன்னொரு கட்சிக்குப் போகுமாறு செய்யமுடியாது என்பது உண்மைதான்.




Read More...

விஜயகாந்த் அடுத்து என்ன செய்ய வேண்டும் ?

தே.மு.தி.க.வால் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்ட தொகுதிகள் பல உள்ளன. விருதுநகர், தேனி, தென்காசி, சிவகங்கை, கடலூர், மயிலாடுதுறை, கரூர் திண்டுக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கருஷ்ணகிரி, காஞ்சீபுரம், ஸ்ரீபெருபுதூர், மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை, திருவள்ளூர்

நிச்சயம் அதிமுக, திமுக விஜயகாந்தை கண்டு பயப்பட போகிறார்கள். அல்லது பயப்படாதவர்கள் போல் நடிக்க போகிறார்கள். பல பெரிய தலைகள் மற்றும் பா.ம.க ஆட்டம் கண்டதற்கு விஜயகாந்தே காரணம் என்று சொல்லலாம்.

அடுத்த தேர்தலில் விஜயகாந்த் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால் நிச்சயம் திமுக, அதிமுகவிற்கு தமிழ்நாட்டில் ஒரு மாற்று அணியாக வர வாய்ப்பு இருக்கிறது.
காங்கிரஸ் காமராஜர் ஆட்சி பற்றி அப்போது யோசிக்கலாம்.

40 தொகுதிகளின் ஓட்டு விவரம் கீழே..

திருவள்ளூர் (தனி)
வேணுகோபால் (அதிமுக) 3,68,294
காயத்ரி ஸ்ரீதரன் (திமுக): 3,36,621
வித்தியாசம் : 31,673
சுரேஷ் (தேமுதிக): 1,10,452

வட சென்னை
டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக) 2,81,055
தா. பாண்டியன் (இ.கம்யூனிஸ்ட்): 2,61,902
வித்தியாசம் : 19,153
யுவராஜ் (தேமுதிக): 66,375



தென் சென்னை
எஸ். ராஜேந்திரன் (அதிமுக) 3,08,567
ஆர்.எஸ். பாரதி (திமுக): 2,75,632
வித்தியாசம் : 32,935
வி. கோபிநாத் (தேமுதிக): 67,291
இல. கணேசன் (பாஜக): 42,925.
சரத்பாபு(சுயே): 14101



மத்திய சென்னை
தயாநிதி மாறன் (திமுக) 2,85,783
எஸ்.எம்.கே.முகமது அலி ஜின்னா(அதிமுக): 2,52,329
வித்தியாசம்: 33,454
வி.வி.ராமகிருஷ்ணன் (தேமுதிக): 38,952



ஸ்ரீபெரும்புதூர்
டி.ஆர்.பாலு (திமுக) 3,52,641
ஏ.கே.மூர்த்தி (பாமக): 3,27,605
வித்தியாசம்: 25,036
மு.அருண்சுப்பிரமணியம் (தேமுதிக): 86,530



காஞ்சிபுரம்(தனி)
பி. விஸ்வநாதன் (காங்கிரஸ்) 3,30,237
இ. ராமகிருஷ்ணன் (அதிமுக): 3,17,134
வித்தியாசம்: 13,103
டி. தமிழ்வேந்தன் (தேமுதிக): 1,03,560



அரக்கோணம்
எஸ்.ஜெகத்ரட்சகன் (திமுக) 4,15,041
ஆர். வேலு (பாமக): 3,05,245
வித்தியாசம்: 1,09,796
எஸ். சங்கர் (தேமுதிக): 82,038



வேலூர்
அப்துல்ரகுமான் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 3,60,474
எல்கேஎம்பி.வாசு (அதிமுக): 2,53,081
வித்தியாசம்: 1,07,393
செüகத்ஷெரீப் (தேமுதிக): 62,696
ஏ.கே. ராஜேந்திரன் (பாஜக): 11,184



கிருஷ்ணகிரி
இ.ஜி. சுகவனம் (திமுக) 3,35,977
கே. நஞ்சேகவுடு (அதிமுக): 2,59,379
வித்தியாசம்: 76,598
டி.டி. அன்பரசன் (தேமுதி): 97,546
ஜி. பாலகிருஷ்ணன் (பாஜக): 20,486



தர்மபுரி
ஆர். தாமரைச்செல்வன் (திமுக) 3,65,812
ஆர். செந்தில் (பாமக): 2,29,870
வித்தியாசம்: 1,35,942
வி. இளங்கோவன் (தேமுதிக): 1,03,494



திருவண்ணாமலை
த. வேணுகோபால் (திமுக) 4,36,866
ஜெ. குரு (பாமக): 2,88,566
வித்தியாசம்: 1,48,300
மணிகண்டன்(தேமுதிக): 56960
பி. கோவிந்தசாமி (பிஎஸ்பி): 4,731



ஆரணி
எம். கிருஷ்ணசாமி (காங்கிரஸ்) 3,96,728
முக்கூர் சுப்பிரமணியம் (அதிமுக): 2,89,898
வித்தியாசம்: 1,06,830
எம். மோகனம் (தேமுதிக): 1,05,721



விழுப்புரம் (தனி)
எம். ஆனந்தன் (அதிமுக) 3,06,826
கே. சாமிதுரை (விடுதலைச் சிறுத்தைகள்): 3,04,029
வித்தியாசம்: 2797
பி.எம். கணபதி (தேமுதிக): 1,27,476



கள்ளக்குறிச்சி
ஆதி சங்கர் (திமுக) 3,63,601
கோ. தன்ராஜ் (பாமக): 2,54,993
வித்தியாசம்: 1,08,608
எல்.கே. சுதீஷ் (தேமுதிக): 1,32,223
விஜய டி.ராஜேந்தர் (லதிமுக): 8211



சேலம்
எஸ். செம்மலை (அதிமுக) 3,80,460
கே.வீ. தங்கபாலு (காங்கிரஸ்): 3,33,969
வித்தியாசம்: 46,491
ஆர். மோகன்ராஜ் (தேமுதிக): 1,20,325
அசோக் சாம்ராஜ் (கொ.மு.பே): 3,642



நாமக்கல்
செ. காந்தி செல்வன் (திமுக) 3,71,476
வைரம் தமிழரசி (அதிமுக) : 2,69,045
வித்தியாசம்: 2431
என். மகேஸ்வரன் (தேமுதிக) : 79,420
ஆர். தேவராசன் (கொமுபே) : 52,433



ஈரோடு
அ.கணேசமூர்த்தி (மதிமுக) 2,84,148
ஈவிகேஎஸ். இளங்கோவன் (காங்.): 2,34,812
வித்தியாசம்: 49336
சி. பாலசுப்ரமணியம் (கொமுபே): 1,06,604



திருப்பூர்
சி.சிவசாமி (அதிமுக) 2,95,731
எஸ்.கே. கார்வேந்தன் (காங்) : 2,10,385
வித்தியாசம்: 85346
தினேஷ் குமார்(தேமுதிக): 86933
கே. பாலசுப்பிரமணியன் (கொமுபே) : 95,299



நீலகிரி (தனி)
ஆ.ராசா (திமுக) 3,16,802
சி. கிருஷ்ணன் (மதிமுக): 2,30,781
வித்தியாசம்: 86,021
எஸ்.செல்வராஜ் (தேமுதிக): 76,610
எஸ். பத்திரன்(கொமுக): 32,779



கோவை
பி.ஆர்.நடராஜன் (சிபிஎம்) 2,93,165
ஆர்.பிரபு (காங்) : 2,54,501
வித்தியாசம்: 38,664
ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமுபே) : 1,28,070
ஆர்.பாண்டியன் (தேமுதிக) : 73,188



பொள்ளாச்சி
கே.சுகுமார் (அதிமுக) 3,05,935
கே.சண்முகசுந்தரம் (திமுக): 2,59,910
வித்தியாசம்: 46,025
பெஸ்ட் எஸ்.ராமசாமி (கொமுபே): 1,03,004
தங்கவேலு(தேமுதிக): 38, 815



திண்டுக்கல்
என்.எஸ்.வி. சித்தன் (காங்.) 3,61,545
பி. பாலசுப்ரமணி (அதிமுக): 3,07,198
வித்தியாசம்: 54,347
பி. முத்துவேல்ராஜ் (தேமுதிக): 1,00,788



கரூர்
மு. தம்பிதுரை (அதிமுக) 3,80,461
கே.சி. பழனிசாமி (திமுக): 3,31,312
வித்தியாசம்: 49,149
ஆர். ராமநாதன் (தேமுதிக): 51,163
ஆர். நடராஜன் (கொமுபே):14,259



திருச்சி
ப. குமார் (அதிமுக) 2,98,710
சாருபாலா ஆர். தொண்டைமான் (காங்கிரஸ்): 2,94,375
வித்தியாசம்: 4335
ஏ.எம்.ஜி. விஜயகுமார் (தேமுதிக): 60,124


பெரம்பலூர்
து. நெப்போலியன் (திமுக) 3,98,742
கே.கே. பாலசுப்பிரமணியன் (அதிமுக): 3,21,138
துரை. காமராஜ் (தேமுதிக): 74,317



கடலூர்
கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்) 3,20,473
சம்பத்(அதிமுக) : 2,96,941
வித்தியாசம்: 23,532
தாமோதரன் (தேமுதிக): 93,172



மயிலாடுதுறை
ஓ.எஸ். மணியன் (அதிமுக) 3,64,089
மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்): 3,27,235
வித்தியாசம்: 36.854
ஜி.கே. பாண்டியன் (தேமுதிக): 44,754



நாகப்பட்டினம் (தனி)
ஏ.கே.எஸ்.விஜயன்(திமுக) 3,69,915
எம். செல்வராசு (இந்திய கம்யூ.): 3,21,953
வித்தியாசம்: 47,962
எம். முத்துக்குமார் (தேமுதிக): 51,376
ஜி. வீரமுத்து (பகுஜன் சமாஜ்): 5,123



தஞ்சாவூர்
எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (திமுக) 4,08,343
துரை பாலகிருஷ்ணன் (மதிமுக): 3,06,556
வித்தியாசம்: 1,01,787
ப. ராமநாதன் (தேமுதிக): 63,852



சிவகங்கை
ப. சிதம்பரம் (காங்கிரஸ்) 3,34,348
ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் (அதிமுக): 3,30,994
வித்தியாசம்: 3354
பர்வத ரெஜினாபாப்பா (தேமுதிக) 60,084



மதுரை
மு.க. அழகிரி (திமுக) 4,31,295
பொ. மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): 2,90,310
வித்தியாசம்: 1,40,985
க.கவியரசு (தேமுதிக): 54,419



தேனி
ஜே.எம்.ஆரூண் ரஷீத் (காங்கிரஸ்) 3,40,575
தங்கதமிழ்செல்வன் (அதிமுக): 3,34,273
வித்தியாசம்: 6302
எம்.ஜி. சந்தானம் (தேமுதிக): 70,908
கவிதா (பகுஜன் சமாஜ்): 8,023



விருதுநகர்
மாணிக் தாகூர் (காங்.) 3,07,187
வைகோ (மதிமுக): 2,91,423
வித்தியாசம்: 15,764
மாபா பாண்டியராஜன் (தேமுதிக) 1,25,,229
நடிகர் கார்த்திக் (பாஜக கூட்டணி) 17,336



ராமநாதபுரம்
ஜே.கே. ரித்திஷ் (திமுக) 2,94,945
வ.சத்தியமூர்த்தி(அதிமுக): 2,25,030
வித்தியாசம்: 69,915
சு.திருநாவுக்கரசர்(பா.ஜ.க): 1,28,322
எஸ்.சிங்கை.ஜின்னா(தேமுதிக): 49,571



தூத்துக்குடி
எஸ்.ஆர் ஜெயதுரை (திமுக) 3,11,017
சிந்தியா பாண்டியன் (அதிமுக): 2,34,368
வித்தியாசம்: 76,649
எம்.எஸ்.சுந்தர் (தேமுதிக): 61,403
எஸ்.சரவணன் (சமக): 27,013



தென்காசி (தனி)
பி. லிங்கம் (இந்திய கம்யூ.) 2,81,174
ஜி. வெள்ளைப்பாண்டி (காங்.): 2,46,497
வித்தியாசம்: 34,677
க. கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): 1,16,685
கே. இன்பராஜ் (தேமுதிக): 75,741



திருநெல்வேலி
எஸ். ராமசுப்பு (காங்கிரஸ்) 2,74,932
கே.அண்ணாமலை (அதிமுக) 2,53,629
வித்தியாசம்: 21,303
மைக்கேல் ராயப்பன் (தேமுதிக) 94,562
கரு. நாகராஜன் (சமக) 39,997



கன்னியாகுமரி
ஜெ. ஹெலன் டேவிட்சன் (திமுக) 3,20,161
பொன். ராதாகிருஷ்ணன் (பா.ஜ.க.): 2,54,474
வித்தியாசம்: 65,687
ஏ.வி. பெல்லார்மின் (மார்க்சிஸ்ட்): 85,583
எஸ். ஆஸ்டின் (தேமுதிக): 68,472



புதுச்சேரி
வி. நாராயணசாமி (காங்கிரஸ்) 3,00,391
மு.ராமதாஸ் (பாமக): 2,08,619
வித்தியாசம்: 91,772
கே.ஏ.யு. அசனா (தேமுதிக): 52,638
எம்.விஸ்வேஸ்வரன் (பாஜக): 13,442

Read More...