பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 30, 2009

கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க

"சிறையில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதி கசாப்புக்கு தந்தூரி சிக்கன் கொடுக்கிறார்கள். ஆனால் எனக்கு சிறையில் சுரைக்காய் கூட்டுதான் தரப்பட்டது'' - வருண் காந்தி
கசாப் நேற்று நிதிமனறத்தில் கேட்ட லிஸ்ட் கீழே....


கேட்டது
1. பற்பசை,
2. பத்திரிகைகள் - உருது டைம்ஸ்'.( பாகிஸ்தானில் இருந்த போது, "நவாயி வக்த் (சமீபத்திய செய்திகள்) படித்ததாக கூறினான் )
3. வாசனை திரவியங்கள்
4. சிறை வளாகத்தில் உலா வரவும் அனுமதிக்க வேண்டும்'
5. தன்னிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, சிறைக் கணக்கில் டிபாசிட் செய்ய வேண்டும்

நான் மைனர் கசாப்புக்கு சிபாரிசு செய்வது
1. உருது டைம்ஸ் பத்திரிகை கிடைக்கவில்லை என்றால் தமிழ் சிறுபத்திரிகை சில.
2. கோலி விளையாட சில வெடி குண்டு
3. மூன்று சக்கர நடை வண்டி சிறையை சுற்றி பார்க்க
4. கூட விளையாட அரசு தரப்பு வக்கில் அல்லது காஷ்மீரிலிருந்து பிடித்து வந்த திவிரவாதிகள் ஐந்து பேர்
5. கலரிங் புத்தகம், ஸ்கெச், கலரிங் பென்சில் எல்லாம் சிகப்பு நிறத்தில்.
6. IPL, தமிழ்நாடு உண்ணாவிரதம் பார்க்க சோனி கலர் டிவி
7. ஒரு டஜன் Johnson & Johnson டயப்பர். ( மேஜர் என்று நிருபித்தால் ஜாக்கி அண்டர் வேர் ).
8. ராத்திரி படிக்க பா.ராகவன் எழுதிய மாயவலை மாதிரி புத்தங்கள் சில. தூக்கம் வரவில்லை என்றால் தலைக்கு தலையணையாக யூஸ் செய்யலாம்.
9. 2Mpbs இண்டர்நெட் வசதியுடன் ஒரு லேப் டாப். அவர் பிளாக் எழுத வேண்டாமா ?
10. நீங்க சொல்லுங்க பின்னூட்டதில் :-)

Read More...

Tuesday, April 28, 2009

Srilanka - LTTE - India - Opinions

Request from readers to publish these..

1. Sri Lankan crisis: how India can help find a way out - A.S. Kalkat - The Hindu

2.‘Facilities much better than those provided for refugees in India’ - Sri Sri Ravishankar - The Hindu

3.Life without Tigers in Lanka - B Raman - The Daily Pioneer


Sri Lankan crisis: how India can help find a way out

A.S. Kalkat

It may be the endgame for the LTTE and Prabakaran but is certainly not the endgame for the Tamils of Sri Lanka. India stands committed to their welfare and legitimate rights and the Indo-Sri Lanka Accord of 1987 can be the basic document to forge ahead politically.IN THE NO FIRE ZONE AREA TWO DECADES AGO: Lt. Gen. A.S. Kalkat, IPKF Chief, visits the area where the current endgame is being played out during an operation in late-1988.

Twenty years ago Sri Lanka’s President Ranatunge Premadasa announced that his government and LTTE leader Velupillai Prabakaran had come together and demanded that the Indian Peace Keeping Force leave. A hundred thousand casualties and a shattered economy later, this week President Mahinda Rajapaksha issued an ultimatum to the LTTE to surrender or perish. Despite many voices in India and elsewhere sounding the alarm for over two years that a gigantic human tragedy was waiting to happen in Sri Lanka, it was allowed to happen notwithstanding the international community and human rights organisations being aware of it.

This article has long been under preparation, for nearly two years, but had to wait out the time to see how the endgame would play out. The final showdown is in an area of 8 sq km immediately north of Mullaitivu designated as a No Fire Zone (NFZ). LTTE cadres of unknown strength are ranged against Sri Lankan forces. The presence of the LTTE leader, Prabakaran, is not confirmed, and he may or may not be there. The LTTE is fighting for its existence and the Sri Lanka forces are fighting for the survival of their country’s sovereignty. Sandwiched between them are nearly 70,000 starving and long-suffering men, women, and children under inhuman conditions.

It may be the endgame for the LTTE and its supremo but it is certainly not the endgame for the Tamils of Sri Lanka. It will serve to remember that it was not Prabakaran who created the ethnic conflict but the ethnic conflict that spawned a Prabakaran. If the cause of the ethnic conflict is not addressed, the end of the LTTE and its leader will be just a short-term victory.
Why did the LTTE lose?

The first question one asks is: why did the LTTE lose? Ironically, Prabakaran and the LTTE have only themselves to blame for it. From their lofty claims in 1986 of protecting the Tamils against atrocities by the Sri Lankan forces, they descended into the predator preying on the same helpless Tamils. It soon became clear that Prabakaran’s goal was not the ballot box but the bullet box with the objective of carving out an autocratic Eelam of ‘AK 47’ dictatorship under him.

The LTTE alienated itself by its forcible recruitment of men, women, and children; usurping the humanitarian aid meant for the devastated population; extracting a ‘living tax’ from the poverty-stricken population; and brutal killings of Tamils who opposed its demand. The truth that LTTE is a ruthless killing machine was evident as early as 1986 when, on the pretext of calling an all-party meeting in Batticaloa of militant leaders, Prabakaran decimated them in a night of the long knives. The only one to escape was K. Padmanabha, the EPRLF leader, who was later gunned down in Chennai.

As long as the LTTE confined itself to guerrilla warfare and terrorism, it was able to bleed Sri Lankan forces and the country’s economy. Its successes in 2005 and 2006 went to its head, resulting in its losing the focus of a guerrilla force. Prabakaran thought that he had achieved Eelam in the North-Eastern Province and the LTTE usurped the trappings of a sovereign ‘state’ with Prabhakaran as ‘head’ of state. He established the state ‘capital’ at Killinochchi; created departments emulating government departments, imposing taxes, dispensing ‘justice’, and issuing ‘travel documents’; and pretended that his armed cadres were the regular army, navy, and air force. Then either due to arrogance or over-confidence, Prabakaran made the blunder of taking on a regular army and tried to fight like one, with disastrous consequences. The LTTE was fighting outside its core competence. This was the undoing of a guerrilla and terrorist organisation, which thought it had suddenly become a regular army.
1987 breakthrough

The irony of all this is that the statutory arrangement to secure the welfare and interests of the Sri Lankan Tamils was served on a plate by India in 1987 and put into effect by December 1988. Prabakaran and the LTTE chose to reject it because he had a different agenda and the concept of democracy was certainly not part of it. The India-Sri Lanka Agreement of July 1987 and Indian Peace Keeping Force (IPKF) operations had ensured the enactment of the 13th Amendment to the Constitution — a giant step in devolution of power to the Northern and Eastern Provinces, resulting in their merger as a single Tamil-majority North-Eastern Province, which had always been the Tamil dream for their ‘traditional homeland.’ Today obtaining even half that dispensation will be difficult: the Northern and Eastern Provinces have since been de-merged, the status and powers of provincial Chief Ministers have been severely constricted, and consequently provincial autonomy has already been compromised.

The question now is: what are India’s options and how should it proceed, keeping in mind that we can ‘stress,’ ‘insist,’ and ‘demand’ – but cannot enforce the solution. It is critical for both governments that they not lose their focus. India’s objective has always has been to ensure the welfare and legitimate rights of the Tamil minority within a united Sri Lanka and it stands committed to this goal. India has no commitment to any militant organisation or leader and the LTTE’s claim to represent all the Tamils of Sri Lanka is just a canard.
Way forward

The reality is that military force alone cannot defeat the adversary. Simultaneous political, economic, and societal initiatives are necessary to end the conflict. For the Tamils, their political future remains a question mark depending on President Rajapaksa’s ability to fulfil their legitimate demands. Although he has indicated every intention to do so, his ability to deliver is limited due to opposition from hard-line Sinhala chauvinists, including those within his party, to enacting the necessary legislation. It is likely he will go in for a general election to get the necessary numbers of his supporters elected before taking the next major political step.

Sri Lanka’s concerns over its territorial integrity and sovereignty are well founded, as are India’s concerns over the security environment in its backyard and the sentiments of its own 60 million-plus Tamils. The leaders of both countries have displayed remarkable restraint and maturity in managing the situation. The time has now come to bell the cat. Unfortunately, there is not even a draft political proposal on the table to kick-start the dialogue. In this political vacuum, the Indo-Sri Lanka Accord of 1987 can serve as the basic document to begin the political dialogue and since it has been passed by parliaments of both countries and placed on the floor of the United Nations it cannot be labelled as unilateral or discriminatory.

India must now demand that: (i) the LTTE lay down arms and release the civilians in the No Fire Zone, (ii) the Sri Lankan government order a ceasefire and undertake a crash rehabilitation programme, (iii) the Sri Lankan government initiate a political dialogue with the Sri Lankan Tamil leaders for a practical and lasting dispensation to meet the legitimate Tamil demands. India must associate itself as an observer in the political dialogue but it must be kept in mind that only the government of a country can give dispensation to its citizens, not an outside power.

It could be a coincidence that whenever India has been confronted with a crisis situation in relation to Sri Lanka — as in 1989 when President Premadasa demanded recall of the IPKF or in 2008 when President Rajapaksa decided on full-fledged military operations against the LTTE — the timing has been surreal, coinciding with the run-up to general elections in India. However, it is no coincidence that our political parties have not hesitated to use it as a card in domestic electoral politics. Today with the grave threat of global terror confronting us, the dangers are very great and the stakes too high for anyone to play any kind of political cards.

(Lieutenant-General (retd.) A.S. Kalkat is Director Emeritus, Centre for Joint Warfare Studies, New Delhi. He is a former Army Commander and was the IPKF Chief. His email id is kalkat@vsnl.com )

Source: The Hindu - http://www.hindu.com/2009/04/27/stories/2009042755500900.htm‘Facilities much better than those provided for refugees in India’

Sri Sri clarifies views on civilian camps in Sri Lanka

Chennai: A press release from the office of Sri Sri Ravi Shankar clarifies that following his visit to IDP welfare centres in Vavuniya in Sri Lanka’s Northern Province, “Sri Sri acknowledged that the facilities in the camps are much better” than “those the Indian Government has provided for the Kashmiri pundits and those provided for Sri Lankan Tamils in Tamil Nadu.” He was also of the view that “the relief materials sent by India to Sri Lanka are completely insufficient” and regretted that “Indian businessmen have not rushed to support the people there.”

According to the release, Sri Sri also asked: “How will the political drama and commotion happening in the State [Tamil Nadu] help the refugees in any case? Fasting or street demonstration or self-immolations will not help to bring solace to thousands of people in the camps. Instead of reaching out and helping the people who are in need, these incidents will only create fear and anger in society.”

The press release, dated April 26, 2009, reads as follows:

“His Holiness Sri Sri Ravi Shankar had visited the Internally Displaced People (IDP) welfare centres in Vavuniya, Sri Lanka on April 21st, 2009.

“Following his visit, His Holiness Sri Sri Ravi Shankar has appealed to the Government of India and the civil society to give as much relief materials like food, medicines, clothes etc to Sri Lanka. Sri Sri also said that the relief materials sent by India to Sri Lanka are completely insufficient. He feels it is unfortunate that during this time of crisis the Indian businessmen have not rushed to support the people there. Spiritual leaders could have provided mental solace to the civilians in these camps.

“Sri Sri acknowledged that the facilities in the camps are much better compared to those that the Indian Government has provided for the Kashmiri pundits and those provided for Sri Lankan Tamils in Tamil Nadu. Sri Sri appreciated the selfless service of Col. Induneel de Silva and his dedicated team of army personnel in the Vavuniya Menik farm welfare centres. They had extended complete co-operation for Sri Sri and the Art of Living to distribute clothes and other relief materials in the camps.

“Sri Sri also met with H.E President Mahinda Rajapaksa and appealed to him that the refugees in the camps should not be kept longer and that they should be sent back to their own homes as soon as possible. H.E. President Mahinda Rajapaksa said that he is fully responsible for the security of these innocent civilians. After de-mining the entire area, the civilians can be re-settled in their home towns.

“Sri Sri is of the opinion that Tamil-speaking Indian officials (the Indian Ambassador to Sri Lanka or any other official) could have instilled more faith and hope in the refugees. When the tsunami occurred, everyone came forward to help. I would say that this is nothing less than a human tsunami. ‘Why hasn’t anyone come to help even at this moment of huge influx of people to the camps?’, Sri Sri asked.

“How will the political drama and commotion happening in the state help the refugees in any case? Fasting or street demonstration or self-immolations will not help to bring solace to thousands of people in the camps. Instead of reaching out and helping the people who are in need, these incidents will only create fear and anger in society, Sri Sri said.”
Source - The Hindu - http://www.hindu.com/2009/04/27/stories/2009042759991100.htm


Life without Tigers in Lanka

B Raman

What next after the defeat of the LTTE? Will the Sri Lankan Army and Sinhalese extremist elements allow Mahinda Rajapaksa to keep his promise of greater political and economic rights for the Tamils? Or will he, egged on by his Army, try to impose a dictated peace on the Tamils?

The Liberation Tigers of Tamil Eelam is in its death rattle. It was decisively defeated by the Sri Lankan Armed Forces weeks ago, but a handful of its leadership headed by Pirabhakaran has cynically and cruelly prolonged the agony of the Tamil civilians by using them as a buffer and human-shield in order to delay the re-establishment of the writ of the Sri Lankan Government in a miniscule piece of territory (about 20 sq.kms), which has been declared by the Government as a no-fire zone to avoid collateral casualties among the civilians still under the control of the LTTE and to enable them to escape from the clutches of the LTTE.

Pirabhakaran is a leader with a split personality. During the last 26 years he has dominated the Tamil landscape in Sri Lanka, he had shown a remarkable organising capacity and an ability to motivate his followers to perform virtual miracles. He motivated his cadres to acquire a capability for action by air and sea would go down in the history of insurgency and terrorism as indicating an organising capability of a high order. The LTTE under his leadership managed to bring almost the entire Tamil-inhabited territory in the Northern and Eastern Provinces under its control. The determined manner in which the LTTE fought against the Indian-Peace Keeping Force in the late 1980s and frustrated its efforts to defeat it spoke highly of its capabilities for a conventional warfare.

If Pirabhakaran had the activities of the LTTE confined to conventional warfare and developed the LTTE as a purely insurgent force, which targeted only the armed forces and not innocent civilians, he would have acquired greater support from the international community for the Tamil cause. The rational side of his personality as illustrated by his organising capabilities had to constantly contend with a highly irrational side, which drove him to simultaneously take to terrorism of a shockingly brutal kind.

The targeted killings by the LTTE of many Sri Lankan Tamil leaders, who were perceived by Pirabhakaran as possible impediments to his rise as the unquestioned leader of the Tamil community, and its brutal assassination of Rajiv Gandhi in May 1991 were the outcome of the irrational side of his personality. No other Indian leader had done more to help the Sri Lankan Tamil cause than Mrs Indira Gandhi and Rajiv Gandhi. Only a sickly and sickening irrational mind could have ordered the assassination of Rajiv Gandhi and Laxman Kadirgamar, a highly-respected Tamil leader, who was a senior adviser on foreign policy to former President Chandrika Kumaratunge. The assassination of Rajiv Gandhi on Pirabhakaran’s orders shocked Indian public opinion — including public opinion in Tamil Nadu — and weakened Indian support for the Tamil cause. The assassination of Kadirgamar shocked the Western public opinion and led to the declaration of the LTTE as a terrorist organisation by the Western world, thereby denying the last vestiges of Western support for the Tamil cause.

As the LTTE faced one defeat after another during the last three years from the Sri Lankan Armed Forces — initially in the Eastern Province and finally in the Northern Province — the irrational side of Pirabhakaran’s personality erased his rational side. His shocking use of the Tamil civilians in order to delay the final end of the counter-insurgency and counter-terrorism campaign undertaken by the Sri Lankan Armed Forces is driven by this irrational streak in him, which now dominates his personality.

The prolonged agony of the Sri Lankan Tamils caused by the final bout of Pirabhakaran’s irrationality and loss of lucidity in thinking has to be ended. The Sri Lankan Armed Forces, which have shown patience till now and deliberately slowed down their operations, cannot be faulted if they have come to the conclusion that the time has come to liberate the no-fire zone too from the clutches of the LTTE by undertaking limited operations with small arms and ammunition even at the risk of some collateral casualties to the civilians.

After the final death of the LTTE, which is expected any day, what is the future of the Sri Lankan Tamil cause? Would a Requiem for the LTTE also mean a Requiem for the Sri Lankan Tamil cause? Hopefully not. It is in India’s interest that the LTTE as a terrorist organisation is destroyed once and for all, but it is not in India’s interest that the Sri Lankan Government and Armed Forces proceed from the destruction of the LTTE to the destruction of the Tamil aspirations for greater political and economic rights in their traditional homeland and for greater human dignity.

President Mahinda Rajapakse has repeatedly promised that once the LTTE is defeated, he would be generous in meeting the political aspirations of the Tamils. He gives the impression of being a sincere man, but will the Sinhalese Army with its head bloated by its success against the LTTE allow him to do so? The indicators till now are not encouraging. Many Sri Lankan officers might have been trained in India, but their mindset and their attitude towards the minorities have more in common with those of their Pakistani counterparts than with those of their Indian counterparts. Therein lies the danger that after winning the war against the LTTE, the Government, strongly influenced by a victorious army, might trey to impose a dictated peace on the Tamils.

If the angry Tamils once again look up to India, there is no reason why we should not reciprocate provided a new leadership emerges in the Tamil community and it has drawn the right lessons from the brutalities of the LTTE.

The LTTE is deservedly dying, but long live the Tamil cause.

-- The writer is a leading counter-terrorism analyst.
Source: The DailyPioneer - http://www.dailypioneer.com/172586/Life-without-Tigers-in-Lanka.html

Read More...

வார்த்தை பற்றி - ரா.கிரிதரன்

வார்த்தையில் அவ்வப்போது எழுதுவதால் இந்த பின்னூட்டத்தை இடவில்லை.
உயிர்மையிலிருந்து நேற்று வெளியாகத்தொடங்கிய 'மந்திர வாசல்' என்ற ambient நாளிதழ் முதல் மாதாமாதம் படிப்பதால் , ஒரு வாசகனாக இதை எழுதுகிறேன்.

மற்ற இதழ்கள் ஆரம்பித்த ஒருசில மாதங்களுக்குள்ளே அதிகார கோட்டையாகிவிடும்.அந்த அதிகார வட்டத்திற்குள் ஸ்டார் எழுத்தாளர்கள் புகுந்துவிட்டால், அதன் வாசல் சீல் வைக்கப்படும்.அதற்குப் பிறகு அதில் நுழையவோ,அந்த எழுத்தாளர்கள் ஆக்கங்களுக்கு விமர்சனமோ எழுத முடியாது.மற்றவர்கள் இருப்பதைக் கூட கண்டுகொள்ள மாட்டார்கள்.
இதை நான் எழுதிய 'ராஸ லீலா' விமர்சனத்தில் அனுபவித்திருக்கிறேன்.இந்த் நீண்ட விமர்சனம் ஆரோக்கியமான ஒன்றாக இருந்தும், அதை உயிர்மையிலிருந்து எந்தப் பத்திரிக்கையும் வெளியிட மறுத்தது. இல்லை,மறுக்கவில்லை, ஆனால் எந்த பதிலும் கிடைக்காமல் பல மாதங்கள் கழிந்தது.

அதற்கு பிறகு வார்த்தைக்கு அனுப்பியபோது - புத்தக விமர்சனங்கள் வெளியிடும் விதியைப்பற்றி அவர்கள் கூறி , வெளியிட மறுத்தார்கள்.குறைந்தபட்சம் இரு நாட்களுக்குள் பதில் கிடைத்தது.வெளியிட மறுத்தது அவர்கள் உரிமை.இந்த எழுத்து சுதந்திரத்தை வேறு இதழ்களில் அனுபவித்து விட்டு இதற்கு பதில் எழுதலாம்.litmus testஐ முயற்சி செய்து பார்க்கலாம்.
தொடர்ந்து நான் அந்த இதழில் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.கடைசியில் என்னுடைய வலைப்பதிவில் போட்டு அந்தக் கட்டுரைக்கான திட்டுகளை வாங்கிக்கொண்டிருக்கிறேன்!!

சட்டம், ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்பு, இவற்றைத்தவிர வெளி ரங்கராஜனின் கட்டுரைகள் (மார்ச் 2009 வந்ததுதான் அவரின் பெஸ்ட்),கோபால் ராஜாராமின் அரசியல் கட்டுரைகள் - இவற்றையும் படித்துப் பாருங்கள்.

'அரசியல் கட்டுரையை' அரசியல் மீறி எப்படி வாசிப்பது

காந்தியை அரசியல்வாதியாய் பார்க்கும் நம் நாட்டில்(மால்கம் Xஐ கூட அப்படி பார்த்திருக்க மாட்டார்கள்), அப்படியே இந்த கட்டுரையை படித்தால் புரிதல் இப்படித்தான் இருக்கும்.

மற்றபடி தமிழச்சி,ஜெயகாந்தன் கேள்வி-பதில் - இப்படிப்பட தவறுகளை மன்னிக்கலாம்.

இன்று இருக்கும் தமிழ் பிரசுர சூழ்நிலையில் ஆளுமைகளின் பரிமளிப்பு அவசியம் தேவைப்படுகிறது.அவர் பங்களிப்பால் பத்திரிகையின் வளர்ச்சி பாதை புரியும்.ஆனால் ஜெயகாந்தனின் one linersஐ யாருமே ரசிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

அப்படி ஒன்றும் எழுத்தாளர்கள் குழு ஒன்று வார்த்தையில் உருவாகவில்லை. கடந்த 12 இதழ்களில் தொடர்ந்து எழுதுபவர்கள் 8 பேர்கள் மட்டுமே. 20 கட்டுரை,கதைகள்,விமர்சனங்கள் வெளியாகும் ஒரு இதழில் 8 ஒன்றும் பெரிய அளவு அல்ல. அதைத் தவிர இந்த 8இல் குறைந்தது ஐந்தாவது sensible ஆக உள்ளது.

Read More...

ஜெயலலிதாவின் தனி ஈழம்

தேர்தல் நெருங்க நெருங்க ஜெயலலிதாவின் பேச்சுக்கள் வேடிக்கையாக இருக்கிறது ...


சனிக்கிழமை சேலத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகையில் இலங்கை தமிழர் பிரச்சனை தமிழ் ஈழம் என்ற தனி நாடே தீர்வாக இருக்க முடியும் என்று பிதற்ற ஆரம்பித்துள்ளார்.

அதற்கு மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறுகையில் ஜெயலலிதா வற்புறுத்தும் தமிழ் ஈழ கோரிக்கை தேசவிரோதமானது என்று சொல்ல

அதற்கு ஜெயலலிதா

இந்தியாவில் எந்தப் பகுதியையும் பிரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இலங்கையில் இருந்துதான் தமிழ்ஈழத்தை பிரிக்க வேண்டும் என்று சொன்னேன். நாட்டுப்பற்று பற்றி கபில்சிபல் எனக்கு பாடம் நடத்த வேண்டியது இல்லை


ஆனால் இதே ஜெயலலிதா ஜனவரி மாதம் கருணாநிதிக்கு அளித்த பதிலில் இப்படி கேள்வி கேட்கிறார்

காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் நிலவும் பிரிவினை கோரிக்கை குறித்து- அதாவது தனிநாடு கோரிக்கை குறித்து கருணாநிதி மற்றும் தி.மு.க. வின் நிலைப்பாடு என்ன? இலங்கையில் உள்ள தனித்தமிழ் ஈழம் குறித்து கருணாநிதி என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளாரோ, அதே நிலையை இந்தியாவின் பிரச்னைக்குரிய மாநிலங்களுக்கும் அறிவுறுத்த விரும்புகிறாரா?


ஜெயலலிதா மார்ச் மாதம் உண்ணாவிரதம் இருந்த போது பேசியது

சட்டத்தின் முன் அனைவரும் சமம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சம உரிமை ஆகிய இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய போராட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆயுதம் ஏந்திய போராட்டத்தை எதிர்க்கிறோம்.


ஆனால் இன்று தேர்தலுக்காக இப்படி பேசுகிறார்

தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இடங்களைப் பிரித்து, இலங்கையில் அரசியல் அமைப்புக்கு உள்பட்டு தனி அதிகாரம் கொண்ட பகுதியாக இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தேன். இலங்கை அரசு இது போன்ற எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள தயாராக இல்லாததால், ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் (சீனாவை தவிர்த்து) அறைகூவலை ஏற்காமல் புறம் தள்ளியது. எனவே, தமிழ் ஈழம் அமைப்பதே இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு.


இதற்கு இவருக்கு கிடைத்த நல்ல பதில்

தமிழ் ஈழத்தை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா வேறு ஓர் நாட்டை அதற்காக தெரிவு செய்வதே புத்திசாலித்தமானது - இலங்கை பாதுகாப்புச் செயலளார் கோத்தபாய ராஜபக்சே.


இந்த மாதிரி பதில்களை பார்த்தால் இலங்கை அரசு குண்டுவீச்சு நிறுத்திவிட்டது என்று எப்படி நம்புவது ?

Read More...

தமிழகத்தில் 75% கோடீஸ்வர வேட்பாளர்கள்

பல்வேறு இடங்களில் கண்டுபிடித்த சொத்து விவரங்கள். அக்ஷயத்ருதீயை ஸ்பெஷல் என்று வைத்துக்கொள்ளுங்கள் :-)

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்கள் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் 75 சதவீதம் பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தான் ஏழை மக்களுக்காக குரல் கொடுக்க போவதாக சவடால் பேசிவருபர்கள். இதே நிலை நீடித்தால் சாமானிய மக்கள் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.கடந்த 2004 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பல எம்.பி.,க்கள் இந்த முறையும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மனு தாக்கலின் போது அவர்கள் காட்டிய சொத்து விவரம், அதிகாரிகளை மட்டுமின்றி மக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 10 லட்சம் மதிப்பு காட்டிய வேட்பாளர்கள் கூட இன்று 10 கோடி ரூபாய் வரை சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளனர். தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இதே நிலை தான் நீடிக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் கடந்த பல தேர்தல்களோடு ஒப்பிடுகையில், இந்த லோக்சபா தேர்தல் சற்று வித்தியாசமாக தெரிகிறது. பண பலம் படைத்தவர் மட்டுமே வேட்பாளர் என்ற நிலை உள்ளது. குறைந்தபட்சம் லட்சாதிபதியாக உள்ளவர் தான் வேட்பாளராக களம் இறக்கப் பட்டுள்ளார். ஒவ்வொரு அரசியல் கட்சியும் அறிவித்துள்ள வேட்பாளர்களில் 75 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்கள் சிலருடைய சொத்து விவரம்:


தி.மு.க: மதுரை அழகிரி - 19 கோடி ரூபாய், கரூர் பழனிசாமி- 75.53 கோடி ரூபாய், ஸ்ரீபெரும்புதூர் டி.ஆர்.பாலு - 8 கோடி ரூபாய், பெரம்பலூர் நெப்போலியன் - 15.33 கோடி ரூபாய், ராமநாதபுரம் ரித்தீஷ் - 6 கோடி ரூபாய், அரக்கோணம் ஜெகத்ரட்சகன் - 5.91 கோடி ரூபாய், பொள்ளாச்சி சண்முகசுந்தரம் - 5.74 கோடி ரூபாய். இப்படி தி.மு.க.,வில் கோடீஸ் வர்கள் பட்டியல் நீள்கிறது.அ.தி.மு.க: திருப்பூர் சிவசாமி - 5.07 கோடி ரூபாய், பொள்ளாச்சி சுகுமார் 2.22 கோடி ரூபாய், சேலம் செம்மலை 2 கோடி ரூபாய் என கணக்கு காட்டியுள்ளனர். இவர்கள் தவிர கட்சியின் புதுமுகங்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் உட்பட 15 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்.காங்கிரஸ்: சேலம் தங்கபாலு - 10.87 கோடி ரூபாய், ஈரோடு இளங்கோவன் - 2.84 கோடி ரூபாய், திருச்சி சாருபாலா - 58.62 கோடி ரூபாய், திண்டுக்கல் சித்தன் - 1.50 கோடி ரூபாய், தேனி ஆரூண்-25 கோடி ரூபாய், சிவகங்கை சிதம்பரம் 27.50 கோடி ரூபாய், கோவை பிரபு - 22.43 கோடி ரூபாய் என கணக்கு காட்டியுள்ளனர். காங்., கட்சியில் போட்டியிடும் 16 பேரில் 10க்கும் மேற்பட்டோர் கோடீஸ்வரர்கள்.தே.மு.தி.க: திருச்சி விஜயகுமார் - 4.5 கோடி ரூபாய், சேலம் மோகன்ராஜ் - 5.70 கோடி ரூபாய், நாமக்கல் மகேஸ்வரன் - 7.50 கோடி ரூபாய், கள்ளக்குறிச்சி சுதீஷ் - 5.20 கோடி ரூபாய், நெல்லை மைக்கேல் ராயப்பன் - 26 கோடி ரூபாய், தர்மபுரி இளங்கோவன் - 1.40 கோடி ரூபாய், அரக்கோணம் சங்கர் - 2 கோடி ரூபாய், விருதுநகர் பாண்டியராஜன் - 6.50 கோடி ரூபாய், நீலகிரி செல்வராஜ் - 1.10 கோடி ரூபாய் உள்ளிட்ட 20 பேர் கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.ம.தி.மு.க., வேட்பாளர் ஈரோடு கணேசமூர்த்தி - 2.22 கோடி ரூபாய், பா.ம.க., வேலு - ஒரு கோடி ரூபாய், தர்மபுரி செந்தில் 1.40 கோடி ரூபாய், ஸ்ரீபெரும்புதூர் ஏ.கே.மூர்த்தி - 1.40 கோடி ரூபாய், பா.ஜ., வேட்பாளர் திருச்சி லலிதாகுமாரமங்கலம் - 4.95 கோடி ரூபாய், விருதுநகர் கார்த்திக் - 5.70 கோடி ரூபாய், கொங்குநாடு முன்னேற்ற பேரவை பொள்ளாச்சி பெஸ்ட்ராமசாமி - 49.56 கோடி ரூபாய், கொங்கு இளைஞர் பேரவை நாமக்கல் தனியரசு - 5.60 கோடி ரூபாய் என அனைத்து கட்சியிலும் கோடீஸ்வரர் வேட்பாளர் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.மனு தாக்கல் செய்துள்ளவர்கள் காட்டியுள்ள சொத்து மதிப்பு மிக மிக குறைத்து மதிப்பிடப்பட்டு, அதன் அடிப்படையில் காட்டப்பட்டுள்ள சொத்து கணக்கு தான். அதை தான் மனுவுடன் கமிஷனுக்கு சமர்ப்பித்துள்ளனர். இதில் காட்டப்படாத, கணக்கில் வரதாக சொத்து மதிப்பு எத்தனை கோடியோ என்ற கேள்வி ஓட்டுப் போடும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கி தவிக்கிறது என்று அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர். அடித்தட்டு மக்களுக்கும், சாமானியர்களுக்கும், மாதச் சம்பளம் வாங்குவோருக்கு மட்டும் தான் பொருளாதார நெருக்கடி பிரச்னை. 'ஏசி' அறையில் அமர்ந்து கொண்டு, 'பொருளாதார நெருக்கடி' என பேசும் அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் கோடீஸ்வரர்கள் தான். இவர்கள் தான் இந்த தேர்தலில் பெரும்பாலான தொகுதியில் போட்டியிடுகின்றனர். இவர்கள் தான் ஏழை, நடுத்தர மக்களின் பிரச்னைக்காக பார்லியில் குரல் கொடுக்க போகின்றனராம். பொருளாதார நெருக்கடியெல்லாம் இவர்களுக்கு மட்டும் சாமானியம் தான்.

-0o0-

தமிழகத்தில் போட்டி யிடும் வேட்பாளர்களின் சொத்து பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் கரூர் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனி சாமி இவரது சொத்து மதிப்பு 77.12 கோடி கடந்த 2004 இல் இவரது சொத்து மதிப்பு 51.48 கோடி. அடுத்த இடத்தை பிடிப்பவர் திருச்சி காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் இவரது சொத்து மதிப்பு 56.62 கோடி அடுத்த மத்திய மைச்சர் ப.சிதமபரத்தின் சொத்து மதிப்பு 27 கோடி கடந்த 2004 ஆம் அண்டு இவரது சொத்து மதிப்பு 10 கோடி. திண்டுக்கல் தே.மு.தி.க வேட்பாளர் முத்து வேல் ராஜின் சொத்து மதிப்பு 27 கோடி, அடுத்து நெல்லை தேமு.தி. க வேட்பாளர் மைக்கேல் ராயப்பனின் சொத்து மதிப்பு 23 கோடி. அடுத்த இடத்தை பிடிப்பவர் கோவை காங்கிரஸ் வேட்பாளர் பிரவி அவரது சொத்து மதிப்பு 22 கோடி கடந்த 2004 சொத்து மதிப்பு 10.24 கோடி, மதுரை தொகுதி தி.மு.க வேட்பாள அழகிரியின் சொத்து மதிப்பு 13 கோடி ராமநாதபுரம் தி.மு.க வேட்பாளர் கே.ரித்திஷ் சொத்து மதிப்பு 10 கோடி சேலம் காங்கிரஸ் வேட்பாளர் கே.வி.தங்க பாலுவின் சொத்து மதிப்பு 9.92 கோடி கடந்த 2004 சொத்து மதிப்பு 6.37 கோடிதூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் ஜெயதுரை சொத்து மதிப்பு 9.1 கோடி

தென்காசி தொகுதியில் போட்டியிடும் சிபி.ஐ வேட்பாளர் லிங்கம் தான் மிகஏழ்மையான வேட்பாளர் அவருக்கு 5000 மதிப்பில் பெட்டிக்கடையும், 85,000 மதிப்பில் வீடும் அனட்த வீட்டின் பெயரில் 25 ஆயிரம் கடனும் உள்ளது.

வேட்பாளர்களும் சொத்துக்கணக்கும் - ஜெ. ராகவன்

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலின் போது தனியாக பிரமாணப் பத்திரத்தில் தங்களது சொத்து விவரங்களைக் குறிப்பிடுகின்றனர். இதனால் வாக்காளர்களுக்கோ அல்லது பொது மக்களுக்கோ எந்தவித பலனும் இருப்பதாகத் தெரியவில்லை. இதைவைத்து ஒருவரை வாக்காளர்கள் மதிப்பிடமுடியாது. இவை எல்லாவற்றையும் விட இந்தத் தகவல்கள் முழுமையானதா என்பதும் சந்தேகமே.

பெரும்பாலான வேட்பாளர்கள் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ள சொத்து விவரங்கள் தவறானவையாகவோ அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டோ இருக்கக்கூடும் என்று தெரிகிறது. உதாரணமாக முன்னாள் பிரதமர் தேவெகௌடா, ராஜீவ் காந்தி மகன் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களின் சொத்து விவரங்களைப் பார்த்தால் தெரியும்.

சில வேட்பாளர்கள், "எங்களுக்கு சொந்தமாக வீடு கிடையாது, சொந்தமாக கார் கிடையாது' என்று தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் தங்கள் குடும்பத்தினரிடமிருந்தே கடன் வாங்கியிப்பது போல் தெரிவித்துள்ளனர்.

நேரு குடும்பத்தைச் சேர்ந்தவரான ராகுல் காந்தி, தனது பிரமாணப் பத்திரத்தில் தில்லி அருகே 5 ஏக்கரில் பண்ணை நிலமும் வீடும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மதிப்பு ரூ.9.8 லட்சம்தானாம்.

தேர்தலில் மீண்டும் போட்டியிடும் வேட்பாளர்களின் சிலரின் சொத்து விவரங்களைப் பார்த்தால் அவர் முந்தைய தேர்தலில் கொடுத்த சொத்துக்களின் மதிப்பைவிட இப்போது கொடுத்துள்ள சொத்துக்களின் மதிப்பு கணிசமாக அதிகரித்திருப்பது தெரியவரும்.

இதேபோல சில அரசியல்வாதிகள் வேட்புமனு தாக்கலின் போது குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், அவர்களின் உண்மையான சொத்து விவரங்களுக்கும் பெருத்த இடைவெளி இருப்பது தெரியவரும்.

வேட்பாளர் யார்? அவரது பின்புலம் என்ன? அவரது சொத்து மதிப்பு என்ன? என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அவற்றை வேட்பு மனு தாக்கலின்போது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடுகின்றனர். ஒருவேளை ஊழல் புகார்கள் எழுந்தால் அவரது உண்மை நிலை என்ன? இப்போது உள்ள நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்வதுதான் இதன் நோக்கம்.

வேட்புமனு பரிசீலனையின் போது ஒருவர் சொத்து பற்றிய விவரங்களை தவறாகக் கொடுத்திருப்பது தெரியவந்தால் தகுதி இழப்பு செய்யப்பட மாட்டார். குறுகிய காலத்தில் ஒருவரின் சொத்து விவரங்களை ஆய்வு செய்வது என்பது இயலாத காரியம். ஆனால், தேர்தலில் வெற்றிபெற்ற ஒருவர், தனது சொத்து பற்றிய விவரங்களைத் தவறாகத் தந்திருந்தது தெரியவந்தால் அவரது எம்.பி. பதவியோ அல்லது எம்.எல்.ஏ. பதவியோ பறிக்கப்பட வேண்டும். இதற்கு இப்போது சட்டத்தில் இடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. இல்லையெனில் இதை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் மக்களாட்சி நடைபெறுவதாக அர்த்தம் கொள்ள முடியும்.

தில்லியில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர், தனக்கு ரூ.4.28 கோடி சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர், நான் மட்டும் என்ன சளைத்தவனா என்றுகூறி தமக்கு ரூ.6.17 கோடி சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இவர்கள்தான் இப்படி என்றால் சுயேச்சை வேட்பாளர்களும் கோடீஸ்வரர்களாகத்தான் இருக்கிறார்கள். கிம்ஜி படாடியா என்ற சுயேச்சை வேட்பாளரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? மலைத்துப் போய்விடாதீர்கள் ரூ. 500 கோடிக்கு மேல். குருúக்ஷத்திரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தொழிலதிபர் நவீன் ஜிண்டாலின் சொத்து மதிப்பு ரூ.125 கோடி. ஆனால், இவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.1.2 கோடி மதிப்புள்ள சொத்துகளும், ரூ.5 கோடி மதிப்புக்கு நகைகளும், ரூ.6 கோடி மதிப்புக்கு நிலங்களும், எல்.ஐ.சி.பாலிசி ரூ.4.5 கோடிக்கு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் ஆச்சரியம் என்ன வெனில் இவருக்கு சொந்தமாக வீடோ, காரோ இல்லையாம். இது எப்படி இருக்கு?

இதற்கு ஒரே வழி, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தங்கள் சொத்து விவரங்களைத் தவறாகக் கொடுத்திருந்தாலோ, அல்லது மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருந்தாலோ அல்லது தொகுதி வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் இருந்தாலோ அவர்களைத் திரும்ப அழைக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.தேர்தல் களத்தில் கோடீஸ்வரர்கள்! - இரா. செழியன்
ஒரு வேட்பாளர் மீது நீதிமன்றங்களில் குற்றம்சாட்டப்பட்டிருந்தாலும், தண்டனை தரப்பட்டிருந்தாலும், அவற்றுக்கான விவரங்களை ஓர் உறுதி ஆவணம் மூலம் நியமன மனு பரிசீலனை செய்வதற்கு முன் வேட்பாளர் தர வேண்டும் என்ற விதிமுறை 2004 தேர்தலில் ஆரம்பித்தது.

அதேபோல், வேட்பாளருக்கு உள்ள சொத்து விவரங்களையும், அவரின் துணைவி அல்லது துணைவர் மற்றும் அவர் பராமரிப்பில் உள்ள உறவினர்கள் ஆகியவர்களின் சொத்து விவரங்களையும் மற்றோர் ஆவணம் மூலம் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

தேர்தலுக்குத் தேர்தல் கட்சி மூலமாகவும், ஏராளமாகச் செலவழிக்கக்கூடிய வேட்பாளர்கள் மூலமாகவும் நேர்மையான தேர்தலைப் பணநாயகம் வெகுவாகப் பாதிக்கிறது என்பது பொதுவாக பொதுமக்களால் உணரப்பட்டது. பணபலத்தின் ஆதிக்கம் பெருகி வருவதை வேட்பாளர்கள் தரும் சொத்து விவரங்கள் ஓரளவு வெளிப்படுத்துகின்றன.

2004 பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களின் சொத்து விவரங்களை சில தனியார் நிறுவனங்கள் ஆராய்ந்தன. இந்திய மக்கள்தொகையில் 75 சதவிகித மக்களுக்கு சராசரியாக நாளொன்றுக்கு தலா 20 ரூபாய்க்கும் குறைந்த வருமானம்தான் இருக்கிறது.

இவ்வாறு பரம ஏழைகளாக உள்ளவர்களின் வாக்குகளைப் பெற்று 2004-ல் நாடாளுமன்றத்துக்குச் சென்ற பிரதிநிதிகளின் சொத்து விவரங்களை ஆராய்ந்ததில், மாநிலங்களவை உறுப்பினர்களில் பாதிப் பேருக்கு மேலும், மக்களவையில் மூன்றில் ஒரு பகுதியினரும் கோடீஸ்வரர்களாக இருப்பது தெரிய வந்தது.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிமிக்க மாநிலமாக விளங்கும் மகாராஷ்டிரத்தில் தற்போதைய 2009 தேர்தலில் போட்டியிடும் 1,625 வேட்பாளர்களில் 200 கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 64 பேர் காங்கிரஸ், 36 பேர் சரத் பவாரின் கட்சி, 23 பேர் பா.ஜ.க., 25 பேர் சிவசேனா எனக் கட்சிகள் பங்கு போட்டுள்ளன.

2009 தேர்தலில், இதுவரை வந்துள்ள விவரங்களின்படி, பெரும் செல்வந்தராக இருக்கும் வேட்பாளர் மேற்கு தில்லி தொகுதியில் போட்டியிடும் தீபக் பரத்வாஜ் (பகுஜன் சமாஜ் கட்சி). அவருக்குள்ள சொத்து ரூ. 603 கோடி. அடுத்து குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் போட்டியிடும் கிம்ஜி பட்டாடியா. அவருக்கு இருக்கும் சொத்து 524 கோடி ரூபாய்.

கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் உலகளாவிய பொருளாதார நெருக்கடியில் இந்திய நாட்டின் மொத்த ஆண்டு வருமானமும் சரிந்துவிட்ட நிலையில், விலைவாசிகள் உயர்ந்து, வருமானம் குறைந்து பெரும்பாலான மக்கள் அல்லற்பட்டாலும் தற்பொழுதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் மீண்டும் 2009 தேர்தலில் போட்டியிட முற்பட்டபொழுது அவர்கள் தந்துள்ள சொத்து விவரங்களைப் பார்த்தால், கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஆச்சரியப்படும் வகையில் சொத்துகள் வேக வேகமாக வளர்ந்துள்ளன.

ஆந்திரத்தில் எல். ராஜகோபாலின் (காங்., விஜயவாடா) சொத்து 2004-ல் ரூ. 10 கோடி என இருந்து 2009-ல் ரூ. 299 கோடியாக உயர்ந்துவிட்டது. 30 பங்கு பிரம்மாண்டமான வளர்ச்சி.

ஆந்திரத்தின் முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சொத்து 2004-ல் ரூ. 4.26 கோடி என இருந்து, 2009-ல் ரூ. 1.34 ஆகக் குறைந்துவிட்டது. கடப்பா மாவட்டத்தில் புலிவெந்துலா சட்டசபைத் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடும் சட்டசபைத் தொகுதியை உள்ளடக்கிய கடப்பா நாடாளுமன்றத் தொகுதியில் அவர் மகன் ஜகன்மோகன் ரெட்டி போட்டியிடுகிறார். மகனுக்கு உள்ள சொத்தின் மதிப்பு ரூ. 60 கோடி. தந்தையைவிடப் பல மடங்கு அதிகமான சொத்தை மகன் திரட்டியிருப்பது தந்தை மகனுக்கு ஆற்றிய கடமை என்றுதான் கூற வேண்டும். தேர்தல் போட்டியில் தந்தை மகனுக்கும் மகன் தந்தைக்கும் அரும்பாடுபட்டு ஆதரவு திரட்டுகிறார்கள். கட்சி வளர்ச்சிக்காக ஒரு குடும்பம் எவ்வாறு பாடுபடுகிறது, பாருங்கள்!

அகில இந்திய அளவில் உள்ள அரசியல் குடும்பத்தின் தேர்தல் பங்கீட்டைப் பார்க்கலாம். சோனியா காந்தி 2006-ல் ராய் பரேலி தொகுதியில் போட்டியிட்டபொழுது அவருக்கு இருந்த சொத்து ரூ. 95 லட்சம். 2009 தேர்தலில் அவர் தந்த சொத்து விவரம் 1 கோடியே 38 லட்சம் ரூபாய். சொந்தத்தில் இத்தாலியில் அவர் பெயரில் உள்ள ஒரு வீடு 18 லட்சம் ரூபாய் மதிப்புடையது. அதுவும் ஆவணத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் அவருக்கு வீடு, கார் என எதுவும் கிடையாது.

ராகுல் காந்தியின் சொத்து 2004-ல் ரூ. 63 லட்சம் என இருந்தது. 2009 தேர்தல் காலத்தில் அது 2 கோடியே 33 லட்சம் ரூபாய் என வளர்ந்துவிட்டது. கோடீஸ்வரியாக இருந்த சோனியா காந்தி லட்சாதிபதியாக மாறினார், லட்சாதிபதியாக இருந்த ராகுல் கோடீஸ்வரராக ஆகிவிட்டார். ராகுல் காந்திக்கும் சொந்தமாகக் கார் கிடையாது.

இப்படி இருப்பதுதான் அரசியல் குடும்பங்களின் பாரம்பரிய வளர்ச்சி.

தேர்தல் களத்திற்கு வரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வளர்வதைப்போல, குற்றவாளி வேட்பாளர்களின் பங்கும் வேகமாக வளர்ந்து வருகிறது. 2009 தேர்தலில் இதுவரை வந்துள்ள விவரங்களின்படி 1,425 வேட்பாளர்களில் 222 பேர் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள். செல்வம் குவிகிற வேகத்தில் குற்றங்கள் புரிவதும் வேகமாகப் பெருகி விடுகிறது. அதேபோல் குற்றங்கள் பல புரிந்தால்தான் கோடீஸ்வரராக ஆக முடியும் என்ற நிலைமையும் உண்டாகிவிட்டது. ஒன்றுடன் ஒன்று இணைந்து தேர்தல் களத்தை ரணகளமாக ஆக்கிவிட்டன.

தனிப்பட்டு கோடீஸ்வரர் என்பதாலேயே ஒவ்வொரு வேட்பாளரும் வெற்றி பெற்று விடுவார் என்று கூற முடியாது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 365 கோடீஸ்வரர்கள் போட்டியிட்டார்கள், அவர்களில் 80 பேர் மட்டுமே - அவர்களும் ஏதாவது ஒரு முக்கியக் கட்சியின் ஆதரவைப் பெற்றதால்தான் - வெற்றி பெற்றனர். அதேசமயம் போட்டியிட்ட கோடீஸ்வரர்களில் 88 பேர் தமது வைப்புத் தொகையை (டெபாசிட்டை) இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாகாலாந்து நாடாளுமன்றத் தொகுதியில் 2004 தேர்தலில் நான்கு பேர் போட்டியிட்டனர். அவர்களில் நியம்துங்கோ என்ற வேட்பாளர் தந்த சொத்து விவரம் 9,000 கோடி ரூபாய். அந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 41 ஆயிரம். அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் 9 லட்சத்து 55 ஆயிரம். நாகாலாந்து மக்கள் முன்னணியின் வேட்பாளர் 6 லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் பெற்று, இரண்டாம் இடத்தைப் பெற்ற காங்கிரஸ் வேட்பாளரை 4 லட்சத்து 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 9,000 கோடி ரூபாய் சொத்துடைய நியம்துங்கோ நான்காவது இடத்தில் 3,687 வாக்குகளுடன் படுதோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற வேட்பாளருக்கு இருந்த சொத்து 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்தான். இதனால் வேட்பாளர் ஒரு கோடீஸ்வரர் என்பதாலேயே வாக்காளர்கள் தமது ஆதரவைத் தருவதில்லை. நாகாலாந்து மாநிலத்தில் இருப்பது ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதிதான்.

மேலும் காங்கிரஸ் - பா.ஜ.க. இரண்டு கட்சிகளுக்கும் தேசிய அளவில் நாகாலாந்து மக்கள் முன்னணி ஆதரவு தரவில்லை. இருப்பினும், நாகாலாந்து வாக்காளர்கள் ஒரு தொகுதி என்றாலும் அலட்சியப்படுத்தாமல் தமது மாநிலக் கட்சி வேட்பாளரையே வெற்றி பெறச் செய்தார்கள்.

தமது சொத்து 9,000 கோடி ரூபாய் என்று நாகாலாந்து வேட்பாளர் தந்த விவரம் சரியானதா என்ற கேள்வி அப்பொழுதே பத்திரிகைகளில் எழுப்பப்பட்டது. வேட்பாளர் தரும் குற்றப்பட்டியல் - சொத்து விவரம் ஆகிய இரண்டும் சட்டப்படியான அத்தாட்சி பெற்ற ஆவணங்கள் ஆகும்.

அவற்றில் உண்மையான விவரங்களை மறைப்பதும், பொய்யான விவரங்களைத் தருவதும் தெரிய வந்தால், தேர்தல் சட்டப்படியும் இந்திய குற்றவியல் சட்டப்படியும் ஆறு மாத சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.

சொத்து ஆவணத்தில் உண்மைக்கு மாறான விவரங்களை ஒரு வேட்பாளர் தந்திருந்தால், அதுபற்றிய ஆட்சேபனையை அங்கு போட்டியிடும் மற்றொரு வேட்பாளர்தான் ஓர் உறுதி ஆவணம் மூலம் வேட்பு மனுக்களைப் பரிசீலிக்கும் தேர்தல் அதிகாரியிடம் தரலாம். அதற்குத் தகுந்த விளக்கத்தைச் சம்பந்தப்பட்ட வேட்பாளர் தந்தால் தேர்தல் அதிகாரி அதற்கு மேல் ஒன்றும் செய்வதில்லை.

வேட்பாளர் தரும் சொத்து விவரங்களைத் தேர்தல் அதிகாரி அங்குள்ள வாக்காளர்களுக்கு அறிவிப்பதற்காக, இரண்டு செய்தித்தாள்களில் - அதில் ஒன்று அங்கு பொதுமக்களுக்கு விளங்கக்கூடிய மொழியில் - வெளியிட வேண்டும் என்று சட்டப்படியான கட்டாயம் இருக்கிறது. இதுவரை வேட்பாளர்கள் தரும் சொத்து விவரங்களை முழுமையாகப் பரிசீலனை செய்வதற்கான வழிமுறைகள் எதையும் எவரும் கையாளவில்லை.

2004 பொதுத் தேர்தலுக்குப் பிறகு வேட்பாளர்கள் தந்த சொத்து விவரங்கள் பற்றிய எல்லா ஆவணங்களின் நகல்களைத் தேர்தல் தலைமை, மத்திய நிதி அமைச்சகத்தின் கவனத்துக்கு அனுப்பி வைத்தது. நிதி அமைச்சரோ, வருமான வரி அதிகாரிகளோ, அந்த ஆவணங்களை ஆராய முற்படவில்லை. வேட்பாளர்களின் வருமான - சொத்து விவரங்கள் நிதி அமைச்சகத்தின் வரிகள் பற்றிய பிரிவுகளில்தான் இருக்கும்.

சொத்து விவரங்களை ஆய்வு செய்வதற்குத் தேவையான பின்னணிக் குறிப்புகளும், சட்ட - விதிமுறைகளும் வாக்காளர்களுக்கோ, மற்ற வேட்பாளர்களுக்கோ சிறிதும் இல்லாத காரணத்தால், வேட்பாளர்கள் தரும் விவரங்கள் எத்தகைய கண்காணிப்புக்கும் இதுவரை உட்படாமல் இருக்கின்றன. உறுதி ஆவணங்களை வாங்குவதற்கான நோக்கத்தை நிறைவேற்ற, இனியாவது அந்த ஆவணங்களை வருமான வரி நிறுவனங்கள் முறையாகப் பரிசீலனை செய்ய வேண்டும்.

நமது நாட்டில் பணத்துக்குத் தனி மதிப்பு உண்டு. பணம் உள்ளவனைப் பார்த்தால் "பணக்காரன்' என்பார்கள். லட்சத்துக்கு உரியவன் என்றால், "லட்சாதிபதி' - லட்சத்துக்குத் தலைவன் - என்று மதிப்பார்கள். கோடி ரூபாய் சொத்துடையவர் என்றால், கோடீஸ்வரர் - கோடிக்கு ஈசுவரர், கடவுள் என்று கும்பிடுவார்கள்.

தேர்தல் களத்தில், கோடீஸ்வரர்கள் தரும் பணத்துக்கு மட்டும் வாக்காளர்கள் கட்டுப்படுவதில்லை. பணத்தைத் தரும் கோடீஸ்வரர்கள் பணத்துடன் அந்தந்தப் பகுதியில் உள்ள ஈஸ்வரனின் படத்தையும் வைத்து உறுதிமொழி வாங்கி விடுகிறார்கள்.

கோடி ரூபாயையும், கோவில் ஈஸ்வரனையும் எதிர்த்து எதிர்த்தரப்பு வேட்பாளர்கள் வெற்றி பெறுவது கடினம்.

1962 தேர்தலில் மோட்டார் முதலாளிக்குச் செலவிடப்பட்ட பணத்தையும் அத்துடன் வைக்கப்பட்ட திருப்பதி வெங்கடேசப் பெருமாள் படத்தையும் அறிஞர் அண்ணாவால் சமாளிக்க முடியவில்லை. ஆயினும், அடுத்து வந்த 1967-தேர்தலில் பெரும்பாலான தமிழ்நாட்டு வாக்காளர்களின் பேராதரவைப் பெற்று அவர் மாநில முதல்வராக ஆனார்.

இளமை முதல் தன்னுடன் தோழனாக இருந்த ஏழைக் குசேலனை துவாரகை மன்னரான கண்ணபிரான் மறந்துவிடவில்லை. குசேலன் தந்த அவலுக்குத்தான் அவர் அதிகமான மதிப்பைத் தந்தார். கடவுளின் அவதாரமான கண்ணபிரானே ஏழையாக இருந்த உண்மைத் தோழனுக்குத்தான் ஆதரவு தந்தார் என்பதை வாக்காளர்கள் மறந்துவிடக் கூடாது!

ஜூவியில் வந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள்


சுவிஸ் வங்கியில் அக்கவுன்ட் தொடங்க வேண்டும் என்றால், பாஸ்போர்ட் அவசியம். அதற்கு, 'அந்த பாஸ்போர்ட் இவருக்கு சொந்தமானதுதான், இவர் இன்னார்தான்' என்று அந்தந்த நாட்டின் உள்துறையிடமிருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இப்படி இந்திய அரசின் உள்துறை மூலம் எத்தனை பாஸ்போர்ட்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்கிற விவரத்தை வெளியிட்டால் - சும்மா அதிருமில்ல !


மத்திய சென்னை ம‌க்களவை தொகு‌தி தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறனின் மொத்த குடும்ப சொத்து ரூ.3.89 கோடி என வே‌ட்புமனு‌வி‌ல் குறிப்பிட்டுள்ளார். சன் டிவியில் பத்து செகண்ட் விளம்பரத்துக்கு எவ்வளவு ? ஒரு வருடத்துக்கு எவ்வளவு விளம்பரம் என்று கணக்கு போட்டு அதில் 1% கூட 3.89 கோடிக்கு மேல் வரும்.


வெளிப்படையாகக் கொடுத்த கணக்கிலே இவ்வளவு ஸ்பெக்ட்ரம் தெரிகிறது என்றால் ?

யாராவது கொலை கொள்ளை என்று பட்டியல் போடலாம். பதிவை பொறுத்து ஆட்டோ அல்லது லாரி அனுப்பி வைக்கப்படும்

( நன்றி: தினமலர், மாலைமலர், தினமணி, ஜூவி மற்றும் பல.. )

Read More...

தேர்தல் 2009 - ராமநாதபுரம் யாருக்கு ?


தொகுதி அலசல் + ஒரு நேரடி ரிப்போர்ட்... (நன்றி: சித்து )


ஜெ.கே.ரித்தீஷ்-(தி மு க ) இந்த தொகுதியின் வேட்பாளர். சத்திய மூர்த்தி-(அ.தி.மு.க) சார்பிலும், திருநாவுக்கரசர் (பா.ஜ.க) சார்பிலும் நிற்கிறார்கள்.

இங்கே ரித்தீஷ்குமார் பிரசாரம் செய்தபோது அங்குள்ள மக்களிடம் மைக்கை கொடுத்து அரட்டை அரங்கமாக கலக்குகிறார். மக்களும் மை கிடைத்த சந்தோஷத்தில் 'எங்களுக்கு 'டிவி' வரவில்லை. சுனாமி வீடு ஒதுக்கப்படவில்லை' என குறைகளை அடுக்கி போனார்கள். தேர்தல் முடிந்தவுடன் உங்களுக்கு கிடைக்கும் என்று பதிலளித்தார் ரித்தீஷ். ரித்தீஷ் ஒரு நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் பிரச்சனை இவ்வாறு இருக்க வெங்கையாநாயுடு திருநாவுக்கரசரை ஆதரித்து இவ்வாறு பேசியுள்ளார் "பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வரப்படும். பாக்.,கில் உள்ள பயங்கரவாத பயிற்சி கூடங்கள் கூண்டோடு அழிக்கப்படும். ராமர் பாலம் பாதுகாக்கப்பட்டு, சேது சமுத்திர திட்டம் மாற்று வழியில் நடைபெறும்" மக்கள் புரியாமல் கைத்தட்டினார்கள் என்று சொல்லுகிறார்கள்.

அதிமுக சார்பில் யாரோ யார் நின்றால் நமக்கு என்ன ? அம்மா இந்த தொகுதிக்கு வந்து கருணாநிதி வேலை நிறுத்தம் பற்றி பேசிவிட்டு, மக்களுக்கு பிரியாணி கொடுத்துவிட்டு ஹெலிகாப்டரில் பறந்துவிட்டார்.

ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் புதிய சட்டசபை தொகுதிகளாக, இரண்டு மாவட்ட சட்டசபை தொகுதிகளும் சேர்ந் துள்ளன.
இத்தொகுதியில் வரும் ஆறு சட்டசபை தொகுதிகள்:
1. அறந்தாங்கி
2. திருச்சுழி
3. பரமக்குடி(தனி)
4. திருவாடானை
5. ராமநாதபுரம்
6. முதுகுளத்தூர்

தற்போது அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்தும், திருவாடனை சட்டமன்ற தொகுதி சிவகங்கை தொகுதியில் இருந்தும் இத்தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அறந்தாங்கி என்றால் உங்களுக்கு திருநாவுக்கரசர் ஞாபகம் வந்தால் நீங்கள் அரசியல் செய்திகளை தொடர்ந்து படிப்பவர்.


2004 - 59%(ஓட்டு பதிவு)
பவானி ராஜேந்திரன் தி.மு.க 335287 50 %
முருகேசன் அ.தி.மு.க 225337 33 %
வித்தியாசம் - 17%

1999 - 56%
மலைசாமி அ.தி.மு.க 265253 42 %
பவானி ராஜேந்திரன் தி.மு.க 258607 41 %
வித்தியாசம் - 1%

1998 - 57%
சத்தியமூர்த்தி அ.தி.மு.க 258978 42 %
உதயப்பன் தி.மு.க. 234886 38 %
வித்தியாசம் - 4%

இந்த தொகுதி அதிமுக-ப.ஜ.கவிற்கும் - திமுக தேமுதிகவிற்கும் நல்ல போட்டியாக இருக்கும்.

சித்துவின் நேரடி ரிப்போர்ட்...

ராமேஸ்வரம் சென்று வந்தேன், அங்கு பேசிய ஆட்டோ ஓட்டுனர்கள், வேன் ஓட்டுனர்கள், மற்றும் சில அடித் தட்டு நபர்கள் ஒருமித்த கருத்தாக கூறியது இந்த முறை மக்கள் மனதில் இரு கழகங்கள் மேலும் நம்பிக்கையற்று போயுள்ளதால் ப.ஜ.க திருநாவுக்கரசு தான் ஜெய்க்கும் வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது என்றனர். அறந்தாங்கி தொகுதியும் ராமநாதபுரம் தொகுதியுடன் இணைக்கபட்டுளதால் அத் தொகுதியில் தொடர்ச்சியாக ஐந்து முறை சட்ட மன்ற தேர்தலில் வென்றுள்ளார் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஊருக்குள் எந்த ஒரு சிறு காது குத்து கல்யாணம் கருமாதி என்றாலும் தவறாமல் கலந்துக் கொண்டு நற்பணியாற்றி செல்வாக்குடன் அவர் விளங்குவதாகவும் கூறினர் மேலும் தி.மு,க வேட்பாளர் ரித்தீஷ் மீது ஒரு மதிப்போ மரியாதையோ இல்லை, இவர் குடும்பத்துக்கு ஐந்தாயிரம் வரை ரொக்கமாக வழங்கவுள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் சில அதிரடி பரிசுகளும் காத்திருப்பதாகவும் பேசப்படுகிறது. ஆ.தி.மு.க. வேட்பாளருக்கு இரண்டாம் இடம் வர வாய்ப்பு உள்ளதாகவும் கூறினர், அதாவது ஒன்று ப.ஜ.க அல்லது ஆ.தி.மு.க தான் இந்த தொகுதியை கைப்பற்றும் என்று ஒருமித்த கருத்தாக கூறினர்.

- சித்து

Read More...

Monday, April 27, 2009

இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களின் படுகொலை பட்டியல்

இலங்கையில் விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழின அரசியல் தலைவர்களின் பட்டியல்


( நன்றி: ஹிந்துமித்தரன், மார்ச் 01-15/2009 இதழ். இன்று உண்ணாவிரதம்(8am - 1pm) இருக்கும் நேரத்தில் படித்தது)

Read More...

உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது

Read More...

உண்ணாவிரதம் !கருணாநிதி மீடியாவின் கவனம் தன் மீது பட வேண்டும் என்று இதை செய்கிறார். மற்றபடி இதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - சோ

Read More...

Saturday, April 25, 2009

ஸ்விஸ் வங்கிக் கள்ளப் பணமும் காங்கிரஸ் கட்சியின் மாய்மாலங்களும் - 3

இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த அருண் ஷோரி அவர்களின் கட்டுரையின் அடிப்படையில் எழுதப் பட்டது.. ( பாகம் - 3 )

5. அத்வானியின் பா ஜ க ஆட்சியில் இருந்த பொழுது என்ன செய்து கிழித்தது?


இந்தக் கேள்வியை காங்கிரஸ்காரர்கள் பி ஜே பி ஐப் பார்த்துக் கேட்க்கும் முன்னால் பி ஜே பி ஆட்சியின் பொழுது போஃபோர்ஸ் ஊழலில் சம்பந்தப் பட்டவர்களின் பெயர்கள் வெளியே வராமல் இருக்க பி ஜே பி அரசுக்கு காங்கிரஸ் என்னென்ன முட்டுக்கட்டை போட்டது என்பதை முதலில் காங்கிரஸ்காரர்கள் தங்களைக் கேட்டுக் கொள்ளட்டும். அப்பொழுது பி ஜே பி ஒரு போஃபோர்ஸ் ஆவணங்களைக் கூட பெற முடியாத நிலையில்தான் இருந்தது. உலக நாடுகளுக்கு ஸ்விஸ் வங்கி கருப்புப் பணம் எல்லாம் ஒரு பொருட்டாகத் தெரியாத படியால் வல்லரசுகளின் ஆதரவு இந்தியாவுக்கு இல்லாமல் இருந்தது. ஸ்விஸ், ஸ்வீடன் போன்ற நாடுகளை ஒரு அளவுக்கு மேல் இந்தியாவால் கட்டுப் படுத்தவோ நிர்ப்பந்திக்கவோ முடியாமல் இருந்தது. சரி அப்ப்டியே பி ஜே பி அப்பொழுது எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தாலும் இப்பொழுது வாய்ப்புக்கள் வந்திருக்கும் பொழுது, உலகத்தின் பணக்கார நாடுகள் அனைத்தும் இந்த விஷயத்தில் அழுத்தம் கொடுக்கும் பொழுது இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி ஸ்விஸ் அரசாங்கத்திடம் தகவல்கள் கேட்க ஏன் காங்கிரஸ் கட்சி மறுக்கிறது? பி ஜே பி ஆட்சியின் பொழுது ஜெர்மன் அரசாங்கத்திடம் கள்ளப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியல் கிட்டவில்லை. அப்படி அவர்களிடம் அப்பொழுதே அந்தப் பட்டியல் கிட்டியிருந்தால் உடனடியாக பி ஜே பி அரசு ஜெர்மன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் வைத்து அந்த கருப்புப்பண முதலைகளின் பட்டியலை வாங்கி நிச்சயமாக நடவடிக்கை எடுத்திருக்கும். அப்பொழுது ஜெர்மனி அரசு இந்த விஷயத்தில் அக்கறை காட்டவில்லை. இப்பொழுதுதான் ஜெர்மனி அரசு எங்களிடம் இந்தியர்களின் பெயர்களும் கிடைத்திருக்கிறது என்று அறிவித்திருக்கிறது., இப்படிப் பட்ட ஒரு சூழலில் பி ஜே பி ஏன் அப்பொழுதே நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியே அபத்தமானது. ஐந்து வருடத்திற்கு முன்பாக ரிட்டையர்டான ஒரு போலீஸ்காரரிடம் போய் நீ ஏன் நேற்று இரவு நடந்த திருட்டில் ஈடுபட்ட திருடர்களின் பெயர்கள் தெரிந்த பின்னும் ஐந்து வருடம் முன்பாகவே அவர்களை பிடிக்கவில்லை என்று கேட்ப்பது போல மூளையற்ற கேள்வியாக இருக்கிறது. ஆனால் பி சிதம்பரமும், கபில் சிபலும் முட்டாள்கள் அல்ல பிரபலமான வக்கீல்கள், அவர்கள் நோக்கம் பிரச்சினையைத் திசை திருப்புவதுதானே ஒழிய கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவது அல்ல என்பது அவர்கள் எழுப்பும் முட்டாள்த்தனமான கேள்விகளில் இருந்தே தெரிகிறது. பி ஜே பி ஆட்சியின் பொழுது ஒரு சின்ன தகவலைக் கூட ஸ்விஸ் போன்ற நாடுகளில் இருந்து வாங்கி விட முடியாது. ஆனால் இப்பொழுது கடுமையான பொருளாதார சூழலில் தங்கள் நாட்டுப் பணம் எங்கிருந்தாலும் அங்கிருந்து மீட்டு வர அமெரிக்க உட்பட அனைத்து பெரிய நாடுகளும் முனைப்பாக உள்ளன. பி ஜே பி ஆண்ட பொழுது இந்த சூழ்நிலை இல்லை. இப்பொழுது அமெரிக்காவும் பிற நாடுகளும் இந்தப் பணத்தை திரும்பப் பெறுவதில் முனைப்பாக இருக்கின்ற படியால் இந்தியாவும் அவர்களுடன் சேர்ந்து முயற்சிக்க வேண்டிய அவசரம் நிலவுகிறது. ஆனால் காங்கிரஸ் அரசோ இதில் தலையிடவோ ஜெர்மனியிடம் கள்ளப் பணம் வைத்திருப்பவர்களின் கணக்கு விபரங்களைக் கேட்க்கவோ பிடிவாதமாக மறுத்து வருகிறது. அத்துடன் நில்லாமல் பி ஜே பி யிடம் முட்டாள்த்தனமாக கேள்விகள் கேட்ப்பதும், அவர்களைக் கேலி செய்வதுமாக மக்களிடம் இருந்து பிரச்சினையைத் திருப்ப முயற்சி செய்து வருகிறார்கள். இந்தக் கேள்வியை பி ஜே பி யிடம் கேட்க்கும் நேரத்தில் ஜெர்மனியிடம் கேட்டிருந்தால் ஜெர்மனி அரசு உடனடியாக கள்ளப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலைக் கொடுத்திருந்திருக்கும். ஏன் கேட்க்க மறுக்கிறது காங்கிரஸ் அரசு? யோக்கியன் தெருவில் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை என்பார்கள். அந்த லட்சணத்தில் இருக்கிறது மன்மோகனின் யோக்கியம். ஜி 20 நாடுகள் கொடுத்த அழுத்ததினால் மலேஷியா, கோஸ்டோ ரிக்கா, பிலிப்பைன்ஸ், உருகுவே போன்ற நாடுகளும் தங்களிடம் உள்ள கள்ளப் பண அக்கவுண்ட்களின் விபரங்களைத் தர முன் வந்துள்ளது. ஆனால் இந்தியா மட்டும் தேள் கொட்டிய திருடன் போல முழித்துக் கொண்டு இருக்கிறது. இதே போல ஜி 20 நாடுகள் பி ஜே பி ஆண்ட பொழுதே உரிய அழுத்தம் கொடுத்திருந்தால் அன்றே பி ஜே பி அரசு நடவடிக்கை எடுத்து இருந்திருக்கும். உரிய சூழல் வரும் பொழுதுதான் அதை அழுத்திக் கேட்டுப் பெற முடியும். அந்த சூழ்நிலை உருவான நாள் முதல் அத்வானி பாராளுமன்றத்திலும் வெளியிலும் காங்கிரஸ் அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்கும் படி வற்புறுத்தி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கும் வந்தால் முதல் நூறு நாட்களுக்குள் அந்தப் பணத்தை திரும்பப் பெறுவோம் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது பி ஜே பி. இதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்? இன்று ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அல்லவா உடனடி நடவடிக்கை எடுக்கக் கூடிய அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறது? அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் 5 வருடத்திற்கு முன்பு பி ஜே பி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி கேட்டால் அது எவ்வளவு அயோக்கியத்தனமான ஒரு கேள்வியாக இருக்க முடியும்?

இது இந்திய மக்களின் போராட்டம். இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கியமான ஒரு போராட்டம். கருப்புப் பணத்தை தங்கள் நாடுகளில் பதுக்கி வைக்க அனுமதி அளிக்கும் நாடுகளிடம் இருந்து இந்தியா அந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்க்க வேண்டிய தருணம் வந்து விட்டது. அதற்கான சூழலும் உலக நாடுகள் உருவாக்கி விட்டிருக்கின்றன. ஆனால் இந்த போராட்டம் வெற்றி பெறுவதை கள்ளப் பணத்தை சேமித்து வைத்திருப்பவர்களும், ஊழல் அரசியல்வாதிகளும், இஸ்லாமிய பயங்கரவாதிகளும், மாஃபியாக்களும், சர்வாதிகார அரசுகளும், நேர்மையற்ற அரசுகளும், ஊழல் அரசுகளும், சீனா, தென்னமரிக்க சர்வாதிகார நாடுகள், ஒரு சில ஆப்பிரிக்க அதிபர்கள் ஆகியோரும் இந்தத் தகவல்கள் வெளியாவதை விரும்பப் போவதில்லை. அதை என்ன செய்தாவது தடுக்கவே முயல்வார்கள். ஆனால் ஐரோப்பாவில் உள்ள ஜனநாயக் நாடுகளும், அமெரிக்காவும் இந்த தகவல்களையும் பணத்தையும் திரும்பப் பெற போராடி வருகிறார்கள். அது போன்ற நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் போராடி நமது மக்களின் பணத்தைத் திரும்பப் பெற வேண்டும். ஜி 20 நாடுகளும் இந்தியாவின் உதவியை கேட்டிருக்கிறார்கள். ஆனால் மன்மோகனோ அதில் ஆர்வம் காட்டாமல் அதைப் பற்றி பேச மறுத்து விட்டிருக்கிறார். என்னவொரு கீழ்த்தரமான அரசியல்வாதியாக இருந்தால் இப்படி ஒரு கேவலமான செயலை அவர் செய்திருந்திருப்பார்? மக்கள் இந்த பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டும். அடுத்து வரும் அரசிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். எந்தக் கட்சி இந்தப் பணத்தை திரும்ப் பெறுமோ அந்தக் கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு இல்லாவிட்டால் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப் பட்ட அவர்களது சொத்து திரும்ப வரவே வராது.

இப்பொழுது லட்சக்கணக்கான கோடிகளைத் திரும்பிப் பெற அரசாங்கத்தைக் கட்டாயம் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்திய மக்களின், இந்திய வாக்காளர்களின் கைகளில் மட்டுமே உள்ளது. திருடர்களுடன் சேர்ந்து கொண்டு திருட்டுப் பணத்தை மீட்க மறுக்கும் காங்கிரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்தப் போகிறார்களா அல்லது திருட்டுப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம் என்று உறுதி பூண்டுள்ள பி ஜே பி யிடம் பொறுப்பை ஒப்படைக்கப் போகிறார்களா? முடிவு மக்களின் கைகளில் உள்ளது. அதற்கான தகவல்கள் அவர்களைச் சென்றடைய வேண்டும். ஒவ்வொரு விபரம் உள்ள குடிமகனும் இந்த விஷய்த்தின் முக்கியத்துவத்தை விபரம் அறியாத பொதுப் புத்தியில் மூழ்கியுள்ள மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
செய்வார்களா இந்திய மக்கள்?
- விஸ்வாமித்ரா
பாகம் 1, பாகம் 2

Read More...

Friday, April 24, 2009

காங்கிரஸில் இடம் பிடிக்க என்ன செய்ய வேண்டும் ?


கேள்வி கீழே...

பின்னூட்டதில் நல்ல கமெண்டுக்கு பரிசு உண்டு.
பிகு: பழைய பரிசுக்கள் கூடிய சீக்கிரம் நிச்சயம் அனுப்பி வைக்கப்படும் )
( படம் உதவி: இந்தியன் எக்ஸ்பிரஸ் 24.4.09, அனுப்பிய நண்பருக்கு நன்றி )

Read More...

ஸ்விஸ் வங்கிக் கள்ளப் பணமும் காங்கிரஸ் கட்சியின் மாய்மாலங்களும் - 2

இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த அருண் ஷோரி அவர்களின் கட்டுரையின் அடிப்படையில் எழுதப் பட்டது.. ( பாகம் - 2 )

3. அத்வானி சொல்லும் எண்ணிக்கையில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது

கிடப்பது கிடக்க கிழவியைத் தூக்கி மனையில் வை என்ற கதையாக கொள்ளையடித்து மறைத்து வைக்கப் பட்ட பணத்தைப் பற்றி கவலைப் படாமல், அதைத் திருப்பிக் கொண்டு வருவோம் என்று அத்வானி சொன்னவுடனேயே, அவர் சொல்லும் எண்ணிக்கை தப்பு என்கிறது காங்கிரஸ். முன்பு போஃபோர்ஸ் ஊழலையும் இது போலவே நொட்டைச் சொல் சொல்லியே பி.சிதம்பரமும் பிற காங்கிரஸ் தலைவர்களும் மறைத்தார்கள். ஒரு வீட்டில் கொள்ளை போகிறது. போலீஸில் வீட்டுக்காரர் புகார் செய்கிறார். நகை பணம் எல்லாம் சேர்த்து ஒரு லட்சம் சொத்து கொள்ளை போயிருக்கிறது என்று வீட்டுக்கார புகார் சொல்கிறார். விசாரிக்க வேண்டிய இன்ஸ்பெக்டரோ அதெப்படி ஒரு லட்சம் என்று சொல்லலாம்? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நகை பணம் எல்லாம் சேர்த்து 85321 ரூபாய்க்குத்தான் கொள்ளை போயிருக்கும் அநியாயமாக ஒரு லட்சம் என்கிறீர்கள். ஆகவே நான் இந்த திருட்டு வழக்கை விசாரிக்க முடியாது என்று சொன்னால் அது எவ்வளவு அயோக்கியத்தனமாகவும், கேவலமாகவும் இருக்குமோ அவ்வளவு அயோக்கியத்தனமாக இருக்கிறது காங்கிரஸின் நிலை. ஆம் அத்வானி சொல்லும் அளவுக்கு கள்ளப் பணம் இருக்காது என்றும் அத்வானியின் தகவல் ஆதாரம் குறையுள்ளது என்றும் அவ்வளவு தூரம் இருக்க முடியாது என்றும் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள் கபில் சிபல், பி.சிதம்பரம், ஜெயராம் ரமேஷ் போன்ற காங்கிரசின் அதிகாரபூர்வ பேச்சாளர்கள். உண்மை நிலை என்ன?

ஓ யி சி டி எனப்படும் உலக அமைப்பு செய்த ஆராய்ச்சியின் படி பல்வேறு நாடுகளில் இருந்தும் வரி ஏய்ப்பு செய்து ஸ்விஸ் போன்ற நாடுகளில் சட்டவிரோதமாக அரசியல்வாதிகளும், வியாபாரிகளும், செல்வந்தர்களும், தீவீரவாதிகளும் ஒளித்து வைத்திருக்கும் பணத்தின் மதிப்பு குறைந்த பட்சம் 1.2 டிர்ல்லியன் டாலர்கள் முதல் அதிக பட்சம் 11.5 டிரில்லியன் டாலர்கள் வரை இருக்கலாம் என்கிறது. இந்த அறிக்கையின் முழு விபரமும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளி வந்துள்ளது. இருந்தாலும் இந்த விஷயத்தில் எந்தவிதமான உலகளாவிய ஆராய்ச்சியும் செய்யாமலேயே சிதம்பரம் போன்ற அறிவாளிகள் இந்த கணக்கே தப்பு என்கிறார்கள். இந்த புள்ளி விபரம் தப்பு என்ற விஷயம் எப்படி இவர்களுக்குத் தெரியும்? காங்கிரசின் செய்தித் தொடர்பாளரான ஜெயராம் ரெமேஷ் அத்வானி சொல்வது தப்பு வெறும் 25 லட்சம் கோடிகள் மட்டும்தான் இந்திய பணம் ஸ்விஸ் வங்கியில் இருக்கிறது அதுக்கெல்லாம் போய் அலட்ட வேண்டுமா என்று கேட்டிருக்கிறார். 25 லட்சம் கோடி இவருக்கு வேண்டுமானால் சாமானிய பணமாக இருக்கலாம். கபில் சிபலோ இன்னும் மோசமாக அத்வானி சொல்வது பெரிய ஜோக், சில லட்சம் கோடிகள் வேண்டுமானால் இருக்கலாமே தவிர 1 டிரில்லியன் எல்லாம் சாத்தியமேயில்லை என்று கேலி செய்கிறார்.

ஐயா, இந்தியாவில் இருந்து கள்ளத்தனமாக வெளியே போயிருக்கும் பணம் ஒரு சில கோடிகளாக இருப்பினும் கூட அது யாருடைய பணம்? விவசாயிகளின், தொழிலாளிகளின், நேர்மையான வரி கட்டிய சாமானிய மக்களின் பணம் அல்லவா அது? அரசாங்க கஜானாவுக்குப் போயிருந்து மீண்டும் மக்களை அடைந்திருக்க வேண்டிய பணம் 5 லட்சம் கோடியாக இருந்தால் என்ன 500 கோடியாக இருந்தால் என்ன? அதை மீட்டுத் தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை அல்லவா? திருட்டுப் போன பொருளின் மதிப்பு புகாரில் கொடுக்கப் பட்ட மதிப்பை விட நூறு ரூபாய்கள் குறைவாக இருக்கும் என்ற சந்தேகத்தில் திருடனைப் பிடிக்க மாட்டேன் என்று சொல்லும் போலீஸ்காரரின் அயோக்கியத்னம் அல்லவா அது? எவ்வளவு ஆணவம் இருந்தால் காங்கிரஸ்காரர்களிடமிருந்து இப்படி ஒரு எகத்தாளமான, திமிரான பதில் வரும்? மக்களை எவ்வளவு தூரம் கிள்ளுக் கீரையாக நினைத்திருந்தால் இப்படி ஒரு பதிலை இவர்கள் கொஞ்சம் கூட மனசாட்சியும், நேர்மையும் இல்லாமல் சொல்லியிருக்க முடியும்? திருட்டுப் போன பணம் ஆயிரம் ரூபாயோ, லட்சம் ரூபாயோ திருடனைப் பிடித்து பணத்தை மீட்க்க வேண்டியதுதானே போலீஸின் கடமை? பதிலுக்கு புகார் கொடுத்தவனையே கேலியும் கிண்டலும் செய்து அவமானப் படுத்தினால் என்ன அர்த்தம்?

கடந்த அக்டோபர் மாதம் ஓ யி சி டி தனது அறிக்கையை வெளியிட்டவுடனேயே மிகச் சிறிய நாடான ஐயர்லாந்து நாடு போராடி தன் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக களவாடப் பட்டு ஸ்விஸ் வங்கியில் சேமித்து வைக்கப் பட்டிருந்த சில பில்லியன் ஈரோக்களை மீட்டு வந்திருக்கிறது. ஒரு அயர்லாந்திற்கும் உறுத்து கூட உலகத்திலேயே மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவிற்கு ஏன் இல்லாமல் போனது? ஒரு சிறிய நாடு கூட தன் பணத்தை மீட்டு வரும் பொழுது இந்தியா முயன்றால் தன் நாட்டில் இருந்து வரி கட்டாமல் வெளியேறிய பல லட்சம் கோடி ரூபாய்க்களை மீட்க்க முடியாதா? ஏன் அதற்கான ஒரு சின்ன துரும்பைக் கூட காங்கிரஸ் அரசாங்கம் கிள்ளிப் போடவில்லை என்பதே இப்பொழுது கேள்வி. இங்கே இவ்வளவு பணம் இருக்கிறது, நீங்கள் கேட்டால் யார் யார் கள்ளக் காசை ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்ற பட்டியலையே ஜெர்மன் அரசு கொடுக்கத் தயாராக இருக்கிறது அதனால் கேளுங்கள் என்று அத்வானியும், பா ஜ க வும் கரடியாக கத்திய பின்னாலும் கூட கேட்க்க மறுப்பது மட்டும் அல்லாமல் அப்படி துப்பு கொடுத்தவர்களையே ஏளனம் செய்து வருகிறது காங்கிரஸ் கட்சி.

இவ்வளவு நடந்த பிறகும், மன்மோகனின் அரசாங்கம் பிடிவாதமாக இந்த விபரங்களைக் கேட்க்க மறுத்து வருவது ஏன்? ஏப்ரல் 18 அன்று ஸ்விஸ் அரசின் இந்தியத் தூதுவர் இந்த நொடி வரை இந்திய அரசிடமிருந்து அரசு பூர்வமாக ஒரு சின்ன கோரிக்கை, ஒரு தொலைபேசி கூட எங்களுக்கு விபரம் கேட்டு வரவில்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சொல்லியுள்ளார். ஏன் இந்த பிடிவாதமான மவுனம் என்று நேர்மையாளாரான மன்மோகன் நாட்டு மக்களுக்கு விளக்குவாரா?

போபர்ஸ் ஊழலில் சம்பந்தப் பட்ட இத்தாலிய குவாட்ரோச்சியின் லண்டன் வங்கியின் பணத்தை முடக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டே உத்தரவு போட்டும் கூட குவாட்ரோச்சியை பணத்தை எடுக்க அனுமதித்த காங்கிரஸ் அரசு எப்படி ஸ்விஸ் வங்கியில் இருந்து பணத்தை மீட்கப் போகிறது? இவர்களை எப்படி நம்புவது? ஊழல்வாதிகளுக்கு எப்பொழுதுமே துணை போகும் காங்கிரஸ் இந்த விஷயத்தில் காட்டும் அளவற்ற மெத்தனம் காங்கிரஸின் உண்மை முகத்தையே காண்பிக்கிறது. திருடனுக்குத் தேள் கொட்டினாற் போல இந்த விஷயத்தை திசை திருப்ப ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது

4. இந்தக் கோரிக்கையை எழுப்புவதன் மூலம் அத்வானி அந்த வெளிநாட்டு வங்கிகளில் கள்ளத்தனமாக ஒளித்து வைத்திருக்கும் பணத்தை இடம் மாற்றம் செய்வதற்குத் தூண்டுகிறார்.

காங்கிரஸின் மற்றுமொரு புத்திசாலி வக்கீல் சொல்கிறார், அத்வானி இந்த விஷயத்தைக் கிளப்புவதினால் ஸ்விஸ் வங்கியில் பணத்தை கள்ளத்தனமாக வைத்திருப்பவர்கள் எல்லாம் பணத்தை வேறு இடத்திற்கு அப்புறப் படுத்தி விடுவார்களாம். ஜெர்மனியிடம் இந்திய கருப்புப் பண முதலைகளின் பெயர்கள் ஒரு வருடத்திற்கு முன்பாகவே இருக்கின்றது. அதை ஜெர்மனியும் வெளிப்படையாக அறிவித்து இந்தியா கேட்டால் நாங்கள் தருவோம் என்றிருக்கிறது. அப்படி இருக்க ஏதோ இது மாபெரும் ரகசியம் போலவும் அத்வானிதான் அதைச் சொல்லி கெடுத்து விட்டார் என்பது போலவும் சொல்லி காங்கிரஸ்காரர்கள் பழி சுமத்துகிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே எவ்வளவு கோமாளித்தனமான அறிக்கை இது என்பது புரிந்து விடும். அமெரிக்காவின் ஒபாமா முதல் ஃபிரான்ஸின் சாக்ரோசி வரை ஸ்விஸ் வங்கியில் இருக்கும் தத்தம் நாட்டுப் பணத்தை மீட்க்க வேண்டும் என்று உரத்த குரலில் போராடி வரும் பொழுது அத்வானி சொன்னது மட்டும் எப்படி ரகசியமானது? ஒபாமா பேசும் பொழுதும், ஜெர்மனி பட்டியலைப் பெற்ற பொழுது பணத்தை எடுத்துக் கொண்டு ஓடாதவர்களா அத்வானி சொன்ன பொழுது மட்டும் ஓடப் போகிறார்கள். அப்ப்டியே அவர்கள் இடம் மாற்றினால் அந்தத் தகவலையும் இந்திய அரசுக்கு ஸ்விஸ் அரசு ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் இப்பொழுதைய நிலமை. அப்படி ஸ்விஸ் அரசு மறுக்குமானால் ஜி20 நாடுகள் ஸ்விஸ் அரசின் மீது தடை விதிக்கக் கூடும் என்பதுதான் தற்பொழுதைய நிலை. இப்படி இருக்க இந்திய அரசு கள்ளப் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை ஜெர்மனி அரசிடம் இருந்தும், கள்ளப் பண விபரங்களை ஸ்விஸ் அரசிடமும் பிடிவாதமாகக் கேட்க்க மறுத்து அத்வானி மீது கோமாளித்தனமான குற்றசாடுக்களை அள்ளி வீசும் நோக்கம் என்ன? இதுதானா யோக்யவான் மன்மோகனின் யோக்யம்? இதுதான பொருளாதார மேதையின் நேர்மை? இதற்குத்தானா இவ்வளவு படித்தார் மன்மோகன்?

என் வீட்டில் திருட்டுப் போய் விட்டது என்று நான் போலீஸிடம் புகார் கொடுக்கிறேன். திருடியவன் திருட்டுப் பணத்தை எங்கே ஒளித்து வைத்திருக்கிறான் என்ற தகவலையும் நானே கொடுக்கிறேன். திருடன் ஒளித்து வைத்துள்ள இடம் ஊருக்கே தெரிந்தும் இருக்கிறது. ஆனால் விசாரிக்க வேண்டிய போலீஸ் அதிகாரியோ நீ அதை என்னிடம் சொன்னால் திருடன் பணத்தை வேறு இடத்திற்கு மாற்றி விடுவான் என்கிறார். இதுதானா போலீஸ் அதிகாரியின் கடமை உணர்ச்சி? இதுதானா அவரது நேர்மை? இதுவா சட்டம்?

ஜெர்மன் அரசு மட்டும் அல்ல அமெரிக்க அரசும் கூட 800 பில்லியன் டாலர் பணத்தை வரி கட்டாமல் ஸ்விஸ் வங்கியில் கள்ளத்தனமாக வைத்துள்ளவர்களின் பட்டியலை ஸ்விஸ் வங்கியான யு பி எஸ் ஸிடம் இருந்து பெற்றுள்ளது. இந்த தகவலும் எல்லா மீடியாக்களிலும் வந்தது. இதைப் படித்தவுடன் தங்கள் கள்ளப் பணத்தை இடம் மாற்றாத இந்தியர்களா அத்வானி சொன்னவுடன் மாற்றி விடப் போகிறார்கள்? கேட்ப்பவன் கேனையன் என்றால் கேப்பையில் நெய் வடியுமா? எருமை ஏரோப்ளேன் ஓட்டுமா? மக்களின் அறியாமையைப் பயன் படுத்திக் கொண்டு அவர்களின் கவனத்தை திசை திருப்பி இந்த விஷயத்தை அமுக்கி விடப் பார்க்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். அப்படியே பணத்தை வேறு இடத்திற்கு மாற்றினாலும் கூட எங்கு எவ்வளவு எப்பொழுது மாற்றினார்கள் எந்த தகவலையும் ஸ்விஸ் அரசு இந்திய அரசுக்கு அளித்தே ஆக வேண்டும். இந்த உலகில் இனிமேல் கள்ளப் பணம் வைத்திருப்பவர்கள் ஒளிய இடம் கிடையாது. இந்திய அரசு கேட்க்க வேண்டும். அதைச் செய்யவே மன்மோகனின் அரசு மறுத்து வருவது அவர்களது கள்ள நோக்கத்தையே அம்பலப் படுத்துகிறது

கீழ்க்கண்ட மீதக் கேள்விகளுக்கான பதில்கள் நாளை தொடரும்.........

5. ஏன் பி ஜே பி அரசின் பொழுது ஃபெரா சட்டத்தை ஃபெமா சட்டம் மூலம் மாற்றி குற்றங்களை ஒருங்கிணைத்து தண்டனை கொடுக்க முயலவில்லை?

6. அத்வானியின் பா ஜ க ஆட்சியில் இருந்த பொழுது என்ன செய்து கிழித்தது?

- விஸ்வாமித்ரா
( தொடரும்.. )

பாகம் - 1


Read More...

இலங்கை இனப் பிரச்னை - அடுத்த கட்டம் - பத்ரி

இலங்கை இனப் பிரச்னை - அடுத்த கட்டம் - பத்ரி

ஒருபக்கம் மக்கள் கொல்லப்பட்டு, தனிக் கூடாரங்களில் அடைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடும் நேரம், மறுபக்கம் இலங்கை, இந்திய/தமிழக அரசியல் தளத்தில் என்ன மாறுதல்கள் நிகழலாம்?

1. பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. கொல்லப்பட்டோ அல்லது சயனைட் விழுங்கியோ இறந்தால், அதுவும் மே 13-க்குள் நடந்தால்...

* தமிழகத்தில் ஆங்காங்கு கலவரங்கள் ஏற்படும். வைகோ சொன்னமாதிரி ரத்த ஆறு ஓடாவிட்டாலும் ரத்தம் சிந்தப்படும். காவல்துறைக்கும் தெருவில் இறங்கி தம் எதிர்ப்பைக் காண்பிப்பவர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு, துப்பாக்கிச் சூடு வரை போகலாம்.

* தமிழகத்தில் பேருந்துகள் கொளுத்தப்படும். பொதுச்சொத்துகளுக்கு சேதம் வரும்.

* தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் அனைத்துத் தொகுதிகளிலும் (16) தோற்கும். திமுக கூட்டணி மொத்தமாக வாஷ் அவுட் அல்லது அதிகபட்சமாக 2 சீட் கிடைக்கலாம். இப்போதே, என் கணிப்பு, அவர்களுக்கு 10 தாண்டாது என்பது.

2. பிரபாகரன் வெறு நாட்டுக்குத் தப்பிச் சென்றால்...

இதை பிரபாகரன் வெறும் வீரப் போராட்டமாகவும், புறநானூற்று பாணியில் நெஞ்சில் வாள் காயம் பட்டு மடிவேன் என்று நினைக்காமலும் இருந்தால், வேற்று நாட்டுக்குச் சென்று பதுங்குவதே சரி. இலங்கையில் இனப் போராட்டம் என்பது பிரபாகரனுக்கு முன்னும் இருந்தது, பின்னும் இருக்கும். பிரபாகரனின் ஆயுதப் போராட்டம்தான் இலங்கையை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்தது. ஆனால் விக்ரமசிங்கே/ரஜாபக்‌ஷே பூவா/தலையாவில் பிரபாகரன் ராஜபக்‌ஷேயை மறைமுகமாகத் தேர்ந்தெடுத்ததில்தான் இன்றைய நாசத்தின் ஆரம்பம் உள்ளது.

இதனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னமேயே நான் குறிப்பிட்டிருந்தேன். அப்போது விடுதலைப் புலிகளும் சரி, இணையத்தில் எழுதும், பின்னூட்டம் போடும் ஈழத்தமிழர்களும் சரி, ஒரே மாதிரியான மனநிலையையே கொண்டிருந்தனர். விக்ரமசிங்கே மறைந்திருந்து குத்துவார்; ராஜபக்‌ஷே நேராகக் குத்துவார், எனவே இரண்டாமவரே மேல் என்பது ஒன்று. புலிகள் போர்மூலமாக வெல்வது உறுதி என்பது அடுத்தது. விக்ரமசிங்கேயுடன் நிச்சயமாக அமைதியை நோக்கிய ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்க முடியும் என்பது என் கருத்தாக இருந்தது.

இப்போது, புலிகள் முற்றிலுமாக அழிந்துவிட்ட நிலையில், மீண்டும் இலங்கையில் நியாயமான அமைதி ஏற்பட வெகுகாலம் பிடிக்கும். தமிழர்களுக்கான நியாயத்தை முன்னெடுத்துவைக்க யார் தலைமை தாங்கப்போகிறார்கள் என்பதில் பெரிய குழப்பம் நேரிடும். டக்ளஸ் தேவானந்தாவா? கருணாவா? ஆனந்தசங்கரியா? கொடுமையல்லவா இது?

பிரபாகரன் தப்பிச் சென்றாலும், செய்யக்கூடியது ஒன்று உண்டு. அடுத்தகட்ட அரசியல், டிப்ளோமேடிக் தலைவர்களை உருவாக்குவது. வெளிநாடு சென்று படித்த ஈழத்தமிழ் இளைஞர்கள் உலகம் முழுவதுமான அரசியல் பரப்புரையில் ஈடுபடுவது. அதைச் செய்யும்போது கொஞ்சம் sophisticated முறையில் செய்தால் நல்லது.

3. ஈழப் பிரச்னையில் இந்தியாவின் தாக்கம்?

காங்கிரஸ் தமிழகத்தில் இடங்களை இழந்தாலும், மறுபக்கம் பாஜக காங்கிரஸைவிட சோனியாக (அந்த சோனியா... இல்லை) உள்ளது. இப்போது நடக்கும் குத்துச்சண்டை, ஓமகுச்சி நரசிம்மனுக்கும் இன்னொரு தொத்தலுக்கும் நடப்பதுபோல, பார்க்கவே சகிக்கவில்லை. ஒருபக்கம் லாலுவும் முலாயமும் காங்கிரஸை எச்சில் இலை பொறுக்கவந்த பரதேசியைப் போலவே பார்க்கின்றனர். மறுபக்கம் பாஜக இந்துத்துவ சாயம் ஏறிய, தீண்டத்தகாத கட்சியாகவே கருதப்படுகிறது. தேவைப்படும்போது சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக், தேவ கவுடா எல்லாம் தீண்டிக்கொள்வார்கள். அடுத்த நாளே வெளியே வந்து, மதச்சார்பின்மையே முக்கியம் என்பார்கள். இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு சென்ற தேர்தலில் கிடைத்த அளவு இடங்கள் கிடைக்குமா என்பதே சந்தேகம்.

இந்த நிலையில், காங்கிரஸ்/பாஜக இல்லாத யார் ஆட்சி அமைத்தாலும் அதற்கு ஆயுசு 18 மாதங்கள்தான். அப்போது இலங்கைப் பிரச்னையைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாய்க்கு சோறு இல்லாமல், கொட்டடியில் மாடுகள் போல அடைக்கப்பட்டிருக்கும்போது, தமிழ்க் கட்சிகள் தங்களுக்கு எவ்வளவு மினிஸ்ட்ரி கிடைக்கும் என்று கடித்துக் குதறும். அப்படியே கேட்டாலும் வெளியுறவுத்துறையை வாங்குவார்களா என்றால் அதுதான் இல்லை.

வெளியுறவு, ராணுவத்தின் துணை அமைச்சர் பதவிகளாவது கிடைத்தால்தான், இலங்கை தொடர்பான கொள்கையை ஓரளவுக்கு மாற்றமுடியும். அதிலும் அஇஅதிமுக இந்த இடங்களை பெற்றது என்றால், ஈழத்தமிழர்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை.

காங்கிரஸே மீண்டும் ஆட்சிக்கு (எப்படியாவது) வந்துவிட்டால், ஈழத்தமிழன் கதி அதோகதிதான். உதவ வரும் பிற நாடுகளையும் துரத்திவிடும் காரியத்தை காங்கிரஸ் சரியாகச் செய்துவிடும்.

பாஜக (வாய்ப்பே இல்லை!) ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் வாய்கிழியப் பேசிய எதையும் செய்யமாட்டார்கள். தமிழர் பிரச்னை முக்கியமா, ராமர் கோயில் முக்கியமா? பாடப்புத்தகத்தை மாற்றி எழுதுவது, பெண்கள் முழங்காலுக்கு மேல் ஸ்கர்ட் அணியலாமா, கூடாதா போன்ற விவாதங்களில் ஈடுபடுவது என்று போய்விடுவார்கள்.

4. தமிழகத்தில் ஈழப்பிரச்னையை எப்படி முன்னெடுப்பார்கள்? அரசியலில் என்ன மாற்றங்கள் ஏற்படலாம்?

* காங்கிரஸ் எப்படியாவது மத்தியில் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் திமுக ஆட்சி பிழைக்கும். ஆனால் தமிழகத்திலிருந்து திமுக கூட்டணி மிகச் சில இடங்களை மட்டுமே கொடுத்தால், பதிலுக்கு காங்கிரஸ் மாநில ஆட்சியில் பங்கு கேட்கும்.

* திமுக வாஷ் அவுட் ஆகி, காங்கிரஸ் ஆட்சி அமைக்க அஇஅதிமுக கூட்டணியின் இடங்கள் தேவை என்றால், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் நடக்கும். மிஞ்சிய இரண்டு ஆண்டுகளுக்கு திமுக எதிர்க்கட்சியாகவேண்டும்.

அப்போது ஆட்சியில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள், எதிர்க்கட்சியான திமுக என்ன செய்யும் என்று யோசிக்கவேண்டும். என்னால் உடனடியாக எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

* மத்தியில் குழப்பமான மூன்றாவது ஒரு கூட்டணி ஆட்சியில் இருந்தால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழலாம், நிகழாமலும் இருக்கலாம்.

தமிழகக் கட்சிகளைப் பொருத்தமட்டில், ஈழப்பிரச்னையில் தெளிவின்மையே தென்படுகிறது. தமிழகத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்காவிட்டால், தமிழக எம்.பிக்களால் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடமுடியாது. எனவே அடுத்த ஆறு மாதங்கள் கட்சிகளிடமிருந்து பெரிதாக எதையும் எதிர்பார்க்கமுடியாது.

பொதுமக்கள் ஆங்காங்கு தொடர்ந்து தங்களது ஆதரவை ஈழத்தமிழர்களுக்குத் தருவார்கள். ஆனால் அந்த ஆதரவை செயலாக மாற்றுவது எளிதாக இருக்காது. வெறும் பேச்சும் துயரமும் மட்டுமே எஞ்சும்.

- பத்ரி
(இட்லிவடையின் வேண்டுகோளின்படி...)

இதில் எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், இது நிச்சயம் நடக்கும் - திரும்பவும் முழு அடைப்பு என்று ஜல்லியடித்து, சன் டிவியில் சரவணாவுக்கு பதில் வேறு நல்ல படமும், கலைஞர் டிவி/கே.டி.வில் 'ஆனந்தம்' படத்துக்கு பதில் பேரானந்தம் என்று படத்தை போட்டு வருவாயை கூட்டுவார்கள்.

Read More...

வார்த்தைக்கு வார்த்தை - பி.கே.சிவகுமார்

வார்த்தை ஒரு வருடம் நிறைவு - ஹரன் பிரசன்னாவின் பதிவுக்கும் அதன் பின்னூட்டங்களுக்கும் பி.கே.சிவகுமாரின் பதில்...

இந்தப் பதிவைப் படித்தேன். கட்டுரையாசிரியர் நண்பர் ஹரன் பிரசன்னாவிற்கும் கருத்துச் சொன்னவர்களுக்கும் வெளியிட்ட இட்லிவடை குழுவினருக்கும் நன்றி.

முக்கியமாக ஹரன் பிரசன்னா இப்போதெல்லாம் எழுத்தில் எளிமையைப் பாராட்டுகிற அளவுக்கு மாறி வளர்ந்திருப்பதே மகிழ்ச்சியளிக்கிறது :-) எளிமையான எழுத்துகளை மேலோட்டமானவை என்று அவர் எள்ளலுடன் புறக்கணித்த இணையக் குழுமங்களின் காலங்கள் நினைவுக்கு வருகின்றன. இதைப் போன்ற விஷயங்களே வார்த்தையின் உண்மையான சாதனை. மற்றபடி, வார்த்தையின் தலையங்கம் உள்ளிட்ட பிற மீதான விமர்சனங்கள் எதிர்பார்த்தவையே, ஏற்கனவே சில அறிவுஜீவிகளால் கேட்டவையே. கடந்த ஓராண்டில் வார்த்தையில் வெளியான வாசகர் கடிதங்களில் பெரும்பாலானவை இரண்டு விஷயங்களைப் பாராட்டி வந்தவை. 1. வார்த்தையின் தலையங்கம். 2. ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள். கடந்த ஓராண்டு வார்த்தை இதழ்கள் கையில் இருக்கிற யாரும் இதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.சாதாரண வாசகர்களுக்குப் பிடிப்பவை அறிவுஜீவி வாசகர்களுக்குப் பிடிக்காமல் போவதில் ஆச்சரியமில்லை.

ஆகவே, சில அறிவுஜீவி நண்பர்களுக்கு வார்த்தையின் தலையங்கம் பிடிக்காமல் போவதற்கு அரசியல்சார்ந்த காரணங்கள் இருக்கலாம். அதை மீறி அந்த அறிவுஜீவி நண்பர்கள் எதிர்காலத்தில் வளர்வார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. வார்த்தையில் தலையங்கம் எழுதுவது எனக்கும்கூட உவப்பான காரியமாக இல்லை. ஆனாலும், தெரிந்த விஷயங்களைக் கூட அதன் வெளிவராத மற்றும் கவனம் பெறாத பரிமாணங்களுடன் அணுக ஆளில்லையே என்றுதான் நான் எழுதுகிறேன். இந்திரா பார்த்தசாரதி, கே.எஸ். சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் தலையங்கத்தைத் தனிப்ப்ட்ட முறையில் பாராட்டியும் இருக்கிறார்கள். ஹிந்துத்த்துவத்தைத் தலையங்கம் தொடர்ந்து எதிர்ப்பது சிலருக்கு உவப்பில்லாமல் இருக்கலாம். அரசியலை மீறிக் கட்டுரையை வாசிக்கிற முதிர்ச்சி அவர்களுக்குக் கிடைக்கட்டும்.

வார்த்தை அக்டோபர் 2008 இதழ் தலையங்கம் படித்துவிட்டு இந்திரா பார்த்தசாரதி எழுதிய தனிப்பட்ட கடிதத்தைக் கீழே தந்துள்ளேன்.

Dear Sivakumar,
I have never read a more balanced, well-argued and immensely convictional editorial than yours in the recent times vide the latest 'Vaarthai'. It almost looks like we have reached the point of no return in our casteist and communal politics. It is a pity that such a wonerful and purposeful piece of writing has only a minority readership in this country.

Best regards,
IP


இதேபோல்தான், ஜெயஸ்ரீயின் கட்டுரையும். எழுத்தாளர் பாவண்ணனுக்கு ஜெயஸ்ரீயின் எழுத்துகள் பிடித்திருக்கின்றன. இங்கே பலருக்குப் பிடிக்கவில்லை. பிராமணக் குடும்ப பழக்க வழக்கங்கள் நிறைந்த சிறுவயது நினைவுகளை தமிழில் வேறு எந்தப் பத்திரிகையும் அது பிராமணப் பின்னணியுடையது என்பதாலேயே பிரசுரிக்குமா என்று தெரியாது. வார்த்தை பிரசுரித்து வந்திருக்கிறது. ஜெயஸ்ரீயின் எழுத்தை மீறி, சமூகத்தில் எந்தக் குலத்துப் பின்னணியுடையவர்களின் சிறுவயது நினைவும் சம அளவில் முக்கியமானதே என்பதை அக்கட்டுரைகளைப் பிரசுரித்ததன் மூலம் உணர்த்தியிருக்கிறோம். பலருக்கு இம்மாதிரியான விஷயங்கள் புரியாமல் போவது சகஜம்தான்.

தமிழில் தொடர்ந்து ***தரமாக*** அச்சு இதழ்களில் புனைகதை, கவிதைகள் எழுதுகிற அளவுக்கு அதிகம் பேர் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. இது மாறும், வளரும் என்று நம்புகிறேன். ஆனாலும்,புதிதாக எழுதுகிறவர்கள் சுமாராக எழுதினாலும் (எது சுமார் என்ற என் அளவுகோலுக்கு பொதுவில் விளக்கம் சொல்வது ரகசியத்தைச் சொல்லிவிடுவது மாதிரி.ஆகவே சொல்ல மாட்டேன்.) அவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதன் மூலம், அவர்கள் வளர வார்த்தை உதவுகிறது. புதியவர்கள் முதலில் சுமாராக எழுதினாலும், வாய்ப்பு கொடுத்திருக்கிறோம். தொடர்ந்து சுமாராக எழுதினால், வார்த்தை அதைப் பிரசுரிக்க இயலாமலும் வருந்தியிருக்கிறது.

மற்றபடி, நிறையோ குறையோ வார்த்தையைப் பற்றி நீங்கள் அனைவரும் பேசுவதைக் கேட்க மகிழ்ச்சியாகவே இருக்க்கிறது. பேசுங்கள். கேட்கிறேன். என்னைப் பொருத்தவரை வார்த்தையின் மிகச் சிறப்பான அம்சம் - இரா. முருகன் உள்ளிட்ட பல நண்பர்கள் ஏற்கனவே சொன்ன - ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் தான். பொய்மையும், போலித்தனமும், இலக்கியம் என்ற பெயரில் புரியாத மொழியும், மேதமைத்தனமான வேஷமும் இல்லாது குழந்தைகளோடு குழந்தையாகப் பழகிய ஓர் அன்பு கனிந்த ஆசிரியனின் நினைவுக் குறிப்புகள் அவை. தமிழில் இதுமாதிரி வேறு ஏதும் வந்துள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. அதை எழுதுகிறவர் என் தந்தையார் என்பதால் இவ்வுண்மையைச் சொல்வதில் எனக்குத் தயக்கமும் இல்லை.

பிரசன்னாவிற்கு: கலைஞரைப் பற்றி மட்டுமில்லை, ஜெயலலிதாவைப் பற்றியும் சோ ராமசாமியைப் பற்றியும் கூட கடந்த ஒரு வருட வார்த்தையில் அதிகம் விமர்சனம் வைக்கப்படவில்லை. :-) அதே நேரத்தில்,கே.எம். விஜயன் போன்ற பலர் கலைஞர் மீது ஒகேனக்கல் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளில் வைத்த விமர்சனங்களை வார்த்தை பிரசுரித்தே வந்திருக்கிறது. ஒருவரைத் திருப்திப்படுத்துவதற்காக யார் மீதும் வார்த்தை விமர்சனம் வைக்காது. அதே நேரத்தில், விமர்சனக் கருத்து கவனத்துக்குரியது என்றால் வார்த்தை பிரசுரிக்கும். எல்லாரின் அரசியலையும், அபிலாஷைகளையும் வார்த்தையால் பூர்த்தி செய்ய இயலாது. வார்த்தை இதழ் கட்டுரைகளில் விமர்சனம் இருக்கிறதோ இல்லையோ, வன்மமோ, வெறுப்போ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். இதில் சறுக்க நேரிடலாம். சறுக்கினால் திருத்திக் கொள்வோம்.

இங்கே பலர் மிகவும் தவறாக வார்த்தையை இலக்கிய இதழ் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது கருத்துகளைப் படிக்கும்போது தெரிகிறது.வார்த்தை இலக்கிய இதழ் என்று நினைத்தால் உங்கள் நினைப்பை மாற்றிக் கொள்ளுங்கள். வார்த்தை இலக்கிய இதழ் இல்லை. இலக்கிய இதழாகும் ஆசையும் இல்லை. குமுதம், விகடன் அளவுக்கு விற்பனையை வளர்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நிறைவேறினால் நல்லது. நிறைவேறவில்லையென்றாலும் நல்லது.

அன்புடன்,
பி.கே. சிவகுமார்

பி.கே.சிவகுமார் உங்க பதில் நல்லவேளை தலையங்கம் போல இல்லை! ;-)

Read More...

Thursday, April 23, 2009

ஸ்விஸ் வங்கிக் கள்ளப் பணமும் காங்கிரஸ் கட்சியின் மாய்மாலங்களும் - 1

ஸ்விஸ் வங்கிக் கள்ளப் பணமும் காங்கிரஸ் கட்சியின் மாய்மாலங்களும்: அருண் ஷோரி அவர்களின் இண்டியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையின் தமிழ் வடிவம்

இந்தியாவில் இருந்து களவாடப் பட்டு, இந்திய அரசின் சட்டங்களை ஏமாற்றி, வருமான வரியில் கட்டாமல் ஏமாற்றி அந்நிய நாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாகக் குவித்து வைக்கப் பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இந்த பிரச்சினையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது காங்கிரஸ் கட்சி. நான்கு பிரபலமான சட்ட நிபுணர்களின் கேள்விகள் இது வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து கீழ்க்கண்ட 6 எதிர் வினைகளை மட்டும் எழுப்பிள்ளது.

1. ஏன் அத்வானி இவ்வளவு நாட்களாக இந்த பிரச்சினையை எழுப்பாமல் இப்பொழுது தேர்தல் தருணத்தில் எழுப்புகிறார்?

2. ஜி 20 அமைப்பு இந்த பிரச்சினையை எழுப்புவதற்கு சரியான அமைப்பு கிடையாது

3. அத்வானி சொல்லும் எண்ணிக்கையில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது

4. இந்தக் கோரிக்கையை எழுப்புவதன் மூலம் அத்வானி அந்த வெளிநாட்டு வங்கிகளில் கள்ளத்தனமாக ஒளித்து வைத்திருக்கும் பணத்தை இடம் மாற்றம் செய்வதற்குத் தூண்டுகிறார்.

5. ஏன் பி ஜே பி அரசின் பொழுது ஃபெரா சட்டத்தை ஃபெமா சட்டம் மூலம் மாற்றி குற்றங்களை ஒருங்கிணைத்து தண்டனை கொடுக்க முயலவில்லை?

6. அத்வானியின் பா ஜ க ஆட்சியில் இருந்த பொழுது என்ன செய்து கிழித்தது?

இந்தக் கேள்விகள் மிகவும் அபத்தமானவை என்பதும், மாட்டிக் கொண்டு முழிப்பவன் அவஸ்தையில் கேட்க்கும் கேள்விகள் என்பதும் இந்தக் கேள்விகளை சற்று ஆராய்ந்தாலே யாருக்கும் எளிதாக புரிந்து விடும், இப்பொழுது இந்தக் கேள்விகளுக்கான நியாயமான பதில்களைக் காணலாம்:

1. ஏன் அத்வானி இவ்வளவு நாட்களாக இந்த பிரச்சினையை எழுப்பாமல் இப்பொழுது தேர்தல் தருணத்தில் எழுப்புகிறார்?

உண்மை என்னவென்றால் அத்வானி இந்த பிரச்சினையைக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே பாராளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார். இப்பொழுது அவர் புதிதாக இந்த பிரச்சினையைக் கிளப்பவில்லை. இப்பொழுதுதான் தேர்தலுக்காகப் புதிதாகக் கிளப்புகிறார் என்று காங்கிரஸ் பொய் சொல்கிறது. அத்வானி சென்ற வருடமே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் எல் ஜி டி என்னும் வங்கியில் முறைகேடாக தத்தம் நாடுகளை ஏய்த்து கோடிக்கணக்கான டாலர்கள் கருப்புப் பணத்தை ஒளித்து வைத்திருப்பவர்களின் பட்டியலை ஜெர்மனி அரசாங்கம் வைத்திருக்கிறது என்றும், அதில் உள்ள இந்தியர்களின் பெயர்களை இந்திய அரசு கேட்டுப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்மோகனுக்கு அத்வானி சென்ற வருடம் ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு மழுப்பலான பதில் ஒன்றை அளித்த சிதம்பரம் எந்தவித உருப்படியான நடவடிக்கைகளையும் இன்று வரை எடுக்க முயற்சிக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் அரசின் மூத்த நிதித்துறைச் செயலாளர் ஒருவர் ஜெர்மனியில் உள்ள இந்தியத் தூதருக்கு அப்படி ஜெர்மனிய அரசை வற்புறுத்தி அந்தப் பெயர்களை வாங்க வேண்டாம் என்றும் கோரிக்கையை வைக்காமல் பிரச்சினையை ஊறப் போடுங்கள் என்றும் ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். இந்த விஷயம் அமிதாப் ரஞ்சன் அவர்களின் இந்தியன் எக்ஸ்பிரஸ் மார்ச் 31 தேதியிட்ட கட்டுரையில் அம்பலப் படுத்தப் பட்டு விட்டது. இந்த பிரச்சினையை பாராளுமன்றத்திலும் பா ஜ க உறுப்பினர்கள் எழுப்பியுள்ளார்கள். இவ்வளவு தூரம் வெளிப்படையாக கடந்த ஒரு வருடங்களாக அரசை பா ஜ க வற்புறுத்தி வந்த பொழுதும் “இப்பொழுதுதான் புதிதாகக் கிளப்புவதாக” அபாண்டமான ஒரு பொய்யை காங்கிரஸ் கட்சி அவிழ்த்து விட்டு மக்களைத் திசை திருப்புகிறது.

2. ஜி 20 அமைப்பு இந்த பிரச்சினையை எழுப்புவதற்கு சரியான அமைப்பு கிடையாது

இப்படிப் பட்ட ஒரு வழக்கமாக தங்களுக்கு வசதியான ஒரு கேள்வியை காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞரும், அதிகாரபூர்வ பேச்சாளரும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் இந்த பிரச்சினையை பிரதமர் மன்மோகன் ஜி20 கூட்டத்தில் எழுப்பியதாகவும் அதே பேச்சாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஜி20 முறையான அமைப்பு இல்லையென்றால் அதில் ஏன் போய் மன்மோகன் பேச வேண்டும். ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறதே? ஏப்ரல் 2ம் தேதி பிரிட்டன் பிரதமர் கார்டன் ப்ரவுன் அளித்த விருந்தில் போகிற போக்கில் பிரதமர் மன்மோகன் இந்த பிரச்சினை பற்றி குறிப்பிட்டதாக காங்கிரஸ் கட்சியின் குறிப்பு கூறுகிறது. ஆனால் உண்மையில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஏப்ரல் 2, 2009 அன்று வெளியிட்ட அறிக்கையில் பாரா 15ல் மிகத் தெளிவாக உலக நாடுகளின் நிதி அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக கள்ளத்தனமான கருப்புப் பணத்தை வைத்திருக்க அனுமதித்து தங்களுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக உறுதி எடுத்திருக்கிறார்கள். அப்படி கள்ளப் பணத்தை வைத்திருப்பவர்கள் பற்றிய முறையான தகவல்களைத் தர மறுக்கும் வரி ஏய்ப்பு வங்கிகளை வைத்திருக்கும் நாடுகள் மீது வியாபாரத் தடை உட்பட பல கடுமையான தண்டனைகளை அமுல் படுத்தப் போவதாகவும் ஜி20 நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாக முடிவெடுத்திருக்கின்றன. வரி ஏய்த்து கள்ளப் பணத்தைப் பிற நாடுகளில் பதுக்கும் வழக்கத்திற்கு ஒரு முடிவு கட்டப் போவதாகவும் அந்தக் காலம் முடிந்து விட்டது என்றும் ஜி 20 நாட்டுத் தலைவர்கள் சூளுரைத்திருக்கிறார்கள். ஒ இ சி டி அமைப்பு அப்படி கள்ள வங்கிகளைத் தங்கள் நாட்டில் வைத்துக் கொண்டு உலக நாடுகளுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கும் நாடுகளின் பட்டியல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதை விட வேறு எந்த அமைப்பு இந்த விஷயத்தைப் பற்றி பேச தகுதியானது. இவ்வளவு உறுதியான முடிவுகள் எடுக்கப் பட்ட அமைப்பை விட வேறு எந்த அமைப்பு சரியானது? இந்த ஜி20 அமைப்பு சரியில்லை என்றால் வேறு எந்த அமைப்பில் இந்த பிரச்சினையை இந்தியா எழுப்பப் போகிறது? யாரை ஏமாற்ற மழுப்புகிறது காங்கிரஸ் கட்சி? ஜி20 தான் இந்தப் பிரச்சினையை இரும்புக் கரம் கொண்டு தீர்க்க இருக்கும் அமைப்பு. இங்குதான் இந்தியப் பிரதமரும் தன் உறுதியான ஆதரவைத் தெரிவித்திருக்க வேண்டும். இந்த அமைப்பில் இந்த விஷயத்தையே பேச மறுத்து விட்டு இப்பொழுது இந்த அமைப்பே சரியில்லை என்று நொண்டிச் சாக்கு சொல்கிறது காங்கிரஸ் கட்சி.

- விஸ்வாமித்ரா
தொடரும்.......... ( நாளை )

English Essay source : Indian Express

Read More...

வார்த்தை ஒருவருடம் நிறைவு - ஹரன் பிரசன்னா


வார்த்தை ஒருவருடம் நிறைவு - ஹரன் பிரசன்னா

2008 ஏப்ரலில் தொடங்கப்பட்ட வார்த்தை இதழ் ஒரு வருடத்தை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறது. இன்றைய சிற்றிதழ் சூழலில் வார்த்தை இதழ் மிக முக்கியமான ஒன்றாகிறது. வார்த்தை இதழ் தொடங்கப்பட்டபோது, இலக்கிய உலகில் இருந்து எழுந்த முக்கியமான கேள்வி, வார்த்தை இதழின் நோக்கம் என்ன என்பதே. உண்மையில் ஓர் இதழின் நோக்கம் என்பதை ஒரே வரியில் சொல்லிவிடமுடியும் அல்லது பல பக்கங்களிலும் சொல்லிவிடமுடியாது என்று சொல்லலாம். வார்த்தை இதழ் தொடங்கப்பட்டபோது வெளிப்படையான ஆதரவும் மறைமுகமான பிரசாரமும் ஒருசேர நடந்தது என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். பிரசாரங்கள் வார்த்தையின் லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ந்தவையே. ஆனால் வார்த்தை இதழ் தனக்கென லட்சியமாகக் கொண்டது, எந்த ஒரு நாகரிகமான கருத்தும் இடம்பெறவேண்டும் என்பதையே. கூடவே எளிமையான தமிழில் ஆழமான கருத்துகள் என்பதுவும்.

எந்த ஒரு நாகரிகமான கருத்தும் இடம்பெறலாம் என்கிற நிலையை ஒரு சிற்றிதழ் எடுத்தால் அதன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்னவாக இருக்கமுடியும் என்பதை நாம் எளிதில் யூகித்துவிடலாம். இது புதியதும் அல்ல. சொல் புதிது இதழ் மீது என்னவிதமான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது என்பது தெரிந்ததுதான். திண்ணை இணைய இதழ் போல எந்த ஒரு கருத்தையும் வெளியிட்ட ஒரு இன்னொரு இணைய இதழையோ, அச்சு இதழையோ நாம் பார்க்கமுடியாது. ஆனால், இன்றைய சூழலில், திண்ணை என்பது ஒரு அதிகாரப்பூர்வமான ஹிந்துத்துவ இணையத்தளமாகவே குற்றம் சாட்டப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின்னுள்ள கருத்துகளைக் கட்டுடைத்துப் பார்த்தால், தொடர்ந்து ஒரே கருத்தைச் சொல்லிச் சாகடிக்கும் வெற்றுப் பிரசார உத்தியைத் தவிர, எந்த ஓர் உருப்படியான கருத்தையும் நாம் கண்டடைந்துவிடமுடியாது. ஹிந்துவத்தின் எந்த ஒரு அரசியல் சித்தாந்தத்தை திண்ணை முன்வைக்கிறது என்று கேட்டுப்பார்த்தால், குற்றம்சாட்டுபவர்கள் சொல்லும் பதில், திண்ணை இணைய இதழில் வெளிவந்துள்ள ஹிந்துத்துவவாதிகளின் கருத்துகளைப் பற்றியதாகவே இருக்கும். அதே இணைய இதழில், அதி தீவிர, வேறெந்த அச்சு சிற்றிதழிலும் வெளிவரும் அதே அளவு உக்கிரத்துடன், ஹிந்துத்துவ எதிர்ப்புக் குரலும் ஒலித்திருப்பதை குற்றம் சுமத்துபவர்கள் வசதியாக மறந்திருப்பார்கள். காரணம் மிக எளிது. எவ்விதத்திலும் ஹிந்துத்துவவாதிகளின் குரல்கள் வெளிவர வாய்ப்பிருக்கக்கூடாது என்பதுவே அது.

திண்ணையின் மீதான குற்றச்சாட்டுகள் மிக வலுவாக வார்த்தையின் மீதும் இறங்கியிருக்கவேண்டும். ஆனால், திண்ணை போல, வார்த்தை என்பது பொது வெளி இல்லை என்பதாலும், பக்க, கால நிர்பந்தத்தாலும், அது அத்தனை உக்கிரமாக வார்த்தை இதழ் மீது இறங்கவில்லை. ஆனாலும் சிற்றிதழ்ச் சூழல் ‘ஹிந்துத்துவ இதழ்’ என்னும் பிரயோகத்தை பயன்படுத்தாமல் இல்லை. யமுனா ராஜேந்திரன் (கள்ள மௌனமும் இடி முழக்கமும் கட்டுரை, உயிர்மை அக்டோபர் 2008 இதழ்) தனது கட்டுரையில் சொல்கிறார், ‘தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் இந்துத்துவவாதிகள் இதுவரையிலும் ’வெளிப்படையாக’ தமது கலாசார அரசியலை முன்வைத்தது இல்லை. அதற்கான வெளியை, தமிழக அறிவுச் சூழல் மறுத்து வந்திருப்பது கலாசாரத் தளத்தில் மிகவும் ஆரோக்கியமானது’ என்கிறார். அப்சல் குரு போன்றவர்களின் குரல்கள் வெளிவந்த எந்த ஒரு சிற்றிதழையும் இவர் இதுவரை கேள்விகேட்டதில்லை. ஏனென்றால், சமூக மறுப்பும் அதற்கான வெளியும் முற்போக்குத்தனம் என்பதறிக. உண்மையில், ஹிந்துத்துவம் உட்பட, எந்த ஒரு குரலும் வெளிவர இடம் இருக்கக்கூடாது என்கிற சூழல் எப்படி அறிவுப்பூர்வமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கமுடியும் என்று புரியவில்லை. நிஜமான ஆரோக்கியமான சூழல் என்பது, சமூக பொதுப்புத்தியின் கருத்து உட்பட, அதன் மறுப்புக் கருத்துகள் வரையிலும், எதுவும் வெளிவரும் சூழல் உள்ள ஒன்றாகவே இருக்கமுடியும். ஆனால் யமுனாவின் கையறுநிலை கட்டுரை, வார்த்தை என்கிற ஓர் இதழ், எக்கருத்தையும் முன்வைக்கமுடியும் ஓர் ஊடக வெளியைக் கொண்டுவந்துவிட்டதே என்கிற ஆற்றாமையில் துவங்குகிறது ‘என்பது என் துணிபு!’ இந்த ஓர் உதாரணத்தை வைத்துக்கொண்டே, வார்த்தை எப்படி ஓர் துவக்கத்தை தந்தது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். இன்னொரு எடுத்துக்காட்டு, ‘உயிர் எழுத்து’ இதழில் ‘பொதிகைச் சித்தர்’ தன் பங்குக்கு, பிராமணியத்தில் தொடங்கி, எனி இந்தியனில் கலந்து வார்த்தையில் முடித்தது!

இவர்கள் பார்வையில் வார்த்தை செய்த தவறுகள் என்ன? முற்போக்கு என்ற போர்வையில், இந்தியத்துவம் அனைத்தையும் நிராகரிக்கும் ஒரு போக்கைத் தொடங்கி, அது மட்டுமே சரியானது என்கிற கருத்தை வலுவாக ஊன்றச் செய்துவிட்ட ஒரு சூழலில், வார்த்தை அதை அசைக்கப்பார்த்தது. இந்திய வெறுப்பு என்பதே முற்போக்குத்தனம் என்கிற கருத்தை அது உடைக்கப்பார்த்தது. முற்போக்கு எழுத்தாளர்கள் என்றறியப்பட்டவர்களின் எழுத்துகள் தீவிரமான மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டது. மறுவாசிப்புக்கு உட்படுத்தியவர்கள் பிராமணர்கள் அல்லாத, இந்தியத்துவத்தையும் இந்திய பாரம்பரியத்தையும் தூக்கிப் பிடிப்பவர்கள் என்பது இன்னும் சிக்கலாகிப் போனது. கட்டுரைகள் என்றாலே புரியாத வாசிப்பு என்று பழக்கப்படுத்தி வைத்திருந்ததை, ’புரியும்படி எழுதுவது தவறல்ல’ என்கிற எண்ணத்தை வார்த்தை முன்வைத்தது இன்னும் சிக்கலானது. ஏனென்றால், இதுவரை வெளிவர இயலாத கருத்துகள், அதுவும் புரியும் வண்ணம் வெளிவருவதில் அதிக சிக்கல் உள்ளது இயல்புதானே! வார்த்தை அத்தகைய கட்டுரைகளை வெளியிட்டது. கூடவே அதன் மீதான மறுப்புக் கருத்துகளையும் அப்படியே வெளியிட்டது! ‘இட ஒதுக்கீடு’ குறித்த நான்கு விதமான கட்டுரைகள் ஒரே இதழில் வெளிவந்தன. அதன் மீதான எதிர்ப்பும் அடுத்த இதழிலேயே பதிவு செய்யப்பட்டது. அண்ணா, சீகன்பால்க் போன்ற பிம்பங்களின் மீதான விமர்சனங்கள், மிகத் தெளிவாகவும், ஆதாரத்தோடும் முன்வைக்கப்பட்டன. அவற்றை நிராகரிக்கவும் முடியாது, பதிலளிப்பதும் கடினம் என்னும்போது, ‘ஹிந்துத்துவ முத்திரை’ என்னும் எளிமையான ஆயுதம் தேவையாயிற்று. சென்னை புத்தகச் சந்தையில், வேறொரு இதழாசிரியரைப் பார்த்து ஒருவர் இப்படிச் சொன்னார். ‘தொடர்ந்து சிற்பமா அட்டையில போடறீங்க... நிச்சயம் ஹிந்துத்துவ இதழாத்தான் இருக்கும்.’ ஹிந்துத்துவத்துக்கும் தனக்கும் துளி சம்பந்தம் கூட இல்லை என்று நினைத்துக்கொண்டிந்த, அந்த இதழின் ஆசிரியர் ஒரு நிமிடமாவது ஆடிப்போயிருப்பார். இந்தியக் கலையின் உன்னதமான சிற்பங்களை நீங்கள் அட்டையில் வெளியிட்டால், ஹிந்துத்துவ இதழாக இல்லாமல் எப்படி அதைச் செய்ய முடியும் என்பது அந்த வாசகரின் எளிய புரிதல். இதன் வேர், இதுவரை வெளிவந்த சிற்றிதழ்கள் உருவாக்கியிருந்த சித்திரத்துள் அடங்கியிருக்கிறது.

உண்மையில், வார்த்தை தனது தலையங்கம் முழுவதிலும் விடாமல் ஹிந்துத்துவத்தைத் தாக்கியே எழுதிவந்துள்ளது. ஆனால் இதுவெல்லாம் போதுமானதாக இல்லை. ‘ராமன் நம்மவனும் இல்லை, நல்லவனும் இல்லை’ என்கிற ‘நடுநிலையான’ தலைப்பில் கட்டுரைப் போட்டிகளையெல்லாம் நடத்தத் தயாராக இல்லாத ஓர் இதழை என்னவென்று வேண்டும்? ஹிந்துத்துவ இதழ் என்றுதான்!

வார்த்தை இதழ் இந்த ஓராண்டு காலத்துக்குள் செய்தவை என்ன என்று பட்டியலிட்டுப் பார்க்கலாம். ஒவ்வொரு இதழிலும் குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாவது மிக நல்ல ஒன்றாக இருந்திருக்கிறது. எளிமையான தமிழில் ஒரு சிற்றிதழ் வரமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறது. எந்தவிதமான கருத்தையும் நாகரிகமாக எழுதினால் அது ஓர் இதழில் நிச்சயம் வெளிவரும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. நிறைய புதிய கவிஞர்களுக்கும், கட்டுரையாளர்களுக்கும் இடம் தந்திருக்கிறது. இணையத்தில் மட்டுமே எழுதி வந்தவர்களுக்கு அச்சு இதழில் ஓர் இடத்தைத் தருவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ’ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்’ இன்றைய சூழலில் இன்னொரு சிற்றிதழில் வருமா என்பது ஐயமே.

அதே போல் இந்த ஓராண்டில் வார்த்தை சறுக்கியது என்னவென்றும் பார்க்கலாம்.

கட்டுரைகளில் இருக்கும் தரம், வார்த்தையில் வெளிவரும் கதைகளிலும், கவிதைகளிலும் இல்லை என்றே சொல்லவேண்டும். எளிய தமிழில் கட்டுரைகள் என்று படிக்கும்போது திடீரென்று குழம்படிக்கும் தமிழவனின் கட்டுரை வருகிறது. துகாராமின் ஒரு கட்டுரையும், வெளி ரங்கராஜனின் கட்டுரைகளும் தமிழவனுக்கு இணையான தமிழில் இருந்தன. ஜெயகாந்தன் வார்த்தையையும் வார்த்தையின் வாசகர்களையும் ஓட ஓட துரத்தினார். ஜெயஸ்ரீயின் (ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அல்ல!) கட்டுரைகளைப் படித்தால், உடனே தூக்கம் வந்துவிடும். கே.எம். விஜயனின் தமிழைப் புரிந்துகொள்ள குட்டிக்கரணம் அடிக்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு இதழிலும் ஒரே மாதிரியான லே-அவுட் அலுப்பைத் தந்தது/தருகிறது. இந்த லே-அவுட் விஷயத்தில் வார்த்தை இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். ஒரே மாதிரியான அட்டையும் லே அவுட்டும் அலுப்பைத் தரும். இதற்கு நிகழ்கால உதாரணங்கள் உயிர்மையும், தீராநதியும். இந்த விஷயத்தில் இன்றைய சிற்றிதழ் சூழலில், காலச்சுவடுடன் போட்டி போட ஆளில்லை என்றே கூற வேண்டும். அதேபோல், வார்த்தையின் இன்னொரு பலவீனம், எழுதப்போகும் 18 எழுத்தாளர்களுள், 9 பேர் யாராக இருக்கமுடியும் என்பது இதழ் வெளிவருவதற்கு முன்பே தெரிந்துவிடுவது. இது ஓராண்டுக்குத் தொடர்ந்தது! இந்த விஷயத்திலும் காலச்சுவடு எடுத்துக்கொள்ளும் கவனம் பாராட்டுக்குரியது. இன்னொரு விஷயம், நாவல் பகுதி. உடனடியாக நாவல் வெளிவராத நிலையில், இந்த நாவல் பகுதியின் பயன் என்னவென்று புரியவில்லை. நாவல் பகுதி எழுதப்பட்டு ரொம்ப நாளாக சும்மா கிடக்கிறது என்பதாலேயே அதற்கு வார்த்தை இடம் தந்துவிடக்கூடாது. அசோகமித்திரன் பல வருடங்களுக்கு முன்னால் எழுதிய நாவலின் ஒரு பகுதியை இப்போது ஒரு வாசகன் ஏன் படிக்கவேண்டும்? இன்னுமொரு விஷயம், அரசியல் விமர்சனங்களில் தோழர்கள் மீது வைக்கப்படும் விமர்சனத்தின் அளவுக்கு, ஹிந்துத்துவவாதிகள் மீது வைக்கப்படும் விமர்சனத்தின் அளவுக்கு ஏன் கருணாநிதியின் மீதும், திமுகவின் மீது வைக்கப்படுவதில்லை என்பது. அண்ணா பற்றிய கட்டுரை (திராவிட இயக்கத்தின் கோர்பச்சேவ், கோ.ராஜாராம்) இப்போது வந்துகொண்டிருக்கிறது. இதில் கருணாநிதியும் தொடர்ந்து விமர்சிக்கப்படலாம். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இப்படி நிறைய குறைகளைக் கூற முடிந்தாலும், வார்த்தையின் இருப்பே அதன் வெற்றிக்கு அடையாளம். வார்த்தை இதழ் தொடர்ந்து வரவேண்டியது முக்கியம்.

இதுவரை வாசிக்காதவர்கள், வார்த்தையின் ஓராண்டு இதழ்களையும் படிக்கலாம். படிப்பவர்களுக்கு ஒரு சின்ன விஷயம். எல்லா தலையங்கத்தைப் படிப்பதற்கும், தலையங்கம் நீங்கலாக எல்லாவற்றையும் படிப்பதற்கும் ஒரே கால அளவுதான் ஆகும். தலையங்கம் அந்த அளவுக்கு இரத்தினச் சுருக்கம்.


எனது ரசனையின் அடிப்படையில், ஓராண்டு வார்த்தையில் டாப் 5: (இந்தப் பட்டியலை இட்லிவடையின் தொல்லை தாங்காமல் தருகிறேன்!)

05. திராவிட இயக்கத்தின் கோர்ப்பச்சேவ் – கோ.ராஜாராம் – மார்ச், ஏப்ரல் 2009.
04. இசையின் விதையும் விதையின் இசையும் – சேதுபதி அருணாசலம் – ஜூலை 2008 இதழ்
03. உ.வே.சாவின் சமயம் கடந்த தமிழ் புத்தக விமர்சனம் – கோ.ந. முத்துக்குமார சுவாமி – ஜூலை 2008 இதழ்
02. சீகன்பால்க் – கிறித்துவ ஞானி, ஹிந்து அஞ்ஞானி – ஆகஸ்ட் 2008
01. காவலன் காவான் எனின் – நாஞ்சில் நாடன் – செப்டம்பர் 2008


ஹரன் பிரசன்னா ஏன் கமல் கவிதை பற்றி எதுவும் எழுதவில்லை ?


தொடர்புடைய பதிவு: "வார்த்தை" - 'ஜெஜெ' ன்னு இல்லை

Read More...

Wednesday, April 22, 2009

மீனவ நண்பன்

மீனவ நண்பன் படம் யார் நடித்தது ?

எம்.ஜி.ஆர் என்று சொல்பவர்களுக்கு அடுத்த கேள்வி

தற்போது அந்த படத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் ?

விடை கீழே...


ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை பிடித்து சென்றுள்ளது. மீனவர்கள் தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பாதுகாப்பு? - விஜயகாந்த்

மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினால் முதலில் எச்சரிக்கையை அளிக்க வேண்டும் என்று இருநாட்டு கடற்படையினரிடமும் வற்புறுத்தியதாக கூறினார். அதையும் மீறி இலங்கை கடற்படையினர் அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. - பிரணாப் முகர்ஜி

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கையுடன் தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும்" - வைகோ

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடருமேயானால், பிரதான எதிர்க் கட்சி என்ற முறையில், தமிழக மீனவர்களின் உரிமைகளை பெற்றுத்தர என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்பதற்கான முயற்சிகளில் அதிமுக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் - ஜெயலலிதா


"எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு அரணாக காங்கிரஸ் பேரியக்கம் இருந்து செயல்படும். அக்கொள்கை வழியில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள 23 மீனவர்களை விடுவிக்கவும், தாக்குதல் நிகழ்வுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடவும் உரிய நடவடிக்கைகளை காங்கிரஸ் மேற்கொள்ளும்" - தங்கபாலு

கடந்த 25 ஆண்டுகளாக நடந்து வரும் இலங்கைக் கடற்படையின் அத்துமீறலைத் தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை இதுவரை எடுக்காதது வேதனைக்குரியது - திருமாவளவன்

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வரும் தமிழக மீனவர்கள் நலன் காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்து கடிதம் - முதல்வர் கருணாநிதி

இதெல்லாம் தமிழ் நியூஸ். கீழே நேற்று வந்த இந்த ஆங்கில நியூஸையும் பாருங்க. அப்பறம் யார் நடித்தால் நல்லா இருக்கும் என்று நீங்களே முடிவு செய்யுங்க.மீனவ நண்பன் மாதிரி கைவசம் விவசாயி,ரிக்சாக்காரன், நானும் ஒரு தொழிலாளி என்று நிறைய படங்கள் இருக்கிறது.


Read More...

Tuesday, April 21, 2009

யோகாவின் மகிமை

யோகா பற்றி பலர் ஆராய்ச்சி செய்துள்ளார்கள். இந்தியாவில் தோன்றிய யோகா, இன்று வெளிநாட்டில் மிக பிரபலம்.

நான் அதிகாலையில் யோகா கற்றுக் கொள்கிறேன். எனக்கு கற்றுக் கொடுக்கும் தேசிக்காச்சாரியின் தகப்பனார், யோகா கற்றுக் கொண்டதால் 102 வயது வரை வாழ்ந்தார். அந்த வயது வரை வாழ நான் யோகா கற்கவில்லை. உங்களுக்கு உழைக்கவே யோகா கற்றுக் கொள்ளுகிறேன்.

என்று சொன்னவர் கலைஞர்.

சற்று முன் கிடைத்த செய்தி: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 23ஆம் தேதி தமிழகத்தில் வேலைநிறுத்தம். அனைத்து கட்சிகளும் அமைதியான முறையில் ஈடுபட கலைஞர் வேண்டுகோள்.

மேலும் யோகா பற்றி கீழே...தனி ஈழம்தான் தீர்வு

பேச்சு வார்த்தை பயனில்லை

பேச்சு வார்த்தை தான் வழி

பகத்சிங்க் மாதிரி தான் பிரபாகரன்

விடுதலைப்புலிகளை நான் ஆதரிக்கவில்லை

விடுதலைப்புலிகளை நான் எதிர்க்கவும் இல்லை.

இலங்கை தமிழர்தான் தீர்மானிக்க வேண்டும்

மத்திய அரசின் நிலையே எங்கள் நிலை

மத்திய அரசு தலையிடாவிட்டால் எம்.பி.க்கள் ராஜினாமா

அமைதிக்கு வழி செய்ய மத்திய அரசுக்கு தெரியும்

எல்லோரும் பிரதமர்,சோனியாவிற்கு தந்தி அனுப்ப வேண்டும்

இலங்கை தமிழர்களுக்காக பந்த்

இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம்

தமிழர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் இந்த அரசு தேவையா என்ற கேள்விக்கு விடை கண்டாக வேண்டும் - அறிக்கை

அனைத்து கட்சி கூட்டம், பேரணி

இலங்கை தூதரத்துக்கு முன்னாலே போராட்டம்

பிரமாண்ட மனிதச் சங்கிலி போராட்டம் மற்றும்
சட்டசபையில் கடைசி தீர்மானம்.

இறங்கல் கவிதை - கருணாநிதி உருக்கம்
இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தேன் ? கலைஞர் பட்டியல்

பிரபாகரன் பிடிபட்டால் அவரைக் கெளரவமாக நடத்த வேண்டும்

பிரபாகரன் என் நல்ல நண்பர், அவர் தீவிரவாதி கிடையாது

பிரபாகரன் தீவிரவாதி, அவரை மன்னிக்க முடியாது


யோகாவில் பட நிலைகள் - Positions இருப்பது போல் கலைஞரும் இலங்கை தமிழர் பிரச்சனையில் பல நிலைகள் எடுத்துள்ளார். யோகா என்ன கற்று கொடுத்ததோ தெரியது ஆனால் பல நிலைகள் எப்படி எடுப்பது என்று அவருக்கு நன்றாக கற்றுக்கொடுத்துள்ளது.


Read More...