மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள் 1.80 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. காந்தி பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, பாக்கெட் கடிகாரம் உள்ளிட்ட 5 பொருட்கள் அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ஓடிஸ் என்பவர் வசம் உள்ளது. இப்பொருட்களை நியூயார்க்கில் ஏலம் விடப் போவதாக இவர் அறிவித்தார். இதனை தடுக்க மத்திய அரசு தீவிர முயற்சி கடைசி சில மணி நேரத்துக்கு முன் மேற்கொண்டது. இதற்கு ஓடிஸ் விதித்த நிபந்தனைகளை அரசு ஏற்க மறுத்தது. இந்நிலையில் அவருடைய பொருட்கள் ஏலம் விடப்பட்டன அவற்றை கிங் பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா 1.80 மில்லியன் டாலருக்கு ஏலம் ஏடுத்துள்ளார். ஏலத்தில் எடுக்கப்பட்ட பொருட்களை விரைவில் இந்திய அரசிடம் ஒப்படைக்க உள்ளார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, March 06, 2009
Thank You விஜய் மல்லையா
Posted by IdlyVadai at 3/06/2009 06:37:00 AM
Labels: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
17 Comments:
இந்தியாவின் பாரம்பரியம் மல்லையாவிடம்தான் இருக்கு. சாராயவியாபாரி அப்படின்னு சொன்ன கோடீஸ்வரர்களுக்கு இது செம செருப்படி
இந்திய அரசைப் போல வரலாற்று சான்றுகளை காப்பதில் சோம்பேறித் தனம் காட்டும் அரசைப் பார்க்க இயலாது. விஜய் மல்லையா போன்று ஏதேனும் இளிச்சவாயர்கள் கொண்டு வந்து ஒப்படைத்தால் தான் உண்டு - 'Slumdog millionaire' ஆஸ்கார் விருதுகள் காங்கிரஸ் அரசின் சாதனை என்று சொல்வது போல.
What are we going to do with his chappels and bowls where Gandhi's principle are not followed.
Gandhi wanted to send the foreigners away from the country but our country is ruled by a foreigner, again with Gandhi's name.
A RAVI
இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. Kingfisher airline இல் வேலை செய்பவர்களின் சம்பளத்தை குறைத்து KP க்கு 1.55 மில்லியன் டாலரும் மகாத்மாவின் பொருட்களுக்கு இன்னும் சில மில்லியன் டாலர்களையும் வழங்கியதை இட்லிவடை வரவேற்கிறதா ?
//மகாத்மாவின் பொருட்களுக்கு இன்னும் சில மில்லியன் டாலர்களையும் வழங்கியதை இட்லிவடை வரவேற்கிறதா ?//
ஆமாம் வரவேற்கிறேன். உங்கள் வீட்டில் உங்க தாத்தாவின் பொருட்கள் அல்லது உங்க அப்பாவின் பொருட்கள் ( அவ்ர்கள் போன பின்பு ) அவர்கள் ஞாபகமாக வைத்திருப்பீர்கள் இல்லையா அதே போல் தான் இது. இதற்கு விலை மதிப்பு கிடையாது.
//What are we going to do with his chappels and bowls where Gandhi's principle are not followed.//
சாராயமே கூடாது என்றார் காந்தி ஆனால் இன்று சாராயவிற்ற பணத்தில் தான் இதை வாங்க முடிகிறது என்ன செய்ய ?
//இந்திய அரசைப் போல வரலாற்று சான்றுகளை காப்பதில் சோம்பேறித் தனம் காட்டும் அரசைப் பார்க்க இயலாது. //
Do you mean to say that the Indian Govt. is not lazy in other things?
எப்படி செய்தாலும் குற்றம் பார்க்கும் உலகம் இது,
பணம் கொட்டிகிடந்தாலும் 1.80 மில்லியன் டாலர் செலவழிக்க வேண்டிய அவசியம் என்ன விஜய் மல்லையாவுக்கு.நல்ல விஷயங்களை பாருங்கள்,மனிதர்களை அளவிட வேண்டாம்
இட்லிவடை ,,, காலையில் சாப்பிடுகிறேனோ இல்லையே ,இந்த இட்லிவடை பார்க்காமல் போவதில்லை :) வாழ்த்துக்கள் தோழமைக்கு
இந்த விலை மதிக்க முடியாத பொருட்களை எந்த ‘மாய்க்கான்' அமெரிக்கனிடம் வித்தான் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
பாரம்பிரியமும், பழம் பெரும் வரலாறும் நம் நாட்டில் நிறைய உள்ளன. குறிப்பாக 1000, 2000 வருட பழமை வாய்ந்த பொருட்களும் விஷ்யங்களும் இருக்கும் பூமி இது. இதன் மகத்துவத்தையும் அருமையையும் நம்மைவிட அயல் நாட்டவர் நன்கு அறிவர். இதே காந்தியின் கண் கண்ணாடியை நம்ப ‘மாய்க்கான்' ரூ.10 க்கு வித்திருப்பான். இப்போ அதை நாம் கோடி கொடுத்து மீட்க வேண்டியுள்ளது.
அதையும் அரசாங்க செய்ய வக்கில்லாமல் ஒரு தனி மனிதன் செய்ய வேண்டியுள்ளது. என்ன கொடுமைடா சாமி..!
ஒரு 100 வருஷம் ஆன பொருட்களை அயல் நாட்டவர் அவர்கள் நாட்டில் அதை மதிப்புடன் பாதுகாக்கின்றனர். விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் நம்மிடம் இருந்தும் நாம் இங்கே அதை குப்பை மேடுகளாக்கிக் கொண்டிருக்கிறோம். அரசாங்கமும் அதை கண்டுக்காம இருக்கு.
‘ என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்..
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்..
ஒழுங்காய் பாடு படு வயக்காட்டில்..
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்..'
நம்ப ஆளுங்க உடனே வயக்காட்டுக்கு போய் வேல செஞ்சாப் போதுமான்னு கேப்பாங்க.. இத எங்க போய் சொல்ல மக்கா.. சொக்கா..!?
JAI HO!!
VIJAY HO!!
Thanks Mr. Mallya
And how did these valuables, in the first instance, come into the possession of mr. james otiz and which patriotic Indian sold these?
Mallya might have bought Gandhi's spectacles. Whats the use of this since he is yet to bring Gandhi's 'vision' in his business dealings.
His Kingfisher airlines is the highest defaulter of ATF payments due to Govt. owned oil marketing companies. when he has got millions of dollars of money to buy artefacts, where is the business ethics in clearing legal dues to his vendors and that too Govt. owned companies?
சமீபத்தில் விமானத்தில் பயன்படுத்தும் எரிபொருளுக்கான விலையை குறைத்ததற்கு பிராயச்சித்தம்
மேலும் ஒவ்வொரு சாராய கேசிலும் ஒரு ருபாய் கூட்டி விட்டால் பத்து மடங்கு காசு திரும்ப வந்துவிடும்
இந்த பாரம்பரிய பொருட்களை ஏலத்திலிருந்து மீட்ட பெருமை வேறு
இதில் வினோதம் என்னவென்றால் மஹாத்மா காந்தி வாழ்நாள் முழுவதும் போராடிய மது ஒழிப்பு குழி தோண்டி புதைக்க காரண கர்த்தாவாக இருக்கும் பல நபர்களில் ஒருவரான விஜய் மல்லய்யா அவரின் பாத அணிகளை ஏலத்தில் எடுத்து ப்ராயசித்தம் செய்தார் போலும்.
என்ன செய்தாலும் இந்திய மக்களைகுடிகாரர்கலாக்கி , அதனால் நாசமாகிய, நாசமாகிகொண்டிருக்கும் குடும்பங்கள் மீண்டும் வாழ்வில் ஒளியேற்ற அவரால் நிச்சயம் முடியாது.
சாராயம் வித்த காசுல தானே.... நாய் வித்த காசு கொரைகாதுனு சொல்லுவாங்க.. அந்தமாதிரி சாராயம் வித்த காசுல காந்திய வாங்கலாம் தப்பிலன்னு தோனுது !!!
Can someone say how did this guy Otis got hod of Gandhi's belongings? Trying to search this info but no help
Gr8 deed by Mallya!!
But its true that.. Money made outta liquor has brought back Mahatma's stuffs to our country!!
What matters is that he was able to do something that the govt cudn't!!
முதல் மரியாதை லிங்கு சாமி-அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
விஜய் மல்லையாவிடம் செருப்பை ஏலம் எடுக்க சொன்னது நாங்கள்தான்-அண்ட புளுகு அம்பிகா சோனி
யாரும் என்னிடம் பேசவில்லை
நானாக முன்பு திப்பு சுல்தான் வாளை ஏலத்தில் எடுத்ததுபோல் காந்தி பயன்படுத்திய -பொருட்களை ஏலத்தில் எடுத்தேன்
விஜய் மல்லையா டைம்ஸ் தொலைகாட்சியில் பேட்டி
ஐயோ தலை சுற்றுகிறதே.
அய்யா எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்
I found this site using [url=http://google.com]google.com[/url] And i want to thank you for your work. You have done really very good site. Great work, great site! Thank you!
Sorry for offtopic
Post a Comment