பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 06, 2009

Lawyers behaving like hooligans and miscreants - SriKrishna Report

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வளாக‌த்த‌ி‌ல் ஏ‌‌ற்ப‌ட்ட வ‌ன்முறை‌க்கு வழ‌க்க‌‌றிஞ‌ர்களே காரண‌ம் எ‌ன்றும், அவர்களை கட்டுப்படுத்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌திக‌ள் தவ‌றி ‌வி‌ட்டன‌ர் - நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ( கவனிக்க நீதியரசர் இல்லை )

அன்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் வந்து தர்மத்தை நிலைநாட்டினார், இன்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா. வாழ்க!

"Lawyers behaving like hooligans and miscreants. Lawyers think they are immune from the law, the report adds. Soft-pedalling policy by the lawyers led to the situation,"- SriKrishna Report


விகடன் கட்டுரை, துக்ளக் தலையங்கம், கேள்வி பதிலும் இந்த பதிவில் இருக்கிறது. விகடன் கட்டுரையில் பல இடங்களில் விகடனின் கற்பனை திரன் என்னை வியக்க வைக்கிறது.


நீதி பதி கிருஷ்ணா அறிக்கை
செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வளாக‌த்‌தி‌ல் வ‌‌ன்முறை ஏ‌ற்ப‌ட்டதற்கு வழ‌க்க‌றிஞ‌ர்களே காரண‌ம் எ‌ன்று ஸ்ரீ ‌கிரு‌ஷ்ணா ‌விசாரணை குழு உ‌ச்ச ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல் தா‌க்க‌ல் செ‌ய்‌ய‌ப்‌ப‌ட்ட அ‌றி‌க்கை‌யி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது. இந்த அறிக்கையை செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் புறக்கணித்துள்ளனர்.

சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வளாகத்தில், கடந்த 19ஆ‌ம் தேதி வழ‌க்க‌‌றிஞ‌ர்களு‌க்கும், காவ‌‌ல்து‌றை‌யினரு‌க்கு‌ம் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த உ‌ச்ச ‌நீ‌தி‌ம‌ன்ற முத‌ன்மை அம‌ர்வு, மோதல் சம்பவம் பற்றி விசாரணை நடத்துவதற்காக நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை கமிஷனை நியமித்தது.

விசாரணை கமிஷன், 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா சென்னை வந்து மோதல் சம்பவம் குறித்து இரு தரப்பினரிடமும், அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார். கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விசாரணை நடைபெற்றது. 2 நாட்கள் விசாரணையை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, ஒரு வாரத்திற்குள் உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா டெல்லியி‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை அவருடைய இல்லத்தில் சந்தித்து 24 ப‌க்க‌ங்க‌ள் கொ‌ண்ட விசாரணை அறிக்கையை நே‌ற்று தாக்கல் செய்தார்.

உயர்நீதிமன்ற வக்கீல்கள் குண்டர்களை போலவும், சமூக விரோதிகள் போலவும், விஷமிகள் போலவும் நடந்து கொண்டிருப்பதாக கிருஷ்ணா கமிஷன் அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும் வக்கீல்கள் தங்களை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று கருதிக் கொண்டு வேலை நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

நடந்த சம்பவத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள் மீது கடைபிடித்த மென்மையான போக்கும் ஒரு காரணம் என்று அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனை தற்காலிக தலைமை நீதிபதியும் ஒப்புக் கொண்டிருக்கிறார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் போலீஸ் சென்று தடியடி நடத்தியதும் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ள கிருஷ்ணா கமிஷன் அறிக்கை, சென்னை போலீஸ் கமிஷனரை இந்த சம்பவத்திற்காக குறை கூற முடியாது என தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த போது அவர் அந்த இடத்தில் இருந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டிருந்தார் என அறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. .

‌‌‌நீ‌திபத‌ி ‌ஸ்ரீ‌கிரு‌ஷ்ணா‌வி‌ன் இ‌ந்த அ‌றி‌க்கை பற்றிய விபரம், இன்று 12வது நாளாக போராட்டம் நடத்தி வரும் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளுக்கு தெரியவந்ததும், அவர்களிடையே கடும் அ‌திரு‌ப்தியையு‌ம், கொந்தளிப்பும் ஏற்பட்டது.

நீதிமன்ற மோதல் : உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
இவ்வழக்கை மேற்கொண்டு உச்ச நீதிமன்றம் விசாரிக்காது என அறிவித்த நீதிபதிகள், ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கையின் அடிப்ப்டையில் சென்னை உயர் நீதிமன்றமே மேற்கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுக்கட்டும் என்று கூறினர்.
காக்கி vs கறுப்பு - இதோ ஒரு குற்றப் பத்திரிக்கை
( நன்றி விகடன் )


சுப்ரமணியன் சுவாமியின் முகத்தில் படிந்த முட்டைக் கறையை வழக்கறிஞர்களின் ரத்தத்தால் துடைத்திருக்கிறது போலீஸ்!


இந்திய நீதித் துறை வரலாற்றில் ஒரு மாநிலத்தின் உயர்நீதிமன்றம் யுத்தகளம் ஆனது முன்னெப்போதும் நிகழாத ஒன்று. மக்கள் பார்க்க, ஊடகங்கள் நோக்க, நீதி தேவதை சாட்சியாக நடந்த வெறித் தாக்குதல்கள் வாழ்நாளுக்கும் மறக்காது!

இலங்கைத் தமிழர்களுக்காகத் தொடர் போராட்டங்களை நடத்திக்கொண்டு இருப்பவர்கள் மாணவர்களும் வழக்கறிஞர்களும்தான். மாணவர் எழுச்சியை கல்லூரிகளை அடைத்து மட்டுப்படுத்தியது அரசு. வழக்கறிஞர்களின் போராட்டங்கள் தொடர் கதையாகவே இருந்தன. நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டிருந்தபோது, சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்குக்காக சுப்ரமணியன் சுவாமி கோர்ட்டுக்கு வந்தார். அந்தச் சமயத்துத் தகராறின்போது, 'ரிசர்வேஷன்ல வந்த நாய்கள்' என்று சுவாமி தரப்பினர் வழக்கறிஞர்களைத் திட்டியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்ததுதான் முட்டையடி அதிரடி. இந்த முட்டையடி வழக்கில் இருபதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

[ quote from SriKrishna report : These facts are
stated in' the said order and need to be accepted as true. The
order·reproduces the English translation of the slogans shouted by
the lawyers in Tamil: "Brahmin dog down down" and "Rajiv Gandhi
killer go away' . The order states that the crowd had shouted many
other filthy slogans and such unruly behavior continued despite
warnings given by the learned Judges presiding over the Court
]

மறுநாள் காலை, வழக்கத்துக்கு மாறாக கோர்ட் வளாகமே காக்கி மயம். 'சம்திங் ராங்!' என்று யூகித்த வழக்கறிஞர்கள் தங்களுக்குள் விவாதித்துவிட்டு, 'சாதியைச் சொல்லித் திட்டிய சுப்ரமணியன் சுவாமியைக் கைது செய்தால், அவர் மீது முட்டை வீசிய வழக்கில் கைதாக நாங்களும் தயாராக இருக்கிறோம்!' என்றதுதான் பரபரப்பு பட்டாசின் திரி கிள்ளிய திருப்பம்.

தொடர்ந்தது வாக்குவாதம்; அரங்கேறியது வழக்கறிஞர்கள் கைது படலம்; வெடித்தது கலவரம். ஒரு கமிஷனர், இரண்டு கூடுதல் கமிஷனர்கள், மூன்று இணை கமிஷனர்கள், பத்துக்கும் மேற்பட்ட துணை கமிஷனர்கள் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் ஒருபுறம்; மறுபுறம், கொதிக்கும் கும்பலாக வழக்கறிஞர்கள். இரு தரப்புக்கும் நடுவில் சாலையாக உருமாறக் காத்திருந்த கருங்கற்கள் திடீர் ஆயுதங்களாகின. வழக்கறிஞர்கள் வீசிய கற்களைத் தடுக்க போலீஸாரிடம் பிரம்புத் தடுப்புகள் இருந்தன. ஆனால், போலீஸ் வீசிய கற்கள் வழக்கறிஞர்களைக் காயப்படுத்திக் கடமையாற்றின. ''எங்கள் பகுதியில் நின்றால்தான் உங்களுக்குப் பாதுகாப்பு. அவர்கள் பக்கம் சென்றால் உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் தர முடியாது!'' - அந்தச் சமயத்திலும் பத்திரிகை யாளர்களிடம் போலீஸ் காட்டிய பரிவு இது!

அதனாலேயே காவல் துறை நின்ற கோணத்திலிருந்து மட்டுமே அந்தச் சம்பவத்தை மீடியாவால் காட்சிகளாக்க முடிந்தது. கண்ணீர் புகைக் குண்டு வீச்சுகளுக்குப் பிறகும் கலவரம் ஓயவில்லை. தடியடிக்கு உத்தரவிட்டார் கமிஷனர். காத்திருந்தது போல களம் இறங்கிய போலீஸ், சிக்கிய வழக்கறிஞர்களை எல்லாம் விளாசித் தள்ளியது. வயது குறைவான வக்கீல்கள் ஓடியாடி நீதிமன்றங்களின் இண்டு இடுக்குகளில் ஒளிய, வயதான வக்கீல்கள்தான் போலீஸின் லத்திகளுக்கு நிறைய ரத்தம் சிந்தினார்கள். முதிர் வயதில் அவர்கள் வாய்விட்டு அழுத காட்சி கொடுந் துயரம். ரத்தம் சொட்டச் சொட்டக் கையெடுத்துக் கும்பிட்டு வந்த வழக்கறிஞர் களை இன்னும் கொஞ்சம் ஆசை தீர அடித்து ஆம்புலன்ஸில் ஏற்றியது போலீஸ். அந்தச் சமயம், 'போலீஸ்கிட்ட நாங்க பேசுறோம்' என்று முன்னேறி வந்த நீதிபதிகளும் விரட்டி அடிக்கப்பட்டனர்.

நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தனையும் போலீஸின் லத்தி பதம் பார்த்தது. வலி தாங்க இயலாமல் அவர் கண்ணீர் விட்டபடியே ஆம்புலன்ஸில் ஏறினார். கார்கள், பைக்குகள் எனக் கண்ணில் பட்ட அனைத் தையும் துவம்சமாக்கியது மதம் பிடித்த போலீஸ் அணி.

முதல் ரவுண்ட் முடிந்த பிறகு, வளாகக் காவல் நிலையம் முன்பு கூடிய போலீஸார், ஏனோ பின் வாங்கி தீயணைப்பு நிலையம் அருகில் சென்றனர். நீதிமன்றக் கட்டடங்களுக்குள் ஒளிந்திருந்தபடி இதனைப் பார்த்த வழக்கறிஞர்கள் உடனே, கோஷமிட்டபடியே வளாகக் காவல் நிலையத்தைச் சூறையாடத் தொடங்கினார்கள். மோட்டார் சைக்கிள்களும் பிறகு காவல் நிலையமும் தீப்பற்றி எரிந்தன. உடனே போலீஸ், ஒரு தீயணைப்பு வண்டியை அப்பகுதிக்கு அனுப்பியது. அதன் மீதும் கற்கள் வந்து விழ, இரண்டாம் கட்டத் தடியடிக்கு உத்தரவிடப்பட்டது.

பரம்பரைப் பகையைத் தீர்த்துக்கொள்வது போல கார்கள் அனைத்தையும் அடித்து உடைத்தது போலீஸ். அவற்றைப் படம் எடுத்த புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் போலீஸாரால் மிரட்டப்பட்டனர். இரண்டாவது அதிரடி இன்னும் ஆவேசம். கையெடுத்துக் கும்பிட்டுக் கதறிய வக்கீல்களையும் பெண் வக்கீல்களையும்கூட போலீஸார் வெளுத்து எடுத்தனர். வழக்கு விவாதங்கள் நடந்துகொண்டு இருந்த நீதிமன்றங்களுக்கு உள்ளும் தாக்குதல் அரங்கேறியது. வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதைப் படம் எடுத்த தனியார் சேனலின் கேமராமேன் ஜோதிமணியின் மண்டை உடைக்கப்பட்டது.

''நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தனை போலீஸ் அடிச்சதை நான் படம் பிடிச்சேன். உடனே, போலீஸ் என் கேமராவைப் பறிச்சாங்க. தர மறுத்ததும் என்னை அடிச்சு நொறுக்கிட்டாங்க!'' என்று கதறுகிறார் மருத்துவமனையில் இருக்கும் ஜோதிமணி.

அனைத்தும் முடிந்த பின் பேட்டி கொடுத்த கமிஷனர் ராதாகிருஷ்ணன், ''போலீஸ் ஸ்டேஷன் கொளுத்தப்பட்டதால்தான் தடியடி நடத்தப்பட்டது. போலீஸ் தரப்பில் துணை கமிஷனர் சாரங்கன் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்!'' என்றார். அப்போது அருகிலேயே நின்றிருந்தார் சாரங்கன்.

ஒட்டுமொத்தச் சம்பவம் குறித்தும் சி.பி.ஐ. விசாரணை நடைபெற உள்ள நிலையில், சம்பவத்தை கோர்ட்டுக்கு வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் நேரில் பார்த்த நமக்குச் சில கேள்விகள் எழுகின்றன.

1. நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடந்துகொண்டு இருக்கும்போது, சுப்ரமணியன் சுவாமி ஏன் அங்கு வர வேண்டும்? சிதம்பரம் கோயில் அப்பீல் மனு தாக்கல் செய்ய அன்று கடைசி நாளா? அது தெரியாமல் வந்திருந்தாலும், அவரைஎதிர்த்த வக்கீல்களின் ஆர்ப்பாட்டத்தைப் போராட்டம் என்று சொல்ல முடியாது. அவர்களும் தங்கள் எதிர்ப்பைகோர்ட் டுக்கு வெளியில் நின்று அமைதியான முறையில்சொல்லி யிருக்கலாம். முட்டை வீசியதுதான் முதல் பொறி!

2. சுவாமி தாக்கப்பட்ட சம்பவம் இரண்டு நீதிபதிகளுக்கு முன்னால் நடந்தது. சம்பந்தப்பட்ட வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க அவரே உத்தரவும் போட்டிருக்கிறார். எனவே, எஃப்.ஐ-ஆரில் குறிப்பிடப்பட்ட வக்கீல் கள் பெயரை பார் கவுன்சிலுக்கோ அல்லது ஹைகோர்ட் பதிவாளருக்கோ கொடுத்து அவர்களை ஆஜர் செய்ய போலீஸ் சொல்லியிருந்தால், பிரச்னையே வந்திருக்காது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று சொல்லி ஒரே நாளில் 10,000 பேரைத் தமிழகம் முழுவதும் கைது செய்யும் போலீஸால் 20 பேரை ஒரு இரவில் அவரவர் வீடுகளில் கைது செய்ய முடியாதா? அது எதையும் செய்யாமல், நூற்றுக்கணக்கான போலீஸை நீதிமன்ற வளாகத்தில் குவித்தது திட்டமிட்ட செயலாகத் தெரிகிறதே!

3. சுவாமி மீது முட்டை வீசியது வக்கீல்கள்தானே தவிர, ஹூண்டாய் கம்பெனியோ அல்லது யமஹா கம்பெனியோ அல்ல. வக்கீல்களைக் கைது செய்ய போலீஸால் முடியாவிட்டால் அதற்காக கார், பைக்குகளையா உடைப்பது? அவை ஏரியா தாதாக்களின் வேலையாயிற்றே! குடும்ப நீதிமன்றம், துணை நீதிமன்றங்களுக்குள் புகுந்து நீதிமன்ற ஊழியர்களை, அவர்கள் வக்கீல்கள் அல்ல என்று தெரிந்தும் அடித்தது ஏன்? நீதிபதி என்று சொன்னாலும் அடி, பத்திரிகையாளர் என்று சொன்னாலும் அடி என்றால், போலீஸின் அன்றைய திட்டம் ஹைகோர்ட்டை மொத்தமாகத் துவம்சம் பண்ணுவதாக மட்டுமே இருந்ததா என்ன?

4. சட்டமன்றத்துக்குள் சபாநாயகர்தான் சுப்ரீம் என்பது போல கோர்ட்டில் நீதிபதிதான் சுப்ரீம். அத்தனை பேரும் அவருக்குக் கீழ்தான். அவரிடமோ அல்லது கோர்ட் பதிவாளரிடமோ எழுத்துபூர்வமான உத்தரவை போலீஸ் வாங்கியதாகத் தெரியவில்லை. 'கைது செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டதாக போலீஸூக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை' என்று நீதிமன்ற நிர்வாகமும் சொல்கிறது. மேலும், வக்கீல்கள் அலுவலகம் இருக்கும் தம்புச் செட்டித் தெருவுக்குள் போய் போலீஸ் லத்தி சுழற்றியது ஏன்?

5. இத்தனையும் நடந்த பிறகு அங்கிருந்த போலீஸ் ஸ்டேஷனை, வக்கீல்கள் புகுந்து கொளுத்தியது... இவர்களுக்குள் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் தார்மிக நெறிமுறைகளும் இல்லை என்பதையே காட்டுகிறதா?

6. போலீஸார் நடத்திய தடியடி, கோர்ட் நுழைவுக்கு மாநில உள்துறை மற்றும் முதல்வரிடம் என்ன சொல்லி அனுமதி வாங்கினார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 'கட்டுப்படுத்தப்பட முடியாத கும்பலாக' வக்கீல்கள் மாறினார்கள் என்றால், அதை அரசுத் தரப்பு ஏன் மறைக்க வேண்டும்? இரு தரப்பினருக்கும் இடையில் சட்ட அமைச்சர் மற்றும் தி.மு.க. வக்கீல்கள் நடுநாயகமாக அமர்ந்து ஏன் பிரச்னையைத் தீர்க்கவில்லை?

7. இது சம்பந்தமான வெளிப்படையான விவாதத்தை சட்டமன்றத்தில் நடத்தாமல், விதியே என்று '110'க்குள் நுழைந்து அமைதியானது ஏன்? ஜெயலலிதா காலத்தில் விவாதங்கள் இல்லாமல் இந்த மாதிரிதான் அறிக்கைகள் படிக்கப்பட்டன என்றால், அதையே செய்ய எதற்கு கருணாநிதி? இத்தனைக்கும் சபாநாயகர், சட்ட அமைச்சர் இருவருமே வக்கீல்களாக இருந்தும் விவாதத்துக்கு ஏன் அனுமதி இல்லை?

8. பிரச்னையின் நியாய அநியாயங்கள் எதையும் பேசாமல், 'நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்' என்று முதல்வர் கருணாநிதி ஒற்றை வார்த்தையில் மொத்த அநியாயத்தையும் மூடி மறைக்க முயல்வது ஏன்?

மக்கள் தங்கள் மனதில் எழுதியிருக்கும் குற்றப்பத்திரிகை இது. யார் குற்றவாளி என்று அவரவர் மனச்சாட்சிக்குத் தெரியும்!


துக்ளக் தலையங்கம்
பிறந்தது தெளிவு !
நமக்குத் தெளிவு பிறந்தது. குழப்பம் தீர்ந்தது. சென்ற சில வாரங்களாக நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளும், அவை பற்றிய அரசியல் தலைவர்களின் பேச்சுக்களும், மாநில அரசின் மன்றாடலும், உச்ச நீதிமன்றத்தின் உத்திரவுகள் மற்றும் கருத்துக்களும்... நமது மனதைப் பீடித்திருந்த பிரமையை நீக்கிவிட்டன. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற மாயை, நம்மை விட்டு அகன்றது. இவ்வாறு தெளிவு பெற்ற நமக்கு, இப்போது புரிய வந்துள்ள உண்மைகள் ஒன்றா, இரண்டா!

கோர்ட்டுகளைப் புறக்கணிப்பது கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டே
சொல்லியிருந்தாலும், அதைத் துச்சமாகக் கருதி, தொடர்ந்து பல நாட்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுவது வக்கீல்களின் உரிமை. இது தவிர, சில வக்கீல்கள் கூட்டமாகச் சேர்ந்துகொண்டால், அவர்கள் சைக்கிள் கடையை நாசமாக்கலாம்; ஒரு பெரிய அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களைத் தாக்கி, அவர்களை ஓட ஓட விரட்டலாம்; ஒரு எம்.பி.யின் வீட்டைத் தாக்கலாம்; உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் அமர்ந்துள்ள பெஞ்ச் ஒரு மனுவை விசாரிக்கிறபோது, மனுதாரர் மீது முட்டைகளை வீசி, அவருடைய ஜாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசி, அங்குள்ள சிலரைத் தாக்கி, தடுக்க வந்த போலீஸாரையும் அடித்து, போலீஸ் உயர் அதிகாரிகளையும் கண்டபடி தாக்கலாம்.

இவையெல்லாம் கூட்டமாகச் சேர்கிற வக்கீல்களின் அடிப்படை உரிமைகள். இந்த அடிப்படை உரிமைகளில் குறுக்கிடுகிற நோக்கத்துடன் போலீஸார் வந்தால், அவர்கள் மீது கல்லெறிவதும், வக்கீல் கூட்டத்தின் உரிமை. இதற்கெல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால், "இனி இம்மாதிரி செய்ய வேண்டாம்' என்கிற அறிவுரையைத்தான்
நீதிமன்றம் வழங்கும்.

இது நமக்கு இப்போது புரிகிறது. அதோடு போலீஸ் பற்றியும் சில விஷயங்கள் புரிகின்றன. ஒரு உயர் போலீஸ் அதிகாரியும், சில கான்ஸ்டபிள்களும் சில வக்கீல்களினால் தாக்கப்பட்டால், அதை அவர்கள் மெளனமாக ஏற்க வேண்டும்.
ஒரு இடத்தில், ரகளை நடக்கப் போகிறது என்றோ, அசம்பாவிதம் நிகழப் போகிறது என்றோ தெரிய வந்தால் கூட – அது நீதிமன்றக் காம்பவுண்டாக இருந்தால்
– போலீஸார் அங்கே போகக்கூடாது; என்ன அசம்பாவிதம் வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று பேசாமல் இருந்துவிட வேண்டும்.

ஒரு வக்கீல் கூட்டம் தங்கள் மீது கல்லெறி நடத்தினால் கூட, அவர்களைக் கலைக்க போலீஸ் தடியடி நடத்தக்கூடாது; மரியாதையுடன் கல்லடிகளை வாங்கிக்கொண்டு, பேசாமல் திரும்ப வேண்டும். இந்தக் கல்லடி, தடியடியின் போது போலீஸ் ஸ்டேஷனுக்குத் தீ வைக்கப்பட்டால், தீயை அணைக்கவும் கூடாது; தீயணைப்புப் படையின் வண்டி தீயிடப்பட்டாலும் சரி, தீயிட்டவர்களை எதுவும் செய்துவிடக் கூடாது.

உச்ச நீதிமன்றத்தினாலும், அரசியல் தலைவர்களின் பேச்சுக்களினாலும் தெளிவாக்கப்பட்டு விட்ட வக்கீல்களின் அடிப்படை உரிமைகளில் தலையிடுகிற போலீஸார், நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்.

இவை இப்போது இந்நாட்டில் எல்லோருக்கும் புரிந்துவிட்டது. ஆகையால், சட்டமே, நீ தலைகுனிந்து செல்வாயாக!


துக்ளக் கேள்வி பதில்


கே : சில வக்கீல்களை ஜாதி பெயரைச் சொல்லி, சுப்ரமண்யம் ஸ்வாமி இழிவுபடுத்தியதாக புகார் கொடுக்கப்பட்டிருப்பது பற்றி?


ப : இது அப்போது எழுந்த குற்றச்சாட்டு அல்ல. அன்று நடந்த நிகழ்ச்சிகளைப்
பதிவு செய்த நீதிபதிகளும், இம்மாதிரி ஸ்வாமி பேசியதாகக் கூறவில்லை.
அங்கிருந்தவர்களும் அம்மாதிரி கூறவில்லை. இரண்டு நாட்கள் கழித்து புனையப்பட்டது. "சம்பந்தப்பட்ட சட்டம், அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது' என்று முன்பு ஒருமுறை எழுதியிருந்தோம். இப்போதும் அதுதான் நடக்கிறது.

கே : "பொது அமைதியைக் குலைக்கும் வகையிலும், தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்திலும் சுப்ரமண்யம் ஸ்வாமியின் நடவடிக்கைகள் இருப்பதால், அவர் மீது தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' – என்று தி.மு.க. வக்கீல்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்களே?

ப : ஒரு வழக்கில் தன்னையும் சேர்த்துக்கொள்ள நீதிமன்றத்தில் மனு அளித்தது; முட்டை வீசப்பட்டாலும் கவலைப்படாமல் இருந்தது; மிரட்டல் விடப்பட்டாலும் அஞ்சாமல் நின்றது – இவைதான் சுப்ரமண்யம் ஸ்வாமி செய்தவை. இவைதான் தமிழக மக்கள் உணர்வுகளைப் புண்படுத்துகிற செயல்களா? இவைதான் பொது அமைதியைக் குலைக்கின்றனவா? தி.மு.க. வக்கீல்களின் கோரிக்கை, சரியான பிதற்றல். சுப்ரமண்யம் ஸ்வாமியை எதிர்ப்பது, சமீபகாலமாக ரகளையில் ஈடுபட்டு வருகிற வக்கீல்களைத் திருப்திப்படுத்த உதவும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலிருக்கிறது.

எச்சரிக்கை பகுதி
பிப்ரவரி 19-ஆம் தேதி, நீதிமன்ற காம்பவுண்டில், போலீஸார் "நுழைந்தது' பற்றி, சுப்ரீம் கோர்ட் "விளக்கம்' கேட்டிருக்கிறது. "தடியடி உத்திரவு பிறப்பித்தது யார்?' என்றும் நீதிமன்றம் கேட்டிருக்கிறது.

கிரிமினல் ப்ரொஸிஜர் கோட், மற்றும் போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டர்ஸ்
– ஆகியவற்றின்படி, ஒரு இடத்தில் அசம்பாவிதம் (சட்டவிரோத நிகழ்ச்சி)
நிகழப் போகிறது என்ற தகவல் கிட்டினால், அங்கே சென்று அதைத் தடுப்பது போலீஸாரின் கடமை; சட்டவிரோதமாக நடந்துகொள்கிற கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்த உத்திரவு பிறப்பிக்க, மாஜிஸ்ட்ரேட் இல்லாவிட்டால், சப்-இன்ஸ்பெக்டர் கூட உத்திரவுப் பிறப்பிக்கலாம்; இது சட்டம். நீதிமன்றத்தின் பார்வை, சட்டத்தை ஒட்டியதாகவே அமையும் என்று எதிர்பார்ப்போமாக!

ஸ்ரீகிருஷ்ணா ரிப்போர்ட் படிக்க இங்கே செல்லவும்

18 Comments:

Unknown said...

" மோட்டார் சைக்கிள்களும் பிறகு காவல் நிலையமும் தீப்பற்றி எரிந்தன"
.
Vikatan is biased here. Did it burn itself?


"அவர்களும் தங்கள் எதிர்ப்பைகோர்ட் டுக்கு வெளியில் நின்று அமைதியான முறையில்சொல்லி யிருக்கலாம். முட்டை வீசியதுதான் முதல் பொறி!"

Is that not a grave criminal offence committed by LAWYERS INSIDE COURTROOM in front of HIGHCOURT Judges?

"நீதிபதிதான் சுப்ரீம். அத்தனை பேரும் அவருக்குக் கீழ்தான். அவரிடமோ அல்லது கோர்ட் பதிவாளரிடமோ எழுத்துபூர்வமான உத்தரவை போலீஸ் வாங்கியதாகத் தெரியவில்லை"

There is nothing like that in constitution.

"போலீஸார் நடத்திய தடியடி, கோர்ட் நுழைவுக்கு மாநில உள்துறை மற்றும் முதல்வரிடம் என்ன சொல்லி அனுமதி வாங்கினார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்"

Why should the police go and beg for permission? Do you want to repeat law college incident here?


"இரு தரப்பினருக்கும் இடையில் சட்ட அமைச்சர் மற்றும் தி.மு.க. வக்கீல்கள் நடுநாயகமாக அமர்ந்து ஏன் பிரச்னையைத் தீர்க்கவில்லை?"

Will law minister and DMK lawyers solve all the cases in Tamil nadu courts this way?
Vikatan is calling for "Katta panchathu".


- Vikatan is simply trying to cash in on Anti-DMK govt sentiment.

K SRINIVASAN said...

Justice srikrishna's reprt is available on the following link

http://www.hindu.com/nic/interimreport.pdf

To sum it up..it is simply superb.
With little available time for interim report the justice has done a wonderful job..In the entire 23 page report he almost spends 75 % of his report putting the blame squarely on lawyers..few pages also blame the police but not to the extent of denting their image..

It is really heartening to see that one person from the judicial family has the courage to say that the lawyers were wrong.infact he clearly points out the names of lawyers who are staunch supporters of LTTE.

The justice has also blamed the leadership of justices at chennai high court.Now what next..

I will not be surprised if the lawyers tomorrow will burn copies of this report.They will certainly hurl abuses on justice srikrishna on religious and caste lines saying he is antitamil

IdlyVadai said...

சட்னி சாம்பார் சுட்டிக்கு நன்றி. நீங்க நிஜமாகவே இட்லிவடைக்கு சை டிஷ் தான் :-)

Sethu Raman said...

ஆனந்தவிகடன் எல்லாம் மாறிப்போச்சுங்க!
கலைஞருக்கு ஒருவாலி போல, புலிக்கும்பலுக்கு
ஆனந்தவிகடன் ஒரு தங்க கூஜாங்க! இப்போ தகராறு பண்ற வைக்கோலுங்கள்ளாம், புலிக்கும்பல்
ஆதரவு தானே! ஆ.வி.ஆசிரியர்க் குழு ஒரு எண்பது
சதவிகிதம் புலி ஆதரவாளர்கள் - கூடவே எழுதற
மற்றவர்களும் அப்படியே தானுங்க!

Anonymous said...

வழக்கறிஞர்கள், காவலர்கள் மோதல்: உண்மை என்ன?

http://ravisrinivas.blogspot.com

M Arunachalam said...

LTTE money is playing havoc in TN. One example is Vikatan's blatantly partisan views camouflaged as news. What else can one expect a magazine funded by terrorist benamis to write in this case? After all lawyer-goondas have been fighting for LTTE in TN, isn't it?

"நீதிபதிதான் சுப்ரீம். அத்தனை பேரும் அவருக்குக் கீழ்தான். அவரிடமோ அல்லது கோர்ட் பதிவாளரிடமோ எழுத்துபூர்வமான உத்தரவை போலீஸ் வாங்கியதாகத் தெரியவில்லை"

If Vikatan expects police to get approval for their actions from higher-ups to quell a violence in HC compound, who gave approval to lawyer-goondas who unleashed violence against Swamy INSIDE THE COURT & IN FRONT OF A SITTING BENCH?

Now that even Srikrishna committee report has accused the Madras HC Judges as being too soft against the lawyers, I have very serious doubts about the independent functioning capability of Madras HC judges as they could be under back-ground threats of their lives by LTTE terrorists (similar to Dawood Ibrahim gang threatens Mumbai actors/real estate people). Thats why they may be forced to soft-pedal against the TN lawyer-goondas most of whom seem to act at the behest of LTTE only.

Anonymous said...

What has happened to Ananda Vikatan. Once highly Respected, Bold and Unbised among all Tamil Magazines, It has degraded itself to such low levels of biased journalism.

Anonymous said...

I think Anandha Vikatan always has been a supporter of LTTE. There is no surprise that they wrote an article like this. One needs to be surprised only if they report a situation ( especially related to LTTE/Vaiko/etc. ) truthfully.

அக்னி பார்வை said...

மொத்ததில் சட்டத்தை காப்பற்ற வேண்டிய வழக்கறிஞர்கள், காவல் துறை, இவர்களை ஒழுங்காக நடத்த வேண்டிய நீதிதுறை, இவர்கள் மேல் அதை விசரிக்கும் கமிஷன், பத்திரிக்கை , இணைய பதிவுகள் என் யாருக்குமே அஹிம்மசை மீதும், மனித நேயம் மீதும், சட்டம் மீதும் ,அறப்போராட்டம் , பற்றில்லை, பயமில்லை.

இத்ன் பின்னனியில் வக்கில்களையும், போலிஸையும் அடக்கியாண்ட அரசியல் துல்லியமாக மறைக்கப்பட்டுள்ளது. அவ்ர்கள் போதைக்கு இவர்கள் ஊறுகாய்யாகி இப்பொது இருவருமே அவதிபடுகிறார்கள்.பாவம் போலிஸும் வழக்கறிஞர்களும் தான்.

சென்னை ஹைக்கோர்ட்டின் சிவப்பு நிறம் யாரின் ரத்தமாக கூடாது, போலிஸின் காகி நிறம் யாருடைய கறையாகவும் இருக்க கூடாது.

பழை விஷ்யங்களை மறக்கப்பட்டு இருவரும் அரசியல் நியங்களை ஒத்திவைத்துவிட்டு மீண்டும் இணைந்து வேலை செய்ய வேண்டும்.

Anonymous said...

விகடன் மா.மா. வேலையை நன்றாகவே செய்கிறது. ஒரு பொறுக்கிக் கும்பல், உச்ச நீதி மன்றத்தையும் மீறி நீதிமன்றத்தில் வேலையைத் தடுத்தால், மற்றவர்கள் கோர்ட்டுக்குப் போகாமல் ஒதுங்கி நிற்க வேண்டுமா? சுவாமிக்கு அவசரமோ, கடைசி நாளோ, விகடன் 'குடும்பத்துக்கு' மா.மா. வேலை செய்வதில் இருக்கும் அவசர அக்கறை நன்றாகவே தெரிகிறது.

இந்தப் பொழைப்பு பொழைக்கிறதுக்கு --- க்குடுத்துப் பொழைக்கலாம். அதையும் செய்கிறார்களோ என்னமோ.

பெசொவி said...

இந்த ஆனந்த விகடன் பத்திரிக்கை எல்லாம் ஒரு பத்திரிக்கை என்ற அந்தஸ்தை இழந்து பல வருடம் ஆகி விட்டது. போங்க, உங்க வேலை வேறு ஏதாவது இருந்தா பாருங்க.

Anonymous said...

avaa thalaiyangamthaan unmaiyaana thalaiyangam.

avaa illaatti, illaikkanum puvaa :)

Anonymous said...

Idlyvadai,

Excellent post... By reading the thuglak question and answer why did Supreme Court ask such stupid question???

Anonymous said...

ஒரு கொசுறு தகவல். போலீஸ்-வக்கீல் மோதல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் போயிருக்கும் பெண் வக்கீல் வைகை
யார் தெரியுமா? காலம் சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தியின் பெண்.

Anonymous said...

ஆனந்தவிகடன் முன்னொரு காலத்தில் குடும்ப விளக்காக இருந்தது சரித்திரம்.
இன்று பரபரப்பையும் மெய் போலச்சித்தரிக்கும் பொய்யர்களின் கூடாரம் என்பது நிகழ்வு.
வாழநினைப்பவர்களால் தூ என்று தூக்கி எறியப்பட்டுவிட்ட ட வாடிப்போன பண்டம் இன்றைய ஆனந்தவிகடன்.
சீனியர் சிடிசன்

SathyaRam said...

After reading SriKrishna's report available in the Hindu, it is quite heartening to note that someone even in this age has been quite fair in assessing the situation. The whole blame is put on lawyers and judges and Police have been absolved. Police went beyond a limit but this is something we all have seen and accepted everywhere. That is a problem that needs to be solved . Police behaviour during lathicharge etc. have to be more dignified whether it is Marina beach or in Madras High Court.

But these lawyers behaved like they dont have any law for them. it is better that these lawyers accept this report and return back to work

Anonymous said...

Very well said Mr Sathya Ram

கிசுகிசுகிருஷ்ணன் said...

இந்த வக்கீல் பூனைகளுக்கு மணி கட்டிய ஸ்ரீகிருஷ்ணா அவர்களுக்கு நன்றி..ஆனா இவங்க திருந்துற மாதிரி தெரியலை..கோர்ட்க்கு போகாதவங்க லைசன்ஸ் கேன்சல் பண்ணா தானா ஓடி வருவாங்க...