இந்த வாரம் முனி, இட்லிவடை, காக்கா ..
"என்ன வெயில் என்ன வெயில், இதில் தேர்தல் சூடும் சேர்ந்தால் நினனக்கவே பயமாக இருக்கிறது" என்று வியர்க்க விறுவிறுக்க வந்து அமர்ந்தார் முனி.
"கவலைப்படாதீரும் முனி, பட்டை சாராயத்திலிருந்து வெளியே வாரும். தமிழக அரசு பட்ஜட்டில் cool beer-க்காக 9 கோடியை ஒதுக்கியிருக்கிறது. தண்ணீர் குடிக்கிறீர்களா?" விருந்தோம்பலை ஆரம்பித்தோம்.
"உன்னிடம் அதுதான் கிடைக்கும்" முனியிடம் அலுப்பு தெரிந்தது."என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக் கூடாது முனி. ஒரு ஆணின் உடலில் 62-65% தண்ணீரும், பெண்ணின் உடலில் 51-55% தண்ணீரும் இருக்கிறது. தசைகளில் 75 சதமும், இரத்தத்தில் 82 சதமும், எலும்புகளில் 25 சதமும் தண்ணீர்தான்..."
"ஸ்ஸப்ப்பா... நிறுத்தப்பா. விட்டால் ஸ்கூல்பிள்ளையாட்டாம் ஆரம்பித்துவிடுகிறாய்."
அப்போது "ஜெய் ஹோ" என்று பாடலை கர்ணகடூரமாகப் பாடிக்கொண்டு காக்கையார் வந்து உட்கார்ந்தார்.
"என்ன பாட்டு எல்லாம் பலமா இருக்கு?" என்று சிரித்தபடியே முனி கையில் வைத்திருந்த பாதி வடையை வடக்கிலிருந்து வந்த காக்கையாருக்குக் காப்பியுடன் கொடுத்தார்.
"அட உங்களுக்கு விஷயம் தெரியாதா? 'ஸ்லம்டாக்' படத்தில் இடம்பெற்ற `ஜெய் ஹோ' வார்த்தைக்கு வெற்றி உண்டாகட்டும் என்று அர்த்தமாம். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக அந்தப் பாடலை காங்கிரஸ் கட்சி பயன்படுத்த உள்ளது. அதற்காக நிறைய பணம் செலவு செய்திருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள்."
"போன தேர்தலில் பாஜக 'இந்தியா ஒளிர்கிறது' என்ற வாசகத்தை வைத்து பிரசாரம் செய்தார்கள்; உங்களுக்கே என்ன நடந்தது என்று தெரியும் என்று நமட்டுச் சிரிப்புடன் நாம் தொடர்ந்தோம்.
"இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட தமிழ் இனப் பாதுகாப்பு முன்னணி என்ற புதிய இயக்கத்தை விஜய டி.ராஜேந்தர் தொடங்கியுள்ளார். இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
"இந்த காமெடியைவிட, புதிய தலைமை தேர்தல் ஆணையராக நவீன் சாவ்லா நியமனம் செய்யப்படுவதாக இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டுள்ளார். இதற்கு நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டுக்கொண்டே நமக்கு வறுத்த கடலையைக் கொஞ்சம் கொடுக்க நாம் உற்சாகமானோம்.
"அப்படி காய் நகர்த்தத்தான், எவ்வளவு பயில்வானாய் எதிர்கட்சி இருந்தாலும் பசு மாதிரி ஒரு குடியரசுத் தலைவர் வேண்டுமென்பது."
"பசு என்றவுடன் நினைவுக்கு வருகிறது," என்று காக்கையார் ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.
"பசுவைக் காப்போம் என்ற பெயரில் டில்லியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அண்மையில் தன் தொண்டர்களுக்கு சிறப்பு முகாம் ஒன்றை நடத்தியது. அதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான ஓம் பிரகாஷ் பேசும்போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க தொழில் துறை உற்பத்தியை முன்னேற்றுவது அவசியம். இதற்கு நாம் வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. கிராமங்களில் முக்கிய கால்நடையான பசுக்களை வைத்தே பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும். அதன் சிறுநீர், சாணத்தைப் பயன்படுத்தி பல்வேறு தொழில்களை ஊக்குவிக்கலாம்"
மீதி இருந்த கடலையை ஊதி வாயில் போட்டுக்கொண்டே நாமும் இன்னொரு கேள்வியை ஊதினோம். "பசுவின் சிறுநீர், சாணத்தை வைத்து என்ன செய்ய முடியும்?"
"நீ கேட்பாய் என்று தெரியும்" சொல்லி முடிப்பதற்குள் காக்கையார் தொடர்ந்தார்..
"பசுவின் சிறுநீரைப் பயன்படுத்தி கொசுவர்த்தி, பினாயில், ஷாம்பூ, லோஷன்கள் தயாரிக்கும் தொழில்களை ஊக்குவிக்கலாம். அது போலவே சாணத்தை மூலப்பொருளாக வைத்து தரையில் பரப்பும் டைல்ஸ்கள், பற்பசை, மரப்பொருள்கள், காகிதம், சிற்பங்கள், பெயிண்ட்கள் தயாரிக்கும் தொழில்களைச் செய்ய வைக்கலாம். இதனால் உற்பத்தி பெருகும்; விற்பனையும் அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும்."
அப்படிப் போடு. உளுந்து வடை சாப்பிட்டால் மூளை மந்திக்கும் என்று கேள்வி. ஆனால் நீ வெளுத்துக்கட்டுகிறாய். ஆனால் என்னை தரிசிக்க வரும்- ஆர்.எஸ்.எஸ் பற்றி அதிக அக்கறை உள்ள- தி.கவினரின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
"'மரபணு ஆராய்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி என்று அறிவியல் புதிய புதிய பரிமாணங்களைப் பெற்று வரும் இந்தக் காலகட்டத்தில், வேத காலத்தில் ஆரியர்களால் போற்றி வணங்கப்பட்ட பசுவின் புராணத்தையே இன்றைய ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று சொல்லுகிறார்கள்." நமக்குத் தெரிந்ததை நாமும் சொல்லிவைத்தோம்.
"இட்லிவடை, நான் உன்னையா கேட்டேன்? வேண்டாமல் வார்த்தையை விடுவதே உன் வேலையாகப் போய்விட்டது. சரி கமல் பற்றி குடுகுடுவென்று நீ ஏதோ கிண்டல் செய்து, அப்புறம் மாமி வைத்த குட்டுக்குப் பிறகு மாற்றினாயாமே, என்ன விஷயம்?"
"அது ஒரு துன்பியல் சம்பவம் முனி. அதைப் பற்றி பேசப்போவதில்லை." "சரி வேண்டாம். அதற்குப் பரிகாரமாக கமலுக்குப் பிடித்த செய்தியை நான் சொல்கிறேன். ஆணும் பெண்ணும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுப்பது நல்லது. காரணம் பெண்களின் உமிழ் நீரில் புரோட்டீன், குளுக்கோஸ், கால்சியம், வைட்டமின் போன்ற சத்துகள் உள்ளன இவை தேன் பாலில் கிடைக்கும் சத்துப்பொருட்களுக்கு நிகரானது." காக்கையார் தேற்றினார்.
"அதெல்லாம் சரிதான். ஆனால் பெண்கள் அதற்கு சம்மதிக்கவேண்டாமா?" நாம் அப்பாவியாகக் கேட்டுவைத்தோம்.
"ஆசையை தூண்டுவதற்கு என்றே இங்கிலாந்து விஞ்ஞானிகள் ‘கம்ப்யூட்டர் சிப்’ ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். மூளையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அறுவை சிகிச்சை செய்து இந்த சிப்பைப் பொருத்துவார்கள் அது ‘செக்ஸ்’ ஆசையை தூண்டிவிடும். செக்ஸ் ஆசை இல்லாத ஒரு பெண்ணுக்கு இந்த சிப்பைப் பொருத்தி சோதித்தனர். அந்தப் பெண் தாம்பத்திய உறவில் அதிக ஆர்வம் கொண்டவராக மாறிவிட்டார். தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த சிப் அதிகாரபூர்வமாக விற்பனைக்குவர இருக்கிறது..."
முனி கனைத்து தன் இருப்பை நினைவுப்படுத்த, நாம் அமைதியாகி விட்டோம். காக்கையார் தோப்புக்கரணம் போடுவது போல் பாவ்லா காண்பித்தார். "போதும் இது பிள்ளையாருக்குதான் உகந்தது. எனக்குத் தேவையில்லை," முனி சகஜமாகித் தொடர்ந்தார். இனிமேல் பாவ்லாவுக்குக் கூட தோப்புக்கரணம் போட காப்பிரைட் பிரச்சினை வரலாம் என்று ஒரு திடுக்கிடும் படக்காட்சியையும் பார்க்கச் சொன்னார்.
மீண்டும் நிலைமையை சகஜமாக்க முனியே தொடர்ந்தார்., "ஆனால் மன்னிப்புக் கேட்டு பதிவை வாபஸ் வாங்கும் காப்பிரைட் எப்பொழுதும் இட்லிவடைக்கு மட்டுமே சொந்தம். நீ கமல் பதிவை வாபஸ் வாங்கியது பலருக்குப் பிடிக்கவில்லை என்பது உனக்குத் தெரியுமா?"
"எனக்கே பிடிக்கவில்லை. கமல் நிருபர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது, 'ஒலிம்பிக்ஸ் போட்டி போல எல்லா நாடுகளும் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தி வெல்லும் விருது அல்ல ஆஸ்கர். அமெரிக்கர்கள் தங்களுடைய ரசனைகளுக்கு ஏற்ப இருக்கும் படங்களில் இருந்து சிறந்ததைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால், இதனை உலகத் தரத்துக்குக் கொடுக்கப்பட்ட விருதாக எடுத்துக்கொள்ள முடியாது...' என்று சொல்லியிருக்கிறார், இது மட்டும் சரியா? மாமிதான் விளக்கம் கொடுக்க வேண்டும்."
"மாமி மாதிரி சைவ மேட்டரை விடுங்கள். நான் அசைவக் கொழுப்பே கொண்டு வந்திருக்கிறேன்." காக்கையார் ஆறுதலாகப் பேசித் தொடர்ந்தார். "பன்றி இறைச்சியில் கொழுப்பு சத்து அதிகம் என்பதால் இதற்கு அசைவப் பிரியர்களிடம் பலத்த வரவேற்பு இல்லை. அகவே தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் இதை கருத்தில் கொண்டு புதியவகை பன்றி இனத்தைக் கண்டுபிடித்துள்ளது இது யார்க்ஷயர், லேண்ட்ரேஸ், டியயூரோக் ஆகிய மூன்று பன்றி இனங்களின் கலப்பு ஆகும். இந்தப் புதிய பன்றிவகை குறைந்த உணவு உண்ணும்; ஆனால் வேகமாக வளருமாம்.""எனக்குத் தெரிந்து தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருவது நகைச்சுவை சேனல்கள்தான். ஓரளவுக்கு மேல் தாங்கமுடியவில்லை." என்று முனி சிரிக்க முடியாமல் சிரிப்பு மலையில் நனைந்தார்.
"தேர்தல் செய்திகள், கூட்டணி, கூத்து என்று வரும் செய்திகளைப் பார்த்தால் எது நகைச்சுவை சேனல் என்றே வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது." நாமும் நம்பங்குக்கு சொல்லி வைத்தோம்.
"தேர்தல் செய்திகள் மட்டும்தானாக்கும்? இலங்கை கிரிக்கெட் டீம் கோச், தாக்குதலுக்கு முன்தினம், "பாகிஸ்தானுக்கு எல்லா நாடுகளும் வரவேண்டும்," என்று சொன்னவர் அடுத்த நாள் தாக்குதலுக்கு பிறகு, "என்னிடம் உயிர் இருக்கும் வரை இனிமேல் பாகிஸ்தானுக்கு வர மாட்டேன்," என்று பேட்டி கொடுக்கிறார். காலம் செய்த கோலமடீ கடவுள் செய்த குற்றமடீ.." காக்கையார் வடையும் நரியும் இல்லாத தைரியத்தில் பாடத் தொடங்கினார்.
"என்ன காக்கையாரே தத்துவப் பாடலுக்கு தாவி விட்டீர்கள்?""18, வயதில் ஒரு பெண் மைதானத்திலுள்ள கால்பந்து போன்றவள். அப்போது பலர் அவள் பின்னாலே ஓடிக்கொண்டிருப்பார்கள்.
28 வயசில் அவள் ஒரு கூடைப்பந்து சிலபேர் மட்டுமே அவளைத் துரத்தியபடி போவார்கள்.
38ல் அவள் கோல்ப் பந்தைப் போன்றவள் அவளைக் குறிவைப்பது ஒரே ஒரு ஆள்தான்.
48ல் அவள் ஒரு டேபிள் டென்னிஸ் பந்து ஆகிவிடுகிறாள். - நம்ம பக்கம் வராம தள்ளிவிட்டுக்கிட்டே இருக்கிறோமுல்ல ! - மகளிர் தின நல்வாழ்த்துச் செய்தியாக இந்தத் தத்துவத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!"
"காக்கையாரே, நீர் பேசும். கல்லடி விழுந்தால் பறந்துவிடலாம் என்கிற தைரியம்தானே." முனி சிரிப்பை அடக்கமுடியாமல் கேட்டார்.
"தமிழகத்தில் இன்னும் கல்லடி காண்டம் முடியவில்லையா? செய்தி சேகரிப்புக்குப் போய்விட்டு நான் வடக்கிலிருந்து இப்பொழுதுதான் வருகிறேன். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எல்லாம் எப்படி இருக்கிறது?" என்று காக்கையார் வினவினார்.
"ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 28ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக அக்கட்சியினர் அறிவித்திருந்தனர். ஆனால் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் காரணமாக பாதுகாப்பு கருதி ஸ்ரீபெரும்புதூர் பயணத்தை சோனியா ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய உளவுத்துறை கேட்டுக்கொண்டது. அதன்படி தனது தமிழகப் பயணத்தை சோனியா காந்தி ரத்து செய்துள்ளார். இதைப் பார்த்தாலே தெரியவில்லை, சட்டம் ஒழுங்கு எல்லாம் நன்றாக இருக்கிறது என்று?" நமது அங்கலாய்ப்பைச் சொல்லவும் வாய்ப்பு கிடைத்தது.
"ஆமாம், சட்டம் ரொம்ப ஒழுங்காக இதை எரிக்காதே, அதை உடைக்காதே என்றெல்லாம் இருப்பதால் தான் நாட்டில் ஒழுங்கு இல்லாமல் போகிறது என்கிறாரே வலைப்பதிவாளர் பத்ரி." முனி தானும் வலைப்பதிவுகள் படிப்பதை ருசுப்படுத்தினார்.
"அப்படி என்றால் 'சட்டம் ஒழுங்கு' என்பதே இன்றைக்கு முரண்நகை ஆகிவிட்டது." காக்கையார் ஒருவரித் தீர்மானம்.
"இன்னொரு முரண்நகை கேளுங்கள் காக்கையாரே. 'ஊனமில்லாம பொறக்கிறவனே வாழறதுக்கு எவ்வளவு கஷ்டப்படுகிறான்? ஊனமா பிறந்து வாழவே போராடுகிற பாவப்பட்ட பிறவிகள பிச்சை எடுக்க வைச்சு பொழைக்கிறது ஈனப்பொழைப்புங்க அப்படிப்பட்ட தாண்டவங்கள தூக்குல போடணும்' இப்படிச் சொன்னவர் வேற யாரும் இல்லை நான் கடவுள் படத்தில தாண்டவனாக நடித்த வில்லன் ராஜேந்திரன்."
"நம்மால் அந்த மாதிரி சீரியஸ் படமெல்லாம் பார்க்கமுடியாது. நகைச்சுவையாக படங்கள் வந்தால் சொல்லுங்கள் இட்லிவடை""ஓ சொல்லலாமே. மத்திய ரெயில்வே அமைச்சர் லாலுவை வைத்து ‘அனிமேஷன்’ படம் தயாராகிறது. எருமை மாடு மீது லாலு சவாரி செய்வது, பள்ளிக்கூடத்துக்கு ‘கட்’ அடித்துவிட்டு விளையாடப் போனது, அரசியலில் நுழைந்தது என பல சுவாரசியமான காட்சிகள் இருக்கிறது. தமிழ் நாட்டில் எந்த அரசியல் தலைவரை வைத்து காமெடி படம் எடுக்கலாம்?"
"விஜய்காந்த்? அவர் கதையை எல்லாம் கிளறவே வேண்டாம். சாதரணமாக அவர் புள்ளிவிபரம் சொல்ல ஆரம்பித்தாலே தியேட்டரில் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்களே." நமது அனுபவத்தைச் சொன்னோம்.
"எனக்கும் புள்ளிவிபரம் சொல்லும் மூடு வந்துவிட்டது..." காக்கையார் குஷியானார். "1931 முதல் 2008 வரை வெளியான தமிழ் படங்கள் 6347. இதில் நேரடி படங்கள் 4701. மொழி மாற்றம் செய்யப்பட்டவை 1646. தமிழ்நாட்டில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் 36420, இல்லாத கோயில்கள்...."
"காக்கையாரே நிறுத்தும். ஒபாமா தான் இன்னும் தேர்தல் ஸ்கூலில் படித்தமாதிரியே உரை வழங்கிக்கொண்டிருக்கிறார் என்றால்.." நாம் இடைப்புகுந்தோம்.
"ஹை, எனக்கு ஒபாமா ஸ்கூல் பத்தியும் ஒரு விஷயம் தெரியுமே. அவர் படித்தது தாய்லாந்தில். அப்போது அவருக்கு விருப்பமான உணவு பாம்பு கறி...." தொடர்ந்த காக்கையாரை முனி தடுத்தாட்கொண்டார்.
"அவர் பள்ளிப் படிப்புக்கும் பாம்புக்கறி சாப்பிடுவதற்கும் என்ன சம்பந்தம்? சரி, ஒரு பிரபல வலைப்பதிவர் ஸ்கூல், பாடத் திட்டம், மாணவர்களைப் பேட்டி என்று அதிக அக்கறையுடன் எழுதுகிறார்; அவர் என்ன வித்யாசமான பதிப்பகம் மாதிரி ஏதாவது வித்யாசமான ஸ்கூல் ஆரம்பிக்க போகிறாரா?" என்று முனி கிளி காக்கா ஜோசியம் கேட்க ஆரம்பிக்க, நாம், "அப்பறம் பார்க்கலாம்" என்று ஒரே ஓட்டமாக ஓடிவந்துவிட்டோம்.
கடைசி செய்தி: முனி, இட்லிவடை, காக்கா மூவரும் இந்த கலந்துரையாடலில்(?) வயிறு முட்ட தின்று தீர்த்ததால் இந்த மாதம் 10ஆம் தேதி இலங்கை தமிழர்களுக்காக ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தில் தைரியமாக மூவர் அணியாக( கவனிக்க மூன்றாவது அணி இல்லை) கலந்துக்கொள்வார்கள் என்று பட்சி சொல்லுகிறது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, March 05, 2009
காப்பி வித் காக்கா
Posted by IdlyVadai at 3/05/2009 04:19:00 PM
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Subscribe to:
Post Comments (Atom)
8 Comments:
IV as usual this Bodygaurd Muni is cool but compared to the last version the plot seems to be lost. Soolanumenu sils vishayangalai insert saithulirgal.
Thopukkaranam ....mandai kayuthu. its time some one publishes the value of our rituals.
By the way are you chasing the ball or pushing the ball to the other side....
அப்படியென்றால் தங்களை உண்ணாவிரத பந்தலில் பார்க்கலாம்...
ஆசையுடன்,
அமுதப்ரியன்.
// கமல் நிருபர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது, 'ஒலிம்பிக்ஸ் போட்டி போல எல்லா நாடுகளும் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தி வெல்லும் விருது அல்ல ஆஸ்கர். அமெரிக்கர்கள் தங்களுடைய ரசனைகளுக்கு ஏற்ப இருக்கும் படங்களில் இருந்து சிறந்ததைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால், இதனை உலகத் தரத்துக்குக் கொடுக்கப்பட்ட விருதாக எடுத்துக்கொள்ள முடியாது...' என்று சொல்லியிருக்கிறார், இது மட்டும் சரியா? //
Mr. Kamal, Sir, you could have made this comment in previous cases. But at this juncture (ie ARR has been awarded with 2 awards) if you make this comment, it definitely shows the famous saying:-
Nari Solliyadhu : "Chee, Chee! Intha Pazham Pulikkum"
// என்ன வெயில் என்ன வெயில், //
இட்லி வடை,
என்னையா கூப்பிட்டீங்க?
நம்ம ஊர்ல தோப்புகரணம் போடுடா ன்ன கேக்க மாட்டன்! "சூப்பர் பிரைன் யோகா" அப்டின்னு வெள்ளக்காரன் சொன்ன, ஒடனே பணத்த வாரி கொடுத்து, வெள்ளக்காரன் புகழ் பாட ஆரமிச்சிடுவாங்க!
வர வர நீர் நமுத்துப் போன நியூஸ் மட்டுமே தந்துக்கிட்டு இருக்கீரு!!
கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்னாடி நான் போட்ட பதிவு இது!
http://elavasam.blogspot.com/2008/03/blog-post_21.html
திரு Venkatesan Srinivasagopalachariar அவர்களே
கமல் பேட்டியில் என்ன தவறு என்று சொல்ல முடியுமா????
ஆஸ்கார் விருது ஒரு அமேரிக்க படத்துக்கான விருது.
வெளிநாட்டு படங்களுக்கு அவர்கள் ஆஸ்கார் தரும் போது "சிறந்த வெளினாட்டு படம்" என்று சொல்லிதருகிறார்கள்
அதை கமல் அவர்கள்
"விருந்தோம்பல்" என்று சொல்கிறார்.அதில் என்ன தவறு????
ஆங்கில படமான ஸ்லம்ட்டாக் மில்லினியருக்கு இசையமைத்த இந்தியருக்கு விருது கிடைத்தது.
கமல் அதை பெருமை என்றே கூறுகிறார்.
விருந்தோம்பல் விருதுகளை விட அவர்களின் படங்களில் வேலை செய்து அதுக்கு கிடைக்கும் விரூது சிறந்தது என்பது கமல் கருத்து
உங்கள் புரொப்பைலை பார்த்தவுடன் தெரிந்ந்துவிட்டது நீங்கள் ஏன் கமல் - யை திட்டுகிறீர் என்று
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
TT பந்து பெண்களிடம் இருந்து பிங்க் ஜாடி வரப்போகிறது . ஜாக்கிரதை.
நடராஜன்
Post a Comment