பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 18, 2009

தமிழ் நாட்டில் இருக்கும் ஒரே ஆம்பளை

உயர்நீதிமன்ற வக்கீல்கள் அனுமதி இல்லாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த பொது நல சேவகர் டிராபிக் ராமசாமியை வக்கீல்கள் அடித்து உதைத்தனர். இதையடுத்து அவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.....

சென்னை உயர்நீதிமன்றம் அருகே பெரிய பந்தலைப் போட்டு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் வக்கீல்கள்.

இந்த நிலையில் டிராபிக் ராமசாமி ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கப்படாத இடத்தில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்து வரும் வக்கீல்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பதற்கு போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் ஆஜரவாதற்காக ராமசாமி கோர்ட்டுக்கு வந்தார்.

அப்போது வக்கீல்கள் சிலர் அவரைச் சூழ்ந்து கொண்டனர். ஒருவர் ராமசாமியைத் தாக்கினார். அவர்களிடமிருந்து ஒரு வழியாக மீண்ட ராமசாமி, நேராக போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கு ஒரு புகார் தந்தி அனுப்பினார்.

அதன் பேரில் விசாரணை நடத்த ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தான் தாக்கப்பட்டது குறித்து டிராபிக் ராமசாமி கூறுகையில்,

வழக்கு விசாரணைக்காக உயர்நீதிமன்றத்திற்கு வந்தேன். ஒரு பத்து பேர் என்னை சூழ்ந்து கொண்டனர். ஒருவர் எனது முதுகில் அடித்தார். பின்னர் ஒரு வக்கீல் பைக்கைக் கொண்டு என் மீது மோத வந்தார்.

இதுகுறித்து தலைமை நீதிபதி, போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கும் புகார் தந்தி அனுப்பியுள்ளேன். என்னைத் தாக்கிய பத்து வக்கீல்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் டிராபிக் ராமசாமி.

பொது நல சேவகரான டிராபிக் ராமசாமி பல்வேறு பொது நலன் மனுக்களைப் போட்டு பல முக்கிய உத்தரவுகளை உயர்நீதிமன்றத்தின் மூலம் வாங்கியவர்.

கட்டாய ஹெல்மட் உள்பட பல முக்கிய வழக்குகளைத் தொடர்ந்தவர் இவரே. இவர் வக்கீல் வைத்து வாதாட மாட்டார். தானே வாதாடுவார். கை நிறைய பேப்பரும், பை நிறைய பேனாக்களுமாக காணப்படுவார்.

பலமுறை இவர் பலரால் தாக்கப்பட்டுள்ளார். உச்சகட்டமாக சமீபத்தில் வீடு புகுந்து இவரை சிலர் அடித்து உதைத்தனர். சமீபத்தில் போலீஸாரும் இவரை திடீரெனக் கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற வக்கீல்கள் இவரைத் தாக்கியுள்ளனர்.

( தட்ஸ் தமிழ் )
டிராபிக் ராமசாமிக்கு ஒரு பெரிய நன்றி.
மற்றவர்களுக்கு வழக்கம் போல் குப்பைத் தொட்டி







3-வது நாளாக கோர்ட்டுகளில் பொதுமக்களே ஆஜரானார்கள், வாதாடினார்

வக்கீல்கள் போராட்டம் காரணமாக கோர்ட்டு நட வடிக்கைகள் முடங்கின. லட்சக்கணக்கான வழக்கு கள் தேங்கின. இதனால் வழக்குத் தொடுத்த பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து தகுதி அடிப்படையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு பதிவுத் துறை அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் கோர்ட்டுகளில் வழக்கு விசாரணை தொடங்கியது. வக்கீல்கள் வராத காரணத்தால் தங்கள் வழக்குகளுக்கு பொது மக்களே நேரில் ஆஜரானார்கள்.

நேற்று 2-வது நாளாக பொதுமக்கள் கோர்ட்டு களில் ஆஜராகி தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசி வாதா டினார்கள். கணவனை மீட்க மனைவியும், மனைவியை மீட்க கணவனும் நேரில் ஆஜராகி வாதாடியது வித்தியாசமாக இருந்தது. அவர்களிடம் நீதிபதிகள் தமிழில் கேள்விகள் கேட்டு பதிலை பெற்றனர்.

நீதிபதி சிவகுமார் முன்பு நேற்று நடந்த ஒரு வழக்கு வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. வரதட்சணை வழக்கில் கணவன்-மனைவி முன் ஜாமீன் கேட்டிருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அவர்களது மருமகள் ஆஜராகி முன் ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து அந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
எல்லா கோர்ட்டுகளிலும் நேற்று இப்படி பல ருசிகர சம்பவங்கள் நடந்ததைக் காண முடிந்தது.

இன்று (புதன்) 3-வது நாளாக கோர்ட்டுகளில் பொதுமக்களே ஆஜரா னார்கள். கடந்த 2 நாட்களை விட இன்று ஐகோர்ட் வளாகத்தில் மக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். ஐகோர்ட் வளாகம் முழுக்க முன்பு போல மக்கள் வெள்ளம் காணப்பட்டது.

நீதிபதிகள் முன்பு நேரில் ஆஜராகுவதற்கு தயாராக பலர் வந்திருந்தனர். அவர்கள் கோர்ட்டில் எப்படி வாதாடுகிறார்கள் என்பதை பார்ப்பதற்காக உறவினர்கள் வந்திருந்தனர். சில பெண்கள், நீதிபதி முன்பு எப்படி ஆஜராக வேண்டும் என்று டிப்ஸ் கேட்டுக் கொண்டிருந்தனர்.

சிங்காரவேலரின் மரு மகள் பத்மா இன்று கோர்ட் டுக்கு வந்து தன் வழக்குக்காக தானே வாதாடினார். இவ ருக்கு திருவான்மியூரில் குடும்பச் சொத்து உள்ளது. அந்த சொத்தை பெற 1996ம் ஆண்டு அவர் வழக்குத் தொடர்ந்தார்.

அவரது வக்கீல் கோர்ட்டு புறக்கணிப்பு போராட் டத்தில் ஈடுபட்டுள்ளதால் பத்மா இன்று தன் மகள் ஜெயலட்சுமியுடன் வந்து வாதாடினார். இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 1-ந்தேதி தள்ளி வைக்கப்பட்டது.

புளியந்தோப்பை சேர்ந்த பாத்திமா (21) என்ற பெண் தன் 5 மாத கைக்குழந்தையுடன் இன்று கோர்ட்டுக்கு வந்திருந்தார். தன் கணவர் ஜாவித்தை விடுவிக்கக் கோரி அவர் இன்று கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார்.

ஜாமீன் பெறும் பிரிவில் தான் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த கோர்ட்டுகள் நிரம்பி வழிந் தன. மாணவ- மாணவி கள் சிலர் வந்து வயதான வர்களுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

குடும்ப நலக் கோர்ட்டில் நடந்த வழக்குகளில் பெண் கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்களுக்கு பெண் வக்கீல்கள் தேவை யான உதவிகளை செய்தனர்.

நீதிபதி முன்பு ஆஜராகி வாதாடி நிவாரணம் பெற்று திரும்பிய பெண்கள் முகத்தில் புன்னகை தவழ்ந் தது. வக்கீல் போல கோர்ட் டுகளில் பேசிய அனுபவத்தை அவர்கள், தங்களுடன் வந்த வர்களிடம் சிரித்து பேசிய படி சென்றனர்.

இதற்கிடையே கோர்ட்டு களில் பொது மக்களே ஆஜராவதை வேடிக்கை பார்க்கவும் பலர் திரண்டனர். பொதுமக்களில் பலர் திக்கி, திணறி பேசுவதையும், நீதிபதிகள் அவர்களிடம் மிக, மிக பொறுமையாக கேள்விகள் கேட்டு கேட்டு தகவல்கள் பெற்றதையும் கண்டனர். சென்னை ஐகோர்ட்டு வரலாற்றில் பலருக்கும் இது ஒரு புது அனுபவமாக இருந்தது.

இந்த நிலையில் கோர்ட்டுக்கு வெளியில் வக்கீல் களின் தொடர் போராட்டமும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
( மாலை மலர் )

(பொதுமக்களூக்கு சபாஷ், நாளைக்கு டாக்டர்கள் ஸ்ரைக் செய்தால் இது மாதிரி செய்திடாதீங்க ;-)


31 Comments:

மாயவரத்தான் said...

ஜெ. ஆட்சியில் இருக்கணும். இந்த நாதாறிங்கள அம்மணமா ஓட விட்டு உதைச்சிருப்பாங்க. வெட்டிப்பசங்க அத்தன பேரோட பார் கவுன்சில் உறுப்பினர் பதவியை ரத்து செய்யணும். அப்போதான் நாடு உருப்படும்.

Krish said...

Hats Off Ramasamy! இந்த நிலை தொடர வேண்டும். வக்கீல்கள் வாதாடி ஒன்னும் கிழிக்க போறது இல்ல! தண்டத்துக்கு காசுதான் வேஸ்டு! மக்களே வாதடுகிறதா பாத்துட்டு, எங்க நம்ம வேலைக்கு ஆப்பு வெச்சுருவங்கலோன்னு, சீக்கிரமே திரும்பி வருவானுங்க பாருங்க!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
M Arunachalam said...
This comment has been removed by a blog administrator.
M Arunachalam said...

IV,

It is not only Mr. Traffic Rama Swamy, but the following people have also demonstrated at different times that they are the people with REAL SPINE & are MAN enough to oppose the rulers/rowdies & demonstrated their courage of conviction.

1. Traffic Rama Swamy
2. Dr. Subramanyam Swamy
3. Cho Rama Swamy (An exception in TN media)
4. S. Gurumurthy
5. Advocate K. Vijayan

As against this list, there is ONE TRIBE IN TN, which is SPINELESS & AFRAID to speak the truth. You know what is that tribe?

Tamil MEDIA - both Print & Electronic. They simply don't have any guts to even ask inconvenient questions to any ruler or politician, when they get a chance to interview them or editorialise. THIS TRIBE SIMPLY DO NOT DESERVE ANY RESPECT BUT ONLY CONTEMPT FROM US.

Ravi said...

Hats off to Ramasamy. Inspite of facing such atrocities against him, he is still steadfast in his good motives - all for the cause of public. My salutations to him!

Anbil, neenga unga blog identity-yai kooda solla vakkilaadha podhu - veen paechu edharkku?

பெசொவி said...

Your one line comment is classic!

Anonymous said...

பந்தல் அருகே சொல்ல வேண்டியது தானே என்று வீரமாக ஒரு கோழை கேள்வி கேட்டுள்ளதே - அந்த கோழையைப் பார்த்து நான் கேட்கிறேன், ஜெயலலிதா ஆண்ட போது எங்கே சிரைக்க சென்றது உங்கள் வீரம்.

இந்த மூதேவி என்று இல்லை, மற்ற அனைத்து ltte ஆதரவாளர்களும் அசிங்கமாக, ஆபாசமாக பேசுவதே தொழிலாக கொண்டுள்ளனர். ஆ , ஊ என்றால் கற்பழித்துவிட்டனர், வல்லுறவு கொண்டனர், இதே ஒப்பாரி தான். எதைக் கூறினால் பற்றிக் கொண்டு எரியும் என்று நன்றாக தெரிந்து கொண்டு அதையே திரும்பத் திரும்ப பல்வேறு வடிவங்களில் பரப்புகிறார்கள்.

ltte -யிடமிருந்து தப்பித்து வரும் தமிழர்கள் எல்லோரும் சிங்கள ராணுவத்திடம் தான் வருகிறார்கள். அவர்கள் யாரும் இப்படிப் புகார் சொன்னதாக தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அதை ந்யாயமாக கண்டிக்க முடியாதா? ஆபாசமாகத் தான் பேச வேண்டுமா?

இண்டர்நெட்டில் எங்கு பார்த்தாலும் இந்த நாதாரிகளின் அசிங்கம் பிடித்த தமிழ் தான் கொட்டிக் கிடக்கிறது. இதுகளுக்கு எல்லாம் தமிழன் என்ற பேரு வேறு. தமிழன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறது.

K SRINIVASAN said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

அன்பர் திரு ட்ராபிக் இராமசாமி அவர்களின் சேவைகளுக்கு நன்கொடை வழங்க ஏதேனும் வழி இருக்கின்றதா? அவர் இத்தகைய செலவுகளுக்கு எப்படி பணம் தேற்றுகிறார்?

நான் அவருக்கு நன்கொடை வழங்க ஆசைப்படுகிறேன். இட்லிவடை அதை அவரிடம் தர முடியுமா?

என்னைப்போன்ற வலைப்பதிவர்களிடமிருந்து நன்கொடை பெற்று இராமசாமி ஐயாவிடம்சேர்க்க இட்லிவடை தனி கேம்பைன் பண்ண உசிதம் இருக்கிறதா?

கிரி said...

ட்ராபிக் ராமசாமி ஒரு ரியல் ஹீரோ

வக்கீல்களின் செயல்கள் ஏற்று கொள்ள முடியாதது, இந்தியாவின் நிலையை எண்ணினால் பயமாக உள்ளது, எங்கே சென்று இதெல்லாம் முடியுமோ!

கொடும்பாவி-Kodumpavi said...

ஆன் லைன் மூலமாக வாதடலாம் என்று கூடிய சீக்கரம் வரணும் அப்படி இருந்திருந்தால் ‘டிராபிக்' ராமசாமி அந்த கோர்ட் படி மிதிச்சிருக்க வேணாம். பாவம் அவரும் விடாம எதிர் நீச்சல் போட்டுகிட்டுதான் இருக்காரு.
வள்ளுவரு ஏதோ சொல்லி இருக்காரே.. நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.. !

Anonymous said...

அந்த வயசான கிழவனாரை அடித்ததில், இந்த வக்கீல் பொறுக்கிகளுக்கு என்ன சந்தோஷமோ? பொதுவாகவே வக்கீல் தொழில் என்பது, தமிழ்நாட்டில் பொறுக்கிகளும், பன்னாடைகளும், தரம் தாழ்ந்தவர்களும் பின்பற்றுவது என்று இந்த செயல் மூலம் தெளிவாகிறது.. டிராபிக் ராமசாமியின் வயித்தெரிச்சலும், எங்களை போன்ற ஆதரவாளர்களின் சாபமும், இந்த பொறுக்கி வக்கில்களை சும்மா விடாது..

paarvai said...

வக்கீல்களின் செயல் , அவர்கள் கற்கால மனிதர்கள் என்பதைக் காட்டுகிறது. இந்த வயதிலும் போராடும் திரு.டராபிக் ராமசாமி அவர்கள் நீடூழி வாழ்க. மலத்தைப் பற்றிப் பேசிய வீரர்(!?) கற்காலத்துடன் சேர்ந்தவர் என்பதை அவருடைய எழுத்தே காட்டிவிடுகிறது.

Anonymous said...

இடுகையின் தலைப்பு மகா அபத்தம்.

Anonymous said...

நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.. !
----------------------------
நான் நினைக்கிறேன் இதைக் கூறியது அவ்வைப்பாட்டி என்று.....

Anonymous said...

Right thinking persons, social workers, Honest persons and people with conscience should get together and form a Traffic Ramasamy Support Group to help him in every manner possible. He is fighting for the causes of the people. Why is he fighting? Because the govt is not doing what it is expected to do, most of the MLAs are only errand boys of rich and mighty.

R.Gopi said...

அருண், உங்கள் கருத்து சூப்பர்.

இந்த இத்துப்போன வக்கீல்களின் வீரம் இந்த அப்பாவி "டிராபிக் ராமசாமி" கிட்டதான் செல்லும்.

ஏன், இங்க வந்து அசிங்கக்குப்பை கருத்துக்களை கொட்டும் அனானி ஜென்மங்கள் கரண்ட் இல்லையேன்னு "ஆற்காடு வீராசாமி"ய ஒரு நாளாவது கேட்டு இருப்பனுங்களா...... அந்தாள கேட்டா, இந்த டகால்டிங்களோட டங்குவார அருத்துடுவாரு. உங்க வீரத்த எல்லாம் ஆட்சில இருக்கறவங்க கிட்ட காட்டுங்கடா.

இருக்கவே இருக்கான், இந்த டிராபிக் ராமசாமி, அவன போட்டு சாத்துவோம் அப்படின்னு போட்டு அடிச்சு இருக்காங்க.

உங்க எல்லாருக்கும், பெரிய சுண்ணாம்பு சட்டி ரெடியாட்டு இருக்கு... புடிச்சு ஆப்பு வைச்சு, சுண்ணாம்பு தடவுவாங்க பாருங்க. அப்போ நீங்க குய்யோ முய்யோனு கத்தறது கோபாலபுரத்துக்கும் கேக்காது, தைலாபுரத்துக்கும் கேக்காது......

வன்முறைய விட்டு தொலைங்கடா நாதாரிங்களா (உங்க மொழியில சொல்றதுன்னா) .........

Anonymous said...

//இடுகையின் தலைப்பு மகா அபத்தம்.//

Why dont you write in your original name?? wny anonymus you coward??

Sethu Raman said...

போலீஸ் அதிகாரிங்கள் இரண்டு பேரை ஸஸ்பெண்ட் செய்ததும், இந்த வைக்கோலுங்கள் அடிச்ச கூத்து
இருக்குதே - தௌஸண்ட் வாலா பட்டாஸ், வெற்றி ஊர்வலமாம்!! இவங்களிலே பெரும்பாலோர் ஈரங்கி
வக்கீல்கள் தான் - ஹியரிங்க் அட்ஜர்ன்மெண்ட் தான்
வாங்குவாங்க! வாதம் பண்ணத் தெரிஞ்சவங்கள் விரலை விட்டு எண்ணி விடலாம்! இவங்கள் கையிலே மாட்டிக் கொண்டு முழிக்கிற ஆளுங்கள்ளாம் பரிதாபக் கேஸ் தான்! லா காலேஜிலே படிக்கிறது
ஹூலிகானிசம், கோர்ட்டிலே செய்கிறது ரௌடித் தனம் - இவங்கள் எழுதற brief படிச்சீங்கன்னா
யு.கே.ஜி மாணவர்கள் எழுதுவது தேவலை என்று தோன்றும்! ஒரு ராமஸ்வாமி இல்லை, ஒரு பத்து
ராமஸ்வாமி வேண்டும் இவங்களைத் திருத்துவதற்கு!

IdlyVadai said...

//இடுகையின் தலைப்பு மகா அபத்தம்.//

"தமிழ் நாட்டில் இருக்கும் ஒரே ஆம்பளை" என்று இந்த தலைப்பு

"தமிழ் நாட்டில் இருக்கும் ஒரே ஒரு ஆம்பளை"

என்று மாற்றம் செய்ய வேண்டுமா ?

Anonymous said...

சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை

சென்னை: ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் கீழ்க் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து ராஜகோபால் சென்னை ஐகோர்ட்டில் மேல்மு‌றையீடு செய்திருந்தார். அந்த முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள் பானுமதி, மிஸ்ரா அடங்கிய பெஞ்ச், ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
R.Gopi said...

When "KURUMA" went on Hunger Strike, his GOONDAS stoned and burnt more than 100 vehicles.

In order to retain "KURUMA" in his alliance, "THALA" kept silent, without taking any action.

Subha.Veerapandiyan (Brother of Film Director S.P.Muthuraman) went to the extent of telling : if Kuruma is touched or arrested, there wont be a state called "TAMIL NADU".

Where are the PAGUTHARIVU PAGALAVANS to answer this question?

In order to retain the lost PEACE in Sri Lanka, these people are doing violence in Tamil Nadu.......

Super LOGIC da makkaa .......

M Arunachalam said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

we should form a traffic ramasamy support group.idly vadai should make initiative for this.the public should appear in courts and argue and make these hooligan lawyers JOBLESS!!!

திவாண்ணா said...

உயர் நீதி(?)மன்றம் செய்கிறதெல்லாம் அக்கிரமமா இருக்குங்க. போலீஸ் அதிகாரிங்களை சஸ்பெண்ட் செஞ்சது சரியில்லை.ம்ம்ம் என்ன செய்யறது, அவங்க மாமூல் வாழ்க்கையும் பாதிப்புக்கு உள்ளாயிடுமோன்னு பயம் போல இருக்கு!

//அப்போது வக்கீல்கள் சிலர் அவரைச் சூழ்ந்து கொண்டனர். ஒருவர் ராமசாமியைத் தாக்கினார். அவர்களிடமிருந்து ஒரு வழியாக மீண்ட ராமசாமி, நேராக போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கு ஒரு புகார் தந்தி அனுப்பினார்.//

ஆமாம் உச்ச நீதி மன்றம் கோர்ட் வளாகத்திலே போலீஸ் ஸ்டேஷன் இருக்கக்கூடாதுன்னு அதை நீக்க சொன்னாங்க.
இப்ப கோர்ட்டுக்கு போகிற பொது ஜனங்களுக்கு யார் பாதுகாப்பு கொடுக்கிறது?

Krish said...

1. வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, திறந்திருந்த கடை ஒன்றைக் கடுமையாகத் தாக்கி அங்குள்ள பொருள்களுக்குச் சேதம் விளைவித்தது. இதைத் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

2. வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அந்தப் பக்கமாக வண்டியில் சென்ற ஒருவரை அடித்து நொறுக்கியது.

3. சுப்ரமணியம் சுவாமியை நீதிமன்றத்துக்குள் நுழைந்து நீதிபதிகள் முன்னிலையிலேயே தாக்கியது.

4. நீதிமன்ற வளாகத்தை தங்களது போராட்டங்களுக்காக abuse செய்தது. இதற்கான அனுமதியை எந்தக் கட்டத்திலும் தலைமை நீதிபதியிடம் பெறவில்லை.

5. சம்பவம் நடந்த அன்று, காவலர்களைக் கல்லால் அடித்துத் தாக்கியது.

6. நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல் நிலையத்துக்குத் தீ வைத்தது; அங்குள்ள ஆவணங்களை எரித்தது.

7. அடிதடிப் பிரச்னைகளுக்குப் பின்னாலும், இந்த வாரம், டிராஃபிக் ராமசாமியைத் தாக்கியது.

8. நீதிமன்றத்துக்குப் பிறரைச் செல்லவிடாமல் தடுப்பது.

9. நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தைப் படம் பிடிக்க வந்த புகைப்பட நிருபர்களைத் தாக்கியது.

10. இன்றுவரை வேலைக்குச் செல்லாமல், தமிழக அரசு, நீதிமன்றம் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் ஏதும் நடத்தாது, அடாவடியாக, தங்களுக்குத் தாங்களே சட்டம் என்றவகையில் சண்டியர்தனமாக நடந்துகொள்வது.

நன்றி : பத்ரி
http://thoughtsintamil.blogspot.com/

Anonymous said...

Studying law is the last stage for all the students who are rejected by all universities.
By mugging up some portion of the acts they become lawyers.very easily.
After registering with Bar council
they start practicing.
Then they thrive on the amaam samees and illiterates of TamilNadu and lead a luzury life.
They attach themselves to some political party to keep them safe.
Everybody knows thatsome of they collude with police to settlethings out of the court and earn lot of money.
Recently one such katta Panchayat vakil was murdered by their co lawers.is one sample for this.

Anonymous said...

ட்ராபிக் ராமசாமி மேல் கைவைத்த கொடுரன்கள் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டம் கடுமையாக்கபட வேண்டும் அப்பொழுதுதான் இதுப்போன்ற நாய்களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்கலாம்