பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 22, 2009

பா.ம.க. உறவு முறிந்தது ஏன்? கருணாநிதி விளக்கம்

காஞ்சிபுரத்தில் இன்று மாலை தனது பிரசாரத்தை அவர் தொடங்குகிறார். அப்போது தேர்தலில் தனது நிலையை அவர் விளக்குவார் எனத் தெரிகிறது.

கலைஞர் ஏன் பாமக திமுக கூட்டணியில் இல்லை என்பதை இன்று விளக்கியுள்ளார்.


மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழ்நாடு மட்டுமே அதிக பலன் அடைந்துள்ளது. துறைமுகம் தொடங்கி விமான நிலையம் வரை தமிழ்நாட்டில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது ஜனநாயகத்தின் முழுமையான மதசார்பற்ற அரசு இங்குதான் செயல்படுகிறது. இவற்றையெல்லாம் மக்களிடம் எடுத்துச்சொல்வோம். 2004-ல் வெற்றி பெற்றது போல் இந்த தேர்தலிலும் தமிழகம், புதுவை ஆகிய 40 தொகுதியிலும் வெற்றி பெறுவோம். மக்கள் மத்தியில் எந்த எதிர்ப்பு அலையும் இல்லை.

பா.ம.க. எங்களால் நிறைவேற்ற முடியாத அளவுக்கு நிறைய எதிர்பார்த்தார்கள். அதை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் உறவு முறிந்தது. இலங்கை பிரச்சினையில் தமிழக அரசால் எத்தகைய நடவடிக்கை எடுக்க முடியும் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். எனவே இலங்கை பிரச்சினை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய எங்களால் முடிந்தவற்றை செய்தோம். மத்திய அரசும் இதில் ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காணமுடியாது பேச்சு வார்த்தையால் மட்டுமே தீர்க்க முடியும் என்று எடுத்துக்கூறியது அதுவே பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு நிலைக்கு திரும்ப உதவும் என்றும் தெரிவித்தது.

பண வீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கை நல்ல பலனை கொடுத்துள்ளது. தற்போது பண வீக்கம் குறைந்து மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தில் ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி, பருப்பு, பாமாயில், மற்றும் மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கி ஏழைகள் பயன் அடைய செய்து இருக்கிறோம். ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கையால் நல்ல பலன் அடைந்துள்ளனர்.

நான் அன்றாடம் கடிதங்கள் வாயிலாகவும் அறிக்கைகள் மூலமாகவும் தொண்டர்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறேன் தொண்டர்கள் மனதிலும் இதயத்திலும் நிறைந்து இருக்கிறேன். தேர்தலை சந்திக்க தொண்டர்கள் தயார் படுத்தப்பட்டு உள்ளனர். டாக்டர்கள் என் உடல் நிலை பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பது தொண்டர்களுக்கு தெரியும். கண்டிப்பாக தேர்தல் பிரசாரம் செய்வேன். பொறுத்து இருந்து பாருங்கள்.

நாட்டு மக்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து பெரும் பான்மை பலம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.





திருவிழா தேதி முடிவாகிவிட்டது. தேரும் ஓடத்தயாராகிவிட்டது. ஆனால் யார் எல்லாம் சேர்ந்து இழுப்பது என்பதில் இழுபறி... திருமணத்துக்கு நாள் குறித்து விட்டார்கள். பெண்ணும் தயார். ஆனால்... பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை... பாராளு மன்ற தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளை சேர்ப்பதிலும் இதே நிலமை நீடிக்கிறது.

திருவிழா என்றால் ஊர் மக்களுக்கு கொண்டாட்டம். தேர்தல் என்றால் கட்சி தொண்டர்களுக்கு உற்சாகம்.. அந்த உற்சாகத்தை கூட்டணி குழுப்பம், ஒரேயடியாக முட்டுக்கட்டை போட்டு நிறுத்தி விட்டதே... என்பதுதான் கட்சித் தொண்டர்களின் ஆதங்கம்.

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புவந்ததும், கட்சி பிரமுகர்கள் நீண்ட நாட்களாக பீரோவில் இருந்த வேட்டி - சட்டைகளுக்கும் கட்சி துண்டுகளுக்கும் முழுவேலை கொடுக்கத்தொடங்கி விட்டார்கள். கட்சி அலுவலகத்துக்கும், தலைவர்களின் வீடுகளுக்கும் தினமும் படையெடுக்கும் பணி “ஜரூராக” நடந்து கொண்டிருக்கிறது. தலைவரின் கடைக்கண் பார்வை படாதா... “சீட்” வாசல் திறக்காதா என்பது அவர்களின் கவலை.

நேற்று வரை தூங்கிக்கொண்டிருந்த தொண்டர்களும் உற்சாகமாக எழுந்து விட்டார்கள். எம்.எல்.ஏ., எம்.பி., மாவட்டம், வட்டம் கண்களில் பட்டால் “தேர்தல் பொறுப்பு” கிடைக்கும் பணம் தாராளமாக புரளும். 3மாதங்களை உற்சாகமாக கொண்டாடி விடலாம் என்பது அவர்கள் கணிப்பு. கட்சி அலுவலகத்துக்கும் முக்கிய புள்ளிகளின் கட்டளைக்கும் காத்துக்கிடக்கிறார்கள்.

போட்டியிட வேட்பாளர்கள் தயார். அனுமதி கொடுக்க தலைமை தயார். வேலைபார்க்க தொண்டர்கள் தயார். ஆனால் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்குறி எழுத்து எல்லோரையும் இழுத்துப்பிடித்துக் கொண்டிருக்கிறது.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா? அல்லது அ.தி.மு.க. பக்கம் தாவுமா? தே.மு.தி.க காங்கிரசுடன் கூட்டணி சேருமா? தனித்து போட்டியிடுமா? திருமாவளவன் தி.மு.க.வில் நீடிப்பரா? ராமதாஸ் அழைப்பை ஏற்று அணி மாறுவரா? கூட்டணி பற்றிய கேள்விகள் இப்படி நீண்டு கொண்டே போகின்றன.

பாராளுமன்ற தேர்தல் அறிவித்ததும் கட்சி தொண்டர்களில் வழக்கம் போல சுவர்களில் இடம் பிடித்தார்கள். தலைவர்களின் படங்களையும் வரைந்தார்கள். ஆனால் யார் ஆசியுடன் வேட்பாளர் போட்டியிடுகிறார் என்பது முடி வாகாமல் வரைந்த ஓவியமும் எழுதிய வாசகங்களும் அரை குறையாகவே நிற்கின்றன.

வாசகத்தை முடித்தால்... அதைக்காட்டி கட்சி பிரமுகரிடமும் முடிந்தால்.. கட்சியிடமும் இருந்து வரவு வரும் தாராளமாக செலவு செய்யலாம். இந்த எண்ணத்தில் சுவரில் இடம் பிடித்த பல தொண்டர்கள்... கூட்டணி குழப்பத்தால் பெயிண்ட்... பிரஷ்... ஓவியருக்கு முதலீடு செய்த பணம் திரும்பி வருமா என்ற சிந்தனையில் செயல் இழந்து நிற்கிறார்கள்.

தேர்தல் வேலை தொடங்கி விட்டால் பணம், பிரியாணி, உற்சாக பானம் என்ற கனவில் இருந்த அடிமட்ட தொண்டர்கள் கூட்டணி இழுபறியால், அடி வயிற்றில் ஈரத்துணியை கட்டிக் கொண்டு அங்காய்க்கிறார்கள்.

தேர்தல் தேதி அறிவித்து 20 நாட்கள் ஆனபிறகும் “சிங்கிள் டீ”க்கு சிங்கி அடிக்க வேண்டியதிருக்கிறது என்று புலம்பும் தொண்டர்களை எல்லா கட்சி அலுவலகங்களிலும் காண முடிகிறது. இன்று மாலை கூட்டணி அறிவிப்பு வராதா? நாளை முதல் விடிவுகாலம் பிறக்காதா? என்று ஏங்கும் தொண்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

காலையில் கூட்டணி முடிவாகிவிடும் என்று நம்பிக்கையுடன் எழும் கட்சி தொண்டனும், முக்கிய பிரமுகர்களும், மாலைவரை எந்த முடிவும் வராமல் கூட்டணி இழுபறி ஆவதைக்கண்டு கண்ணீர் விடாத குறையாக வேதனைப் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

கூட்டணி விஷயத்தில் தலைவர்களின் செயல்பாடு கட்சி தொண்டர்களை மட்டு மல்ல பொதுமக்களையும் சிந்திக்க வைத்திருக்கிறது. கட்சி, கொள்கை, அரசியல் நாகரீகம், பண்பாடு என்று பேசும் சில கட்சிகள் கூட்டணிக்காக அடிக்கடி நிறத்தை மாற்றிக்கொள்வது முன்னொரு காலத்தில் கடுமையாக சிந்திக்க வைத்தது.

இப்போது.. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று சாதாரண மக்கள் கூட கிண்டல் செய்யும் நிலமை ஏற்பட்டிருக்கிறது. வியாபாரத்தில் முதல் போட்டு லாபம் சம்பாதிக்கும் அதே பாலிசி அரசியலுக்கும் வந்து விட்டது. இதனால் கட்சியை முழுமையாக நம்பி இருக்கும் தொண்டர்கள் நிலை பரிதாபமாகி இருக்கிறது.

இன்று கூட்டணி அமைந்து விட்டால் நானை முதல்... தேர்தல் கொண்டாட்டம் களை கட்டிவிடும். தொடர் கதையாகும் கூட்டணி குழப்பத்தால் தொண்டர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நிற்கிறார்கள்.

இது வரை நமது கூட்டணியில் இருந்து அந்த கட்சி தொண்டருடன் பேசலாமா? பேசக்கூடாதா... நேற்று வரை எதிர் அணியில் இருந்த கட்சி இங்கு வருவதாக சொல்கிறார்கள்... அதை நம்பி அந்த தொண்டருடன் சேர்ந்தால் நாளை நமது நிலமை என்ன ஆகும்? என்று விதம் விதமாக புலம்பும் தொண்டர்கள் நிலமை பரிதாபமாக உள்ளது.

கூட்டணி முடிவாகாததால் 20 நாட்கள் வீணாகி விட்டன. இன்னும் எத்தனை நாட்கள் ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருப்பது... இதுபோல் அடுக்கடுக்காக தொண்டர்கள் கேட்கும் கேள்விக்கு எப்போது பதில் கிடைக்கும்? தலைவர்கள் தான் சொல்ல வேண்டும்.
தேர்தல் முடிவுக்கு வந்த பின் நடக்கும் கூத்து இன்னும் பிரமாதமாக இருக்கும் என்று நம்புவோம்.



4 Comments:

Krish said...

ஒரே குழப்பமாக உள்ளது. திமுக கூட்டணியில் பாமக இல்லை என்கின்றார். ஆனால் பாமக கங்க்ரச்ஸ் கூட்டணியில் நீடிக்கிறது என்று ராமதாசும் , தங்கபாலுவும் சொல்கிறார்கள். காங்கிரசஸ் திமுக கூட்டணியில் தான் உள்ளது.
ஒருவேளை "கிளை" கூட்டணியாக திமுகவுடன் உள்ள காங்க்ராசிடம் மட்டும் தனியாக கூட்டணி வைத்துள்ளார் ராமதாஸ் என்று நினைக்கிறன்!!!
இதற்கு நேர் எதிராக காங்கிரசஸ் கூட்டணியில் உள்ள "திமுக விடம் மட்டும்" திருமா உறவு வைத்துள்ளார் என நினைக்கிறேன்.
இப்படியே போன ஒவ்வொரு தொகுதியிளையும் ஒவ்வொருத்தரோட கூட்டணி வைச்சு தேதால் நடந்தாலும் ஆச்சர்ய படமுடியாது!

R.Gopi said...

பா.ம.க.காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது, ஆனால் தி.மு.க.விற்கும் எங்களுக்கும் எந்த உறவும் இல்லை (காடு வெட்டி குருவை தூக்கி மறுபடியும் உள்ள போட்டுடாதீங்க). அவர்கள் எங்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை.

பா.ம.க.வுடன் எங்களுக்கு நல்ல உறவு உண்டு. அவர்களை மீண்டும் எங்கள் கூட்டணிக்கு வரவழைக்க முயற்சி செய்கிறோம், கண்டிப்பாக ADMK கூட்டணி கிடையாது - விடுதலை சிறுத்தைகள்.

விடுதலை சிறுத்தைகள் எங்கள் கூட்டணியில் இருப்பதை வன்மையாக எதிர்க்கிறோம், இருப்பினும், அன்னை சோனியாவின் முடிவுக்கு கட்டுப்படுவோம் - தமிழக காங்கிரஸ்.

நாங்கள் மூன்று தொகுதிகளில் போட்டி இட முடிவு செய்துள்ளோம் - கார்த்திக்

நாங்கள் 15 தொகுதிகளில் போட்டி இட முடிவு செய்துள்ளோம் - சரத்குமார்

நாங்கள் தனித்தே எல்லா தொகுதிகளும் போட்டி இடுகிறோம் - விஜயகாந்த்.

நான் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளேன் - மன்சூர் அலிகான்

நான் போட்டியிடுவதை பற்றி இன்னும் முடிவு செய்யல - காமெடியன் வடிவேலு.

கடைசி கிச்சு கிச்சு - நாங்கள் 40 தொகுதிகளும் வெற்றி பெறுவோம் - "தல" மு.க.

R.Gopi said...

//"பா.ம.க. உறவு முறிந்தது ஏன்? கருணாநிதி விளக்கம்"//

**********

கையில் இருக்கும் வெறும் 40 அப்பத்தில் அவர்கள் கேட்டதோ, மாபெரும் அளவான 8 அப்பம்.

தான் பெற்றதை எல்லோருக்கும் பங்களித்து உண்ண வேண்டும் என்ற உயரிய எண்ணத்தை அறிவிப்பதற்க்குள் அவர் கோபம் கொண்டு வெளியேறி விட்டார்.

எங்களை விட்டு சென்றவர்களை நான் ஒருபோதும் தூற்றுவதில்லை (அதற்கென்றே அருமைத்தம்பி ஆற்காட்டார் இருக்கிறார்).

அவர்களுக்கு செல்லும் இடத்தில் நிறைய அப்பம் கிடைக்க வேண்டும் என்பது என் அவா........

உடன்பிறப்பே நான் எப்போதும் போல் இப்போதும் உண்மைதான் சொல்லி உள்ளேன்.

எங்கள் வெற்றிக்கு பாடுபடு.
எங்கள் வெற்றிக்கு கடுமையாக உழை
உழைப்பதற்கு சோம்பல் படாதே
உழைத்ததற்கு ஊதியம் உண்டு
பதவி ஆசை வேண்டாம்
அந்த வெற்றியை நாங்கள் ருசிப்பதை கண்டுகளி.
கடைசிவரை தலைமைக்கு நல்ல தொண்டனாக இரு
நாடு உங்களை கவனித்து கொண்டிருக்கிறது (நாங்கள் உங்களை கவனிக்காவிட்டாலும்)
நான் உங்கள் கட்டுமரம்
என்னை கைப்பிடித்து கரை சேர்

கொடும்பாவி-Kodumpavi said...

தொண்டர்கள் குழம்பி உள்ளார்கள்..
பின் குலவுவார்கள்..
மக்கள நினைச்சாதான் பாவமா இருக்கு(அட என்னையும் சேர்த்துதான்). என்னெல்லாம் நடந்தாலும் யாரெல்லாம் என்னென்ன சொன்னாலும் ஜனநாயக கடமை(?!) செய்யணும்னு ஒரு கூட்டம் சொல்லிகிட்டு இருக்கு அத கேட்டு சில மக்களும் ஓட்ட குத்துவாங்க..
ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மிக நீள காமடி சீன் நாட்டில் நடக்குது.. அப்பப்ப நடந்ததெல்லாம் ஜிஜுபி.. எல்லாம் இறைவன் செயல்.