பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 18, 2009

விஜயகாந்த் செய்திகள்

நேற்று இன்று வந்த விஜயகாந்த் செய்திகள் சில

பா.ம.க. இடம் பெறும் கூட்டணியில் சேரக்கூடாது என்று தே.மு.தி.க தொண்டர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் போர்க்கொடி தூக்கினர். கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. - செய்தி

விஜயகாந்த் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அவருக் குள்ள தனித்துவமான இமேஜ் இருக்கும். ஆனால் வெற்றி கிடைக்குமா என்று சொல்ல இயலாது. தேர்தலை அவரால் புறக்கணிக்கவும் இயலாது. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் அவருக்கு தனித்துவம் நீடிக்கும்.ஆனால் இது பற்றி இறுதி முடிவு எடுக்க வேண்டியது விஜயகாந்த்தான் - இல கணேசன்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்துதான் போட்டியிடும் என்பதில் விஜயகாந்த் தெளிவாக இருக்கிறார். இதனால் தே.மு.தி.க. தனித்துதான் போட்டியிடும்.

தி.மு.க. அணியுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி உளவுத்துறை மூலம் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகிறார். அ.தி.மு.க.வை விட அதிக கூட்டத்தை கூட்டக்கூடிய சக்தி தே.மு.தி.க.வுக்கு இருக்கிறது. சட்டசபை தேர்தலைவிட 100 மடங்கு வேகத்தில் தே.மு.தி.க. வளர்ந்திருக்கிறது. தே.மு.தி.க. கூட்டணிக்கு வந்தால் வரவேற்க தயார் என கருணாநிதி சொல்கிறார். இந்த இயக்கம் இல்லாமல் எவராலும் ஆட்சி அமைக்க முடியாது - கொள்கைபரப்பு செயலாளர் சந்திரகுமார்

பிரச்சாரத்தில் ஈடுபடஉள்ள அரவாணிகள் இன்று விஜயகாந்தை சந்தித்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார் - செய்தி

5 Comments:

K SRINIVASAN said...

Pls include

Nandri:-Dinamani

IdlyVadai said...

These are not from dinamani. I took from 2 other news paper one was malaimalar(or dinathanthi ) and some other paper, I could not remember.

Rama Karthikeyan said...

"பிரச்சாரத்தில் ஈடுபடஉள்ள அரவாணிகள் இன்று விஜயகாந்தை சந்தித்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார் - செய்தி"

This is really cool that he has done this. Equality rules!

கொடும்பாவி-Kodumpavi said...

'கூடி ' வாழ்ந்தால் ‘கோடி' நன்மை.. தனித்து வென்றால் 'பல கோடி' நன்மைன்னு 'விசய'காந்துக்கு தெரியாமையா அரசியலுக்கு வந்தாரு.. ?

Unknown said...

விஜையகந்தை பிடிக்கலைனாலும் இதுக்காகவாவது ஒரு தடவை கொஞ்சோண்டு பாராட்டனும்!