பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 10, 2009

ரத்தத்தின் ரத்தமான தொண்டர்கள் காங்கிரஸிலும் இருக்கிறார்கள்

காங்கிரஸ் தொண்டர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்திக்கு ரத்த கையெழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளனர்.

ரத்த கையெழுத்திட்ட காங்கிரஸ் தொண்டர்கள் இப்படி சொல்லுகிறார்கள்...

தமிழகத்தில் பல இடங்களில் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் சிலைகளை விடுதலைச் சிறுத்தைகள் அவமதித்துள்ளனர். மேலும் சத்திய மூர்த்தி பவன் முன்பு காங்கிரஸ் தொண்டர்களை தாக்கியுள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பேனர்களை சேதப்படுத்தியுள்ளனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியை இழிவுப்படுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவ்ன் தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் காங்கிரஸ் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கக்கூடாது என நாங்கள் விரும்புகிறோம்.

அதனால் தான் இந்த ரத்த கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளோம். இந்த கடிதத்தை தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைப்போம்

சோனியா காந்தி அதை திருப்பி கருணாநிதிக்கு அனுப்பிவைப்பார். அதற்கு இவர்களே டைரக்டாக கருணாநிதிக்கு அனுப்பிவிடலாம்.

6 Comments:

Anonymous said...

They could have donate this blood to blood bank...

வால்பையன் said...

//சோனியா காந்தி அதை திருப்பி கருணாநிதிக்கு அனுப்பிவைப்பார். அதற்கு இவர்களே டைரக்டாக கருணாநிதிக்கு அனுப்பிவிடலாம். //

ஹா ஹா ஹா!

கூட்டணியே ஜெயிக்காதாம்!
தேர்தலுக்கு பிறகு ரெண்டு கட்சியும் பல்லாங்குழி விளையாட வேண்டியது தான்

Rajaraman said...

கழுத குட்டியோட சேர்ந்த குதிர குட்டியும் கழுத குட்டியாகி விட்டது.

Anonymous said...

அடபாவிகள உங்கள நீங்க இன்னும் நம்பிட்டு இருக்கீங்களா ... பாவமா இருக்கு இவங்கள பார்த்த .. உலகம் தெரியாதவங்கள இருக்காகளே ...

// கூட்டணியே ஜெயிக்காதாம்!
தேர்தலுக்கு பிறகு ரெண்டு கட்சியும் பல்லாங்குழி விளையாட வேண்டியது தான்//

சரியாய் சொன்னிங்க வால் பையன் :)

// They could have donate this blood to blood bank... //
இரத்த வங்கில குடுத்தா தேர்தல் சீட் குடுபாங்களா அனானி ( அப்பாவியா இருகிங்களே ) நம்ம அரசியல் வியாதிகள் எல்லாம் என்ன அந்த அளவு முட்டாள் அயிடங்கள ..

Anonymous said...

@Appavi manithan
ippo mattum ratham kudutha thondarhalukka seat thara poraanga...evan kasu kudukarano avanukku than seat... neengalum appaviya irukeengalae...

R.Gopi said...

முடிவு இப்போது "தல" கையில்........

"தல" திருமாவை ரொம்பத்தான் சப்போர்ட் பண்றாரு?? என்ன விஷயம்னே தெரியல.