பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 13, 2009

எச்சரிக்கை: கூடுதல் தலைமை தேர்தல் நியமனம்

தமிழகத்துக்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் இது இன்று வந்த செய்தி.
நிச்சயம் இதில் அரசியல் கலந்திருக்கிறது என்பது என் எண்ணம். இன்று வந்த செய்தியும், துக்ளகில் வந்த எச்சரிக்கை பகுதியும் படித்தால் உங்களுக்கே புரியும்.


தமிழகத்துக்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பொதுத் துறையில் (தேர்தல்) கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி என்ற புதிய பதவி தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டு, அந்தப் பதவிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.சத்யகோபால் நியமிக்கப்பட்டு உள்ளார்

துக்ளக் எச்சரிக்கை

மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியை மிகவும் நியாயமாகவும், கெளரவமாகவும், திறமையாகவும் வகித்து வருகிற நரேஷ் குப்தா மீது தமிழக முதல்வர் பாய்ந்திருக்கிறார். தனக்கு அவர் மரியாதை அளிக்கவில்லை என்றும்; பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என்றும் முதல்வர்
குற்றம்சாட்டியிருக்கிறார். நேர்மையான அதிகாரிகள் மீது முதல்வருக்கு கோபம் வருவது வியப்புக்குரியது அல்ல. ஆனால், அவர் கொஞ்சம் பொறுமை காட்டினால் போதும்; அவர் விரும்புவது நடக்கக்கூடியதே.

காங்கிரஸ் தாஸராகிய நவீன் சாவ்லா, தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றவுடன் – தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்பாக
– கலைஞர் விரும்புகிற மாற்றல் உத்திரவு, சோனியா காந்தி வழியே சென்று, தேர்தல் கமிஷனை அடைந்து, நரேஷ் குப்தாவைச் சென்று தாக்கலாம்.

7 Comments:

sundaikai said...

Why do we waste money, time and resource. They can declare each front (UPA, NDA and Third Front) gets one year each round-robin and we can measure how they perform (something in the line of Job rotation).

Anonymous said...

I am not happy.Why to choose a new face 'Satya'gopal,when the already proven,corporation elections fame 'Chandrasekar' is available at our disposal?

பெசொவி said...

We allo know the past. When Mr. Seshan could not be resisted from doing things in the right way, two more Commissioners were posted. But this could not affect the work efficiency of Mr. Seshan. Likewise, Mr. Naresh Gupta's honesty can not be diluted. That is what I feel.

Vazhga Jana(Virodha)Nayagam!

Anonymous said...

Naveen Chawla has started his work for UPA.

Congress is taking India into a banana republic by taking over the constitutional pillars like the EC.

கொடும்பாவி-Kodumpavi said...

பிரதமர் எனக்கு தெரிஞ்சவர், தேர்தல் ஆணையர் எனக்கு தெரிஞ்சவர், ஜனாதிபதி எனக்கு தெரிஞ்சவர், கருத்து கணிப்பு நடத்தறவர் எனக்கு தெரிஞ்சவர்.. நான் சொலறத மட்டும் கரெக்டா செய்வாங்க.. இதுக்கு அப்புறமும் ஒரு தேர்தல் நடத்தி மக்களோட வரிப்பணத்தை (10,000 கோடி ச்சும்மா ஒரு கணக்குக்கு) எதுக்கு செலவழிக்கணும்?

Anonymous said...

கறை படிந்த CONGRESS-ஜனாதிபதி(இதில் வெளி நாட்டுப் பயணம் வேறு இந்த அம்மணிக்கு தேர்தல் சமயத்தில் ), கறை படிந்த CONGRESS- தேர்தல் ஆணையர்.

GOLDEN PERIOD IN DEMOCRATIC INDIA.

வாழ்க இந்திய ஜனநாயகம் .!!!!!

Payam Ariyan said...

/*********Anonymous said...

கறை படிந்த CONGRESS-ஜனாதிபதி(இதில் வெளி நாட்டுப் பயணம் வேறு இந்த அம்மணிக்கு தேர்தல் சமயத்தில் ), கறை படிந்த CONGRESS- தேர்தல் ஆணையர்.

GOLDEN PERIOD IN DEMOCRATIC INDIA.

வாழ்க இந்திய ஜனநாயகம் .!!!!!
*****////////

வழிமொழிகிறேன்!