பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 16, 2009

சாகும் நாள் தெரிஞ்சிட்டா வாழும் நாள் நரகமாயிடும்

சாகும் நாள் தெரிஞ்சிட்டா வாழும் நாள் நரகமாயிடும் - ரஜினி படத்தில் ஒரு வசனம்

லண்டனில் நடந்த பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டி பங்கேற்றபோது அவருடன் இணைந்து கலந்து கொண்டவர் இங்கிலாந்து டிவி நடிகையான ஜேட் கூடி. அப்போது இருவருக்கும் ஏற்பட்ட காரசாரமான விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பிக் பிரதர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் கூடி. ஷில்பா வெற்றி பெற்றார்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் கூடி, ஷில்பாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சமீபத்தில் இந்தியாவில் நடந்த பிக் பிரதர் டைப்பிலான நிகழ்ச்சியில், கூடியும் பங்கேற்றார். அப்போது இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றார். ஆனால் பலன் இல்லை. உடல் முழுவதும் புற்று நோய் பரவி விட்டது. மூளையையும் தாக்கியது.

இதனால் அவர் எந்த நேரத்திலும் மரணத்தை சந்திக்கலாம் என்று டாக்டர்கள் கூறினார்கள். ஜேட்கூடி ஆஸ்பத்திரியில் சாக விரும்பவில்லை. வீட்டில் இருந்தபடி உயிரிழக்க போவதாக கூறினார்.

எனவே அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வலியால் துடித்தபடி இருக்கிறார். எந்த நேரத்திலும் அவர் உயிர் பிரியலாம் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். சில மணி நேரத்தில் கூட உயிர் பிரியலாம் என்று எதிர்பார்க்கின்றனர்.

அவருடைய 2 குழந்தைகளும் மற்றும் உறவினர்கள் உடனிருந்து கவனித்து வருகின்றனர். நான் இறந்த பின் மேலே நட்சத்திரமான இருந்து உங்களை பார்த்துக்கொள்வேன் என்று சொல்லியுள்ளார். கேட்க வருத்தமாக இருக்கிறது.

சாவை தைரியமாக எதிர்கொண்ட ஜேட்கூடிக்கு இட்லிவடையின் பாராட்டுக்கள்.


6 Comments:

Anonymous said...

இட்டலிவடை, இதில் என்ன இறைவனின் திருவிளையாடலை கண்டீர்கள் என்று சொல்ல முடியுமா?

IdlyVadai said...

"சாகும் நாள் தெரிஞ்சிட்டா வாழும் நாள் நரகமாயிடும்" என்று ரஜினி படத்தில் வசனம் வரும். இந்த திருவிளையாடலை சொன்னேன்.

R.Gopi said...

அனானியும் இட்லிவடையும் தத்துவ கடலில் குதித்து விட்டனர்.

அனானியின் கேள்வியும், இட்லிவடையின் பதிலும் சூப்பர்.

வாழ்த்துக்கள், இருவருக்கும்..........

Anonymous said...

super....i am ur new follower

ஹரன்பிரசன்னா said...

இதில் என்ன திருவிளையாடல் இருக்கிறது? வருத்தமான விஷயம், இதற்கு தலைப்பு வைக்கும்போது எதையாவது வைத்து சொதப்பாமல் இருக்கவும்.

கொடும்பாவி-Kodumpavi said...

இட்லி வடையின் மறுபக்கம்... ஆன்மீகம்....
ராசா நீ நடத்து..