பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 16, 2009

தேர்தலில் வந்துவிட்டது முக்கிய திருப்பம்

இந்த பேச்சை பாருங்கள்

நான் நெல்லையை நோக்கி வந்தாலே சென்னையில் வாழும் அரசியல்வாதிகளுக்கு கிலி ஏற்படுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் ஆகியும் எந்த மக்களும் முன்னேற்றம் அடையவில்லை. நாட்டிற்கு ஆபத்து என்றால் துப்பாக்கி பிடித்து முன்வரிசையில் நிற்கக்கூடிய போர்வீரனாக நான் இருப்பேன்.

இலங்கையில் தினந்தோறும் தமிழர்கள், குழந்தைகள், பெண்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். இங்குள்ளவர்கள் வாய்ச் சொல்வீரர்கள் போல் செயல்பட்டு வருகிறார்கள்.

ராவணனின் மாறுவேடத்தில் அங்குள்ள ஆட்சியாளர்கள் தற்போது ஆண்டு கொண்டிருக்கிறார்கள். சுமார் 33 ஆண்டாக அங்கு உரிமை போராட்டம் நடந்து வருகிறது. இங்குள்ளவர்கள் நினைத்திருந்தால், அதற்கு சற்றேனும் முயற்சிகள் எடுத்திருந்தால் அவர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.

அவர்களுக்காக உண்மையாக குரல் கொடுத்திருந்தால் பேரழிவுகளை தடுத்திருக்கலாம். அணுசக்தி ஒப்பந்தத்தினால் உலக அளவில் இந்தியாவுக்கு வளர்ச்சி கிடைக்கும். அணுசக்திக்கு எதிரான கட்சிகளை இனம் கண்டு அவர்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்காக தற்போது உருவாகி வரும் 3 வது அணி, மக்களை ஏமாற்றக்கூடிய வேடிக்கை பார்க்கும் அணியாகும்.

3 வது அணி பிரதமர் வேட்பாளரை அறிவித்த உடனேயே கலைந்து போய்விடும். வந்த வேகத்திலேயே அது காணாமல் போய்விடும்.

எங்கள் கட்சி மக்களுக்கு உத்தரவாதம் கொடுக்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி வைக்கும். அப்படி உத்தரவாதம் கொடுக்காதவர்களுடன் கூட்டணி சேர மாட்டோம். தனித்தே போட்டியிடுவோம்


இதை பேசியவர் பெயர் கீழே...

சிவகிரியில் நடந்த அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் நடிகர் கார்த்திக்!

10 Comments:

SathyaRam said...

Sorry. I dont believe this. Karthik cannot talk this clearly however absurd they are...... You are victimizing Karthik.......

Unknown said...

//கடைசி செய்தி: தமிழகத்தில் இப்ப நிறைய காமெடி சேனல்கள் வந்துவிட்டது.//
கடந்த பதிவோட தொடர்பதிவா?
சொல்லவே இல்ல..!

ஓரே சிர்ப்ப் சிர்ப்பா வருது..,

K SRINIVASAN said...

டேய் நாராயணா
இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா

R.Gopi said...

கார்த்திக் கூட நல்ல காமெடி பண்ணுவாருன்னு கேள்வி பட்டு இருக்கேன். இப்போத்தான் பாக்கறேன். கார்த்திக் @ கிச்சுகிச்சு.காம்

பரவாயில்ல, கூட கவுண்டமணி இல்லேன்னா கூட, கார்த்திக்கோட சோலோ காமெடி பிரமாதம்.

(இட்லிவடை, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், நீங்கள் எங்களுக்கு தினமும் அறுசுவை விருந்து வைக்கிறீர்கள்).

Anonymous said...

//நான் நெல்லையை நோக்கி வந்தாலே சென்னையில் வாழும் அரசியல்வாதிகளுக்கு கிலி ஏற்படுகிறது. //

// நாட்டிற்கு ஆபத்து என்றால் துப்பாக்கி பிடித்து முன்வரிசையில் நிற்கக்கூடிய போர்வீரனாக நான் இருப்பேன்.
//

haha hehe huhu hehe haiiiiiiiiii

Anonymous said...

If we ignore the cinematic dialogue of fighting for India, whatever else Karthik has said are sensible and true.

Just because Karthik is an actor or run a very weak party, we should not malign him.

But, the problem is that if we start analysing what is said instead of who has said it, we will be blamed as Hindutvavadis !

Anonymous said...

யார் சார் இந்த கார்த்திக்? ஞாபகம் இல்லையே. யாராவது காமெடி நடிகனா போன தலைமுறையில்?

மதுரை பொறுக்கி said...

ராவணனின் மாறுவேடத்தில் அங்குள்ள ஆட்சியாளர்கள் தற்போது ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
>>> கலைஞர் ராவணன் தமிழன் என்று சொல்லியிருக்கிறார். கார்த்திக் ராவணனின் மாறுவேட ஆட்சி என்று சொல்கிறார். ஒருவேளை விடுதலைப்புலிகளை சொல்கிறாரோ

Krish said...

தலைவர் கார்த்தியை யாருமே கூட்டணிக்கு அழைக்கவில்லையே!!!

மஞ்சள் ஜட்டி said...

அது கிடக்கட்டும் இ.வ....தேர்தல் ஆணையம் பிரியாணி படக்கூடாது என்று தடை விதிதிருக்கிரதாமே?? அது இல்லேனாக்க இட்லி - வடை போடலாமா? மேலும், நெறையா தடை விதிதிருக்கிரதாமே? கொஞ்சம் நோண்டி செய்தி குடு..தட்ஸ் தமிழ் ல படிச்சதா ஞயாபகம்.