பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 11, 2009

பண்ருட்டி பா.ம.க + விருதை விஜயகாந்த்+திட்டகுடி திருமா = கடலூர் ஸ்பெஷல்


பண்ருட்டி பா.ம.க + விருதை விஜயகாந்த்+திட்டகுடி திருமா = கடலூர் ஸ்பெஷல்

அரசியல் கட்சிகளுக்கு திருப்புமுனைகளில் ஓன்று,அவர்களின் முதல் வெற்றி. தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிர்ணயிக்ககூடிய சக்திகளாக விளங்கும் பா.ம.க,விடுதலை சிறுத்தைகள் மற்றும் தே.மு.தி.க.வின் வெற்றி அத்தியாயம் ஆரம்பமும் இங்கே தான்.

1991-ல் பா.ம.க தனித்து பண்ருட்டியிலும், 2001-ல் வி.சி.க., தி.மு.க. கூட்டணியில் மங்களூரிலும்,2006-ல் தே.மு.தி.க தனித்து விருத்தாசலத்திலும் வென்று தங்கள் கணக்கை ஆரம்பித்தன.

பா.ம.க Vs தே.மு.தி.க

சட்டமன்ற தொகுதி

பா.ம.க-1991

தே.மு.தி.க-2006

பெற்ற வாக்குகள்

வாக்கு சதவீதம்

பெற்ற வாக்குகள்

வாக்கு சதவீதம்

நெல்லிக்குப்பம்

15610

16.22%

15853

12.74%

கடலூர்

15940

15.06%

7866

5.60%

பண்ருட்டி

39911

37.51%

30133

21.05%

குறிஞ்சிபாடி

18638

17.04%

8541

6.90%

விருத்தாசலம்

37634

32.65%

61337

40.42%

மங்களூர்(SC)

21165

18.90%

15992

11.23%

வெற்றி

இரண்டாமிடம்

மூன்றாமிடம்

தி.மு.க.,அ.தி.மு.க. தவிர,பா.ம.க.,தே.மு.தி.க மற்றும் வி.சி.க.விற்க்கும் குறிப்பிடத்தக்க அளவில் வாக்கு வங்கி உள்ளதால் வெற்றி,தோல்விக்கு கூட்டணி பலம் மீண்டும் ஒருமுறை முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இவர்கள்.., இங்கே.., இப்போது

சட்டமன்ற தொகுதி

சட்டமன்ற உறுப்பினர்கள்

கட்சி

பொறுப்பு/ தற்போது

நெல்லிக்குப்பம்

சபா.இராஜேந்திரன்

தி.மு.க

பண்ருட்டி ஓன்றிய செயலாளர்

கடலூர்

கோ.ஐயப்பன்

தி.மு.க

மாநில பொதுக்குழு உறுப்பினர்

பண்ருட்டி

தி.வேல்முருகன்

பா.ம.க

மாநில துணை செயலாள்ர்

குறிஞ்சிபாடி

M.R.K.பன்னீர்செல்வம்

தி.மு.க

கடலூர் மாவட்ட செயலாளர்

விருத்தாசலம்

அ.விஜயகாந்த்

தே.மு.தி.க

நிறுவன தலைவர்

மங்களூர்(SC)

K.செல்வம்

வி.சி.க

BSP மாநில தலைவர்

கொசுறு தகவல்:-

1. 1991-ல் பா.ம.க சார்பில் வென்ற முதல் M.L.A பண்ருட்டி S.இராமசந்திரன்,தற்போது தே.மு.தி.க.வில் அவைத்தலைவர்,2006-ல் தே.மு.தி.க சார்பில் பண்ருட்டியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

2. 2001-ல் மங்களூர்(SC) தொகுதியில்(தற்போது திட்டகுடி(SC)) வி.சி.க சார்பில் திருமாவளவன் உதயசூரியன் சின்னத்தில்(தி.மு.க M.L.A) போட்டியிட்டு வென்றார்.

அடுத்த update… கடலூர் ON DEMAND… வரும் வாரத்தில்

கலைக்கோவன்.....கடலூர் தொகுதி

1 Comment:

கொடும்பாவி-Kodumpavi said...

பின்னி பெடலெடுக்குறீங்க.. கலக்க்குங்க