ம.ம.க, மூ.மூ.க பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. இந்த இரண்டு செய்திகளையும் பாருங்க.
தி.மு.க.வுடன் ம.ம.க. பேச்சுவார்த்தை
பாராளுமன்ற தேர்தல் குறித்து திமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்திவிட்டு கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்வோம் என மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், நாங்கள் திமுகவுடன் இருக்கத்தான் விரும்புகிறோம். ஆனால் எங்களுக்கு நியாயமான இடப் பங்கீடு தேவை. ஒரு சீட் தந்து ஏமாற்றும் திட்டத்துக்கு அடிபணிய மாட்டோம். எங்களின் அரசியல் வியூகம் பின்னர் வேறு மாதிரியாக இருக்கும் என்றார்.
அ.தி.மு.க.வுக்கு மூ.மு.க. ஆதரவு
லோக்சபா தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்றும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதாகவும் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன் தெரிவித்துள்ளார்
மு.க.ஸ்டாலின் நேற்று புட்டபர்த்தி சாய்பாபாவை சந்தித்திருக்கிறார்.கூவத்தை தூய்மைப் படுத்துவது தொடர்பாக பேசியுள்ளார் என்று செய்திகள் வந்துள்ளது. கூவத்தை சுத்த படுத்தினால் கொசு தொல்லை இருக்காது என்று நம்புவோம்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, March 16, 2009
ம.ம.க - மூ.மு.க
Posted by IdlyVadai at 3/16/2009 03:13:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
கூவத்தை சுத்த படுத்தினால் கொசு தொல்லை இருக்காது என்று நம்புவோம்.
------------------------------
அப்படியே சாய்பாபா கிட்ட சொல்லி, இவங்களையும் சுத்தப்படுத்தி விட்டால், நம்ம யாருக்குமே எந்த பிரச்சனையுமே இருக்காதே??
இந்த கொசுங்களோட தொல்லையும் ஒழிச்சா நாடு நல்லாத்தான் இருக்கும்.
அவ்ளோ, கொடுப்பினை எல்லாம் நமக்கு இருக்கா என்ன??
ஆனால் எங்களுக்கு நியாயமான இடப் பங்கீடு தேவை. ஒரு சீட் தந்து ஏமாற்றும் திட்டத்துக்கு அடிபணிய மாட்டோம். எங்களின் அரசியல் வியூகம் பின்னர் வேறு மாதிரியாக இருக்கும் என்றார்.
--------------------------------
எல்லோருக்கும் கையில் இருக்கும் 40அப்பத்தை சிறு சிறு பங்குகளாக கொடுத்து விட்டு, நான் என் பங்காக வைத்து கொள்ள இருப்பது வெறும் 35 தான் - "தல"
தேர்தல் வந்தாலும் வந்தது..
உன் காமெடி தாங்க முடியல கிருஷ்ணா..
கலக்குற..
சுவச்சர்லாந்து இருந்து பணத்தை நம்ப நாட்டுக்கு கொண்டு வந்தாலே நிறைய பிரச்சனைகளை தீர்க்கலாம்..
BJP ia also searching for alliance in TamilNadu... that are not planning to contest in all 40 seats.. so MMK may get 10 seats if they join hands with BJP...
BJP-MMK combo... success combo...;.
Post a Comment