பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 06, 2009

தேர்தலுக்காக கட்சிகள் கூட்டணி அமைக்கக்கூடாது:மன்சூர் அலிகான் வழக்கு

தேர்தலுக்காக கட்சிகள் கூட்டணி அமைக்கக்கூடாது:மன்சூர் அலிகான் வழக்கு


தேர்தலுக்காக கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து நடிகர் மன்சூல்அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார்

’அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்தனியாக நின்று பலத்தை நிரூபிக்க வேண்டும். கூட்டணி அமைக்க கூடாது, தனித்து நின்று ஜெயித்த பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். இது தான் மக்களாட்சி தத்துவம்.

இந்திராகாந்தி தான் கேரளாவில் முஸ்லிம்லீக் கோடு கூட்டு வைத்து முதல் கூட்டணியை துவக்கி வைத்தார். அதன் பிறகு எல்லா கட்சிகளும் தேர்தலில் கூட்டு வைப்பதும் வாக்காளர்கள் ஓட்டு போட்ட மை கையில் காயும் முன்பே உறவு தேர்தலோடு முடிந்து விட்டது என்று சொல்லி பிரிவதும் மிகப் பெரிய கூட்டணி மோசடியாக தொடர்கிறது.

50 ஆண்டு 100 ஆண்டு பாரம்பரிய இயக்கம் என்று சொல்லிக் கொள்பவர்கள் தனித்து போட்டியிடுவது தான் முறையாகும். மக் களை ஏமாற்றி கூட்டணி அமைப்பது ஜெயித்த பிறகு மந்திரி பதவிகளை பங்கு போடுவது, வாக்கா ளர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்’

படத்தில் உள்ளது போல் கூட்டணி அமைக்கலாம் தப்பில்லை :-)

3 Comments:

மெனக்கெட்டு said...

போன வருடம் நடந்தது:

" கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடு தர தன்னிடம் பணம் இல்லை’ என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகானால் கற்பழிக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும் சிறை தண்டனையும் விதித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் மன்சூர். அங்கு சிறைத்தண்டனை ரத்து செய்யப்பட்டாலும் நஷ்ட ஈடு உறுதிப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் போனார் மன்சூர். அங்கு உயர்நீதிம்ன்ற தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம் உறுதி கூறியபடி நஷ்டஈட்டை மன்சூர் தர வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து பணத்தை வசூலிப்பதற்காக வடபழனி உதவி ஆணையர் விஜயராகவன் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சென்றனர்.

மன்சூர் அலிகானிடம் நீதிமன்ற உத்தரவைக் காட்டி ரூ.7 லட்சத்தை தருமாறு கேட்டதற்கு தன்னிடம் ரூ.7 லட்சம் இல்லை என்றும் தனது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.3000 மட்டுமே இருப்பதாகவும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார் மன்சூர் அலிகான்.

சொந்தப் படம் எடுத்து நஷ்டமாகி விட்டது. பெரும் கஷ்டத்தில் இருக்கிறேன். என்னால் இந்தப் பணத்தை செலுத்த முடியாது’ என்றும் கூறியுள்ளதாக தகவல். மன்சூர் அலிகானுக்கு சொந்தமாக கார் கூட இல்லையாம். அவர் பயன்படுத்தும் டாடா சபாரி காரும் வேறு ஒருவரின் பெயரில் உள்ளதாம்.

மன்சூர் அலிகானிடமிருந்து பணத்தை வசூலிக்க முடியவில்லை என்று சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்."
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

காலம் எல்லாவற்றையும் மறந்துவிடச்செய்யும்.

பார்ப்போம் அடுத்த வருடம்.

மந்திரியாகக் கூட ஆகிவிடலாம்.!

Krish said...

நல்ல கோரிக்கை!
இதோட இன்னும் பல மாற்றங்கள் வேண்டும்!
- இரண்டு முறைக்கு மேல் ஒருவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது. கருணாநிதி, ஜோதி பாசு போன்றவர்கள் முப்பது வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தை ஆக்ரமித்து கொண்டு மற்றவர்களுக்கு வழி விடாமல் செய்வதை தடுக்க இது உதவும்

- யாருக்கும் ஓட்டு போட பிடிக்கவில்லை என்பதை பதிவு செய்ய தனியாக பட்டன் வேண்டும்

நாகு (Nagu) said...

பதிவுக்காக படமா, இல்லை படத்துக்காக பதிவா? இல்லாவிட்டால் இ.வ். பதிவில் எல்லாம் மன்சூர் விஷயம் ஏன் வருகிறது? :-)